சிவாஜி கட்அவுட்டுக்கு பண மாலை! ரசிகர்கள் கொண்டாட்டம்!!
http://img1.dinamalar.com/cini//CNew...4138000000.jpg
நடிப்பு மேதை சிவாஜியின் அற்புதமான நடிப்பில் வெளியான படங்களில் ஒன்று வசந்த மாளிகை. காலத்தால் அழியாத இந்த காதல் காவியத்தில் இப்போதைய நவீன தொழில் நுட்பத்தை இணைத்து மீண்டும் வெளியிட்டிருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் 72 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டிருக்கிறது. நேற்றைய தகவல்படி பழைய படம்தானே என்று சாவகாசமாக தியேட்டருக்கு சென்ற ரசிகர்களுக்கு பலத்த அதிர்சசியாம்.. அதாவது, பல தியேட்டர்களில் ஹவுஸ்புல் போர்டு வைத்திருந்தார்களாம். சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் பல முக்கிய நகரங்களில் உள்ள பெரும்பாலான தியேட்டர்களில் இதே நிலைதானாம்.
குறிப்பாக, அந்த காலத்து ரசிகர்கள் மட்டுமின்றி, இப்போதைய யூத் ரசிகர்களும் வசந்த மாளிகையில் சிவாஜியின் நடிப்பைப்பற்றி கேள்விப்பட்டு இப்போது வந்து பார்க்கிறார்களாம். மேலும், ஒவ்வொரு தியேட்டர் வாசல்களிலும் சிவாஜிக்கு பெரிய அளவில் கட்அவுட்களும் வைத்திருக்கிறார்கள். அப்படி ஜோலார்பேட்டையில் உள்ள ஒரு தியேட்டரில் வைக்கப்பட்டுள்ள சிவாஜி கட்அவுட்க்கு மிகப்பெரிய பணமாலை அணிவித்திருக்கிறார்களாம். அதில் கோர்க்கப்பட்டுள்ள மொத்த பணத்தின் மதிப்பு ரூ. 5 லட்சமாம். இன்னும் பல ஊர்களில் பாலாபிஷேகம், பூஜைகள் எல்லாம் நடத்தப்பட்டதாம்.