Quote:
ரத்னகுமார் இயக்கத்தில் தயாராகியிருக்கும் படம் செங்காத்து. இந்தப் படத்தை இளையராஜாவே விநியோகிப்பதாக பரபரப்பு தகவல். படத்தை இளையராஜா விநியோகிப்பதாக தெ*ரிவித்தது உண்மைதான், ஆனால்... என்று சோகம் இசைக்கிறது செங்காத்து தயா*ரிப்பாளர் வட்டாரம்.
செங்காத்துப் படத்துக்கு இசையமைக்க ஒத்துக்கொண்ட இளையராஜா, படத்தைப் பார்த்ததும், படம் நன்றாக இருக்கிறது, நானே சில ஏ*ரியாக்களை வாங்கிக் கொள்கிறேன் என்றாராம்.
படத்தின் போஸ்ட் புரொட**க்சன் முடித்து ஆசையாக இளையராஜாவை அணுகினால், ஏ*ரியாக்களை வாங்கிக் கொள்கிறேன் என்று சொன்னது ச*ரிதான், ஆனால் அது அப்போ. இப்போது நிலைமை ச*ரியில்லை என்று கை வி*ரித்துள்ளார்.
கையை பிசைந்து கொண்டிருக்கிறார்கள் ஆசையாக அறிவிப்பை வெளியிட்டவர்கள்.