இப்போதுதான் ஒரு சலசலப்பு நடந்து முடிந்தது என்று நினைத்தால் மீண்டும் சில வேதனையான காட்சிகள் நமது திரியில் அரேங்கேற்றம். நண்பர் சின்னக் கண்ணன் அவர்கள் தன் மனதில் தோன்றிய ஒரு சில எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டார். அவரை பொறுத்தவரை பாட்டுக்கு பாட்டு திரியிலும் கவிதைக்கு கவிதை திரியிலும் அவருடன் சேர்ந்து பங்களிப்பு செய்யும் ஆட்களை அவர் நன்கு அறிவார். அவர்களுடன் ஒரு நல்ல rapport-வும் அவருக்கு உண்டு, அதே போன்ற சூழலை அவர் இங்கே எதிர்பார்த்தார் என தோன்றுகிறது. இங்கே நிலவும் சூழல், புதிய ID-க்களின் வரவு, பயன்படுத்தப்பட்ட மொழி ஆகியவை அவரை disturb செய்து விட்டது என தோன்றுகிறது. அதை அவர் தன பதிவில் வெளிப்படுத்தியிருக்கிறார். இதற்கு ஒரு சில நண்பர்கள் எதிர்வினையாற்றிய முறை சரியான தரத்தில் அமையவில்லை என்று கேள்விப்படுகிறேன். அதை நான் படிக்கவில்லை. ஆனால் நமது திரியின் மாண்பிற்கு சற்றும் பொருந்தாத வகையில் வார்த்தை பிரயோகங்கள் அமைந்திருந்ததாக கேள்விப்பட்டேன்.
சின்ன கண்ணன் அவர்கள் பதிவு செய்திருந்தது அவரது மனதின் எண்ணங்களை. அவற்றில் கருத்து வேறுபாடு இருப்பின் அல்லது அவர் சொன்னவற்றை மறுக்க நினைத்தாலோ அதை கண்ணியமான வழியில் நாகரீகமான வார்த்தைகளை பயன்படுத்தி சொல்லியிருக்கலாமே. அதை விடுத்து கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவது, இந்த திரியை விட்டு போ என்றெல்லாம் சொல்லுவது நமது நடிகர் திலகத்தின் திரிக்கு அதன் பெருமைக்கு களங்கம் விளைவிப்பதாகவே அமையும். மாற்று கருத்துக்களை சொல்பவர்கள் யாரும் திரிக்கு வரக் கூடாது என்பது சரியான நிலைப்பாடு கிடையாது. நடிகர் திலகத்திடமே கருத்து வேறுபாடு கொண்ட ரசிகர்கள் அதாவது அவர் எடுத்த அரசியல் நிலைப்பாட்டை பற்றியே மாற்று கருத்து கொண்டு அதை அவரிடமே நேரில் சொன்ன தீரா மறவர் கூட்டம் நமது ரசிகர் கூட்டம். ஆகவே மாற்று கருத்தை எதிர்க்க வேண்டாம். அதே நேரத்தில் வேண்டுமென்றே விஷமத்தனமான கருத்துகளை இங்கே யாராவது எழுதினால் அதற்கு நாம் தக்க பதில் அளிக்கலாம். அதுவும் கூட நாகரீகமாக.
இந்த exchanges காரணமாக இனி மய்யம் இணையதளத்திற்கு வரமாட்டேன் என்று சின்ன கண்ணன் எழுதியிருந்ததாக அறிகிறேன். அவர் அந்த முடிவை கைவிட்டு மீண்டும் திரும்ப வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
கார்த்தி (Honest Raj),
இந்த திரி பற்றிய உங்கள் கருத்தை நீங்கள் பதிவு செய்திருக்கிறீர்கள். அது உங்கள் உரிமை. அதே நேரத்தில் பாராட்டை கேட்டு வாங்குபவர்கள் என்ற தொனியில் நீங்கள் எழுதியிருப்பது வருத்தத்துக்குரியது. ஒருவரின் பதிவை பாராட்டுவது எனபது ஒவ்வொருவரின் விருப்பம். அதை குறையாக சுட்டிக் காட்டியதை தவிர்த்திருக்கலாம் என்பது என் கருத்து. புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.
அன்புடன்