http://i1065.photobucket.com/albums/...pshkffoxiv.jpg
Printable View
புரொஜெக்டர் ரூமில்நின்றுஎடுத்த போட்டோ
http://i1065.photobucket.com/albums/...pshqbj1qoh.jpg
இனிய நண்பர் திரு ராகவேந்தர் அவர்களே..
நீங்கள் கூறுவது மிக சரியே !
உதாரணமாக நான் இங்கு பதிவு செய்ததுகூட இணையதளத்தில் இருந்து எனக்கு மாறி...மாறி....ஷேர் செய்து வந்ததுதான்...எனக்கு கடைசியாக ஷேர் செய்த நபர் இதுபோல படங்களை பதிவிடாதவர் என்ற காரணத்தால் அதான் முக நூல் என்று மட்டும் குறிப்பிட்டு பதிவு செய்தேன்...காரணம் ஆவணம் யாருடையதோ அவர்களுக்குதான் அந்த credit பூரணமாக போகவேண்டும்.
உதாரணமாக தனியார் தொலைகாட்சியில் வந்த உரையாடல் திரு சேகர் பரசுராம் என்று நினைக்கிறன்..முகநூளில் பதிவு செய்து இருந்தார்...அவர் பதிவு செய்ததை சில வாக்கியங்கள் நீக்கிவிட்டு அவரது பெயருடன் பதிவு செய்துள்ளேன்..நீங்களும் பார்த்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
என்னை பொறுத்தவரையில் உண்மை விஷயங்கள் அனைவருக்கும் தெரியவேண்டும்...மற்றவர்களை போல நான் உண்மை விஷயங்களை எழுதவதர்க்கோ பதிவு செய்வதற்கோ தயங்கி பழமொழி மட்டும் உதிர்த்துகொண்டிருக்கமாட்டேன்.
பிறகு இன்னொருவர் கருத்தை பதிவு செய்தவுடன்....மிகவும் சரியாக சொன்னீர்கள்....நானும் இதையே தான் சொல்லவந்தேன்...நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்று (அதுவரை சும்மா இருந்துவிட்டு....) நாலுபக்க விளக்கமும் கொடுக்கமாட்டேன் ! ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பாணி இருக்கிறதல்லவா.
மேலும்....ஆவணத்தில் வாட்டர்மார்க் செய்வது நல்ல விஷயம் என்றாலும் அதில் கூட கேள்விகேட்கவேண்டும் என்று நினைப்பவர்கள் கேள்விகேட்கலாமே ? உங்களிடம் உள்ள ஆவணம் வாட்டர்மார்க் போடுவதால் உங்களுடயதாகிவிட முடியாதல்லவா என்று யாராவது கேட்டால் ? காரணம் உண்மையான அதாரம் போட்டாலே நம்பகத்தன்மை இல்லை என்று கூறுகிற காலம் இது !
ஆகவே....இளைய திலகம் பிரபு கூறுவது போல...நம்பிக்கை.....அதுதானே எல்லாம் !
Rks
ஆர்கேஎஸ்,Quote:
என்னை பொறுத்தவரையில் உண்மை விஷயங்கள் அனைவருக்கும் தெரியவேண்டும்...மற்றவர்களை போல நான் உண்மை விஷயங்களை எழுதவதர்க்கோ பதிவு செய்வதற்கோ தயங்கி பழமொழி மட்டும் உதிர்த்துகொண்டிருக்கமாட்டேன்.
பிறகு இன்னொருவர் கருத்தை பதிவு செய்தவுடன்....மிகவும் சரியாக சொன்னீர்கள்....நானும் இதையே தான் சொல்லவந்தேன்...நீங்கள் சொல்லி விட்டீர்கள் என்று (அதுவரை சும்மா இருந்துவிட்டு....) நாலுபக்க விளக்கமும் கொடுக்கமாட்டேன் ! ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு பாணி இருக்கிறதல்லவா.
பழமொழி, தத்துவம் இவையெல்லாம் மேம்போக்கான வாக்கியங்கள் அல்ல, அனுபவத்தின் அடிப்படையில் அமைந்தவை. அதில் உண்மை புதைந்திருக்கிறது. நான் பலமுறை கூறியிருக்கிறேன். அச்சு ஊடகத்தில் எழுதுவதற்கும் மின்னணு ஊடகத்தில் எழுதுவதற்கும் உள்ள வேறுபாடு மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு. என்ன எழுதுவதாக இருந்தாலும் ஆவணங்களின் அடிப்படையில் தான் நாம் இங்கு பேச வேண்டும், அதுவும் தயாரிப்பாளர் அல்லது விநியோகஸ்தர் வசூல் விவரங்களோடு விளம்பரம் கொடுத்திருந்து அது நம்மிடம் பிரதி இருந்தால் நம்மால் ஆணித்தரமாகக் கூற முடியும். அது இருந்தால் வாதம் எதற்கு என்று ஒரு குதர்க்கமான கேள்வியும் உங்களிடமிருந்து வரலாம். ஆனால் அது தேவையற்ற கேள்வி.
விவரம் தெரிந்த நாளிலிருந்து சிவாஜி ரசிகனானவன். அப்போதிலிருந்து பத்திரிகை விளம்பரங்களை சேகரித்தவன். பல நாட்களில் உணவு உண்ணக் கிடைத்த காசைக் கூட பத்திரிகை விளம்பரத்திற்காக வாங்கி விட்டு சாப்பிடாமல் இருந்தவன். காலப்போக்கில் என்னை மீறிய காரணங்களால் அவற்றில் பெரும்பகுதியை என்னால் பராமரிக்க முடியவில்லை.
லாஜிக் என்பது ஏற்றுக் கொள்பவர்களிடம் மட்டும் தான் பேச முடியும். அதை ஏற்க மாட்டேன் என்பவர்களிடம் ஆதாரம் மட்டுமே தான் பதிலாகத் தந்து பேச முடியும்.
ஏனோ தானோ என்று உணர்ச்சி வசத்தில் ஆவேசப்பட்டு வசூல் விவரம் பற்றி விவாதிப்பதில் அர்த்தமில்லை. உங்களுக்கெல்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே நடிகர் திலகத்தின் படங்கள் மக்களிடம் சென்று சேருவதற்கு அயராது உழைத்தவர்கள் நாங்கள். எனவே தங்களுடைய சான்றிதழுக்காகவோ அல்லது இங்கே என்னைக் குறை கூறும் மற்ற நண்பர்களுக்காகவோ நான் சிவாஜியை ரசிக்கவில்லை. உங்களையெல்லாம் இங்கு வந்த பின் தான் எனக்குத் தெரியும். இணையம் என்ற ஒன்று கண்டு பிடிப்பதற்கு முன்பாகவே அவர் புகழைப் பாட அவருக்காக உழைத்த என்னைத் தாங்கள் குறை கூறுவதால் எனக்கு எந்த இழிவும் ஏற்பட்டு விடாது. அதனால் நான் குறைந்து விடவும் மாட்டேன்.
வாசு சார் போட்ட பதிவில் இருந்த விஷயம் எனக்கு உடன்பாடாக இருந்ததால் நான் அவர் கூறுவதை ஆமோதித்தேன். இதில் எந்தத் தவறும் இல்லை. அது மட்டுமின்றி தர்த்தி படத்தைப் பற்றி நஷ்டம் என்று விவாதம் வந்த பின்னரே நான் அது பற்றிய என் விளக்கத்தை அளித்தேன். இந்த தர்த்தி ஹிந்தி வெற்றிப் படம் என்பதை நானும் வாசுவும் முன்னரே மய்யத்தில் கூறியுள்ளோம். இது ஒன்றும் புதிய விஷயமில்லை.
தயவு செய்து என்னைக் குறை கூறுவதில் தங்களுடைய பொன்னான நேரத்தை விரயம் செய்ய வேண்டாம்.
அதே போல தங்களிடமிருந்து பாராட்டை எதிர்பார்த்தும் நான் பதிவுகள் இடவில்லை.
ஆவணம் என்கின்ற போதே அதுவும் இணையத்தில் அது மீள் பதிவாகிறது என்கிற போது. அந்த ஆணவம் யாரால் முதலில் தரவேற்றப்பட்டது என்பதற்கான அடையாளமாகத் தான் வாட்டர் மார்க் போடப்படுகிறது. அது மீள் பதிவு செய்யப்படும் போது அது பற்றிய குறிப்பு இடம் பெறுவதால் படிப்பவர்கள் அதனைப் பற்றித் தெரிந்து கொள்வார்கள். எனவே வாட்டர் மார்க் போட்டவர் தான் அந்த விளம்பரத்தைக் கொடுத்தார் என்பதாக யாரும் எதிர்பார்க்க மாட்டார்கள். காமிராவில் எடுக்கப்பட்ட புகைப்படத்தில் இருக்கும் வாட்டர்மார்க் மட்டுமே உரிமையாளரை அடையாளம் காட்டும். இது இன்றைய இணைய உலகில் அனைவருக்கும் தெரிந்த ஒன்று.Quote:
ஆவணத்தில் வாட்டர்மார்க் செய்வது நல்ல விஷயம் என்றாலும் அதில் கூட கேள்விகேட்கவேண்டும் என்று நினைப்பவர்கள் கேள்விகேட்கலாமே ? உங்களிடம் உள்ள ஆவணம் வாட்டர்மார்க் போடுவதால் உங்களுடயதாகிவிட முடியாதல்லவா என்று யாராவது கேட்டால் ?
ஆவணங்களை மட்டுமல்ல ஆய்வு கட்டுரைகளை கூட அப்படியே அச்சு பிசகாமல் காப்பி பேஸ்ட் செய்துவிட்டு, மூளையைக்கசக்கி எழுதியவன் பெயரை குறிப்பிடாமல் அம்போவென்று விட்டு விடுவார்கள். இங்குள்ள பலருடைய கட்டுரைகளை பல்வேறு வலைத்தளங்களில் அவர்களுடைய சொந்த உழைப்பு போல பதித்திருப்பதை பார்த்திருக்கிறேன். என் கண்டனத்தையும் பதிவிட்டு இருக்கிறேன். ("இந்த வேலை செய்வதைவிட....." என்கிற ரேஞ்சுக்கு இறங்கி)
செந்தில்வேல் சார்,
சாந்தி தியேட்டர் உட்புறம் எடுக்கப்பட்ட நிழற்பட பதிவுகள் அனைத்தும் மிக அருமை. அப்படியே மலரும் நினைவுகளில் மனம் சுழல்கிறது.
இதோடு நில்லாமல் அங்குள்ள 'ஷீல்டு காலரி'யையும் படமெடுத்து பதியுங்கள், ப்ளீஸ்.
ராகவேந்தர் சார்
உங்கள் மீது எனக்கு சிறு கோபம் உள்ளது உண்மைதான் மறைப்பதற்கில்லை. ஒரு நல்ல விஷயத்திற்காக அதுவும் உண்மை விஷயம் பொய்யாக திரிக்கபடுகையில் உங்களை போன்ற நடிகர் திலகம் அவர்களுடன் மிக மிக நெருங்கி பழகியவர் தான் ஆதரவு தரவேண்டும்.
நீங்களே யோசித்து பாருங்கள், எனக்கு சப்போர்ட் செய்து ஒரு பதிவேனும் நீங்கள் செய்திருப்பீர்களா. உங்களை போன்ற ஜாம்பவான்களிடம் இருந்து அதை நான் எதிர்பார்ப்பது தவறா சொல்லுங்கள் சார் ?
Rks கூறும் தகவல்கள் சரியே...அல்லது...rks கூறும் தகவல் தவறு..இப்படி ஏதாவது கூட நீங்கள் பதில் எழுதியிருக்கலாமே. பம்மளார் அவர்கள் சுத்தமாக எதுவுமே எழுத வருவதில்லை அவர் தினசரி மையம் படித்தாலும் கூட...அவருக்கு வேலை பளு இருந்தாலும் இது போன்ற சந்தர்பங்களில் மட்டுமாவது வரமாட்டாரா..வந்து உண்மையை உரைக்க மாட்டாரா என்ற ஏக்கம் எனக்கு இருக்காதா ? அல்லது நம் மற்ற ரசிகர்களுக்கு இருக்காதா ? நீங்களாவது தகவலை அவரிடம் கேட்டு பதிவு செய்யலாமே என்று உங்களிடம் ஒரு சிறு கோபம் இருந்தது உண்மைதான்.
உங்களை தாழ்த்த வேண்டிய எண்ணம் என் தாயின் மீது ஆணையாக இல்லை. எல்லோருக்கும் அவர் அவரின் தாய் எவ்வளவு உயர்வானவர் என்பது உங்களுக்கு தெரியும். அந்த தாய் மீது ஆணையிட்டு கூறுகிறேன். உங்கள் மீது கோபம் சிறிது இருந்ததே தவிர உங்களை தாழ்த்தும் எண்ணம் எனக்கு சிறிதும் கிடையாது சார் !
இதை நான் தனியாக மினஞ்சல் மூலமாக உங்களுக்கு அனுப்பி இருக்க முடியும். அப்படி செய்யாமல் இங்கு பகிரங்கமாக பதிவு செய்வதன் காரணம் என் மீதி தவறு உள்ளது என்பதால் மேலும் நான் பதிவு செய்தது இங்கு என்பதால். எனக்கு EGO கிடையாது ஆகவே தான் இந்த பகிரங்க மன்னிப்பு கோருகிறேன் !
மக்கள் திலகம் திரியிலும் அப்படிதான் இதுவரை இருந்துள்ளேன். என்மீது தவறு இருப்பின் நிச்சயம் நான் தவறை ஒத்துக்கொண்டு மன்னிப்பு கோர தயங்கியதே இல்லை. அந்த பக்தர்களும் அதை அறிவார்கள் !
உங்கள் மனம் வேதனை அடைந்துள்ளதை புரிந்து கொள்கிறேன். தங்கள் காலில் நான் சாஷ்டாங்கமாக
நமஸ்காரம் செய்வதாக நினைத்துகொள்ளுங்கள் , நினைத்து , மூத்த சஹோதரர் நிலையில் இருந்து என்னை மன்னித்து விடுங்கள்..ப்ளீஸ் !
தங்கள் மனம் வருத்தப்ப்படுமாறு இனி நான் எழுதமாட்டேன். I promise on my mother !
rks
Senthilvel sir
usually we nt fans does not visit shanthi theatre on sundays only when some NT movies screening takes place we vit on sundays. please see my pm
Sivantha Mann profit records: Great show, particular bhaskar tiruchy, who brought in Sivantha mann profit proof.
I totally agree with Goldstar. Kalaiventhan from other thread should tender unconditional apology to NT and his fans and feel sorry for defaming and tweaking the history of Sivantha mann success. That is a decent thing to do. Will it happen? We hope that in the future, the other gang will behave as a good citizens and avoid defaming NT.
class and mass சேர்த்து திரைப்படங்கள் தர முடியம் என பல முறை சாதித்து கட்டியவர் எங்கள் நடிகர் திலகம். தமிழ் திரை உலகின் ஒரே நடிகன் and வசூல் மன்னர் NT புகழ் வாழ்க!!
Regards
Dear Raghavendra,
what bothers me is the first part of your above post. sounds like a well planned motive to defame Sivantha Mann in its original release itself. சிவந்த மண் அழகான படம். மிக நன்றாக ஓடியுள்ள இந்த படத்தை அவர்கள் திசை திருப்பி உள்ளனர் - இப்போதும் செய்து கொண்டே தான் உள்ளனர். அவர்களின் பொய் பிரசாரத்தை முறியடிக்க வேண்டும். இந்த முறை நாம் அதை செய்துள்ளோம்; மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. அவர்களுக்கு இது ஒரு நல்ல பாடமாக இருக்கட்டும். Hope they will stop defaming NT commercial success in the future.
One thing that I may differ with most of NT fans here and agree with Tiruchi Baskar is that we should focus more on NT unmatched commercial success. The reason is that everyone knows about NT acting versatility; so, no point in focusing on this aspect instead we should direct our energy into highlighting NT's commercial success.
Regards.
Courtesy Mr. Sudhangan' Facebook
செலுலாய்ட் சோழன் – 89
பேசும் தெய்வம் வித்யாசமான கதைக் களத்தைக் கொண்டது!
இந்தப் படத்திற்கு கே.வி.மகாதேவன் இசைமையைத்திருதார்!
இந்தப் படத்தின் எல்லாப் பாடல்களையும் வாலி எழுதியிருந்தார்!
இது ஒரு புறமிருக்க!
1965 ம் வருடம் வந்த `திருவிளையாடல்’ திரைப்படத்தை பற்றி எழுதாமல் சிவாஜியின் சரித்திரமே நிறைவு பெறாது!
புராணப் படங்களில் ` திருவிளையாடல் தமிழகத்தையே புரட்டிப் போட்டது!
அதுவும் அந்த படம் வந்த கால கட்டம் மிகவும் முக்கியமானது!
அப்போது தமிழகத்தில் பகுத்தறிவும் பிரசாரம் தீவிரமடைந்திருந்த சமயம்!
கடவுள் மறுப்பு என்பது தீவரமாகிக்கொண்டிருதது!
திமுக அசுர வேகத்தில் வளர்ந்து கொண்டிருந்தது!
அந்த சமயத்தில் வந்த புராண படம் தான் ` திருவிளையாடல்’
படத்தின் பிரும்மாண்டம், படத்தின் இசை, திரைக்கதை அமைப்பு, மிக அருமையான வசனங்கள்!
படத்தின் இயக்குனர் ஏ.பி நாகராஜன் தமிழக மக்கள் மனதில் மிகபபெரிய சிம்மாசனம் போட்டு அமர்ந்து கொண்டார்!
அவருக்கு அந்த சிம்மாசனத்தை போட்டுத்தந்தவர் நடிகர் திலகம் தான்!
அந்தப் படம் வந்த பிறகு சிவபெருமான் இப்படித்தான் இருப்பார் என்று மக்கள் நம்ப ஆரம்பிக்கிற அளவிற்கு சிவாஜி அப்படியே சிவனாக வாழ்ந்திருந்தார்!
கண்ணதாசன் தன் தமிழை வைத்து பாடல்களில் விளையாடியிருந்தார்!
என் தாயாருக்கு அந்த படத்தை பார்க்க ஏக துடிப்பு!
அதனால் முதல் நாளே அழைத்துப் போயிருந்தார்!
தியேட்டரில் திருவிழாக் கூட்டம்!
இந்தப் புராணப்படங்களையெல்லாம் இயக்குனர் ஏ.பி.நாகராஜன் தன் மகள் விஜயலட்சுமி பெயரில் துவக்கிய விஜயலட்சுமி பிக்சர்ஸ் பேனிரில் தான் வெளியிட்டார்!
படம் துவங்கும்போது திருமகளான லட்சுமி ஒரு தாமரை மலரில் அமர்ந்திருப்பாள்!
அதன் கீழே நிறுவனத்தின் பெயர் வரும்!
அந்த காட்சி அப்படியே இருக்கும்போது ஒரு பின்னனிக் குரல் ஒலிக்கும்1
அது அந்த படத்தைப் பற்றிய ஒரு அறிமுகமாகவே இருக்கும்!
அந்த குரலுக்குச் சொந்தக்காரர்!
அப்படித்தான் `திருவிளையாடல்’ படமும் துவங்கும்!
பேரன்புமிக்க ரசிக பெருமக்களுக்கு எங்கள் நன்றி கலந்த வணக்கம்!
ஆண்டவன் அன்பர்களுக்கு அருள் புரிந்த திருவிளையாடல் என்கிற பழம்பெரும் இதிகாசத்திலிருந்து சில படலங்களை ஈசன் விளையாட்டெல்லாம் திருவிளையாட்டு என்ற கருத்தினை மற்றும் சில இதிகாசங்களிலிருந்து சிலவற்றை தொகுத்து திருவிளையாடல் என்கிற தலைப்பில் உங்கள் முன் பணிவன்புடன் சமர்ப்பிக்கிறோம்!
என்று படம் ஆரம்பிக்கும்!
படத்தின் ஆரம்பம் கைலாயத்திலிருந்து துவங்கும்!
பூதகனங்களும், முனிவர்களூம், ஒம் நமசிவாய என்று குழுவாக ஈசனை வணங்குதல் போல் படம் துவங்குபோது தியேட்டரை சுற்றி கண்ணை சுழலவிடவேண்டும்!
பெண்கள் கன்னத்தில் போட்டுக் கொள்ள ஆரம்பித்தார்கள்!
அவர்களுக்கு தாங்கள் பார்ப்பது சினிமா என்கிற நினைப்பே இல்லை!
ஒம் நமசிவாய முடிந்ததும், தாரை தப்பட்டை ஒலிகள்!
ஏ.பி.நாகராஜன் படத்திற்கு மிகப்பெரிய பலமே அரங்க அமைப்புகள்தான்!
அந்த நாளில் அவருக்கு உறுதுணையாக இருந்தவர் ஆர்ட் டைரக்டர் கங்கா!
சொர்க்கத்தை கூட ஸ்டுடியோவிற்குள் கொண்டு வந்துவிடுவார்!
கைலாயம் என்றால் கைலாயமாகவே இருக்கும்!
பல வேத விற்பன்னர்களை கேட்டு,ஸ்தபதிகளோடு பேசித்தான் அவர் புனிதமான அரங்குகளை அமைப்பார்!
அப்படிப்பட்ட ஒரு கைலாய அரங்கில் பல்வேறு வாத்யங்களை வாசித்தபடியே படம் துவங்கும்!
சிவனுக்கு பிரதானமே நந்தி!
அந்தி நந்தி மிருதங்கம் வாசிக்கும்!
நந்திக்கு வேட்டி கட்டி, அந்த நந்தி அமர்ந்தபடி வாத்யத்தை வாசிக்கும்போதே பிருமிப்பாக இருக்கும்!
அப்போது நாரதர் வருவார்!
சீர்காழியின் குரல் கம்பீரத்தில் ` சம்போ மகாதேவா’ பாடல் கணீரென்று ஒலிக்கும்!
அடுத்து பெண்கள் வீணை மீட்டு, யாழிசைத்து, குழுவாக நடனமாடுவார்கள்!
இவையெல்லாம் முடிந்ததும் உமையவளாக படத்தில் நடித்த சாவித்திரிக்காக சுசீலாவின் குரல் ஒலிக்கும்!
நமச்சிவாய! நாதன் தாழ் வாழ்க!
இமைப்பொழுதும் என் நெஞ்சில்
நீங்காதான் தாழ் வாழ்க!
ஈசனடி போற்றி!
எந்தையடி போற்றி!
தேசனடி போற்றி!
சிவன் சேவடி போற்றி!
நேயத்தே நின்ற நிமலனடி போற்றி!
மாயப்பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி!
சீரார் பெருந்துறை நம்தேவனடி போற்றி!
ஆராத இன்பமருளும் மலை போற்றி!
இந்தப் பாட்டை உமையவள் பாடி முடித்ததும் புலித்தோல் உடையுடன் தத்ரூபமாக சிவனாக சிவாஜி வருவார்!
ஒரு பத்து நிமிடம் அடுத்த வசனம் காதில் விழாது!
நான்காவது முறை படம் பார்த்தபோதுதான் அடுத்து கைலாயத்திற்கு வந்திருக்கும் நாரதர் என்ன பேசினார் என்பஹே காதில் விழும்!
சிவாஜி மக்கள் சிவனாகவே கண்டதன் விளைவு அது!
அடுத்து நாரதர் துவக்குவார்
`உமா மகேஸ்வரே!உலகக் காக்கும் பரம்பொருளே! திருவருள் புரியுங்கள் சுவாமி!
உடனே சிவன் பேசுவார்!
`உமையவளே! என் உள்ளம் கவர்ந்த மலைமகளே!
தாய்க்குலத்தின் தலைமகளே!
உலகத்தவர் போற்றும் வடிவாம்பிகையே!
வருக அமர்க! என்றதும் உமையவள் ஈசனுக்கு பக்கத்தில் சென்று அமர்வாள்!
`சக்தி பூதகனங்களின் வாத்ய ஒலியும்,சப்தரிஷிகளின் வேதம்,நந்தியின் மத்தளம்,நாரதகானம்,வாணியின் வீணை,சப்தகன்னிகளின் ஆட்டம், கண்டு அளவிலா மகிழ்ச்சி அடைந்தோம்!உள்ளம் குளீர்ந்திருக்கிறது! வேண்டுவன கேள் தேவி!
`எங்கும் நிறைந்த எம்பரம்பொருளே என் நாயகா !எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டுமென்று எண்ணுவதை தவிர,வேறென்ன கேட்க போகிறேன்! திருவருள் புரியுங்கள் ஸ்வாமி!
`எங்கும் எதிலும் வெற்றியே பெற்று எண்ணங்கள் யாவும் சித்தி பெற என் இதயம் கனிந்த நல்லாசிகள்!நலமடைவீர்களாக!
இப்போது நாரதர் துவங்குவார்!
`சம்போ மகாதேவா!சர்வேஸ்வரா! சமூகத்தை நாடி ஒரு நற்செய்தி கொண்டு வந்திருக்கிறேன்!
`ம் ( என்றபடி சிவன் ஒரு நமுட்டுச் சிரிப்பை சிரிப்பார்)
`நாரதா! புரிகிறது! இன்று உனக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா ?’
`சிவசிவ! அப்படி எண்ண வேண்டாம்! உண்மையாகவே ஒரு நன்மையான காரியத்திற்காகவே வந்தேன்!
இப்போது உமையவள் சிரித்தபடியே!
`நாரதனின் கலகம் நன்மையில் முடியும் என்றுதானே கூறுவார்கள்! விஷயத்தை சொல்!
`சர்வேஸ்வரா! எவருக்குமே கிடைக்காத பழம் ஒன்று எனக்கு கிடைத்தது! இது சாதாரண பழமல்ல! ஞானப்பழமென்று சான்றோர்கள் கூறினார்கள்! இதை நான் அருந்துவதை விட உலகையே காத்து ரட்சிக்கும் தாங்கள் அருந்தினால் பலனுண்டு என்று கொண்டு வந்திருக்கிறேன்!
`பழத்தை கொண்டு வந்து நாடகத்தை துவங்குகிறாய்?’ நடத்து!
`உண்மையாகவே சொல்கிறேன்! வேறு எந்த நோக்கத்தோடும் அல்ல! நீங்கள் உண்ணவேண்டுமென்ற எண்ணத்தோடுதான் கொண்டு வந்திருக்கிறேன்! ஏற்றுக்கொள்ளுங்கள்!
நாரதர் பழத்தை சிவனிடம் கொடுப்பார்!
`பொறுப்பை என்னிடம் கொடுத்துவிட்டாயா! சரி! உன் சார்பாக நானே அதை துவக்குகிறேன்!
`என்ன ஸ்வாமி! பாசத்தோடு நாரதன் பழத்தை கொண்டு வந்திருக்கிறான்! அதை அருந்தாமல் அவனை பரிகாசம் செய்கிறீர்களே!
சிவனின் அடுத்த வார்த்தையிலிருந்தே திருவிளையாடல் துவங்கும்!
நண்பர்களே,
நான் மீண்டும் மீண்டும் சொல்லுவதாக எண்ண வேண்டாம்.
இன்றைய விஞ்ஞான யுகத்தில் மின்னணு ஊடகங்களின் பெருக்கத்தில் தகவல் தொடர்பு என்பது மிக மிக எளிதாகி விட்டது. தகவல் தொடர்பு என்ற வகையில் இது நமக்கு நன்மை பயக்கும் என்றாலும் கருத்துப் பரிமாற்றங்கள் வரும் போது கருத்துரிமைகள் ஒரு நிலைக்கு மேல் போக முடியாத சூழலும் உள்ளது. அதாவது நாம் சொல்ல நினைப்பதை அப்படியே சொல்ல முடியாத அளவிற்கு ஊடகங்களின் தாக்கங்கள் உள்ளன.
முழுதும் காகித யுகத்தில் இருந்த போது தகவல்கள் அச்சு வடிவில் இருந்த கால கட்டத்தில் நமக்கு நாளிதழ்களும் பருவ இதழ்களும் ஆளுமை பெற்ற ஊடகங்களாக இருந்து வந்தன. இதன் மூலம் சினிமா உலகம் மிகப் பெரிய பலன் பெற்று இன்றைக்கு நூற்றாண்டு விழா காணும் நிலையில் உள்ளது.
நாளிதழ்கள் பருவ இதழ்களில் வெளிவந்த விளம்பரங்கள் செய்திகள் போன்றவை அனைவராலும் பாதுகாத்து வைக்கப்படக்கூடிய சூழல் அன்றைய கால கட்டத்தில் குடும்பங்களில் கிடையாது. சினிமா என்றாலே பெற்றோர் விரட்டி அடிக்கும் கால கட்டத்தில் ரசிகர்கள் மிகவும் சிரமப்பட்டு தங்களுடைய கஷ்டமான பொருளாதார சூழலிலும் விளம்பரங்களை சேமித்து வந்துள்ளனர். அது எல்லோராலும் முடிந்ததில்லை, சமுதாயத்தில் 0.5 சதம் அளவிற்கு மேல் அவை இருந்திருக்க வாய்ப்பில்லாத கால கட்டம்.
அந்தக்காலத்தில் விநியோகஸ்தர்கள் தரக்கூடிய விளம்பரங்களில் பெரும்பாலும் வசூல் விவரங்கள் இருக்காது. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். படம் எவ்வளவு பெரிய வெற்றி பெற்றாலும் மிகச் சில தயாரிப்பாளர்களே வசூல் விவரங்களை வெளியிட்டுள்ளனர். ரசிகர்கள் திரையரங்குகளுக்குச் சென்று ஆவலுடன் தகவல் சேகரித்து அவரவர் நடிகர்களுக்கான மலர், நோட்டீஸ் என வெளியிடுவதன் மூலமாகவே ஓரளவிற்கு உண்மையான வசூல் வந்துள்ளது. இதில் தவறு என்பது அதிகபட்சம் ஐந்து சதம் வரையில் இருக்கலாமே தவிர முழுமையாகப் புறக்கணிக்க முடியாதவையாகும். இது சிவாஜி, எம்.ஜி.ஆர். என அனைத்து ரசிகர்களுக்கும் பொருந்தும். இன்னும் சொல்லப்போனால் பணமா பாசமா படத்தின் பிரம்மாண்ட வெற்றியின் போது தமிழக மெங்கும் புதியதாக ஜெமினி மன்றங்கள் முளைத்தன. ஆளாளுக்கு அங்கங்கே ஜெமினி பெயரில் மன்றம் ஆரம்பித்து அவர்களும் தங்கள் பங்கிற்கு வசூல் விவரங்களை வெளியிட்டு மூவரில் ஜெமினி தான் சாதனைச் சக்கரவர்த்தி, வசூல் சக்கரவர்த்தி என்றெல்லாம் கூறிக் கொண்டனர்.
ஆனால் காலப்போக்கில் மின்னணு யுகத்தில் திரையரங்குகளும் தப்பவில்லை. பல திரையரங்குகள் வசூல் விவரங்களடங்கிடய டிசிஆர் என்கிற ஆவணத்தை ஒரு குறிப்பிட்ட காலக்கெடு வைத்துக் கொண்டு அதற்குப் பின்னர் உள்ள விவரங்களை மட்டுமே பராமரிக்கத் தொடங்கின. அதற்கு முந்தைய ஆண்டுகளின் டிசிஆர் போன்ற விவரங்களை அவர்கள் பாதுகாத்ததாகத் தெரியவில்லை, அவை பற்றிய விவரங்கள் இப்போது கிடைப்பதற்கு வாய்ப்பில்லை. இது ஒரு பக்கம்.
இன்னொரு பரிமாணம், தயாரிப்பாளர்கள் தரப்பு. பல தயாரிப்பாளர்கள் புதிய தயாரிப்பாளர்களாயிருப்பர், அவர்களுக்கு டிசிஆர் விவரங்களைப் பாதுகாக்க வேண்டிய அவசியமிருந்திருக்காது. அல்லது அதனை வெளியிட தயங்கியிருப்பார்கள். இதற்கு வருமான வரி போன்ற பல காரணங்கள் இருக்கலாம். அல்லது வேறு காரணங்களும் இருக்க்லாம். இது போன்ற சூழலில் தயாரிப்பாளர்கள் தங்கள் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றால் கூட அதைத் தோல்விப் படம் என்று அவர்களாகவே சித்தரித்திருக்க வாய்ப்புண்டு.
இது போன்ற பல காரணங்களால் நம்மால் பழைய படங்களின் வசூல் விவரங்களை சரிபார்க்க முடியாது. நம்முடைய ரசிகர் மன்ற நோட்டீஸில் உள்ள விவரங்கள் உண்மை என்றாலும் கூட அவையும் பரிசோதனைக்குட்படுத்தப்படவேண்டும் என்கிற அவசியம் வந்தால் அதற்கான விவரங்களை சம்பந்தப்பட்ட திரையரங்குகளோ அல்லது தயாரிப்பாளரோ தான் உதவ வேண்டும். இந்த இரு தரப்பிலும் தகவல் பெற நமக்கு ஒரு சதவீதம் கூட வாய்ப்பில்லை.
பத்திரிகை விளம்பரத்திலும் கூட ஒரு சில அபூர்வமான சந்தர்ப்பங்கள் தவிர பெரும்பாலும் வசூல் விவங்கள் இடம் பெறாது, திரையரங்குகளிலும் விவரம் பெற முடியாது, தயாரிப்பாளர் தரப்பிலும் விவரம் கிடைக்காது என்கிற போது எந்த அடிப்படையில் நாம் வசூல் விவரங்களைப் பற்றி விவாதிக்க முடியும்.
அனுமானங்களும் கணக்கீடுகளும் ஏட்டளவில் எழுதும் போது நன்றாக இருக்கலாமே தவிர ஆதாரமாக பயன்படுத்த முடியாது.
சாதனைகளை நிரூபிக்க வேண்டுமென்றால் ஓடிய நாட்கள் தான் சிறந்த அளவுகோலாக இருக்கும். அதற்கு நிச்சயமாக விளம்பரங்கள் கை கொடுக்கும். அவை ஓரளவிற்கு கிடைத்து வருகின்றன. அதுவும் நம் பம்மலாரின் ஆவணப் பதிவுகள் மூலம் இவற்றிற்குத் தனி மவுசு ஏற்பட்டிருக்கிறது. இதனால் பல பத்திரிகைகளும் தங்களிடம் இருக்க்க் கூடிய பல பழைய பிரதிகளின் நகல்களுக்கே நல்ல கட்டணம் வசூலித்து சம்பாதிக்கின்றன. எனவே இந்த விளம்பரங்களை வைத்து நாம் நூறு நாட்கள், வெள்ளி விழா என ஒரு படத்தின் ஓட்டத்தின் கால அளவை துல்லியமாக அறிந்து கொள்ளலாம். இதில் அனுமானங்களும் கணக்கீடுகளும் நிச்சயமாக சரியான தீர்வை அடைய உதவும்.
இன்றைய கால கட்டத்தில் வாதப் பிரதிவாதங்கள் யாவுமே ஆதாரங்களை அடிப்படையாக வைத்தே நடக்கின்றன. நம்முடைய இந்த்த் திரிகளின் விவாதங்களும் அவ்வாறே. எனவே எந்த விதமான ஆதாரங்கள் நமக்குக் கிடைக்க்க் கூடும் என்பதைக் கணக்கிட்டு அதற்கேற்ப நம் வாதங்களை அமைத்துக்கொண்டால் அதில் அர்த்தமிருக்கும்.
எனவே மேற்கூறிய கருத்துக்களின் அடிப்படையில் வசூல் விவரங்களைப் பற்றிய விவாதங்களை, குறிப்பாக ஒப்பீடு விவாதங்களை முற்றிலுமாக தவிர்க்குமாறு நமது நண்பர்களைக் கேட்டுக்கொள்கிறேன்..
டியர் ஆர்கேஎஸ்
பொதுவான விஷயத்திற்கு, அதுவும் யூனிவர்சல் ட்ரூத் எனப்படும் நிரூபிக்கப்பட்ட விஷயத்திற்கு, யாராவது ஒருவர் சொன்னாலே போதுமானது. சொன்னாலும் சொல்லாவிட்டாலும் சிவந்தமண் மிகப் பிரம்மாண்டமான வெற்றி பெற்ற படம் என்பதை எந்த சிவாஜி ரசிகனும் மறுக்கப்போவதில்லை. தங்களுக்கு நான் ஆதரவாக பதிவிடவேண்டுமென்றால் புதியதாக ஏதாவது சொல்லவேண்டும். அதற்கு அவசியமே இல்லை.
நான் ஒப்பீடுகளைத் தவிர்க்கிற காரணத்தால் அந்த விவாதத்தில் நான் நுழைய விரும்பவில்லை. அதற்காக சிவந்தமண் படத்தின் வெற்றியைப்பற்றி திரு பாஸ்கர் கூறிய கருத்திலிருந்து நான் மாறுபடவில்லை. அது வேறு படத்துடன் ஒப்பீடு செய்யப்படுவதைத் தான் நான் தவிர்க்கிறேன். அதற்காக நான் மாற்று முகாமின் அன்பைப் பெறுவதற்காக அமைதியாக இருக்கிறேன் என்று காரணமும் கற்பிக்கப்பட்டது. அதை நான் பொருட்படுத்தவில்லை.
ஒப்பீடுகளைக் கடந்து சிவந்தமண் படத்தின் வெற்றியே கேள்விக்குறியாக சித்தரிக்கும் சூழல் வந்தபோது தான் நான் என் கருத்தைக் கூற வந்தேன். நண்பர் ஸ்ரீராம் அவர்கள் கோபுவின் புத்தகத்திலிருந்து அனுப்பிய நிழற்படத்தை மேற்கோள் காட்டி நேற்று என் கருத்தைக் கூறினேன். அதைத் தொடர்ந்து இன்று காலை நண்பர் வாசு அவர்களும் மிகச்சிறப்பாக சிவந்த மண் திரைப்படத்தின் வெற்றியைப் பற்றிய கருத்தைக் கூறினார். தர்த்தி ஹிந்திப் படம் தோல்விப்படமே என ஸ்ரீதர் அவர்களின் நூலிலும் சரி, கோபு அவர்கள் எழுதிய நூலிலும் குறிப்பிட்டிருந்ததற்குத் தான் என்னுடைய கருத்தினைக் கூறினேன்.
என்னுடைய நிலைப்பாட்டில் நான் புதியதாக எந்த மாற்றமும் செய்ததாக எனக்குத் தோன்றவில்லை. உங்களுக்கோ அல்லது மற்ற நண்பர்களுக்கோ நான் ஆதரவு தருவதில்லை என்று நான் எந்த நிலைப்பாட்டையும் எடுத்து என் கருத்தினைத் தீர்மானிப்பதில்லை.
இந்த அடிப்ப்டையில் என் பதிவுகளைப் படித்திருந்தீர்களானால் என் மேல் எந்தத் தவறுமில்லை என்பதைத் தாங்கள் மட்டுமல்ல இங்கு அனைவருமே புரிந்து கொள்வீர்கள்.
அதே போல புதிய தலைமுறை இதழின் தலையங்கத்தைக் கண்டித்து எழுதியது மட்டுமின்றி நடிகர் திலகத்தின் சமூதாயத்தொண்டிற்கோர் சான்றாக அவர் நடத்திய பாரதி விழாவைப் பற்றிய பேசும்படம் பத்திரிகை பக்கம் ஒன்றையும் இங்கே பகிர்ந்து கொண்டேன். அதை இங்கே எத்தனை பேர் பார்த்திருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியாது. காரணம் அதைப் பற்றிய பதிவு ஏதும் இங்கு வரவில்லை. ஆனால் முகநூலில் மிகப் பெரிய அளவில் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுத் தந்துள்ளது.
மன்னிப்புக் கேட்பது என்பதெல்லாம் நண்பர்களுக்குள் அறவே தேவையற்ற ஒன்று. கருத்துப் பரிமாற்றங்களில் கோபம் வரும். எனக்கு அதிகமாகவே வரும். அதை நான் நேரடியாகவே வெளிப்படுத்தி விடுவேன். அவ்வளவு தான். உள்ளே ஒன்று வைத்துக் கொண்டு வெளியே வேறு பேசுவதோ எழுதுவதோ என்னிடம் கிடையாது. அதைப் புரி்ந்து கொண்டால் போதும்.
அன்பு நண்பர்களே
தங்களால் கஷ்டப்பட்டு மூளையை கசக்கிப்ளிநது எழுதிய அற்புதமான கட்டுரைகளை copy செய்துபதிவிட்டிருக்கிறோம். நமது இதயதெய்வம் புகழ் மற்றும் அவரைப்பற்றிஉண்மையான செய்திகள் எல்லோரிடமும் கொண்டுசேர்க்கவேண்டும் என்ற நோக்கத்தை தவிர வேறொன்றும் கிடையாது.சமிபத்தில் எங்களது வங்கி whatsapp இல் மிக பெரிய வாக்குவாத த்திற்கு திரு.ராகவேந்திரா சார் பதிவிட்ட பாரதி விழா தான் எனக்கு கைகொடுத்தது.சிவாஜி என்ற மாபெறும் கலைஞன் சமூகத்தில் எவ்வளவு அக்கறையுடன் எத்தனை திறமைசாலிகளுக்கு விழா எடுத்திருக்கிறார் எனபதை இன்றைய
தலைமுறைக்கு பறைசாற்றவே. தயவு செய்து ஒரு வேண்டுகோள் whatsapp மூலமும் பகிரவும்.நன்றி.
dear ravikiran
நக்கீரன் பதிவை whatsapp மூலம் பகிரவும்
ஆதிராம் சார்
நான் ஞாயிறு அன்று விக்ரம்பிரபுவை சந்தித்து விட்டு மாலை சாந்திக்கு சென்று திரு. வேணுகோபால் அவர்களிடம் அனுமதி பெற்று எடுத்த போட்டோக்கள் தான் அவை.அன்று மாலையே கோவை திரும்ப வேண்டி இருந்ததாலும்,நண்பர்களின் வருகைக்காக காத்திருக்க வேண்டி இருந்ததாலும்....
சாந்தியை இடிப்பதற்கு முன் பார்க்க வேண்டும் என்ற காரணத்தாலும்.,,
சாந்தி இடிப்பதற்குமுன்
இனி சென்னை வரும் வாய்ப்பு கிடைத்தால் தங்களின் ஆசையை நிறைவேற்றுகின்றேன்.அது என் ஆசை மட்டுமல்ல,எல்லாருடைய ஆசையாகவும் இருக்கும்.
http://i1094.photobucket.com/albums/...alar/Anna1.jpg
திராவிட இயக்கங்களின் முன்னோடிகளில் ஒருவரான பேரறிஞர் அண்ணா அவர்களுடன் நடிகர் திலகம்.
இன்று அண்ணாவின் பிறந்த நாள். அண்ணா அவர்களின் இதயத்தில் நிரந்தரமாகக் குடி கொண்டு விட்டவர் நடிகர் திலகம். அரசியல் அவர்களைக் கொள்கை ரீதியாகப் பிரித்தாலும் நட்பு ரீதியாகப் பிரிக்க முடியவில்லை. எத்தனையோ சூழ்ச்சிகளை இருவருமே அடையாளம் கண்டு கொண்டு தங்களுடைய பரஸ்பர நட்புணர்வைப் பேணி வந்தனர். அண்ணா இறுதியாகப் பங்கேற்ற உயர்ந்த மனிதன் விழாவில் அவரைக் கலந்து கொள்ளாமல் செய்ய சதித்திட்டங்களை முறியடித்து பிடிவாதமாக கலந்து கொண்டு தன்னுடைய வாழ்த்துக்களை நடிகர் திலகத்திற்கு அளித்தார்.
அண்ணா அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றிய கடைசி அதிகார பூர்வமான நிகழ்ச்சி நடிகர் திலகத்தின் 125வது படமான உயர்ந்த மனிதன் விழாவேயாகும்.
அன்பு நண்பர் ஆவணத்திலகம் பம்மலாரின் உபயத்தால் பொம்மை மாத இதழில் வெளியான கட்டுரையின் நிழற்படங்கள் நம்முடைய பார்வைக்கு.
Quote:
நடிகர் திலகத்தின் 125வது படவிழா
["உயர்ந்த மனிதன்" விழா : 15.12.1968 : சென்னை]
வரலாற்று ஆவணம் : பொம்மை : ஜனவரி 1969
முதல் பக்கம்
http://i1094.photobucket.com/albums/.../GEDC4589a.jpg
மூன்றாவது பக்கம்
http://i1094.photobucket.com/albums/...EDC4591a-1.jpg
நான்காம் பக்கம்
http://i1094.photobucket.com/albums/...EDC4592a-1.jpg
ஐந்தாம் பக்கம்
http://i1094.photobucket.com/albums/...EDC4593a-1.jpg
ஆறாம் பக்கம்
http://i1094.photobucket.com/albums/...EDC4595a-1.jpg
[இந்த விழாத் தொகுப்புக் கட்டுரை மொத்தம் ஆறு பக்கங்களைக் கொண்டது.]
அன்புடன்,
பம்மலார்.
திரு முத்தையன்
மனிதனும் தெய்வமாகலாம் திரைப்படத்தின் நிழற்படங்கள் மிகவும் அருமையாக உள்ளன. இப்படத்தின் இவ்வளவு தெளிவான நிழற்படங்கள் இணையத்தில் இதுவே முதன் முறை. தங்களுக்கு என் உளமார்ந்த பாராட்டுக்கள். நன்றி.
திரு.வாசு சார்,
நேற்று நான் திரியை பார்க்க முடியவில்லை. அதனால், பதில் அளிக்க முடியவில்லை. தாமதத்துக்கு மன்னிக்கவும்.
சிவந்த மண் திரைப்படத்தை தோல்விப்படம் என்று நான் சொல்லவில்லை சார். நன்கு வசூல் ஆன படமும் கூட. ஆனால், முதலீடு அதிகம் என்பதால் எதிர்பார்த்த அளவு வசூல் ஆகவில்லை. சொல்லப்போனால் நம்நாடு திரைப்படத்தை விட வசூல் குறைவுதான். அதுவும் கூட நாங்களாக ஆரம்பிக்கவில்லை. திருச்சி பாஸ்கர் அவர்களும், ஆதிராம் அவர்களும் தேவையின்றி இரண்டு படங்களையும் ஒப்பீடு செய்ததால்தான் இந்த பதிலை அளிக்க வேண்டி வந்தது.
அதிலும் கூட சிவந்த மண்ணை விட நம்நாடு அதிகம் வசூல் என்பதற்கு எங்கள் நண்பர்கள் வெளியிடும் ஆவணங்கள் ஒருபுறம் இருக்கட்டும். அவர்கள் மீது எனக்கு நம்பிக்கை உண்டு என்றாலும் சிவாஜி ரசிகர்களால் ஆவணத் திலகம் என்று போற்றப்படும் திரு.பம்மல் சுவாமிநாதன் அவர்களே சிவந்தமண்ணை விட நம்நாடு திரைப்படம்தான் (ஓவர் ஆல் தமிழ்நாடு) அதிகம் வசூல் செய்தது என்று திரு.எஸ்.வி.யிடம் ஒப்புக் கொண்டிருக்கிறார்.
சிவாஜி ரசிகரே சொல்லிவிட்டாரே, அதுவும் ஆவணங்களை வைத்திருப்பவர் என்ற அடிப்படையில்தான் துணிந்து தைரியமாக சொன்னேன். இப்போதும் சொல்கிறேன். திரு.எஸ்.வி.யிடம் பம்மலார் சிவந்தமண்ணை விட நம்நாடு வசூல் அதிகம் என்று ஒப்புக் கொண்டிருக்கிறார் என்றுதான் எனக்கு தகவல். ஆனால், சில மணி நேரங்களில் திரு.ஆர்.கே.எஸ்.பதிவை பார்த்ததும் இதென்ன புதுக்குழப்பம்? என்று நினைத்தேன். எங்கோ தவறு நடந்திருக்கிறது. அது என்னவென்று தெரியவில்லை.
பொய் சொல்வது மனசாட்சிக்கு விரோதம் என்பது இருக்கட்டும். ஒரு முறை பொய் சொன்னோம் என்று தெரிந்து விட்டால், நமது முகம் தெரியாவிட்டாலும் கூட, அதன் பிறகு நமது எழுத்துக்கு என்ன மரியாதை கிடைக்கும்?
இனி நான் என்ன சொன்னாலும் அது சரியாக இருக்காது. ஒரே வழி, திரு.பம்மல் சுவாமிநாதன் அவர்கள் உண்மையை வெளியிடுவதுதான். இதற்காக அவர் திரிக்கு வரவேண்டும் என்று அவசியம் இல்லை. செப்டம்பர் 21ம் தேதி அன்று அவருக்கு பிறந்தநாள். அவருக்கு எல்லாரும் வாழ்த்து தெரிவிப்போம். அதற்கு நன்றி சொல்ல அவர் வருவார். கடந்த ஆண்டு நான் பிறந்த நாள் வாழ்த்து சொன்னபோது எங்கள் திரிக்கு வந்து எனக்கு நன்றி தெரிவித்தார். 22ம் தேதி வரை நான் காத்திருக்கிறேன்.
தங்கள் மீதும் திரு.ராகவேந்திரா சார் மீதும் எனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் அன்பும் உண்டு. உங்கள் இருவருக்கும் நான் வாக்குறுதி அளிக்கிறேன்.
நம்நாடு படம் சிவந்தமண்ணை விட அதிகமாக வசூல் செய்தது என்று திரு.எஸ்.வி.யிடம் பம்மல் சுவாமிநாதன் அவர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார். இந்த தகவல் எனக்கு கிடைத்தது. அதனால்தான், துணிந்து அதை நான் பகிர்ந்து கொண்டேன். நானாக கற்பனை செய்து சொல்லவில்லை. அப்படி நான் பொய் சொல்வது உறுதியானால், மக்கள் திலகம் திரியிலும், மதுரகானம் திரியிலும், இங்கும் வந்து ‘நான் பொய் சொல்லிவிட்டேன். எல்லாரும் என்னை மன்னித்து விடுங்கள்’ என்று பகிரங்கமாக கோரி அத்துடன் திரியில் இருந்தும் வெளியேறி விடுகிறேன். நன்றி.
திரு.ராகவேந்திரா சார், நண்பர்களுக்குள் மன்னிப்பு கோருவது தேவையில்லை என்று கூறியுள்ள உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி சார். இருந்தாலும் தவறு செய்தால் மன்னிப்பு கோர தயங்க மாட்டேன். வாசு சாருக்கு அளித்துள்ள வாக்குறுதியை உங்களுக்கும் நான் அளிக்கிறேன்.
இந்த விவகாரத்தில் உண்மை வெளிவந்த பிறகாவது நீங்கள் கூறியுள்ளதை போல திரு.பாஸ்கர் அவர்களும் திரு.ஆதிராம் அவர்களும் தேவையற்ற ஒப்பீடுகளை தவிர்க்க வேண்டும். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
நண்பர் திரு.முரளி அவர்களுக்கு,
நான் ஏற்கனவே எனது முந்தைய பதிவில் கூறியிருந்தபடி, தங்களுக்கு பதில் அளித்து விவாதத்தை வளர்க்க வேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், பிஎம். சர்ச்சையை கிளப்பி விட்டிருக்கிறீர்கள். அதனால் பதில் அளிக்கிறேன். தாங்களும் ஒவ்வொரு பதிவிலும் உண்மைக்கு மாறாக எதையாவது சொல்ல வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறீர்கள். என் மீது சேறு வீச வேண்டும் என்று முடிவு செய்த பிறகு நியாயம் எல்லாம் எங்கே தெரியப் போகிறது?
இருந்தாலும் உண்மை புரிய வேண்டும் என்பதற்காக இந்த விளக்கம். நான் கூறியிருந்தது இது.
//திரு.பம்மலார் அவர்களே இந்த தகவலை திரு.எஸ்.வி.யிடம் ஒப்புக் கொண்டதாக அறிகிறேன். (பி.எம்.தகவல்கள் மூலம்) விரைவில் திரு.எஸ்.வி அதை வெளியிடுவார் என்று நம்புகிறேன்.//
இதில் பம்மலார் எஸ்.வி.க்கு பி.எம்.அனுப்பினார் என்று எங்கு நான் சொல்லியிருக்கிறேன்? திரு.எஸ்.வி.யிடம் பம்மலார் ஒப்புக் கொண்டதை பிஎம் தகவல்கள் மூலம் நான் அறிந்தது கொண்டேன். அவ்வளவுதான். நானும் எஸ்.வி.யும் பிஎம்.மூலம் அவ்வப்போது தொடர்பு கொள்வது உண்டு.
திரு.வாசு சாருக்கும் திரு.ராகவேந்திரா சாருக்கும் சொன்ன பதிலை பார்த்திருப்பீர்களே. அவர்களுக்கு அளித்த வாக்குறுதியை உங்களுக்கும் அளிக்கிறேன். 22ம் தேதி வரை காத்திருக்கிறேன். அதுவரை பதிவுகள் இடமாட்டேன். 23ம் தேதி பதிவிடுவேன்.
சாதனை சிகரங்களில் இடம் பெற்றுள்ள ராஜா, ராஜராஜசோழன், திருவருட்செல்வர் ஆகிய படங்கள் பற்றிய உங்கள் தவறான தகவலை நான் சுட்டிக்காட்டியிருப்பதை மறுக்காததற்கும் நன்றி. இதை நண்பர் திரு.ராதாகிருஷ்ணன் அவர்கள் கவனிக்கட்டும்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
நண்பர் திரு.பம்மல் சுவாமிநாதன் அவர்களுக்கு,
21-ம் தேதி தங்களுக்குப் பிறந்தநாள். கடந்த ஆண்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தேன். எங்கள் திரிக்கு வந்து நன்றி தெரிவித்தீர்கள். இங்கே நான் விட்டிருக்கும் சவாலால் இந்த ஆண்டு அந்த தேதியில் திரிக்கு வந்து உங்களுக்கு வாழ்த்து சொல்ல முடியாத நிலைமை.
எனவே, இப்போதே முன்னதாகவே தங்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் மிகுந்த வருத்தம் அடைந்திருப்பதாக திரு.முரளி தெரிவித்துள்ளார். மன்னிக்க வேண்டும். மற்றவர்களை புண்படுத்த வேண்டும் என்று மனதால் கூட நான் நினைக்க மாட்டேன். ஆனால், நீங்கள் திரு.எஸ்.வி.யிடம் ஒப்புக் கொண்டதாகத்தான் எனக்கு தகவல். என்ன நடந்தது என்ற உண்மையை விளக்க வேண்டும் என்று அன்போடு கோருகிறேன். 22-ம் தேதி வரை உங்கள் பதிலுக்கு காத்திருப்பேன்.
தங்களுக்கு மீண்டும் எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
என்னை மன்னிப்புகோர சொல்லியுள்ள நண்பர் திரு.டிஏ சினிமா அவர்களுக்கு,
நான் சொல்வது பொய் என்றால் நிச்சயம் நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதுடன் வாசு சாருக்கும் ராகவேந்திரா சாருக்கும் வாக்குறுதி அளித்தபடி திரியில் இருந்தும் விலகுகிறேன்.
அப்புறம்..... நீங்கள் எங்கள் திரிக்கு வந்து சொன்ன பொய்யான குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு திரு.சைலேஷ் அவர்கள் உங்களுக்கு பல முறை (12 முறை) நினைவூட்டல் செய்துள்ளார். உண்மையை வெளியிட்டு அவர் அறிவித்துள்ள பரிசுகளை பெற்றுக் கொள்ளலாமே.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
அன்புள்ள நண்பர் கலை அவர்களுக்கு,
முதலில் நீங்கள் 'இன்ன தேதி வரை பதிவிடுவதில்லை', 'அந்த தேதி வரை பதிவிடுவதில்லை' என்பதுபோன்ற விரதங்களை கைவிடுங்கள். உங்கள் நீல வண்ண பதிவுகளால் திரிகள் களைகட்டுகின்றன என்பதோடு, விவாதப்பொருளும் கிடைக்கிறது. திரிகள் என்பதே விவாதிப்பதற்குத்தான் என்பதை நம்புபவன் நான்.
அடுத்து நண்பர் திருச்சி பாஸ்கர் அவர்களும் நானும் ஒப்பீடு விவாதத்தை துவங்கியதாக குறிப்பிட்டுள்ளீர்கள்.
என்னைப்பொருத்தவரை இந்த வசூல் விவரங்களை எப்போதும் விவாதிக்க விரும்பாதவன்.
ஆனால் படம் ஓடிய நாட்கள் பற்றியும் அதுபற்றிய செய்தித்தாள் விளம்பரங்களையும் அதிகம் விரும்புபவன். நம்புபவன். காரணம் அவை தயாரிப்பாளர்களால், விநியோகஸ்தர்களால் கொடுக்கப்பட்டவை என்பதால். இப்போது வரக்கூடிய சிற்சில தியேட்டர் பெயர் தவறுகள் கூட அப்போதைய செய்தித்தாள் ஆவணங்களில் இருக்காது.
ஆனால் வசூல் விபரம் பற்றிய நோட்டீஸ்கள் ரசிகர் மன்றங்களால் வெளியிடப்படுபவை. ஆர்வம் காரணமாக தங்கள் தரப்பு நடிகர்களின் வசூலை கூட்டி சொல்வது சகஜம். (எல்லா தரப்பு ரசிகர்களிடம் உள்ள நடைமுறை வழக்கம்) என்பதால் அதிகம் நம்பகத்தன்மை அற்றவை.
இப்போதும் சொல்கிறேன் சிவந்த மண், நம்நாடு குறித்து வசூல் ஒப்பீட்டை துவங்கியது நான் அல்ல. இரண்டு படங்களின் 100-வது நாள் விளம்பரங்கள் பற்றியே நான் குறிப்பிட்டேன்.
முதலாவது சிவந்தமண் 100-வது நாள் தினத்தந்தி விளம்பரத்தில் அத்தனை தியேட்டர் பெயர்களும் இடம்பெற்றுள்ளன என்பது (இது 100 சதவீதம் உண்மை).
இரண்டாவது நம்நாடு 100-வது நாள் விளம்பரத்தில் தியேட்டர் பெயர்கள் இல்லை. நடிகர்கள், டெக்னீஷியன்கள் பெயர்கள் மட்டுமே உள்ளன என்பது (இது 200 சதவீதம் உண்மை)
இது ஏன்?. சிவந்தமண்ணை விட நம்நாடு குறைவான தியேட்டர்களிலேயே 100 நாள் ஓடியுள்ளது என்ற உண்மை தெரிந்துவிடக்கூடாது என்பதற்கா என்றும் கேட்டிருந்தேன். அவ்வளவுதான்.
இந்த விஷயத்தில் மிகக்குறைவான விவாதத்தில் ஈடுபட்ட என்னை, இந்த விவாதத்தை துவக்கியதாக நீங்கள் சித்தரிப்பது புரியவில்லை. உண்மையில் வசூல் விவாதத்தை நான் துவக்கியிருந்தால் அதை மனப்பூர்வமாக, தைரியமாக, நேர்மையாக ஒப்புக்கொள்வேன். பின்வாங்க மாட்டேன்.
எப்படியோ நண்பர்களின் இடைவிடாத வாதங்களுக்குப்பின், "சிவந்த மண் தோல்விப்படம் என்று நான் சொல்லவில்லை. நன்றாக வசூலாகவில்லை என்று சொல்லவில்லை. தயாரிப்பு செலவு அதிகமாகிவிட்டது" என்பது வரையில் நீங்களாக ஒப்புக்கொண்டதற்கு நன்றி.
ராகவேந்திரன் சார்,
நிழலுருவத்தோடு நிற்கும் இந்தத் 'திருடனி'ன் போஸை எவரால் மறந்து விட முடியும்? எவரால் இப்படியெல்லாம் நினைத்துப் பார்க்க இயலும்? (என்னுடைய சேமிப்பிலிருந்து)
http://i60.tinypic.com/1zx8a55.jpghttp://i60.tinypic.com/167m93p.jpg
http://i58.tinypic.com/xd8gsz.jpghttp://i59.tinypic.com/mta6nd.jpg
சைலேஷ் பாசு சார்,
மத நம்பிக்கையைப் புண்படுத்துவதை யார் செய்தாலும் நாம் வரவேற்பதில்லை. எம்.ஜி.ஆர். அவரையே கடவுளாக வழிபடும் நீங்கள், அவருடைய உருவத்தை இன்னோர் கடவுளின் உருவத்தில் பொருத்துவது சரியாகப் படவில்லை. இது நிச்சயம் மதநம்பிக்கை உள்ளோர்க்கு மன வருத்தம் உண்டாக்கும். எம்.ஜி.ஆர். அவர்களும் இதை விரும்ப மாட்டார்.
இதைப் புரிந்து கொள்வீர்கள் என எண்ணுகிறேன்.
அன்புடன்
வாசு சார்
அட்டகாசம், உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் திருடன் நடிகர் திலகம் மட்டுமல்ல தாங்களும் தான். அவர் நடிப்பாலும் ஸ்டைலாலும் நம் மனதைக் கொள்ளையடிக்கிறார். தாங்கள் அவற்றின் ஸ்டில்களை அளித்து நம் மனதைக் கொள்ளையடிக்கிறீர்கள்.
தங்களுக்கு உளமார்ந்த பாராட்டுக்களும் நன்றியும்.
Dear Vasudevan Sir,
This thief is not a usual thief. His style is different and will try always to justify the reason for doing theft.
But, in this movie particularly, Police is also equally smart and powerful with law points to arrest the thief.
In this film thief will try all his stunts, sentiments, to escape from being convicted.
The beauty of the film is police will also equally play mind-games quite tactfully. The viewers themself will appreciate the police and say, it is high time police should catch the thief. Screenplay is excellent with lot of twist and turn.
All together it is an interesting subject on thief. Olden days film, they have not shown police taking money and leave the thief free..!
Thief - in Style !
Rks
Vasu sir,
Am using mobile to write now.
ANYHOW I have to reply for few lies that is still circulating as if they are truth. I have to expose those lies and it is possible only if I write in Tamizh.
I will write a review of Thirudan Tomorrow.
RKS
"ஆ..ஆஆ"...
சுசீலாம்மாவின் தேன் குரல்
செய்யும் ராக ஆலாபனையோடு துவங்கும்
இந்தப் பாடல்...
என் சிறு வயது ஆச்சரியம்.
பாட்டு,இசை, வரிகளின் அர்த்தம் என்று எதுவும் தெரியாது போனாலும், இனிமையால் மட்டுமே
இதயம் குடியேறிய ஆச்சரியப் பாட்டு.
விபரமறிந்த வயசில் கேட்ட
போது, இன்னும் வியப்பு
கூடிற்று.
அருமையான இந்தக் காதற்
பாடலின் வரிகளில் சூசகமாய்
நுழைந்திருக்கிற காமம்,
காட்சிப்படுத்தலில் காணாமலே
போயிருப்பது வியப்பு.
"மாப்பிள்ளை,பெண்ணுக்கு"
என கண் சுழற்றி, கலைச்செல்வி பாடிக் காட்ட
அப்படியே ,அசத்தலான
அதே பெண் பாவத்தில் நடிகர்
திலகம் செய்து காட்டுவது
வியப்பு.
காலங்களைக் கடந்து இன்று வீசுகிற புதிய காற்றிலும் இந்தப்
பாடல் இனித்தொலிப்பது
வியப்பு.
ஆடிப் பாடித்தான் ஒரு பாடலை
வெற்றியடையச் செய்ய வேண்டுமென்பதில்லை.
கதாநாயகியுடன் செய்யும்
குறும்புகளைக் கூட ஒரு பாடலின் வெற்றிக்குக் காரணியாக்கலாம் என்று நம்
நடிகர் திலகம் நிரூபித்திருப்பது
வியப்பு.
ஒரு குழந்தையின் ஈரமான முத்தம் போல காலகாலமாய்
இந்தப் பாடல் நினைவில் நிற்பது வியப்பு.
https://youtu.be/PgBAx_bl1YE
"ரசத்தில் உப்பில்லை..
கணவன் அடித்தான்.
மனைவி அழுதாள்.
அவள் கண்ணீரில் இருந்தது..
ரசத்தில் இல்லாதது".
-புரிதலற்ற கணவனிடம்
சிக்கிச் சீரழியும் ஒரு அப்பாவி மனைவியின் கண்ணீர் குறித்த எனது பழைய கவிதை,அது.
---------
இதோ..
நான் பகிர்ந்துள்ள
இந்தப் பாடலிலும்
ஒரு கணவன் உண்டு.
மனைவி சிந்தும்
கண்ணீர் உண்டு.
அந்தக் கவிதை காட்டிய
பெண்ணின் கண்ணீருக்குப் பின்
ஒரு புரியாத்தனமிருக்கிறது.
இந்தப் பாடலின் நாயகி சிந்தும் கண்ணீரில் புரிதலின் உச்சமாய்
ஒரு தெளிவிருக்கிறது.
-----------
நம்பிய உறவுகளால்
வஞ்சிக்கப்பட்டு,
வாழ்க்கை தந்த வெறுமைத் தனிமையில் கலங்கி நிற்கும்
அகவை முதிர்ந்த கணவனும்,மனைவியும் தோன்றுமிந்தப் பாடல்..
ஒரு நல்ல தம்பதி
இப்படித்தானிருக்க வேண்டும்
என்று போதிக்கிறது.
----------
"பேருக்குப் பிள்ளை உண்டு.
பேசும் பேச்சுக்கு
சொந்தம் உண்டு.
என் தேவையை யாரறிவார்?"
-தள்ளாடி,தளர்ந்து நடந்து
வந்து,தனக்கென விரிந்த
மனைவியின் மடி கிடந்து,
அந்தக் கிழவர் விரக்தி வினா எழுப்ப,
அதிர்ந்து போகும்அந்தக் கிழவியின் முகத்தில் தோன்றும் சோகக் குறிகள் துடைத்து..
"உன்னைப் போல்
தெய்வமொன்றே அறியும்"
-என்று அவரே பாடி முடிக்கையில், ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் அந்தக் கிழவி சிந்தும் கண்ணீரை,நம் இதயப் பாத்திரங்கள் இன்னும்
சேமித்துக் கொண்டேதான்
இருக்கின்றன.
https://www.youtube.com/watch?v=NC3Q...e_gdata_player
ஆர்வமாய் தேடித் தேடி...
ஓடி ஓடி...
அய்யா நடிகர் திலகத்தின்
படங்களாய்ப் பார்த்த காலமது.
(இன்னமும்தான் என்பது
வேறு விஷயம்.)
வழக்கமாக, ஒரு படத்துக்கு
நான்கு இடைவேளைகள் விடும் அந்த டூரிங் திரையரங்கில், பழைய
படங்களெனில் ஏழெட்டு இடைவேளைகள் விடப்படும்..
படம் அறுந்து போவதால்.
அங்கே அதிசயமாக நல்லவிதமாக முழுசாய்ப்
பார்த்த படம் "தூக்கு தூக்கி".
பழைய பாடல்களே மூன்று
நிமிஷத்தில் முடிந்து விடுபவை. மோசமான பிரிண்டுகளாயிருந்தால், அந்த
ஒரு பாடலிலேயே முந்நூறு
வெட்டு விழும்.
இந்தப் பாடல் திரையில் வந்த
போதும், ஒரு ஓரத்தில் மின்னல் போல் வெட்டத் துவங்கிற்று.
புள்ளிப் புள்ளியாய் மழை போல,
நட்சத்திரங்கள் போல பாடல்
காட்சி முழுதும் படம் அறுந்து
விடுவதற்கான அபாய அறிவிப்புகள் நிறைய இருந்தாலும், தெய்வாதீனமாக
அறுந்து போகவில்லை.
"கண் வழி புகுந்து
கருத்தினில் கலந்த
மின்னொளியே ஏன் மௌனம்?"
அய்யா மருதகாசியின் பாடல்
வரிகளில் மட்டும் கேள்வி இல்லை.
இசை மாமேதை ஜி.ராமநாதன் அவர்கள் அமைத்த இந்த மெட்டே ஒரு கேள்வி போல்
இருப்பதை உணர்ந்தேன்.
பாடல் பிடித்துப் போயிற்று.
அந்தப்புர நந்தவனத்தில் அன்பு
மனைவியைக் கொஞ்சிப்
பாடும் அழகுப் பேருருவமாய்
நம் நடிகர் திலகம்.
நடையிலும், பாடும் பாணியிலும் புன்னகைப்பதிலும், கரும்பு, குறும்பு என மனையாளைக்
கொஞ்சி விளையாடுவதிலும்,
அமுதமெனத் தான் எண்ணியிருக்கும் இவள்
விஷம் என்பதறியாத அந்த
அப்பழுக்கற்ற முகம் அழகு
பாவங்கள் காட்டுவதிலும்
லயிக்காதிருப்ப்வனை அந்தப்
பாடலின் இரண்டாம் வரியே
கேலி செய்கிறது..
"வேறெதிலே உந்தன் கவனம்?
வேறெதிலே உந்தன் கவனம்?"
https://youtu.be/hadECUynFsE
அன்பு-
இந்தப் பாடலின்
ஆதார ராகம்.
பரிவு-
பாடலின் மொழி.
உள்ளம் புகும் பாட்டு
வெளிக் கொணரும்
உருக்கம்-
பாடலின் தாளம்.
நிமிர்த்தி வைத்த
துப்பாக்கி போல
கம்பீரமாயிருந்த கணவன்,
நேசமிகு மனைவியின்
நலிவு கண்டு
நனைத்த துணியாய்த்
தளர்கிறான்.
குடும்பம் விளங்க
வளைய வந்தவள்,
கை ,கால் விளங்காமல்
திண்டாடும் நிலை கண்டு
துயருறுகிறான்.
கலைந்த கூந்தல்
காணப் பொறுக்காமல்,
வாரி, பொட்டிட்டுப்,பூச்சூடி
பணிவிடை புரிகிறான்.
கணவனின் முகஞ்சுளியாப்
பணிவிடைக்குக் கூசிக் குறுகும் நடிப்பில் புன்னகை அரசியின் திறமை ராஜாங்கம்
விரிகிறது.
கடமையில் விறைத்த
மனசுக்குள்ளிருக்கும் கனிவு அத்தனையும் வெளிப்படுத்தும்
நம் நடிகர் திலகத்தின்
கண்களுக்கு,
இயற்றி,இசை தந்து,
பாடவெல்லாம் தெரிகிறது.
ஆணென்கிற மமதை கொண்டு
பெண்ணை இம்சிக்கிறவர்களுக்காக,
இந்தப் பாட்டு ரகசிய சாட்டை
வைத்திருக்கிறது.
அவர்களை..
இந்தப் பாட்டு, அடிக்கும்.
அன்பான ஆண்களுக்கும்,
கனிவு மிகுந்த பெண்களுக்கும் என்றும் இந்தப் பாட்டு...
பிடிக்கும்.
https://youtu.be/9XIGbiMx0ck
அக்டோபர் 1 ம்தேதிவர முடிந்தால்சந்திக்கிறேன்சார்
Delete
நண்பர்களே,
கடைசி பதிவு போட்டுவிட்டு ஒதுங்கி இருந்தேன். வேலை நிமித்தம் அலைச்சல். வியட்நாம் கோபால்,இந்தோனேசிய கோபால் ஆகி விட்டேன்.
திரியில் மோசமாக நடிகர்திலகத்தை பற்றி அவதூறு பரப்பி ,பொய் சொல்லி திரியும் கலைவேந்தன் ,எஸ்.வீ ஆகியோரின் முகமூடி கிழிக்க பட்டே ஆக வேண்டும் ,கலைவேந்தனை வனவாசம் அனுப்பும் பொன்னான வாய்ப்பு வந்து விட்டது.
நடிகர்திலகம் திரி பாகம்-9 ,தேதி 9 ஏப்ரல் 2012 இல் பக்கம் 269இல் பதிவு எண் 2688 இல் என் பதிவையும் , அதற்கு பம்மலாரின் திருத்தமாக 10 ஏப்ரல் 2012 பக்கம் 270 பதிவு எண் 2699 இல் வந்த விஷயத்தையும் பாருங்கள்.
பம்மலார் ,விஷயங்களை புரட்டி பேசும் வழக்கம் கொண்டவரல்ல.
நான் இதற்கும் மேல் விளக்க அவசியமில்லை.
நன்றி.
பம்மலார் அவர்களுக்கு ,என் முன்கூட்டிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். மீண்டும் அக்டோபர் ஒன்றில் நடிகர்திலகம் ஜெயந்தி கொண்டாட்டத்தில் சந்திக்கலாம்.இனி திரியில் சந்திக்கவே வாய்ப்பில்லாத கலை வேந்தனுக்கு எனது பிரியா விடைகளை தெரிவித்து கொள்கிறேன்.
இனிய நண்பர் திரு கோபால் அவர்களுக்கு
நீண்ட நாட்களுக்கு பிறகு வருகை தந்திருக்கும் உங்களுக்கு வணக்கங்கள் !
வருக...வருக..என்று வரவேற்கிறோம்.
அக்டோபர் 1 சிவாஜி ஜெயந்தி - அனைத்து நடிகர் திலகம் ரசிகர்களின் வழிபாட்டு திருத்தலமான திரு முரளி ஸ்ரீநிவாஸ் அவர்கள் கூறுவது போல "நம்முடைய தென்னாட்டின் மெக்கா" அன்னை இல்லம் மற்றும் சாந்தி வளாகத்தில் சந்திக்க வாய்பிருக்கும் என்று நம்புகிறேன்.
விநாயக சதுர்த்தி நாளை - நம்முடைய தெய்வத்தின் பெயரே கணேச மூர்த்தி ஆஹா என்ன பொருத்தம் ...! நல்ல விஷயங்கள் தொடங்குவதற்கு முன் கணபதி ஹோமம் செய்வது வழக்கம் அல்லது விநாயக பூஜை செய்வது நிலவில் உள்ள ஒன்று.
திரை துறையை பொருத்தவரை நடிப்பு என்ற ஒரு கலைக்கு முதல் முதல் வித்தாக வந்தவர் வழிகாட்டியாக வந்தவர் நம்முடைய மூலவர் கணேச மூர்த்தி என்பது உலகமே ஒப்புக்கொண்டுள்ள விஷயம். நடிப்பு மட்டும் அல்லாமல் ஒரு வசனத்தை எப்படி ஏற்ற இறக்கத்துடன் பேசுவது, தமிழை வலிமையுடன் எப்படி நாடி நரம்புகளில் முறுக்குற செய்வது என்பது போன்ற பல வித்தைகளை தத்ரூபமாக உணர்த்தியவர் உணர்த்திகொண்டிருப்பவர்...உணர்த்தபோகிறவர் நம்முடை கணேச மூர்த்தி மட்டுமே !
இந்த விநாயக சதுர்த்தி நன்னாளில் அனைவரும் நம்முடைய விநாயக பெருமான் கணேச மூர்த்தியின் அருள் பெற்று சர்வ சௌகர்யங்களையும் பெற்று பேரு வாழ்வு வாழ நம் தெய்வம் கணேச மூர்த்தியாரை வேண்டுகிறேன் !
யார் எப்படி பொய் பேசினாலும் ...விழுந்த இடத்தில் இருந்துகொண்டே புரண்டாலும்...பொய் பொய் தானே தவிர மெய் கிடையாது என்பது உலக நடுநிலயாலர்களுக்கு தெரியும்.
எப்படி நடிகர்திலகத்தை பற்றி ...கழித்து....களித்து........திரித்து ...மறைத்து...மறுத்து ......சரித்து ...விரித்து...மரித்து யார் எழுதினாலும் உண்மையை நாம் உரிய விதத்தில் உரித்து எழுதினால் பொய் என்பது பல்லை இளித்து ...புளித்து ...போய்விடும் !
Rks