https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...b1&oe=5D4898ED
Printable View
http://oi64.tinypic.com/qn09ww.jpg
நன்றி V C G Thiruppathy
நேற்று மாலை(24-03-2019) போரூர் GK சினிமாவில் கர்ணனுக்கு மாலை சூட்டும் படலத்தில் நண்பர்களுடன் ஒரு மகிழ்ச்சிப் பொழுதில் 'க்ளிக்'கியவை.
http://oi68.tinypic.com/fd9e0x.jpghttp://oi66.tinypic.com/hvwlew.jpg
நன்றி வான்நிலா
தமிழ்த் திரைப்பட வரலாற்றில் முதன்முறையாக திரையரங்குகளில் ஒரு திரைப்படத்திற்கு படம் வெளியாகும் முன்பு முன்னோட்டம் ( ட்ரைலர்) காண்பிக்கப்பட்டது நடிகர்திலகத்தின்
#திரும்பிப்பார் படத்திற்காகத்தான். இது நிகழ்ந்தது 1953 ஆம் ஆண்டு...
இதோ, அறுபத்து ஆறு ஆண்டுகள் கடந்தபின்பும், நடிகர்திலகத்தின் ஆளுமை இன்றும் தொடர்கிறது.
வருகின்ற 29:03:2019 வெள்ளியன்று, சென்னை சத்தியம் திரையரங்கில், நடிகர்திலகத்தின் எவர்கிரீன் சூப்பர்ஹிட் மூவியான " வசந்தமாளிகை" காவியத்தின் நவீன டிஜிட்டல் வடிவில் அமைக்கப்பட்டுள்ள காட்சிகளின் முன்னோட்டம் ( ட்ரைலர்) வெளியிடப்படுகிறது.
அதற்கான அழைப்பிதழின் நிழற்படங்கள் கீழே!
http://oi66.tinypic.com/2a8460g.jpghttp://oi64.tinypic.com/2d1p9bn.jpg
நன்றி வான்நிலா
#குலமாகுணமா 26:03:1971
#ஆஸம்ஆர்ட்ஸ் தயாரிப்பு
#நாற்பத்து_எட்டாண்டுகள்_நிறைவு
#குடும்பம் மலையாளத் திரைப்படத்தின் தமிழ்வடிவம்
#தல்லிபிரேமா என்னும் பெயரில் தெலுங்கிலும் தயாரிக்கப்பட்டது...
#திரைக்கதைவசனம்இயக்கம்_KSG ( KS. கோபாலகிருஷ்ணன்)
#இசை_KVமகாதேவன்
#பாடல்கள்_கவியரசர்கண்ணதாசன்
#ஒளிப்பதிவு_Rசம்பத்
#நடிகர்திலகத்துடன் #மக்கள்கலைஞர் பத்மினி, வாணிஸ்ரீ, நம்பியார், நாகேஷ் நடித்திருந்த நூறுநாள் வெற்றித் திரைப்படம் திரைப்படம்.
http://oi67.tinypic.com/nyy16g.jpg http://oi66.tinypic.com/4sdx86.jpghttp://oi67.tinypic.com/245n2q1.jpg
நன்றி வான்நிலா
குரூப்ஸ் ஆஃப் கர்ணன் நடத்திவரும் 52 வார தொடர் அன்னதானத்தின் இருபத்து ஆறாம் வார நிகழ்ச்சி நேற்று மதியம் பகல் 12 மணியளவில் ரசிக நெஞ்சங்களின் படை சூழ, பொது மக்களின் நல்லாதரவுடன் இனிதே நடந்தேறியது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வந்திருந்து, உபயதாரர்களை கௌரவித்து அன்னதானத்தைத் துவக்கி வைத்தவர் நடிகர்திலகத்தின் அருமைத்தம்பி ஐயா, திரு. வி. சி. சண்முகம் அவர்களின் துணைவியார் திருமதி. அலமேலு சண்முகம் அவர்கள்.
26 வது அன்னதான நிகழ்ச்சிக்கு உபயதாரர்களாக பங்களிப்பு செய்தவர்கள...் அகில இந்திய சிவாஜி மன்றத்து செயற்குழு உறுப்பினரும், ஆவணக் காப்பாளருமான S. கிரிஜா அவர்கள்.
அமரர் திரு. கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் புதல்வியார் திருமதி. லலிதா சபாபதி மற்றொரு உபயதாரர் ஆவார். நேற்றையதினம் அவர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இயலாமையால் அவர் சார்பாக வழக்குரைஞர் தூத்துக்குடியைச் சார்ந்த ஐயா. திரு. நடராஜன் அவர்களும் ராஜபாளையத்தைச் சேர்ந்த ஐயா. திருப்பதி ராஜா அவர்களும் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
உபயதாரர்களுக்கு சிறப்பு விருந்தினர் திருமதி. அலமேலு சண்முகம் அவர்கள்
சால்வை அணிவித்து, அய்யனின் நூல்களைப் பரிசாக வழங்கிச் சிறப்பித்தார்.
தமிழகத்தில் பல பகுதிகளிலிருந்து வந்திருந்த நடிகர்திலகத்தின் அன்பு நெஞ்சங்கள் பலர் இவ்விழாவில் பங்குகொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தது மறக்கவியலா ஒரு நிகழ்வு.
இந்நிகழ்ச்சியில், உபயதாரர் S. கிரிஜா அவர்களின் அறுபதாம் பிறந்தநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, இதயவேந்தன் மன்றத்தைச் சேர்ந்த மகளிர் ஐவருக்கு திருமதி அலமேலுஅம்மாள் சால்வை அணிவித்துச் சிறப்பு செய்தார்.
மேலும், டிஜிட்டல் முறையில் வெளியாகவிருக்கும் வசந்தமாளிகை திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு
நிகழ்ச்சியினைப் பற்றிய தகவலையும், அதற்கான அழைப்பிதழையும் அனைவருக்கும் அறிமுகம் செய்தார் குரூப்ஸ் ஆஃப் கர்ணன் அமைப்பாளர் திரு. பி. கணேசன் அவர்கள்.
http://oi68.tinypic.com/1z2ge4x.jpghttp://oi65.tinypic.com/14mflme.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்