ரஜினி 40... சிதம்பரத்தில் பிரமாண்டமாய் விழா எடுத்த முரட்டு பக்தர்கள்!
ரஜினிகாந்த் திரையுலகில் நுழைந்து இன்றோடு 40 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. 41வது ஆண்டில் கால் பதிக்கிறார் ரஜினி. திரையுலக சரித்திரத்தில் முக்கியமான இந்த நிகழ்வை அவரது ரசிகர்கள் இரண்டு நாட்கள் முன்கூட்டியே சிதம்பரத்தில் விழா எடுத்துக் கொண்டாடிவிட்டனர். சிதம்பரம் நகரில் உள்ள ஜிஎம் திருமண மண்டப வளாகத்தில் இந்த விழா மாலை 4 மணிக்கு நடந்தது. ரஜினியின் முரட்டு பக்தர்கள் என்ற குழு இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஏராளமான ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர் இந்த குழுவினர். ஆனால் அதனை மேடையில் வைத்துச் செய்யவில்லை. "இடது கை தருவது வலது கைக்கு தெரியக்கூடாது' என்பார் தலைவர் ரஜினி. அதற்கேற்ப, நாங்கள் 50-க்கும் மேற்பட்ட ஏழை எளியவர்களுக்கு கல்வி, தொழில் உதவிகளைச் செய்தோம். ஆனால் அதை விளம்பரப்படுத்தாமல் செய்துள்ளோம்," என்று மேடையில் அறிவித்தனர். இந்த விழாவில் ரஜினி குறித்த கருத்தரங்கம் நடந்தது. அதில் கல்லூரிப் பேராசியர்கள் பங்கேற்று ரஜினியின் சிறப்புக்களை எடுத்துரைத்தனர். ரசிகர் மன்ற விழா ஒன்றில் இப்படி ஒரு கருத்தரங்கம் நடப்பது இதுவே முதல் முறை. விழாவுக்கு சிறப்பு விருந்தினராக ரஜினியின் நெருங்கிய நண்பர் ராஜ்பகதூர் பெங்களூரிலிருந்து வந்திருந்தார். நடிகர் ஜீவா (லொள்ளு சபா)வும் இந்த விழாவில் பங்கேற்றார். சென்னை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இந்த விழாவுக்கு வந்து கலந்து கொண்டனர்.
Read more at: http://tamil.filmibeat.com/news/fans...am-036268.html