- 
	
	
	
	
		நேற்று  இன்று நாளை 
 
 மக்கள் திலகம் எம்ஜிஆர்  ரசிகர்களுக்கு  மிகவும் பொருத்தமான  தலைப்பு . காரணம்  நேற்றய  தலை முறை  ரசிகர்கள்  என்றால் 1947ல் ல்  துவங்கி 1978 வரை  ராஜ குமாரி  முதல் மதுரையை   மீட்ட சுந்தரபாண்டியன்  வரை  எம்ஜிஆரின்  115    படங்களை  திரை அரங்குகளில்  திருவிழாவாக  கொண்டாடியவர்கள் .30 ஆண்டுகள்  தமிழ்  திரை உலகில்  எம்ஜிஆரின்  சாம்ராஜ்ஜியம்  கொடி  கட்டி பறந்தது .  எம்ஜிஆர்  படங்கள் வெளிவரும் நாள்  ரசிகர்களுக்கு  திருவிழா .முன்பதிவு  நாளில்  திரை அரங்கில்  ரசிகர்கள்  வெள்ளம்   காண கண் கொள்ளா கட்சியாக  இருந்தது .
 
 திரை  அரங்கை  ஸ்டார்  மற்றும் தோரணங்களால்  அலங்கரித்து  எம்ஜிஆர் பதாகைகளுக்கு    மாலை  அணிவித்து  கொண்டாடினார்கள் .முதல் நாள் முதல் காட்சியில்  எம்ஜிஆரை பெயரை  டைட்டிலில்  கண்டதும்  திரை  அரங்கமே அதிர்ந்து போகும் அளவிற்கு விசில் சத்தமும்   கை  தட்டலும்  இருந்தது . பிறகு  காட்சிக்கு  காட்சி  எம்ஜிஆரின் பாடல்கள் ,சண்டை காட்சிகள் , உணர்வுபூர்வமான  நடிப்பு காட்சிகள் ரசிகர்களுக்கு  விருந்தாக  அமைந்து  இருந்தது .
 
 எம்ஜிஆருக்கு  அடிமட்டத்திலிருந்து  மேல்தட்டு  வரை  ரசிகர்கள்  இருந்தார்கள் . குறிப்பாக  ஏழை  மக்கள் , விவசாயிகள் , தொழிலாளிகள்  மற்றும்  உழைக்கும் வர்க்கத்தினர்  மிகவும் அதிகமாக  எம்ஜிஆரை  ரசித்தார்கள்  நேசித்தார்கள் .எம்ஜிஆருக்கு  என்றுமே   தோல்வி  இல்லை . சில  படங்கள் முதல்  வெளியீட்டில்  சரியாக ஓடவில்லை  என்றாலும்   மறு  வெளியீடுகளில்  நல்ல  லாபத்தை  தந்து விடும் .
 
 எம்ஜிஆர் படங்களை ஒரு சில  பத்திரிக்கைகள்  தரமின்றி  விமர்சனம்  செய்தார்கள் . இதை  ஒரு பொருட்டாக  எம்ஜிஆரும்  எடுத்து  கொள்ளவில்லை . ரசிகர்களும்  ஆத்திரம் படவில்லை . மாறாக  யார்  யார்  எம்ஜிஆரை  கிண்டல்  கேலி  செய்தார்களோ   அவர்கள்  பின்னாளில்  தங்கள்  தவறை உணர்ந்து  எம்ஜிஆரின்  படங்களை  புகழ்ந்தது  எம்ஜிஆரின்  பொறுமைக்கு  கிடைத்த .வெற்றியாகும்
 
 
 எம்ஜிஆர்  படங்களில்   சமுதாயத்திற்கு  தேவையான  கருத்துக்கள் , அறிவுரைகள்  வசனங்கள்  மற்றும்  பாடல்கள்   இடம்  பெற்று  இருந்தது .  எம்ஜிஆரின்  பொலிவான தோற்றம்  கச்சிதமான  உடற்கட்டு ,  புதுமையான   சண்டை காட்சிகள் , விறுவிறுப்பான  காட்சிகள் , எம்ஜிஆரின்  சுறுசுறுப்பான  நடிப்பு , சிறந்த  உடை  அலங்காரம் ,  எளிமையான  வசனங்கள், சேஷ்டை  இல்லாதமுக பாவங்கள் , இவை   யாவும் எம்ஜிஆரின்  வெற்றியின்  ரகசியங்கள் . எனவேதான்  எம்ஜிஆர்  படங்களை  அவரின் ரசிகர்களும் , பொது  மக்களும்  பல  முறை  பார்த்து  மகிழ்ந்தார்கள் .
 
 எம்ஜிஆரை  போல்  வேறு  எந்த  நடிகரும்  தங்கள்   திரை உலகை  வாழ்க்கையை  அமைத்து  கொள்ள  முடியவில்லை .  எம்ஜிஆர்   ரசிகர்களின்  நாடி  துடிப்பை  நன்கு  அறிந்திருந்தார் . ரசிகனின்  தேவைகளை  பூர்த்தி  செய்தார் . வெற்றி மேல் வெற்றி கண்டார் . எம்ஜிஆர் ரசிகர்களும்  தங்கள்  உயிர்  தலைவரின் எண்ணங்களுக்கு   முழு ஆதரவு  தந்தார்கள் .உண்மையாக  உழைத்தார்கள் . எம்ஜிஆரை  நினைத்ததை  முடிப்பவன்   என்ற  தலைப்பிற்கு  உயிர்  கொடுத்தார்கள் . அதுதான்  நேற்றய   எம்ஜிஆர்  ரசிகர்கள்  .
 
 
- 
	
	
	
	
		களையுலகை இப்பொழுதும் காத்து வரும் மக்கள் திலகம் காவியங்கள் பற்பல இடங்களில் வெற்றி போடுகிறது... நெல்லையில் சுமார் 250000.00 அருமை, அட்டகாச வசூலை அள்ளி வழங்கியுள்ளார் நம் "நாடோடி மன்னன்" அடுத்து வரும் வெள்ளி முதல் நெல்லை- ரத்னா A/C dts "நினைத்ததை முடிப்பவன்" மகத்தான ஆரம்பம், தூத்துக்குடி -ராஜ் அரங்கிலும் தற்போது சூப்பர் வசூலுடன் கலக்கி கொண்டிருப்பதாக நண்பர்கள் தகவல், சென்னையில் நமது மன்னவர் காவியங்களுக்கு நமது சக்ரவர்த்தியின் காவியங்களே போட்டியாக அமைந்து வருகிறது சிறப்பான நடப்பு... 
 
- 
	
	
	
	
- 
	
	
	
	
- 
	
	
	
	
- 
	
	
	
	
- 
	
	
	
	
		கோவை துடியலூர் முருகன், மற்றும் கிணத்துக்கடவு அரங்கில் தற்போது வெற்றி நடை போடுகிறது -புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட வெற்றிப்படைப்பான 
 "அடிமைப்பெண் "
 http://i65.tinypic.com/5ye0sm.jpg
 
 தகவல் உதவி :திரு.சாமுவேல், சத்தியமங்கலம்
 
 
- 
	
	
	
	
- 
	
	
	
	
-