http://i1039.photobucket.com/albums/...psibmbubul.jpg
Printable View
[b]சினிமா விமர்சனம் : திருவிளையாடல் (1965)
சண்முகம் பிள்ளை
மீனாட்சி அம்மாள்
மீனாட்சி: ஒரு நல்ல புராணப் படம் பார்த்ததிலே மனசுக்கு எவ்வளவு நிம்மதியா இருக்கு தெரியுங்களா?
சண்முகம்: ஆமாம் மீனாட்சி, கண் குளிர காட்சிகளையும், காதுகுளிர பாட்டுக்களையும் கேட்டு, நான் சில இடங்களில் மெய்சிலிர்த்துப் போனேன். அதிலும் கே.பி.சுந்தராம்பாளோட குரல்...
மீனா: 'முருகா’ என்று அந்த ஒளவைப் பாட்டி கூப்பிடறபோது நம்ப மனசெல்லாம்கூட உருகுதுங்க. அதே மாதிரி, சிவாஜி கணேசனுக்கு சிவன் வேஷம் என்ன பொருத்தமா இருக்குது!
சண்: அதிலும் ருத்ரமூர்த்தியா வரபோது, ரொம்பப் பொருத்தம்!
மீனா: பாண்டியன் சபையிலே வந்து நக்கீரனை மடக்கின காட்சி, என் கண் முன்னாலயே நிக்கு துங்க!
சண்: ருத்ர தாண்டவமும் பிரமாதமாத்தான் இருந்துது. மீனவனா வந்து ஒரு நடை நடக்கிறாரே... எப்படி?
மீனா: அழகா இருந்தது. ஆனா, கொஞ்சம் சிரிப்பும் வந்தது. அங்கே எனக்கொரு சந்தேகங்க! பிட்டுக்கு மண் சுமந்த கதையிலேதானே, ஈசன் உடம்பிலே பட்ட அடி எல்லார் உடம்பிலேயும் படறதாக வரும். இதுலே...
சண்: இதோ பார் மீனாட்சி, திருவிளையாடல் புராணம் ரொம் பப் பெரிசு! அதிலே எல்லாத்தையும் காட்டமுடியுமா? அத னால, ஒரு கதையிலே இன்னொரு சம்பவத்தைப் புகுத்தி இருக்காங்க... கதையா முக்கியம்? தத்துவம்தானே முக்கியம்! இவ்வளவு பெரிய புராணக்கதையை எடுத்துக்கிட்டு, சிறப்பா திரைக்கதை அமைச்சு, வசனம் எழுதி, டைரக்ட் செய்த ஏ.பி.நாகராஜனைக் கண்டிப்பா பாராட்டத்தான் வேணும்.
மீனா: பாலமுரளி கிருஷ்ணாவின் 'ஒரு நாள் போதுமா’ங்கற பாட்டு என் காதிலே இன்னும் ஒலிச்சுக்கிட்டிருக்குங்க!
சண்: எந்தப் பாட்டுதான் ஒலிக்கலே?! டி.ஆர்.மகாலிங்கம் பாடறாரே 'இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை...’ அதைச் சொல்றதா, இல்லே 'பாட்டும் நானே’ங்கற டி.எம்.சௌந்தரராஜன் பாடற பாட்டைச் சொல்றதா? கே.வி.மகாதேவனுக்கு ஒரு 'சபாஷ்’ சொல்ல லாம்.
மீனா: எல்லாம் சரி... ஒரு தமிழ்ப் புலவரை வச்சுக்கிட்டு 'காமெடி’ பண்ணி இருக்க வேண்டாமோன்னு தோணிச்சு!
சண்: ஏன், நாகேஷ் ரொம்ப நல்லா பண்றாரே அதை! புரா ணப் படத்திலே ரொம்ப அழகா காமெடி கொண்டு வந்திருக்காங் கன்னுதான் எனக்குத் தோணுது!
மீனா: சமூகப் படங்கள் பெருகிப் போய்விட்ட இந்தக் காலத் திலே, இப்படி ஒரு புராணப் படம் வந்து, அதுவும் இவ்வளவு நல்லா அமைஞ்சது ரொம்பவும் சந்தோஷப்பட வேண்டிய விஷயங்க. அடுத்த வாரம் நான் இன்னொரு தடவை இந்தப் படத்தை போய்ப் பார்க்கலாம்னு இருக்கேன்.
சண்: போகும்போது சொல்லு; நானும் வரேன்!
விகடன்.
courtesy : Facebook
கலை மகள் துணை கொண்டு கலை வென்று
புகழ் கொண்ட காவலன் வாழ்க வாழ்க
மலை மகள் வரம் கொண்டு மலை போன்ற
பலம் கொண்ட மன்னவன் வாழ்க வாழ்க
திரு மகள் அருள் கொண்டு பொருள் கொண்ட
திருவருட் செல்வனே வாழ்க வாழ்க
இயல் இசை நாடகம் முத்தமிழ்
காக்கின்ற தலைவனே வாழ்க வாழ்க
குடி மக்கள் மனம் போல முடியாட்சி
காண்கின்ற கொற்றவா வாழ்க வாழ்க
நின் கொடி வாழ்க படை வாழ்க குடி வாழ்க
குலம் வாழ்க நலமும் பல்லாண்டு வாழ்க
From Today's Dinamani Kanavu kannigal.
1963ல் பானுமதி நாயகியாக நடித்து மூன்று தமிழ்ப்படங்கள் வெளிவந்தன. அவை நீண்ட காலத் தயாரிப்பில் இருந்தவை.
மக்கள் திலகத்துடன் கலை அரசி, காஞ்சித் தலைவன், நடிகர் திலகத்துடன் அறிவாளி. தொடக்கத்தில் எதிர்பார்த்த பெரிய வெற்றி அமையாது போனது. ஆயினும் கே. டிவி வருகிற வரையில் மறு வெளியீடுகளில் தொடர்ந்து வசூலித்தன.
‘அறிவாளி’ சிவாஜி - பானுமதி நடித்த மற்றுமொரு சிரிப்புப் படம். ஆங்கில சினிமாவின் தழுவல். கணேசனும் பானுமதியும் போட்டி போட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார்கள். குறிப்பாக அவர்களது திருமணக் காட்சியில் வயிறு சிரித்து சிரித்துப் புண்ணாகி விடும். ஆபாசமற்ற அக்மார்க் ஹாஸ்ய அமர்க்களம்!
ஆண் ஆதிக்கத்தை வெறுக்கும் பானுமதியின் இயல்பான குணத்தையொட்டிய கதாபாத்திரம் நாயகி மனோரமா. அதனால் பானுமதியின் நடிப்பு முழு வீச்சில் கொடி கட்டிப் பறந்தது.
அறிவாளியின் சிறப்புக்கு குமுதம் எழுதிய விமர்சனம் கட்டியம் கூறியது.
‘நிமிஷத்துக்கொரு சிரிப்பு. நடிப்பில் சிவாஜியும் பானுமதியும் மோதிக்கொள்ள வேண்டும் என்ற நம் விருப்பம் நிறைவேறியது. மோதலின் முடிவு ட்ரா.
பானுமதியின் வெளிப்படையான ஆர்ப்பாட்டத்துக்கும் கணேசனின் உள்ளடங்கிய தன்னம்பிக்கைக்கும் - வெறுப்பில் பிறந்த பானுமதியின் பரபரப்புக்கும், அன்பில் உதித்த சிவாஜியின் சூழ்ச்சிக்கும் நல்ல பொருத்தம்.
மூன்று சண்டைப் படங்களால் கலைக்கு நேரக் கூடிய சேதத்தை, ஒரே ஓர் ‘அறிவாளி’யால் ஈடு செய்ய முடியும்.’
குமுதம் ஓஹோவென்று அறிவாளியைப் பாராட்டி விமர்சித்த விதத்தில் எம்.ஜி.ஆர். ரசிகர்கள் நொந்து போனார்கள்.
http://media.dinamani.com/2015/12/16...al/arivali.jpg
966 குடியரசு தினத்தில் பானுமதிக்கும் சிவாஜிக்கும் ஒரே சமயத்தில் பத்மஸ்ரீ பட்டம் கிடைத்தது. அதையொட்டி நடிகர் திலகமும், பானுமதியும் ஒருவரை ஒருவர் பாராட்டி, கட்டுரை எழுதினர். தமிழ் சினிமாவின் மிக அபூர்வ நிகழ்வு அது!
பானுமதி பற்றி சிவாஜிகணேசன் -
http://media.dinamani.com/2015/12/16...nal/sivaji.jpg
‘இரவு மணி ஒன்பதுக்கு மேலிருக்கும். நாடகம் சில நிமிஷங்களுக்கு முன்பு முடிந்திருந்தது. நடித்து முடித்த களைப்பு உடலெங்கும் நிரவியிருந்தாலும் உள்ளத்திலே ஏதோ ஒரு வகை பரபரப்பு. அதையொட்டி உடலிலே ஒரு சுறுசுறுப்பு.
அவசர அவசரமாக மேக் அப்பைக் கலைத்து விட்டு, சாப்பிட உட்கார்ந்தேன். என்னைப் போலவே என் நண்பர்களும் பறந்தார்கள். சிறிது நேரத்தில் நாங்கள் அனைவரும் கிளம்பத் தயாராகி விட்டோம்.
எங்கே? ஸ்வர்க்க சீமா படத்தைப் பார்க்க. அதுவும் இரண்டாவது தடவையாகப் பார்க்க!
‘பத்மஸ்ரீ பானுமதி ’பாவுரமா’ பானுமதியாக இதில் வந்து, தனக்கென ஒரு புதிய சகாப்தத்தை வகுத்துக் கொண்டு, புகழ் ஏணியின் முதல் படியில் காலை வைத்துக் கொண்டிருந்த நேரம்.
அதே சமயத்தில் பெங்களூரில் அப்போது சக்தி நாடக சபாவினர் முகாமிட்டு, நாடகங்களை நடத்திக் கொண்டிருந்தார்கள்.
கம்பெனியில் நானும் ஒரு நடிகன். கவியின் கனவு, ஜீவன், விதி, ராம பக்தி, மனோகரா போன்ற நாடகங்களை அப்போது அங்கு நடத்திக் கொண்டிருந்தோம். மாலையில் நாடகம் நடக்கும். இரவு ஒன்பது மணி சுமாருக்கு முடியும்.
பெங்களூரில் அப்போது ‘ஸ்வர்க்க சீமா’ படம் திரையிடப்பட்டிருந்தது. பானுமதி இதில் பிரமாதமாக நடித்திருப்பதாகக் கேள்விப்படவே, ஒரு நாள் நாடகம் முடிந்ததும், இரவு ஒன்பது மணிக் காட்சிக்கு நண்பர்களுடன் படம் பார்க்கப் புறப்பட்டேன்.
ஒன்றும் தெரியாத பட்டிக்காட்டுப் பெண் சுப்புலு, பெரிய நடிகையாகி, நாகரிக மங்கை சுஜாதாவாக மாறி விடுகிறாள்.
பட்டிக்காட்டு சுப்புலுவாகவும், நாகரீக மங்கை சுஜாதாவாகவும் ஒன்றுக் கொன்று முற்றிலும் இரு மாறுபட்ட வேஷங்களில் பானுமதி சிறப்பாக நடித்திருந்தார்.
அன்றுதான் நான் அவர் நடித்த படத்தை முதன் முதலாகப் பார்த்து, அன்றைய தினமே, அவர் ஒரு சிறந்த நடிகை என்ற மதிப்பையும் என் உள்ளத்தில் இடம் பெற வைத்து விட்டேன்.
அப்போது நான் பெண் வேஷங்களில் நடிப்பதும் உண்டு. குறிப்பாக மனோகராவில் பத்மாவதியாக நடிப்பேன். ஆகவே ஸ்திரி பார்ட் போட்டு நடித்ததனால், ஒரு பெண் எப்படியெல்லாம் நடிக்க வேண்டும் என்பதையும் கற்பனை செய்து நடித்து வந்தேன்.
பானுமதியை திரையில் கண்ட போது, அந்த அனுபவத்தின் அடிப்படையில் அவரது நடிப்பைக் கூர்ந்து கவனித்தேன். பெண் வேஷம் ஏற்று நடிப்பவர், பெண்ணாகவே இருந்தாலும் அதன் நெளிவு சுளிவுகளில் ஒரு தனி குணத்தையே பானுமதியின் நடிப்பில் காண முடிந்தது.
பானுமதி நடித்திருந்த பாணி என்னைக் கவர்ந்து விட்டது. இரண்டு முறைகள் பார்த்திருக்கிறேனே... அவரது நடிப்புக்காக!
படம் பார்த்து விட்டுத் திரும்பும் நாங்கள் உடனே படுக்கப் போய் விட மாட்டோம். அதைப் பற்றி வாயாரப் பேசுவோம். விவாதிப்போம்.
‘ரத்ன குமாரில்’ ஒரு காட்சி. குழந்தைகள் கையில் வைத்துக்கொண்டு விளையாடும் கிலுகிலுப்பை போன்ற ஒரு பொருள். கம்பின் கீழே ஒரு குரங்கு பொம்மை. மேலே ஒரு கிளி. கீழே உள்ள விசையை அழுத்தினால் இந்தக் குரங்கு உடனே தாவி, மேலே உள்ள கிளியைத் தொட்டு விட்டு வரும்.
அதைத் தன் கையில் வைத்துக் கொண்டு, ஒரு பாட்டுப் பாடியவாறு ரத்னகுமாரில் வருவார். பானுமதி பாடி, நடித்துள்ள அக்காட்சியை எவ்வளவு ரசித்திருக்கிறேன் தெரியுமா?
பாட்டும், நடிப்பும் பிரமாதமாக இருக்கும்.
அடுத்து நான் பார்த்தது ஜெமினியின் ‘அபூர்வ சகோதரர்கள்’ படம்! ஏன், அதன் பின்னர் வெளி வந்த பானுமதியின் படங்கள் ஒவ்வொன்றையும் பார்க்கத் தவறியதே இல்லை!
ஒவ்வொரு படத்திலும் அவர் நடிப்புத் திறமையில் தனித்து நின்று, பிரகாசிப்பதைக் காண முடிந்தது.
பானுமதியுடன் நடிக்கும் போது, நமக்கு அனுசரணையாக அவரது உதவியும் கிடைக்கும். உதாரணமாக உணர்ச்சிமிக்கக் கட்டமொன்றில் நடிக்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். என்னுடன் நடிப்பவரும், நான் எந்த அளவில் உணர்ச்சியைக் கொட்டி நடிக்கிறேனோ, அதே அளவில் தன்னுடைய நடிப்பிலும் பிரதிபலித்துக் காட்டினால் தானே, நடிப்பவர்களுக்கு உற்சாகமாக இருக்கும்.
இந்த உதவி எதிர்த்தரப்பில் நடிப்பவர்களிடமிருந்தும் கிடைக்க வேண்டும். பானுமதியுடன் நடிக்கும் போது அது தாரளமாகக் கிடைக்கும்.
காட்சியின் அமைப்பைச் சொல்லி விட்டால் போதும்! அவரும் சரி, நானும் சரி அதைப் புரிந்து கொண்டு நடிக்க ஆரம்பித்து விடுவோம்!
பரஸ்பரம் அந்த உதவி இருந்தால் தான் காட்சியில் சோபிக்க முடியும். அதை அவரும் புரிந்து கொண்டவர்; நானும் புரிந்து வைத்திருக்கிறேன்.
‘மக்களைப் பெற்ற மகராசி’ படம் ஆரம்பமாகியது. நானும், அதன் கதாசிரியர் ஏ.பி. நாகராஜனும், இதில் வரும் நாயகனும், நாயகியும் கொங்கு நாட்டுத் தமிழில் பேசி நடித்தால் நன்றாக இருக்கும் என்று அபிப்ராயப்பட்டோம். அதை எல்லாரும் ஆமோதித்தார்கள்.
பானுமதி தெலுங்கு நடிகை. தமிழில் பேசி நடிக்கக் கூடியவர். ஆயினும் கொங்கு நாட்டுத் தமிழைப் பேசி நடிக்க வேண்டுமே!
அவர் எப்படிப் பேசி நடிக்க வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தேன். பானுமதிக்கு சொல்லிக் கொடுப்பதில் யாருக்கும் கஷ்டமே இருக்காது.அவர் நொடியில் எதையும் புரிந்து கொண்டு விடுவார்!
கொங்கு நாட்டுத் தமிழும் சில விநாடிகளிலேயே அவருக்குக் கை வந்த கலையாகி விட்டது. அதை நானும், அவரும் பேசி நடிக்கும் போது ஒரே தமாஷாக இருக்கும்!’
http://media.dinamani.com/2015/12/16...bhanumathi.jpg
தமிழகத்தில் விரைவில் பொன் விழா கொண்டாட இருக்கிறது திராவிடக் கட்சிகளின் ஆட்சி! ஆரம்பத்தில் அதற்கு நங்கூரம் பாய்ச்சியது நடிகர் திலகத்தின் மிகக் கடுமையான உழைப்பு. மறந்தும் கூட யாராலும் அதை மூடி மறைக்க இயலாது.
‘கணேசனுக்கு அவர் வாழ்நாளின் கடைசி நொடி வரையில், சிறந்த நடிகருக்கான பரிசு கிடைக்காமல் செய்ததே, நம்மை ஆண்டவர்கள் காட்டிய நன்றிக்கடன்!’
தெலுங்கு நடிகையாகப் பிறந்தாலும் மிக்கப் போராட்ட உணர்வோடு, தமிழ் நடிகர் சிவாஜி கணேசனுக்காகத் துணிச்சலாக வாதாடியவர் பானுமதி. அவர் வழங்கிய வாக்குமூலம் அதற்கு சத்திய சாட்சி!
நடந்தது என்ன?
தமிழக அரசின் திரைப்பட விருது தேர்வுக் குழுவில் பானுமதி பங்கு பெற்றார். சிவாஜி நடித்த படங்களும் போட்டிக்கு வந்திருந்தன.
பரிசளிப்பில் நடிகர் திலகத்தைத் தவிர்த்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள் அவார்டு கமிட்டியினர்.
சிறந்த நடிகராக வேறொருவரை அறிவிக்கச் சொல்லி, ஆணை பிறப்பிக்கவில்லையே தவிர பலத்த சிபாரிசு வந்தது.
ஆற்றலுக்கொரு கலைஞன் கணேசனுக்கு நடந்த அசிங்கம் கண்டு சிலிர்த்து எழுந்தது பெண் சிங்கம். உடனடியாகப் பதவி விலகியது. தன் உறுமலை உரத்த குரலில் அரசாங்கத்தில் எதிரொலித்தது.
‘நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்குச் சிறந்த நடிகர் விருது அளிக்க அரசுக்கு விருப்பம் இல்லையென்றால், பேசாமல், நாகரிகமாக தமிழக அரசே சிவாஜி கணேசன் அவர்களையோ, அல்லது அவரது தயாரிப்பாளர்களையோ இனிமேல், ‘திரைப்பட விருதுக்கான தேர்வு கமிட்டிக்கு உங்கள் திரைப்படங்களை அனுப்பாதீர்கள்’ என்று கேட்டுக் கொள்ளட்டும். அதை விட்டுவிட்டு, மறைமுகமாக சிவாஜியை மறைக்கப் பார்க்க வேண்டாம்.
என்னைப் பொறுத்த வரையில் எத்தனை முறை நான் தேர்வு கமிட்டியில் இருந்தாலும், அங்கே சிவாஜி கணேசன் அவர்களின் படங்கள் தேர்வுக்கு வந்தால், நடிகர் திலகத்தைத் தான் சிறந்த கலைஞராகத் தேர்வு செய்வேன். ஏனெனில் நடிப்புக் கலையில் அவரே சிறந்தவர்!’
http://www.zeetamizh.com/shows/laksh...tml#vuukle_div
சில சமயங்களில் சீரியல்களைப் பாார்க்காமல் விடுவதும் தவறோ எனத் தோன்றுகிறது. அதற்கு இந்த காணொளி ஓர் உதாரணம்.
ஒரு கதாபாத்திரத்தையே நடிகர் திலகத்திற்காக ஒதுக்கி வைத்து விட்ட அற்புதமான அர்பணிப்பிற்காக இந்த சீரியல் இயக்குநருக்கு உளமார்ந்த நன்றி. நடிகர் திலகம் இறந்து விட்டார் என்ற செய்தி கேட்டு மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை ஒரு முக்கியமான கதாபாத்திரமாக அமைத்து அவருக்கு குணமாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதை கதையின் முக்கிய அம்சமாக வைத்துள்ளார்கள்.
தொலைக்காட்சியில் வாழ்க்கை படம் பார்த்துக்கொண்டிருக்கிறார் அந்தப் பாட்டி. அப்போது வீட்டிற்கு வரும் விருந்தாளி ஒருவர் சிவாஜி செத்து விட்டதாக சொல்ல அவரிடம் பாய்ந்து பாய்ந்து அடிக்க முனைகிறார் அந்தப் பாட்டி.
பக்கத்தில் இருக்கும் பாட்டியின் சொந்தக்காரர்கள் ஓடி வந்து தடுத்து வந்திருப்பவரிடம் விஷயத்தைச் சொல்கிறார்கள். சிவாஜி உயிரோடு இருப்பதாக அவர்கள் சொன்ன பிறகு தான் அந்தப் பாட்டி சகஜ நிலைக்குத் திரும்புகிறார்.
தலைவா... இது கதையல்ல நிஜம்... இன்று பல வீட்டில் இப்படிப்பட்ட் பாட்டிகளைப் பார்க்கலாம்.
இந்த சீரியலுக்காக இந்தப் பாத்திரத்திற்காக ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு உளமார்ந்த நன்றி.
தகவலுக்கு நன்றி டாக்டர் கோவை ரமேஷ் பாபு அவர்கள்.
இதில் இன்னொரு சுவாரஸ்யம். இதற்கு முந்தைய காட்சியில் ஒரு தம்பதி ஒரு பாட்டுக்கு ஆட ஒத்திகை பார்க்கிறார்கள்.
அந்தப் பாடல்.. எம்.ஜி.ஆர். கே.ஆர். விஜயா நடித்த விவசாயி படத்திலிருந்து இப்படித்தான் இருக்க வேணும் பொம்பளே பாடல்.
நடிகர் திலகத்திற்கு நடந்த மற்ரோர் துரோகம் இது
இரத்தம் கொதிக்கிறது
தமிழகத்தில் விரைவில் பொன் விழா கொண்டாட இருக்கிறது திராவிடக் கட்சிகளின் ஆட்சி! ஆரம்பத்தில் அதற்கு நங்கூரம் பாய்ச்சியது நடிகர் திலகத்தின் மிகக் கடுமையான உழைப்பு. மறந்தும் கூட யாராலும் அதை மூடி மறைக்க இயலாது.
‘கணேசனுக்கு அவர் வாழ்நாளின் கடைசி நொடி வரையில், சிறந்த நடிகருக்கான பரிசு கிடைக்காமல் செய்ததே, நம்மை ஆண்டவர்கள் காட்டிய நன்றிக்கடன்!’
தெலுங்கு நடிகையாகப் பிறந்தாலும் மிக்கப் போராட்ட உணர்வோடு, தமிழ் நடிகர் சிவாஜி கணேசனுக்காகத் துணிச்சலாக வாதாடியவர் பானுமதி. அவர் வழங்கிய வாக்குமூலம் அதற்கு சத்திய சாட்சி!
நடந்தது என்ன?
தமிழக அரசின் திரைப்பட விருது தேர்வுக் குழுவில் பானுமதி பங்கு பெற்றார். சிவாஜி நடித்த படங்களும் போட்டிக்கு வந்திருந்தன.
பரிசளிப்பில் நடிகர் திலகத்தைத் தவிர்த்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள் அவார்டு கமிட்டியினர்.
சிறந்த நடிகராக வேறொருவரை அறிவிக்கச் சொல்லி, ஆணை பிறப்பிக்கவில்லையே தவிர பலத்த சிபாரிசு வந்தது.
ஆற்றலுக்கொரு கலைஞன் கணேசனுக்கு நடந்த அசிங்கம் கண்டு சிலிர்த்து எழுந்தது பெண் சிங்கம். உடனடியாகப் பதவி விலகியது. தன் உறுமலை உரத்த குரலில் அரசாங்கத்தில் எதிரொலித்தது.
‘நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுக்குச் சிறந்த நடிகர் விருது அளிக்க அரசுக்கு விருப்பம் இல்லையென்றால், பேசாமல், நாகரிகமாக தமிழக அரசே சிவாஜி கணேசன் அவர்களையோ, அல்லது அவரது தயாரிப்பாளர்களையோ இனிமேல், ‘திரைப்பட விருதுக்கான தேர்வு கமிட்டிக்கு உங்கள் திரைப்படங்களை அனுப்பாதீர்கள்’ என்று கேட்டுக் கொள்ளட்டும். அதை விட்டுவிட்டு, மறைமுகமாக சிவாஜியை மறைக்கப் பார்க்க வேண்டாம்.
நடிகர் திலகத்தின் சிறந்த நடிப்பில் 1952 ல் பராசக்தி வெளிவந்து
வெள்ளிவிழா கண்டு சாதனை படைத்ததோ அன்றே
நடிகர் திலகத்தின்மீது பொறாமை, கோபம் ,குரோதம், வன்மம்,
வஞ்சகம், களுத்தறுப்பு, கால்வாரல்,துரோகம், எல்லாம் அரங்கேற ஆரம்பித்துவிட்டன
பத்திரிகைகள், புத்தகங்களில் நடிகர் திலகத்தின் திரைப்படங்கள் பற்றி
மட்டமான விமர்சனம் எழுதவைத்தல், அவரது நடிப்பை திரித்து எழுததூண்டுதல்
அவரது படங்களின் சுவரொட்டிகளை கிழித்தெறிதல், சாணி அடித்தல்
என்பன நடிகர் திலகத்தை போட்டியாக, எதிரியாக நினைத்தவர்களால்
அரங்கேற தொடங்கின.
http://i1146.photobucket.com/albums/...psakgyrhnq.jpg
நடிகர் திலகம் திரைப்பட விவரங்களுக்கான திரி துவங்கப்பட்ட போது எத்தனை பெரிய பணி என்பதை ஓரளவு அனுமானித்திருந்தாலும் அதனுடைய செயலாக்கத்தின் போது தான் அதன் முழுமையான பரிமாணம் தெரிய ஆரம்பித்தது. 300க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் மக்கள் தலைவர் காவிய நாயகன் நடிகர் திலகத்தின் பங்களிப்பினையும் அவருடன் பணியாற்றியவர்களின் விவரங்களையும் சேகரித்து இங்கே அளிக்கலாம் என்ற எண்ணம் தோன்றி அதை செயல்படுத்தத் துவங்கிய போது அதற்கான வரவேற்பு எப்படி இருக்குமோ என்ற ஐயமும் தோன்றியது. ஆனால் சுமார் இரண்டு ஆண்டுகளாக இதில் தொடர்ந்து சிவாஜி ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் பார்வையாளர்களின் அமோக ஆதரவில் இன்று
2,00,000 இரண்டு லட்சம்
என்கிற எண்ணிக்கையைக் கடந்து பயணிக்கிறது. இதற்காக அனைவருக்கும் உளமார்ந்த நன்றி.
தொடர்ந்து அனைவரின் ஆதரவையும் பங்களிப்பையும் எதிர்நோக்கித் தொடர்கிறது பயணம்.
அன்புடன்
ராகவேந்திரன்
தங்க சுரங்கம் - கண்கவரும் கொள்ளை அழகில் மக்கள் தலைவரின் அட்டகாசமான தோற்றங்கள் - அணிவகுப்பு
http://i1146.photobucket.com/albums/...ps3y18cdek.jpg
செய்தி
மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவிடும் வகையில், நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை சார்பில் இலவச மருத்துவ முகாம், சென்னை, (வியாசர்பாடி) M .K .B .நகர், முல்லை நகர் பேருந்து நிலையம் அருகிலுள்ள, M .S மகாலில், 20-12-2015, ஞாயிறு காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெற்றது.
தேர்ந்த மருத்துவர்களைக் கொண்டு நடத்தப்பட்ட இந்த மருத்துவ முகாமில் பொதுமக்கள் 723 பேருக்கு, மருத்துவ ஆலோசனைகளும், இலவசமாக மருந்துகளும், நிலவேம்பு கஷாயமும் வழங்கப்பட்டன.
நடிகர்திலகம் சிவாஜி சமூகநலப்பேரவை தலைவர் K.சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமை சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர் (பொது சுகாதாம் ) திரு.இரா.கண்ணன், IAS, தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில், சிவாஜி சமூகநலப்பேரவை நிர்வாகிகள் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, SKS,சாரதி, கமலக்கண்ணன், மாவட்டத் தலைவர்கள் குறிஞ்சி பாலாஜி, B.குபேரன், P.ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்துகொண்டனர்
http://i1234.photobucket.com/albums/...psqcpx4gpy.jpg
http://i1234.photobucket.com/albums/...psjbesxbey.jpg
http://i1234.photobucket.com/albums/...psflxgbxeh.jpg
http://i1234.photobucket.com/albums/...pshbapqtdq.jpg
http://i1234.photobucket.com/albums/...psjc4rayvi.jpg
http://i1234.photobucket.com/albums/...pshpwwjfsj.jpg
http://i1234.photobucket.com/albums/...ps9zmhbiuw.jpg
http://i1234.photobucket.com/albums/...pshoiz0jpy.jpg
http://i1234.photobucket.com/albums/...psk4clrosp.jpg
http://i1234.photobucket.com/albums/...pspyh4hwxg.jpg
தரிசனம்-2.
-------------
தாவணிக் கனவுகள்.
---------------------
தொடர்கிறது...
-----------------
( 8 )
-------
வயது முதிர்வு மட்டுமல்ல..
அனுபவ முதிர்வும், அதனால்
ஏற்படுகிற பக்குவமும்,
கர்வமற்ற பெருந்தன்மையுமே
ஒரு வயசாளியை, 'பெரியவர்'
என மதிக்க வைக்கிறது.
கேப்டன், தன்னைப் 'பெரியவர்'
என அழுத்தமாக நிரூபித்த
விநாடியில், சுப்ரமணியம்
நெகிழ்ந்திருந்தான்.
'உன்னிலும் இளையவன்' என்று தன்னைத் தாழ்த்திக் கொண்டு உணர்ச்சி வசப்பட்ட கேப்டன் எனும் பெரியவரை
வியந்திருந்தான்.
சிந்திய கண்ணீரைத் துடைத்துக்
கொண்டு கேப்டன், சுப்ரமணியத்துடன் அவன்
வீடு நோக்கி நடக்கிறார்.
உள்ளத்தில் நிறைவோடு, ஒரு
எளிய குடும்பத்திற்கு தன்
மனப்பூர்வமான உதவியைத்
தரப் போகும் லட்சிய நடை
அது.
---------------
சுப்ரமணியத்தின் பெரிய தங்கையைப் பெண் பார்க்க
வந்தவர்கள் பூரிக்கிறார்கள்.
அவர்களுக்குப் பெண்ணைப்
பிடித்து விட்டதை அவர்களின்
திருப்திப் புன்னகைகள் தெரிவிக்கின்றன.
தந்தையில்லாத சுப்ரமணியத்தின் சார்பில் பெண்
பார்க்க வந்தவர்களிடம் பேசும்
பெரிய மனிதராகக் கேப்டன்
நடுக் கூடத்தில் ஆரோகணித்திருக்கிறார்.
"பொண்ணை எங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு."
-மாப்பிள்ளைப் பையனின்
அம்மா பளீரென்று தெரிவிக்க..
சபை சந்தோஷமாகிறது.
"என்னப்பா... சுப்ரமணியம்
எல்லாரும் மங்களகரமா பேசி
முடிச்சிட்டாங்க. நீ என்ன சொல்றே..?"
"இல்ல... மாப்பிள்ளை ஒண்ணும் சொல்லல.. அதான்."
என்று இழுக்கிறான்.. சுப்ரமணியம்.
"அட...ஆமா! மாப்பிள்ளை..
உங்களுக்குப் பொண்ணைப்
பிடிச்சிருக்கா?"- என்று
கனிவுடன் விசாரிக்கிறார்.
அந்த மாப்பிள்ளைப் பையன்
பதிலேதும் பேசாமல் வெட்கப்
புன்னகை புரிகிறான்.
"அடடடே... மாப்பிள்ளை வெட்கப்படுறாரு" என்று தன்
அருகிலிருக்கும் சுப்ரமணியத்தின் தொடையிலடித்துச் சிரிக்கும்
கேப்டன், திரும்பவும் மாப்பிள்ளையிடம் " சும்மா
கூச்சப்படாமப் பேசுங்க மாப்ளே" என்கிறார்.
"அவரு பேச மாட்டாரு" என்று
சத்தமாக, உறுதிபட
ஒலிக்கிறது... சுப்ரமணியத்தின்
தாயாரின் குரல்.
வீடு நிசப்தமாகிறது.
சுப்ரமணியம், கேப்டன் உள்ளிட்டோரின் முகங்களில்
கேள்விக்குறிகள்.
கேள்விக்குறிகளைத் தானே
முறிக்கிறார்.. சுப்ரமணியத்தின்
தாயார்.
"மாப்பிள்ளை.. ஊமை."
சுப்ரமணியம் அதிர்கிறான்.
கேப்டன் திகைக்கிறார்.
கதவுக்குப் பின்னால் நின்று,
தனக்கான விசேஷத்தை
ஆச்சரிய மகிழ்வோடு பார்த்துக்
கொண்டிருக்கும் சுப்ரமணியத்தின் பெரிய
தங்கை கண்ணீர் சிந்துகிறாள்.
கதவைப் பற்றியிருக்கும் அவள்
கையில் துள்ளி விழும் அவள்
கண்ணீர்த் துளிகள்-
கலங்கிய அவளது நீர் வடிவ
உள்ளம்.
அவளது கனவுகளை அழித்தொழித்து ஓடி வரும்
வெள்ளம்.
சுப்ரமணியம் அவமானத்தில்
குறுகிப் போகிறான்.
"என்னடா பாக்கிறே.. இத்தனை
நாள் பொண்ணு பாக்க வந்தவங்க, அது வேணும், இது
வேணும்னு கேட்டப்ப நாம
பேச முடியாம இருந்தோம்.
இப்ப அவரு பேசலேயேன்னு
நாம் வருத்தப்படறதுல்ல
என்னடா நியாயம் இருக்கு?"
ஏழ்மை, நியாயம் பேசுகிறது.
சுப்பிரமணியத்தின் இயலாமை,
அவனது தன்மானத்தின் குரல்வளையை நெறித்துப்
பேச விடாமல் செய்கிறது.
கேப்டன்,சூழ்நிலையைப் புரிந்து
கொள்கிறார். அங்கே பல
இதயங்களிலிருந்து வலிக்க,
வலிக்க வெளியேறி வரும்
ரத்தக் கண்ணீர் வெள்ளம்
அவரை அரூபமாய் நனைக்கிறது.
சும்மா அங்கே அமர்ந்திருப்பதில் அர்த்தமில்லை என்று முடிவெடுத்தவராய் "ஒரு
நிமிஷம்" என்று அனுமதி
கேட்டு, சுப்ரமணியத்தின்
தங்கை நின்றழுத இடம் நோக்கி
நடக்கிறார்.
அவளை அழைத்துக் கொண்டு
அறைக்குள் வந்த கேப்டன்,
அவள் இந்தத் திருமணத்திற்குச்
சம்மதித்து விட வேண்டாம்
எனக்கு கேட்டுக் கொள்கிறார்.
"இது..உன் வாழ்க்கைப் பிரச்சினைடா. சரின்னு சொல்லிடாதே".
அவள் அழுதபடி சொல்கிறாள்..
"கேப்டன்.. மனசுக்குப் பிடிச்ச
மாதிரி சட்டை தைச்சிப்
போடணும்னு எங்க அண்ணன்
ஆசைப்படுது. மானத்தை
மறைக்க ஏதோ ஒண்ணைப்
போட்டாப் போதும்னு எங்க
அம்மா நினைக்கிறாங்க. எங்க
நிலைமைக்கு, எங்க அம்மா
நினைக்கிறதுதான் சரி."
அந்தப் பெண்ணை அவளது
ஏழ்மை பக்குவப்படுத்தியிருக்கிறது.
குடும்பக் கஷ்டத்தின் மீதான
புரிதல் மிகுந்த அந்தப் பெண்,
ரணங்களுடன் வாழ்வதற்குக்
கூட கண்ணீரோடு தயாராகி
விட்டாள்.
கேப்டனுக்கு அந்தப் பெண்ணின் தியாகத்தில் சம்மதமில்லை.
" நோ.. சரி கிடையாது. நீ ஒத்துக்காதே. உங்கண்ணன்
வேலையில்லாதவன்கிற
ஒரே காரணத்துக்காக, அவனை
மதிக்காம.. அவன்கிட்ட ஒரு
வார்த்தை கூடக் கேக்காம
இந்தக் கல்யாணத்துக்கு
ஏற்பாடு பண்ணியிருக்கா,
உங்க அம்மா.
உங்க அண்ணனைப் பத்தி
உங்களுக்குத் தெரியாது.
எனக்குத்தான் தெரியும்.
உங்களை நினைச்சு, நினைச்சுதானே விஷம்
குடிக்கிறதுக்குப் பதிலா
சாராயத்தைக் குடிச்சிக்கிட்டிருக்கான்..? இப்ப
நீ இந்தக் கல்யாணத்துக்குச்
சம்மதிச்சிட்டேன்னு தெரிஞ்சுதுன்னு வச்சுக்க.. அவன் நிஜமாவே விஷத்தைக்
குடிச்சிட்டுச் செத்துப் போயிடுவான்.
இப்ப நான் போயி அவங்களை
பொண்ணு யோசிச்சுப் பதில் சொல்லுதுன்னு சொல்லி
அனுப்பி வைச்சிடுறேன். நாம
அப்புறம் பேசிக்கலாம்."
ஒரு தகப்பனின் பரிவோடு கேப்டன் சொல்வதைச் சரியென்று கேட்டுக் கொள்கிறாள்... அந்தப் பெண்.
கேப்டன் மீண்டும் கூட்டத்துக்கு
நடுவே வந்து " பொண்ணுக்கும்,
அவ அண்ணனுக்கும் தெரியாம
அவங்க அம்மாவா இந்த ஏற்பாட்டைப் பண்ணியிருக்காங்க. பொண்ணுகிட்ட கேட்டேன்.
சந்தோஷந்தான்..சந்தோஷந்தான். ஆனா..சின்னப் பொண்ணு இல்லையா?
ஒரு ரெண்டு நாள் அவகாசம்
குடுங்க. யோசிச்சுச் சொல்றேன்னு சொல்லுது..
அதனால.. " என்று இழுக்கிறார்.
கேப்டனையே முறைத்துக்
கொண்டிருந்த சுப்ரமணியத்தின்
அம்மா, எழுந்து புறப்படத்
தயாராகும் கல்யாணக் கூட்டத்தை நிறுத்தி, "இருங்க..
என் பொண்ணு என் பேச்சைத்
தட்ட மாட்டா. இப்பவே அவ
சம்மதத்தைத் தெரிஞ்சுட்டு
வந்துடுறேன்." என்கிறாள்.
மாப்பிள்ளை வீட்டார் மறுக்கிறார்கள். ஆற அமரப்
பேசி பெண்ணின் சம்மதம்
கிடைத்த பிறகே பதில் எழுதினால் போதும் என்று
சொல்லி விடைபெறுகிறார்கள்.
பெண் பார்க்க வந்தோர் போன
பிறகு, எல்லோரும் ஆளுக்கொரு பக்கமாய்ப் போய்
விட...
கேப்டன் மட்டும் சுப்பிரமணியத்தின் அம்மாவின்
கோபப் பார்வையிலிருந்து
விலக்கப்படாமல் கூடத்தில்
மாட்டிக் கொள்கிறார்.
எரிக்கும் அந்தப் பார்வைக்கும்,
நிச்சயமாய் அவளிடமிருந்து
தன்னை நோக்கிப் பாயவிருக்கும் கேள்விகளுக்கும் பயந்து, ஒரு
அசட்டுச் சிரிப்பும், பயத்தைக்
குறிக்கும் குறும்பான உடல்
மொழியுமாய் அவர் நடக்கும்
நடை...
"நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பது நடிகர் திலகத்தின் படம்" என்பதான
ஒரு மௌன அறிவிப்பு.
சுப்ரமணியத்தின் அம்மாவைத்
தாண்டி நடக்கையில், "நில்லுங்க" என்று அவள் அதட்டுகிறாள்.
" ஒரு பெரிய கண்டத்திலிருந்து என் பொண்ணைக் காப்பாத்திட்டதா நினைப்பு..?" என்கிறாள்.
பயமென்றாலும், "ஆமாம்"
என்கிற மாதிரி தலையசைக்கிறார்,கேப்டன்.
"ஒரு ஆம்பளைக்குக் கல்யாணமாகலைன்னா..
எத்தனை வயசானாலும் பிரம்மச்சாரின்னு பெருமையாத்தான் பேசுவாங்க.
ஆனா.. ஒரு பொண்ணுக்குக்
கல்யாணம் ஆகலேன்னா
கேவலமாப் பேசுவாங்க. இதை
மனசில வச்சிக்கிட்டுப்
போங்க." எனப் பொரிகிறாள்
அந்த அம்மாக்காரி.
இந்தக் காட்சி முடியும் போது,
மிகப் பெரிய வியப்பு நம்மை
ஆட்கொள்கிறது.
ஒரு நடிகனுக்கு, அந்தத்
திரைப்படம் தொடர்பானவர்கள்
நடித்துக் காட்டுவதாலும், பேச
வேண்டிய வசனங்களைப்
படித்துக் காட்டுவதாலும்
மட்டுமே முழுமையான
நடிப்பைப் பெற்று விட முடியாது. அதற்கு அந்த
நடிகனின் புரிதல் மிகுந்த
உள்வாங்குதலும், மிக ஆழமான
நடிப்பனுபவமும் மிக முக்கியம் என்பதற்கு இந்தக்
காட்சி, மிகச் சிறந்த உதாரணம்.
அறிமுகமான 1952-லிருந்து
இந்தப் படத்தில் நடித்த
1984 வரையிலும், வருஷத்திற்கு எட்டுப் படம்
நடித்துக் கொண்டு, இமைக்கக்
கூட அவகாசமில்லாமல்
பரபரப்பாயிருந்த இந்த மகாகலைஞனுக்கு.. ஒரு
எளிய ஏழைக் குடும்பத்தில்
கல்யாணம் பேசப்படுமிடத்தில்
ஒரு பெரிய மனிதரின் பங்களிப்பு இப்படித்தான் இருக்கும் என்று பார்த்துத்
தெரிந்து கொள்ள நேரம்
எப்படி வாய்த்தது?
கற்பனையெனில்..
சரியாய்க் கணிக்கும் திறன்
அவருக்கு மட்டும்
எப்படி வாய்த்தது?
"இந்த இடத்தில் சிரியுங்கள்"
என்றுதான் இயக்குநர்
சொல்லியிருப்பார். "பொண்ணைப் பிடிச்சிருக்கா?"
என்று மாப்பிள்ளையைக் கேட்டு, அவன் வெட்கப்பட்டுச்
சிரித்தவுடன் "அடடடே" என்று
சிரிக்கும் சிரிப்பின் உண்மைத்
தன்மை இவரிடமிருந்து
மட்டும் எப்படி வெளிப்படுகிறது?
வியக்கும் நம்மைச் சூழ்கிறது..
எண்ணற்ற கேள்விக்குறிகள்.
நடிகர் திலகம் தொடர்பான
கேள்விக்குறிகளை உடைத்தால்...
எண்ணற்ற ஆச்சரியக் குறிகள்.
(... தொடரும்...)
https://scontent.fmaa1-1.fna.fbcdn.n...48&oe=5714FE1B
Specially for Athavan Ravi for write up on Dhavani Kanavugal
என் வாழ்க்கையை திரும்பிப்பார்க்கிறேன்....
பராசக்தியில் கலைஞர் வசனம் எழுதியதுபோல...
கடந்துவந்த காட்டாறுகளே அதிகம்..
எதிர்ப்புகள் அதிகம்..
என் முன்னே முட்களும், பாறாங்கற்களும் அதிகம்..
முன்னேவிட்டு பின்னே காலைப்பிடித்து இழுப்பார்கள்
அதிகம் பின்னால் திரும்பியவுடன் முதுகில் குத்துவார்கள்
அதிகம் நம்பியவர்கள் நண்பர்கள்போல் நடித்தார்கள்
நண்பர்களாயிருந்து கலையுலகத்தில் என் காலை வாரிவிட்டவர்கள்தான் அதிகம்
இவை யாவும் அப்பட்டமான உண்மைகள்.
என் வாழ்க்கையில் ஆமாம் கலையுலக வாழ்க்கையில்எது அதிகம் என்று
எடுத்துச்சொல்ல வேண்டுமானால் 'கசப்பான அனுபவங்கள்' அதிகம்
(-நான் பேச நினைப்பதெல்லாம்.....சிவாஜி கணேசன்)