madhu: We will be there sometime next year (Aug-Sep), if my health permits long distance air travel. Hawaii is the longest air travel this year ! :) I hope the 'yeri' dries up by that time! :)
Printable View
From manidhan maravillai (1962)
kaadfhal yaathiraikku.......
http://www..youtube.com/watch?v=2gKnDPk8WHc
This song is for chinnakkaNNan who is searching for 'uyir' songs ! :lol:
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...bc&oe=56D69F8D
இன்று பிறந்த நாள் கொண்டாடும் வாணி ஜெயராாம் அவர்களுக்கு நமது உளமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள். இறைவன் அவருக்கு நீண்ட ஆயுளையும், நல்ல ஆரோக்கியத்தையும் தொடர்ந்த குரல் வளத்தையும் அளிக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறோம்.
அவர் பாடிய அனைத்துப் பாடல்களுமே நெஞ்சில் நிலைத்து விட்டவை. அபூர்வமான பாடலோடு அவர் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் மூழ்குவோம்.
அண்ணன் ஒரு கோயில் திரைப்படத்தில் மெல்லிசை மன்னரின் இசையில் வாணியின் மெஸ்மெரிஸக் குரலில் சூப்பர் ஹிட் பாடல்.
https://www.youtube.com/watch?v=cvEtTiOAgls
Courtesy: Tamil Hindu
பானுமதி: 7. எம்.ஜி.ஆர். - பானுமதி சண்ட!
வசூலை வாரிக் குவிப்பதில் வணிக ரீதியாக முன்னிலை வகித்தது எம்.ஜி.ஆர்.- பானுமதி ஜோடி. இருவரும் இணைந்து நடிப்பதாக, ஸ்வஸ்திக் பிலிம்ஸ் மருதுபாண்டியன், பவானி, ராஜா தேசிங்கு போன்ற புதிய படங்களின் அறிவிப்புகள், பத்திரிகைகளில் வெளியான வண்ணம் இருந்தன.
‘பானுமதியைத் தவிர எம்.ஜி.ஆருக்குப் பொருத்தமான ஜதை வேறு யாரும் இல்லை’ என்று சகலரும் நினைத்தார்கள்.
சொந்தப் படத் தயாரிப்பில் பானுமதி - எம்.ஜி.ஆர். நேரிடையாக மோதும் சூழ்நிலை ஏற்பட்டது. இருவருக்கும் இடையே ஏதும் பிரச்னையோ, மனக்கசப்போ வராமல் பானுமதி சாமர்த்தியமாகத் தடுத்தார். எம்.ஜி.ஆரிடம் நேரிடையாகப் பேசினார்.
அதைப் பற்றி ‘வாத்தியாரே’ எழுதியுள்ளவை -
‘சேலத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் ‘அலிபாபா’ படத்தில் நானும் திருமதி பானுமதி அவர்களும் நடித்துக்கொண்டிருந்தோம். அப்போது நாடோடி மன்னன் விளம்பரம் வெளியிடப்பட்டது.
இரண்டு மூன்று நாள்களுக்குப் பிறகு, பரணி பிக்சர்ஸாரின் விளம்பரமும் வந்தது. அன்று, படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்தது. திருமதி பானுமதி அவர்கள் சொன்னார்கள் –
‘நாங்கள் எடுக்கும் கதையையே (‘ஜெண்டாவின் கைதி’ என்ற ஆங்கிலக் கதையின் தழுவல்) நீங்களும் எடுக்கப்போகிறீர்களாமே...!
நமக்குள் போட்டி வேண்டாம். உங்கள் கதையை மாற்றிக்கொள்ளுங்கள். நாங்கள் பல மாதங்களாகச் செலவு செய்து எல்லாமே தயாராகிவிட்டன’ என்று.
நான் சொன்னேன் -
‘நான் பல ஆண்டுகளாக உருவாக்கி வந்த உருவம் இது. எனது வாழ்வில் ஒரு திருப்பத்தை விரும்பி, அதற்காக இக்கதையை தேர்ந்தெடுத்தேன். அதிலும் நானே டைரக்டர் பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளப்போகிறேன்’ என்று.
இது பற்றி மேலும் பேச்சு நடந்தது. முடிவாகச் சொன்னேன் -
‘நான் ஜெண்டாவின் கைதி என்ற கதையில் உள்ள ‘மன்னனாக மாற்றப்படும் காட்சி’யை மட்டும் வைத்துக்கொள்ளப்போகிறேன். மற்றவை எல்லாமே வேறாக இருக்கும்.
உங்களுக்கும் கதையை மாற்ற முடியாது இருக்குமானால், நீங்களும் எடுங்கள். நமக்குள் போட்டா போட்டியே வராது.
உங்கள் கதை ‘ஜெண்டாவின் கைதியின் நேர்ப்பதிப்பு. எனது கதை வேறு’ என்று சொன்னேன்.
‘உண்மையில் எனக்கும் குழப்பம்; அவர்களுக்கும் அதே நிலை. சில நாள்களுக்குப் பிறகு சொன்னார்கள் -
‘நாங்கள் அந்தக் கதையை எடுப்பதை நிறுத்திவிட்டோம். சந்தேகம் இல்லாமல் தாங்கள் படத்தை எடுக்கலாம்’ என்று. நன்றி தெரிவித்தேன், உண்மையான உள்ளத்துடன்.
‘நாடோடி மன்னனில்’ தனக்கு நடிக்கும் வாய்ப்பு இருக்கும் என அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை அப்போது.
எந்த நலத்தையும் எதிர்பாராமல் பானுமதி விட்டுக்கொடுத்தார்கள் என்பது உண்மை. அவர்களின் பெருந்தன்மையை எவ்வளவு போற்றினாலும் போதாது’.
*
பானுமதியால் நம்பமுடியவில்லை. எம்.ஜி.ஆரின் சொந்தப் படத்தில் அவர் ஹீரோயின் என்பதை. காரணம், இருவருமே தங்கள் சிம்மாசனத்தை எப்போதும், எதற்காகவும், யாருக்காகவும் கடுகு அளவுக்குகூட விட்டுத்தராதவர்கள்.
‘நான் எங்கு தொழில் செய்தாலும், சுதந்தரமாக இருக்கவும், தொழில் செய்யவும் விரும்புகிறவன். அதே குணத்தைப் படைத்தவர் திருமதி பானுமதி அவர்கள். நாங்கள் இருவருமே விட்டுக்கொடுக்காத மனோபாவம் உள்ளவர்கள்’ - எம்.ஜி.ஆர்.
டைரக்டர் கே. சுப்ரமணியத்தின் மேற்பார்வையில், நாடோடி மன்னன் ஷூட்டிங் தொடங்கியது.
பொதுவாக, பானுமதி சினிமாவில் பாட வேண்டுமானால் அவரைத் தேடிச் சென்று, ஒத்திகை பார்ப்பது வழக்கம்.
‘சம்மதமா... நான் உங்க கூட வர சம்மதமா...?’ பாடலுக்கு, தன் வீட்டில் ரிகர்ஸல் வைத்துக்கொண்டார் எம்.ஜி.ஆர்.
அதுவரையில், எந்த நடிகரின் வீட்டுப்படியையும் மிதிக்காதவர் பானுமதி. லாயிட்ஸ் ரோட்டுக்கு வந்து பாடிவிட்டுப் போனார்.
எம்.ஜி.ஆரின் எதிரிகளே மலைத்துவிட்டார்கள். புது ஜோரில் இதெல்லாம் சகஜம். இந்த நட்பும் ஒத்துழைப்பும் எத்தனை நாள்?
படம் முடிகிறவரையில், பானுமதி நிச்சயம் நடிக்கமாட்டார் என்று ஆருடம் சொன்னார்கள்.
எம்.ஜி.ஆரின் நொடிக்கு நொடி நிறம் மாறும், நிலையற்ற காட்சி அமைப்புகளால், பானுமதிக்கு நிம்மதி போய்விட்டது.
நடனம் ஆடுவதும் பானுமதிக்கு ஒத்துவராது. நாடோடி மன்னனில் அவருக்கு டான்ஸ் சீக்வன்ஸ் உண்டு. பானுமதி நேரடியாக எம்.ஜி.ஆரிடமே கேட்டுவிட்டார்.
‘எனக்கு நாட்டியம் சரிப்பட்டு வராதுன்னு உங்களுக்குத் தெரியுமே. அப்புறம் ஏன் அப்படி ஒரு சீன்?’
எம்.ஜி.ஆர். பதில் சொல்லவில்லை.
இன்னொரு தினம். சீன் சூப்பராக வரவேண்டி ஒரு டைரக்டராக பானுமதியை வேலை வாங்கினார். சுனாமியானார் நாயகி. வார்த்தைகள் தடித்துத் தகராறு ஆனது.
‘இதோ பாருங்க எம்.ஜி.ஆர்., ஒரே ஷாட்டை திரும்பத் திரும்ப எத்தனை முறை எடுப்பீங்க. இவ்வளவு நாளா சொல்ல வேண்டாம்னு இருந்தேன். எனக்கும் டைரக்ஷன் தெரியும். கே. சுப்ரமணியம் சாரை நிறுத்தினது தப்பு. அவர் ஒரு பெரிய டைரக்டர். அவர் போனதுக்கு அப்புறம் உங்க அசிஸ்டென்ட்ஸ் எங்கிட்ட வந்து டெய்லி புதுப்புது கதை சொல்றாங்க.
நீங்க என்ன எடுக்கறீங்கன்னு உங்களுக்கே தெரியல. நீங்களே இந்தப் படத்தோட ப்ரொடியூசருங்கறதால, எல்லா ஆர்ட்டிஸ்டும் உங்களை அட்ஜெஸ்ட் பண்ணிட்டுப் போறாங்க. நீங்க அதை ஒங்களுக்கு சாதகமா எடுத்துக்காதீங்க.
முதல்ல ஒழுங்கா கதையை முடிவு பண்ணுங்க. நான் கொடுத்த கால்ஷீட் முக்கால்வாசி முடிஞ்சுபோச்சு. இனிமேயாவது வேற டைரக்டரை போடுங்க. நான் தொடர்ந்து நடிச்சுத் தரேன். இன்னிக்கு எனக்கு மூடு போயிடுச்சு. நான் கிளம்பறேன். ஸாரி...
‘எம்.ஜி.ஆர்., பானுமதி மீது பெரும் மதிப்பு வைத்திருந்தார். பானுமதி இவ்வளவு தூரத்துக்குப் போவார் என எதிர்பார்க்கவில்லை. தன்னைத் தாழ்த்திக்கொள்ளும் உத்தேசம் எம்.ஜி.ஆருக்கு எப்போதும் கிடையாது. அவர் சுதந்தர சுயம்பு.
‘என் டைரக்ஷன்ல உங்களுக்கு நடிக்க இஷ்டம் இருந்தா நடிங்க. இல்லேன்னா விட்டுடுங்க’.
பானுமதிக்குள் தன்மானம் கூச்சல் போட்டது.
‘மிஸ்டர் ராமச்சந்திரன், நானும் அதைத்தான் சொல்றேன். குட் பை. வரேன்’.
பானுமதி தொடர்ந்து நடிக்காமல் போனாலும், அதை மனத்தில் கொள்ளாமல், எம்.ஜி.ஆர். மிகுந்த பெருந்தன்மையுடன் அவருக்காகப் பேசிய சம்பளம் முழுவதையும் செட்டில் செய்துவிட்டார்.
பானுமதி அதை ஜானகிக்குத் திருப்பி அனுப்பினார். கூடவே ஒரு கடிதமும்...
‘அன்புள்ள வி.என். ஜானகிக்கு, பானுமதி எழுதிக்கொண்டது. உங்கள் கணவரின் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டதற்காக மிகவும் வருந்துகிறேன். இந்த செக்கை நான் ஏற்றுக்கொள்வதற்கு இல்லை. மன்னிக்கவும்’.
பானுமதி, இடைவேளையோடு நம்பியாரின் கத்தி வீச்சில் இறந்துவிடுவார். அதை, அம்பு பட்ட மான் செத்துக்கிடப்பதாக ஒரு ஓவியம் மூலம் எம்.ஜி.ஆர். காட்சிப்படுத்தினார்.
ஆனந்தவிகடன், நாடோடி மன்னன் சினிமா விமர்சனத்தில் பானுமதியைப் பாராட்டியது.
‘எம்.ஜி.ஆரும் பானுமதியும் முதல்ல மீட் பண்றதே காமிக்தான். பானுமதி, சொந்தக்குரலிலே ஒரு பாட்டுப் பாடிச்சு அண்ணே! தேனாட்டம் இருந்தது. பாடி ஆடி வேடிக்கை காட்டி பாதியிலே தியாகம் செய்துடறாங்க. பாவம்’.
‘நாடோடி மன்னன் வெற்றியில் பானுமதிக்கும் உரிய பங்குண்டு!’ என்று எம்.ஜி.ஆர்., அவரை மனமாரப் பாராட்டி, அதன் வெற்றி விழா மலரில் எழுதினார்.
‘எம்.ஜி.ஆர். தானே டைரக்ட் செய்து, தன் சொந்தத்தில் எடுக்கும் இப்படம் ஒழுங்காக முற்றுப்பெறுமா? நாடோடி மன்னன் வெளிவரும்போது பானுமதி அவர்கள் படத்தில் இருப்பார்களா...?
என்றெல்லாம் சந்தேகப்பட்டவர்கள், (அதைவிட எனது வீழ்ச்சியைக் காண ஆசைப்பட்டவர்கள் என்றால் பொருந்தும்) வெட்கித் தலை குனியும்படி பானுமதி அவர்கள் ஒத்துழைத்ததோடு மட்டுமல்ல, தான் ஏற்ற ‘மதனா’ என்கிற பாத்திரத்தை வேறு எவரும் இவர்போல் திறமையாக நடித்திருக்க முடியாது என்று மக்களே சொல்லும்படிச் செய்துவிட்டார்.
இவ்வாறு புகழப்படுவதைவிட, ஒரு நடிகையின் வெற்றிக்கு வேறு என்ன வேண்டும்’ - எம்.ஜி.ஆர்.
நாடோடி மன்னன் வெற்றிக் கொண்டாட்டங்கள் ஒவ்வொரு ஊரிலும் நடைபெற்றது. பானுமதி வெளியூர் வைபவங்களில் பங்கேற்கவில்லை.
சென்னையில் அண்ணா பங்கேற்ற பரிசளிப்பு விழாவில் மட்டும் கலந்துகொண்டார்.
நாடோடி மன்னனுக்கு ஒரு வாரம் முன்னதாக, 1958 ஆகஸ்டு 15-ல், சிவாஜி - பானுமதி நடித்த ‘சாரங்கதாரா’ ரிலீஸானது. தியாகராஜ பாகவதர் - கண்ணாம்பா நடித்து ஓஹோவென்று ஓடிய அசோக் குமாரும், அதுவும் ஒரே கதை. நடிகர் திலகத்தின் 50-வது படம். 50 நாள்களை எட்டிப் பிடிக்கவே சிரமப்பட்டது.
‘வசந்த முல்லை போலே வந்து’ பாடல் மட்டும் சாரங்கதாராவை இன்றும் நினைவூட்டுகிறது.
1959-ல், டி.ஆர். மகாலிங்கம் - பானுமதி ஜோடியாக நடித்தது ‘மணிமேகலை’. டி.ஆர். மகாலிங்கம் - பானுமதி இணைந்து பாடிய சூப்பர் ஹிட் டூயட் அதில் ஒலித்தது.
நாடோடி மன்னனுக்காக எம்.ஜி.ஆர். தனது மற்ற படங்களை நிறுத்திவைத்திருந்தார். அவை மெல்ல வளர்ந்தன. அவற்றில் பானுமதி நடித்த ராஜா தேசிங்கும் ஒன்று.
எம்.ஜி.ஆர்., ‘ராஜா தேசிங்கு - தாவுத்கான்’ என இரு மாறுபட்ட வேடங்களில் தோன்றியதால், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. மிகத் தாமதமாக, 1960 கோடையில் வெளியானது.
அதில் ‘வனமேவும் ராஜகுமாரா...’ கேட்கக் கேட்கத் தெவிட்டாத கானம்! சி.எஸ். ஜெயராமனுடன் இணைந்து பானுமதி பாடிய சூப்பர் ஹிட் பாடல்.
பானுமதியின் ஒப்பற்ற ஆற்றலுக்கு, ராஜா தேசிங்கு தீனி போடவில்லை. பானுமதி, எம்.ஜி.ஆருடன் கவுரவ வேடத்தில் வந்து போனதைப்போல் இருந்தது.
'தாவுத்கானாக’ எம்.ஜி.ஆர். தன் அற்புதமான நடிப்பை அங்குலம் அங்குலமாக வெளிப்படுத்திய படம் ராஜா தேசிங்கு. இருந்தும், இன்னொரு மதுரை வீரனாகவில்லை.
ராஜா தேசிங்கு தோல்விக்கான காரணத்தை கண்ணதாசன் வெளிப்படையாக எழுதியுள்ளார்.
‘ராஜா தேசிங்குக்குப் பகையாக வந்த தாவுத்கான், ராஜா தேசிங்கின் தந்தைக்கும் முஸ்லிம் மனைவிக்கும் பிறந்தவன் என்று நான் கதை எழுதிவிட்டேன். படம் வெளியானபோது, முஸ்லிம்களிடையே அது பெருத்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கதை சோடைபோனதன் காரணமாக, அதைத் தயாரித்த ‘கிருஷ்ணா பிக்சர்ஸ்’ கவிழ்ந்துவிட்டது’.
சிவாஜி, பத்மினி, வைஜெயந்திமாலா, பண்டரிபாய் ஆகியோருடன் பானுமதி நடித்தும் ராஜபக்தி தோல்வி அடைந்தது. பானுமதிக்கு வில்லி கம் ஹீரோயின் வேடம். சிவாஜியும் அவரும் மோதுவதில், சூடோ சுவையோ இல்லாமல், இருவரது நடிப்பும் எடுபடாமல் போனது.
லைலா மஜ்னு ஸ்டைலில் தமிழ் - தெலுங்கில் ஏ.நாகேஸ்வரராவ் - பானுமதி, சித்தூர் வி. நாகையா, என்.எஸ். கிருஷ்ணன், டி.ஏ. மதுரம் நடிக்க, இளங்கோவன் வசனத்தில் ‘நூர்ஜஹான்’ பட அறிவிப்பு வெளியானது. ஆனால், வந்ததாகத் தெரியவில்லை.
அதற்குப் பதிலாக, 1961-ல் பரணி பிக்சர்ஸ் ‘கானல் நீர்’, ஒப்பற்ற முறையில் சரத் சந்திரரின் படைப்பில், பானுமதியின் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்த உருவானது. அவரது ராசியான ஹீரோ ஏ. நாகேஸ்வர ராவ், ‘கானல் நீர்’ கதாநாயகன்.
அதில், பானுமதி பாடிய ‘வழி தேடி வந்தேன்’ காலத்தை வென்ற கானம்!
‘இளம் விதவை மாதவியாக வருபவர் பானுமதி. அவர் இவ்வளவு மெலிந்திருப்பது ஆச்சரியம்! அதைவிட பெரிய ஆச்சரியம், முதல் கட்டம் தொடங்கி இறுதிக் காட்சி வரையில் தனக்கு இயல்பான அதிகப்பிரசங்கித்தனத்தை மறந்து ‘மாதவி’யோடு ஒன்றிவிட்டார்’ என்று ‘குமுதம்’ பாராட்டியது.
அதோடு மட்டுமல்ல, அந்த ஆண்டின் மிகச் சிறந்த நடிகையாகவும் தேர்ந்தெடுத்து கவுரவித்தது.
இத்தனைக்கும் 1961, சாவித்ரி நடிப்பில் சக்கை போடு போட்ட ஆண்டு. (சாதனைச் சித்திரங்கள் - பாசமலர், பாவமன்னிப்பு). சாவித்ரியைச் சற்றே புறக்கணித்துவிட்டு, பானுமதியின் நடிப்பைக் ‘குமுதம்’ கொண்டாடியது வியப்பின் விஸ்வரூபம்!
*
நாற்பதை நெருங்கிக்கொண்டிருந்தார் பானுமதி. கண்ணாடி அவருக்குப் பகை ஆனது. கோலிவுட் ஒட்டுமொத்தமாக சரோஜாதேவிக்கு மாறிய தருணம். தமிழில் பானுமதிக்குச் சுத்தமாகப் படங்கள் இல்லை.
நீண்ட காலத் தயாரிப்பாக, சிவாஜியோடு ‘அறிவாளியும்’, எம்.ஜி.ஆரோடு ‘கலையரசி’ ‘காஞ்சித்தலைவன்’ மிச்சம் இருந்தன.
விஜயா - வாஹினி, ஜெமினி, மாடர்ன் தியேட்டர்ஸ், ஜூபிடர், பட்சி ராஜா, விக்ரம் என அன்றைய அத்தனை ஸ்டுடியோ அதிபர்கள் தயாரித்த படங்களிலும் நடித்து, பெரிய ரவுண்டு வந்தாகிவிட்டது.
அந்த வரிசையில், ஏவி.எம். மட்டும் பாக்கி. மாபெரும் வெற்றி, வசூல் ராணி போன்ற வார்த்தைகள் பானுமதிக்கு பழகி ஓய்ந்தவை.
மெய்யப்பச் செட்டியாருக்கும் பானுமதிக்கும் இடையே சுமுகமான நட்பு கிடையாது. ‘ஏவி.எம்.மில் கால் வைக்கமாட்டேன்’ என்று பானுமதி எதன் பொருட்டோ சபதம் எடுத்திருந்தார்.
‘இளம் வாலிபனுக்கு அம்மாவாக ஏவி.எம்.மில் நடிக்கக் கூப்பிடுகிறார்கள்...’ என்றதும் நம்ப முடியவில்லை.
‘சும்மா கிடந்த நிலத்தைக் குத்தி...’ பாடல் காட்சியை ஏவி.எம்.மில் படமாக்கத் திட்டமிட்டது எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ். பானுமதி அங்கு வரமாட்டேன் என்று ஒற்றைக் காலில் நின்றார்.
அப்புறம், ‘நாடோடி மன்னனில்’ அவருக்காகவே விஜயா - வாஹினியில் ‘பேக் புரொஜெக்ஷன்’ வசதி செய்யப்பட்டது. வேறு வழி?
‘பானுமதி, ஏவி.எம். தயாரிப்பில் நடிப்பாரா...?’ என்பது அந்நிறுவனத்துக்கே, மில்லியன் டாலர் கேள்வியாகத் தோன்றியது.
இந்தியாவில், பானுமதியைத் தவிர வேறு யாராலும் நடிக்கமுடியாத மிக அபூர்வமான வேடம்.
‘அவரது சம்மதத்தைக் கேட்டுப் பார்ப்போம். சரி என்றால் படத்தை உருவாக்குவோம். மறுத்துவிட்டால் வேறு சினிமா தயாரிப்பது...’ என்கிற முடிவோடு பானுமதியை அணுகினார்கள்.
புதிதாக நடிக்க, இனியும் சாதிக்க ஏதும் இருக்கிறதா என்கிற யோசனைகளெல்லாம் காணாமலே போயின. குடும்பத்தில் முழுக்க மூழ்கிவிட்ட பின், ஏவி.எம். படத்தில் நடிக்க வேண்டுமா?
டி.ஆர். மகாலிங்கம், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என்று தமிழகத்தின் தன்னிகரற்ற கலைஞர்கர்களைத் தொடர்ந்து நாயகர்களாக்கிய நிறுவனம் ஏவி.எம்.
அந்நாளில், அங்கு ஹீரோ - ஹீரோயின்களை விடவும், கதைகளுக்கே கூடுதல் முக்கியத்துவம் தருவார்கள். அப்படிப்பட்ட செட்டியாரின் காம்பவுன்டில், முதன்முதலாக அவர்களே தேடிச்சென்று ஒப்பந்தம் செய்த ஒரே துருவ நட்சத்திரம் பானுமதி!
From apoorva ragangaL
yezhu swarangaLukkuL .........
http://www.youtube.com/watch?v=csnyfoXugdE
நடிப்பின் பாலபாட அனுபவங்கள் Schools of Acting
நடிகர்திலகம் Vs காதல் மன்னர்
Quote:
நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் நடிப்பின் இலக்கணமாக உருவகப் படுத்தப் படுமுன்னர் மிகக் கடினமான நாடக மேடைப் பேச்சு பாட்டு கூத்து நடனம் பாடல் ஆடல் என்று வகைவகையான அனுபவங்களைப் பெற்று மேடைக் கூச்சம் அறவே துறந்தவர்.
அவரது வசன நடையும் மனனம் செய்யும் திறமையும் உலக நடிகர்கள் எவருமே கற்பனை கூட செய்ய இயலாத வண்ணம் அவரது கடின உழைப்பின் பலனாக
அமைந்தது நாம் பெற்ற பேறே !
கடினமான பயிற்ச்சிகள் மற்றும் அவருக்கு இயல்பாக அமைந்த கற்பனை வளம் சினிமாவுக்குள் புயலாகப் பிரவேசம் செய்த பின்னரும் தான் ஏற்று நடித்த
கதாபாத்திரங்களுக்கு முப்பரிமாண மெருகைத் தந்து அப்பாத்திரங்கள் என்றுமே மறக்க முடியாத காவியங்களுக்கு அடிகோலின என்பது வரலாறு !பாடல்களுக்கு அவர் தந்த பொருத்தமான உதட்டசைவுகள் உடல்மொழி வெளிப்பாடுகள்....புதியபறவை குங்குமம் பலே பாண்டியா...வியட்நாம் வீடு...
பாடல்களே இல்லாமல் நாயன வாசிப்பில் அவர் காட்டிய முகபாவ உதட்டசைவு உடல்மொழிக் கூறு ....விஞ்ச முடியாத இமயமே!!
இருவரும் தத்தம் முத்திரை பதித்த மதுரகானப் பாடல் காட்சிகளும் நடிப்புப் போட்டியும் !!Quote:
காதல் மன்னராக நிரந்தர முத்திரை பெற்ற ஜெமினி கணேசன் அவர்களோ எவ்வித நாடகமேடை அனுபவமோ முகபாவ உடல்மொழி பயிற்சிகளோ ஆடல்பாடல் முயற்சிகளோ இல்லாதவரக திரையுலகில் காலூன்றியவர் !
இவரது பண்பட்ட தோற்றமும் படிப்பின் பண்புகளும் இயற்கையான ஆணழகும் முகவசீகரமும் காதலைக் கண்ணியமாக திரையில் உருவகப் படுத்திய விதமும் இயல்பான மென்மையான நமது சக தோழர் போன்ற நடிக்கிறார் என்ற உணர்வே இல்லாத பாங்கும் நடிகர்திலகம் போலவே மனதை உலுக்கும் காட்சிகளில் நமது கண்களில் கண்ணீரை வரவழைத்த மாறுபட்ட பாணி நடிப்புத் திறனும் இன்றுவரை அசைக்க முடியாத இமேஜை அவருக்கு உருவாக்கி என்றுமே second to none என்னும் இடத்தை ரசிக நெஞ்சங்களில் பதித்திட்ட அபார சாதனையாளர்!
நடிகர்திலகத்துடன் எவ்வித ஈகோவுக்கும் இடம் தராமல் பதினைந்து படங்கள் இணைந்து நடித்து தனது நடிப்பின் தனித்தன்மையை உறுதி படுத்திய திறமையாளர்
https://www.youtube.com/watch?v=___CnUWEADk
https://www.youtube.com/watch?v=gFcOsnk8DM0
https://www.youtube.com/watch?v=9ZghfWkD8gA
a pleasant song from Khel Khel Mein. Hope everyone will enjoy this beauty.
https://youtu.be/cuYyeS60nlY
We were in Hawaii in a beach front house. I thought I should post a few 'kadal' songs. The vegetaion in the village in HI reminded me of my ancestral village in Tanjore district-- thennai, vaazhai, maa, pappaaLi, thongumoonchi, poovarasu, eechcham, panai, aal and arasu. I think tamarind tree grows there. But, I did not see any.
From Raja Desingu (1960)
paal kadal alai mele......
http://www.youtube.com/watch?v=StcPEr1ZqL8
vaNakkam Raj! :) Glad to know that you had a great time in Hawaii, with your family.
I know this is not the type of "kadal" song you had in mind, but I will post it anyway...
ஆழ் கடலில் தத்தளித்து
நான் எடுத்த முத்து ஒன்றை
விதியவன் பறித்தது ஏன்... ஏன்...
உற்சவத்து சிலை இதன்
பூச்சரமும் உதிர்ந்தது
பூஜையதும் கலைந்தது ஏன்... ஏன்...
https://www.youtube.com/watch?v=2sg6ainNdXo
Nagumo song - in the Honey Voice of Dr K J Yesudoss.
https://youtu.be/QfHRVGLaM8g
vaNakkam Vaasu sir! :) Here is one of many movie versions of Thyagaraja Swami's "nagumOmu ganaleni..."
sung by KJY and Poorana Chandar; orchestrated by the one and only K.V. Mahadevan; from the 1990
Telugu movie "ALLADUGARU" featuring Mohan Babu and Shobhana...
https://www.youtube.com/watch?v=1T6hJKUqW1M
The same track was used in the Kannada version RAYARU BANDARU MAVANA MANEGE featuring Vishnuvardhan
https://www.youtube.com/watch?v=XxU9pIh0kDw
Interestingly, in the original Malayalam movie (CHITHRAM),
this one was sung by M.G. Sreekumar & Neyyattinkara Vasudevan
https://www.youtube.com/watch?v=22CaN6buSjs
My All Time favourite is Chithram than the other two Mr R D with a fine act by Mr Lal.
Great Song. No words to express the beauty of this song.
https://youtu.be/l0knnNMGg7g
Heartfelt prayers for our people to get rid of the incessant rainfall and the instantaneous floods and to resume their normality on behalf of NT/GG threads
senthil
https://www.youtube.com/watch?v=2BH1a4RP16A
Chennai friends . stay safe. Let's pray for everyone's safety.
let's hope normalcy returns soon
நடிப்பின் பாலபாட அனுபவங்கள் Schools of Acting
நடிகர்திலகம் Vs காதல் மன்னர்
Part 2
Quote:
மோட்டார் சுந்தரம் பிள்ளை நடிகர் திலகத்தின் இயல்பான யதார்த்தமான நடிப்பின் உச்சத்தை உலகத் தரத்தில் உரக்கச் சொல்லிய குடும்ப உறவுகளில் இருக்கும் முரண்பாடுகளை மனவலியை அவர் வெளிப்படுத்திய உன்னதமான காவியம் ! ஒரு வகையில் ஜெமினி பாணியில் சிவாஜி கொடி நாட்டிய ரசிக நெஞ்சங்களில் இன்றும் நிறைந்த படமே !! ஜெயலலிதா, காஞ்சனா போன்ற பின்னாள் ஜோடிகளுக்கு அந்நாளிலேயே தந்தையாக நடிக்கும் மன தைரியம் யாருக்கு வரும்!! ஜெமினிகூட வயதான பின்னரே (வெள்ளிவிழா) இத்தகைய ரோல்களில் பொருந்துமளவு ஜெமினிக்கும் ரோல்மாடல் சிவாஜியே!!
Quote:
வெள்ளிவிழாவில் சிவாஜி பாணியில் வயதான ஜெமினி குழந்தைகளால் கொஞ்சம் உதாசீனப் படுத்தப் படும் ரோலில் வாக்கிங்க் ஸ்டிக்கெல்லாம் சுழற்றிக் கொண்டு பிரமாதப் படுத்தியிருப்பார்....அந்த அளவு சிவாஜிக்கு இணையாக வயதான பாத்திரங்களிலும் தனது தனித் தன்மையான காதல் இனிமையைப் புகுத்தி புகழ் பெற்றார் ஜெமினி !!
https://www.youtube.com/watch?v=VHIRPF_7gK4
https://www.youtube.com/watch?v=vvfLzYCmfug
Thank you Rajesh and Senthil for your concerns.
Of course, Chennai would not have prayed for this much of rain, though it was welcome at the initial stages.
Hope normaly restored soon.
அபூர்வ கானங்கள்
காகித ஓடம்... இந்தப் படத்தின் பெயரைப் பலர் அறிந்திருக்க மாட்டார்கள். இந்த வார்த்தையைக் கொண்டு தொடங்கும் இசையரசியின் பாடலென்றால் அனைவருக்கும் தெரியும்.
ஆனால் இந்தப் படத்தைத் தெரியாதவர்களுக்குக் கூட இந்தப் பாடல் அத்துப்படி.
சந்தோஷமான சூழலில் எஸ்.பி.பாலாவும் சோகமான சூழலில் ராஜ்குமார் பாரதி, சசிரேகா இருவரும் பாடிய சூப்பர் ஹிட் பாடல். சங்கர் கணேஷ் இரட்டையருக்கு மிகவும் பெயர் பெற்றுத் தந்த பாடல்.
பொன்வீணையே என்னோடு வா...
https://www.youtube.com/watch?v=hmMntA5SxJA
எஸ்.பி.பாலா பாடிய பாடல் வீடியோவில் இணைப்பு கிடைக்கவில்லை. ஒரு வேளை ஆடியோ கிடைத்தால் கிடைக்கலாம்.
அபூர்வ கானங்கள்...
ஜெயச்சந்திரன் பி.சுசீலா இணைந்த பாடல்களில் மிகவும் பிரபலமான பாடல். வழக்கம் போல் படத்தின் பெயர் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை.
சக்கரங்கள் நிற்பதில்லை படத்தில் சங்கர் கணேஷ் இசையில், மு.மேத்தா வரிகள்.
https://www.youtube.com/watch?v=CyuRuLRP4Ks
அபூர்வ கானங்கள்
தேன் சிட்டுக்கள்..
இந்தப் படத்தைப் பற்றி வாசு சார் எழுதியிருக்கிறார் என நினைக்கிறேன். சின்னி பிரகாஷ் சுபாஷினி நடித்த படம். விஜயரமணி இசையமைப்பாளர்.
இதில் பாடல்கள் ஜனரஞ்சகமானவை. என்றாலும் கேட்கத் திகட்டாதவை. குறிப்பாக பாடகர் திலகம் வாணி ஜெயராம் பாடிய இப்பாடல் கலப்பிசையில் வித்தியாசமாக இருக்கும். பாடலாசிரியர் ஆலங்குடி சோமு
https://www.youtube.com/watch?v=JcvlBzbyMvs
அபூர்வ கானங்கள்
இசையரசியும் கே.ஜே.யேசுதாஸும் இணைந்து பாடிய அபூர்வமான பாடல். மெல்லிசை மாமணி வி.குமாரின் இசையில் வசந்தம் வரும் திரைப்படத்திற்காக மு.பாவாணன் எழுதிய பாடல்.
http://psusheela.org/audio/ra/tamil/...aresong452.ram
மேற்காணும் இணைப்பில் உள்ள பாடல் ரியல் ஆடியோ வடிவில் உள்ளது. விஎல்சி மீடியா ப்ளேயரில் கேட்கலாம்.
இது கன்னடத்தில் சத்யம் செய்த பாடல்
solo SPB
duet: PS & M.Ramesh
https://www.youtube.com/watch?v=I7jhlngZNPU
Courtesy: Tamil Hindu
சினிமா எடுத்துப் பார் 36: துணிவே துணை!
எஸ்பி.முத்துராமன்
காவியக் கவிஞர் வாலி அவர்கள் மதுப் பழக் கத்தை நிறுத்தியதையும், இன்றைய தலைமுறை குடிக்கு எப்படி சீரழிகிறது என்பதையும் கடந்த வாரம் வருத்தத்தோடு பதிவு செய்திருந்தேன். கலங்கிய கண்களோடு அடுத்தவாரம் என்ன பகிரப் போகிறோம் என்பதை சொல்ல மனமில்லாமல் விட்டிருந் தேன்.
அந்த செய்தி வெளிவந்த நாளில் நாமக்கல் அருகே நான்கு பள்ளிக் கூட மாணவிகள் வகுப்பறையில் மது அருந்தி பிறந்த நாள் கொண் டாடிய செய்தியையும், மற்றொரு பள்ளியில் ஒரு மாணவிக்கு நான்கு மாணவர்கள் பாலியல் தொல்லை கொடுத்து அதனை வாட்ஸ் அப்-பில் வெளியிட்டிருக்கிறார்கள் என்ற கொடூரமான செய்தியையும் படிக்க நேர்ந்தது. இவர்களை நினைக்கையில் கண்ணீர் வந்தது.
அது இதயத்திலிருந்து வந்ததால் சிவப்பாக இருந்தது. இந்தச் சூழலில் குமரி அனந்தன் அவர்கள் சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரை மதுவிலக்கை வலியுறுத்தி நடைபயணத்தை மேற்கொள்ள உள்ளார். நாம் எல்லோரும் ஒன்றாக சேர்ந்து துணிவே துணையாக போராட வேண்டிய நேரம் இது.
நான் இந்த வாரம் சொல்லப் போகும் படம் ‘துணிவே துணை’. இந்தப்படத்தை எப்படி தொடங்கி னோம் என்பதற்கு ஒரு வரலாறு உள்ளது. சேலம் மாடர்ன் தியேட் டரில் சில படங்களை தொடர்ந்து படமாக்கி வந்தோம். அந்த நாட் களில் படம் தயாரிக்க வேண்டும் என்ற ஆசையோடு தினமும் இரண்டு நபர்களாவது வருவார்கள். அவர்களிடம், ‘ பண வசதி எப்படி?’ என்று நானும், ஒளிப்பதிவாளர் பாபுவும் கேட்போம். ‘முதலில் பூஜையை போடுவோம். அப்புறம் பணத்தை புரட்டிவிடுகிறோம்?’ என்பார்கள்.
அதற்கு நாங்கள் ‘பூஜை போட்டு பாதியிலேயே படம் நின்று விடுவதற்கு நாங்கள் படம் எடுக்க மாட்டோம். பண பலத்தோடு வாருங்கள்’ என்று அனுப்பிவிடு வோம். இந்த நிலையில், எளிமை யாக வேட்டி சட்டை அணிந்து ஒரு மஞ்சள் பையுடன் எங்களை பார்க்க ஒருவர் வந்தார். ‘படம் எடுக்க வேண்டும்?’ என்றார். எல்லோரிடமும் சொல்வதைப் போல அவரிடமும் சொன்னோம். மேஜையில் மஞ்சள் பையை கொட்டினார். நோட்டுக்கட்டுகள் குவிந்தன. அதைப் பார்த்ததும் எங்களுக்கு ஆச்சரியம்.
இதற்கு மேலும் வங்கியில் பணம் இருக்கிறது என்று பாஸ் புக்கை காட்டினார். “நடிகர் ஜெய்சங்கரிடம் கேட்டுவிட்டு பதில் சொல்கிறோம்’’ என்று கூறினோம். நடிகர் ஜெய் யிடம் கூறியதும், ‘நாம இந்தப்படத்தை ஏன் கலர் படமாக எடுக்கக் கூடாது?’ என்று கேட்டார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அப்படி தொடங்கப்பட்ட படம், ‘துணிவே துணை’ அதன் தயாரிப்பாளர் சேலம் பி.வி.துளசிராம்.
படத்துக்கு கதை, திரைக்கதை பஞ்சு அருணாசலம். இது சஸ்பென்ஸ் திரில்லர். படத்துக்கு சரியான தலைப்பை பிடிப்பது ஒரு முக்கியமான வேலை. ஆசிரியர் உயர்திரு. தமிழ்வாணன் அவர்கள் கல்கண்டு இதழில் ‘துணிவே துணை’ என்று லட்சிய வார்த்தையை போடுவார். அந்த தலைப்பு சரியாக இருக் கும் என்று பஞ்சு அவர்கள் கூற தமிழ் வாணன் அவர்களிடம் கேட்டோம். ‘தாராள மாக வைத்துக் கொள் ளுங்கள். எல்லோருக் கும் துணிவு வருகிற மாதிரி படத்தை எடுங் கள்’ என்றார். தமிழ் வாணன் - ‘மாஸ்டர் ஆஃப் ஆல் சப்ஜக்ட்’ என்ற அடைமொழிக்கு தன்னை தகுதி யாக்கிக்கொண்டவர். அவர் தந்த செல்வங்கள்தான் லேனா தமிழ்வாணனும், ரவி தமிழ்வாணனும்.
பொதுவாக கிளைமேக்ஸ் காட்சியில்தான் ஆடியன்ஸ் இருக்கை முனைக்கு வருவார்கள். இந்தப்படத்தில் முதல் 5 ரீல்களில் மக்கள் இருக்கை முனையில்தான் உட்கார்ந்திருந்தார்கள். ஆங்கிலப் படங்களுக்கு இணையாக அல்ல. அதற்கு மேலாக எடுக்கப்பட்ட படம் இது. ஒளிப்பதிவு பாபு. அவரது படப்பிடிப்பு பாராட்டுக்குறியது. எம்.எஸ்.வி அவர்களின் பாடல் களும், பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்த்தன. ஜெய் சங்கர், ஜெயபிரபா, அசோகன், விஜயகுமார், ராஜ சுலோச்சனா ஆகியோர் நடித்தனர். வில்லன் களுக்கு தலைமைப் பொறுப்பு வகிப்பவரை பெரிய வில்லனாக போடுவோம். இந்தப்படத்தில் வித்தியாசமாக பெண் கதாபாத் திரம் தலைமை ஏற்கட்டுமே என்று ராஜ சுலோச்சனாவை தலைவியாக்கினோம். அவர் நடிப்பில் வில்லன்களையே மிஞ்சி விட்டார்.
கலை இயக்குநர் ராதா மிக நுணுக்கமாக அரங்குகள் அமைத்தார். ஜெய்சங்கர் இரட்டை வேடத்தில் வரும் ‘அச்சம் என்னை நெருங்காது’ என்ற பாடலை வித்தியாசமாக படம்பிடித்தோம். மிகவும் சிரமப்பட்டு இரண்டு வேடங்களையும் மாஸ்க் முறை யில் பாபு ஒளிப்பதிவு செய்தார். அந்தப் பாடல் காட்சி மக்களிடத்தில் பெரிய வரவேற்பை பெற்றது. அந்த படத்தில் நடன அமைப்பாளர் புலியூர் சரோஜாவிடம் உதவியாளராக இருந்த ஒருவர் இன்று புகழ்பெற்ற நடன அமைப்பாளராக உள்ளார். அவர் யார்? அடுத்த வாரம் பார்ப்போம்.
நடிப்பின் பாலபாட அனுபவங்கள்
Schools of Acting
நடிகர்திலகம் Vs காதல் மன்னர்
Part 3
Quote:
காதல் மன்னரின் பாந்தமான ஜோடியாக சாவித்திரி வலம் வந்தாலும் எனக்கென்னவோ ஜெமினி வைஜயந்தி ஜெமினி சரோஜாதேவி ஜெமினி விஜயா காம்பினேஷன்கள் அதைவிட நன்கு அமைந்ததாக ஒரு எண்ணம் உண்டு !
ஜெமினி வைஜயந்தி ஜோடியில் தேன் நிலவும் பார்த்திபன் கனவும் வஞ்சிக்கோட்டை வாலிபனும் மறக்க முடியாத படங்கள் !!
வஞ்சிக்கோட்டை வாலிபனில் ஜெமினியை சுற்றிசுற்றி சுழன்றாடும் ராஜாமகள் ரோஜாமலர் பாடலும் காட்சியமைப்பும் இன்றுவரை என் மனதில் இனம் புரியாத ஒரு இனிமைப் பரபரப்பைத் தோற்றுவிக்கும் ! அதுபோலவே தேன் நிலவில் இவர்கள் இணைந்த பாடல் காட்சிகள் பரவசமானவை!! ஜெமினிக்கு நம்பர் ஒன பொருத்தமான கதாநாயகி உயரமாகட்டும் முகவசீகரமாகட்டும் நடிப்பில் காதல் வேதியியல் ஆகட்டும்......
சின்ன சின்ன கண்ணிலே வண்ண வண்ண ஓவியம் ஜெமினி வைஜயந்தி இணைவில் நாம் காணும் இப்பாடல் காட்சிகளே !!
https://www.youtube.com/watch?v=c6w7JmD59Es
https://www.youtube.com/watch?v=zkHlWFI8sac
Quote:
நடிகர்திலகத்துடன் வைஜயந்தி தோன்றும் கண்ணியமான இக்காதல் பாடல் காட்சியும் ஜெமினிகணேசனின் இனிமையான ஒரு பாடல் காட்சியைக் கண்டு களித்திட்ட ஒரு மன நிறைவைத் தரும் !! இரும்புத்திரை விலக்கி நடிகர்திலகம் இயல்புத்திரையில் மின்னும் மறக்க முடியாத மதுரகான காட்சி!!
https://www.youtube.com/watch?v=q48ihhHK5kg
gemini -sarojadevi super :thumbsup:
uyir songs
thanks tfmlover
https://www.youtube.com/watch?v=URGr7S690ws
Posting moved to a different thread.
நடிப்பின் பாலபாட அனுபவங்கள்
Schools of Acting
நடிகர்திலகம் Vs காதல் மன்னர்
Part 4
நடிப்புப் புயலும் நடிப்புத் தென்றலும்
The Cyclone Crossing The Gentle Breeze
Quote:
பொதுவாகவே நடிகர்திலகத்துடன் காதல் மன்னரும் ஒரு படத்தில் இருக்கிறார் என்றால் அந்தக் கால ரசிகர் வட்டங்களில் ஒருவிதமான நடிப்புப் போட்டி எதிர்பார்ப்பு நிலவும்! நடிகர்திலகம் புயல்வீச்சாய் தனது நடிப்புக் கிரணங்களை வெளிப்படுத்தும்போது காதல்மன்னர் தனது பாணியில் குளிர்நிலவாய் தென்றலாய் நமது மனங்களை வருடுவார்.
கதையமைப்பில் சில சமயம் எதிர்பார்ப்புக்கு மாறாக தென்றல் புயலானதும் புயல் தென்றலாய் தணிந்ததும் ரசனைக்குரிய நிகழ்வுகளே!!
உலகத்திரைக்கே எடுத்துக்காட்டாக நல்ல நட்புணர்வுடன் கதைக்களத்தையும் பாத்திரத்தின் குணாதிசய முன்னிறுத்தலையும் மட்டுமே மனதில் நிறுத்தி பொறாமையற்ற Multi-Star Cast நடிப்புப் போட்டியை வழங்கி நம்மை மகிழ்வித்த நடிகர்திலகம் / காதல்மன்னர் புரிதலுடன் கூடிய நட்புணர்வை இனி எங்கே காண்போமோ!?
ஒரு புயல் தென்றலாய் கரை கடக்கிறது !
https://www.youtube.com/watch?v=SfVcsfcCxOk
ஒரு தென்றல் புயலாய் சீறுகிறது !!
https://www.youtube.com/watch?v=7rc90ZMn-MA
தென்றலும் புயலும் இணைந்து........... புயலுக்காக தென்றல் இசை மீட்டுகிறது !!
https://www.youtube.com/watch?v=Z2y6PQzszaY
நடிப்பின் பாலபாட அனுபவங்கள்
Schools of Acting
நடிகர்திலகம் Vs காதல் மன்னர்
Part 5
ரிச்சர்ட் பர்டன் பீடர் ஒடூல் நடிப்பில் தி பெக்கட் எனும் ஆங்கிலப் படத்தின் தழுவலே இந்தியில் ராஜேஷ்கன்னா அமிதாப் நடிப்பில் நமக் ஹராம் (உப்புத்துரோகம்) என்று வெளிவந்து அதன் தழுவலாக ஜெமினி சிவாஜி இணைவில் உனக்காக நான் ஆனது!!
https://www.youtube.com/watch?v=D3Dfj-Zi_0U
https://www.youtube.com/watch?v=DJNoWuLfxhc
https://www.youtube.com/watch?v=f_EQYsvrL1I
நண்பர்களே
நமது அன்பிற்கினிய நெய்வேலி வாசு சாரை கைப்பேசி எண்களில் தொடர்பு கொள்ள முயற்சித்தும் இணைப்புக் கிடைக்கவில்லை அல்லது இணைப்புக் கிடைத்தாலும் ரெஸ்பான்ஸ் இல்லை. யாரேனும் தொடர்பு கொள்ள முடிந்ததா, அவர்கள் பகுதி எப்படி உள்ளது, விவரம் தெரிந்தால் பகிர்ந்து கொள்ள வேண்டுகிறேன்.
Courtesy: Tamil Hindu
சாவித்திரி 10
‘நடிகையர் திலகம்’ என போற்றப்பட்டவர்
புகழ்பெற்ற தென்னிந்திய திரைப்பட நடிகை, இயக்குநர், தயாரிப்பாளரான சாவித்திரி (Savitri) பிறந்த தினம் இன்று (டிசம்பர் 6). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
l அன்றைய மதராஸ் மாகாணத் தின் குண்டூர் மாவட்டம் சிறாவூ ரில் (தற்போது ஆந்திரப் பிரதேசத் தில் உள்ளது) 1935-ல் பிறந்தார். 6 மாதக் குழந்தையாக இருந்த போது தந்தையை இழந்தார். உள்ளூரில் உள்ள கஸ்தூரிபா உயர்நிலைப் பள்ளியில் பயின் றார்.
l சிஸ்தா பூர்ணய்யா சாஸ்திரிகளிடம் இசை, நடனம் பயின்றார். குழந்தை நட்சத்திரமாக விஜயவாடாவில் மேடைகளில் தோன்றி நடித்தார். என்.டி.ராமாராவ் நடத்திய நாடக கம்பெனியில் நடித்தார். பின்னர் சொந்தமாக ‘நவபாரத நாட்டிய மண்டலி’ என்ற நாடக கம்பெனியை தொடங்கினார். இவரது ‘ஆத்ம வஞ்சனா’ நாடகம் பெரும் வரவேற்பை பெற்றது.
l 1949-ல் ‘அக்னி பரீட்சா’ என்ற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்தது. அப்போது இவருக்கு வயது 14. முதிர்ச்சியான அந்த வேடத்துக்கு பொருத்தமாக இருக்கமாட்டார் என்று கூறி, நிராகரிக்கப்பட்டார். பிறகு, ‘சம்சாரம்’ என்ற படத்துக்கு தேர்வானார். அதிக ரீடேக் வாங்கியதால், முக்கிய வேடத்தில் இருந்து நீக்கப்பட்டு, துணை வேடம் கொடுக்கப்பட்டது.
l ‘பாதாள பைரவி’ திரைப்படத்தில் 1951-ல் நடனமாடினார். ‘பெல்லி சேசி சூடு’ திரைப்படத்தில் 2-வது நாயகியாக இவர் நடித்தது, முக்கிய திருப்புமுனையாக அமைந்தது. அதில் இவரது நடிப்பும் நடன பாவங்களும் பல இயக்குநர்களின் கவனத்தை ஈர்த்தது.
l ‘தேவதாசு’ திரைப்படத்தில் சிறப்பாக நடித்து பாராட்டுகளைப் பெற்றவர், தெலுங்கு திரையுலகின் முன்னணி கதாநாயகி என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தார். தொடர்ந்து ‘சந்திரஹாரம்’, ‘அர்தாங்கை’, ‘மிஸ்ஸம்மா’, ‘டோங்கா ராமுடு’, ‘மாயாபஜார்’, ‘ஆராதனா’, ‘ரக்த திலகம்’, ‘பூஜாபலன்’ என ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்தார்.
l ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு திரைப்படங்களின் முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தார். சிவாஜி கணேசன், எம்ஜிஆர், ஜெமினி கணேசன் ஆகியோருடன் நடித்துள்ளார். ‘மனம் போல் மாங்கல்யம்’ திரைப்படத்தில் நடித்தபோது, ஜெமினி கணேசனை திருமணம் செய்துகொண்டார்.
l 1950-களின் மத்தியிலும் 60-களிலும் தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் பல்வேறு வேடங்களில் சிறப்பாக நடித்து முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். ஒருசில இந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
l களத்தூர் கண்ணம்மா, மிஸியம்மா, திருவிளையாடல், கந்தன் கருணை, படித்தால் மட்டும் போதுமா, பரிசு, பாசமலர், பாவ மன்னிப்பு, கைகொடுத்த தெய்வம் உள்ளிட்ட திரைப்படங்கள் இவருக்கு பெயரையும் புகழையும் ஈட்டித் தந்தன.
l தமிழ்த் திரையுலகில் ‘நடிகையர் திலகம்’ என்று போற்றப்பட்டார். ‘சிவராக்கு கிலேடி’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் சிறந்த நடிகைக்கான குடியரசுத் தலைவர் விருதை 1960-ல் பெற்றார். தயாரிப்பாளர், இயக்குநராகவும் பணியாற்றியவர். ‘தென்னிந்திய மீனாகுமாரி’ என்று அழைக்கப்பட்டார்.
l அன்பு, பாசம், நேசம், காதல், கோபம், ஆவேசம், வீரம், நகைச்சுவை என எந்த வகையான உணர்ச்சியாக இருந்தாலும் இயல்பாகவும், தனித்துவம் வாய்ந்த திறனுடனும் வெளிப்படுத்தினார். பல்வேறு மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவரும், தனது அபார நடிப்புத் திறனால் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த வருமான சாவித்திரி 46-வது வயதில் (1981) மறைந்தார்.
http://www.indya101.com/gallery/Sing...01(dot)com.jpg
இன்று பிறந்த நாள் கொண்டாடும் எல்.ஆர். ஈஸ்வரி அவர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட ஆயுளுடன் வளமாக வாழ வேண்டும் என இறைவனைப் பிரார்த்திக்கிறோம். அவருடைய இசை வெள்ளத்தில் நம்மை இன்னும் இன்னும் நீந்த வைக்க இறைவன் அவருக்கு நூறாண்டுகளுக்கு மேல் ஆயுள் தரவேண்டும்.
அவர் பாடிய பாடல்களில் என் மனம் கவர்ந்த பாடல்களில் ஒன்று...
சித்ரா பௌர்ணமி படத்திலிருந்து...
மெல்லிசை மன்னரின் இசையில்..
https://www.youtube.com/watch?v=fA0o1I2lflo
Fantastic Song from Raja Nagam
https://youtu.be/spMEpLVlan8
Where are you Mr CK
https://youtu.be/PvfWG-Jm_gg
Cika is fine. he is not in mood to post due to flood in chennai. he is fine in muscat
Gap fillers!
GG Vs NTR! in their most handsome stature with the cute Savithri then!! Missiamma
GG!
https://www.youtube.com/watch?v=oRrnQg4SboQ
https://www.youtube.com/watch?v=daJdkHGeZ00
NTR!
https://www.youtube.com/watch?v=qoMI8OdajYY
https://www.youtube.com/watch?v=jXf1noLLokE
Courtesy: Tamil Hindu
சூழல் ஒன்று பார்வை இரண்டு: தன்னை மறந்து மண்ணில் விழுந்து
இளமை என்னும் பூங்காற்று வீசும் பொழுது காதல் என்னும் மழை கொட்டுவது மனித உணர்வின் இயற்கையான நிகழ்வாக அமைந்துள்ளது. அப்பொழுது ‘சமா’ என்று இந்திக் கவிஞர்கள் அழைக்கும் சுற்றுச்சூழல் அழகாக ஆகிவிடுகிறது. இளமையின் ஆட்சியில் காதல் அரங்கேறும் சூழலை இரு விதமான பார்வைகளில் அணுகும் பாடல்களைப் பார்ப்போம்.
இந்த இரண்டு பாடல்களும் மிகச் சிறந்த இசையமைப்பு, நெஞ்சத்தை அள்ளும் பாடகரின் குரல், வளம் செறிந்த கவி வரிகள் ஆகியவற்றால் மட்டுமின்றி மோசமான பாடல் காட்சியாக்கம் என்ற வகையிலும் ஒற்றுமையைக் கொண்டிருக்கின்றன.
இந்திப் பாடல்:
படம்: கர் கர் கீ கஹானி (ஒவ்வொரு வீட்டின் கதை)
பாடலாசிரியர்: ஹஸ்ட்த் ஜெய்ப்பூரி
பாடியவர்: கிஷோர் குமார்
இசை: கல்யானஜி ஆன்ந்த்ஜி
சமா ஹை சுஹானா சுஹானா
நஷே மே ஜஹான் ஹை
கிஸி கோ கிஸி கீ கபர் ஹீ கஹான் ஹை
ஹர் தில் மே தேக்கோ முஹபத் ஜவான் ஹை
பொருள்:
சுற்றுச்சூழல் உள்ளது சுகமாக
பற்றியுள்ளது (கள்ளின்) மயக்கத்தை
யாருக்கும் மற்றவருடைய நினைவு (இல்லை)
யாருடைய இதயத்தில் காதல் இளமை உள்ளதோ
அங்கே பார்வைகள் பார்வையால் பாடுகின்றன
எவர் உள்ளம் கவர்ந்தாரோ அவர் அறிமுகம் நேர்கிறது
உள்ளத்தின் இந்த அதிசயக் கதையை உற்றுநோக்கி
உரைக்கின்றன விழிகள் நெஞ்சம் ஊமையாயிற்று
உள்ளங்கள் சங்கமித்து அழகாக ஆயின
அவரவர் காதலர் மேல் பைத்தியம் ஆனது
காதலர் வாழும் இடமே காதலும் வாழும்
காதல் எதுவோ காணும் தர்மமும் அதுவே
இப்பாடலைவிட மிக அழுத்தமான பொருள் உடைய கண்ணதாசன் கவி வரிகளும், இந்திப் பட நாயகியாக நடித்த பாரதியைவிட அழகும் கவர்ச்சியும் மிகுந்த தேவியின் தோற்றமும் அதைவிட அழகான நடிப்பும் தமிழ்ப் பாடலை ஒப்பிட இயலாத உயரத்திற்கு இட்டுச் செல்கிறது.
தமிழ்ப் பாடல்:
படம்: பகலில் ஓர் இரவு
பாடியவர்: எஸ்.பி.பாலசுப்பிரமணியன்
எழுதியவர்: கண்ணதாசன்
இசை: இளையராஜா
இளமை எனும் பூங்காற்று, பாடியது ஓர் பாட்டு
ஒரு பொழுது ஓர் ஆசை, சுகம் சுகம்
அதிலே ஒரே சுகம்
ஒரே வீணை ஒரே ராகம்…
தன்னை மறந்து மண்ணில் விழுந்து,
இளமை மலரின் மீது,
கண்ணை இழந்த வண்டு,
தேக சுகத்தில் கவனம்,
காட்டு வழியில் பயணம்,
கங்கை நதிக்கு…
மண்ணில் அணையா?
அங்கம் முழுதும் பொங்கும் இளமை,
இதம் பதமாய்த் தோன்ற,
அள்ளி அணைத்த கைகள்
கேட்க நினைத்தாள் மறந்தாள்
கேள்வி எழும் முன் விழுந்தாள்
எந்த உடலோ எந்த உறவோ?
மங்கை இனமும் மன்னன் இனமும்,
குலம் குணமும் என்ன?
தேகம் துடித்தால் கண்ணேது?
கூந்தல் கலைந்த கனியே
கொஞ்சி சுவைத்த கிளியே
இந்த நிலைதான் என்ன விதியோ?
இளமை எனும் பூங்காற்று, பாடியது ஓர் பாட்டு…
Courtesy: Tamil HIndu
காற்றில் கலந்த இசை 33: மூங்கில் வனம் இசைக்கும் கீதம்
திரைப்படங்களுக்கான இசையமைப்பு என்பது ஏனைய கலைகள்போலவே பல்வேறு வாழ்வியல் கூறுகளை உள்வாங்கும் திறனின் அடிப்படையில் அமைந்தது. ஒரு பாடலைக் கேட்கும்போதே இது சிறு நகரத்தில் நடக்கும் கதை, இது வயல்வெளி சார்ந்த கிராமத்தில் நடக்கும் கதை, இது மலையடிவார கிராமத்தின் கதை என்று பிரித்தறிய முடிகிறது என்றால், அந்தப் பாடல் இளையராஜாவின் ஆர்மோனியத்திலிருந்து பிறந்தது என்று நிச்சயமாகச் சொல்லிவிடலாம். அந்த அளவுக்குத் திரைப்பாடல்களில் நுட்பமான வேறுபாடுகளைக் கொண்ட இசைப் பின்னல்களை அவர் உருவாக்கியிருக்கிறார். மோகன், நளினி நடிப்பில் 1984-ல் வெளியான ‘மகுடி’ திரைப்படத்தின் இரண்டு பாடல்கள் இதற்கான உதாரணங்களில் அடங்குபவை. (படத்தின் மற்ற இரண்டு பாடல்கள் சுமாரானவை!)
அப்பாவித் தோற்றம், நன்கு முடியப்பட்ட குடுமி என்று நாட்டுப்புறப் பாடகன் வேடம் மோகனுக்கு. வேடம் சற்றும் பொருந்தவில்லை. எனினும், இளையராஜாவின் அருட்கடாட்சம் நிரம்பப் பெற்றதால், புகழ்பெற்ற பாடல்களுடன் தொடர்புடைய நடிகராகத் திகழும் மோகனுக்கு இப்படத்திலும் அழகான பாடல்கள் கிடைத்தன.
காட்டாற்று வெள்ளமாகப் பொங்கி வழியும் கிராமிய இசைக் கலைஞனின் திறமையை ஒழுங்குபடுத்தும் பெண், கர்நாடக இசையை அவனுக்குக் கற்றுக்கொடுப்பாள். மெல்ல மெல்ல அவன் மீதான பரிவு காதலாக மலரும் காட்சியமைப்பு. ‘நீலக்குயிலே உன்னோடு நான் பண் பாடுவேன்’ எனும் பாடலை அந்தக் காட்சிக்குத் தந்தார் இளையராஜா. எஸ்பிபி, ஜானகி பாடிய இந்தப் பாடல் பாமர ரசிகனுக்குக் கர்நாடக இசையின் சுவையைப் பகிர்ந்தளித்த படைப்பு. திரைப்பாடல்களில் அபூர்வமாய்ப் பயன்படுத்தப்படும் ரசிகரஞ்சனி ராகத்தின் சாயலில் அமைந்த பாடல் இது.
நீளமான பல்லவியை நாயகி பாட, அதைப் பிரதியெடுத்து நாயகன் பாட என்று பாடல் நீண்டுகொண்டே செல்லும். நிரவல் இசையில் வீணைக்கும், ஒற்றை வயலினுக்கும் இடையில் ஒரு உரையாடல் நிகழும். தொடர்ந்து புல்லாங்குழலுக்கும் வீணைக்கும் இடையில் இசைப் பரிமாற்றம். அதைத் தொடர்ந்து, பரந்த நிலப்பரப்பாக விரியும் வயலின் இசைக்கோவை என்று அற்புதங்களை நிரப்பியிருப்பார் இளையராஜா. இரண்டாவது நிரவல் இசையில், நதியின் மேற்பரப்பில் நழுவிச் செல்லும் மெல்லிய நீர்ப்படலத்தைப் போன்ற ஒற்றை வயலின் இசையை ஒலிக்கவிடுவார்.
பின்னாட்களில் இளையராஜா வெளியிட்ட ‘ஹவ் டு நேம் இட்’ எனும் ஆல்பத்தின் சில கூறுகளை இப்பாடலில் உணர முடியும்.
இளையராஜா பாடிய ‘கரட்டோரம் மூங்கில் காடு’ பாடல், புல்வெளிகள், ஓடைகள், ஊசியிலைக் காடுகள் நிறைந்த மலைக் கிராமத்தின் காட்சிகளைக் கண்முன் நிறுத்தும் பாடல். கிராமிய இசைக் கலைஞனின் புல்லாங்குழலிலிருந்து வெளிவரும் எளிய, இனிய இசையுடன் பாடல் தொடங்கும். பச்சைப் புல்வெளிகளால் போர்த்தப்பட்ட குன்றுகளில் பட்டு எதிரொலித்து, அந்த நாட்டுப்புறப் பாடகனிடமே வந்து சேரும் கணத்தில், ‘கரட்டோரம் மூங்கில் காடு…’ என்று அவன் பாடத் தொடங்குவான். இயற்கையை நேசித்துக்கொண்டே வழிப்போக்கனைப் போல் அலைந்து திரியும் அந்த கிராமிய இசைக் கலைஞன், கண்ணில் படும் எல்லா விஷயங்களையும் வியந்து பாடுவதுபோன்ற காட்சியமைப்பு. எளிய, அர்த்தம் பொதிந்த வார்த்தைகள்.
இயற்கைக் காட்சிகளின் பின்னணியில் ஒலிக்கும் பாடல்கள் என்றாலே, ஆர்க்கெஸ்ட்ரேஷனில் பின்னியெடுக்கும் இளையராஜா இப்பாடலில் மிகக் குறைவான இசைக் கருவிகளையே பயன்படுத்தியிருப்பார். எனினும், நகர வாசனையின் தீண்டலுக்கு அப்பாற்பட்ட தொலைதூர கிராமத்தின் அழகை வர்ணிக்கும் பாடல் வரிகளும், இளையராஜாவின் குரலும் பாடலை வேறொரு தளத்துக்கு இட்டுச் செல்லும்.
நிரவல் இசையில் பூச்செடிகளை அசைத்தபடி பரவிச் செல்லும் காற்றைப் போன்ற புல்லாங்குழல் இசையை ஒலிக்கவிடுவார். தடைகளற்ற வெளியில் காற்று அலைந்து திரியும் பகுதியில் அமைக்கப்பட்ட மின்சார ட்ரான்ஸ்பார்மரிலிருந்து வரும் மெல்லிய ரீங்காரம் ஒலிக்கும். அந்த ரீங்காரத்தை ஸ்வீகரித்துக்கொண்டு பாடலைத் தொடர்வான் கிராமத்துக் கலைஞன். ‘தொட்டாப் புடிக்கும் அந்த/ துடிக்காரன் போட்ட கம்பி/ சீமையிலே சேதி சொன்னா… இங்க வந்து பேசுதில்லே’ எனும் வரிகள் ஒரு கிராமத்தானின் வியப்பை இயல்பாகப் பதிவுசெய்யும்.
‘காட்டச் சுத்தி வண்டு பறக்குது…’ எனும் வரிகளைத் தொடர்ந்து பாடலுக்குள் மூழ்கித் திளைக்கும் களிப்பில் ‘உய்யாரா உய்யாரா உய்யார உய்யா’ எனும் வெற்று வார்த்தைகளைப் பாடுவான் பாடகன். வரப்பில் நடந்து செல்லும் பெண்கள் அந்த வார்த்தைகளைப் பாடியபடி கடந்து செல்வதைப் போன்ற பெண் குரல்களின் கோரஸ் ஒன்றை ஒலிக்கவிடுவார் ராஜா. அதைத் தொடர்ந்து எங்கோ குழந்தை அழும் சத்தமும், அதை அதட்டும் அதன் தாயின் குரலும் ஒலிக்கும்.
குழந்தையைத் திட்ட வேண்டாம் என்று அந்தப் பெண்ணிடம் சொல்லிவிட்டு அந்தக் குழந்தைக்கு ஒரு சிறு தாலாட்டு பாடுவான் நாயகன். ‘… அத்தை அடிச்சா அம்மா இருக்கா, அழுவாதே… அந்த அம்மாவே அடிச்சிப்புட்டான்னு அழுவுறியா… கவலப் படாதடா’ எனும் ஆறுதல் வார்த்தைகளுக்குப் பின்னர், ‘என் பாட்டு இருக்கு அழுவாதே அதக் கேட்டு ஒறங்கு பொழுதோடே’ என்று பாடும்போது இளையராஜாவின் குரலில் இருக்கும் வெம்மை அத்தனை கதகதப்பைத் தரும். அந்தத் தாலாட்டில் மயங்கி உறக்கத்தைத் தழுவுவது அந்தக் குழந்தை மட்டுமல்ல, நாமும்தான்.