நம்முடைய திரி நண்பர்களுக்கு,
நமது மையம் திரியின் மூலம் இளைய தலைமுறையினரிடம் நடிகர் திலகத்தை பற்றிய எவராலும் பேசபடாத அல்லது அவரது பல திறமைகள் பகிரங்கமாக தாழ்புணர்ச்சி காரணம் மறைக்கப்பட்ட விஷயங்களை எடுத்து கூற என்ன வழி என்று நமது நண்பரும், "சித்தரின்" தீவிர அபிமானியுமான திரு.ஆனந்தும், நானும் யோசித்து அதை ஒரு ஒலி-ஒளி வடிவமாக கொண்டு சென்றால் என்ன என்ற எண்ணத்தின் பயனாக விளைந்ததுதான் இந்த 29 நிமிட கருத்து பரிமாற்றம்
"நடிகர் திலகம் - நடிப்பிற்கும் மேல் !!
எங்கே இதை எடுக்கலாம் என்று எண்ணும்போது நமது நினைவுக்கு வந்தது அண்ணாசாலையில் உள்ள செம்மொழி பூங்கா. எந்த வித முநேர்பாடும் இல்லாமல், என் கையில் இருந்த Sony Ericson Hazel Mobile Phone வழியாக ஹெட்-செட் மாட்டிகொண்டு மாறி மாறி படம் பிடித்தோம்.
இதில் பாடல்கள் வரும் இடத்தில் மற்றும் சில காட்சிகளில் பாடலுக்கு பதிலாக ஒரு மேலைநாட்டு இசை பயன்படுத்திஇருக்கிறோம் காரணம், இதை பார்க்கும்போது பாடல்களில் கவனம் சிதறக்கூடாது என்பதற்குதான்.
எதனால் நடிகர் திலகம், நடிகர் திலகமாக அழைக்கப்பட்டார் என்ற கேள்வி முதலில். வெறும் நடிப்பு மட்டுமா..அல்லது மற்ற எல்லா அம்சமும் ஒருங்கே பெற்ற திறமை காரணமா ? இந்த கேள்விக்கு விடை காணும் முயற்சியின் முதல் பாகம் தான் "நடிகர் திலகம் - நடிப்பிற்கும் மேல் !!
திரி நண்பர்கள் அனைவரும் இது எப்படி இருக்கிறது என்ற உங்களுடைய மேலான கருத்தினை, மற்றும் இந்த முயற்சியின் நிறை குறைகள் இருப்பின் அதனையும் சுட்டிக்காட்டினால் இன்னும் நன்றாக இதுபோல விஷயங்களை மேம்படுத்தமுடியும் என்று நம்புகிறோம். !
இந்த ஒளி-ஒலி ஒரு சிலருக்கு முதலில் இருந்து வருவதற்கு YouTube Play cursor சிறிது பின்னோக்கி இழுத்தால் முதலிலிருந்து ஒளிபரப்பாகும்.
http://www.youtube.com/watch?v=ydHGXXpVGdE