-
வரலாற்றால் எவரும் நெருங்கமுடியாத
வெற்றிக்குரியவர் எம்.ஜி.ஆர் :
1977,1980,1984 இந்த மூன்று சட்டமன்ற தேர்தல்களிலும் 189 இடங்களில் தன்னுடைய
வெற்றியை பரவலாக்கியவர் எம்.ஜி.ஆர்.
இந்த வெற்றி அனைத்தும் எம்.ஜி.ஆர் என்ற
தனி ஆளுமைக்கு கிடைத்த மிகப் பெரும் வெற்றி ஆகும்.இதை கணக்கிட்டால் 80% மேல் வெற்றி என்று கணக்கிடப்படுகிறது.
இப்படிப்பட்ட அரசியலின் அசுர பலம் புரியாதவர்கள் இன்னும் அரைவேக்காட்டுத்தனத்துடன் காழ்ப்புணர்ச்சி கொண்டு தமிழ்நாட்டில் பிதற்றி திரிகின்றனர்.அவர்களுக்கு நாங்கள் கூறுககிறோம் "எந்த முதல்வர் ஆளும்போது
அனைத்து கிராமங்களிலும் தன்னிறைவு பெற்றதுடன் அவர்களின் அத்தியாவசிய தேவைகளில் எந்த விலையேற்றமும் இல்லாமல் நிம்மதியாக வாழ்ந்தார்களோ"அவரை விட சிறந்த முதல்வர் எவரும் இல்லை.அந்தவகையில்
இன்றும் மக்கள் கூறும் வார்த்தை எம்.ஜி.ஆர் ஆண்டபோது மக்கள் நிம்மதியாக இருந்தோம் என்று இன்றும் கூறுகின்றனர்.தன் குடிமக்கள் நிம்மதியாக வாழ வகை செய்பவரே சிறந்த மன்னர்.இவர் மன்னாதி மன்னர் என்று இன்றும் புகழப்படுகிறார்..........Rnjt
-
எங்கள் M.G.R நாத்திகவாத்தியல்ல. என்றும் நாத்தீகவாதம் பேசியவர் அல்ல.
கடவுள்களை இழிவுபடுத்திப் பேசியவர் அல்ல. மற்ற மதக் கடவுள்களை பழித்து பேசியவர் அல்ல.
"ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்" என்றும்,
"ஆண்டவன் உலகத்தின் முதலாளி" என்றும்,
"கடவுள் என்னும் முதலாளி" என்றும்,
"கடவுள் ஏன் கல் ஆனான்" என்றும்,
"கடவுள் இருக்கின்றார் அது உன் கண்களுக்கு தெரிகிறதா" என்றும்,
"கடவுள் தந்த பாடம் இங்கு காணும் துன்பம் யாவும்" என்றும்",
ஒன்றே குலம் என்று பாடுவோம் ஒருவனே தேவன் என்று போற்றுவோம்" என்றும்,
"கரை மேல் பிறக்க வைத்தான்" என்றும்,
"கொடுத்ததெல்லாம் கொடுத்தான். அவன் யாருக்காக கொடுத்தான்" என்றெல்லாம் தன் படப்பாடல்கள் மூலம் தனது கடவுள் நம்பிக்கையை வெளிப்படுத்தியவர்.
முருக பெருமானாக ஒரு பாடலில் பாடி நடித்தும், வேறு ஒன்றில் சிவபெருமானாக ருத்ர தாண்டவம் ஆடியும்,
காஞ்சி மஹாபெரியவர், கிருபானந்த வாரியார் போன்ற மகான்களுடன் ஆழமான, ஆத்மார்த்தமான நட்பிலும் இருந்தவர்.
அல்லா, புத்தர், இயேசு பற்றியெல்லாம் தன் பாடல்களில் பெருமையாக பாடியவர்.
அவர் பெரியாரை மதித்தார் என்றாலும், அவரது எந்த கொள்கைகளையும் பேசி, பாடி, பாராட்டியது இல்லை. புத்தர் ஏசு காந்தி, விவேகாந்தர், சுபாஷ் சந்திர போஸ், திருவள்ளுவர், அண்ணா மற்றும் முருகக் கடவுள் படங்கள் தன் வீட்டில் அலுவலகத்தில் மாட்டி இருப்பது போல காட்சி அமைக்க தெரிந்தவருக்கு "பெரியார்" படம் இருப்பது போல் எந்த காட்சியும் அவர் அமைக்கவில்லை. பெரியாரின் எந்த கொள்கைகளையும், செயல்களையும் M.G.R அவர்கள் ஏற்று கொண்டதில்லை.
பெரியார் கொண்டு வந்த தமிழ் எழுத்து சீர்திருத்தங்களை ஏற்று சட்டமாக்கினார். அவரை மதித்து ஈரோட்டை பெரியார் மாவட்டம் ஆக்கினார் என்பதை தவிர, அவரது நாத்திகத்தை M.G.R ஏற்று கொண்டவரல்ல.
இதயவீணை படத்தில் காவி உடையணிந்து "திருநிறை செல்வி" என்று பாடி நடித்தவர். இன்னும் பல படங்களில் காவியணிந்து நடித்தவர்.
தாய் மூகாம்பிகை கோயிலுக்கு சென்றிருக்கிறார். வாள் கொடுத்திருக்கிறார்.
திருப்பதி, மதுரை, மருதமலை கோவில்களுக்கு சென்றவர்.
அவர் வெளியில் நாத்திகம் பேசி விட்டு திருட்டுத்தனமாக கோயிலுக்கு போகவில்லை.
M.G.R அவர்கள் தனது நம்பிக்கையை மீறிய எந்த விஷயத்தையும் படங்களில் காட்சிகளில், டயலாக்களில், பாடல்களில் வெளிப்படுத்தியதில்லை அது நடிப்பாக இருந்தாலும். அது M.G.R ரசிகர்களுக்கு பக்தர்கள் எங்களுக்கு தெரியும். வெளியில் இருந்து எங்களுக்கு யாரும் பாடம் சொல்லி தர வேண்டியது இல்லை....Shen Babu
-
"இதயக்கனி" வெற்றி விழாவில் முக்தா சீனிவாசன் ( தயாரிப்பாளர் ) பேசியது.
நாள் : 04.01.1976.
1975-ம் ஆண்டில் வெளிவந்த தமிழ்ப் படங்களில் மிகப் பெரிய வெற்றியைப் படைத்த படம் சத்யா மூவிஸின் இதயக்கனி இது தமிழ்ப் படவுலகுக்கு பெருமை. ஆகவே அப்படத்தை பாராட்டுவதிலோ கூச்சமோ, வெட்கமோ, தேவையில்லை. 1975ம் ஆண்டில் தமிழ்ப் படங்கள் 59 வெளிவந்துள்ளன. 8 அல்லது 9 படங்கள் 100 நாட்கள் ஓடி வழக்கமாகியுள்ள தமிழ் நாட்டில் 4 படங்கள் மட்டும் தான் கடந்த ஆண்டில் 100 நாட்கள் ஓடின. இந்தப் படங்களில் சென்னை மட்டுமல்லாமல் சென்னையை விட்டு வெளியூர்களிலும் 100 நாட்கள் ஓடிய ஒரே படம் இதயக்கனி மட்டும் தான்.
தற்போதுள்ள வரி அமைப்பின்படி, எந்த தமிழ்ப்படமும் நீண்ட நாட்கள் ஓடுவதோ – லாபத்தை தருவதோ இயலாத சூழ்நிலை உள்ளது. அப்படிப்பட்ட நெருக்கடியான சூழ்நிலையில் இதயக்கனி மிகக் சிறந்த படமாக கடந்த ஆண்டில் வெற்றி படைத்திருக்கிறது என்றால் அதைப் பாராட்டுவதில் ஏன் தயக்கம் காட்ட வேண்டும். 1975ம் ஆண்டில் அதிகமாக கேளிக்கை வரி செலுத்திய ஒரே படம் இதயக்கனி தான் மற்ற நடிகர்களின் 25 படங்கள் பெறும் வசூலை எம்.ஜி.ஆர். நடித்த ஒரே படம் பெற்று விடுகிறது. எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த சாதாரண படம் ஒன்று 50 லட்ச ரூபாயை வரியாக செலுத்துகின்றது என்றால் அவர் நடித்த பெரிய படம் 1 கோடி ரூபாயை வரியாகச் செலுத்துகிறது. இதயக்கனி படமும் அரசுக்கு 1 கோடி ரூபாய்க்கு மேல் வரி செலுத்தியுள்ளது.
இதன் படி சர்க்காருக்கு மிகச் சிறந்த நண்பராக இருப்பவர் எம்.ஜி.ஆர். தான். அதிகப்படியான வரி கொடுப்பதின் மூலம், அரசாங்கத்தை ஆதரிக்கும் மிகச் சிறந்த நண்பராக எம்.ஜி.ஆர். இருக்கிறார்..........Baabaa
-
SWEET MEMORIES....
#அன்பே_வா
#மக்கள்_திலகத்தின்_பிறந்தநாள்_சிறப்புப்பதிவு.. !!!
ஐம்பத்து ஐந்து வருடங்கள் ((14-01-1966...பொங்கலன்று வெளியானது)) கடந்தும் மக்கள் மனதில இளமையாய் நிற்கிறது "அன்பே வா".
ஏழைப்பங்காளன், புரட்சி வீரன், மக்கள் தலைவன் இந்த வேடங்களுக்குத்தான் மக்கள் திலகம் நன்றாக பொருந்துவார் என்ற 60 களின் நிலமையை அப்படியே மாற்றி, மக்கள் திலகத்தால் "சாக்லட் ஹீரோ" போன்ற வேடங்களிலும் பட்டையை கிளப்ப முடியும் என்று நிரூபித்தபடம்.படத்தில் இடம் பெற்ற அத்துணை நடிகர்களுக்கும் இப்படம் ஒரு மாறுபட்ட பாத்திரத்தை கொடுத்த படம்..
அசோகன் அவர்களை கொடூரமான-நையாண்டி செய்யும் வில்லன் வேடத்தில் பல படங்களில் பார்த்து ரசித்திருப்போம். இந்த படத்தில் ஒரு விமானப்படை அதிகாரியாக, மிக மென்மையான-காதலை தன் நண்பனுக்காக தியாகம் செய்கின்ற பாத்திரத்தில் அசத்தலாக நடித்திருப்பார்.
மக்கள் திலகத்தின் நடன திறமையை அப்படியே வெளிக்கொணர்ந்த படம்." புலியைப்பார் நடையிலே" பாட்டு ஒன்று போதுமே...!!!
இந்தப்படத்தின் இன்னொரு கதாநாயகன் கண்டிப்பாக மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் தான். இந்த படத்தின் பாடல்களை நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா? அதெப்படி மெல்லிசை மன்னர் வெளிநாட்டில்-வெளி மாநிலங்களில் எடுக்கப்படும் படங்களுக்கென்று தனித்தனியாக இசையை கொடுக்கிறாரோ...!!! அற்புதம்...!!!
அன்பே வா படத்தின் புகழ்-மக்கள் திலகத்தின் புகழைப்போலவே என்றென்றும் நிலைத்திருக்கும்..........Sr.Bu...
-
#புரட்சித்தலைவர்னா #யாரு???
சுதந்திரப் போராட்டத் தியாகி கம்யூனிஸ்ட் ஜீவானந்தம் என்னும் "ஜீவா" அவர்கள் மிகவும் வறுமையில் வாடுவதாக அறிந்து, எந்தவித முன்னறிவிப்புமின்றி, ஒரு மழைநாளில் எம்ஜிஆர், ஜீவாவைக் காண அவரது குடிசைக்குள் நுழைந்தார்.
தாமரை ஏட்டிற்கு தலையங்கம் எழுதிக்கொண்டிருந்த ஜீவா, எம்ஜிஆரை பார்த்ததும் இன்ப அதிர்ச்சியுற்று, வரவேற்று ஒரு பாயில் அமரவைத்தார்.
குடிசையின் கோலத்தைக் கண்டு எம்ஜிஆர் மனமுருகிவிட்டார்...
"இன்னும் எத்தனை நாட்கள் இப்படி துயரப்படப்போகிறீர்கள்? ஒரு சிறிய வீடாவது கட்டித் தருகிறேனே..."
என்றார் எம்ஜிஆர்...
"இங்குள்ள புத்தகங்களைப் பாதுகாக்கவேண்டும். அதற்கு ஒரு வீடு வேண்டும். ஆனால் எல்லோருக்கும் வீடு வரும்போது நாமும் கட்டுவோம்..." என்றார் ஜீவா. ஆனால் எம்ஜிஆர் விடுவதாக இல்லை..
அதற்கு ஜீவா..."எங்கள் கட்சியைக் கலந்து கொண்டு சொல்கிறேன்" என்று கூறிவிட்டார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் ஜீவாவின் கோரிக்கையைப் பரிசீலித்து...
"ஜீவாவிற்காக நாம் எதுவும் செய்யமுடிவதில்லை. அதனால் எம்ஜிஆர் செய்வதைத் தடுக்கவேண்டாம்" என்று அனுமதியளித்தது. புரட்சித்தலைவரா? அப்படின்னா யார் என கூறித் திரியும் எதிரிகளுக்கு பதிலாக இது ஒன்று போதாதா?
தமிழகத்தில் எம்ஜிஆருக்குப் பிறகு எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்டு, பல சிம்மாசனங்கள் சிதறுண்டு விட்டன. ஆனால்,ஜீவாவிற்காக புரட்சித்தலைவர் கட்டித்தந்த வீடு இன்னமும் தாம்பரத்தில் உயர்ந்து நிற்கிறது...
ஜீவாவின் மனதில் ஒரு விஷயம் நிழலாடிக்கொண்டேயிருந்தது. தனது நண்பர் செல்வராஜிடம் அடிக்கடி உருகிக் கூறுவார்...
"இதோ, நானும் நகம் முளைத்த நாள் முதலாய், உள்ளங்கால் தேய்ந்தது தான் மிச்சம். ஜெயில் இல்லையேல் ரயில் என்றாகிவிட்டது என் வாழ்க்கை. எனக்கென்று ஒரு வீடு கட்டித்தரவேண்டும் என்று எவராவது நினைத்தார்களா ???"
"அந்த எண்ணம் எம்ஜிஆருக்குத் தானே ஏற்பட்டது..."...bsm...
-
எம்.ஜி.ஆர் பக்தர்களே புனிதமானவர்கள் ! .கொள்கையின் படி இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்!!!
1958ல் "நாடோடி மன்னன்" படத்திலிருந்து 1978 "மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்" வரை எம்.ஜி.ஆர் ரசிகர்களாகவும் இன்றைய காலம் பக்தர்களாகவும் வாழ்ந்து கொள்கை கோமான்களாகவும் விளங்குகின்றனர்.புரட்சிதலைவர் எப்படி கொள்கையில் இருந்து பிறழாமல் வாழ்ந்தாரோ அதே மாதிரி அவரது பக்தர்கள் இன்று வரை கொள்கைக். கோமான்களாக வாழ்ந்து வருகின்றனர்.பாருங்கள் ஒரு உச்ச நடிகர் வாழும் காலத்தில் அவர் ஆட்சியில் ஏறி சிஸ்டம் சரி பண்ணனும் என்று அறை கூவல் விடுத்தார்.உடன் தேர்தலில் வென்று அமர வேண்டும் என்றார்.யாரை நம்பி ? அவரது ரசிகர்களை களத்தில் இறக்கி.
பின்னர் நோ கட்சி என்றார்.இன்று அவரது ரசிக சீமானிகள் கொள்கை பற்றுடயவர்களா? கொள்கையாவது மண்ணாவது .உடன் தி.மு.வில் ஐக்கியமாகிறார்கள்.சிலர் அ.தி.மு.கவில் இணைகிறார்கள்.சிஸ்டம் சரியில்லை.திராவிட கட்சிகளை அப்பறப்படுத்துவோம் என்றாரே. அவரது குஞ்சுகள் எப்படி திராவிட கட்சிகளில் இணைகிறார்கள்.? ரஜினிக்கு கொள்கை உண்டு என்றால் அவர் ரசிகர்கள் ஒரு வாரத்தில் தடம் புரள்கிறார்களே .அப்படி என்றால் உச்சநடிகர் ரசிகர்களெல்லாம் வியாபாரி என்றல்லவா பெயர் எடுக்கிறார்கள்.கட்சி மாறுகிறார்களே என்று அச்சப்பட்டு உடன் உச்ச நடிகர் எந்த கடசியிலும் சேர்ந்து கொள்ளுங்கள் என்று அறிக்கை விட்டுள்ளார்.அப்படி என்றால் உங்களது கொள்கை தான் என்ன ?
தமிழ்நாட்டு மக்களை உச்ச நடிகர் என்ன கிள்ளுக்கீரையாக நினைக்கிறாரா?
இப்பொழுதாவது புரிந்து கொள்ளுங்கள் எம்.ஜி.ஆருக்கு இணை அவரே தான்.அதே மாதிரி அவரது பக்தர்களை வெல்லவும் யாருமில்லை ! .எம்.ஜி.ஆர் பக்தர்கள் இன்றும் கொள்கை கோமான்களே !! அவர்கள் புனிதர்களே !!!...ssm...
-
"அன்பே வா". ..படத்துக்கு எம்ஜிஆர் 3.25 லட்சம் சம்பளம் வாங்கினார் என்றும் உயர்ந்த மனிதன் படத்துக்கு கனேசனுக்கு ஏவி எம் மெய்யப்பச் செட்டியார் 1.5 லச்சத்துக்கு மேல் சம்பளம் குடுக்க முடியாது என்று சொல்லிவிட்டார் என்றும் 2 படத்துக்கும் வசனம் எழுதின ஆரூர்தாஸ் சொல்லிருக்கார். ஏவி எம் சரவணணும் அன்பே வா க்கு எம்ஜிஆருக்கு 3.25 லட்சம் சம்பளம் கொடுத்தோம் என்று சொல்லிருக்கார். எம்ஜிஆர் வாங்கின சம்பளம் கடைசி வரைக்கும் கணேசன் vc வாங்கவில்லை. கண்ணதாசன் பாதி நேரம் போதையில் இருப்பார். குடிச்சா போதை ஏறலைன்னு பெத்தடின் ஊசிக்கு அடிமையாகிவிட்டார். இதை அவரே எழுதினார். தனக்கு பல பெண்களோடு தொடர்பு உண்டு என்றும் அவரே ஒப்புக்கொண்டார். போதையில் அந்த நேரத்தில் மனசில் தோன்றுவதை எழுதுவார். ஆனாலும் ஒரு விசயத்தை அவர் மறைச்சிட்டார். மெட்ராசில் கவிதா ஓட்டல்னு நடத்தி வந்தார். அது ஒரு விபச்சார விடுதி. வேண்டியவங்களுக்கு அங்க வெச்சு பெண்கள சப்ளை செய்வார். வாலிக்கு இதே மாதிரி பாராட்டி ஒரு பெண்ணோட இருக்க வெச்சாராம். இதை ஆனந்த விகடனில் ஒரு 7 .. 8 வருசம் முன்னாடி நினைவு நாடாக்கள் என்ற தொடரில் வாலியே எழுதினார். இப்படிப்பட்ட மாமாப் பயல்தான் கண்ணதாசன். நம்பாளு மேலே எனக்கு சமயத்தில கோபம் வரும். தன்ன திட்டினவன், திட்டாதவன், வேண்டியவன், வேண்டாதவன் எல்லாருக்கும் உதவி பண்ணுவார். பதவி குடுப்பார். அது அவர் பெரிய குணம். ஆனா நமக்கு பொறுக்கவில்லை. 1980/ வருசம் தேர்தல்ல அண்ணா நகர்ல எச்.வி.ஹண்டே கிட்ட தோத்துப்போன தீயசக்தியை பாவம் ஜெயிச்சுட்டு போகட்டும்னு விட்டார். அப்புறம் 800 சொச்சம் ஓட்டுல தீயசக்தி கேவலமா ஜெயிச்சதா அறிவிச்சாங்க.... Rajarajan...
-
#எம்ஜிஆர் #இன் #தமிழ்நதி #மக்கள் #சங்கம்!!!
பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் அவதரித்த இந்நன்னாளில், அக்மார்க் எம்ஜிஆர் பக்தர்களுக்காக தோன்றியிருக்கும் ஒரு சங்கம்...
எம்ஜிஆர் கொள்கைகளை நிறைவேற்ற முயற்சிசெய்ய துடிப்புடன் செயல்படுத்த இருக்கும் ஒரு சங்கம்...
எந்தவித சுயலாபநோக்கின்றி அமைக்கப்பட்டிருக்கும் ஒரு சங்கம்...
அக்மார்க் எம்ஜிஆர் பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு எம்ஜிஆர் அவர்களின் பொற்கால ஆட்சியை மக்களோடு மக்களாக நின்று, தோள்கொடுத்து மீண்டும் அந்த நல்லாட்சியை நிறுவ முனைப்புடன் இருக்கும் ஒரு சங்கம்...
எம்ஜிஆர் இன் தமிழ்நதி மக்கள் சங்கம்!!!
புரட்சித்தலைவரின் புகழ் போல தழைத்தோங்க எல்லாம் வல்ல நம் குலதெய்வம் பொன்மனச்செம்மல் அருளாசி புரிவாராக!!!
அக்மார்க் எம்ஜிஆர் பக்தர்களின் நல்லாதரவை சிரமேற்கொண்டு வரவேற்கிறோம்!!!
புரட்சித்தலைவர் புகழ் வாழ்க!!!...bsm
-
#மக்கள்_திலகத்தின்_திரை_பயணத்தில்...!!!
#குமரிக்கோட்டம்..
தன் பெண் குமரியை ((ஜெயலலிதா)), தன்னுடைய நண்பன் முத்தையா (முத்தையா) வின் மகனான கோபால் (மக்கள் திலகம்) க்கு மணமுடித்து தருவதாக வாக்களிக்கிறார் சோமு (வி.கே.ராமசாமி) . இந்த திருமண உடன்படிக்கை செய்யப்படும்போது சோமு, முத்தையா இருவருமே பரம ஏழைகள். முத்தையா, சோமுவுக்கு தன் ஏழ்மையையும் பொருட்படுத்தாது பல உதவிகளை செய்கிறார்.
ஆனால் தன் தாய் வழி வந்த ஏராளமான செல்வத்தினால் செல்வந்தர் ஆகிறார் சோமு. முத்தையாவுக்கு கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்கவிடுவதோடு மட்டுமின்றி,தன் நண்பன், முத்தையா-கோபாலை இழிவு படுத்துகிறார் சோமு.
இதை ஒரு சவாலாக ஏற்று குமரியின் கோட்டத்தில் நுழைந்து குமரியை மணக்கிறார் கோபால்.
சிறப்பான குடும்பக்கதையானது மக்கள் திலகத்தின் பங்களிப்பாலும், மெல்லிசை மன்னரின் இன்னமும் ரசிக்கப்படும் இனிய பாடல்களாலும் வெற்றிப்படமானது.
#நாம்_ஒருவரை_ஒருவர்
#எங்கே_அவள்_என்றே_மனம்
#என்னம்மா_ராணி_பொன்னான_மேனி
தகவல் & புகைப்படம்:
https://en.m.wikipedia.org/wiki/Kumari_Kottam...Str.bu
-
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் திறன் மிகு உத்தி படத்தின் பாடலை காட்சிகளை வசனத்தை படத்துக்கும் தனக்கும் அரசியல் கொள்கைக்கும் பொருந்தி வருமாறு அமைப்பது தான் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் திறன்மிகு தொடர்பியல் உத்தி ஆகும். இதை ஆங்கிலத்தில் Effective communication technique என்போம்.தன்னிடமிருந்த திரைப்படம் என்ற வலிமை மிகுந்த தொடர்பியல் சாதனத்தை 100 சதவீதம் ஆற்றலுடன் பயன்படுத்தி சிறுவர் முதல் பெரியவர் வரை தன் பக்கம் ஈர்த்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் !
இப்பதிவு... வெற்றி திருமகன் எம்.ஜி.ஆர் நூல் வரிசை 3 லிருந்து )
என் அன்புத் தலைவா தங்களின் புகழ் பல யுகங்களை கடந்தும் நிலைத்திருக்கும் வாத்தியாரே. நம் தங்கத் தலைவர் புரட்சித்தலைவரின் 104 வது பிறந்த நாள் இன்று 17.01.2021 அற்புதமான நன்னாளில் என் நெஞ்சம் நிறைந்து வணங்குகிறேன்.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க...Sar.Swamin.........
-
மனிதநேயர் அரசு எம்.ஜி.ஆர் அரசு.
ஆனால் இன்று ?
இன்றைய நிலவரம் என்னவென்று பக்தர்கள் அறிவார்களா .மேற்கொண்டு படியுங்கள்.
நாகை தருமன் என்று ஒரு மூத்த பத்திரிகையாளர்.தலைவர் எம்.ஜி.அரின் மனம் கவர்ந்தவர்.இவர் தலைவரின் புகழ் பாடி பல புத்தகங்கள் எழுதியுள்ளார்.அவற்றில் சில இத்துடன் பதிவு செய்துள்ளேன்.இவர் பொம்மை இதழில் தலைவர் புகழ்பாடி "பாரதரத்னா எம்.ஜி.ஆர் "எனும் தொடரை எழுதியவர்.புரட்சிதலைவரால் அண்ணா இதழுக்கு ஆசிரியராக நியமிக்கப்பட்டவர்.அவர் சென்னை பீட்டர்ஸ் காலனியில் குடியிருந்துவந்தார்.ஆனால் வயது மூப்பு காரணமாக படுக்கையில் தான் வாழ்நாளை கழித்து வருகிறார்.புனரமைப்பு என்ற போர்வையில் பீட்டர்ஸ் காலனி இடிக்கப்படுகிறது.அதனால் மாற்று இடம் அளிக்காமல் நாகை தருமன் வெளியேற்றப்பட்டார்.வேறு வீடு சென்று வசிக்க அவரது வயது மூப்பு இடம் தரவில்லை.என் செய்வது.
தலைவர் புகழ் பரப்பும் பணியில் இவரை வெல்ல முடியாது.அத்துணை பாசம் தலைவர் மீது வைத்திருந்தார்.தலைவரும் இவர் மீது பாசம் வைத்திருந்தார்.அதனால் பீட்டர்ஸ் காலனியில் இவருக்கு வீடு கொடுத்தார் தலைவர்.மனித நேயம் இந்த அரசில் கிடைக்குமா ? எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சியை நடத்தி இரட்டை இலை சின்னத்துடன் வலம் வரும் இந்த அரசு எம்.ஜி.அரின் கொள்கையான மனிதநேயத்தை கடைப்பிடிக்குமா ?.........vrh
-
குடியரசு’ இதழில், தந்தை பெரியார் 20.01.1935 அன்று, 'தமிழ் எழுத்துச் சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்' என வலியுறுத்தி தலையங்கம் எழுதினார். அதன் பின்னர், மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர், தன்னுடைய ஆட்சிக் காலத்தில் அதாவது 19.10.1978 அன்று, பெரியார் நூற்றாண்டில் அவருடைய எழுத்துச் சீர்திருத்தத்துக்கான அரசாணையை வெளியிட்டு, நடைமுறைப்படுத்தினார். பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தமானது 15 எழுத்துகளை உள்ளடக்கி இருந்தது. இத்தகைய எழுத்துச் சீர்திருத்தங்களை (அவ், அய், ணா, றா, னா, ணை, னை, லை, ளை, ணொ, ணோ, னொ, னோ, றொ, றோ) திராவிட இயக்கம் சார்ந்த பத்திரிகைகள் 1935-லிருந்தே நடைமுறைப்படுத்தின.
1977-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க தன்னுடைய தேர்தல் அறிக்கையில் 'எழுத்துச் சீர்திருத்தத்தைக் கொண்டுவருவோம்' என்று அறிவித்திருந்தது. ஆனால், அந்தத் தேர்தலில் அ.தி.மு.க வெற்றிபெற்று எம்.ஜி.ஆர் முதல்வர் ஆன பின்பு இரண்டு (அய், அவ்) எழுத்துகளைத் தவிர்த்து மற்ற 13 எழுத்துகளின் சீர்திருத்தங்களையும் அங்கீகரித்து, அதற்கான அரசாணையை வெளியிட்டார். தமிழ் மொழியில் பெரியார் அறிமுகம் செய்து, எம்.ஜி.ஆரால் நடைமுறைப்படுத்தப்பட்ட எழுத்துச் சீர்திருத்தம், 42 ஆண்டுகளை நிறைவு செய்து 43 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.......
-
சாதனை!
சரித்திரம்!!
சகாப்தம்!!!
என்பது இதுதானோ?
மறைந்தும் சரித்திரம் படைக்கிறாரே
உலக தமிழர்களின் உண்மை தலைவன்..
இந்தியாவில் முதல் முறையாக வரும் நூறு ரூபாய் நாணயத்தில்
மக்கள் திலகம் எம். ஜி. ஆர் சிரிக்கும் முகம்...
தொடரட்டும் உங்களின் சாதனைகள் தலைவா........
-
மாலை மலர்....
சினிமாவில் எம்.ஜி.ஆருடன் ஜோடியாக நடித்துக் கொண்டிருந்தபோதே, நடிகை லதாவை அரசியலுக்கு அழைத்தார், எம்.ஜி.ஆர். ஆனால், அப்போது அரசியலைத் தவிர்த்த லதா, அ.தி.மு.க.வை எம்.ஜி.ஆர். தொடங்கியபோது அதில் சேர்ந்தார். எம்.ஜி.ஆரின் அ.தி.மு.க. சந்தித்த முதல் பொதுத்தேர்தலில், நடன நிகழ்ச்சி மூலம் கட்சிக்கு நிதி திரட்டிக் கொடுத்தார் லதா. எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு எம்.ஜி.ஆர். அமைச்சரவையில் இருந்த திருநாவுக்கரசின் அழைப்பின் பேரில், அப்போது அவர் தொடங்கிய "எம்.ஜி.ஆர். அ.தி.மு.க''வில் இணைந்தார். எம்.ஜி.ஆருடனான அரசியல் அனுபவம் குறித்து லதா கூறியதாவது:-
"எம்.ஜி.ஆர். படங்களில் நான் நடித்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒருநாள் அவர் என்னிடம், "லதா! உனக்கு அரசியலில் ஆர்வம் உண்டா?'' என்று கேட்டார். "ஆர்வம் இல்லை. அரசியல் பற்றி எனக்கு எதுவும் தெரியாது'' என்றேன். ''அரசியல் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதானே தேர்தலின்போது சரியானவர்களை தேர்ந்தெடுக்க முடியும்'' என்றார். ஆனால் காலச்சூழலில் அவரே அ.தி.மு.க.வை தொடங்க வேண்டியதாயிற்று. கட்சியில் நானும் சேர்ந்தேன். கட்சியில் சேரும்படி என்னை அவர் கேட்கவில்லை. என்றாலும், சினிமாவில் என்னை இந்த அளவுக்கு உருவாக்கியவருக்கு காட்டும் நன்றிக்கடனாக, அவர் கேட்காமலே கட்சியில் சேர்ந்து விட்டேன். எம்.ஜி.ஆர். கட்சி, முதல் பொதுத்தேர்தலை சந்தித்த நேரத்தில், "தேர்தலுக்கு நான் என்ன செய்தால் சரியாக இருக்கும்? என்று கேட்டேன். "உனக்கு எது சரியாக இருக்குமோ, அதைச் செய்தால்தான் சிறப்பாக வரும்'' என்றார், எம்.ஜி.ஆர். பிறகு அவரே "லதா! நீ முக்கிய நகரங்களில் நடன நிகழ்ச்சியில் கலந்து கொள். கட்சிக்கு நிதி திரட்டிய மாதிரியும் இருக்கும்'' என்றார். உடனே தாமதமின்றி நான் உருவாக்கிய நாட்டிய நாடகம்தான் "சாகுந்தலம்.'' முப்பதுக்கும் மேற்பட்ட நடனக்குழுவினருடன் நான் கட்சிக்கூட்டம் நடக்கும் இடங்களில் இந்த நாட்டிய நாடகத்தை நடத்துவேன். மக்கள் திரண்டு வந்து, இந்த நிகழ்ச்சியை ரசித்தார்கள். திருச்சியில் நடந்த பொதுக்கூட்ட மேடையில் அதுவரை நடன நிகழ்ச்சிக்கு வசூலான தொகையை எம்.ஜி.ஆரிடம் அளித்தேன். இந்த தேர்தலில் எம்.ஜி.ஆர். வெற்றி பெற்று முதல்-அமைச்சரானார். தேர்தலில் நேரம் காலம் பார்க்காமல் விடிய விடிய நாட்டிய நாடகம் நடத்தியதை அவர் மறக்காமல் மனதில் வைத்திருந்தார். ஒருநாள் என்னை அழைத்துப் பேசியவர், "லதா! மக்களின் அன்பு எத்தகையது என்பதை நேரில் காண, இந்த தேர்தல் உனக்கு ஒரு வாய்ப்பாக அமைந்தது. நீ முழுநேர அரசியலுக்கு வரலாம் என்று எண்ணுகிறேன். உன் விருப்பம் என்ன?'' என்று கேட்டார். நான் அவரிடம், "அரசியலிலும் நீங்கள் ஜெயிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அதற்காகவே நடன நிகழ்ச்சியையும் உற்சாகமாக செய்தேன். மற்றபடி அரசியலில் ஈடுபடும் அளவுக்கு இன்னமும் எனக்கு பக்குவம் இல்லை'' என்று கூறினேன். எம்.ஜி.ஆர். என்னைப் புரிந்து கொண்டார். அதன்பிறகு என்னை அரசியலுக்கு அழைக்கவில்லை.'' இவ்வாறு லதா கூறினார்....... Palaniappan Subbu
-
எம்ஜிஆர் பிறந்த நாள் பதிவு
#எம்_ஜி_ஆர்_படங்கள்!
#கண்ணதாசன்_பாடல்கள்!
எம்.ஜி.ஆர் என்ற மனிதர், நடிகராகி, புரட்சி நடிகராக, மக்கள் திலகமாக, நடிக மன்னராக, வசூல் சக்கரவர்த்இதயாக, மூன்றெழுத்து மந்திரமாக, எங்க வீட்டுப் பிள்ளையாக, தாய்க்குலத்தின் தாரக மந்திரமாக, புவி போற்றிடும் புரட்சித் தலைவராகப் படிப்படியாகத் தனது புகழ் எனும் ஏணிப்படிகளில் ஏறி, தனது நிலைகளை மெல்ல மெல்ல உயர்த்தி, இன்றுவரை இந்தியத் துணைக்கண்டத்திலேயே எந்த நடிகராலும் பெற இயலாத மக்கள் செல்வாக்கைப் பெற்று உயர்ந்தார்.
இத்தகைய உயர்வுகளைக் காண அவருக்கு உதவியன இரண்டே! ஒன்று, அவரது உயர்ந்த கருணை உள்ளம்! மற்றொன்று அவர் நடித்த திரைப்படங்கள்!
எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களோ 135. இவற்றுள்ளும் அவர் கதாநாயகனாக நடித்த படங்களின் எண்ணிக்கை என்று பார்த்தாலோ 115 படங்கள்தான்.
115 படங்களில் மட்டுமே கதாநாயகனாக நடித்த எம்.ஜி.ஆரால் எப்படி மக்கள் இதயங்களைக் கவர முடிந்தது? மக்கள் எங்ஙனம் அவரை ஆளும் அரியாசனத்தில் ஏற்றி வைத்தார்கள்? என்றேல்லாம் வினாக்கள் எழும்!
வினாக்களுக்கான விடைகள்!
கண்டறியப்பட வேண்டும்!
எம்.ஜி.ஆர் காலத்திலும், அவரது காலத்திற்குப் பின்னும் திரையுலகில் புகுந்து ஏராளமான படங்களில் நடித்த மாபெரும் நடிப்புலக மேதை சிவாஜிகணேசனும்; காதல் மன்னன் ஜெமினி கணேசனும், இலட்சிய நடிகர் எஸ்.எஸ். ராஜேந்திரனும் பெறமுடியாத, ட்ட முடியாத மக்கள் செல்வாக்கை எம்.ஜி.ஆர் எட்டிப்பிடிக்கக் காரணங்கள் என்ன?
இடைப்பட்ட காலத்தில் திரையுலகையே திக்குமுக்காடச் செய்த மக்கள் கலைஞர் ஜெய்சங்கர், வெள்ளிவிழாக் கதாநாயகன் ரவிச்சந்திரன், நவரசத்திலகம் முத்துராமன், ஏவி.எம்.ராஜன் போன்றோர் காணமுடியாத மக்கள் ஆதரவை எம்.ஜி.ஆர். கண்டது எப்படி?
கால மாற்றங்களில், தங்களது கலை நுட்பங்களை, அனுபவங்களைத் தெளிவாகப் பதிவு செய்துகொண்ட நடிப்புலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கண்டிட முடியாத மக்கள் சக்தியை எம்.ஜி.ஆர் என்ற மூன்றெழுத்து மந்திரம் கைப்பற்றியது எங்ஙனம்?
இவற்றையெல்லாம் சிந்திக்கும் வேளையில்தான், எம்.ஜி.ஆர் என்ற மாமேதையின் மகத்தான மகத்துவம் நமக்குப் புரியும்.
இப்போது எம்.ஜி.ஆர் நடித்த படப்பாடல்களில், கண்ணதாசன் எழுதிய பாடல்களைப் பற்றிப் பார்ப்போமாக.
எம்.ஜி.ஆர். கதாநாயகனாக நடித்த 115 படங்களில் ஐம்பது படங்களில் கண்ணதாசன் பாடல்களே இடம்பெற்றுள்ளன.
இவை தவிர, எம்.ஜி.ஆர் நடித்து இடையிலேயே நின்றுபோன பவானி, ஊமையன் கோட்டை, மாடிவீட்டு ஏழை, சமூமே நான் உனக்கே சொந்தம், போன்ற பல படங்களுக்கும் கண்ணதாசனே பாடல்கள் எழுதியுள்ளார்.
எவ்வாறு ஆய்வு செய்தாலும், எம்.ஜி.ஆர். நடித்த அதிகமான படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையையும், எம்.ஜி.ஆர். படங்களுக்கென அதிக எண்ணிக்கையில் பாடல்கள் எழுதியவர் என்ற பெருமையினையும் கண்ணதாசனே பெறுகிறார்.
1951 – ஆம் ஆண்டு ஜூபிடர் பிலிம்ஸாரின், கே. ராம்நாத் இயக்கத்தில் வெளிவந்த எம்.ஜி.ஆர். நடித்த ‘மர்மயோகி’ படத்திற்குப் பாடல்கள் எழுதத் தொடங்கிய கண்ணதாசன், 1974 – ஆம் ஆண்டு, அமல்ராஜ் பிலிம்ஸ், ப. நீலகண்டன் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வெளிவந்த ‘நேற்று, இன்று, நாளை’ படத்திற்கும்; இதே ஆண்டில், சித்ரயுகா வெளியீடாக ஸ்ரீதர் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். நடித்து வெளியான மிகப்பெரும் வெற்றிப்படமான ‘உரிமைக்குரல்’ படத்திற்கும்; 1975 – ஆம் ஆண்டில் வெளியான ஓரியண்டல் பிக்சர்ஸ் தயாரித்து, எம்.ஜி.ஆர். நடித்த ‘நினைத்ததை முடிப்பவன்’ படத்திற்கும் கண்ணதாசன் பாடல்கள் எழுதியுள்ளார் என்பதனை, இன்றைய இளைஞர் சமுதாயத்தில் எத்தனை இதயங்கள் அறியக்கூடும்?
பத்மினி பிக்சர்ஸ் சார்பில் பி.ஆர். பந்துலு தயாரித்த, எம்.ஜி.ஆர். நடித்த படங்களுக்கும்; ஆர்.ஆர். பிக்சர்ஸ் சார்பில் டி.ஆர். ராமண்ணா தயாரித்த எம்.ஜி.ஆர் நடித்த படங்களுக்கும் கண்ணதாசனே பெரும்பாலும் பாடல்களை எழுதினார்.
இதற்கெல்லாம் காரணம், எம்.ஜி.ஆர் என்ற கலைஞானி, கண்ணதாசன் என்ற கவிஞரிடம் இருந்த கவித்துவத்தின் மீது செலுத்திய கவிப்பற்றும், கலைப்பற்றுமே எனலாம்.
திராவிட இயக்கத்தில் இருந்தபோது கண்ணதாசன் எழுதிய
‘அச்சம் என்பது மடமையடா!
அஞ்சாமை திராவிடர் உடமையடா!’
என்ற பாடலை, தான் பயணம் செய்யும் வண்டியிலேயே எப்பொழுதும் கேட்கும் வண்ணம், கைவசம் எம்.ஜி.ஆர் வைத்திருந்தார் என்பதனை, அவரே சொல்லக் கேட்டிருக்கின்றோம்.
இந்த அளவிற்குக் கவிஞர் கண்ணதாசன் பாடல்கள் மீது, தனது எண்ண அலைகளின் தாகத்தைத் தக்கவைத்துக் கொண்டவரே எம்.ஜி.ஆர். என்பதனை நாடு நன்கறியும்!
எம்.ஜி.ஆர். ஒரு நடிகர் மட்டுமல்லர். அவர் அனைத்துக் கலைநுட்பங்களையும் நுணுக்கமாக அறிந்த கலைவித்தகர். நாட்டு மக்களின் இரசனைகளை நாடிபிடித்து அறிந்தவர். எனவேதான், அவரது படங்களில் வரும் பாடல்களை ஒலிப்பதிவு அறைகளில் அமர்ந்து, சொல்லுக்குச் சொல் கேட்டே, பதிவு செய்திட அனுமதிப்பார். அதேபோல், படங்களில் இடம்பெறும் வசனங்களையும் வார்த்தைக்கு வார்த்தை ஆராய்ந்தே இடம்பெறச் செய்வார். இவையே அவரது வெற்றியின் மூல இரகசியமாகும்.
நாட்டு மக்களுக்குச் சொல்லவேண்டிய, செய்யவேண்டிய நல்ல கருத்துகளையும், செயல்களையுமே தனது படங்களின் பாடல்கள், வசனங்களில் எம்.ஜி.ஆர் இடம்பெறச் செய்தார். அவ்வாறு செய்த காரணத்தால்தான், எம்.ஜி.ஆர். என்ற மந்திர சக்தி இன்றளவும் மக்களின் இதயங்களில் மாமகுடம் தாங்கி வீற்றிருக்கிறது.
இனி, எம்.ஜி.ஆர் படங்களில் கண்ணதாசனின் கவித்துவம் வாக்குப் பலிதமாய் வாகை சூடிய விதங்களை விபரமாய்க் காண்போம்.
ஆரம்பகாலப் பாடல்கள்…. சில!
‘மர்மயோகி’ படம் வெளியான ஆண்டு 1951.
“அழகான பெண்மானைப் பார்!
அலைபாயும் கண்வீச்சைப் பார்!”
என்று தொடங்கும் இப்படப் பாடலில்,
வாடாத ரோஜா – உன்
மடிமீதில் ராஜா!
மனமே தடை ஏனையா! – நிதம்
பொன்னாகும் காலம்
வீணாக லாமோ!
துணையோடு உலகாளவா!
என்ற அருமைமிகு கவித்துவமே துள்ளித் ததும்புகின்றன.
‘உலகாளவா!’ என்ற அழைப்பு கவியரசரின் பாடலில், எம்.ஜி.ஆருக்கு எழுதும் முதல் படப்பாடலிலேயே எழுப்பும் விதம் விந்தையல்லவா!
“கண்ணின் கருமணியே கலாவதி – இசைசேர்
காவியம் நீயே!
கவிஞனும் நானே!”
என்று ஆரம்பம் ஆகும் பாடலில், அடுத்து,
“எண்ணம் நிறை வதனா – எழில்சேர்
ஓவியம் நீர் மதனா!”
“அன்பு மிகுந்திடும் பேரரசே!
ஆசை அமுதே என் மதனா!”
என வரும் தொடர்கள் எம்.ஜி.ஆரின் எழிலார்ந்த வனப்பையும், அன்புள்ளத்தையும், பேரரசாளும் பெருமையினையும் எடுத்துரைக்கும்.
1956 – ஆம் ஆண்டு வெளிவந்து பெரும் வெற்றிபெற்ற ‘மதுரைவீரன்’ படத்தில் இடம்பெற்ற,
‘நாடகமெல்லாம் கண்டேன் உந்தன்
ஆடும் விழியிலே
ஆடும் விழியிலே! – கீதம்
பாடும் மொழியிலே!…”
இவ்வாறு தொடங்கும், இப்பாடலை இன்றைய இளைஞர்களும் மெய்மறந்து இன்றும் இரச்த்துக் கேட்கக் காண்கிறோம்.
இப்பாடலில்,.
“தேடிய இன்பம் கண்டேன்! இன்று
கண்ணா வாழ்விலே – உங்கள்
அன்பால் நேரிலே!…”
“ஸ்வாமி!
உன் அழகைப் பார்த்திருக்கும்
எந்நாளும் திருநாளே!
அலைபாயும் தென்றலாலே
சிலை மேனி கொஞ்சுதே!”
என்று, காதல் வயப்பட்டு படத்தில் பத்மினியின் எழிலார்ந்த நடிப்பிற்கு ஏற்ப ‘ஜிக்கி’ பாடும் போதும்; அதற்கேற்ப அன்றைய பேரழகுத் தோற்றத்துடன் எம்.ஜி.ஆர். நடிக்க, அவருக்கு ஏற்பக் குரல் எடுத்து, டி. எம். சௌந்தரராஜன் பாடும் பாடல் காட்சியை யார்தான் இன்றும் இரசிக்காமல் இருக்க முடியும்?
எம்.ஜி.ஆரின் அழகைப் பார்த்திருக்கும் எந்நாளும் திருநாளாம்? அவர், அலைபாயும் சுகம் தரும் தென்றலாம்!’ இப்படியும் பாடலில் பதமான வார்த்தைகள் போட்டு, எம்.ஜி.ஆரை அன்றே வர்ணித்த கவிராஜன் வார்த்தைகள், காலத்தை வென்ற வார்த்தைகள்தானே!
1957 – ஆம் ஆண்டில், கவியரசரின் கருத்தாழமிக்க திரைக்கதை வசனத்தோடு வெளிவந்த ‘மகாதேவி’ திரைப்படத்திலும், கவிஞரின் பொன்னான பாடல்கள் முத்திரை பதிக்கத் தவறவில்லை.
“கண்மூடும் வேளையிலும் கலை என்ன கலையே!
கண்ணே உன் பேரழகின் விலை இந்த உலகே!”
“சிங்காரப் புன்னகை கண்ணாரக் கண்டாலே
சங்கீத வீணையும் எதுக்கம்மா!”
இந்த இளமை, இனிமை ததும்பும் இவ்விரு பாடல்களோடு,
மகாபாரதப் போரில் அபிமன்யூ மாள, மகன பிரிவால் தாய் சுபத்திரை துடிதுடிப்பதைப் படம்பிடித்துக் காட்டும்,
“மானம் ஒன்றே பெரிதெனக் கொண்டு
வாழ்வது நமது சமுதாயம்!
மரண பயங்கரம் சூழ்ந்து வந்தாலும்
மாறிவிடாது ஒரு நாளும்!”
என்ற பல்லவியுடன், படத்திற்கே முத்தாய்ப்பாய் அமைந்த பாடலும்;
“காமுகர் நெஞ்சில் நீதியில்லை – அவர்க்குத்
தாயென்றும் தாரமென்றும் பேதமில்லை!”
என்ற தத்துவ சமூகநீதிப் பாடலும்; எம்.ஜி.ஆர் படத்திற்குப் புகழ் சேர்ந்த பாடல்களே!
இவற்றுள்,
‘மானம் ஒன்றே!’ என்று தொடங்கும் பாடலின் முழு விளக்கத்தையும் ‘கண்ணதாசன் கவிதைகளில் கடவுள் நெறி’ என்ற எனது முந்தைய நூலில் எழுதியுள்ளேன்.
காலத்தை வென்ற பாடல்கள்!
‘அச்சம் என்பது மடமையடா!’
1960 – ஆம் ஆண்டு கண்ணதாசனின் கதை, வசனம், பாடல்களோடு வெளிவந்து, உன்றும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் வெற்றிப்படமாய்த் திகழ்வதே நடேஷ் ஆர்ட் பிக்சர்சாரின் ‘மன்னாதி மன்னன்!’
இப்படத்தில் இடம்பெற்றுள்ள கவிஞரின் அனைத்துப் பாடல்களும் கருத்துச்சுவை நிரம்பிய பாடல்களே. இருப்பினும் தமிழக வரலாற்றிலேயே, எத்தனையோ சோடனைகளுக்கு நடுவிலும், தொடர்ந்து மூன்றுமுறை வீரத்திற்கும், புகழுக்கும் கட்டியங்கூறும் பாடலாக அமைந்த,
“அச்சம் என்பது மடமையடா!
அஞ்சாமை திராவிடர் உடமையடா!
ஆறிலும் சாவு, நூறிலும் சாவு!
தாயகம் காப்பது கடமையடா!”
என்று ஆரம்பமாகி, அனைவரது நாடி நரம்புகளிலும் வீரத்தையும், நெஞ்சங்களில் விவேகத்தையும் உண்டாக்கும் பாடலே உயர்ந்த இடத்தைப் பற்றிக் கொள்ளும் பாடலாகும்!
உண்மைதானே!
அச்சம் என்பது மூடர்களின் மூலதனமல்லவா! ஆட்சிக் கட்டிலில் இருந்தவர்களே ஒன்றுகூடி 1972 – ஆம் ஆண்டு தன்னை வெளியேற்றியபோது, தனது இரசிகப் பெரும் பட்டாளத்தோடும், தாய்க்குலத்தின் தனிப்பெரும் ஆதரவோடும், துணிவையே துணையாகக் கொண்டு, தன்னைக் கட்சியில் இருந்து வெளியெற்றியவர்களையே ஆட்சியில் இருந்து அகற்றிய அஞ்சாத, அச்சமில்லாத சிங்கமல்லவா எம்.ஜி.ஆர்.
அவர்தானே,
‘அஞ்சாமை திராவிடர் உடமையடா!’ என்று கூறத்தகுந்தவர்.
நோயைக் கண்டு எம்.ஜி.ஆர். என்றேனும் அஞ்சினாரா? 1959 – ஆம் ஆண்டு சீர்காழியில் நடைபெற்ற நாடகத்தின்போது கால் எலும்பு முறிந்து! இனி அவ்வளவுதான்! எம்.ஜி.ஆரால் நடக்க முடியாது! நடிக்க முடியாது என்றார்கள். தனது மன உறுதியால், கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு, ‘திருடாதே’ திரைப்படத்தில் நடித்துப் படவுலகில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தினார்.
(திருடாதே’ எம்.ஜி.ஆர். சரோஜாதேவியோடு இணைந்து நடித்த சமூகப்படம். ஏ.எல். சீனிவாசன் தயாரித்த இப்படத்தின் வசனத்தை கண்ணதாசன் எழுத, ப. நீலகண்டன் இயக்கினார். ராஜாராணி கதைகளிலேயே நடித்து வந்த எம்.ஜி.ஆருக்கு இப்படத்தின் வெற்றி பெரும் திருப்புமுனையாகவே அமைந்தது எனலாம்)
1967 – ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் எம்.ஆர். ராதாவால் எம்.ஜி.ஆர். சுடப்பட்டார். மருத்துவமனையில் மரணப்படுக்கையில் அவர் இருந்தபோதும், உறுதிகொண்ட உள்ளத்துணிவோடு போராடி மறுபிறவி பெற்றார்.
(அவரது மருத்துவமனை நாடிக்கட்டு புகைப்படந்தான் தமிழ்நாடெங்கிலும் காங்கிரசு பேரியக்கத்தை, சரிவுக்குத் தள்ளி, தி.மு.கழகத்தை அதிசயமாய் விரைவில் ஆட்சிபீடத்தில் ஏற்றிவைத்தது எனில் மிகையாகா).
மறுபிறவி பெற்ற எம்.ஜி.ஆரால், இனி பேச முடியாது. திரைப்பட வசனங்களைப் பேசமுடியாது என்று, எதிர்முகாமினர் எக்காளமிட்டனர். இவற்றையெல்லாம் மீறி, நோயில் இருந்து மீண்டு, மக்கள் மகிளும் வண்ணம் வெற்றிப்படங்களைத் தந்த சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர்; சாவில் இருந்து மீண்டு, தனது தளராத பயிற்சியால் பேசத்தொடங்கி, ‘காவல்காரன்’, ‘ரகசிய போலீஸ் 115′, குடியிருந்த கோயில்’, ‘ஒளிவிளக்கு’ போன்ற வெற்றிப்படங்களில் நடித்து எதிரிகளின் வாய்ச் சவடால் வாயிலை அடைத்தார்.
1983 – ஆம் ஆண்டு இறுதியில், சாதாரண நோய்க்காக சென்னை அப்போலோ மருந்துவமனைக்குச் சென்ற புரட்சித் தலைவர், கடுமையான நோய்க்கு உள்ளாகி, அமெரிக்காவில் உள்ள புருக்ளீன் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
எம்.ஜி.ஆர். உடல்நிலை பற்றிக் கொடூரமான வதந்திகள் பரப்பப்பட்டன. ‘அவர் திரும்பி வந்தால் அவரிடமே ஆட்சியை ஒப்படைக்கிறோம்! எனவே எங்களுக்கு வாங்களியுங்கள்!’ என்று எதிர்முகாமினர் பிரச்சாரங்களில் ஈடுபட்டனர். மக்களின் ஏகோபித்த வழிபாடுகளால் அமெரிக்காவில் இருந்து, எம்.ஜி.ஆர். திரும்பி வருவதற்கு முன்பே 1984 – ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், அவரது இயக்கம் 136 இடங்களைப் பெற்று பெரும் வெற்றியை ஈட்டியது. எம்.ஜி.ஆரும் அமெரிக்க மருத்துவமனையில் இருந்தவாறே ஆண்டிப்பட்டித் தொகுதியில் முப்பத்திரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வாகை சூடினார்.
“ஆறிலும் சாவு, நூறிலும் சாவு!
தாயகம் காப்பது கடமையடா!”
என்று கூறத்தகுந்த காலனை வென்ற, காலத்தை வென்று நிற்கும் மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர். தானே!
தொடரும் பாடலில், வளரும் செய்திகளைப் பார்ப்போமா?
“கனக விஜயரின் முடித்தலை நெறித்து
கல்லனை வைத்தான் சேரமகன்!
இமய வரம்பினில் மீன்கொடி ஏற்றி,
இசைபட வாழ்ந்தான் பாண்டியனே!”
தொடர்ந்த இப்பாடல் வரிகளில், தமிழ்ப்புவியை ஆண்ட பண்டைய மன்னர்களின் வீரம் பறைசாற்றப்பட்டது.
அடுத்து……!
“கருவினில் வளரும் மழலையின் உடலில்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை!
களங்கம் பிறந்தால் பெற்றவள மானம்
காத்திட எழுவான் அவள் பிள்ளை!
வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி!
மக்களின் மனதில் நிற்பவர் யார்?
மாபெரும் வீரர், மானம் காப்போர்,
சரித்திரம் தனிலே நிற்கின்றார்!”
கவியரசர் தீட்டிய இந்த வைர வரிகள், புவியரசர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கையில், வரலாறாய் நடந்து வந்த வரிகள் அல்லவா?
சத்தியா எனும் தாய், கருவினிலே வளர்ந்தபோதே தனது அன்பு மழலையாம், எம்.ஜி.ஆர். என்ற மகனுக்குத் தைரியத்தை ஊட்டி வளர்த்த தாயல்லவா!
பெற்ற தாயின்மீது பெறுதற்கரிய பாசத்தைச் செலுத்தியதோடு, நாட்டிலுள்ள தாய்மார்களின் மீதெல்லாம் அளவிடற்கரிய பாசத்தைச் செலுத்தி, அவர்களது மானம் காக்க, களங்கத்தைப் போக்கக் காலமெல்லாம் துணையாய் நின்ற காவல் தெய்வமல்லவா எம்.ஜி.ஆர்! அதனாலன்றோ இன்றும் தாய்க்குலத்தின் தணியாத செல்வாக்கோடு, மறைந்தும் இம்மண்ணில் மங்காத புகழோடு எம்.ஜி.ஆர் வாழ்கின்றார்.
கோடி மக்கள் இம்மண்ணில் வாழ்ந்ததுண்டு. வாழ்ந்த சுவடுகள் தெரியாமல் மறைந்ததும் உண்டு. ஆனால் மக்களின் மனங்களில் நிலைத்து நிற்பவர் யாவர்?
மாபெரும் வீரர்! மானத்தைக் காப்போர்!
இவர்கள் மக்கள் மனங்களில் மட்டும் அல்ல…. வருங்காலச் சரித்திரத்திலும் சாய்ந்துவிடாது நிலைத்து நிற்பர்.
உண்மைதானா? உண்மையே! உதாரணம்…. எம்.ஜி.ஆரே!..........nsm...
-
#மக்களின் #மனக்கண்ணாடி
பலர் என்னை ‘புக்’ செய்து பல படங்களுக்கு எழுதவைத்தார்கள்.
அதிலிருந்து தொடர்ச்சியாக எனக்கு அவரோடுநெருங்கிப் பழக நிறைய வாய்ப்புக் கிடைத்தது.
அவரிடம் உள்ள ஒரு விசேஷம் என்னவென்றால்,கதையம்சம் என்பது மற்ற நடிகர்களுக்குதெரியாதஅளவிற்கு அதிகமாக அவருக்குத்தெரியும்.
டைரக்ஷனில் அவரைவிட நல்ல ஒரு டெக்னீஷியனே கிடையாது.
வசனத்தைப் படித்துப் பார்க்கும்போது, எந்த அளவுக்கு,எந்த சீன் தாங்கும் என்று அவர் அழகாகப் புரிந்துகொள்ளுவார்.
மக்கள் எப்படி இருக்கிறார்கள்; அவர்கள் மனோபாவம் என்ன என்பதை நன்றாக, தெளிவாகத் தெரிந்துவைத்திருப்பார்.
இந்த மாதிரியன நேரத்தில் இந்த மாதிரி் கதை தான் எடுபடும் என்பது அவருக்குத் தெரியும்.
இந்த மாதிரிப் பாத்திரங்களைஏற்றுக் கொண்டால்தான், மக்களிடையே மரியாதைஇருக்கும் என்பதையும் அவர் அறிவார்.
கதையிலே வருகின்ற சினிமா பாத்திரத்திற்கும்,சாதாரண வாழ்க்கையில் நடக்கின்ற நிகழ்ச்சிகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கருதிய ஒரே நடிகர் அவராவார்!
அதனாலேயே சினிமாவில் நடிப்பதும், வாழ்க்கையில் வாழ்வதும் ஒரே மாதிரி அமைந்தால் ஜனங்களிடையே மரியாதையைப் பெற்றுவிட முடியும் என்று அவர் நம்பினார்.
இந்த நம்பிக்கைக்கு ஏற்பதான் காட்சிகளையும் அவரஅமைப்பார்; அமைக்கும்படி என்னிடமும் சொல்லுவார்.
இவைகளெல்லாம் என் மனதில் பசுமையாகப்பதிந்திருந்த காரணத்தால், பின்னாலே நானும் நிறைய எழுத முடிந்தது.
அவருடைய சந்திப்பும், அவரோடு எனக்கு ஏற்பட்டபழக்கமும், நாங்கள் இருவரும் சேர்ந்துஒரு படத்தை எடுக்கும் நிலைக்கு உருவாக்கின.
நாங்கள் இருவரும் ஒரு படத்தை எடுக்கவும்ஆரம்பித்தோம்.
‘பவானி’ என்ற படம், பாதியிலே நின்று போனாலும்,எனக்கு அவர் நல்ல உதவிகள் செய்தார். அதிலேஅவருக்குத்தான் ஏராளமான நஷ்டம் ஏற்பட்டது.ஆனாலும்கூட தொடர்ந்து எங்களுடைய உறவு நீடித்தது.
அவருடைய உயர்ந்த குணங்களையும், பெருந்தன்மையையும், பல நேரங்களிலே கண்டு நான் மெய்சிலிர்ந்திருக்கிறேன்.
என் வாழ்க்கையில் ஒரு இக்கட்டான நேரத்தில், அவர்கை கொடுத்ததை என்னுடைய வரலாற்றில் நான் குறிப்பிட்டிருக்கிறேன்.
மற்றவர்கள் செய்யாத, செய்யமுடியாத உதவிகளையெல்லாம் அவர் செய்துள்ளார். அவருக்கும், எனக்கும் உள்ள தொடர்பு என்றும் நீடித்துநிலைத்து நிற்கவேண்டு மென்று நான் விரும்புகிறேன்.”
மக்கள் மனங்களைத் துல்லியமாக எடைபோடும்ஆற்றல் பெற்ற காரணத்தால்தான், மக்கள் திலகம்,தனது எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் சார்பில் தயாரித்து, 1958 –ஆம் ஆண்டில் வெளியிட்ட ‘நாடோடு மன்னன்’ 1969 –ஆம் ஆண்டில் வெளியிட்ட ‘அடிமைப்பெண்’ 1973 – ஆம்ஆண்டில் வெளியிட்ட ‘உலகம் சுற்றும் வாலிபன்’ ஆகியமூன்று படங்களும், தமிழ்த்திரையுலக வரலாற்றில்சரித்திர சாதனைகள் படைக்க முடிந்தன.
காலமாற்றம், அரசியல் மாற்றம், அறிவியல் மாற்றம் ஆகிய அனைத்து மாற்றங்களுக்கு இடையிலும்மக்களின் மனமாற்றங்களை அறிந்து #வெள்ளித்திரையில் #வெற்றியை #எப்போதும் #காணமுடிந்த #நம்பிக்கை #நட்சத்திரமாய்த் #திகழ்ந்தவர்
#மக்கள்திலகம்
#ஒருவரே
#மக்கள்திலகம் பற்றி #கண்ணதாசன்..........bsm.........
-
கோப்புகளை கிடப்பில் போடாத எம்.ஜி.ஆர்., ஆட்சி
பதிவு செய்த நாள்: ஜன 16,2021 05:40
''சினிமாவில் மட்டுமின்றி, பொதுவாழ்விலும், மக்களுக்காகவே வாழ்ந்து காட்டியவர், 'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர்.,'' எனக் கூறி, தன் பழைய நினைவுகளை நம்முடன் பகிர்ந்து கொண்டார், 'குழந்தை இலக்கிய செல்வர்' பி.வெங்கட்ராமன்.
வெங்கட்ராமன் மேலும் கூறியதாவது:இதழியல், இலக்கியம், மக்கள் தொடர்பு உள்ளிட்ட துறைகளில், 70 ஆண்டுகளாக தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிறேன்.தற்போது, எனக்கு வயது, 86. என் அனுபவத்தில், சினிமா மற்றும் பொதுவாழ்வு ஆகிய இரண்டிலும், மக்களின் அபிமானத்தை பெற்ற தன்னிகரற்ற தலைவர் எம்.ஜி.ஆர்., தான்.
அவர் சினிமாக்களில், மக்கள் துயர் துடைக்கும் நாயகனாக நடித்தார். தன் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்தாற் போல், பொதுவாழ்வில் அதே போன்ற நற்காரியங்களை செய்து காட்டினார்.அவரது ஆட்சியில் 'கோப்புகள் தேக்கம் என்ற பேச்சுக்கே இடமிருக்காது' என, அப்போது அரசுப் பணியில் இருந்து என் நண்பர்கள் பலரும் சொல்வர். அவர்களின் கூற்று எவ்வளவு உண்மை என்பதை, நானே நேரில் கண்டபோது, எனக்கு வார்த்தை வரவில்லை.
தமிழக முதல்வராக, எம்.ஜி.ஆர்., சுற்றிச் சுழன்று பணியாற்றிய காலம் அது.நான், டி.வி.எஸ்., நிறுவனத்தின் மக்கள் தொடர்பு அதிகாரியாக, கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் பணியாற்றி வந்தேன். அப்போது, நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக, எர்ணாகுளம் வந்த, எம்.ஜி.ஆரை, எர்ணாகுளம் முத்தமிழ் சங்கத்தின் சார்பில் வரவேற்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அப்போதைய அரசு செயலர் பரமசிவம், வலம்புரி ஜான் உள்ளிட்டோர் என் உடன் இருந்தனர்.
நிகழ்ச்சியின் முடிவில், 'கேரளாவின் பல்வேறு மாவட்டங்களில், ஏராளமான தமிழர்கள் பணியாற்றுகின்றனர். சென்னையிலிருந்து இங்குள்ள முக்கிய நகரங்களுக்கு நேரடி பஸ் வசதி இல்லாதது மிகவும் சிரமமாக உள்ளது' என, எம்.ஜி.ஆரிடம் முறையிட்டேன்.'ஆகட்டும் பார்க்கலாம்' என புன்முறுவல் பூத்து எங்களிடம் இருந்து விடைபெற்றார். அடுத்த ஒரே வாரத்தில், எர்ணாகுளம் உட்பட, கேரளாவின் முக்கிய பல நகரங்களுக்கு, சென்னையிலிருந்து நேரடி விரைவுப் பேருந்துகளை, எம்.ஜி.ஆர்., தலைமையிலான அரசு அறிவித்தது.
தமிழர்களுக்கு ஓர் பிரச்னை என்றால், சற்றும் தாமதிக்காமல் நடவடிக்கை எடுப்பவர், எம்.ஜி.ஆர்., என்பதற்கு இந்த சம்பவம் ஓர் சான்று. மவுனப்பட காலம் தொட்டே, சினிமா துறையின் வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்ட, புதுக்கோட்டையை சேர்ந்த, ராஜா சாண்டோ பெயரில் திரைத்துறையினருக்கு விருதுகளை வழங்கினார். கத்திச் சண்டை, மல்யுத்தம் போன்ற கலைகளில் எம்.ஜி.ஆருக்கு ஆர்வம் ஏற்பட முன்னோடியாக திகழ்ந்தவர், பி.யு.சின்னப்பா.
சின்னப்பா, இறந்தபோது, அவரின் சொந்த ஊரான புதுக்கோட்டைக்கு நேரில் சென்று, சின்னப்பாவின் குடும்பத்தாரிடம், எம்.ஜி.ஆர்., துக்கம் விசாரித்தார். மொத்தத்தில், கலைஞர்களை மதிப்பதிலும், மக்கள் குறை தீர்ப்பதிலும், எம்.ஜி.ஆருக்கு நிகர் எம்.ஜி.ஆர்., மட்டுமே. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக அரசுக்கு கோரிக்கை
தமிழக அரசுக்கு பி.வெங்கட்ராமன் விடுக்கும் கோரிக்கைகள்:குழந்தை இலக்கியத்தில் பலருக்கும் முன்னோடியான, அழ.வள்ளியப்பாவை கவுரவிக்கும் வகையில், சென்னையில் அவர் வாழ்ந்த தெருவுக்கு, வள்ளியப்பா தெரு என பெயர் சூட்ட வேண்டும். அண்ணா நுாற்றாண்டு நுாலகத்தில், குழந்தைகள் பிரிவிற்கு, வள்ளியப்பா பெயர் சூட்ட வேண்டும். குழந்தை இலக்கிய படைப்பாளிகளுக்கு, வள்ளியப்பா பெயரில் விருது வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
பன்முகத்தன்மை!
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த பி.வெங்கட்ராமன், 15வது வயதில் இருந்தே சிறார் இலக்கியம் குறித்து எழுத ஆரம்பித்தார். 'டிங் டாங்' என்ற பெயரில், குழந்தை இலக்கிய இதழ் ஆரம்பித்து, அதன் ஆசிரியராகவும் விளங்கினார். சாலை விழிப்புணர்வு குறித்து, இவர் எழுதிய குழந்தைப் பாடல் மிகப் பிரபலம். ஆல் இந்தியா ரேடியோவில், மாவட்ட நிருபர், முத்தமிழ் மலர் ஆசிரியர், குழந்தை கவிஞர் பேரவை தலைவர் என பல பொறுப்புகளை வகித்துள்ளார். 2018ம் ஆண்டு, பாரதி நெல்லையப்பர் மன்றத்தின் சார்பில், தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் பாண்டியராஜனிடம் இருந்து, விருது பெற்றவர்........Venky
-
தொடர் பதிவு உ....த்தமன் 14
----------------------------------------------
"உ....த்தமனு"க்கு தொடர் HF போட வேண்டும் என்ற எண்ணம் அய்யனின் கைஸ்களுக்கு வர முன்னோடியாக இருந்த படம் ஜோஸப்பில் 1970 பொங்கலுக்கு வெளியான "மாட்டுக்கார வேலனே".
1970 ஜன 14 புதன்கிழமை வெளியான "மாட்டுக்கார வேலன்" புதன் வியாழன் 5 காட்சிகளும் வெள்ளி சனி ஞாயிறு 4 காட்சிகளும் தினசரி 3 சனிஞாயிறு 4 காட்சிகள் எனவும் தெளிவாக பல வண்ணங்களில் போஸ்டருக்கு மேலே ஸ்லிப்பை ஒட்டியிருந்தார்கள்.
ஏதோ காட்சி நேரத்தை பார்த்து ரசிகர்கள் வருவார்கள் என்று நினைத்து ஒட்டினார்களோ என்னவோ?. ரசிகர்கள் வீட்டுக்கு சென்றால்தானே திரும்பிவர!. இரவுக்காட்சி டிக்கெட் விற்பனை முடியும்வரை தியேட்டரே பழியாக கிடந்தனர். திங்கள் வரை நடந்த அத்தனை காட்சிகளும் HF.
ஒவ்வொரு காட்சி முடிந்ததும் தட்டி போர்டை கழற்றி HF எண்ணிக்கையை ஒட்டி திரும்ப மாட்டுவார்கள். நெல்லை மாவட்ட எம்ஜிஆர் மன்ற தலைவர் மு.பாலகிருஷ்ணனும் அடிக்கடி வந்து ரசிகர்களுக்கு உற்சாகமூட்டி விட்டு செல்வார்.
இதற்கப்புறம் வந்த படங்களுக்கு தொடர் HF ஒட்டுவதில்லை.அந்தந்த காட்சிகள் HF ஆனால் போர்டு வைப்பார்கள், அவ்வளவுதான். "மாட்டுக்கார வேலன்" தொடர்ந்து 25 காட்சிகள் வரை HF
ஆகி தூத்துக்குடியில் ஒரு புதிய சாதனையை உருவாக்கியது. 26 வது காட்சியாக செவ்வாய் கிழமை மாட்னி ஷோ வாக இருந்ததால் பொங்கல் லீவு முடிந்து அனைவரும் வேலைக்கு சென்றபடியால் மாட்னி ஷோவுக்கான ஷோபா டிக்கெட்களில் ஒரு 6 டிக்கெட்கள் மாட்டிக்கொண்டன.
அந்த டிக்கெட்டை கூட கிழிக்க முடியாமல் எம்ஜிஆர் ரசிகர்கள் பரிதாபத்திற்குரியவர்களாக இருந்தார்கள். அய்யன் படமாக இருந்திருந்தால் தொடர்ந்து100 HF. ஆக்கி ரிகார்டு கிரியேட் பண்ணியிருப்பார்கள். ஆனால் ஏழை எம்ஜிஆர் ரசிகர்களுக்கு அந்த எண்ணமும் கையில் காசும் கிடையாது. இதையெல்லாம் கண்ட அய்யன் ரசிகர்களின் தீராத வேட்கைக்கு தீனியாக கிடைத்த "உ...த்தமனை" விடுவார்களா?
அய்யனின் கைத்தடிகள். "உ..த்தமனு"க்கும் அதுபோல் தொடர்ந்து HF போட்டார்கள். 25 காட்சிகளை தாண்டி HF தொடர்ந்தது.
எத்தனை காட்சிகள் அரங்கை நிறைத்தார்களோ என் ஞாபகத்தில் இல்லை. அந்த சமயம் நான் மேற் படிப்புக்காக பாளையங்கோட்டை St. சேவியர் ஹாஸ்டலில் தங்கி படித்ததால் எனக்கு நடந்ததை நேரடியாக பார்க்க முடியவில்லை. சனி,ஞாயிறு நண்பர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வதோடு சரி.
ஆனால் அதன்பிறகு ஸ்டெச்சர் பயன்படுத்தியும் பிணத்தின் வெயிட் தாங்காமல் கைபிள்ளைகள் திணற ஆரம்பித்தனர். கடப்புரத்தை ஒட்டிய பகுதியில் திரையரங்கம் அமைந்திருந்ததால் வடக்கயிறையும் பயன்படுத்தி இழுக்க முயற்சி செய்தனர். பெரிய பெரிய பணக்கார கைஸ்கள் முயற்சி செய்தும் நினைத்ததை முடிக்க முடிந்ததா?
அடுத்த பதிவில் நிறைவு பெறும்......KSR...
-
#இன்றைய #தேவை
எம்ஜிஆர் போன்ற மனித நேயமிக்க தலைவர்களே! நாட்டிற்கு இப்போதைய தேவை என்று வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தனது ‘டுவிட்டர்’ பகுதியில் வெளியிட்ட கருத்து வருமாறு:-
எம்.ஜி.ஆர். மிகப் பெரிய தலைவர் மட்டுமல்ல, மனிதநேயத்திலும் மிகச் சிறந்தவர். 1980-ம் ஆண்டுகளின் தொடக்கத்தில் அவர் முதல்-அமைச்சராக இருந்தபோது நான் மத்திய திட்டக் கமிஷனின் துணைத் தலைவராக (பொறுப்பு) இருந்தேன். தமிழகத்தின் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வருவதற்கு அவர் திட்டம் வைத்திருந்தார்.
இந்தத் திட்டத்தின் நிதி தொடர்பாக திட்டக் குழு கூட்டம் நடப்பதற்கு முன்பு என்னை எம்.ஜி.ஆர். சந்தித்துப் பேசினார். அப்போது அவர் தனது பின்னணி பற்றி விவரித்தார். சிறு வயதில் குடும்பம் வறுமையால் வாடியதாகவும், பள்ளிக்குச் செல்லும்போது வயிறு நிறைய உண்ணாமல், அரைகுறை உணவுடன் சென்றதாகவும் கூறினார்.
மேலும், கடுமையான பசியுடன் இருப்பதால் வகுப்பில் ஆசிரியர் கற்றுத் தருவதை கூர்ந்து கவனிக்க முடியாது என்று வேதனையுடன் எம்.ஜி.ஆர். கூறினார். எனவே தனது தலைமையில் நடக்கும் ஆட்சியில் எந்த மாணவ, மாணவியும் பசியுடன் வகுப்பில் உட்கார்ந்திருக்கக் கூடாது என்பதற்காக சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வர இருப்பதாகவும் தெரிவித்தார்.
#ஏழைகளைப்பற்றிய #அவரது #இந்த #கரிசனம் #என்னை #வெகுவாய் #அசைத்தது. கல்வி கற்கும் தளத்தில் ஏழைகளுக்கும் பணக்காரருக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை நிரப்ப அவர் எடுத்த முயற்சி இது.
அப்படியொரு மரபை நமக்கு கற்றுக்கொடுத்துவிட்டு எம்.ஜி.ஆர். சென்றிருக்கிறார். அவரைப் போன்ற தலைவர்களே தற்போதைய நமது தேவையாக உள்ளது...!.........bsm...
-
சோவியத் ரஷ்யா கண்கொத்தி பாம்பாக உலகையே உற்று நோக்கி கொண்டிருந்த காலம் அது.
1977-ல் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் மாபெரும் வெற்றி பெற்று தமிழகத்தின் முதலமைச்சர் ஆக பதவி ஏற்றார்.
உடனடியாக ரஷ்யா எம்.ஜி.ஆரை பற்றிய தகவல்களை திரட்டியது.
சினனஞ்சிறு வயதில் தந்தையை இழந்து வறுமையான சூழ்நிலையில் தாயால் வளர்க்கப் பட்ட ஒரு மனிதன் உன்னத கலைஞானகவும் ஒப்பற்ற மக்கள் தலைவனாகவும் உருப்பெற்றதை பார்த்து வியப்படைந்தது சோவியத் ரஷ்யா.
உடனடியாக தனது இந்திய தூதரகம் மூலம் தங்களது நாட்டிற்க்கு சிறப்பு விருந்தினராக வருமாறு எம்.ஜி.ஆரை அழைத்தது.
எம்.ஜி.ஆரும் அழைப்பினை ஏற்று ரஷ்யா சென்றிருந்தார்.
சுற்றுப் பயண முடிவில் ரஷ்ய அதிபர் எம்.ஜி.ஆரிடம் " உங்களுக்கு என்ன வேண்டும் கேளுங்கள் தருகிறோம் " என்றார்.
" எனக்கு எதுவும் வேண்டாம்., தமிழ்நாட்டில் நிறைய குடிசை வீடுகள் கூரைகளாக உள்ளதால் தீப்பிடித்து எரிந்து விடுகிறது .ஓரளவுக்கு மேல் அரசாங்கத்தால் உதவி செய்ய முடியவில்லை.
முடிந்தால் அந்த கூரை வீடுகளை ஓட்டு வீடாக மாற்ற உதவி செய்யுங்கள்"...என்றார் எம்.ஜி.ஆர்.
ரஷ்ய அரசு உடனடியாக இந்திய அரசின் ஒப்புதலை பெற்று தமிழகத்திற்க்கு நிதி வழங்கியது.
சுவர்கள் உள்ள கூரை வீடுகளுக்கு ஓடுகள் மாட்ட மூவாயிரம் ஒதுக்கப்பட்டு கூரை வீடுகள் ஓட்டு வீடுகளாக மாறின.
பிற்பாடு கருணாநிதி ..இந்திரா..ராஜீவ் பெயரிலும் இப்போது உள்ள பசுமை வீடடுகள் திட்டத்திற்க்கெல்லாம் முன்னோடியாக இருந்ததவர் எம்.ஜி.ஆர்.......mj
-
சோர்ந்து போனவர்களை தட்டி எழுப்பி , மன அழுத்தத்தில் உள்ளவர்களுக்கு நம்பிக்கை ஊட்டி வாழ்க்கையில் நம்பிக்கையும் , விடா முயற்சியும் தனி மனிதனுக்கு தேவை என்று தன்னுடைய படங்கள் மூலம் பல காட்சிகளை
அமைத்து சமுதாயத்தில் பலர் முன்னேற மக்கள் திலகத்தின் படங்கள் இருந்தது என்று பல சமூக ஆவலர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் .
இந்திய சினிமாவில் எம்ஜிஆரின் சமூக படைப்புகள் மற்றவர்களுக்கு வழிகாட்டியாக அமைந்தது .எம்ஜிஆரின் பட பாடல்கள் மொழி மாற்றம் செய்து பல தனியார் நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு எம்ஜிஆரின் பாடல்களை திரையிட்டு அவர்களுக்கு மனதில் தெளிவும் , அமைதியும் ,ஏற்பட வழி செய்கிறார்கள் .அந்த அளவிற்கு எம்ஜிஆரின் நடிப்பும் பாடல்களும் இருந்ததை பாராட்டுகிறார்கள் .
மனதில் ஒருவித அச்சம் .
ஏமாற்றங்கள்
நினைத்து நடக்காமல் போனது
மற்றவர்கள் நிராகரிப்பு
பொறாமை
இயலாமை
ஏக்கம்
வரிந்து கொண்டு போர்ரடுவது
முன்னிலை படுத்தி போராட்டம்
வசவுகள் - ஏவுகணைகள் ]
ஆத்திரம்
நிர்பந்தம்
திணறல்
அடக்க முயற்சி
அடங்கி போதல்
என்ற குணங்கள் கொண்டோர் இன்றைய சமுதயாத்தில் தங்களை வருத்தி கொண்டு வாழும் அவல நிலைக்கு உள்ளதை
எண்ணித்தான் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவருடைய படங்களில் பாடல்களையும் , காட்சிகளையும் அமைத்து மக்கள்
திருந்திட வழி செய்தார் . பலரும் மக்கள் திலகத்தின் அறிவுரைகளை ஏற்று கொண்டார்கள் .
ஒரு சிலர் ...............
''இவர் திருந்தவில்லை ...மனம் வருந்தவில்லை ..அந்த மேலோர் சொன்னதை மறந்தார் ''.........vsm...
-
நடிகர் சிரஞ்சீவீ தான் முதல் முதலாக எம் ஜி ஆரை பார்த்ததை விவரித்தார் ஆந்திராவில் ஏதோ அதிகாரபூர்வ நிகழ்ச்சி முடிந்து விட்டு ஸ்டுடியோ பக்கம் வந்த எம் ஜி ஆரை பார்த்த போது ஒரு சுத்த தங்க கட்டி நடந்து வந்தது போல் இருந்தார் பிரபலமாகத நடிகனாக இருந்தபோதும் என்னை அன்போடு விசாரித்து உரையாடியதை மறக்க முடியாது
மலையாள நடிகர் ப்ரேம் நஸீர் தான் முதன் முதலாக எம் ஜி ஆரை சந்தித்ததை இப்படி விவரித்தார் அன்று நான் சின்ன நடிகன் திருவனந்தபுரம் மெரிலாண்டு ஸ்டுடியோவில் படபிடிப்புக்காக வந்த போது ஒரே பரபரப்பு எம் ஜி ஆர் ராஜராஜன் என்ற படத்தின் படபிடிப்புக்கு வருகிறார் என்று அது வரை எம் ஜி ஆரை நேரில் காணத நானும் ஆவலுடன் காத்திருந்தேன் பத்து மணி அளவில் ஒரு ப்ளேன் முத்து கார் கார் வந்து நிற்க்க அதன் கதவை திறந்து கட்ஷூ போட்டு வெள்ளை வேட்டி கைகளை புஜம்வரை சுருட்டி வைத்து வாராத நிறைய சுருள் முடியோடுதங்க நிறத்தில் புன்சிப்போடு கை தொழுது நடந்து வந்த எம் ஜி ஆரை பார்த்து ஆண் ஆன நானே ஒரு கணம் மலைத்து விட்டேன் இத்தனை தேஜஸ் அழகுடைய மனிதன் உண்டா என்று
சரோஜா தேவி தான் முதல் முதலாக எம் ஜி ஆரை சந்தித்ததை இப்படி கூறுகிறார்
துணை நடிகையாக கன்னடபடபிடிப்பில் இருந்தபோது அனைவரும் படபடப்போடு எழுந்து வணக்கம் சொல்ல நான் எதுவும் புரியாமல் பார்க்க தூரத்தில் ஆயிரம் சூரியன் ஒன்றாக வரும் பிரகாசத்தோடு ஒருவர் வர அனைவரும் வணங்க நான் பிரம்மிப்போடு வணங்கி நிற்க்க அவர் சென்ற பின் யார் இவர் என்று கேட்க இவர் தான் எம் ஜிஆர் என கூற நான் அதிர்வோடு நின்றேன்
அப்போது என்னை கவனித்த எம் ஜி ஆர் என்னை பற்றி விசாரித்து தன் சொந்த படமான நாடோடி மன்னன் படத்தில் நடக்க வைத்து எனக்கு ஒரு பெரிய வாழ்க்கை தந்தார் என் அன்பு தெய்வம் எம் ஜி ஆர்
எம் ஜி ஆர் கண்டவர் பிரம்மிக்க பழகியவர் பரவசம் கொள்ள
அறிந்தவர் வியக்க
அறிஞர்கள் வியக்க
ஆராட்சியாளர்கள் ஆராயிகிறார்கள் எம் ஜி ஆர் மனிதபிறவியா தெய்வபிறவியா என்று
வாழ்க எம். ஜி .ஆர் ., புகழ்... Arm...
-
ஷாக் ட்ரீட்மென்ட்
----------------------------
எம்.ஜி.ஆர் ஒருவரை,,அதுவும் பத்திரிகையுலக ஜாம்பவான் ஒருவரை செருப்பால் அடித்தாரா?? அது என்ன கதை?? பார்ப்போமா?
சா.விஸ்வனாதன் என்னும் பிரபல பத்திரிகையாளர் அவர்!
உங்களுக்கு எளிதில் அடையாளம் தெரிய--
சாவி!!
எஸ்.எஸ்.வாசன் தொடங்கிய ஆனந்த விகடனில் தொடங்கிய இவரது எழுத்துப் பணி கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் நீடித்தது!
ஒரு சினிமாவில் இவருக்கேத் தெரியாமல் இவர் நடித்திருக்கிறார்?
அதுவும் எம்.ஜி.ஆரின் அன்பே வா படத்தில்!
அவருக்கேத் தெரியாமல் அவர் எப்படி நடிக்க முடியும்??
அன்பே வா படப் பாடலான--
புதிய வானம் புதிய பூமி பாடல் ஷூட் ஆகும்போது இவரும் அங்கே ஒரு சுற்றுலாப் பயணியாக சென்றிருக்கும் போது சரியாக அந்த பாடல் ஷூட்டிங்கில் குளோஸப்பில் இவரும் சிக்கிக் கொண்டார்.
இன்றைக்கும்,,அப்பாடலைப் பார்த்தீர்கள் என்றால் --
அப்பாடல் காட்சியில் இவர் நடித்திருப்பது போல் தெரிவார்!
எழுத்தாளர் சாவி என்றாலே பத்திரிகையுலகில் இளமையும் ஜாலியும் நிறைந்தவர் என்று பேசப்படுவார்!
இவரது எழுத்துக்கள் பெரும்பாலும் நகைச்சுவையால் பின்னப்பட்டிருக்கும்!
இன்றைய ராஜேஷ்குமார்,,பட்டுக்கோட்டை பிரபாகர்,,சுபா போன்ற பல எழுத்தாளர்களை உருவாக்கிய பிரம்மா எனலாம் இவரை!!!
பெரியாரிஸத்தில் தீவிர பிடிப்புள்ள இவர் அன்றையக் காலக் கட்டத்தில் தீவிரமாக ஆதரித்த அரசியல் தலைவர்---?
கருணா நிதி??
முரசொலிக் குழுமம் குங்குமம் வார இதழைத் தொடங்கி அது வெற்றிகரமாக நடை போடுவதற்குக் காரணமே இந்த சாவி தான்!
இவர் தான் அந்தப் பத்திரிகையின் ஆசிரியர்!
தம் எழுத்துலக அனுபவங்களாலும்,,திறமையாலும் அப்பத்திரிகையை சக்சஸ் ஃபுல் இதழாக மாற்றிய சாவி--சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ--
தேவையோ--தேவையில்லையோ--
அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரை சகட்டு மேனிக்கு தம் பத்திரிகை மூலம் திட்டுவது அன்றைய சாவிக்கு சுவாரஸ்யப் பொழுது போக்கு??
அன்றைய முரசொலியை விட குங்குமம் வார இதழில் தான் எம்.ஜி.ஆர் மீதானக் கண்டனப் பதிவுகள் அதிகம் இடம் பெறும் என்றால் பார்த்துக் கொள்லுங்களேன்??
அந்த சமயத்தில் தான்--
குங்குமத்தின் கொட்டத்தை அடக்க--
மணியன் மூலம்--இதயம் பேசுகிறது பத்திரிகையும்-
வலம்புரி ஜான் ஆசிரியராக அங்கம் வகித்த --தாய்--வார இதழும் பவனி வரத் தொடங்கின!
எழுத்தாளர் சாவி,,குங்குமம் வார இதழின் ஆசிரியர் பணியைத் துறந்து--சாவி என்றப் பெயரிலேயே சொந்தமாகப் பத்திரிகை தொடங்குகிறார்!
அதிலும் வழக்கம் போல் எம்.ஜி.ஆருக்கு எதிராக--காச் மூச் தான்??
இந்த நிலையில் தான்--
சாவி பத்திரிகையில் வெகு திடீர் என்று அந்த அறிவிப்பு வெளி வருகிறது?
தோட்டத்திலிருந்து கோட்டை வரை!
முதல்வருடன் மூன்று நாட்கள்!!
சகலரும் அன்றையக் காலத்தில் அதிர்ந்து போன இதன்-பின்னணியில் தான் எம்.ஜி.ஆர்-
முன்னணியில் தெரிகிறார்!!
சாவி பத்திரிகை தொடங்கி சில இதழ்களில் கொஞ்சம் பொருளாதார நெருக்கடி அவருக்கு ஏற்பட--
கருணா நிதியிடம் உதவி கேட்டு இவர் செல்ல--
குங்குமம் பத்திரிகைக்கே ஆசிரியராக இரு. வேண்டுமானால் சம்பளத்தை உயர்த்தித் தருகிறேன் என்ற ஆணவமான பதில் கிடைத்திருக்கிறது?
ஒரு பண்பட்ட எழுத்துக் கலைஞனுக்கு இதை விட வேறு என்ன அவமானம் வேண்டும்??
முதல்வர் எம்.ஜி.ஆருடன் ஒரு கவர் ஸ்டோரி செய்தால் சர்க்குலேஷன் உயரும் என்ற நிச்சயத்தின் பேரில் -வெகுவாகத் தயங்கி--கூச்சப்பட்டு முதல்வர் எம்.ஜி.ஆரை அணுக--அவரோ--
உங்களை ஆணந்த விகடன் பத்திரிகையில் இருந்து தினமணி கதிர் பத்திரிகையைத் தொடர்ந்து வெகு காலம் நான் அறிவேன்.
என்னை எப்படி வேண்டுமானாலும் பேட்டி எடுத்துக் கொள்ளுங்கள் ஆனால் ஒரு நிபந்தனை??
நான் பேட்டிக் கொடுக்கிறேனே என்று என்னை செயற்கையாகப் புகழக் கூடாது?
என்னையும் என் மந்திரி சபையையும் நியாயமான கண்னோட்டத்தில் எழுத வேண்டும்???
எழுத்தாளர் சாவி,,நெகிழ்ந்து போய் தமது நெருங்கிய சகாக்களிடம் இப்படிச் சொன்னாராம்--
வாழ்க்கைக்குத் தேவையான மனித நேயம்,,கருணா நிதியிடம் கொஞ்சங்கூட இல்லை என்பதை உணர்ந்த போது அதிர்ச்சியாக இருந்தது!
அதை விட அதிர்ச்சி--
எதையும் மனதில் வைத்துக் கொள்ளாமல் எம்.ஜி.ஆர் எனக்கு உதவியதுடன்--என் பத்திரிகை தர்மத்தை எனக்கு எடுத்துக் கூறி,,தன் பெருந்தன்மையால் என்னை செருப்பால் அடித்து விட்டார்???
என்ன தோழமைகளே? சாவியின் உணர்வு நியாயம் தானே???!!!...vtr...
|
-
கலங்கரை விளக்கம்:
1958இல் அல்பிரட் ஹிட்ச்கொக்கின் வெர்டிகோ என்ற சைக்கோதிறில்லர் ஆங்கிலத் திரைப்படத்தை 1965ல் கே. சங்கர் கலங்கரை விளக்கம் என்ற கறுப்பு வெள்ளை திரைப்படமாக இயக்கி அமோக வெற்றி பெற்றார். (சரவணா பிலிம்ஸ் ஜி.என். வேலுமணி தயாரிப்பு, கதை - மா. லட்சுமணன், இசை விஸ்வநாதன், ராமமூர்த்தி. பாடல்கள் பஞ்சு அருணாசலம், வாலி, பாரதிதாசன்).
கல்லூரியில் வரலாறு படிக்கும் நீலா (சரோஜா தேவி) சிறு விபத்தில் மனநிலை பாதிப்படைகிறார். தன்னை ஆடலரசி சிவகாமியாகக் கற்பனை செய்துகொண்டு நரசிம்ம பல்லவ சக்ரவர்த்தியைத் தேடி அடிக்கடி கலங்கரை விளக்கு இருக்குமிடத்துக்கு நள்ளிரவில் செல்கிறார். பெரிய பணக்காரரான அவளுடைய தந்தை, டாக்டர் கோபால் (வி. கோபாலகிருஷ்ணன்) மூலம் சிகிச்சை அளிக்கிறார். கோபாலுக்கு உதவியாக அவருடைய சென்னை வழக்கறிஞர் நண்பர் ரவி (எம்.ஜி.ஆர்.) மகாபலிபுரத்துக்குக் காரில் வருகிறார்.
நள்ளிரவில் கலங்கரை விளக்கை நோக்கி ஓடும் நீலாவை, தான்தான் நரசிம்ம பல்லவன் என்று சொல்லி காப்பாற்றி வீட்டுக்கு அழைத்து வருகிறார். நீலா இறந்த பிறகு அண்ணனின் சொத்து முழுவதையும் கைப்பற்ற தம்பி நாகராஜன் (நம்பியார்) திட்டமிடுகிறார்.
அவருக்கு ஒரு காதலி, அந்தக் காதலிக்கு ஒரு தங்கை மல்லிகா (இன்னொரு சரோஜா தேவி). இப்படத்தில் சரோஜா தேவிக்கு இரட்டை வேடம். உருவ ஒற்றுமை உள்ள மல்லிகாவை நீலாவாக நடிக்க வைத்து, நீலாவைக் கொன்றுவிட்டு சொத்தை அடையச் செயல்படுகிறார் நம்பியார். மல்லிகா சாதாரணத் தங்கை அல்ல. சென்னை, பெங்களூர் என்று நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்திக் கலைக்காகச் சேவை செய்கிறார். நீலா கொல்லப்பட்ட பிறகு மல்லிகாவைத் திருமணம் செய்துகொள்ளும் எம்.ஜி.ஆர். அவர் மூலம் உண்மையை வரவழைத்து நம்பியாரைச் சிறைக்கு அனுப்புகிறார்.
தவறுக்கு உடந்தையாக இருந்ததற்காக மூன்று மாதச் சிறைத் தண்டனை பெற்ற மனைவியை சிறைக்கு அனுப்பி வைக்கிறார்.
4) இசையும் பாடலும் போட்டி போடும் அருமையான பாடல்:
அமாவாசையானால் சித்தம் கலங்கி பிரச்சினை கொடுக்கும் நீலாவைக் குணப்படுத்த ரவி வெளியே அழைத்துச் செல்லும் போது, பிரச்சினைக்குள்ளான நீலா மலை உச்சிமீதேறி குதித்து தற்கொலை செய்யப் போகும் போது, ரவி சிவகாமி, சிவகாமி என அழைத்து தானும் நரசிம்ம பல்லவனாகி நீலாவைக் காப்பாற்ற இருவரும் பாடும் பாட்டே பொன்னெழில் பூத்தது புது வானில்.
பஞ்சு அருணாசலத்தின் முதற் பாட்டு. சரோஜா தேவி. பூமா தேவி, அவர் முகம் பூகோளம். அது அழும் போது உலகமே அழுகின்றது. சிரிக்கும் போது உலகமே சிரிக்கின்றது. சரணத்தில் நீலா,
ஆடலரசி சிவகாமியாகி, ரவியை நோக்கி வரும்போது, லோங் சொட்டிலிருந்து, குளொஸ் அப்புக்கு வரும்போது ரவி, நரசிம்ம பல்லவனாகி இருக்கையில், அவர்கள் இருவரின் அழகின் காலடியில் உலகமே விழுந்து
சிவகாமி..சிவகாமி....
ஒ ஓஓஓஓஓ
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
என் மன தோட்டத்து வண்ணப் பறவை
சென்றது எங்கே சொல் சொல் சொல்
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
தென்னை வனத்தினில் உன்னை முகம் தொட்டு
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
எண்ணத்தை சொன்னவன் வாடுகிறேன்
உன் இரு கண் பட்டு புண் பட்ட நெஞ்சத்தில்
உன் பட்டு கை பட பாடுகிறேன்
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
முன்னம் என் உள்ளத்தில் முக்கனி சர்க்கரை
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
அள்ளிக் கொடுத்த பொன் மாடம் எங்கே
கிண்ணம் நிரம்பிட செங்கனி சாறுண்ண
முன் வந்த செவ்வந்தி மாலை எங்கே
பொன்னெழில் பூத்தது புது வானில்
வெண் பனி தூவும் நிலவே நில்
பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண் பனி தூவும் இறைவா வா
உன் மன தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா வா வா
தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
தென்னவன் மன்றத்து செந்தமிழ் பண் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
வந்தது பொன் வண்டு பாடிக் கொண்டு
மன்னவன் உள்ளத்தில் சொந்தம் வந்தாளென்று
சென்றது பூந்தென்றல் ஆடிக் கொண்டு
பொன்னெழில் பூத்தது தலைவா வா
வெண் பனி தூவும் இறைவா வா
என்னுடல் என்பது உன்னுடல் என்ற பின்
என்னிடம் கோபம் கொள்ளுவதோ
என்னிடம் கோபம் கொள்ளுவதோ
ஒன்றில் ஒன்றான பின்
தன்னைத் தந்தான பின்
உன்னிடம் நான் என்ன சொல்லுவதோ
பொன்னெழில் பூத்தது தலைவா வா
வென் பனி தூவும் இறைவா வா
உன் மன தோட்டத்து வண்ணப் பறவை
வந்தது இங்கே வா வா வா
ஆஆஆஆஆஆஆஆ...
ஒரு தலைவனின் தனிமையின் பிரிவின் வலியையும், அதற்கான தலைவியின் பதிலையும் கொண்டமைந்த மென்மையான காதலும,; அழகிய எதுகைகள், மோனைகள், சொற்பதம், பொருட்பதம் நிறைந்து இன்னிசையில் மனதை மென்மையான தென்றலாய் மயிலிறகாகி வருடும் உணர்வும் கொண்ட பாடல் இது. கேட்க மிகவும் அருமையாக இருந்ததற்கும் கண்ணதாசன் எழுதியது போல இருந்ததற்கும் காரணம் பஞ்சுவும் கண்ணதாசனும் சுமந்த பொது நிறமூர்த்தங்களாகவும் இருக்கலாம்.
Courtesy net...VSM...
-
அன்பு எம்.ஜி.ஆர் பக்தர்களுக்கும் வளர்ந்து வரும் தலைவர் அனுதாபிகளுக்கும் ஆளும் அரசில் பங்குபெற்றும் எம்.ஜி.ஆர் பக்கமும் பேசி செயல்படும் நண்பர்களுக்கும் இந்த பதிவு;
அரசியல் தெளிவோம் கொஞ்சம் !
தலைவர் 1987ல் மறைந்தபிறகு கட்சிக்கு தலைமையேற்றும் ஆட்சியை நடத்தவும் ஒரு தலைமை தேவைப்பட்டது.தலைவரின் அரசியல் பாதையில் கூட நிழலாக பயணி த்தவர் ஜானகி அம்மையார்.தலைவரின் ஒவ்வொரு வெற்றிக்கும் ஜானகி அம்மையார் பின்புலமாக இருந்தார்.ஒவ்வொரு ஆணின் வெற்றிக்குப்பின் ஒரு பெண் இருப்பார் என்று சொல்வோமே அது மாதிரி.அதனால் தலைவர் மறைவுக்குப்பின் மூத்த தலைவர்கள் ஒன்று கூடி ஜானகி அம்மையாரை பொறுப்பேற்க சொன்னார்கள்.அது படி நடந்தது.ஆனால் ஒரு பிரிவினர் குறிப்பிட்ட சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஒரு அணியாக பிரிந்து இருந்தனர்.ஆக 97 சட்டமன்ற உறுப்பினர்களுடன் 7 பேர் அமைச்சர்களாக ஜானகி அம்மையார் முதல்வரானார்.இரட்டை இலை ஆட்சிதானே. யார் கவிழ்த்தார்கள்.ஜெ.ஜெ தலைமை வகுத்த அணிதானே. ஆக ஆட்சி கலைந்தது யாரால்.நாம் தான் தெரிந்து கொள்ளவேண்டும்.பின்னர் 1989ல் தேர்தல்.ஜா -ஜெ அணி போட்டி. 1975ல் ஆட்சியை இழந்த கலைஞர் வென்று 1989ல் முதல்வராகுகிறார்.இந்த சூழலை கண்டு மனம் வருந்தினார் ஜானகி அம்மையார்.எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சி வலுவாக்கிட இரு அணியையும் இணைக்க ஜானகி அம்மையார் ஒருவரே தியாகம் பண்ணி ஒரே அணியாக உருவாக்கினார்.இரட்டை இலை பெற்றிட ஒப்புதல் கடிதம் தேர்தல் கமிஷனுக்கு கொடுத்தார்.சின்னமும் கிடைத்தது.கழகத்துக்கு தனது பெயரில் உள்ள ராயப்பேட்டை தலைமைக்கழக கட்டிடத்தை கட்சிக்கே தானமாக கொடுத்தார்.கட்சியின் இணைப்புக்கு ஒரு கோடி ருபாய் ஜெ அம்மையாரிடம் கொடுத்தார்.இந்த தியாக செயலை நெக்குறுக குறிப்பிடுகிறார் கே.ஏ.கே அவர்கள்.இதைப்பற்றி மாதவன் அவர்களும் ராசாராம் அவர்களும் மிகவும் பெருந்தன்மையாக ஜானகி அம்மையாரை பற்றி குறிப்பிடுகிறார்கள்.
மேற்குறிப்பிடும் தியாக செயலுக்காக ஜானகி அம்மையார் பெயரை தலைமைக்கழக கட்டிடத்துக்கு சூட்டிடவும் அவரது திருஉருவப்படம் தலைமைக்கழகத்தில் வைக்கவும் நாம் முறையிடுகிறோம்.நாம் ஒரு வலுவான காரணம் இல்லாமல் முயலுவதில்லை.ஆனால் இந்த வரலாறு தெரிந்தும் ஆளும் அரசு செவிசாய்க்கவில்லை.ஆனால் இன்னொரு பெண் முதல்வருக்கு 58 கோடியில் நினைவகம் கட்டுகிறது.ஏன் அ.தி.மு.கவின் முதல் பெண் முதல்வரை பாரா முகமாக இருக்குறீர்கள். ஆளும் அரசு அ.தி.மு.க 1972ல் இருந்து இன்று வரை வளர்ந்த பாதையில் பயணித்த கழக மூத்தோடிகளை கௌரவிக்கவேண்டும்.இந்த அரசு செய்யுமா ? எதிர்பார்ப்போம்.
நெல்லை எஸ்.எஸ்.மணி...
-
எனது எண்ணங்கள்.........
தமிழ் சினிமா ஹீரோக்கள் மத்தியில் இன்றும் உயர்ந்து நிற்கிறார் எம். ஜி. ஆர்....!
தமிழ் திரைவுலகில் தமிழக மக்களின் மனதைக் கவர்ந்த கதாநாயகனாக இன்றுவரை தனக்கு நிகராக ஒருவரும் இல்லை என்று சொல்லுமளவுக்கு உயர்ந்து நிற்கிறார் எம். ஜி. ஆர். அவர் இறந்து 30 ஆண்டுகள் ஆகியும் இன்றும் தமிழக மக்கள் அவரை நினைவு கூறுகிறார்கள் என்றால் அதற்கு காரணம் இன்றையத் தலைமுறையினரையும் கவரும் அவரது திரைப்படங்கள் தான் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
எம். ஜி. ஆர் சுமார் 135 படங்களில் நடித்திருக்கிறார். அத்தனைப் படங்களிலும் அவர் ஏழை மக்களுக்கு உதவி செய்யும் இரக்கமனம் படைத்த நல்ல மனிதனாகவே நடித்தது என்பது அவரது ரசிகர்களை அதே வழியில் செல்ல அவர்களது சிந்தனையை தூண்டியது என்பதையும் யாராலும் மறுக்கமுடியாது. அவர் திரைப்படத்தில் ஏழை மக்களுக்கு உதவுவார். உழைப்பாளி மக்களின் உரிமைகளை கேட்கும் தோழனாக இருப்பார்.
இவரை அடிக்கும் வில்லன்களிடம் கூட இரக்கம் காட்டுவார். இவரை தாக்கும் வில்லன்களை உடனே தாக்கமாட்டார். பிறகு அடிவாங்கிய அதே வில்லனுக்கு அறியுரை வழங்கி உதவிசெய்வார். இவரது சண்டைக்காட்சிகளில் வன்முறை இருக்காது. ஒரு முறை அன்றைய சோவியத் யூனியனில் நடைபெற்ற திரைப்படவிழாவில் எம். ஜி. ஆர் நடித்த திரைப்படம் ஒன்றையும் திரையிட்டிருக்கிறார்கள். அந்த திரைப்படத்தில் வரும் சண்டைக்காட்சியில், எம்ஜிஆர் கத்தி சண்டைப் போட்டிருக்கிறார். அதைப்பார்த்த ரஷிய மக்கள் ''எம்ஜிஆர் அழகா டான்ஸ் ஆடுறாரு'' என்று சொல்லியிருக்காங்க. அந்த அளவுக்கு வன்முறை இல்லாத சண்டைக்காட்சிகளாக இருக்கும். எம்ஜிஆர் கதாநாயகியிடம் கூட சண்டைப்போட்டுட்டு வருகிறேன்னு சொல்ல மாட்டார். ''விளையாடிவிட்டு வருகிறேன் வேடிக்கைப்பார்'' என்று சொல்லி சண்டைக்காட்சிகளை கூட விளையாட்டாய் செய்வார்.
கதாநாயகி ஆபத்தில் சிக்கிக்கொண்டால், சாகசங்களை எல்லாம் செய்து காப்பாற்றுவார். காதல் காட்சிகள் விரசமில்லாது இருக்கும். எல்லை மீறாத காதலாக இருக்கும். காதல் பாடல்கள் இலக்கியமாக இருக்கும்.
எம்ஜிஆர் ஒரு குறிப்பிட்டக் காலம் வரை பாடல் காட்சிகளில் கூட கதாநாயகியை தொடாமல் நடித்து வந்திருக்கிறார். அதேப்போல, எம்ஜிஆர் திரைப்படத்தில் கதைக்காக கூட மது அருந்துவது போலவோ, சிகரெட் குடிப்பது போலவோ நடித்ததில்லை. பெண்களை கேலிசெய்வது போன்றெல்லாம் இல்லாமல் அவர்களுக்கு மதிப்பளிப்பதும், அம்மாவை உயர்த்திக்காட்டுவதும், உயர்த்தி பாடுவதும், சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் அறியுரை வழங்குவதும், அறியுரை வழங்கி பாடுவதும் எம்ஜிஆர் படங்களில் உள்ள சிறப்பம்சங்கள் ஆகும்.
இப்படியெல்லாம் எம்ஜிஆர் நடித்ததால், அவரை நியாங்களை கேட்கும் ஒரு நல்ல வீரனாகவும், காதல் ததும்பும் கதாநாயகனாகவும், உதவிகள் செய்யும் நல்ல மனிதனாகவும், நன்னடத்தை கொண்ட நல்ல பண்பாளராகவும் மக்கள் பார்வையில் உயர்வான மனிதராக காட்சியளித்தார். பிற்காலத்தில், இப்படியாக அவர் நடித்த திரைப்படங்களும், அவரைப்பற்றிய மக்களின் பார்வையும், அதனால் அவர் மீது ஏற்பட்ட நம்பிக்கையுமே அவரை தமிழக அரசியலில் ஒரு உயர்ந்த இடத்திற்கு இட்டுச்சென்றது.
இன்றைக்கு அவரது காலத்திற்கு பிறகு, அவரை பின்பற்றி நடிப்பவர்களும், தனக்கென தனி முத்திரையோடு நடிப்பவர்களும் எம்ஜிஆரைப் போன்று மக்களின் மனதில் இடம்பிடிக்க முடியவில்லை என்பது உண்மை.
அதுவும் இன்றைக்கு தமிழ்த் திரைப்படத்தில் நடிக்கும் கதாநாயகர்களை பார்க்கும் போது, இளைஞர்களைப் பற்றி - குழந்தைகளைப் பற்றி - சமூகத்தைப் பற்றி அக்கறையில்லாமல் வெறும் இலாப நோக்கத்தில் நடிக்கும் கதாநாயகர்களைத் தான் நம்மால் பார்க்க முடிகிறது. இன்றைய ஹீரோக்கள் என்றால், மது அருந்துவார், புகைப்பிடிப்பார், பெண்களை கேலி செய்வார், அம்மா - அப்பாவை மதிக்கமாட்டார், அப்பா சட்டைப்பையிலிருந்து காசு திருடுவார், சண்டைக்காட்சிகளில் வில்லன்களை விட மோசமாக வன்முறையோடு சண்டைப்போடுவார், எதிரிகளின் மண்டை உடையும் - எலும்புகள் முறியும் - ரத்தம் சொட்டும் - கத்தியால் குத்தப்பட்டு, துப்பாக்கியால் சுடப்பட்டு, மின்சார ட்ரான்ஸ்பார்மரில் தூக்கி எறியப்பட்டு உயிர் போகும் - வரம்பு மீறி காதலிப்பார் - இப்படியாக நல்லப் பண்புகளே இல்லாத கதாநாயகர்களையே நாம் அன்றாடம் பார்க்கிறோம். அந்தக்காலத்தில் வில்லன்கள் செய்ததை எல்லாம் இன்றைய கதாநாயகர்கள் செய்கிறார்கள்.
அதனால் தான் இவர்கள் எம்ஜிஆரைப் போல் மக்களின் மனதில் நிற்பதில்லை. அதனால் தான் இன்றைய ஹீரோக்களைப் பார்க்கும் போது மக்களின் மனதில் இன்றும் உயர்ந்து நிற்கிறார் எம்ஜிஆர்.........vsm...
-
ஒரு நடிகருக்கு ஒரு படம் 100 நாட்கள் ஓடி விட்டால் போதும், அவர்கள் மார்க்கெட் மற்றும் சம்பளம் உயர்ந்து விடும். ஆனால் அடுத்து வருகின்ற 100 நாட்கள் படத்துக்கு அவர்கள் சுமாராக 20 படங்கள் வரை காத்திருக்க நேரிடும். ஆனால் புரட்சி தலைவரின் படங்கள் தொடர்ந்து 8 படங்கள் 100 நாட்களை தாண்டி ஓடிய நிகழ்வை நாம் மிக சாதாரணமாக பார்க்கிறோம்.
இந்த அதிசயம் தமிழ்ப்பட வரலாற்றில் வேறு எந்த நடிகரும் கனவில் கூட நினைத்து பார்க்க முடியாத சாதனையாகும்.. அதுவும் 1974 மற்றும் 1975 ம் வருடங்களில் வெளியான அத்தனை படங்களும் 100 நாட்களை தாண்டி ஓடியது ஒரு அற்புதமான சாதனையாகும். ஆனால் அய்யனுக்கோ, ஒரு மூன்று படத்தை 1972 ல் தொடர்ச்சியாக ஓட்டி விட்டு வானத்துக்கும் பூமிக்கும் குதிப்பதை நாம் பார்க்கிறோம்.
அதிலும் "ஞானஒளி" சென்னையின் மிகச்சிறிய தியேட்டரான பிளாஸாவில் 100 நாட்கள் வடக்கயிறு போட்டு இழுத்து கொண்டு போனதை கண்டு தமிழ்நாடே கைகொட்டி சிரித்தது. ஆனால் அப்படி ஓட்டி விட்டு 1972 ல் நாங்கள்தான் என்று கொஞ்சம்கூட வெட்கமில்லாமல் குதிப்பதை பார்த்தால் அழுவதா? சிரிப்பதா? என்றே தெரியவில்லை. 1972 ல் "நல்லநேரம்" தான் அதிக தியேட்டர்களில் 50 நாட்கள் ஓடிய படம். ஒன்றிரண்டு சென்டர்களில் பணம் செலவழித்து அதிக வசூல் காட்டினால் அந்த ஆண்டின் சாதனை படமாகுமா?. "வசந்த மாளிகை"யும் "பட்டிக்காடா பட்டணமா"வும் 1971 ல் வெளியான "ரிக்ஷாக்காரனை"யே வெல்ல முடியவில்லை.
மற்றொரு படம் பைலட்டில் படாத பாடு பட்டு 50 நாட்களை தாண்டி தனிமரமாக இழுத்துச் செல்லப்பட்ட படம். ஆங்கிலம் மற்றும் இந்தி படங்கள் திரையிடும் தியேட்டர் பைலட்டை குத்தகைக்கு எடுத்து கும்மியடித்து ஓட்டிய படம்தான் "தவப்புதல்வன்". பெயருக்கு ஏற்ற மாதிரி 100 நாட்கள் தவமிருந்து ஓட்டினாலும் முக்தா சீனிவாசன் வருத்தப்பட்டு எம்ஜிஆர் படத்தின் பெருமையை "இதயக்கனி" வெற்றி விழாவில் உண்மையை உணர்த்தினாலும் கைபிள்ளைகள் கலங்காமல் அடுத்தடுத்த படங்களை 100 நாட்கள் வடக்கயிறு போட்டு மகிழ்ந்தனர்.
1972ல் வெளியான "ஞானஒளி" மற்றும் "தவப்புதல்வன்" "தர்மம் எங்கே"? மூன்றுமே தோல்வி படங்கள் என்றாலும் "தர்மம் எங்கே"? படுதோல்வி படமாகும். "ராஜா"வும் "நீதி"யும் பாலாஜியின் பணத்தை கைஸ்கள் சிதறி விளையாடி ஓட்டிய படங்கள். அப்படியும் "நீதி"யை 100 நாட்கள் ஓட்ட முடியவில்லை. "பட்டிக்காடா பட்டணமா", "வசந்த மாளிகை" இரண்டும் மதுரை சென்னை மட்டும் ஓட்டி விட்டு மற்ற ஊர்களில் 50 நாட்கள் கூட ஓட தடுமாறிய படங்கள். 1972 ல் வசந்த மாளிகைதான் அதிக வசூலாம். கைஸ்கள் உளறுகின்றனர். "வசந்த மாளிகை" வசூலில் "ரிக்ஷாக்காரன்", "நல்லநேரம்" படங்களையே வெல்ல முடியவ்ல்லை.
"பட்டிக்காடா பட்டணமா" "வசந்த மாளிகை" எத்தனை ஊர்களில் 50 நாட்கள் ஓடியது என்று தெரிவிக்க முடியுமா? கைஸ்களே. அதைக்காட்டிலும் அதிகமாக எம்ஜிஆருடைய சாதாரண படங்கள் அதிகம் ஓடியதை நிரூபிக்க முடியும்.
அவர்கள் 50 நாட்களை பார்க்க மாட்டார்கள். எங்கே 100 நாட்கள் ஓட்டலாம் என்பதையே கணித்து ஓட்டுவார்கள். 'உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்' என்ற வள்ளுவனின் வாக்கிற்கிணங்க 100 நாட்கள் ஓட்டி மகிழ்வார்கள்.
1974 ல் வெளியான
"நேற்று இன்று நாளை" "உரிமைக்குரல்" "சிரித்து வாழ வேண்டும்" 1975ல் வெளியான "நினைத்ததை முடிப்பவன்" "நாளை நமதே" "இதயக்கனி" "பல்லாண்டு வாழ்க" அதை தொடர்ந்து 1976 ல் வெளியான "நீதிக்கு தலை வணங்கு"
படம் வரை தொடர்ந்து 100 நாட்களும் அதைத்தாண்டி ஓடியும் தலைவர் ரசிகர்கள் அதை சாதாரணமாக எடுத்துக் கொள்கிறார்கள். இதுவே அய்யன் படமாக இருந்திருந்தால் அண்டசாசரம் வரை கலக்கி அமெரிக்க அதிபரை கூட திரும்பிப் பார்க்க வைத்திருப்பார்கள் கைஸ்கள்.
இதில் "உரிமைக்குரலி"ன் வெற்றி தமிழ்ப்பட சரித்திர வெற்றி. அந்த வெற்றியை வார்த்தையால் விவரிக்க இயலாது. "இதயக்கனி"யின் வெற்றியும் சத்யமான வெற்றி. ஆமாம் சத்யத்தில் யாரும் வெல்ல முடியாத சாதனை வசூல் வெற்றியாகும். அடுத்து "பல்லாண்டு வாழ்க" "நீதிக்கு தலை வணங்கு" "நேற்று இன்று நாளை" ஆகிய படங்கள் வசூலிலும் சாதித்து காட்டியவை. நெல்லை பார்வதியில் வாழ்நாள் அதிக வசூலை பெற்ற படம்தான் "நேற்று இன்று நாளை". அதே போல் "பல்லாண்டு வாழ்க" பூர்ணகலாவில் 100 நாட்கள் ஓடி சாதனை வசூல் பெற்ற படமாகும். பூர்ணகலாவில் 100 நாட்கள் ஓடிய ஒரே படமாகும்.
"நாளை நமதே" சிவசக்தியில் தொடர்ந்து 60 காட்சிகள் வரை அரங்கம் நிறைந்தது. இலங்கையில் பல சாதனைகளை செய்து 100 நாட்களை தாண்டி ஓடி அபரிமிதமான வெற்றியை பதிவு செய்த படம். "நினைத்ததை முடிப்பவன்" தேவிபாரடைஸில் 101 காட்சிகள் தொடர் hf
ஆனாலும் படத்தை 100 நாட்கள் ஓட்டவில்லை. மாபெரும் வெற்றிப் படமான "நினைத்ததை முடிப்பவனை" தொடர்ந்து "நாளை நமதே" வெளிவந்ததால் மதுரையில் மட்டும் 100 நாட்கள் ஓடியது. இல்லையென்றால் சுமார் 7 திரையரங்குகளுக்கு மேல் 100 நாட்கள் கண்டிருக்கும்.
மீதி அடுத்த பதிவில்..........ksr...
-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரை காவியங்கள்*மறு வெளியீடு தொடர்ச்சி ..........
இந்த வாரம் ( 22/01/21 முதல் ) வெளியான*படங்கள்*விவரம்*
---------------------------------------------------------------------------------------------------------------------
மதுரை - திருப்பரங்குன்றம் லட்சுமியில்* 23/01/21 முதல்* தென்னக
*ஜேம்ஸபாண்டாக* மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த ரகசிய போலீஸ் 115
தினசரி 2 காட்சிகள்,* சனி, ஞாயிறு 3 காட்சிகள்**நடைபெறுகிறது .
ராஜபாளையம் ஜெய் ஆனந்தில்* *ரகசிய போலீஸ் 115 தினசரி 4* காட்சிகள் .
இன்று முதல் (22/01/21)* நடைபெறுகிறது .
கோவை நாஸில்* எங்க வீட்டு பிள்ளை* தினசரி 4 காட்சிகள் .நடைபெறுகிறது .
சேலம் அலங்காரில்* அடிமைப்பெண் - தினசரி 4 காட்சிகள்*
வெற்றிகரமான 2 வது வாரம் .
திருச்சி அருணாவில்* *அடிமைப்பெண் தினசரி 4 காட்சிகள்*
வெற்றிகரமான இணைந்த 2 வது வாரம் .**
-
ஆனந்த விகடன்*வார இதழ் - 27/01/21
நடிகர்*தனுஷ்*பேட்டி*
கேள்வி*:* உங்களுடைய படங்களுக்கு நிறைய ரசிகர்கள் இருக்காங்க* .நீங்க யாருடைய ரசிகர் ?
பதில் : எப்பவுமே நான் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். ரசிகன்தான்*.
இப்பவும் அவருடைய படங்களை*அவ்வப்போது பார்ப்பதுண்டு .*
-
“எதையும் வெளிப்படையாகப் பேசுவதை எம்.ஜி.ஆர் ரசிப்பார்!”
- சோ
https://www.thaaii.com/?p=59759
ஒசாமஅசா தொடர் – 17 எழுத்தும், தொகுப்பும்; மணா
நான் துக்ளக் பத்திரிகையை ஆரம்பிக்கிறபோது எம்.ஜி.ஆர். என்னிடம் சொன்னார்.
“வேண்டாம் சினிமாவில் உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் வந்துக்கிட்டிருக்கு. குறிப்பா என்னுடைய பல படங்களில் நீங்க இருக்கப் போறீங்க. ஏற்கனவே நீங்க உங்க நாடகத்திலேயே தி.மு.க.வை ரொம்பவும் கலாட்டா பண்றீங்க. பத்திரிகை ஆரம்பிச்சா இதெல்லாம் இன்னும் ஜாஸ்தியாப் போயிடும்.”
“ஆமாம் சார்… அப்படித்தான் வரும்.”
“அப்படியிருக்கும்போது பத்திரிகை ஆரம்பிக்கிறது நல்லதில்லை. உங்க சினிமா சான்ஸ் எல்லாம் கெட்டுப்போகும். இரண்டிலேயும் ஒரே நேரத்தில் காலை வைக்காதீங்க. ஏற்கனவே டி.டி.கே.வில் வேற நீங்க இருக்கிறப்போ இது தேவை தானா?” என்று எவ்வளவோ சொன்னார் எம்.ஜி.ஆர்.
அன்றைக்கு அவருடன் இருந்த ப.நீலகண்டனைப் போன்ற இயக்குநர்களும் பத்திரிகை துவக்குவதில் இருக்கிற பாதிப்புகளைப் பற்றி விரிவாகச் சொன்னார்கள்.
நான் அவர் சொன்ன எதையும் கேட்காமல் பத்திரிகையைத் துவக்கியதில் அவருக்கு வருத்தம்தான்.
அவரைப்பற்றி நான் துக்ளக்கில் விமர்சித்தபோது அதைப்பற்றி என்னிடம் கேட்க மாட்டார். ஒருமுறை ‘துக்ளக்’கில் வெளியிட அவரிடம் ஒரு கட்டுரை கேட்டேன்.
“துக்ளக்கையே விமர்சனம் பண்ணி எழுதட்டுமா?” – என்றார்.
“சரிங்க சார்… எழுதுங்க”
“நான் எழுதினது அப்படியே வரணும்.”
“கண்டிப்பா அப்படியே வரும் சார்.”
அதன்படியே துக்ளக்கைப் பாராட்டியும், சிறிது விமர்சித்தும் மூன்று கட்டுரைகளை அவர் எழுதி துக்ளக்கில் அப்படியே வெளிவந்தது. அதற்கு நல்ல வரவேற்பும் இருந்தது. அதற்குமேல் தொடர்ந்து அவரால் எழுத முடியாத அளவுக்கு பிஸியாக இருந்தார்.
அவரிடம் நேரடியாக அவரையே கிண்டல் செய்து பேசினால் கோபப்படாமல் ரசிப்பார். இதே குணம் சிவாஜியிடமும் உண்டு. இவர்களைப் பற்றி வெளியே எங்கோ பேசுவதுதான் இவர்களுக்குப் பிடிக்காது.
எம்.ஜி.ஆருடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருந்தேன். ப.நீலகண்டன்தான் டைரக்டர். சினிமா விஷயத்தைக் கரைத்துக் குடித்த இயக்குநர் அவர். எம்.ஜி.ஆருக்கு அந்தக் காட்சியில் கொஞ்சம் நீளமான வசனம். நான் பதிலுக்கு “சரி” என்று சொல்ல வேண்டும். அவ்வளவுதான். இதுதான் காட்சி.
நான் “சரி” என்று சொன்னதும் ‘ஷாட்’ முடிந்தது.
“சோ.. நீங்க ‘சரி’ன்னு எப்படிச் சொன்னீங்க?” – நீலகண்டன் கேட்டார்.
“சரின்னு தானே சார் சொன்னேன்”.
“அப்படியில்லை.. சரின்னு அழுத்திச் சொல்லுங்க” – ‘சரி’யைச் சொல்லிக் காட்டினார் நீலகண்டன்.
இரண்டாவது டேக் எடுக்கப்பட்டது.
நான் “சரி”யை அழுத்திச் சொன்னபோது டைரக்டர் “கட், கட் அப்படியில்லை சோ..” என்றார்.
நான் சுதாரித்துக் கொண்டு எம்.ஜி.ஆரிடம் “இவர் என்னை விடப்போறதில்லை. இந்த சீனில் உங்க டயலாக் சரியா வரலை சார்.. அதை உங்க கிட்டே சொல்ல முடியாது. அதனால் என்னைப்போட்டு ‘சரி’ங்கிறதுக்காக இந்தப் பிழி பிழியுறார்.
சரிங்கிறதை இதைவிட எப்படி சார் சரியாச் சொல்லிற முடியும்? தயவு செஞ்சு உங்க டயலாக்கை ஒழுங்காச் சொல்லிடுங்க சார்?” – சிரித்துக் கொண்டே சொன்னேன்.
எம்.ஜி.ஆரும் சிரித்தார். ப.நீலகண்டனும் சிரித்தார். நேரடியாக நான் பேசியதை எந்த விதத்திலும் எம்.ஜி.ஆர். தப்பாக எடுத்துக் கொள்ளவில்லை.
இன்னொரு படம் எம்.ஜி.ஆருடன் நடித்துக் கொண்டிருந்தேன். அதிலும் ப.நீலகண்டன் தான் டைரக்டர். ஷூட்டிங் நேரத்தில் என்னை அடிக்கடி சீண்டிக்கொண்டே இருப்பார் நீலகண்டன். அன்றும் அப்படித்தான்.
“என்ன சோ.. துக்ளக் பத்திரிகை எப்படிப் போயிட்டிருக்கு?”
“நல்லாப் போகுது சார்” – சொன்னேன். அவர் எதற்கோ பீடிகை போடுகிறார் என்பது எனக்குத் தெரிந்துவிட்டது.
அவரே தொடர்ந்தார்.
“மஞ்சரி எப்படிப்பட்ட பத்திரிகை?”
“நல்ல பத்திரிகை சார்”.
“அதில் நல்ல விஷயங்கள் எல்லாம் வருமா?”
“வரும் சார்”.
“அதிலே வர்ற அளவுக்கு உருப்படியான விஷயங்கள் உங்க துக்ளக்கில் வருமா? மஞ்சரிக்கு என்ன விற்பனை?”
“விற்பனை குறைவுதான் சார்”
“அதாவது நல்ல சரக்குக்கு நாட்டில் நல்ல மதிப்பில்லை. துக்ளக்கிற்கு விற்பனை இருக்கிறது. அப்படித்தானே?” – சொல்லிவிட்டு என் முகத்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார் நீலகண்டன்.
“ஆமாம் சார்… நல்ல படங்கள் நிறைய நாட்கள் ஓடுவதில்லை. ‘என் அண்ணன்’ நூறு நாட்கள் ஓடுகிறது” என்று நான் அழுத்தம் கொடுத்துச் சொன்னேன்.
பக்கத்தில் இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த எம்.ஜி.ஆர். நீலகண்டனிடம் சிரித்தபடியே சொன்னார். “எதுக்கு சோ வாயைப் போய்க் கிளர்றீங்க?”
“எல்லாத்துக்கும் பதில் சொல்லியே ஆகணுமா? சிலதுக்குப் பதில் சொல்லாம விடக்கூடாதா நீங்க?” என்று நீலகண்டன் என்னிடம் திருப்பிக் கேட்க, அந்த உரையாடல் தமாஷாகப் போனதே ஒழிய, சீரியஸாகவிடவில்லை.
‘என் அண்ணன்’ எம்.ஜி.ஆர். நடித்த படமாக இருந்தாலும்கூட அவரும் நான் சொன்னதை நகைச்சுவையாகவே எடுத்துக்கொண்டு ரசித்தார். இது அவருடைய சுபாவம்.
ஒருமுறை நான் கலைஞரைச் சந்திக்க வேண்டியிருந்தது. அந்தச் சந்திப்பு குறித்த தகவல் பத்திரிகைகளில் எல்லாம் வெளிவந்து அப்போது பரபரப்பாகி விட்டது.
அந்தச் சமயத்தில் எம்.ஜி.ஆர். படம் ஒன்றின் வெள்ளிவிழா சென்னை ‘சில்ட்ரன்ஸ்’ தியேட்டரில் நடந்தது. விழாவில் நானும் கலந்து கொண்டேன்.
துவக்கத்தில் பேசிய எம்.ஜி.ஆர்., “இரண்டு நாட்களுக்கு முன்னால் சோ ஒருத்தரை சந்திச்சுட்டு வந்திருக்கார். கடுமையா விமர்சனம் பண்ணிக்கிட்டிருக்கிற ஒருத்தரை ஏன் இவர் சந்திச்சார்? என்ன பேசினார்ங்கிறதைத் தெரிஞ்சிக்க நீங்க எல்லாம் ஆர்வமா இருக்கீங்க.
சோ சட்டம் படித்தவர். அதனால் சட்டப்படி அவர் அதைச் சொல்லியாகணும்” என்று கூட்டத்தைப் பார்த்து சொன்னதும் ஒரே கைதட்டல். அதோடு என்னைப் பேசச் சொல்லிவிட்டார்.
நான் ஜனங்களைப் பார்த்தபடி மைக்கில் சொன்னேன்.
“இது உங்க கிட்டே சொல்லவேண்டிய விஷயமில்லை. நான் இவர் கிட்டேதான் சொல்லணும். அதுக்கேத்தபடி நான் இந்த மைக்கைத் திருப்பி வைச்சுக்கிறேன்” என்று எம்.ஜி.ஆரைப் பார்த்தபடி, “நான் சட்டம் படிச்சுருக்கிறதாச் சொன்னீங்க. நான் சட்டம் படிச்சவன்தான். அதனால் சட்டப்படி நழுவ வேண்டிய நேரம். அதனால் நான் சொல்ல மாட்டேன்!”
அதையும் ரசித்தார் எம்.ஜி.ஆர்.
(தொடரும்…)
-
பதிவில் படத்தில் ஆந்திர மாநிலம் சித்தூரில் தனது சொந்த இடத்தில் உழைப்பில் நம் தலைவருக்கு அவர் எழுப்பி உள்ள தலைவர் சிலைக்கு வாழை தோரணம் கட்டி
104 வது பிறந்த நாளில் தன் எளிய குடும்பம் சூழ்ந்து கொண்டாடி மகிழும் அற்புத நிகழ்வு.
எல்லா நடிகர்கள் அரசியல் தலைவர்களுக்கு ரசிகர்களும் தொண்டர்களும் உண்டு..
ஆனால் நம் தங்க தலைவருக்கு மட்டுமே பக்தர்கள் உண்டு.
இவர் பெயர் அவர் நடைத்தைக்கு ஏற்ப பொன்னப்பன்...
நன்றி பொன்னப்பன் அவர்களே.
நெற்றி வியர்வை நித்தம் நிலத்தில் விழுந்து உழைக்கும் வர்க்கம் உங்கள் செயல் போற்றி புகழ தக்கது.
எல்லா வளமும் சூழட்டும் உங்கள் வாழ்வில்...
உலக எம்ஜிஆர் மன்ற ரசிகர்கள் குழு தலை வணங்கி உங்கள் தலைவர் பக்தியை ஏற்று கொள்கிறோம்.
வாழ்க தலைவர் புகழ்.
என்ன ஒரு மகிழ்ச்சி அவர்கள் இல்லத்தில்.
Ever never again in the universe..
Mmm.ggg.rrr.............nmi
-
எம்ஜிஆருக்கே இந்த நிலமை
உலக எம்ஜிஆர் ரசிகர்களே
நீங்கள் பார்க்கின்ற இந்த போட்டோ
எம்ஜிஆரின் நினைவு இடம்
இது கருணாநிதிஅவர்கள் முதலமைச்சராக ஆட்சி செய்த காலத்தில்
முதலமைச்சர் கருணாநிதியின் உத்தரவுப்படி
எம்ஜிஆர் சமாதிக்கு மேல் ஒரு குடையை வைத்தார்கள்
அதைப்பற்றிய கருணாநிதி அவர்கள் குறிப்பிடும் பொழுது
இந்த நாட்டு மக்கள் எம்ஜிஆர் அவர்களை கொடைவள்ளல் என்று அழைப்பார்கள்
எம்ஜிஆர் பலபேர்களுக்கு நிழலாக இருந்தார்
அதற்காகத்தான் என்னுடைய ஆட்சியில் எம்ஜிஆர் சமாதியின் மேல் ஒரு குடையை வைத்துள்ளேன் என்று விளக்கம் கூறினார்
1987 ஆண்டு எம்ஜிஆர் மரணம் அடைந்த பிறகு ஜானகி அம்மையார் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார் பதவி ஏற்றார்
பதவி ஏற்றவுடன்
எம்ஜிஆர் சமாதியை அழகாக கட்டுவதற்காக இந்தியா முழுவதும் உள்ள கட்டிடக்கலை இன்ஜினியர்களுக்கு ஒரு போட்டி வைத்தார்
சிறந்த எம்ஜிஆர் நினைவு இல்லம் அமைப்பதற்கு வரைபடம் கொடுப்பவர்களுக்கு முதல் பரிசு
5 லட்சம் ரூபாய்
இரண்டாம் பரிசு மூன்று லட்சம் ரூபாய்
மூன்றாம் பரிசு இரண்டு இலட்சம் ரூபாய்
டெல்லியை சேர்ந்த 27 வயது கட்டிடக்கலை நிபுணர் இன்ஜினியர் ஒரு வரைபடத்தை சமர்ப்பித்தார்
ஒரிசாவில் உள்ள சூரியனார் கோயிலை போன்று எம்ஜிஆர் நினைவிடத்தை கட்டுவது அவருடைய திட்டம்
ஆண்டுக்கு ஒருமுறை சூரிய கிரகணம் வரும்
அந்த ஒரு நாள் மட்டும் ஒரிசாவில் உள்ள சூரியனார் கோயில்உள்ள
ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட ரதத்தில் சூரியன் அமர்ந்திருக்கும் சிலை மீது
காலையிலிருந்து மாலை வரை சூரிய ஒளி படரும்
மற்ற எந்த நாட்களிலும் அந்த சிலை மீது சூரிய ஒளி படாது
இந்தக் கோயிலை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒரிசாவில் கட்டி வைத்துள்ளார்கள்
அதை போலவே
எம்ஜிஆர் பிறந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதியும்
எம்ஜிஆர் அவர்கள் இறந்த டிசம்பர் 24ஆம் தேதியும்
இந்த இரண்டு நாட்களில் மட்டும்
எம்ஜிஆர் சமாதியின் மீது சூரிய ஒளி படுவதைப் போன்று இந்த கட்டடத்தை கட்டுவதற்கு மனு சமர்ப்பித்திருந்தார்
இந்த சமாதி கட்டுவதற்கு 5 கோடி ரூபாய் செலவு ஆகும் என்று அந்த இன்ஜினியர் குறிப்பிட்டிருந்தார
அதை பார்வையிட்ட அதிகாரிகள் ஜானகி அம்மையார்
அந்த கட்டிடக்கலை இன்ஜினியர் கொடுத்த வரைபடத்தை தேர்ந்தெடுத்தார்கள்
அவருக்கு முதல் பரிசு ஐந்துலட்ச ரூபாய் கொடுத்தார்கள்
அந்தக் கட்டிடக்கலை நிபுணர் திட்டப்படி எம்ஜிஆர் சமாதியை கட்டுவதற்கு ஜானகி அம்மையாரின் அரசு முடிவு எடுத்தது
இந்த நேரத்தில் ஜெயலலிதா ஜானகி அம்மையாரின் அரசை கலைப்பதற்காக 30 எம்எல்ஏக்களை கடத்திவிட்டார்
அண்ணா திமுக வில் உள்ள மூத்த தலைவர்களும் மூத்த எம்எல்ஏக்களும் அமைச்சர்களும்
எம்ஜிஆர் சமாதி கட்டும் வரையில் இந்த ஆட்சி யை கலைத்து விடாதீர்கள் என்று எவ்வளவோ ஜெயலலிதாவிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்கள்
ஆனால் ஜெயலலிதா எம்ஜிஆரின் ஆட்சியை எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகுகவிழ்த்து விட்டார்
இப்பொழுது நடைபெற்ற தேர்தலில் கருணாநிதி முதலமைச்சராக பதவி ஏற்றார்
அவர் ஆட்சிக்கு வந்தவுடன் எம்ஜிஆர் சமாதியின் மீது ஒரு குடையை நிறுவினார்
அடுத்து ஜெயலலிதா ராஜீவ் காந்தியிடம் கூறி கருணாநிதி அவர்களின் ஆட்சியை கவிழ்த்தார்
தேர்தலில் வெற்றி பெற்று ஜெயலலிதா முதலமைச்சராக வந்தார்
ஜெயலலிதா முதலமைச்சராக வந்த காலத்திலிருந்து அவர் மரணமடையும் வரை
எம்ஜிஆர் சமாதியை ஜானகி அம்மையார் தயாரித்து வைத்திருந்த திட்டப்படி கட்டுங்கள் என்று
லட்சக்கணக்கான எம்ஜிஆர் ரசிகர்கள் ஜெயலலிதாவிற்கு கடிதம் எழுதிக் கொண்டே இருந்தார்கள்
நானும் மொத்தம் 85 முறை சர்டிபிகட்ஆப் போஸ்ட் மூலமாக கடிதம் எழுதினேன்
ஜெயலலிதா அதை கண்டுகொள்ளவே கிடையாது
ஜானகி அம்மையாரின் திட்டப்படி எம்ஜிஆர் நினைவு இல்லம் கட்டப்பட்டிருந்தால்
ஜனவரி 17ஆம் தேதியும்
டிசம்பர் 24ஆம் தேதியும்
எம்ஜிஆர் சமாதியின் மீது சூரிய ஒளி படுவதை பார்ப்பதற்காக இந்திய மக்கள் அனைவரும் சென்னை கடற்கரையில் கூடி இருப்பார்கள் அது ஒரு வரலாற்று நிகழ்ச்சியாக அமைந்திருக்கும்
பாவம் எம்ஜிஆர்
எம்ஜிஆரின் பழைய ரசிகர்கள் என்று சொல்லப்படுகிற டூப்ளிகேட் ரசிகர்கள்
இந்த விஷயத்தை பேசுவது கிடையாது
முகநூல் பதிவில் இதை கண்டிப்பதும் கிடையாது
பழைய எம்ஜிஆர் ரசிகர்கள்என்று சொல்லப்படுகிற அவர்கள் முகநூலில் ஏன் எம்ஜிஆர் சமாதியை திறம்பட கட்டவில்லை என்று பதிவு போடுவதும் கிடையாது
உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தவர்கள்
மழை நேரத்தில்ஒருவன். . ஒரு திண்ணையில் ஒதுங்கினான்
அந்த வீட்டின் உரிமையாளர் பரிதாபப்பட்டு திண்ணையில் உட்காரும்படி கூறியுள்ளார்
அந்த வீட்டின் உரிமையாளரை கையை பிடித்து வெளியேதுரத்திவிட்டு
வீட்டை அபகரித்துக் கொண்டான்
என்று பழமொழியை தான் நான் கேள்விப்பட்டுள்ளேன்
ஆனால் எம்ஜிஆரின் வாழ்க்கையில் உண்மையிலேயே நடந்து விட்டது
பாவம் வாஜ்பாய் ஆட்சியையும் ஜெயலலிதா கவிழ்த்து விட்டார்...Pr.Mnk
-
*MGR ஆட்சி ஒரு சாதனை சகாப்தம். *
அவர் ஆட்சி காலத்தில் 7 பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டது. வட்டங்கள் தோறும் பாலிடெக்னிக் தொடங்கப்பட்டது. ப்ளஸ் 2 பாட திட்டம் தொடங்கப்பட்டது.
மதுரையில் 5வது உலக தமிழ் மாநாடு நடத்தபட்டது. பெரியார் எழுத்து சீர்திருத்தம் அமுல்படுத்தபட்டது. கிராம தன்னிறைவு திட்டம் தொடங்கப்பட்டது. கிராமங்கள் தோறும் தாய் ~ சேய் நல விடுதிகள். சத்துணவு திட்டத்தின் மூலம் லட்சம் பேர்க்கு வேலை வாய்ப்பு. மகளிருக்கு தனி பேருந்து வசதி. காவல் துறையில் மகளிர். மகளிருக்கு தனி பல்கலை கழகம். கூட்டுறவு நூற்பாலைகள் ~ சர்க்கரை ஆலைகள். அமைப்புசார தொழிலாளர்களுக்கு ஊதிய விகித நிர்ணயம். புதிய காகித ஆலைகள்.வெடி மருந்து தொழிற்சாலை. ஆஸ்பெஸ்டாஸ் ஆலைகள். சிமெண்ட் ஆலைகள். ஓசூர் ~ புதுக்கோட்டை பகுதிகளில் தொழிற்பேட்டை. சிறு குறு தொழில் தொடங்க முன்னுரிமை.
சோத்து பாறை அணை , சண்முகா நதி , நொய்யல் ஆறுகளின் குறுக்கே அணை. தென் மாவட்டங்களில் காற்றாலை மின் திட்டம். தூத்துக்குடி அனல் மின் நிலையம். காடம் பாறை புனல் மின் நிலையம். ஆம்புலன்ஸ் வசதியுடன் நடமாடும் மருத்துவமனை. கூட்டுறவு வங்கி மூலம் கிராம மகளிர்க்கு கடன் வசதி. ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசிய பொருள்கள் தட்டுபாடின்றி விநியோகம்.
குக்கிராமங்களுக்கும் பஸ் வசதி.
தொழில் அமைதி ~ சட்டம் ஒழுங்குக்கு முதலிடம். பால் உற்பத்தியில் இரண்டாம் இடம் பெற்றது. ஓவர் டிராப்ட் வாங்காத மாநிலம் என்று அன்றைய நிதியமைச்சர் மற்றும் ரிசர்வ் வங்கியின் பாராட்டை பெற்றது. மக்கள் நல திட்டங்கள் மற்றும் இட ஒதுக்கீடு மூலம் தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்வதாக பிரபல பொருளாதார நிபுணர் அமாத்தியா சென் பாராட்டு பெற்றது. தனியார்கள் பல்கலை கழகம் ஆரம்பம். கல்வி முன்னேற்றம்.
திருத்தப்பட்ட பதிவு
Ithayakkani S Vijayan with #Venkat, France...
-
நான் எம்ஜி ஆர் ரசிகன் மு க ஸ்டாலின் உரை
அ தி மு க கண்டனம்...
நான் தான் எம் ஜி ஆரின் நீட்சி
கமலஹாஸன் உரை
நான் எம் ஜி ஆர் ஆட்சியை தருவேன்
ரஜினி காந்து உரை
பொன்மனசெம்மல் வடிவை நரேந்திர மோடியை கண்டோம்
பி ஜெ பி (BJP)உரை
எந்த கட்சி ஜெயித்தாலும் அது எம் ஜி ஆர் வெற்றி
எந்த தலைவர் வென்றாலும் அது எம்ஜி ஆர் வெற்றி
எம் ஜி ஆர் புராண கணபதி போல் முதலில் எம் ஜி ஆர் வேண்டும் எல்லோர்க்கும் ...
வாழ்க எம். ஜி .ஆர் .புகழ்... Arm...
-
உண்மையில் அவர்கள் அவ்வாறு கூறுவது பொன்மனச்செம்மல் புரட்சித் தலைவர் அவர்கள் மீது கொண்ட தரமான ஒரு நல்ல மதிப்பு காரணமாகும் ........... பொன்மனச்செம்மல் அவர்களை ஒரு அரசியல் தலைவராக அடையாளம் காணக்கூடாது .......।. அதையெல்லாம் தாண்டி அவர் வானத்தின் கீழ் பூமியின் மேற்பரப்பில் வாழும் ஒட்டுமொத்த மானிடர்களின் மானுட நல் வழி காட்டியவார்...... .புரட்சித் தலைவர் அவர்கள் தரத்துடன் வாழ்ந்து முடிந்த மாமனிதர் .......இன்றும் என்றும் அவர் மனித குலத்தின் நல்வழி காட்டி....... பொன்மனச்செம்மல் அவர்களின் பெயரை வானத்தின் கீழே பூமியின் மேற்பரப்பில் வாழும் யார் வேண்டுமானாலும் உச்சரிக்கலாம்........... ஆனால் அவரை போல வாழ்ந்து காட்டுதல் அரிது ஆகும்......... ஆமாம் பகைவனை மன்னித்த பண்பாளர் அவர் .......... கறை படியாத கைகளுக்கு சொந்தக்காரர் ........... வாழ்நாள் முழுவதும் தானதர்மம் செய்து வந்தவர் ........பசியென்று வந்தவர்க்கு புசி என்று கூறியவர் .........புரட்சித் தலைவர் அவர்கள் தனக்கு பிடிக்காதவர்களை ஒருபோதும் திட்ட மாட்டார்......... பழிச் சொற்களை கூறமாட்டார் .........வைதாரையும் வாழவைக்கும் உயரிய பண்பாளர் .........மாற்றுக் கருத்துக் கொண்ட மனிதர்கள் கூட புரட்சித் தலைவரை அவர் பெயரைச் சொல்கிறார்கள் என்றால் புரட்சித்தலைவரின் தரம் எவ்வளவு உயர்வானது என்பதை ஓரளவு புரிந்து கொள்ளலாம்.......... இதற்காக நாம் பெருமைப்பட வேண்டும் ........புரட்சித் தலைவர் பெயரை சொல்ல கூடாது என்று யாரையும் நாம் கண்டிக்கக் கூடாது ........புரட்சித்தலைவர் பெயரை சொல்பவர்கள் இறைவனின் பெயரை கூறுகிறார்கள்............... வைதாரையும் வாழவைக்கும் புரட்சித்தலைவரின் பண்புகளை நாமும் சொந்த வாழ்வில் கடைப்பிடிப்போம்.......... புரட்சித்தலைவரின் மனித வாழ்க்கை அனைத்து மனிதர்களுக்கும் ஒரு நல்ல பாடமாகும் ..........அவரையே முன்னுதாரணமாக சொந்த வாழ்க்கையில் கடைப்பிடிப்பவர் இம்மையில் மகிழ்ச்சியும் சகல செல்வங்களும் பெருமையும் அடைந்து மறுமையில் கிடைத்தற்கரிய மோட்சம் பெறுவர் ........புரட்சித்தலைவர் நாமம் வாழ்த்துதல் வாழ்வாவதே......... ........... பொன்மனச் செம்மலின் நாமத்தால் இப்பூவுலகில் வாழும் சகல மனித இதயங்களையும் வாழ்த்துகின்றேன்........ வாழ்க வளமுடன்............Sri.Kan..
-
பள்ளி மாணவர்களுக்கு அரசு பள்ளிகளிலேயே உணவு வழங்கும் திட்டம் பெருந்தலைவர் காமராஜர் அவர்களால் கொண்டுவரப்பட்டது அந்த திட்டத்தை மேலும் மெருகூட்டி அதற்கென்று ஒரு தனி துறையையே ஒதுக்கி அதனுடன் மேலும் சத்துப் பொருட்களும் சேர்த்து சத்துணவாக புரட்சித்தலைவர் அளித்து ஏழை குழந்தைகளை பசியின் கொடுமைகளில் இருந்து காப்பாற்றினார் ...... புரட்சித் தலைவர் அவர்களின் இந்த மனிதநேய தன்மை சரித்திரத்தில் மறக்க முடியாத ஒன்றாகும் ..........பொன்மனச் செம்மல் அவர்களிடம் எத்தனையோ நல்ல குணங்கள் இருந்தது......... அதை பற்றி கூறுவதற்கு இன்றைய உலகில் யாருக்கும் எந்த தகுதியும் கிடையாது முக்கியமாக எனக்கு கிடையவே கிடையாது பத்து ரூபாயை 10 முறை எண்ணிப் பார்க்கும் எனக்கு புரட்சித் தலைவரை பற்றி பேசும் தகுதி கிடையாது .........புரட்சித் தலைவர் அவர்களின் புகழ் இம்மண்ணில் நீடூடி வாழும்........... பதிவிட்ட சகோதரராகிய தங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன்............ வாழ்க வளமுடன்.......Sri.Kan
-
“மறக்க முடியாத மாமனிதர் எம்.ஜி.ஆர்.!”
- என்.எஸ்.கே.நல்லதம்பி
https://www.thaaii.com/?p=61589
*
எஸ்.பி.அண்ணாமலை
ஜனவரி 17ஆம் நாள் மக்கள் மனதில் என்றும் நிலைத்திருக்கும் புகழுடைய மக்கள் திலகத்தின் பிறந்த நாள். இந்நாளில் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற மக்கள் திலகத்தின் இனிமையான நினைவுகளை பெருமையோடு பகிர்ந்து கொள்கிறார் கலைவாணரின் புதல்வர் என்.எஸ்.கே.நல்லதம்பி.
மக்கள் திலகத்திற்கு கலைவாணருக்கும் இடையே நெருங்கிய உறவு தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்திலிருந்தே இருந்தது. 1935 ஆம் ஆண்டு காலகட்டத்தில் கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் தான் தமிழில் வெளிவந்த படங்கள் தயாராகின. அதில் பலவற்றை இயக்கியவர் எல்லிஸ் ஆர்.டங்கன்.
நாடக நடிகர்கள் தான் தமிழ் சினிமாவின் ஆரம்ப காலத்தில் நடிகர்களாக முக்கியத்துவம் பெற்றிருந்தனர். நடிகர்களுக்கான வீடுகள் ஸ்டூடியோ வளாகத்திலேயே இருந்தன. கலைவாணர், பி.யு.சின்னப்பா, டி.எஸ்.பாலையா, எம்.ஜி.ஆர். போன்ற கலைஞர்கள் தங்கியிருந்து படப்பிடிப்புகளில் பங்கேற்றனர்.
கலைவாணர் மீது ஈர்ப்பும் பாசமும் மக்கள் திலகத்திற்கு அந்த காலகட்டத்திலேயே உருவாகியது என்று குறிப்பிடலாம். கலைவாணரும் மதுரம் அம்மாவும் தங்களுடைய நகைச்சுவை நடிப்பாலும், சிந்தனைக்குரிய கருத்துக்களாலும், பாடல்களாலும் புகழ்பெறத் தொடங்கிய காலகட்டம் அது.
தன்னுடைய நண்பர், ஆலோசகர், வழிகாட்டி என்ற வகையில் மக்கள் திலகம் கலைவாணரிடம் பெருமதிப்பு கொண்டிருந்தார். “எனக்குப் பிரச்சனை வரும்போதெல்லாம் நான் தேடிச் சென்று ஆலோசனை பெற்றது கலைவாணர் இடம் தான்!” என்று மக்கள் திலகம் கூறியுள்ளார்.
கலைவாணரும் எம்.ஜி.ஆரால் பெரிதும் கவரப்பட்டார். கலைத்துறைக்கு அப்பாற்பட்டு இருவருக்குமிடையே இருந்த புரிதல் பல சந்தர்ப்பங்களில் வெளிப்பட்டது.
கலைவாணர் சினிமாவில் கூறும் கருத்துக்களும் பாடல் வரிகள் மற்றும் காட்சி அமைப்புகளும் மக்கள் மனதில் இடம் பெற்றிருப்பதைக் கூர்ந்து கவனித்த மக்கள் திலகம், “வெற்றி பெற்ற இந்த அணுகுமுறையைத் தம் வாழ்நாள் முழுவதும் திரைப்படங்களிலும் பொது வாழ்விலும் கடைப்பிடிப்பேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
“நடிகர்களாகிய நமக்கு வரும் பணம் என்பது தமிழ்நாட்டு ரசிகர்களிடம் இருந்து வருவது. அது திரும்பவும் மக்களுக்கே சென்றடைய வேண்டும்” என்பது கலைவாணரின் கருத்து. அவர் கடைபிடித்த இந்தக் கொள்கை தன்னை வழிநடத்தியது என்று குறிப்பிட்டுள்ளார்.
1957 ஆம் ஆண்டில் கலைவாணர் மறைந்த பிறகு, அவரது குடும்பத்தினர் எங்கள் மீது மிகுந்த அக்கறை கொண்ட புரட்சித் தலைவர் எங்களுடைய கல்வி, திருமணம் என்று எல்லா நிலைகளிலும் இன்றியமையாத பங்காற்றினார்.
நான் பள்ளிப் படிப்பு முடித்து மைசூர் மாநிலத்தில் உள்ள மாண்டியாவில் பொரியியல் படிப்பதற்கு தேவையான கேபிடேஷன் பீஸ் ரூபாய் 3000 கட்டி என்னுடைய பொறியியல் கனவை நனவாக்கினார் பொன்மனச்செம்மல்.
1967 – ல் அவர் கொடுத்து உதவிய அந்தத் தொகை, தற்போது பல லட்சங்களுக்கு சமமாகும். அழியாத கல்விச் செல்வத்தை எனக்கு தந்தவர் வள்ளல் எம்.ஜி.ஆர்.
“செல்வம் நிலையானதல்ல. ஆனால், கல்வி நிலையானது!” என்று நான் கல்லூரிக்குச் செல்லும்போது வாழ்த்தியது இன்றளவும் மறக்க முடியாதது. எங்கள் குடும்பத்தின் மீது மக்கள் திலகம் காட்டிய பரிவு, பாசம் என்பது, காலம் கலைவாணர் குடும்பத்துக்கு அளித்த கொடை என்றே தோன்றுகிறது.
1976-ல் எனது திருமணமும் மக்கள் திலகத்தாலேயே நடத்தி வைக்கப்பட்டது. அப்போது வாழ்த்திப் பேசியபோது அவர் குறிப்பிட்டார், “மணமக்களாகிய உங்களை ‘அவர்களைப் போல இருங்கள்… இவர்களைப் போல இருங்கள்’ என்று வாழ்த்துவதை விட, நல்ல மனிதர்களாக வாழுங்கள் என்று வாழ்த்தவே விரும்புகிறேன். அதுவே வாழ்க்கையின் வெற்றிக்கான பாதையாகும்!” என்றார். அவருடைய வாழ்த்துரை என்றும் என் மனதில் உள்ளது.
நாகர்கோவிலில் கலைவாணர் கட்டிய மதுர வனம் இல்லம், 1959-ல் ஏலத்துக்கு வந்தது. அந்த வீட்டிற்கான பணத்தைக் கட்டி, வீட்டை எங்கள் குடும்பத்திற்கு மீட்டுத் தந்த வள்ளல் பொன்மனச்செம்மல்.
சென்னை வாலாஜா சாலையில் இருந்த பாலர் அரங்கம் கட்டடம் 1971-ல் புதுப்பிக்கப்பட்டது. அதில் முதல் நிகழ்ச்சியாக என்னுடைய சகோதரியின் திருமணத்தை நடத்தி வைத்தார் புரட்சித் தலைவர். திருமணத்தில் அவர் பேசும்போது, “இந்த அரங்கம் கலைவாணர் பெயர் தாங்கி பெருமை சேர்க்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
தமிழக முதல்வராக இருந்த கலைஞர் அவர்களால் அப்போதே ‘கலைவாணர் அரங்கம்’ என்று பெயரிடப்பட்டது. புரட்சித் தலைவி அம்மா அவர்களால் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு, தற்போது புதுப்பொலிவுடன் திகழும் கலைவாணர் அரங்கம், காலம் முழுவதும் என் தந்தையாரின் பெயர் தாங்கி நினைவுச் சின்னமாகத் திகழ்வது எங்கள் குடும்பத்திற்கு பெருமை தரக்கூடியதாகும்.
மேலும் பெருமை தரக் கூடிய செயல், கலைவாணர் பிறந்த நாகர்கோவிலில் 1967-ல் மக்கள் திலகம் தன்னுடைய சொந்தச் செலவில் கலைவாணரின் முழு உருவச் சிலையை நிறுவியது புரட்சித் தலைவரின் பேருள்ளத்தைக் காட்டுகிறது.
ஏழைப்பங்காளனாக, வள்ளலாக, கருணையுள்ளம் கொண்டவரான பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். அவர்களின் புகழ் என்றென்றும் மக்கள் மனதில் பசுமரத்தாணி போல் இடம் பெற்றிருக்கும்.
நன்றி: 27.01.2021 தேதியிட்ட குமுதம் இதழில் வெளிவந்த கட்டுரை.............
-
முழு மனதுடன் கலப்படமில்லாத சுத்தமான இதயத்துடன் தாங்கள் கூறிய அனைத்து கருத்துகளையும் ஆமோதிக்கிறேன் ............அந்த சினிமா நட்சத்திரங்கள் புரட்சித் தலைவர் அவர்களைப் பற்றி கூறியது உண்மைதான்.......... இதயசுத்தியுடன் அந்த நட்சத்திரங்கள் அவ்வாறு கூறி இருக்கிறார்கள்.....।. மற்ற நட்சத்திரங்கள் கூறாமல் இருக்கின்றார்கள்...... மனதிற்குள் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.............. பொன்மனச்செம்மல் அவர்களிடம் மற்ற மனிதர்களிடம் இல்லாத ஒரு வார்த்தைகளால் விவரிக்க இயலாத முடியாத ஒரு வசீகர காந்த சக்தி உண்டு ..........அது இறை தூதர்கள் மற்றும் அவதார புருஷர்கள் மற்றும் வரலாற்று நாயகர்கள் இவர்களை படைக்கும் போதே இறைவன் கூடவே அவர்களிடம் இந்த காந்த சக்தியை வழங்கி விடுவார் ................பரம்பொருளால் வழங்கப்பட்ட காந்த சக்தி அது அவர்கள் மரணம் பரியந்தமும் அவர்களை தொடரும்......... .. அவர்களிடம் இருக்கும்..............உயிரியல் மின்காந்த சக்தி என்று அதற்கு பெயர்............. வெட்ட வெளியில் இருந்து இந்த காந்த சக்தி அவர்கள் இந்த மண்ணுலகில் வாழும் கடைசி தருணம் வரை அவர்களுக்கு வந்துகொண்டே கொண்டே இருக்கும்.......... பாசிட்டிவ் ஆரோ என்று இவற்றை கூறுவார்கள்........ பகவான் புத்தர் பெருமான்.......... பகவான் இயேசுகிறிஸ்து ..........பகவான் வர்த்தமான மகாவீரர் ..........பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் ..........பகவான் ஸ்ரீ வள்ளலார் ராமலிங்க அடிகள் .........பகவான் ஸ்ரீ மகாத்மா காந்தியடிகள் .............பண்டிட் ஜவஹர்லால் நேரு அவர்கள் ............. ஸ்ரீமதி இந்திராகாந்தி ...........இவர்களிடம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு விவரிக்க முடியாத ஒரு காந்த சக்தி இருக்கும்............ அவர்களின் எதிரே அமர்ந்து இருப்பவர்களை அல்லது அவர்களின் புகைப்படங்களையும் அவர்களின் நினைவுகளை சுமப்பவர்களை. அந்த காந்த சக்தி தன் வசமாக்கி வசியப்படுத்திக் கொண்டு விடும் .............பிரபஞ்ச மண்ணுலகில் இது உண்மைதான் .........முழுமைபெற்ற காந்தசக்தி புரட்சித்தலைவர் அவர்களிடம் இருந்தது............ என்றென்றும் புரட்சித்தலைவர் நாமம் இம்மண்ணுலகில் நிலைத்து நிற்கும் ...............அவர் காலத்தை வென்றவர் ...............அந்த புண்ணியவானை ஒரு அரசியல்வாதி என்ற கோணத்தில் நான் அணுகவில்லை............... அவரை ஒரு கட்சித் தலைவர் என்ற அளவில் அவரை நான் அவரின் எல்லைகளை வரையறுத்து அவரை சுற்றி வட்டமிட விரும்பவில்லை................. வானத்தின் கீழ் பூமியின் மேற்பரப்பில் உள்ள சகல மனிதர்களுக்கும் அவர் ஒரு மானுட குல நல் வழிகாட்டி.........இம் மானுடம் உய்ய பிறந்த மகாத்மா அவர். ஆவார்....... ............ வாழ்க வளமுடன் .........என்றென்றும் புரட்சி தலைவர் அவர்களின் நினைவில் உங்களில் ஒருவன். வி. ஸ்ரீனிவாசன்..........
பதிவிட்ட சகோதரருக்கு நன்றி............. புரட்சித்தலைவரின் நாமத்தால் அந்த சகோதரரை வாழ்த்துகின்றேன் .।.............. ஆசீர்வதிக்கிறேன்............Sri.Kan
-
தாங்கள் கூறியது அனைத்தும் உண்மையே .........இலங்கையில் அவருக்காக சிலையே வடித்தவர் எல்டிடிஇ தலைவர் பிரபாகரன் அவர்கள் ........துரதிஷ்டவசமாக புரட்சித்தலைவரின் புத்திமதிகளை அவர் பின்பற்ற மறுத்துவிட்டார் .......அதுதான் அவரின் வீழ்ச்சிக்கு காரணம் ........பொன்மனச்செம்மல் அவர்கள் யாருக்கு உபதேசம் செய்தாலும் அது அவர்களுக்கு மட்டுமே நன்மை பயக்காது ....அவர்களை சார்ந்த சமூகத்திற்கும் நன்மை பயக்கும்........ பொன்மனச்செம்மல் அவர்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் அவர்கள் வழங்கிய மரியாதை மிகப்பெரியது........ ஆச்சரியமானது ........நான் எனது வாழ்க்கையின் பின்பற்றும் பின் தொடரும் முதல் மனிதராக இந்தியாவில் தமிழ்நாடு என்ற மாநிலத்தில் முதலமைச்சராக உள்ள எம்ஜிஆர் என்று அழைக்கப்படும் எம் . ஜி. ராமச்சந்திரன் ., அவர்களையே நினைக்கின்றேன்....... என்னுடைய திரை வாழ்விற்கும் எனது மானசீக ஆசிரியர் மானசீக குருநாதர் அவர்தான் .......எனது அரசியல் பொது வாழ்விற்கும் எனது மானசீகமான ஆசிரியர் மானசீக குருநாதர் அவர்தான் .......அவரை நான் மதித்து போற்றுகிறேன்......... அவரின் காலில் விழுந்து வணங்குகின்றேன்...........
....... எமது இதயத்தின் மிக உயர்ந்த பீடத்தில் அவர் இருக்கின்றார்......... இவ்வாறு அவர் பகிரங்கமாக பட்டவர்த்தனமாக பேட்டி கொடுத்தார்...... அது அனைத்து நாளிதழ்களிலும் வந்தது ........ ரொனால்டு ரீகன் அவர்கள் கூறியது. அவரின் ஆத்மார்த்தமான வார்த்தைகள் ஆகும்..।.... இதய சுத்தியுடன் கூறப்பட்ட புனிதமான வார்த்தைகளாகும்............ நமது புரட்சித் தலைவரின் பெருமை இம் மண்ணுலக முழுவதும் பரவி இருந்தது என்பதற்கு இது ஒரு ஆதாரம் ஆகும் .......... இம் மண்ணுலகை இம்மண்ணுலகில் மணற்பரப்பை ஆள்பவர்கள் ஏராளம் ஏராளம் .......மனித இதயங்களின் மனப் பரப்பை ஆட்சி செய்பவர்கள் வெகு சிலரே ........ அந்த வெகு சிலரில் புரட்சித்தலைவர் அவர்களும் ஒருவராவார் ...........நான் நீண்ட காலமாக கூறி வருகின்றேன் .....।.புரட்சித் தலைவர் அவர்கள் ஒரு அவதார புருஷர் என்று ........அது உண்மை என்பதை இப்போது பலரும் உணர்கின்றார்கள் ........வாழ்க வளமுடன்.............. Srinivasan Kannan
-
சென்னைப் பல்கலைக்கழகத்தில் எம்ஜிஆர் குறித்த ஆய்வு மையம்...
chief-minister-palanisamy-inaugurated-center-for-research-on-mgr-at-madras-university...
சென்னை
சென்னைப் பல்கலைக்கழகத்தின் 160-வது ஆண்டு விழா மற்றும் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினைக் குறிக்கும் வகையில், டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு சமூக வளர்ச்சி ஆய்வு மையம் 5 கோடி ரூபாய் செலவில் நிறுவப்பட்டது .
இம்மையத்தின் மூலம் எம்.ஜி.ஆரின் சத்துணவுத் திட்டம் மற்றும் கல்வி, சுகாதாரம், மகளிர் வளர்ச்சி தொடர்பான திட்டங்கள் குறித்து கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் விரிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உயர் கல்வித்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
''முதல்வர் இன்று (22.01.2021) தலைமைச் செயலகத்தில், உயர்கல்வித் துறை சார்பில் சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு சமூக வளர்ச்சி ஆய்வு மையத்தைத் திறந்து வைத்தார்.
தமிழக முதல்வர் கடந்த 7.09.2018 அன்று சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு கடந்த வைர விழா ஆண்டு நிறைவு விழாவில் பேசும்போது, "சென்னைப் பல்கலைக் கழகத்தில் அண்ணா பொது வாழ்வியல் மையம், திராவிட ஆய்வு மையம், இணைய தடயவியல் மற்றும் தகவல் பாதுகாப்பு மையம் ஆகியவை தமிழ்நாடு அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டது.
அந்த வகையில், இப்பல்கலைக்கழகத்தின் 160-வது ஆண்டு விழா மற்றும் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஆகியவற்றினைக் குறிக்கும் வகையில் டாக்டர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு சமூக வளர்ச்சி ஆய்வு மையம் 5 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும் என்றும், இம்மையத்தின் மூலம் டாக்டர் எம்.ஜி.ஆரின் முன்னோடி திட்டங்களான சத்துணவு திட்டம் மற்றும் கல்வி, சுகாதாரம், மகளிர் வளர்ச்சி தொடர்பான திட்டங்கள் குறித்து கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் விரிவு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்றும் அறிவித்தார்.
தமிழகத்தின் சமூக, பொருளாதார, அரசியல் மேம்பாட்டிற்கு எம்.ஜி.ஆரின் பங்களிப்பை ஆராயும் முதல் உயர்கல்வி நிறுவன ஆராய்ச்சி மையமாக இம்மையம் விளங்கும். மேலும், எம்.ஜி.ஆர். ஆட்சி புரிந்த பத்து ஆண்டுகளில் அவர் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஆற்றிய தொண்டுகள், பொது நிர்வாகம், திரைப்படத் துறை போன்றவற்றில் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு ஆகியவற்றை ஆராய்ச்சி செய்வதற்கு ஏதுவாகவும் இம்மையம் நிறுவப்பட்டுள்ளது.
எம்.ஜி.ஆரின் புகைப்படங்கள், எழுத்துகள், பேச்சுகள் ஆகியவற்றை ஆவணப்படுத்துதல், எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்திய சத்துணவு திட்டத்தின் தொடக்கம் முதல் இன்றைய வளர்ச்சி வரை வரலாற்று ரீதியில் ஆராய்தல், எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் உயர்கல்வித் துறையில் ஏற்பட்ட மேம்பாடுகளை ஆராய்தல், எம்.ஜி.ஆர். பெண்கள், நலிவுற்றோர், பின்தங்கிய மக்களின் உயர்வுக்கு ஏற்படுத்திய திட்டங்கள், அவற்றின் வெற்றி பற்றி ஆராய்தல், பொது நிர்வாகத்தில் எம்.ஜி.ஆரின் பங்களிப்பு குறித்து ஆராய்தல் போன்ற ஆய்வுப் பணிகள் இந்த ஆராய்ச்சி மையத்தில் மேற்கொள்ளப்படும்''.
இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது...........Baabaa...