பல தலைமுறைகளை கடந்து சென்றாய் தலைவா, அத்தனை தலைமுறையும் உன்னை பின் தொடர்ந்தே வந்துவிட்டது!! காற்றே உனக்கேது கடைசி மூச்சு
http://i1170.photobucket.com/albums/...ps55903c4c.jpg
Printable View
பல தலைமுறைகளை கடந்து சென்றாய் தலைவா, அத்தனை தலைமுறையும் உன்னை பின் தொடர்ந்தே வந்துவிட்டது!! காற்றே உனக்கேது கடைசி மூச்சு
http://i1170.photobucket.com/albums/...ps55903c4c.jpg
KASHMIR SCENES- RAMAN THEDIYA SETHAI
http://youtu.be/9EK-SJw2i00
http://youtu.be/8kKdnx8dOUY
http://youtu.be/HM8yBZ-Ya3M
PART OF THE SONG - KASHMIR
http://youtu.be/j4W6EyjnxuM
Dear Yukesh Sir,
A Special Song dedicated for you on this auspicious day.
Have a Wonderful Birthday..!
http://www.youtube.com/watch?v=i-jlk4dEFLY
RKS
http://i62.tinypic.com/2qs76gn.jpg
MSG FROM MR.R.SARAVANAN, MADURAI
பென்கழூர் ரீன்ஏஜ் பையன் எஸ்வீ என அழைக்கப்படும்
வினோத் சார் வணக்கம்
கலைவேந்தனுக்கு நான் எழுதிய பதிவிற்கு
நீங்கள் எழுதிய பதிவை பார்த்தால்
நீங்கள் நுனிப்புல் மேய்பவராக இருக்கின்றீர்கள் அல்லது
ஆத்திரம் உங்கள் கண்களை மறைத்துவிட்டது
ஆத்திரம் கண்ணை மறைத்திடும்போது
அறிவுக்கு வேலை கொடுங்கள் சார்
சரி விடயத்திற்கு வருவோம்
நான் எழுதிய விடயத்திற்குமட்டுமல்ல ரவிகிரண்சூரியா
எழுதும் விடயங்களுக்கும் கூட நீங்கள் உட்பட உங்கள்
பக்கத்தில் இருந்து அதற்கான பதிலை தராமல்
மழுப்பலான திசை திருப்பும் பதில்களையே எழுதுகிறீர்கள்
நாங்கள் எழுதுவதை முழுமையாக வாசித்து புரிந்துகொண்டு
பதில் எழுதாமல் மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும்
முடிச்சுப்போடுவதுதான் உங்கள் வேலையாக இருக்கிறது
நீங்கள் எழுதும் தவறான செய்திகளுக்கு விளக்கம் தந்தால்
அதற்கு பதில் எழுதாமல் குழப்பம் விளைவிக்கின்றோம்
அது இது என்று கூக்குரல் இடுகின்றீர்களே தவிர
அதற்குரிய சரியான பதில் தருவதாக இல்லை
நான் பழையனவற்றை தேடி எடுத்துப்பதிவதால்
உங்கள் முகத்திரை கிழிகின்றதே அதனால் உங்களுக்கு கவலையாக இருக்கின்றதா?
எனக்கு மனக்குறை நிறைய உண்டு
சில
சாதனைகள் எல்லோரிடமும் உண்டு
என்பதை ஒப்புகொள்ள பழகுங்கள்
ஆமாம் நடிகர்திலகத்தின் சாதனைகளை
ஏற்றுகொண்டு வாழப்பழகுங்கள்
மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்
என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள்
உங்கள் வீட்டு மல்லிகை மட்டும்தான்
மணக்கிறது என்று பிடிவாதம் பிடிக்காதீர்கள்
பொய்யான ஆவணங்களை தயாரித்து பதிவிட்டு
மனச்சாந்தி அடையுங்கள்
சிவாஜியின் புகழ் - சாதனைகள் -ஏற்று கொள்ள இயலாதவர்களின் அறியாமையை கண்டு பரிதாபம்
படுகிறோம் .
quote பண்ணணி எதற்கு நல்ல கொள்கை என பதிவிட்டுள்ளேன்
என்பதை கூர்ந்து கவனியுங்கள்
AAYIRATHIL ORUVAN @ SATHYAM CINEMAS AND ALBERT CINEMAS. I UNDERSTAND PODHIGAI TV ALSO TELECAST TODAY @ 3PM.
One more feather to Thalaivar's Cap.
http://i58.tinypic.com/zu4a2s.jpg
http://www.youtube.com/watch?v=QyJXd_XZ4OA
இன்று புரட்சி தலைவரின் "ஆயிரத்தில் ஒருவன் " 150 வது நாள் சென்னை
ஆல்பட் திரை அரங்கு வளாகத்தில் மலர் பூஜை, சிறப்பு வழிபாடுகள்
ஆகியவற்றுடன் , பக்தர்களின் பெருத்த மகிழ்ச்சி ஆரவாரத்துடன்
கொண்டாடப்பட்டது.
புதிய படங்கள் எத்தனை வெளியானாலும் , சில வாரங்களுக்கு பின் ஞாயிற்று கிழமை எந்த வகுப்பும் நிறைவதில்லை-ஆல்பட்/பேபி ஆல்பட் அரங்குகளில் .
ஆனால் , ஆயிரத்தில் ஒருவன் எல்லா ஞாயிற்று கிழமைகளிலும்
ரூ.50/- டிக்கட் (மாலை காட்சி ) நிறைந்து விடுகிறது. 150 வது நாள் உள்பட.
இது ஒரு அரிய சாதனை என்று அரங்க மேலாளர் தெரிவித்தார்.
150 வது நாள் விழா புகைப்படங்கள் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.
ஆர். லோகநாதன்.
http://i61.tinypic.com/qox4j8.jpg
கலைவேந்தன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு அமைத்த பேனர்.
http://i62.tinypic.com/4j6u4h.jpg
http://i59.tinypic.com/2h3q52x.jpg
ஆயிரத்தில் ஒருவன் - இன்று 150 வது நாள் - மாலை காட்சி - ரூ.50-/ டிக்கட் நிறைந்தது.
புதிய படம் வேலை இல்லா பட்டதாரி (தனுஷ் படம் ) வெளியாகி சில வாரங்கள் ஆன நிலையில் எந்த வகுப்பும் நிறையவில்லை.
ஆயிரத்தில் ஒருவன் -150வது நாள் - சென்னை ஆல்பர்ட் அரங்கின் நிழற்படங்கள் அருமை .
பொதிகையில் ஆயிரத்தில் ஒருவன் நேற்று ஒளி பரப்பியது -வியப்பாக இருந்தது .
கோவை நகரில் நாடோடிமன்னன் -நெற்றி 10 வது நாள் . ஒரே ஆண்டில் குறுகிய இடை வெளியில் மீண்டும் 10 நாட்கள்
நாடோடி மன்னன் - உண்மையிலே சாதனைகளின் சிகரமானவன் .
மக்கள் திலகத்தின் படங்களில் பெரும்பாலும் வெற்றி என்ற வார்த்தை கண்டிப்பாக இடம் பெற்று இருக்கும் .
சில படங்கள் துவக்க நாளில் வெற்றி வெற்றி என்ற வசனத்துடன் காட்சிகள் படமாக்கப்படும் .
சில படங்களில் மக்கள் திலகம் அறிமுக காட்சியில் வெற்றி என்ற வசனத்துடன் அல்லது வெற்றி என்ற பாடலுடன்
காட்சிகள் இருந்தது .
ஆயிரத்தில் ஒருவன்
உலகம் சுற்றும் வாலிபன்
தேடி வந்த மாப்பிள்ளை
தேவர் படங்களில் முதல் நாள் படபிடிப்பில் வெற்றி என்ற காட்சிகள் படமாக்கப்படும் .
இயற்கையாகவே மக்கள் திலகத்தின் திரை உலகிலும் சரி அரசியல் உலகிலும் சரி வெற்றி என்ற தேவதை அவர் பக்கம்
கடைசி வரை இருந்தது . அவருடைய மறைவிற்கு பிறகும் அந்த வெற்றி தேவதை இன்னமும் தொடர்வது
உலகமெங்கும் உள்ள எம்ஜிஆர் ரசிகர்களுக்கு கிடைத்த பெருமை .
http://youtu.be/xjdYNUmPTsM?list=UUZ...QIJ_q7Ap2gq-vw
மேகலா பிக்சர்ஸ் தயாரித்த படமாகிய "எங்கள் தங்கம்'' எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடிக்க, கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் உருவாயிற்று.
இதற்கும் நான்தான் பாடல்கள் எழுதினேன். எம்.எஸ்.வி.தான் இசையமைத்தார்.
இதில் "நான் செத்துப் பிழைச்சவன்டா -எமனைப் பார்த்து சிரிச்சவன்டா'' என்று ஒரு பாடலை எழுதினேன்.
எம்.ஜி.ஆர். குண்டடி பட்டு இறைவனருளால் மீண்டு வந்திருந்த நேரம் அது. ஆகவே, அந்தப் பல்லவி அந்நேரத்திற்கு மிகமிகப் பொருத்தமாக இருந்தது.
முழுப் பாடலையும் எழுதி முடித்த பிறகு, பாடலை எம்.ஜி.ஆரிடம் காட்டுவதற்காக, நானும் நண்பர் முரசொலி மாறனும் ஜெமினி ஸ்டூடியோ சென்றோம்.
மாறன் வெளியே தங்கிவிட நான் மட்டும் எம்.ஜி.ஆரின் மேக்கப் ரூமிற்குள் சென்றேன்.
அப்போது எம்.ஜி.ஆர். ஜெமினியில் `நீரும் நெருப்பும்' படப்பிடிப்பிற்கான ஒப்பனையில் இருந்தார்.
முழுப் பாடலையும் நான் எம்.ஜி.ஆரிடம் பாடிக் காண்பித்தேன். அந்தப் பாடலில், உயிருக்கு அஞ்சாது நாட்டுக்கு உழைத்தோர் பற்றியெல்லாம் சரணங்களில் எழுதியிருந்தேன்.
எம்.ஜி.ஆர். பாட்டைக்கேட்டுவிட்டு வெகுவாக சந்தோஷப்பட்டார். நான் விடை பெற்றுக் கிளம்பும்போது என்னை மறுபடியும் தன் ரூமுக்குள் அழைத்தார்.
"வாலி! நாட்டுக்காக, உயிரைத் துச்சமா நினைச்சவங்களப்பத்தி இந்தப் பாட்டுல எழுதியிருக்கீங்க... அதெல்லாம் நல்லாயிருக்கு... இருந்தாலும், தமிழ் மொழிக்காகத் தண்டவாளத்துல தலை வெச்சுப் படுத்தவரு, நம்ம கலைஞர்... அவரைப்பற்றி ஒரு சரணம் எழுதி இந்தப் பாட்டுல சேத்துடுங்க...'' என்று எம்.ஜி.ஆர். என்னிடம் கேட்டுக்கொண்டார். அவர் சொன்னது போலவே பாட்டின் இரண்டாவது சரணத்தை நான் அமைத்தேன்.
(அந்த இரண்டாவது சரணம்: `ஓடும் ரெயிலை இடைமறித்து -அதன் பாதையில் தனது தலை வைத்து, உயிரையும் துரும்பாய்த்தான் மதித்து -தமிழ்ப்பெயரை காத்த கூட்டமிது'')
இந்தப் படத்தில் என் பாட்டில் கலைஞரை உயர்த்தி நான் சொல்ல வேண்டுமென்று எம்.ஜி.ஆர். விரும்பியதுபோல், இதே படத்தில் இன்னொரு பாட்டில் எம்.ஜி.ஆரை உயர்த்தி நான் சொல்ல வேண்டுமென்று கலைஞர் விரும்பினார்.
படத்தின் கதாநாயகனாகிய எம்.ஜி.ஆர், "நான் அளவோடு ரசிப்பவன்...'' - என்று பாடுவதாக ஒரு பாடலை நான் "எங்கள் தங்கம்'' படத்தில் எழுதினேன்.
"நான் அளவோடு ரசிப்பவன்'' என்று முதல் வரியை எழுதிவிட்டு, இரண்டாவது வரியை சிந்தித்துக் கொண்டிருக்கும்போது, என் பக்கத்தில் அமர்ந்திருந்த கலைஞர், "வாலி! இரண்டாவது வரியை - `எதையும் அளவின்றி கொடுப்பவன்' என்று போட்டா நல்லாயிருக்குமே!'' என்று என்னிடம் சொன்னார்.
நான் அவ்வாறே எழுதினேன்.
இப்படி கலைஞரும், எம்.ஜி.ஆரும் பரஸ்பர அன்பு பாராட்டிய காலம் அது.
இந்த இடத்தில், இன்னொரு உண்மையையும் நான் சொல்ல வேண்டும்.
அண்ணன் எம்.ஜி.ஆர். எந்தக் காலத்திலும், தன்னுடைய இமேஜை உயர்த்துமாறு பாடல் வரிகளை நான் எழுதவேண்டும் என்று என்னிடம் சொன்னதேயில்லை.
"மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்'', "கொடுத்ததெல்லாம் கொடுத்தான்'', "நான் செத்துப் பிழைச்சவண்டா'', "நான் ஆணையிட்டால்'' போன்ற பாடல்களெல்லாம் நானாகத் தன்னிச்சையாகப் புனைந்ததே தவிர, எம்.ஜி.ஆர். எழுதச் சொல்லி எழுதியவை அல்ல; இது கடவுள் சத்தியம்.
இன்னும் உண்மையைக் கொஞ்சம் அகலமாகச் சொல்லப்போனால் -தன்னை `வள்ளல்', `மன்னன்' என்றெல்லாம் எழுதப்படுவதை அவர் கூச்சத்தோடு என்னிடம் மறுத்திருக்கிறார்.
அவர்பால் எனக்கு இருந்த அன்பின் காரணமாகவும், விருந்தோம்பல், எளிமை முதலிய அவரது உயர்ந்த பண்புகளை உடனிருந்து பார்த்தாலும் -நானே அவ்வாறு அவரைப் போற்றிப் புகழ்ந்து பாடல்கள் எழுதினேன்.''
இவ்வாறு வாலி கூறியுள்ளார்.
எல்லா நடிகர்களும் ஏதோ ஒரு கால கட்டத்தில் ஒரு சாதனையை தமிழ் திரையுலகில் படைத்திருப்பார்கள். நடிகர் ராமராஜன் கூட " கரகாட்டக்காரன்" படம் மூலம் சாதனை படைத்தார். இயக்குனர் கே. எஸ். கோபாலகிருஷ்ணன் "பணமா பாசமா" வெள்ளி விழா படத்தின் மூலம் சாதனை படைத்தார். இயக்குனர் ஸ்ரீதர் அவர்களும் "கல்யாண பரிசு" படத்தினை வெள்ளி விழா படமாக அளித்து சாதனை படைத்தார். எம். கே. தியாகராஜ பாகவதர் கூட 3 தீபாவளி கண்ட " ஹரிதாஸ் " படத்தின் மூலம் சாதனை படைத்தார். வெள்ளிவிழா பட நாயகன் என்று சின்ன எம். ஜி. ஆர். என்றழைக்கப்பட்ட நடிகர் ரவிச்சந்திரன் அவர்கள் கூட சாதனைகள் படைத்தவர் தான். மக்கள் கலைஞர் ஜெய்ஷங்கர் அவர்களும் பல வெற்றிப்படங்களை அளித்து சாதனை படைத்தவரே. இப்படி இன்றைய தலைமுறை நடிகர்கள் வரை பலரும் சாதனை படைத்தவர்களே!
இந்த திரைக்கலைஞர்கள் எவருமே, " தமிழக முதல்வர்" ஆனதில்லை. அந்த கால கட்டத்தில் வெளியான எங்கள் கலைவேந்தன் எம். ஜி. ஆர். அவர்களின் ராஜகுமாரி முதல் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் வரை மறு வெளியீடுகளில் மீண்டும் மீண்டும் திரையரங்குகளை ஆக்கிரமித்து வசூல் சாதனை புரிந்து வருகின்றன. இதுவும் மேற்கூறிய கலைஞர்களின் படங்கள் புரியாத சாதனை தான். இதை தாங்க முடியாத எரிச்சல் தங்களின் பதிவு மூலம் புலப்படுகிறது.
பொய்யான ஆவணங்களை தயாரித்து பதிவிட்டு அற்ப சந்தோஷம் அடையும் கூட்டம் நாங்கள் அல்ல. மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட்ட பல பதிவுகள் உங்கள் திரியின் பிற பாகங்களில் இருப்பதை பார்வையாளர்கள் அறிவார்கள்.
115 படங்களில் கதாநாயகனாக நடித்து அதிக எண்ணிக்கையில் - 100 நாட்கள் வெற்றி படங்களையும், வெள்ளி விழாப் படங்களையும் அளித்த சாதனை எங்கள் பொன்மனசெம்மல் ஒருவருக்கே உண்டு.
எங்களுக்கு ஒரு நடிகர் நாடாண்ட சாதனையே போதும். இந்த புவியுள்ளவரை பேசிக்கொண்டே இருப்போம். சட்டமன்ற தேர்தலில் தோல்வியே பெறாத எங்கள் தலைவர் யாருடனும் ஒப்பிட முடியாதவர்.
எங்களிடம் மழுப்பலான பதில் எப்போதும் இருந்ததில்லை. நெத்தியடி பதில் ஆதாரபூர்வமான தகவல்களுடன் தான் தருவோம். அதற்காக அர்த்தமில்லாத பதிவுகளுக்கெல்லாம் பதில் சொல்லவும் மாட்டோம். எல்லாவற்றுக்கும் முந்திரிக் கொட்டை மாதிரி முன்னேயும் வரமாட்டோம்.
எனது இந்த பதிவுக்கு பதிலிட்டாலும் அதை அலட்சியம் செய்வோம்.
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும் !
கலைவேந்தன்
பின் குறிப்பு : முதலில் தமிழில் பிழையில்லாமல் பதிவிட கற்றுக் கொள்ளுங்கள்.
சைலேஷ் சார்
உலகம் சுற்றும் வாலிபன் - உருவாக்கிய தாக்கம் ஒரு வரலாற்று சாதனை .
தினமும் லட்சக் க்கணக்கில் மக்கள் கூடும் expo 70 அரங்கில் பலர் முன்னிலையில் ''உலகம் அழகு
கலைகளின் சுரங்கம் '' பாடலை மிகபெரிய பிரமாண்டமாக படமாக்கப்பட்டது மாபெரும் சாதனை .
சிங்கபூர் - கோலாலம்பூர் , பாங்காக் - ஹாங்காங் -டோக்யோ -தாய்லாந்து போன்ற இடங்களில் படமாக்கப்பட்ட முதல் இந்திய படம் .
உலகம் சுற்றும் வாலிபன் - ஹாலிவுட் படங்களை மிஞ்சும் அளவிற்கு தரமான படைப்பாக கொண்டு வந்த பெருமை - மக்கள் திலகத்தின் திறமைக்கு சான்று .
ஒரு வரி கதையை உலக அரங்கில் படமாக்கி பாமர மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் உலகத்தை
காட்டிய பெருமை - மக்கள் திலத்தையே சேரும் . 1973ல் திரை அரங்கில் குறைந்த கட்டணம் -.50 பைசா . அதிக கட்டணம் ரூ .3.50.
அந்நிய மண்ணிலும் உலகம் சுற்றும் வாலிபன் சாதனைகள் அபாரம் .
சொல்லி கொண்டே போகலாம் .... முடிவே இல்லாத உலகம் சுற்றும் வாலிபன் சரித்திர சாதனைகள் .