Ultimate :lol:Quote:
Originally Posted by Murali Srinivas
Printable View
Ultimate :lol:Quote:
Originally Posted by Murali Srinivas
தங்கப்பதக்கம் நாடகத்தைப்பார்க்க வாய்ப்புக்கிடைக்காவிட்டாலும் பார்த்தவர்கள் சொல்லக்கேட்டிருக்கிறேன். (தங்கப்பதக்கம் திரைப்படம் வெளியானதும் நாடகம் நிறுத்தப்பட்டுவிட்டது. அதனால் நமக்கெல்லாம் வாய்ப்புக்கிடைக்கவில்லை). ராகவேந்திரன் அவர்கள் சொன்னது போல. படத்தை விட நாடகம் இன்னும் எஃபெக்டாக இருந்தது என்று சொல்வார்கள். படத்தில் மேஜர் செய்த ரோலை, நாடகத்தில் செந்தாமரை இன்னும் கிறப்பாக செய்திருந்தாராம்.
வறுமையில் வாடிய, காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் திரு கக்கனுக்கு நிதியுதவி அளிப்பதற்காக ஒருமுறை 'தங்கப்பதக்கம்' நாடகம் நடத்தப்பட்டது. (இடம் கோவை என்று படித்ததாக நினைவு). பெருந்தலைவர் காமராஜர் தலைமை தாங்கினார். செலவு முழுக்க நடிகர்திலகத்துடையது. அதனால் நாடகத்துக்கு ஆன வசூல் முழுதும் கக்கன் அவர்களின் குடும்பத்துக்கு அளிக்கப்பட்டது. நடிகர்திலகத்தைப் பாராட்டி, அவருக்கு மேடையில் காமராஜர் ஒரு தங்கப்பதக்கம் பரிசளித்தார். அதையும் நடிகர்திலகம் ஏலம் விட, உள்ளூர் காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் அதை பத்தாயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார் (அப்போது ஒரு பவுன் விலை 700 ரூபாய்). ஏலத்தில் கிடைத்த பத்தாயிரம் ரூபாயையும் கக்கனிடமே நடிகர்திலகம் வழங்கி விட்டார்.
நன்றி தெரிவித்துப்பேசிய திரு கக்கன், 'பதக்கம் மட்டும் தங்கம் அல்ல, சிவாஜியின் மனமும் தங்கம்' என்று மனம் நெகிழ்ந்து சொன்னார்.
உத்தமர் வாயிலிருந்து வந்த சத்திய வார்த்தைகள்!Quote:
Originally Posted by saradhaa_sn
saradha mam, thanks for giving us the opportunity to know such wonderful facts. A real noble person, NT is.
முதலில் ஒரிஜினல் நாடகம் அல்லது சினிமா பார்த்தவர்களுக்கு அது பிடித்து விட்டால், செகண்ட் டைம் copied version பார்பவர்களுக்கு அது பிடிப்பதில்லை
exception, thillana mohanambal-mudalil kathaiyaga vandathu.
Pazani-Originally Upkar in Hindi.
அப்படி ஒரேயடியாக சொல்லிவிட முடியாது. விதிவிலக்குகளும் உண்டு.Quote:
Originally Posted by sankara1970
முதலில் இந்தியில் 'ஜானி மேரா நாம்' பார்த்தபோது ஓரளவே மனதைத் தொட்டது. இதை பாலாஜி தமிழில் எடுக்கிறாரே எடுபடுமா என்று நினைத்தோம். ஆனால் அதுவே 'ராஜா'வாக வந்தபோது நம் மனதை அள்ளிக்கொண்டு போனது.
அதே சமயம்,ஆராதனாவைப்பொறுத்தவரை அது பாடல்களால் வெற்றிபெற்ற படம். ஆனால் அந்த இந்தி ட்யூன்களை அறவே தொடாமல், மெல்லிசை மன்னர் தன் சொந்த பாணியில் அத்தனை பாடல்களையும் வித்தியாசமாக தந்து அசத்தியிருந்தார். ஆனால் படம் வெற்றி வாய்ப்பை இழந்தது உண்மை.
இன்னொரு விஷயம், 'பழனி'தான் முதலில் வந்து, பின்னர் அது இந்தியில் 'உப்கார்' ஆக மாறியதாக ஒரு நினைவு.
Y'day saw " Uyarndha Manidhan" once again in DVD. What a great film. Hats-off to NT.
A few scenes which I like the most in the film :
1) The scene where a quarrel takes place between NT & Sowcar. NT gives a quintessential performance ably supported by Sowcar, who has also done a good job in that scene.
It all starts when Sowcar asks NT why he is late and then she accuses him of lying to her. NT, though initially maintains his cool, gradually gets annoyed and loses his temper when his wife critisises Satyan's (Sivakumar) virtuousness. Her every remarks about his deeds, arouses his long-kept anger and guilty conscious (he had failed to save his first wife from fire accident). Out of sheer helplessness & anger, he critisizes their " Poli vaazhkai" and explains how they have made so much money by telling countless lies. Sowcar, obviously shell shocked to see NT in this mood, who otherwise is a thorough gentleman, calls him a brute. And that's, enough for NT to slap her on her face. Ashamed of himself, NT quickly walks out of the room only to return back after Sivakumar pacifies him. The following scene is also great, where the couple realise their mistakes and get united.
2) This is a lighter scene, where Sowcar goes to the ladies club and meet her friend G. Sakuntala. The way GS gives tips to Sowcar about how Husband's behave, is well conceived and brought out by the director. Full credit to GS who has given a splendid performance.
இல்லை சாரதா. உப்கார் தான் முதலில் வந்தது. உங்களுக்கு கூட நினைவிருக்கும். பழனியை பற்றிய நடிகர் திலகத்தின் கமெண்ட் " இந்தி உப்கார்தான் தமிழில் பழனி. அவர்களுக்கு முப்பது வாரம். நமக்கேன் மூன்று வாரம்"Quote:
Originally Posted by saradhaa_sn
ரீமேக் படங்கள் பற்றி நீங்கள் சொல்வது சரிதான்.சில படங்கள் ஒரிஜினல் நன்றாக இருக்கும். நகல் எடுபடாது. ஒரிஜினல்-ஐ விட நகல் நன்றாக இருந்ததும் உண்டு. ராஜா மட்டுமல்ல. எங்கிருந்தோ வந்தாள் கிலோனாவை விட நன்றாக இருந்தது. துஷ்மனை விட நீதி நன்றாக இருந்தது. Be-Imman-ai விட என் மகன் பெட்டர்.
மாற்றாக அமைந்த படங்களும் உண்டு. Mukkadar Ka Sikkander - அமர காவியம். கூப் சூரத் - லக்ஷ்மி வந்தாச்சு.
அன்புடன்
Congratulations to all nt fans for having crossed one more land mark. Keep it up.
Dear Dhanusu,
Welcome back. Where were you all these days. Missed you. Are you pointing out to the Part 4?
Regards