http://i46.tinypic.com/2u8fr00.jpg
Printable View
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 24வது திரைப்படம்
" சர்வாதிகாரி " -- படத்தொகுப்பு
-----------------------------------------------------------------------------------------------------
1. இத்திரைப்படம் வெளியான தேதி : 14-09-1951
2. தயாரிப்பு : மாடர்ன் தியேட்டர்ஸ்
3. இயக்குனர் : டி. ஆர். சுந்தரம்
4. மக்கள் திலகத்தின் கதாபாத்திரம் : பிரதாப வீரன்
5. பாடல்கள் : கா. மு. ஷெரிப், அ. மருதகாசி, கண்ணதாசன், கே. பி.
காமhட்சிசுந்தரம்
6. கதை, திரைக்கதை : கோ. த. ஷண்முக சுந்தரம்
7. வசனம் : ஏ. வி. பி. ஆசைத்தம்பி
8. இசை : எஸ். தஷிணாமூர்த்தி
9. கதாநாயகன் மற்றும் நாயகி : மக்கள் திலகம் எம். ஜி. ஆர் - அஞ்சலி தேவி,
10..இதர நடிக நடிகையர் : வி. நாகையா, எம். என் நம்பியார், புளி மூட்டை
ராமசாமி , எஸ்.எம்.திருப்பதிசாமி, எம். எம்.ஏ. சின்னப்பா, எஸ் எஸ்.
சிவசூரியன், வி. கே. ராமசாமி, எம் சரோஜா எஸ். ஆர். ஜானகி,
முத்துலட்சுமி
இப்படத்தின் கதைச்சுருக்கம் மற்றும் பாடல்கள் தொடர்கிறது.
---------------------------------------------------------------------------------------------------------------------
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்
"சர்வாதிகாரி" திரைப்படத்திலிருந்து பொன்மனசெம்மலின் அற்புதமான தோற்றம்
http://i48.tinypic.com/34zyuzn.jpg
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்
"சர்வாதிகாரி" திரைப்படத்திலிருந்து மக்கள் திலகத்தின் மற்றொரு அழகிய தோற்றம்
http://i50.tinypic.com/169op01.jpg
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்
"சர்வாதிகாரி" திரைப்படத்திலிருந்து
http://i50.tinypic.com/smdel2.jpg
அன்பன் : சௌ. செல்வகுமார்
என்றும் எம்.ஜி.ஆர்.
எங்கள் இறைவன்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் 24வது திரைப்படம்
" சர்வாதிகாரி " – கதைச்சுருக்கம்
பத்தாண்டு சண்டையால் மனிபுரியிலே பஞ்சம், பசி பட்டினி சமாதானத்தை விரும்புகின்றனர் மக்கள். ஆனால் ..மந்திரி மகாவர்மன் சர்வாதிகாரியாக வர சதி செய்து மற்றொரு போருக்கு தூபம் போட, மதிகெட்ட மன்னனும், ரத்தினபுரி மீது படையெடுக்கும் படி தளபதி உக்கிரசேனருக்கு உத்திரவு அனுப்புகிறான். மக்கள் சுபீட்சத்தை விரும்பும் தளபதியும் அவரது மெய்காப்பாளன் பிரதாபனும் படையெடுப்பை தடுக்க மகாராஜாவை கண்டு பேச தலை நகர் வருகிறார்கள். வரும் வழியில் மந்திரியின் கையாளான மீனா தேவியை பிரதாபன் சந்திக்கிறான். காதல் கொள்கிறான். பிரதாபனை அவன் மாமன் மகள் கற்பகம் உண்மையாக காதலிக்கிறாள். தளபதி உக்கிரசேனர் மகாராஜாவை சநதிக்காதபடி செய்ய அவரைக் கொன்று விட திட்டம் போடுகிறான். மந்திரி. பிரதாபனையும் தளபதியிடமிருந்து பிரித்து மீனாதேவியை கொண்டு மயக்க ஏற்பாடு செய்கிறான். ஆனால் ......மீனாவும் பிரதாபனும் காதல் வசப்படுகின்றனர். மந்திரியின் சூழ்ச்சியை மீனா மூலம் அறிந்த பிரதாபன் தக்க சமயத்தில் தளபதியை காப்பாற்றுகிறான்.
அதே இரவு தளபதியைக் கைது செய்ய மந்திரி வருகிறான். போரைத் தடுக்க நினைத்த தளபதி இராணுவத்தை கலைத்து விட தான் எழுதிய அறிக்கையை பிரதாபனிடம் கொடுக்க, பிரதாபன் தப்பிச் செல்கிறான். தளபதியை சிறை வைத்த மந்திரி, பிரதாபன் தப்பி விடாதபடி கோட்டையில் காவல் போடுகிறான். மீனாவின் உதவியைப் பெற பிரதாபன் விரும்புகிறான். மீனாதேவி காட்டிக் கொடுத்து விடுவாள் என்று கற்பகமும் மற்றவர்களும் கூறுகின்றனர். வேறு வழியின்றி மீனாவின் உதவியைப் பிரதாபன் நாடுகிறான். மீனாவின் அத்தை மனோரஞ்சிதம் உதவி செய்யக்கூடாது என்று சொல்கிறாள். அதை மதிக்காத மீனா தன் முத்திரை மோதிர உதவியால் பிரதாபனை கோட்டைக்கு வெளியே கொண்டு வந்து விடுகிறாள். ஆனால் .......
மீனாவின் அத்தை, பிரதாபன் தப்பிச் செல்வதாக மந்திரிக்கு அறிவித்து விடுகிறாள். இராணுவ முகாம் செல்லும் பிரதாபனுக்கு உதவியாக கற்பகமும் இன்னும் சிலரும் கூட வருகிறார்கள். தயாராக காத்திருந்த மந்திரி ஆட்கள் பிரதாபனை சுட்டு தள்ளி அறிக்கையை எடுத்து செல்கிறார்கள். மீனாதேவிதான் காட்டிக் கொடுத்து விட்டாள் என்று கற்பகம் சொல்ல, பிரதாபனும் ஆமோதிக்கிறான். ஆனால் ........
ஒரு நாள் மீனாதேவியை திடீரென்று சந்தித்த பிரதாபன் அவளை துரோகி என்கிறான். முடிவில் மந்திரி, தளபதியை விடுதலை செய்வது போல் மக்களுக்கு காட்டி வழியில் கொல்லப் போவதாக அறிவிக்கிறான். மீனா உண்மைக் காதலி என்பதை பிரதாபன் உணருகிறான்.
இதைக் கேள்விப்பட்ட கற்பகம் தன் காதல் பொய்த்து விடுமோ என்று கலங்குகிறாள். மனமிரங்கிய மீனா தன் காதலன் பிரதாபனை தியாகம் செய்ய ஒப்புக் கொள்கிறாள். பிரதாபன், மந்திரி ஆட்களை வேஷம் போட்டு தளபதியை மீட்க சிறைக்கு செல்கிறான்.
தளபதியை விடுதலை செய்யும் சமயம் மந்திரி ஆட்கள் வந்து விடுகின்றனர். பலத்த சண்டைக்குப் பின் பிரதாபனும் தளபதியும் தப்புகின்றனர். இதற்கு காரணம் மீனாதேவி என்பதை அறிந்த மந்திரி மீனாவைக் கொல்ல வருகிறான். ஆனால், .......
உருவிய வாளோடு கற்பகம் தோன்ற, மந்திரிக்கும் கற்பகத்துக்கும் கடுமையான போர் நடக்கிறது. மந்திரி கற்பகத்தை குத்தி விட்டு மீனாவை கொல்லப் போகிறான். ஆனால், …….
பிரதாபன் வந்து விட மந்திரி அவன் மேல் பாய்கிறான். உக்கிரமான சண்டை நடக்கிறது. சர்வாதிகாரியாக வர நினைத்த மந்திரி மடிகிறான். மீனாவும், பிரதாபனும் ஒன்று படுகின்றனர். மணிபுரியிலே மக்களாட்சி மலர்கிறது. தளபதி உக்கிரசெனர் தான் முதல் ஜனாதிபதி.
-- சுபம் ---
"சர்வாதிகாரி" திரைப்படப் பாடல்கள் தொடர்கிறது.
தலைவர் என்ன அழகு.
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png
Some images from Sarvathikari taken from Olikirathu Urimaikural.
http://i125.photobucket.com/albums/p...ps6687b6f6.jpg
http://i125.photobucket.com/albums/p...ps63c9cd6f.png