உண்மைதான் ஆனந்த் அவர்களே..
குறட்பாக்கள் 1330 தாம்..
பரிமேலழகரிலிருந்து கவிக்கோ அப்துல்ரகுமான் வரை ஒவ்வொருவரும் எடுத்துச் சொல்ல.. விரித்து ரசித்து பரிமாறப் பரிமாற..
வள்ளுவன் மேல் உள்ள காதல் வளர்ந்துகொண்டே போவதுபோல்...
நடிகர்திலகம் நடாத்திக் காட்டிய @300 காவியங்கள் பற்றி ஒவ்வொரு உன்னத ரசிகராய்ச் சொல்லச் சொல்ல
அந்த மேதையைப் பற்றிய நம் வியப்பும் உயர்ந்துகொண்டே போகும்..
இனி எவர் குறள் எழுதினாலும் வள்ளுவர் ஆகமாட்டார்..
இனி எவர் எதை நடித்துக்காட்டினாலும் எம் சிவாஜி ஆகமாட்டார்!