http://i1065.photobucket.com/albums/...ps04kvr4ei.jpg
Printable View
திருவருட்செல்வர் அப்பர் பாத்திரம் ,அவர் முன்னரே ஆறு மனமே ஆறு என்று ஆண்டவன் கட்டளையில் ஒத்திகை பார்த்து விட்டு கடலையும் சாப்பிட்டு விட்ட ஒன்று. துறவமைதி கலந்த ஒடுக்கமும் ,செயல்பாடு நிறைந்த பழுத்த முதுமையும் ,அவர் தான் நேரில் கண்டு,பதிய வைத்த சந்திரசேகர சாமிகளை (காஞ்சி பெரியவர்)role model (முன்மாதிரி பிரதி)ஆக வைத்து நடித்த விதம்,நடிகர்திலகத்தின் நடிப்பின் வீச்சு,broad Spectrum ,இரு வேறு பட்ட துருவ நிலைகளை துரித தயாரிப்பில் அடையும் மேதைமை,அவரால் சாதிக்க முடியாதது எதுவும் இல்லை என்று உலகத்துக்கு ஓங்கி சொன்னது.இந்த பாத்திரம் ஒரு குறிஞ்சி மலர்.(பூக்கவே முடியாத ஒரு முறை மட்டுமே பூப்பது எதுவாவது இருந்தால் அதை பிரதியிட்டு கொள்ளுங்கள்)
அந்த 80 வயதுக்கு மேற்பட்ட முதியவரின் ஒப்பனைக்கு அன்றைய கால கட்டத்தில் அவர் பட்ட கஷ்டங்கள் சொல்லி மாளாத அளவு சித்திரவதையை ஒத்த கஷ்டம்.அந்த நடை ,அவர் எல்லோருக்கும் கற்று கொடுத்த அதிசய பாடம்.ஒரு கூன் வந்த ,புத்துயிர்ப்போடு இயங்கும் முதியவரின் balance தடுமாறும் துரித நடை,V வடிவில் பாதத்தையும்,U வடிவில் முட்டியையும் வைத்து அவர் நடக்கும் விதமே அந்த பாத்திரத்தின் பாதி வேலையை செய்து விடும்.(இதே படத்தில் மன்னனின் சிருங்காரம் கலந்த கம்பீர நடையழகும்,சுந்தரரின் சிறிதே பெண்மை கலந்த சுந்தர நடையழகும் கண்டு ரசிக்க, வேறுபாட்டை உணர ஒரு reference point )அதே போல கூன் உடம்பு காரன் தன்னை நிமிர்த்த எத்தனித்து செய்ய வேண்டிய சிரமமான முயற்சியை ,அந்த பாத்திரம் நிமிரும் தருணங்களில் நடிப்பால் உணர்த்தும் விந்தை.
பேச்சில் ஒரு பற்றற்ற அமைதி கலந்த உறுதி இருந்தாலும் ,வயதுக்கேற்ற ஒலி சிதறலும் கொண்டிருக்கும்.அப்பூதி அடிகளின் இல்லத்தில் ,அவர் ஒரு முட்டியை உயர்த்தி,கைகளை அதில் அமர்த்தி ,முகத்தை நம்மை நோக்கி குவிந்து விரியும் கைகளில் சார்த்தி அமைதி ,சாந்தம்,தவம் கலந்த ஒரு மோகன அரை சிரிப்புடன் காட்டும் gesture ,காஞ்சி பெரியவர் சந்திப்பில் நமக்கு கிடைத்த வரம்.நான் எத்தனை முறை பார்த்து ரசித்திருப்பேன் என்ற எண்ணிக்கை ,நானே அறியா புதிர். இது larger than life பாத்திரத்தை Meisner பள்ளியில் பாற்பட்ட பூரணத்துவம் கொண்ட நடிப்பின் சாதனையாகும்.
கடைசி காட்சியில் உடலை இழுத்து அவர் அனைத்து புலன்களும் மங்கி தளர்வு பெற்ற நிலையிலும் ,காளத்தி செல்ல எத்தனிக்கும் காட்சி நம்மை வேறு லகுக்கே கூட்டி சென்று தன்னிலை மறக்க செய்யும்.
Deleted
அண்மைத் தகவலின் படி வீரபாண்டிய கட்டபொம்மன் முன்னோட்ட வெளியீட்டு விழா 20.03.2015 வெள்ளியன்று நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கும் பிரமுகர்கள் பட்டியல் இறுதியானவுடன் மேலும் விவரங்கள் வெளியிடப்படும்.
சில நேரங்களில் சில மனிதர்கள் நடந்து கொள்வதை பார்க்கும்போது ஏன் இப்படி என்ற எண்ணமே மேலோங்குகிறது. நடக்காத ஒன்றை நடந்ததாகவும் நிகழாத ஒன்றை நிகழ்ந்ததாகவும் அப்படிப்பட்ட நிகழாத ஒன்றை சாதனையாக தூக்கிப் பிடிப்பதையும் பார்க்கும்போது அவர்களின் hidden agenda பற்றிய சந்தேகமும் எழுகிறது. இப்படி ஒரு பொய்யான தகவலை மீண்டும் மீண்டும் பதிவு செய்வதால் இவர்கள் அடையும் லாபம் என்ன? இப்படி நடந்திருந்தால்தான் சாதனையாளர் என்று மக்கள் ஒப்புக் கொள்வார்கள் என்ற எண்ணமா? இல்லை மீண்டும் மீண்டும் பதிவு செய்வதன் மூலம் பொய்யை உண்மை என்று நிறுவும் தந்திரமா? கைப்பிடியில் தகவல்கள் கொட்டும் இன்றைய இணையதள உலகத்திலும் அதே இணையத்தைப் பயன்படுத்தி பொய்யை மெய்யாகும் வழிமுறைகளில் செயல்படுவது, இவையெல்லாம் துவக்கம் முதலே இப்படி நிறுவப்பட்டு வரும் பிழையான வரலாற்று சுவடுகளின் இன்றைய பரிணாம வளர்ச்சியா?
எப்படி பார்த்தாலும் 140 என்பது 175-க்கு இணையாகாது என்பது நன்றாக தெரிந்தும் கூட [ஒரு வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும் 160 கூட 175-க்கு இணையாகாது] மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. ஆனால் சத்யம் என்றைக்கும் ஒன்றுதான். அதை யாரும் மாற்ற முடியாது. உணர வேண்டியவர்கள் உணர்ந்தால் சரி!
அன்புடன்
Dear Murali sir,
If 155=175 then KARNAN is 175 too !
Regards
RKS
Karnan....the one and only movie of its kind that instilled confidence in producers to rerelease the olden goldies in improvised formats and paved way as the pioneering movie that set this trend is incomparable by all means. Only after perceiving the stupendous success of Karnan to recreate the values of life in the minds and hearts of younger generation of today....establishing the iconic image of Nadigar Thilagam Sivaji Ganesan as the one and only invincible rerun value maintainer till date...a record that is unbeatable ever in the history of Tamil Cinema...The demi God of acting always guides even from his heavenly abode....The pride of NT fans upheld!!
https://www.youtube.com/watch?v=xsCtzX-9TiU