-
பொன்மனச் செம்மல் எம் .ஜி .ஆர்
தனித்தமிழ் ஈழத்தை ஆதரித்த
தனிப்பெரும் தலைவர் எம் .ஜி .ஆர்
ஈழத்திற்கு நிதி உதவி தந்து வளர்த்தவர்
ஈழத்தமிழரின் நெஞ்சம் நிறைந்தவர்
சிங்களக் கொடுமை உணர்ந்தவர்
சிங்களம் வீழ்ந்திட விரும்பியவர்
மதிய உணவை சத்துணவாக விரிவாக்கியவர்
மாணவர்கள் பள்ளி வரக் காரணமானவர்
கோடிகளைக் கொள்ளை அடிக்காதவர்
குடும்பத்திற்குச் சொத்துச் சேர்க்காதவர்
திரையில் மட்டுமே நடித்தவர்
நிஜத்தில் என்றுமே நடிக்காதவர்
விலைவாசியை கட்டுப்பாட்டில் வைத்தவர்
விவேகமாகச் சிந்தித்துச் செயல்படுத்தியவர்
அவரால் வாழ்ந்தவர்கள் கோடி
அவரால் வீழ்ந்தவர்கள் மிகச் சிலர்
உலகம் வியக்கும் வண்ணம் மதுரையில்
உலகத் தமிழ் மாநாட்டை நடத்தியவர்
உயிருள்ளவரை முதல்வராய் இருந்தவர்
உன்னத ஏழைகளின் இதயத்தில் வாழ்பவர்
--
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி.........
-
வணக்கம்!*
1967-ம் ஆண்டு ஒரு புத்தகத்தில் இருந்து சில பகுதிகளை வெளியிடுகின்றோம்.*
அதன் தலைப்பு*
"எம்.ஜி.ஆர். காட்டும் பாதை"*
என்பது ஆகும்.
புத்தகத்தில் பொன்மனச் செம்மலின் புகழாரம் சூட்டும் வார்த்தைகள்.
தனி ஒரு மனிதன் எல்லா சிறப்புகளையும் ஒருங்கே பெற்றிருப்பது மிகவும் ஆச்சரியமான ஒன்றாகும். ஒருவர் கல்வியில் புலமை உடையவனாக இருப்பார். இன்னொருவர் செல்வத்தில் பிரபுவாக இருப்பார். வேறொருவர் சிறந்த வீரனாக இருப்பார்.
கல்வி, செல்வம், வீரம் மூன்றையும் தன்னிடம் உடைய ஒரு மனிதன் இருந்தால் அவனிடம் வேறு ஏதாவது ஒரு சிறப்பில்லாத குணம் குடிகொண்டிருக்கும். ஒன்று இருந்தால் ஒன்று இல்லை என்பதற்கு இணங்க....
எல்லா சிறப்பையும் ஓர் அங்கே பெற்ற மனிதர்கள் அரசியலில் இருக்கிறார்கள்.....
*கலைஞர்களில் இருக்கிறார்களா?*
யாரை கேட்டாலும் உடனே கூறிவிடுவார்கள் .....
குணம், கலை, வீரம், அறிவு, செல்வம் எல்லாம் உடைய ஒருவர் என்றால் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் என்று கூறுவார்கள்.
காரணம் எம்.ஜி.ஆர் பிற கலைஞர்களை மதிக்கிறார். ஆதரிக்கிறார். போற்றுகிறார். ஏழை மக்களின் கண்ணீரைத் துடைக்கிறார்.
நாட்டின் பாதுகாப்புக்கு உதவுகிறார். பொது வாழ்வின் நலனுக்கு எப்போதும் சுறுசுறுப்பாக பணியாற்றுகிறார்.
பத்திரிகையாளர்களை மதிக்கிறார்.*
இவரை யாரும் தங்குதடையின்றி சந்திக்கலாம். தங்கள் குறைகளை கூறலாம்.*
வீண் ஆடம்பரம், மமதை, கர்வம் இவற்றை இவரிடம் அறவே காணவே முடியாது.
யாராக இருந்தாலும் அவரிடம் பேசும் பொழுது அதை கூறும் பொழுது மிக கவனமாக கேட்பார். அரை மயக்க நிலையில் செவிடன் காதில் ஊதிய சங்காக இருக்கமாட்டார்.*
இவரிடம் பணியாற்றும் ஒவ்வொருவரும் குணம், செய்கை, பழக்கம் எல்லாவற்றிலும் உயர்ந்தவர்கள். மற்றும் பண்பு அன்பு கொண்ட இதயம் உடையவர்கள்.
மக்கள் திலகத்தின் வாழ்வில் இன்னும் பல நெறிமுறைகளை காணலாம்.
தொடரும் பதிவுகள்.........
-
1966ம் ஆண்டு வந்த ஒரு நாளிதழில் புரட்சித் தலைவரைப் பற்றிய ஒரு கவிதையும் அவரைப் பற்றிய சிறப்புகள் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
வெற்றிப்படிகள் எம்.ஜி.ஆர்.*
என்ற தலைப்பில் ஒரு கவிதை!*
அன்பு உள்ளம் படைத்தவர் எம்.ஜி.ஆர் !
ஆடி வரும் தென்றல் எம்.ஜி.ஆர்! இன்பக் கனவு தந்த எம்.ஜி.ஆர்! ஈகையில் நிகரற்ற எம்.ஜி.ஆர்!
உழைப்பால் உயர்ந்தவர் எம்.ஜி.ஆர்!*
ஊக்கம் உள்ள சிங்கம் எம்.ஜி.ஆர்! எதிரிகளை வென்றவர் எம்.ஜி.ஆர் ஏழைப்பங்காளர் எம்.ஜி.ஆர் !ஐவர்களையும் ஆதரிக்கும் எம்.ஜி.ஆர்!*
ஒழுக்கத்தின் உறைவிடம் எம்.ஜி.ஆர்!*
ஓங்கு புகழ் கொண்டவர் எம்.ஜி.ஆர்!*
ஔடதம் அருந்தாதவர் எம்.ஜி.ஆர்! எஃகு மனிதர் எம்.ஜி.ஆர்.!
எம்.ஜி.ஆர். நடிக்கும் படத்தை மக்கள் விரும்பி பார்க்கிறார்கள் என்றால் அதில் நவரசத்துடன் கூடிய நாட்டுக்கும், நாட்டு மக்களுக்கும் தேவையான கருத்துள்ள வசனங்கள் நறுக்குத் தெரிவது போல் இருக்கும் என்ற உண்மையை மக்கள் உணர்ந்து இருப்பதால் தான்.*
அவரது திரைப்படங்களை எல்லாம் மக்கள் ஆர்வத்துடன் சென்று பார்க்கிறார்கள். அவரது திரைப்படங்கள் எப்போது வரும் என்று ஆவலுடன் காத்து நிற்பவர்கள் லட்சோப லட்சம், கோடான கோடிக்கணக்கான தமிழ் மக்கள்கள்.
எம்.ஜி.ஆரை ஏன் மக்கள் சுற்றிக்கொண்டே.....
புகழ் பாடித் திரிந்து கொண்டே வருகிறார்கள் என்றால்....*
அவர் மக்களுக்காக வாழ்கின்றார்.*
தான் நடிக்கும் திரைத்துறையில் சம்பாதிக்கிற பணத்தை எல்லாம் நாட்டு மக்களுக்கு நன்கொடையாக கொடுகின்றார் என்பதால்தான் அவரது புகழ் திரையைத் தாண்டி அரசியலைத் தாண்டி எங்கும் அவர் பெயர் நிலைத்துக் கொண்டு வருகிறது.
தமிழகத்தில் எந்த நிகழ்ச்சி*
ஆனாலும்.....எங்கு நடந்தாலும் சரி பள்ளியிலும், கல்லூரியிலும், அரசியல் வானிலும், திரையுலகிலும் இப்படி எல்லா துறையிலுமே தினமும் பேசப்படுகின்ற ஒரு வார்த்தை தான் எம்.ஜி.ஆர்.*
அவரது பெயரை சொல்லும் பொழுதே மக்களுக்கெல்லாம் உள்ளமெல்லாம் ஒரு சிலிர்ப்பை உண்டாக்குகிறது.
புகழ் படைத்த எம்ஜிஆர் அவர்களை விரும்புபவர்களை விட அதிகமாக எதிரிகளே அவரது பெயரை உச்சரிக்கிறார்கள். அப்படியிருந்தும் அவரது பெயர் மேலும் மேலும் புகழுடன் வளர்ந்து வருகிறது அவரது பெயர் தமிழ்* நாட்டில்....
நாடும் ஏடும் மக்களும் மன்றங்களும் குறிப்பாக எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் அத்தனை பேரும் போற்றிப் புகழும் ஒரு அற்புத மனிதர் இன்றைய தினத்தில் எம்.ஜி.ஆர் ஒருவர் மட்டுமே நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
நித்தம் பத்திரிக்கைகளிலும், போஸ்டர்களிலும், யார் வாயிலில் இருந்து வரும் சொல் எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர் எம்.ஜி.ஆர் என்றே பிரதி பலித்துக் கொண்டிருக்கின்றது.*
பொழுது விடிந்தால் ஒரு புது செய்தியும் பல புகழ் மாலையும் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன எம்ஜிஆர் அவர்களுக்கு.
வீதிகளில் ஒவ்வொருவரும் எம்.ஜி.ஆர் அவர்களின் திரை பாடல்களையே முணுமுணுத்து பாடி செல்கின்றார்கள்.*
ஹலோ ஹலோ சுகமா*
தாய் மேல் ஆணை*
தமிழ் மேல் ஆணை*
புதிய வானம் புதிய பூமி*
இப்படி எங்கு பார்த்தாலும் எம்.ஜி.ஆரின் பாடல்களே மக்கள் முணுமுணுத்த வண்ணம் சென்று கொண்டிருக்கிறார்கள்.
இன்னும் புதிய திரைப்படங்களில் எம்.ஜி.ஆர் நடிக்கிறார் என்றதும் அத்திரைப்படத்தைப் பற்றிய நான்கு பக்கமும் பேசப்பட்டு வருகிறது.*
எந்த ஒரு நிகழ்ச்சியானாலும் எந்த ஒரு செய்தி ஆனாலும் எம்.ஜி.ஆர் அவர்களின் பெயர் இன்று பேசப்படுகிறது.*
நாடகம் ஆனாலும் சரி, திரைப்படம் ஆனாலும் சரி, நன்கொடை ஆனாலும் சரி, எங்கும் எம்.ஜி.ஆரின் பெயரை உச்சரித்து புகழ்பாடி வருகின்றார்கள் பொதுமக்கள்.
தன் உழைப்பால் உயர்ந்த எம்.ஜி.ஆர் அவர்கள் அதன் மூலம் கிடைக்கின்ற செல்வங்களை பல்வேறான நல்ல காரியங்களுக்கு இன்று நாட்டில் கொடுத்துக் கொண்டு வருகின்றார்.*
இப்பேர்ப்பட்ட ஒரு எம்.ஜி.ஆர் என்ற பெயரை, புகழ் பெற்ற ஒரு மனிதரை தமிழகம் இதற்கு முன்னாலும் இதற்குப் பின்னாலும் காண முடியாது என்பது தான் மக்களின் கருத்தாகும்.
புகழுக்கு மேல் புகழ் சேர்த்த பொன்மனச்செம்மல் எம் ஜி ஆர் அவர்களைப்பற்றி 1966 ஆம் ஆண்டு ஆண்டில் வெளியான ஒரு பத்திரிகையில் இருந்து கிடைத்த செய்திகள் தான்* மேலே குறிப்பிட்ட புகழ் மாலைகள் ஆகும்.*
மேலும் இன்னும் பல புத்தகங்களில் புரட்சித் தலைவருக்கு புகழ் பாடி உள்ளார்கள் அன்றைய தினம்.* மேலும் பதிவிடுகிறோம்... நன்றி! வணக்கம் !.........
-
வணக்கம்*...
1965 ஆம் ஆண்டு வெளியான "ஆயிரத்தில் ஒருவன் " காவிய திரைப்படம் பற்றி அன்றைய ஒரு சிறப்புக் கட்டுரையில் வெளியான நிகழ்ச்சியை இப்பொழுது முன் வைக்கின்றோம்....
ஆயிரத்தில் ஒருவன் எம்ஜிஆர் என்ற தலைப்பில் வெளியான இந்த தகவலை இப்பொழுது மேற்கோள் காட்டுகிறேன்-. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடிக்கும் படங்கள் எல்லாமே வெற்றியடைய சாதனையாக நிற்கின்றது என்பது எது காரணம் என்பதை விளக்குகிறோம்.
எம்.ஜி.ஆர் நடிக்கும் படங்களை பார்க்கும் போது முழு மனநிறைவு உண்டாகிறது. வீர உணர்வு மனதில் வளருகிறது.* அன்பு ,பண்பு இனிமை போன்ற நல்ல எண்ணங்களை வளர்க்கக்கூடிய படங்களாக எம்.ஜி.ஆர் நடிக்கும் பெரும்பாலான படங்கள் இருக்கின்றன.
சமீபத்தில் வந்தபடங்களில் ஆயிரத்தில் ஒருவன் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுடைய குணங்களை பிரதிபலித்து காண்பிக்க கூடியதாக இருக்கிறது*
இந்த படத்தில் கடைசி வரையிலும் நியாயத்திற்கும், நேர்மைக்கும் போராடுகிறார். இடையில் துன்பங்கள் ஏற்பட்டாலும் கடைசியில் வெற்றி பெறுகிறார்.*
சத்தியமே வெல்லும் என்பதை ஆயிரத்தில் ஒருவன் பட கதை மட்டும் விளக்கவில்லை....*
மக்கள் திலகத்தின் வாழ்க்கையே காண்பிக்கிறது. சத்தியசீலர் ஆக நல்ல எண்ணங்களுக்கும் தூய்மையான செயல்களுக்கும் மதிப்பு கொடுத்து எம்.ஜி.ஆர் நடந்து கொண்டு வரும் காரணத்தால் தான் இன்று அவர் புகழ் ஏணியின் உச்சியில் இருக்கிறார்.
திரைப்படங்களில் மட்டுமல்ல நடைமுறை வாழ்க்கையிலும் கூட சிறப்பான கொள்கையுடைய வேற எந்த நடிகரையும் இன்றைய சினிமா உலகில் பார்க்க முடியாது.
வீர சாகசங்களும், சண்டைகளும் நிறைந்த படம் ஒன்றை தயாரிக்க பத்மினி பிக்சர்சார் திட்டமிட்டனர் திரு. கே. ஜே. மகாதேவன் அவர்கள் எழுதிய கதையான ஆயிரத்தில் ஒருவனை படமாக்க தேர்ந்தெடுத்தனர்..........
-
"நவரத்தினம்" 1977 மார்ச் மாதம் 5 ம் தேதி வெளிவந்து வெற்றியை பெற்ற படம். சென்னையில் சாதாரண திரையரங்குகளில் வெளியாகி வியத்தகு வெற்றியை பெற்ற படம்.
சென்னையில் மொத்தம் 198 நாட்களிலே மொத்த வசூலாக ரூ 9,07,260.20. பெற்ற வெற்றிப் படம்.
சென்னை வெலிங்டன், மகாராணி, அபிராமி, ராம் தியேட்டர்களில் வெளியாகி அதிக பட்சமாக 56 நாட்களும், மொத்தம் 198 நாட்களும், தமிழகத்தில் மதுரை தங்கத்தில் 62 நாட்களும் ஓடி குறுகிய காலத்தில் அதிக வசூலை பெற்ற படமாக திகழ்கிறது. சென்னையில் பெரிய ஏசி திரையரங்கில் வெளியாகி இருந்தால் சென்னை வசூல் மட்டுமே 12 லட்சத்தை தொட்டிருக்கும்.
ஆனாலும் a p நாகராஜன் தயாரித்த படங்களிலே அதிக வசூல் பெற்ற படமாக திகழ்கிறது.
சங்கம் வளர்த்த மதுரையில் திராவிட சிங்கத்தின் கர்ஜனை தங்கம் திரையரங்கில் ஒலிக்கிறது என்றால் சிவாஜி ரசிகர்களுக்கு அங்கம் பதறி நம்ம வசூலுக்கு இனி பங்கம் வருமே நாம் இனி எங்கும் தலைகாட்ட முடியாதே! என தலைவரின் வெற்றி சங்கொலி கேட்டு துவண்டு விடுவார்கள். அதிலும் முதல் வார வசூல் அவர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருக்கும். தலைவரின் படங்களின் முதல் வார வசூலையே. சிவாஜியின் பல படங்கள் மொத்த வசூலில்
நெருங்க முடிவதில்லை.
"தலைவன்" படத்தின் முதல் வார வசூலையே அநேக சிவாஜியின் வெள்ளி விழா படங்கள் கூட நெருங்க முடியவில்லை. தங்கத்தில் ஜீலை 24 ல் வெளியாகி ஆக 28 வரை ஓடிய "தலைவன்" வசூல் லட்சத்தை எளிதில் கடந்தது. ஆக 29 ல் "தேடிவந்த மாப்பிள்ளை" வரவில்லையென்றால் 50 நாட்களை கடந்து கணேசனின் "கர்ணன்" வசூலை ஏப்பமிட்டிருக்கும்.
"தேடி வந்த மாப்பிள்ளை" தங்கத்தில் வெளியாகி 69 நாட்கள் ஓடி ரூ 2,27,000 வசூலாக பெற்று "கர்ணன்"
100 நாட்கள் வசூலை பந்தாடியது.
இதே அரங்கில் வெளியான "எதிரொலி" முதல் நாள்
6 மணிக்காட்சிக்கு பார்ப்பதற்கு ஆளின்றி சுமார் 30 சதமான ஆட்கள் தியேட்டருக்குள் வேடிக்கை பார்க்க சென்றதாக எங்களுக்கு மதுரையில் இருந்து தகவல் வந்தவுடன் இங்குள்ள தலைவர் ரசிகர்கள் குஷியாக இருந்தது என் ஞாபகத்திற்கு வருகிறது. "தலைவன்" ரிலீஸ் தேதி தள்ளி வைத்ததால், மொத்தம் 4 வாரம் சிரமப்பட்டு ஓட்டி ரூ 60000 வசூலை கூட எட்ட முடியாமல் தவித்த கதை சுவாரஸ்யமானது.
உதாரணமாக, "நவரத்தினம்" மதுரை தங்கத்தில் 62 நாட்களில் பெற்ற வசூலை சிவாஜியின் எந்த படமுமே நெருங்கவில்லை.
மதுரை தங்கத்தில் 62 நாள் வசூல்
ரூ. 3,34,497.86 . "உத்தமன்" 100 நாள் வசூல் நியூசினிமாவில் ரூ327000 தான். "நவரத்தினம்" 62 நாளில் பெற்ற வசூலை 100 நாட்களில் கூட பெற முடியாத "உத்தமன்" வெற்றி படம், அப்படித்தானே. ஏபிஎன்னின் "திருவிளையாடல்" 100 நாள் வசூல்
ரூ 2,86,000 தான். "தில்லானா மோகனாம்பாள்" 50 நாளில்
ரூ2,04,000 தான் பெற்றது. 132 நாளில்தான் ரூ 3,47,000 வசூலாக பெற்றது.
ஆக a p நாகராஜன் தயாரித்த அத்தனை படங்களிலும் குறுகிய காலத்தில் அதிக வசூலை பெற்ற படம் ஜொலிக்கும் "நவரத்தினம்" தான் என்பது உறுதியாகிறது. "பட்டிக்காடா பட்டணமா" 42 நாளில் சென்ட்ரலில்
பெற்றதோ ரூ 2,14,000 தான்.
சிவாஜியின் அத்தனை வெள்ளி விழா, வெற்றி விழா படங்களின் 62 நாட்கள் வசூல் அத்தனையும் "நவரத்தினம்" படத்தின் 62 நாள் வசூலுக்குள் அடக்கமாகி விட்டது.
அது மட்டுமா? தமிழகத்தையே கலக்கிய "ஆட்டுக்கார அலமேலு" படத்தின் 70 நாள் வசூலும் நவரத்தினத்தை விட குறைவுதான்.
"அண்ணன் ஒரு கோயில்" கேட்கவே வேண்டாம். வசந்த மாளிகை 55 நாட்களில் பெற்ற வசூல் ரூ2,40,.229.10. நெருங்க முடியுமா நவரத்தினத்தை. வாய்கூசாமல் தோல்வி படம் என்கிறீர்களே?, அப்படியானால் சிவாஜி நடித்த அத்தனையுமே தோல்வி படங்கள்தான்.
சும்மாவா தலைவருக்கு சிவாஜியைப் போல் பல மடங்கு சம்பளம் கொடுக்கிறார்கள். யானை அமர்ந்தால் கூட அதன் மீது உங்களால் ஏறி அமர முடியாது. இனி உங்கள் வசூல் விபரங்களை ஜெய்சங்கர், ரவிச்சந்திரன் படங்களோடு ஒப்பீடு செய்து திருப்தி பட்டுக் கொள்ளுங்கள். அதிலும் 'c' சென்ட்டரில் அவர்கள் வசூலை நெருங்குவது கடினம்தான். தலைவர் படத்தின் வசூல் அகில இந்திய அளவுக்கு பேசப்படும் போது நீங்கள் இனி வீண் முயற்சி செய்து பலனில்லை..........
-
எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் போர்க்கலைகள்
'விசாரணை' படத்தின் மூலக்கதை வடிவமான 'லாக்கப்' நாவல் மூலம் கவனத்தை ஈர்த்த மு.சந்திரகுமார் எழுதியுள்ள நூல் எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் போர்க்கலைகள். டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகம் சார்பில் வேடியப்பன் பதிப்பித்துள்ளார்.
புரூஸ்லி, ஜாக்கிசான், ஜெட்லி, டோனிஜா போன்ற கலைஞர்கள் குங்ஃபூ கலைக்கும் சீனத் திரைப்படக் கலைக்கும் செய்திருக்கும் பங்களிப்புக்குச் சமமாக தமிழ் சினிமாவில் பங்களிப்பு செய்த கலைஞர் யார்? தமிழர்களின் போர்க்கலைகளை தமிழ்த் திரைப்படம் எந்த அளவு பதிவு செய்துள்ளது? என்ற இரண்டு கேள்விகளுக்கும் எம்.ஜி.ஆர். என்பது மட்டுமே பதிலாக உள்ளது.
நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவில் சண்டைக்கலை குறித்து ஆய்வு செய்தால் மரபார்ந்த போர்க்கலையை ஆகச் சிறப்பாகப் பயன்படுத்திய ஒப்பற்ற கலைஞராக எம்.ஜி.ஆர்.திகழ்கிறார் என்பதை மு.சந்திரகுமார் சான்றுகளுடன் நிறுவும் விதம் மலைக்க வைக்கிறது. எம்.ஜி.ஆர் நடிப்பில் அதிகம் பார்த்து ரசித்த படங்களில் பயன்படுத்தப்பட்ட சண்டைக் காட்சிகளின் நுட்பம் வியக்க வைக்கிறது. அதனால்தான் 'மலைக்கள்ளன்' படத்தின் கலை கலாச்சாரத்துக்காக குடியரசுத் தலைவர் விருது கிடைத்துள்ளது.
உண்மையில் எம்.ஜி.ஆர் நடிப்புலகில் ஒரு மேடை நாடகத்தில் அழும் சிறுவனாகத்தான் அறிமுகம் ஆனார். அடித்ததால் அழுது நடிக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டார். நடனமே வராது போய்விடு என்று விரட்டியடிக்கப்பட்ட பிறகு, நடிப்பு, வசனம், போர்க்கலையில் கவனம் செலுத்தி தனித்த ஆளுமையாக தன்னை வளர்த்தெடுத்துக் கொண்டார். நடித்த நேரங்கள் போக மீதமுள்ள நேரங்களில் ஆயுதக் கலைகளைப் பயின்றதன் மூலம் போர்க் கலைஞராக எம்.ஜி.ஆர் ஜொலித்த ரகசியத்தையும் இந்நூல் விவரிக்கிறது.
சாகச நாயகனாக எம்.ஜி.ஆர் தன்னை முன்னிறுத்தும் தருணங்களில் கூட நம்பமுடியாத சண்டைக்காட்சிகளில் நடிக்க ஒப்புக்கொண்டதே இல்லை என்பதையும், என்னால் செய்ய முடியாத காட்சிக்கு டூப் போடலாம். செய்ய முடிந்த காட்சிக்கு ஏன் டூப் போட வேண்டும் என்று கேள்வி எழுப்பியவர் எம்.ஜி.ஆர் என்பதையும் இந்த நூலைப் படிக்கும்போது தெரிந்துகொள்ள முடிகிறது.
120க்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக நடித்த எம்.ஜி.ஆர் ஒரு படத்தில் கூட ஆயுதமற்ற எதிரியை ஆயுதத்துடன் எதிர்கொண்டதில்லை, எந்த எதிரியையும் பின்புறம் இருந்து அவர் தாக்கியதில்லை, பெண்களை வாடி போடி என்று விளித்தது இல்லை என்று படிக்கிற போது அவர் பிம்பத்தின் மீதான மரியாதை கூடுகிறது. எதிரி ஆயுதத்தை இழந்துவிட்டால் தன் ஆயுதத்தை விட்டெறிந்துவிட்டும் அல்லது எதிரிக்கு ஒரு ஆயுதத்தைக் கொடுத்தும் சண்டை செய்யும் தமிழ் மரபுப் போர் புரிந்த வீரன் எம்.ஜி.ஆர் என்பதை திரைப்படங்களின் காட்சி ரீதியாக விளக்கும் விதம் நெகிழ வைக்கிறது.
எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் இருக்கும் சண்டைக்காட்சிகள் தனித்துவமானவை. சிலம்பு, மாடி, இரட்டைக் கம்பு, அலுமினியப் பைப்பில் சண்டை என தமிழர்களின் பாரம்பரியக் கலைகளை சினிமாவில் பயன்படுத்திய பெருமை எம்.ஜி.ஆரையே சாரும்.
பெரிய இடத்துப் பெண் திரைப்படத்தில் இரட்டைக் கம்பு (ஆஃப் ஸ்டிக்) சண்டைக் காட்சி, தாய்க்குப் பின் தாரம் படத்தில் உழவுக்காட்டில் எம்.ஜி.ஆர் போடும் நீள் அடிக்கம்பு சண்டைக் காட்சி, மாட்டுக்கார வேலன் படத்தில் மாட்டுக்குக் கட்டும் பித்தளை சலங்கைகள் கோர்த்திருக்கும் எடை மிக்க பெல்ட்டை லாவகமாகச் சுழற்றும் சண்டைக் காட்சி, அதே படத்தின் இறுதிக் காட்சியில் இரும்புக் குழாய்களைப் பயன்படுத்திப் போடும் சண்டைக் காட்சி, விவசாயி திரைப்படத்தில் மூங்கில் கழிகொண்டு எம்.ஜி.ஆரும்- நம்பியாரும் போடும் சண்டைக் காட்சி, உரிமைக்குரல் படத்தில் ஏர் கலப்பையைக் கொண்டு எதிரிகளைப் பந்தாடும் சண்டைக் காட்சி, உழைக்கும் கரங்கள் படத்தில் கம்பு சுழற்றும் காட்சி, சக்கரவர்த்தி திருமகள் மல்யுத்தக் காட்சி, ஆயிரத்தில் ஒருவன், மீனவ நண்பன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன், நாடோடி மன்னன் என்று ஏராளமான படங்களில் நீள் கத்தி சண்டைக் காட்சி என 20க்கும் மேற்பட்ட படங்களில் எம்.ஜி.ஆரின் சண்டைக்காட்சிகளை ஆய்வுப்பூர்வமாகவும் நுட்பமாகவும் அணுகி அலசி இருக்கிறார் மு.சந்திரகுமார்.
தமிழ் திரைப்படங்களில் சண்டைக் கலையின் மகத்துவம் குறித்து அறிந்துகொள்ள நினைப்பவர்கள், சண்டைக் கலைஞர்களின் உன்னதத்தை தெரிந்துகொள்ள விரும்புபவர்கள், வாசகர்கள் என யாவரும் எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் போர்க்கலைகள் நூலை விரும்பி வாசிக்கலாம்.
நூல்: எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் போர்க்கலைகள்
ஆசிரியர்: மு.சந்திரகுமார்.........
-
அவர் ஒரு புதிர்
திரைப்படத் துறையிலும் சரி, அரசியலிலும் சரி எம்.ஜி.ஆர் தனது பாணி என்று ஒரு தனி முத்திரையைப் பதித்தவர்.
சினிமாவை எடுத்துக் கொண்டால், அவர் நடித்த படங்களில் ஆரம்பத்தில் பல இன்னல்களுக்கும் சோதனைகளுக்கம் ஆளாவார். ஆனால் கடைசியில் அவரே வெற்றி பெறுவார்.
அரசியலிலும் எம்.ஜி.ஆர். சாதனை இதுவே. தி.மு.கழகம் அவரைத் தூக்கி எறிந்த போது நடிகராவது அரசியல் கட்சி நடத்துவதாவது என்று கேலி பேசப்பட்டது. வீழ்ந்துவிடவில்லை அவர். சில ஆண்டுகளிலேயே தி.மு.கவைத் தூக்கி அடித்து தமிழக ஆட்சியைக் கைப்பற்றி முதலமைச்சராகிவிட்டார்.
பிறகு இந்திரா காந்தி அவருடைய ஆட்சியை டிஸ்மிஸ் செய்தபோது எம்.ஜி.ஆரின் அரசியல் அத்யாயம் முடிந்துவிட்டது என்று தப்புக் கணக்கு போடப்பட்டது. ஆனால் எம்.ஜி.ஆரோ தி.மு.க. இ.காங்கிரஸ் கூட்டணியை வெற்றி கண்டு மீண்டும் முதலமைச்சரானார். இப்படி தோல்விகளையும், தொய்வுகளையும் தாங்கிக் கொண்டு வாகை சூடியவர் அவர்.
ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னும் அவருக்குப் பிரச்னைகள் ஏற்படாமலில்லை. கட்சிக்குள் கோஷ்டிப் பூசல் வெடித்ததையும் எதிர்கோண்டார். தன் கண் எதிரே கோஷ்டி சேர்த்த அமைச்சர்களையும் கட்சித் தலைவர்களையும் பதவி நீக்கம் செய்து, அவர்களது அகம்பாவத்தை மட்டம் தட்டி மக்கள் முன் வெறும் செல்லாக்காசாக்கிக் காட்டினார்.
அதே சமயம் கட்டாயங்கள் ஏற்பட்ட போதும் தமது அரசியல் வாரிசு யார் என்பதை சொல்ல மறுத்தார். தலைமைப் பதவி தானாகக் கனிந்து உருவாக வேண்டிய ஒரு விஷயம். நான் யார் வாரிசை நியமிக்க என்பதைச் சொல்லாமல் சொன்னார்.
இதையெல்லாம் பார்க்கும் போது அவர் ஒரு புதிர். அவர் ஒரு தனி சாதனையார். அவர் ஒர் அதிசயம் என்று தான் எடைபோட முடிகிறது.
எம்.ஜி.ஆரின் வெற்றிக்குக் காரணம் என்ன? உண்மையில் யுகப் புரட்சியை உண்டாக்கிய பல தலைவர்களைப் போல அடித்தள மக்களை வசப்படுத்தி வைத்திருந்ததே எம்.ஜி.ஆரின் மாபெரும் வெற்றி ரகசியம்.
உலக சரித்திரத்தில் இன்னொரு எம்.ஜி.ஆர் தோன்ற முடியாது.
ஆனந்த விகடன் தலையங்கத்திலிருந்து.........
-
#கேள்வி : புது வழி காணும் புரட்சித் தலைவரே ! மார்க்ஸின் சித்தாந்தங்கள் இன்றைய உலக நடைமுறைக்கு ஒத்துவராது என்கிறார்களே சிலர். உங்கள் கணிப்பு ?
#புரட்சித்தலைவரின் #பதில் : எந்த மேதையினுடைய சித்தாந்தங்களும் அடிப்படையை மாற்றாமல் , அதே சமயத்தில் காலமாற்றத்திற்கு ஏற்ற வகையில் நடைமுறைகளை அவ்வப்போது ஒரு சிறிதாவது மாற்றவேண்டிய அவசியம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகும் !
எந்தவொரு கொள்கையின் அடிப்படையும் நிலையானது ! வழிமுறைகள் மாறுபாடுகள் அடையலாம். சில சித்தாந்தங்கள் ( தத்துவங்கள் ) காலத்தின் வற்புறுத்தலால் மக்கள் மீது திணிக்கப்படுமாயின் அவை நிலைத்து நிற்பது சந்தேகத்துக்குரியதாகும் !
ஆனால் , மக்கள் சமூகத்தின் மறுமலர்ச்சியை மனித வாழ்வின் தனித்தன்மையை உள்ளடக்கி உருவாகும் உயிர் கொள்கைகள் சாகாவரம் பெற்றவையாகும் !
மார்க்ஸியம் என்று சொல்லப்படுகிற மனித உரிமைகளின் விளக்கக் கொள்கைகளின் மறுமலர்ச்சியே இன்றைய தினம் பேசப்படுகிற சோஷலிஸம் ஆகும் !
ஆனால், திருக்குறளை எடுத்துப் பார்த்தால் பெரும்பாலும் அதிலே சொல்லப்படுகின்ற மனித பண்புகள் எல்லைக்கோடுகள் அபேதவாதத்தினுடைய பகுத்தறிவு சித்தாந்தங்களை விளக்கம் கருத்துக் கருவூலமாக இருக்கும் !
மன்னர்களே இல்லாது போன இந்த நேரத்தில் மன்னர்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்று திருக்குறளிலே சொல்லியிருக்கிறதே, அது இந்தக் காலத்திற்கு எப்படி பொருந்தும் என்று கேட்பதற்கு பதிலாக மன்னர்களுக்குச் சொல்லப்பட்ட. மக்களின் பிரதிநிதிகளாக அமைச்சர் பதவியில் அவருகின்றவர்கள் விஞ்ஞான ரீதியிலே பயன்படுத்திக் கொள்வார்களானால் இந்தக் காலத்திற்குப் பொருந்தும். இதுபோல் பயன்படுத்தினால் அது எந்தக் காலத்திற்கும் பொருந்தும்
- நாடோடி மன்னன், மே 1975
கொடை வள்ளல் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க.........
-
எங்கள் வாத்தியார் :
🌺🌺🌺🌺🌺🌺🌺
பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர் தான் நடித்த
திரைப்படங்களின் மூலம் நல்ல கருத்துகளை
மட்டுமே எடுத்துரைத்து நடிப்பார். அவசகுணமான வார்த்தைகளையோ அல்லது
அவ நம்பிக்கை வார்த்தைகளையோ பேச
மாட்டார்.தன்னம்பிக்கை வளர்க்கும் வார்த்தைகளையே பயன்படுத்துவார்.
எதிரிகளுக்கும் திருந்த வாய்ப்பு தரும் காட்சிகளையே வைப்பார்.எதிரிகளையும் மரரியாதை குறைவான வார்த்தைகளால்
திட்ட மாட்டார்.ஆனால் அவருடைய சமகால
நடிகர்களின் படங்களை பார்த்தால் அவர்கள்
பயன்படுத்தும் வார்த்தைகள் டேய்" கம்மநாட்டி, நாதாரி,சோம்பேரிநாயே,தண்டம்"
இந்தமாதிரி பல வார்த்தைகள் கூறி திரைப்படங்களில் அழைப்பதை பார்த்திருக்கிறோம்.ஆனால் புரட்சித் தலைவர் படங்களில் அவர் பேசும் மரியாதையான வார்த்தைகள் எதிரிகளும் மதித்துபேசும் பாங்கு போன்ற தன்னிகரற்ற மனிதநேயசெயல்களை திரைப்படங்களில்
மட்டுமல்ல நேரடியான வாழ்க்கை முறையிலும் சிறியவர்களைக்கூட வணங்கியே பேசுவார்.இப்பேர்ப்பட்ட
எங்கள் மனிதநேய திலகத்தை இந்த
மனிதநேய தினத்தில் வணங்குகிறோம்...
அன்புடன் பாரதரத்னா எம்.ஜி.ஆர் பக்தர்கள் ..
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺.........
-
"நாடோடி மன்னன்" காவியத்தை நாட்டுக்கு தந்த புரட்சி நடிகர்*...
எம்.ஜி. ஆர் அவர்களுக்கு பேரறிஞர் அண்ணா அவர்கள்*
110 சவரன் கொண்ட தங்க வாளை 5 லட்சம் மக்கள் முன்னிலையில் கரகோஷமும் , வாழ்த்தொலியும் முழங்க வழங்கினார்.
இது போன்ற ஒரு மகத்தான விழா
நாடோடி மன்னன் காவியத்திற்கு
மட்டுமே பெருமையை பெற்று தந்துள்ளது.
நாடோடி மன்னன் திரைப்படத்திற்கு பல ஊர்களில் விழா கொண்டாடப்பட்டது. பல ஊர்களிலும் இத்திரைப்படத்தின் நூறாவது வெற்றி விழாவிற்கு புரட்சி நடிகர் அவர்களும் அத்திரைப்படத்தில் பங்குகொண்ட திரைப்பட கலைஞர்கள் மற்றும் திரைப்பட டெக்னீஷியன்கள் பலர் கலந்து கொண்ட முதல் நிகழ்ச்சியும் நாடோடி மன்னனுக்கு அரங்கேறியது.
சென்னை நகரில் புரட்சி நடிகரின் நாடோடி மன்னன் வெற்றி விழா பிரம்மாண்டமாக எம்.ஜி.யார் பிக்சர்ஸ் சார்பாக* அரங்கேறியது. பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமை ஏற்று திரைப்படத்தில் பங்கு கொண்ட 150 பேர்களுக்கு ஒரு பவுன் மோதிரம் மற்றும் கேடயங்கள் பரிசாக வழங்கினார்கள்.
ஒரு திரைப்படத்தில் பங்குகொண்ட அனைவருக்கும் சிறப்பு செய்யப்பட்ட முதல் திரைப்படமாக நாடோடிமன்னன் திகழ்ந்தது.*
சென்னையில் நடைபெற்ற நாடோடிமன்னன் வெற்றி விழாவிற்கு சுமார் இரண்டு லட்சம் மக்கள் பங்கெடுத்தனர்.*
பொதுமக்கள் பார்வையில் மிகப் பெரிய அளவில் நடைபெற்ற முதல் வெற்றி விழா நாடோடி மன்னன் திரைப்படம் ஆகும்.
நாடோடி மன்னன் திரைப்படம் முதல் வெளியீட்டில்*
46 அரங்குகளில் திரையிடப்பட்டது .
13 திரையரங்குகளில் 100 வது* நாள் வெற்றி விழா முதன் முறையாக கொண்டாடப்பட்ட செய்தி விளம்பரத்தில் அறிவிக்கப்பட்டது.*
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் வெற்றி காவியங்கள் 100 வது நாள் வெற்றி விழா!*
வெற்றி விழா...
கொண்டாடிய காவியங்களில்*
பேரறிஞர் அண்ணா அவர்கள் தலைமை தாங்கிய திரைப்படங்கள் பற்றிய செய்திகள்.....
1958 ஆம் ஆண்டு நாடோடி மன்னன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. பேரறிஞர் அண்ணாவின் திராவிட முன்னேற்ற கழகத்தின் கொள்கைகளை பிரதி பலித்த காவியமாக நாடோடிமன்னன் திகழ்ந்தது.**
பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மதுரை மாநகரில் மிகப்பிரமாண்டமான ஊர்வலமும் நாடோடிமன்னன் திரைப்படத்தை தயாரித்து, நடித்து, இயக்கிய புரட்சி நடிகர் எம்ஜிஆர் அவர்களுக்கு பாராட்டு விழாவும்...
மதுரை தமுக்கம் மைதானத்தில் பேரறிஞர் அண்ணா அவர்களின் தலைமையில் சிறப்புற நடைபெற்றது.
மதுரை ரயில்வே நிலையத்தில் இருந்து மதுரை தமுக்கம் மைதானம் வரை பிரம்மாண்டமான ஊர்வலம். யானை மீது புரட்சித் தலைவர் அவர்கள் அமர்ந்து வர 110 சவரன் கொண்ட தங்க வாள் மேடையிலேயே சுற்றிவர ஊர்வலமாக சுமார் 5 லட்சம் பேருக்கு மேல் கலந்து கொண்ட இந்த மாபெரும் நிகழ்ச்சி கலைத்துறையில் வரலாற்று சிறப்பு மிகு நிகழ்ச்சியாகும்.
இரண்டாம் வெளியீட்டில் திருவண்ணாமலை நகரிலும்*
100 நாட்களை கடந்து வெற்றி கண்ட காவியமாக நாடோடிமன்னன் திகழ்ந்தது.
நாடோடி மன்னன் வெற்றிவிழா* நடைபெற்ற ஊர்கள் விபரம்.... மதுரை தங்கம் திரையரங்கம் சேலம் நியூ சினிமா திரையரங்கம் கோவை ராஜா திரையரங்கம் திருச்சி* ராக்ஸி திரையரங்கம்*
நெல்லை பாப்புலர் திரையரங்கம்* ஈரோடு கிருஷ்ணா திரையரங்கம்
திண்டுக்கல் சென்ட்ரல் திபேட்டர்
தஞ்சாவூர் யாகப்பா தியேட்டர்
வேலூர் தாஜ் தியேட்டர்
சென்னை*
பாரகன் ,கிருஷ்ணா , உமா
மூன்று திரையரங்குகளிலும் திரைப்படத்தின் நூறாவது வெற்றி விழா சிறப்புடன் 1958 ஆம் ஆண்டு நடைபெற்றது.
75 ஊர்களில் 75 நாட்களையும்
மொத்தம் 125 அரங்குகளுக்கு மேல் 50 நாட்களையும் கடந்தது.
இந்திய திரையுலகில்*
நாடோடி மன்னன் வெற்றியே
இன்று வரை முதன்மை பெறுகிறது. மறுவெளியீட்டில் அதிகமான ஊர்களில் அதிக நாட்களை கடந்த திரைப்படமாகவும் இன்று வரை திகழ்கிறது.
தொடரும் பதிவுகள்.........