Originally Posted by
kaliaperumal vinayagam
மக்கள் திரியின் அனைத்து நண்பர்களுக்கும் ஓர் வேண்டுகோள். நான் எப்போதும் கூறுவது போல், நம் ஆண்டவன் ஒப்பரும் மிக்காரும் இல்லா ஆண்டவன். சராசரி வேலையை செய்பவன் , மனிதன். சக்திக்கு மீறிய வேலையை செய்பவன் ஆண்டவன். நம் தலைவன் எவராலும் நினைத்து பார்க்க கூட முடியாத செயல்களைப் புரிந்த 'விந்தைகளுக்கெல்லாம் தந்தை'.
அவருக்கு யாரும் ரோல் மாடல் கிடையாது. அப்படி இருந்திருந்தால் அவரைப் பார்த்து இவர் இப்படி செய்தார் - அப்படி செய்தார் என்று சொல்லலாம். ஆனால் அவருக்கு அவரே ரோல் மாடல். நம் தலைவரைப்பர்த்துதான் அன்று முதல் இன்று வரை அவராய் ஆகி விடமாட்டோமா என்று மனப்பால் குடித்தனர்...குடிக்கின்றனர். சிலர் நானும் கட்சி ஆரம்பிக்கிறேன் என்று சொல்லி காணாமலும் போனார்கள். நம் மக்கள் திலகத்தின் உள்ளம் தொண்டுள்ளம்..பிரதி பலன் பாராதது. அதனால்தான் மக்கள் உள்ளத்தில் இடம் பிடித்து மக்கள் திலகம் ஆனார். பின்னர் இதய தெய்வம் ஆனார்.
இரட்டை குதிரையில் சவாரி செய்ய முடியுமா என்ற கேள்விக்கு
சவாரி செய்யவும் முடியும். வெற்றியும் காண முடியும் என்று சாதித்து காட்டியவர் நம் புரட்சித்தலைவர். திரையுலகம், அரசியல் என்னும் இரட்டை குதிரையில் சவாரி செய்து, இரண்டிலும் முதலிடம் பெற்று, வசூல் சக்கரவர்த்தி என்று திரையிலும், நிரந்தர முதல்வர் என அரசியலிலும் கோலோச்சி, இருக்கும் வரை, இறக்கும் வரை தோல்வியே காணமல் வாழ்ந்தார். இன்றளவிற்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அன்றிலிருந்து இன்று வரை அவரது திரைப்படங்கள் சாதனை படைத்துகொண்டிருக்கின்றன என்பது மற்றவர் சொல்லி தெரிய தேவையில்லை. அங்கைப்புண்ணுக்கு ஆடியும் வேண்டுமோ என்பது போல, அவரது திரைப்படங்கள் இன்றும் பெரும்பாலான திரையரங்குகளில் வலம் வந்துகொண்டே இருக்கின்றன. வசூலில் சாதனை புரிகின்றன. கோவையில் இந்த ஆண்டு மட்டும் புரட்சித்தலைவரின் 40 படங்கள் வெளியாகி உள்ளன. 265 நாட்களில் 230 நாட்கள் தலைவரின் படங்கள் திரையிடப்பட்டுள்ளன. இதன் புள்ளி விவரங்களை என் அன்பு சகோதரர் திருப்பூர் திரு ரவிச்சந்திரன் அவர்கள் வெளியிடுவார். இந்த சாதனைகளை யாரால் செய்ய முடியும். இப்போதுள்ள ஸ்டார்களால் கூட செய்ய முடியாத சாதனை இது. இன்றைக்கல்ல, அன்றைக்கும் நம் புரட்சி நடிகர்தான் வசூல் சக்கரவர்த்தி என்பது நாடறிந்த ஒன்று.. பல ஏடுகளில் வெளி வந்த உண்மை இது. மற்ற நடிகர்களின் படங்கள் 100 நாட்களில் எடுக்கும் வசூலை, தலைவர் படங்கள் 50 நாட்களில் குவித்ததுதன் திரையுலக வரலாறு
இப்படிப்பட்ட சாதனைகளுக்கெல்லாம் சொந்தக்காரரை நம் திரியின் நண்பர்கள் ஏன்தான் மற்றவர்களுடன் ஒப்பீடு செய்கிறீர்களோ தெரியவில்லை. தயவு செய்து இதோடு இதைவிட்டு விட்டு நம் தலைவர் புகழ் ஒன்றையே நோக்கமாக கருதி செயல்பட உங்களை இருகரம் கூப்பி கேட்டுக்கொள்கிறேன். மற்ற திரியில் தவறாய் போடுகிறார்கள் அதற்கு பதில் போடுகிறோம் என்று நம் திரியின் தரத்தை தாழ்த்த வேண்டாம் என்று மீண்டும் கேட்டுகொள்கிறேன். அது அந்தந்த திரியின் தன்மையைப் பொருத்தது. அதே போல் நாம் செய்து நம் திரியின் புனிதத்தைக் கெடுக்க வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் வேண்டுகிறேன்.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்