http://i59.tinypic.com/op4k5i.jpg
Printable View
நான் செத்துப் பொழச்சவன்டா !
எமனை பார்த்து சிரிச்சவன்டா !
ஹா ஹா ஹா ஹா ...
நான் செத்துப் பொழச்சவன்டா !
எமனை பார்த்து சிரிச்சவன்டா !
வாழைப்போல வெட்ட வெட்ட முளைச்சு
சங்கு போல சுடச் சுட வெளுத்து
வளரும் ஜாதியடா
வந்தால் தெரியும் சேதியடா
நான் செத்துப் பொழச்சவன்டா !
எமனை பார்த்து சிரிச்சவன்டா!
சிலுவையில் ஏசு மறைஞ்சாரு
மக்கள் சித்தமெல்லாம் வந்து நிறைஞ்சாரு ...
சிலுவையில் ஏசு மறைஞ்சாரு
மக்கள் சித்தமெல்லாம் வந்து நிறைஞ்சாரு
குண்டுகள் போட்டு துளைச்சாங்க
ஆனா காந்தியும் லிங்கனும் நிலைச்சாங்க
சந்தன பெட்டியில் உறங்குகிறார்
அண்ணா ..அண்ணா ..
சந்தன பெட்டியில் உறங்குகிறார் அண்ணா
சரித்திர புகழுடன் விளங்குகிறார்
எதையும் தாங்கும் இதயம் கொண்டு
அண்ணன் எங்களை வாழ்ந்திட சொன்னதுண்டு
அண்ணன் அன்று நல்ல நல்ல கருத்து
அழகு தமிழில் சொல்லி சொல்லி கொடுத்து
வளர்ந்த பிள்ளையடா அதனால் தோல்வி இல்லையடா
நான் செத்துப் பொழச்சவன்டா !
எமனை பார்த்து சிரிச்சவன்டா !
ஓடும் ரயிலை இடைமறித்து
அதன் பாதையில் தனது தலை வைத்து ...
ஓடும் ரயிலை இடைமறித்து
அதன் பாதையில் தனது தலை வைத்து
உயிரையும் துரும்பாய் தான் மதித்து
தமிழ் பெயரை காத்த கூட்டம் இது
பரம்பரை ரத்தம் உடம்பில தான்
அது முறுக்கேறி கிடப்பது நரம்பில தான்
பரம்பரை ரத்தம் உடம்பில தான்
அது முறுக்கேறி கிடப்பது நரம்பில தான்
கொடுப்பதை கொடுத்தா தெரியுமடா
உன் இடுப்பையும் ஒடிச்சா புரியுமடா
காலம்தோறும் குட்டக் குட்ட குனிஞ்சி
கொடுமைக்கெல்லாம் கட்டுப்பட்டு கிடந்து
நிமிர்ந்த கூட்டமடா
எதிர்த்தால் வாலை நறுக்குமடா
நான் செத்துப் பொழச்சவன்டா
எமனை பார்த்து சிரிச்சவன்டா
நான் செத்துப் பொழச்சவன்டா !
செத்துப் பொழச்சவன்டா !
செத்துப் பொழச்சவன்டா !
செத்துப் பொழச்சவன்டா !
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களின் ''power '' என்ன என்பதை நன்கு அறிந்தவர் பேரறிஞர் அண்ணா .
1966 சென்னை விருகம்பாக்கம் திமுக மாநாட்டில் அண்ணா அவர்கள் ''தம்பி உன் முகத்தை காட்டு .எனக்கு வாக்குகள் கிடைக்கும்'' என்று மனம் திறந்து பாராட்டினார் .1967 தேர்தலில் மக்கள் திலகம் எம்ஜிஆர் குண்டடி பட்ட பின் எடுத்த அவரின் நிழற்படம் 234 தொகுதிகளிலும் ஒட்டப்பட்டது . வெற்றி கனியும் பறிக்கப்பட்டது .
1969ல் மக்கள் திலகத்தின் அரசியல் சக்தியை உணர்ந்தவர்கள் 1972ல் உணர முடியாமல் போனதில் ஒரு விதத்தில்
எம்ஜிஆர் ரசிகர்களுக்கும் , தமிழகத்திற்கும் கிடைத்த பெரும் பாக்கியம். உணராமல் போனதின் விளைவு நம் புரட்சி நடிகர் எம்ஜிஆர் ''புரட்சித்தலைவர் எம்ஜிஆர் '' என்ற நிலைக்கு உயர்த் தபட்டார் .தமிழக முதல்வராக தொடர்ந்து 11 ஆண்டுகள் ஆட்சி செய்தார் .இந்திய அரசியல் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தார் . உலக அரங்கில் இன்றளவும் மக்கள் மனங்களில் தினமும் அவருடைய பெயரை உச்சரிக்கும் பெருமையும் பெற்றார் .''பாரத ரத்னா'' புகழும் , பாரத் பட்டமும் நம் மக்கள் திலகத்திற்கு கிடைத்தாலும் எம்ஜிஆர் என்ற மூன்றெழுத்து மந்திர சொல் மகிமை இன்னும் நூறாண்டு காலம் மேல் நிலைத்து நிற்கும் என்பதில் சந்தேகமே இல்லை .
மாபெரும் சபையினில் நீ நடந்தால் -
உனக்கு மாலைகள் விழவேண்டும் -
ஒரு மாசு குறையாத மன்னவன் இவனென்று
போற்றிப் புகழ வேண்டும்
மக்கள் திலகத்திற்கு இந்த புகழ் வரிகள் சாத்தியமாயிற்று
கோட்டையிலே நமது கொடி பறந்திட வேண்டும்
கொள்கை வீரர் தியாகங்களை ஏற்றிட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பொதுவுடமை சமுதாயம் மலர்ந்திட வேண்டும்
புரட்சியிலே சரித்திரத்தை மாற்றிட வேண்டும்
பாடினார் . பாடியதை நிறைவேற்றி காட்டினார் எம்ஜிஆர் .
நான் உங்கள் வீட்டுப் பிள்ளை
இது ஊர் அறிந்த உண்மை
நான் செல்லுகின்ற பாதை
பேரறிஞர் காட்டும் பாதை
அன்றும் இன்றும் என்றும் .. ,,,,
மன்னராட்சி காத்து நின்றதெங்கள் கைகளே
மக்களாட்சி காணச் செய்ததெங்கள் நெஞ்சமே
எங்கள் ஆட்சி என்றும் வாழும் இந்த மண்ணிலே
Excellent mr. Vinoth sir, your writings about makkalthilagam MGR., - Absolutely Fact...
Welcome mr. Saravanan, puducherry--- Kindly write about a lot of messages- history about Our Makkalthilagam MGR... Only Emperor of Universe- Cinema Fields...
Our Makkalthilagam thread hubbers... kindly register rare photos & documents of ponmanachemmal- regarding a lot... kindly consider dear friends (puratchinadigar followers, wellwishers )
மக்கள் திலகத்தின் ''நீரும் நெருப்பும் '' 45 வது ஆண்டு துவக்கம் . 18.10.2015.
மக்கள் திலகத்தின் மாறு பட்ட இரட்டை வேடங்களில் மிக சிறப்பாக நடித்து ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை அடித்த படம் ..மக்கள திலகம் vs மக்கள் திலகம் பிரமாண்டமான சண்டை காட்சி , மக்கள் திலகம் -அசோகன் -மோதும் சண்டை காட்சிகள் மிகவும் அற்புதம். இன்று படம் பார்த்தாலும் புத்தம் புது படம் போல் ரசித்து , மகிழ்ந்து பார்க்கும் படம் நீரும் நெருப்பும் .
மக்கள் திலகத்தின் ;;நீரும்நெருப்பும் '' - 18.10.1971
நீரும் நெருப்பும் படத்தின் மூலப்படமான அபூர்வ சகோதரர்கள் படத்தில் கதாநாயகனாக நடித்த திரு எம் கே ராதா
அவர்களின் ''நீரும் நெருப்பும் '' படத்தின் விமர்சனம் .
பல ஆண்டுகளுக்கு முன், நான் நடித்து வெளியான ஜெமினியின் ‘அபூர்வ சகோதரர்கள்’ கதை, இன்று ‘நீரும் நெருப்பும்’ என்ற வண்ணப்படமாக வெளிவந்திருக்கிறது.
முந்தைய படத்தில் நடித்த நடிகன் என்ற முறையிலோ அல்லது ஒரு விமர்சகன் என்ற நோக்கிலோ நான் இப்படத்தைப் பற்றிக் கருத்து கூறவில்லை. ஒரு ரசிகன் என்ற முறையிலேயே இதை எழுதுகிறேன்.
‘அபூர்வ சகோதரர்கள்’, ‘நீரும் நெருப்பும்’ ஆகிய இரு படங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. இரண்டுமே அந்தந்தக் காலச் சூழ்நிலைக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டு வெற்றி பெற்றிருப்பவை.
இந்த வெற்றிக்கு முதல் காரணம் கதைதான். எந்தக் காலத்திலும் எல்லோராலும் ரசிக்கத்தக்க அருமையான கதை இது. விறுவிறுப்பான சம்பவங்களோடு, ஒருவர் உணர்ச்சியை மற்றவரும் சேர்ந்து அனுபவிக்கும் விசித்திரமான இரட்டைச் சகோதரர்களின் மனத்தில் பொங்கும் புயல்தான் கதைக்கு ஜீவநாடி.
‘அபூர்வ சகோதரர்கள்’ படம் கறுப்பு வெள்ளையில், அக்கால கட்டுப்பாட்டுக்கேற்ப 11,000 அடி அளவுக்குத் தயாரிக்கப்பட்டது.
‘நீரும் நெருப்பும்’ படம் தேவையான பொழுதுபோக்கு அம்சங்களோடு, வண்ணத்தில், பிரமாண்டமான காட்சி அமைப்புகளோடு கம்பீரமாகவும் விறுவிறுப்பு குன்றாமலும் தயாரிக்கப்பட்டிருக்கிறது.
பழைய படத்தில் நான் சிரமப்பட்டு நடித்திருப்பதைப் போல், இப்படத்திலும் திரு. எம்.ஜி.ஆர். கடுமையாக உழைத்து சிறப்பாக நடித்திருக்கிறார். தம்பியின் (கரிகாலன்) பாத்திரத்தில் அவர் நடிப்பு அற்புதமாக அமைந்திருக்கிறது.
தனது உள்ளத்துப் புயலைக் குமுறலோடு வெளிப்படுத்தும் சந்தர்ப்பங்களில் அவருடைய நடிப்பின் சிறப்பு சுடர் விடுகி றது. அண்ணன் அடிபடும்போது சிரித்துக்கொண்டே துடிக்கும் இடமும், முடிவில் அடிபட்டு விழுந்திருக்கும்போது அண்ணன் சண்டை போடுவதை ரசிக்கும் காட்சியும் அருமை. சீன வியாபாரி பிரமாதம்.
திருமதி பானுமதி ஏற்ற பாத்திரத்தை இன்னொரு நடிகை ஏற்று நடிப்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் ஜெயலலிதாவும் பாராட்டும்படி நடித்திருக்கிறார். அவருடைய விளையாட்டும் துள்ளலும் நல்ல கலகலப்பைத் தருகின்றன. ‘லட்டு லட்டு’ எனப் பாடி ஆடும் திருமதி பானுமதியின் பிரசித்தி பெற்ற காட்சியில் ஜெயலலிதாவும் சிரமப்பட்டு செய்திருக்கிறார். என்றாலும், எனக்கென்னவோ ‘லட்டு லட்டு’ பாடலின் இனிமை இந்தப் பாட்டில் இல்லை என்றே தோன்றுகிறது. அது பானுமதியின் குரல் மகிமையாகவும் இருக்கலாம்!
மார்த்தாண்டம் பாத்திரத்தை அசோகன் நகைச்சுவை கலந்து செய்திருக்கிறார். டி.கே.பகவதியும், மருதுவாக வரும் மனோகரும், மேக்கப்காரராக வரும் தேங்காய் சீனிவாசனும் நன்றாக நடித்திருக்கிறார்கள்.
ப.நீலகண்டன் அவர்களின் டைரக்ஷன் சிறப்பு பல இடங்களில் மின்னுகிறது.
மனோரமாவின் கொங்கு நாட்டுத் தமிழ் ஒரு சுவாரசியம்.
பாடல்களை என்னால் பிரமாதமாகச் சொல்ல முடியவில்லை என்றாலும், எம்.எஸ்.விசுவநாதனின் ரீரிகார்டிங் மிகச் சிறப்பாக இருக்கிறது.பொதுவாக, தரமான கதையும், பொழுதுபோக்கு அம்சங்களும் இணைந்திருப்பதில்லை. இந்தப் படத்தில் அவை இணைந்திருக்கின்றன. அதுவே படத்தின் சிறப்பு!
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் இரண்டு வேடங்களில் தூள் கிளப்பிய நீரும் நெருப்பும் -மறக்க முடியாத திரைப்படம் .தொழில் நுட்பம் வளராத காலத்தில் மக்கள் திலகம் vs மக்கள் திலகம் மோதும் சண்டைகாட்சியில் ஒளிப்பதிவும் , மெல்லிசை மன்னரின் இசையும் பிரமிக்க வைத்தது .
மக்கள் திலகத்தை [மணி வண்ணன் ]அசோகன் சாட்டையால் அடிக்கும் போது கரிகாலன் வலி தாங்காமல் துடி துடித்து சிறிது கொண்டேஅழுகின்ற காட்சியிலும் , மருத்துவர் டி .கே .பகவதியிடம் தனக்கு உண்டானஉணர்சிகளின் தாக்கத்தை எடுத்து கூறி நடிக்கும் காட்சியிலும் , காதல் உணர்வால் ஜெயலலிதாவிடம்கரிகாலன் பேசும் காட்சியிலும் , மரணத்தருவாயில் தன்னுடைய அண்ணன் மணிவண்ணன் அசோகனிடம் மோதும் காட்சியை ரசித்து பார்க்கும் காட்சியிலும் மக்கள் திலகம் எம்ஜிஆர் பிரமாதமாக நடித்திருந்தார்.இறுதி காட்சியில் மக்கள் திலகத்தின் முடிவை ரசிகர்கள் ஏற்று கொள்ள வில்லை .ஒரு வேளை முடிவை வேறு மாதிரியாக அமைத்திருந்தால் படம் இன்னொரு ''குடியிருந்த கோயில் '' படமாக மாபெரும் வெற்றி படமாக அமைந்திருக்கும் என்பது என் கருத்து .
அட.. நம் மணிவண்ணனை பற்றி சொல்ல மறந்து விட்டேனே
என்ன ஒரு அழகு .கவர்ச்சி .சுறுசுறுப்பு ,...தனது தம்பியை முதன் முதலில் சந்திக்கும் காட்சியில்
என்ன ஒரு தேஜஸ் பார்வை ... இந்த நேரத்தில் வினோத் சார் பதிவிட்ட வீடியோ காட்சிக்கு நன்றி
சிரித்து கொண்டே எதிரிகளிடம் போடும் வாள் சண்டைகள் ...[ஏன் தன்னுடய தம்பி கரிகாலனுடன்
கூட ....] அபாரம் .உலகளவில் சிரித்து கொண்டே சண்டை போட்ட ஜாக்கி சான் அவர்களுக்கு முன்னோடி நம் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது ]
காதல் காட்சிகளில் மக்கள் திலகம் வெளுத்து கட்டியுள்ளார் .
கன்னி ஒருத்தி மடியில் ..பாடல் இனிமை ..இளமை ..புதுமை .
மாலை நேர தென்றல் ..கனவு பாடல் ..கண்ணுக்கு விருந்து .
மக்கள் திலகத்தின் வித்தியாசமான நடிப்பு .
படம் முழுவதும் பிரமாண்டம் .
மெல்லிசை மன்னரின் அட்டகாசமான இசை .
சிறப்பான ஒளிப்பதிவு .
ப. நீலகண்டனின் சிறப்பான இயக்கம் .
மொத்தத்தில் நீரும் நெருப்பும் - மக்கள் திலகத்தின் மகுடத்தில் ஒரு வைர கிரீடம் .
courtesy - கலைவேந்தன்
நுட்பமான நடிப்பு
அரச கட்டளை படத்தில் பெருங்கோபத்துடன் தன்னைத் தாக்க வரும் நம்பியாரிடம் சண்டை போடுவதற்கு முன் தனக்கே உரிய நம்பிக்கைப் புன்னகையுடன் அலட்டிக்கொள்லாமல் எம்.ஜி.ஆர். பேசும் விதம் அவரது நிதானமான, அழுத்தமான நடிப்பைப் பறைசாற்றும். நம்பியாரின் வாள் எம்.ஜி.ஆரின் மார்புக்கு அருகே நீண்டிருக்கும். “உன் உயிரைப் பறிப்பேன்” என்று கண்களை உருட்டி நம்பியார் மிரட்டுவார். அப்போதும் அதே புன்னகையுடன் “செடியில் பூத்த மலரல்ல பெரியவரே என் உயிர்...” என்று சொல்லிச் சிறிய இடைவெளி விடுவார். புன்னகை மறையும். முகம் சற்றே தீவிரம் கொள்ளும். “... நீங்கள் நினைத்தவுடன் கை நீட்டிப் பறிப்பதற்கு” என்பார். அப்போது கை உடைவாளைப் பற்றியிருக்கும். அதன் பிறகு வாய்ப்பேச்சுக்கு வேலை இருக்காது. ‘மகாதேவி’ படத்தில் தன் தளபதி வீரப்பாவின் நிஜ முகம் தெரியும் கணத்தில் எம்.ஜி.ஆர். தன் கண்களின் சலனத்தில் அந்த பிரக்ஞையை வெளிப்படுத்துவார். எம்.ஜி.ஆரின் நுட்பமான நடிப்பு வெளிப்படும் இடங்கள் இவை.
வில்லன்களைவிடக் குறைந்த பணபலம் கொண்டவர் என்றாலும் மக்களின் அன்பும், விதவைத் தாயின் ஆசீர்வாதமும் தனது பலம் என்று துணிச்சலாகச் செயல்படும் பாத்திரங்கள் பெரும்பாலும் அவருக்கு அமைந்தன. அந்தத் துணிச்சலுடன் பதற்றம் எதுவுமில்லாமல் வில்லன்களிடம் நம்பிக்கைப் புன்னகையுடன் அவர் பேசும் வசனங்கள் அவரது அரசியல் செல்வாக்குக்கே அடித்தளமாக அமைந்தன. அந்தக் காட்சிகளில் அவர் தனது எல்லையைத் தாண்டி ஆர்ப்பாட்டமாகப் பேசமாட்டார். “நாகப்பா..நல்லா கேட்டுக்க! உன் அக்கிரமங்கள நா ஒரு நாளும் பொறுத்துக்க மாட்டேன்” என்பதுதான் வில்லன்களுக்கான அவரது அதிகபட்ச எச்சரிக்கை. அதன் பின்னர் அவர் வீணாகப் பேசிக்கொண்டிருக்க மாட்டார். வீர வசனங்களை அவரது கைதான் பேசும். சண்டைக் காட்சிகளில் வேகமும் கோபமும் அற்புதமாக வெளிப்பட்டுவிடும்.
Article from the hindu
மன்னாதி மன்னன் படத்தில் தலைவரின் நுணுக்கமான நடிப்புக்கு ஒரே ஒரு சான்று கூறுகிறேன். நாம் சில நேரங்களில் கேட்கும் பாடல்கள் நம் மனதை ஈர்ப்பதன் காரணமாக, நாள் முழுவதும் அந்தப் பாடல் வரிகளை நம்மையறியாமல் நமது வாய் முணுமுணுத்துக் கொண்டே இருக்கும். அந்த அளவுக்கு நம் செவியில் நுழைந்த பாடல் சிந்தையை நிறைத்திருக்கும். இதை ஆங்கிலத்தில் earworm என்று சொல்வார்கள்.
‘ஆடாத மனமும் உண்டோ’ பாடல் காட்சி முடிந்ததும் அடுத்து வரும் காட்சியின் போது, தலைவர், ஆடாத மனமும் உண்டோ என்று சன்னமான குரலில் பாடியபடியே வருவார். இதன் மூலம் அந்தப் பாடல் அந்த கதாபாத்திரத்தை எப்படி ஈர்த்துள்ளது என்பதை மனோதத்துவ ரீதியாக அருமையாக காட்டியிருப்பார் தலைவர்.
இனி மீள்பதிவு:
‘ஆடாத மனமும் உண்டோ?’
நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் சார்பில் நமது மன்னவர் நடித்து 1960 ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைக் காவியம் மன்னாதி மன்னன். அந்த படத்தில் இடம் பெற்ற ஆடாத மனமும் உண்டோ பாடல் என் இதயத்தை வருடும் பாடல்களில் ஒன்றுதான், என்றாலும் கூட இந்த பாடலைப் பற்றி இப்போது விவரிக்க வேண்டிய இனிய அனுபவம் சமீபத்தில் ஏற்பட்டது. அதைப் பின்னர் கூறுகிறேன்.
கந்தர்வ கானக் குரலோன் டி.எம்.எஸ்.,மறைந்த இசை மேதை எம்.எல்.வசந்த குமாரி (இவர் நடிகை ஸ்ரீ வித்யாவின் தாயார், கர்நாடக இசைப்பாடகி சுதா ரகுநாதனின் குரு) ஆகியோரின் இனிய குரல்களில் கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாக கொண்டு மெல்லிசை மன்னர்களின் இசைப் பின்னணியில் லதாங்கி ராகத்தில் அமைந்த இந்தப் பாடலும் தலைவரின் அற்புத நடிப்பும் பத்மினியின் நாட்டியமும் நம்மை புதிய உலகிற்கே அழைத்துச் செல்லும்.
‘‘நாடெங்கும் கொண்டாடும் புகழ் பாதையில்
வீர நடைபோடும் திருமேனி தரும் போதையில்..’’
‘‘ஈடேதும் இல்லாத கலைச் சேவையில்
தனி இடம் கொண்ட உமைக் கண்டு இப்பூமியில்..’’
என்று தலைவருக்கென்றே வார்த்தெடுக்கப்பட்ட வைர வரிகள். ‘பசுந்தங்கம் உமது எழில் அங்கம்’ என்று வரும் வரிகளில் ப‘சு’ந்தங்கம் என்பதை வசந்த குமாரி அவர்கள் ப‘ஷு’ந்தங்கம் என்று உச்சரிப்பது சற்று உறுத்தலாக இருந்தாலும் அவரது இழையும் இனிய குரல் அற்புதம்.
கர்நாடக சங்கீதத்தை அடிப்படையாக கொண்டு அமைந்த இப்பாடலில் இசை ஞானத்தின் நுணுக்கங்களை தனது அருமையான நடிப்பின் மூலம் தலைவர் வெளிப்படுத்தும் விதம் அபாரம். பாடலின் ஸ்ருதியின் ஏற்ற இறக்கங்களை ஒழுங்குபடுத்தும் கரணை (மிருதங்கத்தில் பாதியை நிமிர்த்தி வைத்தாற்போல் இருக்கும் தோல் வாத்தியம். இதன் பக்கத்திலேயே அதிலும் பாதியாக சிறியதாக வைத்துக் கொண்டு கலைஞர்கள் வாசிக்கும் வாத்தியத்தின் பெயர் டங்கா, இரண்டும் சேர்ந்ததது தபலா) வாத்தியத்தை அவர் கையாளும் விதம். தாளத்துக்கேற்றபடி 7 கரணைகளை வரிசையாக அவர் வாசிக்கும் காட்சி அற்புதம். ஒரு நொடி தவறினாலும் கரணையில் கை இடம் மாறி விழுந்து தாளம் தவறி விடும். (ரெக்கார்டிங்கில் பதிவானதுதான் ஒலியாக கேட்கும் என்றாலும் கை இடம் மாறி விழுவது முரணாகத் தோன்றும். ஆடாத மனமும் உண்டோ பாடலுக்கு நான் ஆணையிட்டால் என்று வாயசைத்தால், பாடல் அதேதான் ஒலிக்கும் என்றாலும் எப்படி காட்சியில் முரணாகத் தோன்றுமோ அப்படி).
http://i1273.photobucket.com/albums/...ps303fb987.jpg
கரணையில் 7 ஸ்ருதிக்கேற்ப தாளங்களை வாசித்து விட்டு கடைசி கரணையில் தாளம் முடிந்ததும் வலது கையை இடது தோள்பட்டைக்கு அருகே உயர்த்தும் ஸ்டைலே தனி. கரணையை வாசித்து முடித்ததும் ‘ஷாட்’டை கட் செய்யாமல் ‘வாடாத மலர் போலும் விழிப்பார்வையில்....’ என்று தொடங்கும் பாடல் வரிகளை சரியான நேரத்தில் தொடங்கியிருப்பார். என்ன ஒரு timing sense. அதோடும் விடவில்லை. வாடாத மலர் போலும் வரிகளை பாடிக் கொண்டே, நட்டுவாங்க தாளத்துக்கு பயன்படுத்தும் சிறிய ஜால்ராவையும் கையில் எடுத்துக் கொண்டு தாளம் போடுவார். அதை பட்டும் படாமல் தேவையான ஒலி அளவுக்கேற்ப தேய்த்து வாசிக்கும் அழகே அழகு.
அடுத்து, ‘இதழ் கொஞ்சும் கனியமுதை மிஞ்சும், குரலில் குயில் அஞ்சும் உனைக் காணவே என்ற வரிகளில், கடைசி எழுத்தான ‘வே’யின் நீட்சியாக வரும் ஏ..ஏ... என்பதில் வரும் முதல் ‘ஏ’ கா (ga)ரம் ஆரோகணத்திலும், அதாவது சற்று மேல் ஸ்தாயியிலும் இரண்டாவது ‘ஏ’ காரம் அவரோகணத்திலும் அதாவது சற்று கீழ் ஸ்தாயியிலும் இருக்கும். அதற்கேற்ப குரல் உயரும்போது தலையை லேசாக உயர்த்தியும் குரல் தாழும்போது தலையை கீழிறக்கியும் சிரித்தபடியே அலட்டிக் கொள்ளாமல் அனாயசமாக பாடுவார். உச்ச ஸ்தாயியில் பாடினால் தலையை உயர்த்திபடியும் கீழ் ஸ்தாயியில் பாடும்போது தலையை சற்று தாழ்த்தியபடியும்தான் பாட முடியும் இதை நுணுக்கமாக வெளிப்படுத்தியிருப்பார். பொதுவாகவே அந்தக் காலத்து நாடக நடிகர்களுக்கு நாடக கம்பெனியில் இசைப் பயிற்சியும் அளிக்கபடும். அப்போது பெற்ற இசைப் பயிற்சியாலும் அதோடு கூட தனக்கே உரிய இசை ஞானத்தாலும் (அதனால்தான் அவரது படங்களுக்கு அவர் ஓ.கே. செய்து தேர்ந்தெடுத்த பாடல்கள் காலம் கடந்தும் நிற்கின்றன) இசை நுணுக்கங்களை அற்புதமாக நடிப்பில் காட்டியிருப்பார்.
அடுத்து, புல்லாங்குழலை அவர் வாசிக்கும் விதமே அலாதி. குழலின் இசைக்கேற்ப அளவாக உதடு குவித்து அதன் ஸ்வர ஏற்ற இறக்கங்களையொட்டி குழலின் துளைகளில் அவரது விரல்கள் சரியாக விளையாடும் பாங்கினூடே, காந்தக் கண்களில் சிரிப்பு வழியும். வெறும் நடிகராக மட்டும் இருந்தால் இவற்றை செய்வதே பெரிய விஷயம். ஆனால் இவை எல்லாவற்றுக்கும் மேலாக சிறந்த சங்கீத வித்வான் எப்படி செய்வாரோ அதைப்போல பாட்டின் தாளத்துக்கேற்றபடி லயத்துடன் அவரது வலது கால் பாதம் தரையில் தாளமிடும். தலைவரின் முன்னே கரணைகள் வைக்கப்பட்டிருக்கும் மேஜைக்கு கீழே கால் தாளமிடுவதைக் காணலாம். இசை நுணுக்கம் தெரிந்து ரசித்து ஒன்றுபவர்தான் இப்படி தாளமிட முடியும். கவனிக்காத அன்பர்கள் யூ டியூப்பில் பாடல் காட்சியை காணலாம். மொத்தத்தில் பாட்டு, கரணை, ஜால்ரா, புல்லாங்குழல், லயத்துக்கேற்ற தாளம் என்று தனி ஒருவனாக கச்சேரியையே நடத்தியிருப்பார் நம் தலைவர்.
சமீபத்தில் நள்ளிரவின் அமைதி. வெளியே மிதமான மழைத்தூறல், சிலுசிலுத்த குளிர் காற்று.வராண்டாவில் நாற்காலியை இழுத்துப் போட்டு மண்ணுக்கு விண்ணின் கொடையான மழையை ரசித்தபடி அமர்ந்திருக்க, தனியார் பண்பலை வானொலியில் தேவகானமாக ஒலித்தது ஆடாத மனமும் உண்டோ பாடல்.பாடலின் இனிமையுடன் ஒன்றி காட்சிகளையும் தலைவரின் எழில் முகத்தையும் அபார நடிப்பு திறமையையும் மனக்கண்ணால் ரசித்தபடி, கோப்பை தேநீரை சிறிதாக உறிஞ்சி நாவில் படரவிட்டு தொண்டைக்குழியில் இறக்கியபோது... சூழலின் சுகமும் பாடல் தந்த மயக்கமும் சேர ....... பிரம்மானந்தம்.. அந்த சுகானுபவத்தின் வெளிப்பாடே இந்த அலசல்.
எங்கே, எப்போது, யார் இந்தப் பாடலைக் கேட்டாலும்.... ஆடாத மனமும் உண்டோ?
மன்னாதி மன்னன்..... பேரழகில், நடிப்பில், நடனத்தில், இயக்கத்தில், படத் தொகுப்பில், வாதத் திறமையில், ஆட்சிக் கலையில் மட்டுமல்ல, உயர்ந்த இசை ஞானத்திலும்...
courtesy கலைவேந்தன்.
நீரும் நெருப்பும் படம் பற்றி ரவிபிரகாஷ் கூறுகிறார்….net...
’நீரும் நெருப்பும்’ படத்துக்கு வருவோம். தலைப்பே என்னைக் கவர்ந்தது. கதை, கதாநாயக நடிகர் என எதைப் பற்றியும் யோசிக்காமல், காளிதாஸ் முதல் நேற்றைக்கு வெளியான மாசிலாமணி வரைக்கும் வெறுமே சினிமா தலைப்புகளை மட்டுமே கொடுத்து எனக்குப் பிடித்த முதல் பத்து தலைப்புகளைப் பட்டியலிடச் சொன்னால், அந்த முதல் பத்தில் முதலாவதாக ’நீரும் நெருப்பும்’ இருக்கும். அது ஏன் என்றே தெரியவில்லை, எனக்கு அந்தத் தலைப்பு அத்தனைப் பிடிக்கும். அந்தத் தலைப்புக்காகவே அந்தப் படத்துக்கு நான் போனேன்.
படத்தின் கதை அந்த நேரத்தில் எனக்கு மிகப் புதுமையாகத் தெரிந்தது. அண்ணனை அடித்தால் தம்பிக்கு வலிக்கும் என்கிற சமாசாரமே வித்தியாசமாக இருந்தது. பிரமாதமான கலரில் படமாக்கப்பட்டு இருந்தது அந்தப் படம். எம்.ஜி.ஆருக்கு இரட்டை வேஷம். நன்றாகவே வித்தியாசம் காட்டி நடித்திருந்ததாக ஞாபகம். இதெல்லாவற்றையும்விட படத்தில் எனக்கு ரொம்பப் பிடித்திருந்த அம்சம், இரண்டு எம்.ஜி.ஆர்களும் ஒருவரோடொருவர் சண்டை போடும் காட்சி. படு த்ரில்லிங்காக இருந்தது. அதற்கு முன் இப்படியான டபுள் ஆக்ட் படம் எதையும் நான் பார்த்திருக்கவில்லை. எனவே, இரண்டு எம்.ஜி.ஆர். ஒரே காட்சியில் தோன்றியதே எனக்குப் புதுசாக இருந்ததென்றால், அவர்கள் ஒருவரோடொருவர் வாள் சண்டை வேறு ஆக்ரோஷமாகப் போட, ரொம்பவே ரசித்துப் பார்த்தேன். அந்தக் காட்சியில் எடிட்டிங் படு பிரமாதம்! இவர் வாளை வீச, சட்டென்று அவர் தலையைப் பின் வாங்க, அவர் கத்தி சுழற்ற, இவர் ஒதுங்கித் தப்பிக்க என இருவரையும் மாறி மாறி எடிட் செய்து காட்டுவது அத்தனை லேசான சமாசாரமில்லை. ஆனால், அந்த நேரத்தில் எனக்கு இந்த டெக்னிக் எதுவும் தெரியாது. என்றாலும், ‘அட, எப்படி ரெண்டு எம்.ஜி.ஆர். சண்டை போடுற மாதிரி எடுத்தாங்க?!’ என்று வியந்துகொண்டே படம் பார்த்தேன்.
அலெக்சாண்டர் டூமாஸ் எழுதிய ஆங்கிலக் கதையை, 1949-லேயே எஸ்.எஸ்.வாசன் அவர்கள், ‘அபூர்வ சகோதரர்கள்’ என்ற தலைப்பில் எம்.கே.ராதா (இரு வேடங்கள்), பானுமதி ஆகியோரைப் போட்டு, இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் திரைப்படமாக எடுத்து வெளியிட்டார். அதிலும் எம்.கே.ராதாவும் எம்.கே.ராதாவும் போடும் கத்திச் சண்டை படு பிரமாதம் என்பார்கள். நன்றாக ஓடிய படம் அது. அதைத்தான் 1971-ல் எம்.ஜி.ஆரை வைத்து ப.நீலகண்டன் டைரக்ட் செய்து வெளியிட்டார்.
திரு கோவிந்தராஜ் அவர்களுக்கு
தாங்கள் பதிவிட்டுள்ள மக்கள் திலகத்தின் புகைப்படங்களும்
அவரைப்பற்றிய அற்புத செய்திகளும் மிக மிக அருமை.
பாராட்டுக்கள்.
அன்புடன்...
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
மக்கள்திலகம் மணிவண்ணனாகவும், கரிகாலனாகவும் மக்கள், ரசிகர்கள் மனதில் வாழ்ந்த " நீரும் நெருப்பும் " காவியம் கவர்ந்து...முதல் வெளியீடு மட்டுமன்றி மறு, மறு வெளியீடுகளிலும் வசூலை அமோகமாக அறுவடை கண்டது... 1982- 1983 ஆண்டுகளில் மறுபடியும் புத்தம் புதிய ப்ரிண்டுகளில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா. இலங்கை - என பல இடங்களிலும் வெற்றி மழை பொழிந்த பொழுது மெகா சைஸ் போஸ்டர்களில் "பாமரர்களின் பரம பிதா" எம்.ஜி.ஆர்., என்று போடபட்டிருந்தது ... அந்நாட்களில் பொங்கல், தீபாவளி மற்றும் சாதா நாட்களிலும் திரும்ப, திரும்ப திரையிட பட்டு வந்தது பொற்காலமாகும்... அந்த நாட்கள் மீண்டும் வந்தால் எவ்வளவு மகிழ்ச்சி...