பொழுது புலருது ஒரு பக்கம்
உறங்கச் செல்லுது மறு பக்கம்
பல மாதமாய் நான் இந்தப் பக்கம்
புது அனுபவம் இந்த இரு பக்கம்
Printable View
பொழுது புலருது ஒரு பக்கம்
உறங்கச் செல்லுது மறு பக்கம்
பல மாதமாய் நான் இந்தப் பக்கம்
புது அனுபவம் இந்த இரு பக்கம்
பக்கம் எல்லாம் வெற்றாகவே
பார்க்கையில் நெஞ்சில் வெட்கம்
பேனாவில் மசி இலா குறையா?
பணந்தேடி அலைவதின் விலையா?
பகிற அகப் பையில் எதுமிலா நிலையா?
பந்தமதில் வந்த சிக்கல் வலையா? அல்ல
பசியா ? பிணியா ? படிக்காத குறையா ?
பகர்வாயா மனமே - என் துக்கம் தீராயா?
https://encrypted-tbn3.gstatic.com/i...OgmvOtxPBbSY1j
நிலையா இங்கெதுவும்
இன்பமும் துன்பமும்
மெய்யும் பொய்யும்
இன்னும் பலவும்
பலவும் கற்றால் நிச்சயம் பண்டிதர் ஆகலாம்
பழகிய கலைகள் ஒருநாள் கை கொடுக்கலாம்
பரந்துபட்ட உலகை அன்பால் இணைக்கலாம்
பண்பாடு காத்து பரஸ்பர நட்பு பேணலாம்
பேணலாம் ஒரு செல்ல நாயை
வாலாட்டும் வாயில்லா சீவன்
தன் கண்ணில் தேக்கிய பாசம்
தரும் இணையில்லா பரவசம்
பரவசம் அது முற்றிய ஆனந்தம்
தன்வசம் இழந்து தன்னை மறந்து
பிறன்வசம் இழைந்து பின் குழைந்து
பெறுதற்கரிய பேரானந்தம்
பக்தியினாலும் வரலாம் பாசத்தினாலும்
நேசத்தினாலும் கூட வரலாம் - பரவசம்
பகுக்க இயலாத அனுபவம் இம்மைக்கும்
மறுமைக்கும் இடைப்பட்ட நிலையாம்
அரங்கன் பேர் கேட்டாலே
ஐயப்பனை நினைந்தாலே
ஆண்டவன் புகழ் பாடினாலே
ஆழமான ஆன்மிகருக்கு பரவசம்
ஆண்டுகள் ஓடி பின் அன்னை நாட்டினில்
அடி வைக்கும் குடி மகனின் பிரவேசம்
ஆங்கே தோன்றலாம் பற்றின் பரவசம்
ஆண்டுகள் பிரிந்து அன்னையை வீட்டினில்
அன்பு தந்தையை அவர்தம் மாறா அன்பை
பார்த்தாலே சிலருக்கு பற்றும் பரவசம்
https://encrypted-tbn0.gstatic.com/i...wqJwj_DniQ9S5g
பரவசம் தான் ஆரம்பம்
அதுவே க(வி)தை முடிவு
ஆகா அது பெரும்பேறு
இது இனிக்கும் தேன்கூடு
தேன்கூடுகளுக்கும்
அடுக்கு மாடிக் குடியிருப்புகளுக்கும்
ஒற்றுமை உண்டு..
நிறையத் தேனிக்கள் வாழும்
முன்னதில்
நிறைய மக்கள் பின்னதில்
தேன் கூடுகள் கலைக்கப் பட
பதறித்திரியும் தேனிக்கள்
மறுபடி கட்டி ஒற்றுமையாய் வாழும்
அடுக்கு மாடிக் குடியிருப்பு மக்கள்
ஒற்றுமையாய்ப் பிரிந்து வாழ்வர்
..
கலைக்கவே வேண்டாம்..
வேண்டாம் என்றால் விடுமா
வராதே என்றால் நிற்குமா
வெறுப்பும் விருப்பும் இல்லாத
காலப் பாம்பும் கற்பனையும்
கற்பனையும் கைத்திறனும் கைகோர்த்து நடக்க
கலைநயம் பெறுகிறது கற்சிற்பம் ஒன்று
ஒன்றோடொன்று சேர்த்து சேர்த்து வருவதல்ல
விலக்கி விலக்கியே உருவம் தேடும் உன்னதம்
http://www.thehindu.com/multimedia/d...4_1397331g.jpg
உன்னதமாய் நண்பரோடு என் மகன் ஆடுகிறான்
உன்மத்தமாய் யாருடனோ அவன் பாடுகிறான்
உறக்கத்தில் யாரையோ தினம் தேடுகிறான்
உண்மையென்ன சொல்லுங்கள் டாக்டர்
கண்மணியின் கவலை இது கலங்கினாள்
கண்ணன் சின்ன குழந்தை அவன்
கண்முன் தான் யாரும் இல்லையே இதன்
காரணம் என்ன டாக்டர் ?
கவலை வேண்டாம் - டாக்டர் தில்லை
காரணம் இது மனநோய் இல்லை
கற்பனைக்கு கடிவாளம் இல்லை குழந்தை
கண்ணனுக்கு ஒன்றுமேயில்லை
கூட்டி வா உன் மகனை சரியாகும்
கூட வந்த கணவனுக்கோ ஆச்சரியம்
அதெப்படி சாத்தியம் டாக்டர்
அவளுக்குத்தான் மகனே இல்லையே !
https://encrypted-tbn2.gstatic.com/i...Fylp_FQb52o_6w
இல்லையே என்பதை நம்பாமல்
விழி அகல
இன்னொரு கை பிடித்திழுத்து
ஒவ்வொரு விரலாய்த் திருப்பித் திருப்பி
அந்தக்கையிலும்
ஒன்றுமில்லாமல் போக
கண்களில் புதிருடன்
அமர்ந்திருந்த நாற்காலியைச்
சுற்றி வந்து தேடி
பின் என் முகம் பார்த்தபின்..
ஏ என வாய் கோணி அழும்
அப்போதுகொடுக்கலாம்
ஒளித்து வைத்தசாக்லேட் என
நினைத்தால்..
சுற்றிவந்து முகம் பார்த்து
மாமா..சாக்லேட் ஆ போச்
என சொல்லி
தீவிர சிந்தனையுடன்
திரும்பி
தையாத் ததக்கா என
நடக்க..
ஓஹ்.. ச்சோ ச்வீட்..!
ச்சோ ச்வீட்..யா
பாருடி தடியன் கேலி பண்றதை
கிசுகிசுக்கிறாள் தன் தோழியரிடம்
நடையை உடையை கவனிங்கடி
எட்டுக்கு அடுத்த நம்பர் இவனோ
இது ரெண்டும் கெட்டான் உலகமடி
இரண்டுங் கெட்டான் உலகமடி
..இதுவும் என்றும் தெரியுமடி
சிறப்புற வாழ்ந்தால் சிந்தையுள் பொறாமை
..சீக்கிரம் கொண்டே மெல்லத் தூற்றும்
உரமுடன் இவனும் வாழும் வாழ்க்கை
..எப்படி வந்தது தெரியா தாவென..
திறம்பட் வாழும் வாழ்க்கையில் சோதனை
..தீர்க்கமாய் வரவும் வழுக்கி விழுந்தால்
கரம்பல கொட்டி களிகொள நகைக்கும்
..கணமும் ஊசியின் முனையாய்க் குத்தும்
பறக்கும் போக்கை ப் பாய்ந்தே இழுக்கும்
..பறக்காவிடிலும் பக்கென நகைக்கும்
சுறுசுறுப் பாக வேலை செய்தால்
..சுத்தம் அவந்தான் திமிரெனச் சொல்லும்
விறுவிறுப் பில்லா வேலைசெய்தால்
..வேகம் இல்லா சோம்பே றியெனும்
நறுவிசுக் காரியம் பாராட் டாது
.. நல்லதை என்றும் கொண்டா டாது
இரண்டுங் கெட்டான் உலகமடி
..இதுவும் என்றும் தெரியுமடி..
தெரியுமடி கள்ளி
நிற்கின்றாய் தள்ளி
பொய்யான கோபமிது
பொல்லாத பாசாங்கு
ஊடல் நாடகமாடி
சாதிக்கும் சதியே
சதியே என் அழகு ரதியே
தளரா இள நதியே தண் மதியே
கண்ணே பொன்னே காண்பாயே- உன்
கண்கவர் மனங்கவர் வெகுமதியே !
கண்ணே இதோ கணவன் என் பரிசு
கண்டிப்பாய் உனக்கு பிடிக்கும் நீயும்
காலம் காலமாய் ஏங்குகிறாய் !
கிடைக்குமா என்றே வேண்டுகிறாய் !
அன்பே பிடி உன் ஆசை பரிசை
அழகாய் நாட்டிடுன் கையெழுத்தை
அனுபவி விடுதலை இனி உனக்கு !
ஆருயிரே என் விவாக ரத்து பத்திரமிது
பத்திரமிது
ஜாக்கிரதை
ச்சும்மா சும்மா தலையை ஆட்டாதே
ஜாக்கிரதை
குதித்து விளையாடாதே
அலுங்காமல நடடீ
என
அம்மா பார்த்துப் பார்த்துச்
சொல்லிப் போட்ட
ஜிமிக்கி
மறு நாள் காலையில் காணாமல்போய்விட
திட்டுக்கள்
என் அழுகை
பின் உபதேசங்கள்
எனத் தொடர்ச்சியாய் கிடைத்தது ஒருகாலம்
நேற்று
எதையோ
பரணில் தேடப் போய்
பழைய சாமான்களின் இடையே
ஜிமிக்கி
சிரிக்க
நினைவுகள் மனதில் முந்த
வந்தது அழுகை..
அழுகை எனக்கு வரத்தான் செய்கிறது
பழுத்த இலைகள் விழ பார்க்கையில்
பழைய பள்ளித் தோழி பறந்தாள்
காலையில் கடிதம் சொன்ன தகவல்
தகவல் வந்தது தங்கள் தனயன்
தீரன் வீரன் அசகாய சூரன்
தண்ணீரில் தவித்தவனை அவன்
தன்னலம் இன்றி தரை சேர்த்தனன்
மறுநாள் மீண்டும் வந்த தகவல்
மீட்டவன் உதவி வியர்த்தமே
மீண்டவன் இன்று மாண்டான்
மனநோய் ! மாட்டியே தொங்கினான்
அரண்டான் என் மகன் ! ஆகாது ஆகாதே
அவனாகவா தொங்கினான் ? பொய்தானே !
அன்பாய் உலர்த்தினேனே ஈரம் காய !
அவனை தூக்கில் மாட்டியதே நான்தானே !
https://encrypted-tbn0.gstatic.com/i...X-Z6_9s967MoUA
Omg!:-d
நான்தானே ஏமாந்தது
கானல்நீர் பின் ஓடியது
நாய் வாலை நிமிர்த்த
கல்லில் நார் உரிக்க
சக்தி விரயம் ஆனதே
ஞானம் இன்று வந்ததே
வந்ததே என
ஒரு சின்ன சந்தோஷத்தைப் பெரிதாய் எண்ணித்
துள்ளி ஆடிய காலமும்
சின்ன வருத்தத்திற்கு
மிகப் பெரிய மனம் நோதல் செய்த காலமும்
போய்த் தான் விட்டது
கண்களில் கூட அமைதிப் பார்வை..
வயதாகிறதா என்ன என நினைத்தாலும்
அது
அனுபவம் சொன்ன பாடம்..
பாடம் படிப்பது பள்ளியறையில்
பட்டம் பெறுவது தாய்மைப்பேற்றில்
பெருமை கிடைப்பது பாட்டியாவதில்
பிறந்த பலனின் பூரண அனுபவம்
அனுபவம் தலைப்பில் நீயும்
..அழகுறச் சொல்லு மேலும்
பனுவலோ பாவோ பின்னும்
..பாங்குடன் உரையோ ஏதும்
நுணுக்கமாய்ச் சொல்லு அங்கே
...நூதனப் புதுமை காட்டி
அனுதினம் நினைக்கும் வண்ணம்
..ஆய்ந்துதான் சொல்லென் றீர்நீர்
ஆழ்ந்து கொஞ்சம் யோசித்தால்
..அழகாம் மனிதன் நடத்துகின்ற
வாழ்வில் தினமும் தினம்தோறும்
..வாகாய்ப் பலவாய் அனுபவம்தான்
சுற்றம் சூழல் சிந்தனைகள்
..சூறா வளியாய்த் திருப்பங்கள்
மற்றும் இன்னும் பலவாறாய்
,...மாற்றம் தருமே அனுபவமே..
பல்வித அனுபவம் படப்படத்தான்
..பக்குவ நெஞ்சமும் தான்வருமே
நல்விதம் அல்விதம் எனவேதான்
.. நாளிலும் கிடைக்கும் அவையன்றோ
சொல்வதை கிடைப்பதைச் சிந்தையுள்ளே
..தொக்கியே வைத்துப் பாடத்தைக்
கற்றிடக் கடவுளும் தென்படுவார்
..கண்ணனின் தாசனும் சொன்னதன்றோ..
//கண்ண தாசனின் கவிதை பிறப்பினில் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான் என ஆரம்பித்து..கடைசியில் அனுபவத்தால் தான் அமைவது வாழ்வெனில் ஆண்டவனே நீ ஏனெனக் கேட்டேன்
ஆண்டவன் எந்தன் அருகினில் வந்து அனுபவமே தான் நானெனச் சொன்னான் என வரும்..அதைஇங்கு பயன் படுத்தியிருக்கிறேன்//
சொன்னதன்றோ அதிகாலை கனவு
அதிலே எத்தனை அழகு தெளிவு
கிட்டும் உன் மனம் போல் வாழ்வு
எழுந்து வா காப்பி ஆறப்போகுது
ஆறப்போகுது ஓர்நாள் ஆன்மா - ஆயின்
தீரப்போவது எப்போது இப்பாவம் ?
சேரப்போவது எப்போது அவன் பாதம் ?
நேரப்போவது எப்போது எந்தன் முக்தி ?
இளையாழ்வான் கணைகளை கொடுக்க
எடுத்து திருக்கச்சி நம்பி தொடுத்து
அருளாளன் கச்சி வரதனிடம் விடுக்க
ஆண்டவனும் அவர் சொல் செவிமடுத்தார்
வரந்தரும் வரதனின் ஆறு வார்த்தைகள்
வைணவர் வாழ்வுதனில் ஒளி விளக்காய்
விசிட்டாத்வைத பொறியாய் அறநெறியாய்
வந்ததே எம்பெருமான் வாய் வேதப்பொருளாய் !
'அஹம் ஏவ பரந்தத்வம்' என்றான் இறைவன்
அடைய வேண்டிய பரம்பொருள் நானே என்றான்
அடுத்து அவன் 'பேதமே தரிசனம்' என்றான்
ஆண்டவன் வேறு நாம் வேறேதான் அன்றோ !
அவனடி சேர அறவழி 'உபாயம் ப்ரபத்தியே!'
அகங்காரத்தை விடு என் கதி பற்று – என்றான்
ஐயனே மரணம் வருங்கால் உனை மறப்பேனோ
அப்போதைக்கு இப்போதே நின் பாதம் பற்றவோ
ஐயம் கொண்ட கேள்விக்கு அவன் ஆசுவாசம்
'அந்திம ஸ்மிருதி வேண்டாம்' -தப்பாமல் தினம்
எனை நினை ! உன் நினைவு தப்புங்கால்
தப்பாமல் காப்பேன் அந்நாளில் உனை
ஐந்தாவதாய் மொழிந்தான் : சரண் கொண்டால்
ஆன்மா அகலும் போழ் 'அக்கணமே மோட்சம்'!
ஆறாவதாய் சொன்னது 'சத் ஆச்சார்யம் சமஸ்ரைய! '
ஆண்டவனை அடைய ஆன்மிக குருவை பற்று !
பேரருளாளன் சொல் கேட்டு இளையாழ்வானும்
பெரியநம்பி பற்றவே வைணவம் தழைத்ததே
ஆறு வார்த்தையால் ஆண்டவன் நெறி பற்றி
அழகாய் திருவடி காட்டிய திருக்கச்சி நம்பி வாழி !
http://2.bp.blogspot.com/_h7qhuHzSyk...U/s400/015.jpg
நம்பி வாழி
நன்னெறியை
நம்பிக்கையை
நலமே கிட்டும்
கிட்டுமெனக் கண்ணன்கை பற்றப் பார்த்தால்
...கீச்செனவே கத்தியவன் நழுவிச் செல்வான்
எட்டாத உயரத்திலே வெண்ணெய்ப் பானை
...ஏணிவைத்து எடுக்கின்றான் பின்னும் என்ன
மொட்டெனவே முழிமுழித்துக் கையின் வெண்ணை
...மோகமுடன் வாயினிலே இடுவான் நன்றாய்
கொட்டிடுவேன் அடியசோதா உந்தன் பிள்ளை
...கோர்த்தேநான் பிடித்திட்டால் ஆமாம் சொன்னேன்..
சொன்னேன் சுரக்காய்க்கு உப்பில்லை
விடிய விடிய கதை கேட்டு
விடிந்தபின் சீதைக்கு ராமன் சித்தப்பன்
பளிச்சென புரியும் பழமொழியில்
பாங்காய் உணர்த்தும் அவை
பொருளும் பொல்லாத கோபமும்
வாய் வழி வார்த்தைகள்
வாழ்வியலின் அழகிய வெளிப்பாடு
அழகிய வெளிப்பாடாய்த் தான்
இருந்தது முன்பு
அந்தப் பூனைக்குட்டியின் பார்வை
கதவைத் திறந்து நான்
வெளியில் வந்ததும் தாவி
காலருகில் வந்து ஒரு செல்ல மியாவ்..
கையிலுள்ள சீஸை, அதன் உணவை
போட்ட பின் ஆர்வ உண்ணல்..
தினம் நடக்கும் விஷயமென்றாலும்
சில நாள் கொண்டுவர
மறந்துவிட்டேன்..
அப்படியும் வந்து உரசும்..
போகும்..
பின் அதுவும் தேய்ந்து
மூலையிலிருந்து ஒரு பார்வைமட்டும் விடுகிறது..
ம்ம்
கொஞ்சம் கொஞ்சமாய் அதுவும்
கற்றுக் கொண்டுவிட்டது
மனிதம்..
மனிதம் காணாமல் போய்விட்டதாம்
தண்டோராக்காரன் அறிவித்தான்
தேடிக்கண்டுபிடிக்க வாருங்கள்
கண்ணில் கருணை காட்டிப் பாருங்கள்
வார்த்தையில் இனிமை கூட்டிப் பேசுங்கள்
சட்டென்று இளகி உருகப் பழகுங்கள்
மாயமாய் மறைந்து போன மனிதம்
முன்னால் வந்து நின்று சிரிக்காதோ
சிரிக்காதோ இந்தப் பெண்..
லட்சணமான முகம்
பக்கத்து ஃப்ளாட் புதுக் குடித்தனம்
முப்பது செகண்ட் லிப்டிலும் சரி
எதிரில் பார்த்தாலும் சரி
ம்ஹூம்
ஒரு பதில் தலையாட்டல்
பதில் புன்முறுவல்..
சென்ற நாட்களில் வந்த தகவல்
அவள் தனியாம்
புருஷன் விவாகரத்தாம்
ஏதோ ஸகூல் டீச்சராம்..
ட்யூஷன் அண்ட் குறைந்த சம்பளம்
என ஓடுகிறதாம் வாழ்க்கை..
பக்கத்து க்ராசரி ஸ்டோர் காரன்
சொன்னதைக் கேட்டதும்
பாவமாய்த்தான் இருந்தது..
இன்னொன்றும் ..
மன சந்தோஷத்தில்
தான் பூக்கும் சிரிப்பூ..
சிரிப்பூ
சிதறும் மத்தாப்பூ
தீபாவளி திருவிழாயிது
மறுபடி வருவதற்கு
வருடம் ஒன்றாகுமே
வருத்தம்தான் வருகுதே
வருகுதே கண்ணனவன் வருகையினைக் காணாமல்
..வாடிய கண்களிலே கண்ணீரின் வெள்ளோட்டம்
பெருகுதே மனத்தினிலே துன்பவலை தானெழுந்து
..பெண்ணவள் பெருமூச்சாய் விட்டுவிட, மெழுகாட்டம்
உருகுதே உணர்வினிலே தானெழும்பும் நினைவலைகள்,
..ஊர்வலம் போலவங்கே முன்பின்னாய் தேராட்டம்
அரும்பிட அவள்மன்னன் அங்குவந்தால் இப்பாவை
..ஆடிட மாட்டாளோ பெருந்தோகை மயிலாட்டம்..
மயிலாட்டம் ஒயிலாட்டம் போலொரு ஆட்டம்
ஆடியதின்றதிகாலை சென்னை வானம்
ஆண்டவனின் உற்சாக ஊழித்தாண்டவமோ
இடி மின்னல் மழை அதன் நட்டுவாங்கமோ
நட்டுவாங்கமோ எனக் கேட்டால்
ஆம் எனத் தான் சொல்லவேண்டும்..
எதிர்ஃப்ளாட்
புதுக்குடித்தனம்
புதுக் கல்யாணம் போல
மெஹந்தி இன்னும் அழியவில்லை
நன்னாத் தான் இருந்தாள்
இருப்பினும்
எப்போதும் முகம் சுருங்குவதும்
எதற்கெடுத்தாலும் கோப விழிகள்
காட்டுவதும்
அவன் அடங்கிப்போவதும்
கொஞ்சம் நேரில் போகும் போதும்
கொஞ்சம் கார்பார்க்கிங்கிலும்
கொஞ்சம் அடுத்த ஃப்ளாட் மாமியாலும்
கிடைத்த தகவல்கள்
இன்னும் பேசியதில்லை..
என்ன வேண்டியதிருக்கிறது
சமர்த்தாய் குடித்தனம் பண்ண வேண்டாமோ
புள்ளையாண்டான் லட்சணம் தான்..
ஓமான் ஏரில் வேலை போல
வீட்டுவாசலில் ஸ்டிக்கர்..
ஒரு லிஃப்ட் சந்திப்பில்
தனியாய்க் கணவன் மாட்ட
புன்னகை பரிமாறிக் கொண்டு
எப்படி இருக்காங்க உங்க வைஃப்
அவஸ்யம் வீட்டுக்கு வரணும் நீங்க
கொஞ்ச நாள் போட்டும் ஆண்ட்டி
என்னோட அக்கா பொண் தான்
நான் ஏஜ் டிஃபரன்ஸ் ஜாஸ்தின்னு
சொன்னாலும் அம்மா கேட்கலை
சரியாய்டும் குழந்தைத் தனம்..
இப்பவந்தா ஏதாவது சுருக்னு சொல்லிடுவா
யாரையாவது..ஸோ…
சிரித்தேன்
இதானா..
நோப்ராப்ளம்ப்பா..
அப்படிஎல்லாம் ஃபீல் பண்ணாதே
ஒரு நாள்
அழைச்சுண்டு வா…
குழந்தையை…
குழந்தையைப் பார்த்துக்கொள் பத்திரமாய்
குறைந்துவிடும் உன் பாரங்கள் விசாரங்கள்
கண் விரிய பார்த்திடவேண்டும் அதிசயமாய்
கைகொட்டி ரசிக்கவேண்டும் ஒவ்வொன்றையும்
களித்திட வேண்டும் சின்ன சின்ன சாதனைக்கும்
உன் உள்மனமெனும் குழந்தையை காப்பாற்று
காப்பாற்று கடவுளே !எனக்கு கருணை காட்டு
கேசவா மாதவா கோவிந்தா உன்னருள் நீட்டு
கண்ணனின் கதறல் : கரியவன் காதோ செவிடு
கைவளை ஓசை ! கதவு தட் தட்டு !அம்மா அதட்டு !
பள்ளி கொண்டது போதும் கண்ணா எழுந்திரு
பள்ளிக்கு நேரமாச்சு :பர பரவென்றே புறப்படு
பக்கத்து வீட்டு பையன் கூட பறந்து விட்டான்
போகத்தான் வேண்டும் வேண்டாம் வீண் வாதம்
பள்ளிக்கா? மாட்டேன் அம்மா ! போகமாட்டேன் !
புரிந்து கொள் அம்மா !பாடம் சொல் வாத்திகளுக்கும்
பின்னே பசங்களுக்கும் என்னை பிடிக்கவில்லையே
போகத்தான் வேண்டுமெனில் ஏனென்று சொல்?
.
.
.
.
.
.
.
படுத்தாதே கண்ணா ! பள்ளி ஆசிரியரே நீ தான் !
https://external.fmaa1-1.fna.fbcdn.n...q4Jyf_UYbiAOfQ
(படித்த ஜோக்கின் தழுவல்)
நீ தான் நீயே தான்
பொறுப்பு உன் விதிக்கு
அழ ஆசைப்பட்டால் அழு
ஆனந்தம் வேண்டுமா
கொட்டிக்கிடக்கு அள்ளிக்கொள்
அலை ஓய்ந்து குளிக்கவோ
நாய் வாலை நிமிர்த்தவோ
வீண் முயற்சிகள் வேண்டாம்
சம்சார சாகரம் கடக்க இருக்கு
நம்பிக்கை என்னுமோர் துடுப்பு
துடுப்பின்றி தோணி தரை தட்டாது
தூயமதி இன்றி மனமோ நிலையாது
அவா வெகுளி கொண்டலையாது
அலைகடலாம் நின் வாழ்வினை கட
அலகிலா அக்கடவுள் சரண் பற்றி