திருவாளர்கள் :கலீல் பாட்சா, காளியப்பன், சிரஞ்சீவி அனீஸ், கா.நா. பழனி ஆகியோர் நினைவு பரிசு பெறும் காட்சி. அருகில் திரு.மலரவன், திரு.முருகு பத்மநாபன் .
http://i63.tinypic.com/4j3vwx.jpg
Printable View
திருவாளர்கள் :கலீல் பாட்சா, காளியப்பன், சிரஞ்சீவி அனீஸ், கா.நா. பழனி ஆகியோர் நினைவு பரிசு பெறும் காட்சி. அருகில் திரு.மலரவன், திரு.முருகு பத்மநாபன் .
http://i63.tinypic.com/4j3vwx.jpg
திரு.வெங்கடேச பெருமாளுக்கு திரு.மலரவன், திரு.ரோசய்யா இணைந்து நினைவு பரிசு வழங்குதல். அருகில் திரு.சம்பங்கி, பெங்களூரு .
http://i64.tinypic.com/bi58ap.jpg
திரு.முருகன் அவர்களுக்கு திரு.மலரவன், திரு.வெங்கடேச பெருமாள் இணைந்து நினைவு பரிசு வழங்குதல் .
http://i63.tinypic.com/1z3tf7p.jpg
முற்றும் .....
தூத்துக்குடி ராஜ் அரங்கில் புரட்சி தலைவர் / மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் நடித்த டிஜிட்டல் "நினைத்ததை முடிப்பவன் " தினசரி 4 காட்சிகள்
6/4/18 வெள்ளி முதல் நடைபெறுகிறது .
http://i66.tinypic.com/2dvu71t.jpg
தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.ராஜா .
6/4/18 வெள்ளி முதல் அம்பை பாலாஜியில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் இரு வேடங்களில் நடித்த "எங்க வீட்டு பிள்ளை " தினசரி 4 காட்சிகள் நடைபெறுகிறது .
http://i66.tinypic.com/2s1ohvl.jpg
தகவல் உதவி : நெல்லை நண்பர் திரு.ராஜா .
நம் வசூல் திலகத்தின் "நாடோடி மன்னன்" காவியம் சேலம் -கீதாலயா 70MM, கௌரி ஆகிய 2 dts தியேட்டர்களிலும், மொத்தமாக 7 இடங்களில் வறண்டு கிடக்கும் திரையுலகை வாழ வைக்க வந்து விட்டார், வேலூர்- குறள் A/C வெற்றிகரமான 2 வது வாரமாக மறுபடியும் வீர, வேங்கை நடை போடுகிறார் "அடிமைப்பெண்"...
தற்போது உண்மையான நிழல் & நிஜத்தில் சக்ரவர்த்தி புரட்சி நடிகர் அளிக்கும் "நாடோடி மன்னன்" ஏறத்தாழ 15 அரங்குகளில் ராஜ நடை போடுகிறார்... வரும் வெள்ளிக்கிழமை தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தஞ்சை- ஸ்ரீ ராணி பாரடைஸ், திண்டுக்கல் - ராஜேந்திரா அரங்குகளிலும் வந்து காட்சி தரவிருக்கிறார் நம் அண்ணல்...
மார்ச் 2018- மற்றும் இந்த மாதம் இன்று வரை தென்னிந்தியாவில் மக்கள் திலகத்தின் 18 படங்கள் ஓடியது . ஓடிக்கொண்டிருக்கிறது .
நாடோடிமன்னன்
எங்க வீட்டுப்பிள்ளை
அடிமைப்பெண்
தேடிவந்த மாப்பிள்ளை
தர்மம் தலைகாக்கும்
குடியிருந்த கோயில்
நினைத்ததை முடிப்பவன்
ரிக் ஷாக்காரன்
ஒளிவிளக்கு
ரகசியபோலீஸ் 115
சங்கே முழங்கு
நல்ல நேரம்
நான் ஏன் பிறந்தேன்
நேற்று இன்று நாளை
உரிமைக்குரல்
இதயக்கனி
பல்லாண்டு வாழ்க
தனிப்பிறவி
சென்னை மற்றும் தமிழ் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களில் உள்ள மால் திரை அரங்கிலும் , மற்றும் மிகப்பெரிய ஏ.சி .திரை அரங்குகளிலும் , பி மற்றும் சி நகர கிராம அரங்குகளிலும் எம்ஜிஆரின் படங்கள் சாதனை படைத்தது வருகிறது . இந்திய திரைப்பட வரலாற்றில் மக்கள் திலகம் எம்ஜிஆர் திரைப்படங்கள் நிகழ்த்தி வரும் சாதனை பெருமைக்குரியது .
1958ல் புரட்சி நடிகர் எம்ஜிஆர் நாடோடி மன்னன் . 1977ல் புரட்சித்தலைவர் தமிழக முதல்வர் எம்ஜிஆர்
60வது ஆண்டில் நாடோடிமன்னன்
7வது முறையாக அதிமுக ஆட்சி
46வது .ஆண்டில் அதிமுக இயக்கம்
உயிர்ப்புடன் வலம் வரும் எம்ஜிஆர் மன்றங்கள்
சமூக வலை தளங்களில் முதன்மை இடத்தில எம்ஜிஆர் பற்றிய தகவல்கள் மற்றும் எம்ஜிஆர் படங்கள்
புத்தக உலகில் மக்கள் திலகம் ... புதிய புத்தகங்கள் அமுத சுரபியாக வந்த வண்ணம் உள்ளது .
இந்திய வரலாற்றில் மிக பிரமாண்டமாக நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்ட ஒரே நடிகர் தலைவர் எம்ஜிஆர் .
ஊடகங்களில் எம்ஜிஆர் படங்கள் மற்றும் பாடல்கள் தினசரி தரிசனம்
எம்ஜிஆர் என்ற பெயரை உச்சரிக்காத அரசியல் இயக்கங்களே இல்லை .
எல்லா தலைமுறையினரும் அதிகம் விரும்பும் ஒரே நடிகர் மற்றும் தலைவர் எம்ஜிஆர் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் சாதனை
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். 1987-இல் மறைந்தபோது, அடுத்து வரும் பத்தாண்டுகளில் அல்லது இருபது ஆண்டுகளில் அவரது புகழும், செல்வாக்கும் தமிழக மக்களிடையேயும், சினிமா இரசிகர்களிடையேயும், மெல்ல மெல்ல மங்கி, ஒரு காலகட்டத்தில், அவர் மறக்கப்பட்டு விடுவார் என நினைத்தவர்களில் நானும் ஒருவன்.
ஆனால், அதற்கு நேர்மாறாக, சுமார் 30 ஆண்டுகளுக்குப் பின்னரும், எம்ஜிஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் இந்தத் தருணத்தில், அவரது புகழ் அடுத்த தலைமுறைக்கும் கடத்தப்பட்டு, நீடித்து நிலைத்திருப்பதற்கும், தொடர்வதற்கும் என்ன காரணம் என பல தருணங்களில் நான் சிந்தித்ததுண்டு.
கீழ்க்காணும் மூன்று முக்கிய அம்சங்கள் காரணமாக அவரது புகழ் இன்றும் தொடர்ந்திருக்கிறது – நிலைத்திருக்கிறது – என்பது எனது சிந்தனையின் முடிவு:
தமிழக அரசியலில் தொடர்ந்து அதிமுக கட்சி ஜெயலலிதாவின் ஆளுமையாலும், திறனாலும் ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டதோடு, முக்கிய மாற்று அரசியல் சக்தியாகவும் திகழ்ந்ததால், அவர்களால் எம்ஜிஆரின் புகழை ஒரு வாக்கு வங்கியாக மாற்றி மக்களிடையே அவரது பெயரை நிலைத்திருக்கச் செய்ய முடிந்தது.
இரண்டாவதாக, எம்ஜிஆரின் மறைவுக்குப் பின்னர் விஸ்வரூபமெடுத்து இல்லம்தோறும் இன்று பரவிக் கிடக்கும் தொலைக்காட்சி ஊடகங்கள் எம்ஜிஆரின் புகழ் நிலைத்திருப்பதற்கு இன்னொரு காரணமாகும். தனது சொந்தத் திரைப்படத் தயாரிப்புகளைக் கூட தொலைக்காட்சிகளுக்கு உரிமம் கொடுக்காமல் பாதுகாத்தவர் எம்ஜிஆர். ஆனால், நாளடைவில், அவரது திரைப்படங்களும், காட்சிகளும், குறிப்பாகப் பாடல் காட்சிகளும் அடிக்கடி தொலைக்காட்சிகளில் ஒளியேறி வர இதன் மூலம் அவர் காலத்து இரசிகர்கள் அவரை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்திக் கொண்டாட முடிந்தது என்பதோடு, அடுத்த தலைமுறையின் புதிய, இளம் இரசிகர்களும் அவரது இரசிகர்களாக இணைந்தார்கள். எம்ஜிஆரின் தீவிர இரசிகர்கள் பலர் அடிக்கடி எம்ஜிஆர் படங்களை தொலைக்காட்சிகளில் பார்க்க, அவர்களோடு அந்தப் படங்களைப் பார்த்த அவர்களின் பிள்ளைகளும் எம்ஜிஆரை இரசிக்கத் தொடங்கினார்கள் என பல குடும்பங்களில் நானே சொல்லக் கேட்டிருக்கிறேன். இது மற்ற எந்த நடிகருக்கும் நேராத அதிசயம்.
மூன்றாவதாக எம்ஜிஆர் மிகவும் கவனமுடன் கடைப்பிடித்த ‘இமேஜ்’ எனப்படும் அவரது வெளித்தோற்ற நடவடிக்கைகள், மனித நேயத்தை மையமாகக் கொண்டு அவர் கடைப்பிடித்த பொது உறவுப் பண்பாடுகள் இன்றுவரை பலராலும் பெருமிதத்துடனும், ஆச்சரியத்துடன் பேசப்பட்டு வருவதால், அந்த விவரங்கள் அடுத்த தலைமுறைக்கும் கொண்டு செல்லப்பட்டு, எம்ஜிஆர் இப்படியெல்லாம் நடந்து கொண்டாரா, எம்ஜிஆர் அவ்வளவு நல்லவரா என இன்றைய மக்களும் அதிசயப்படும் வண்ணம் அவரது புகழ் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
Courtesy - net