அன்புள்ள தமிழ்த் திரை இசைப் பிரியர் ( TFM LOVER ) அவர்களுக்கு
எனது காலை வணக்கம்
S.C.கிருஷ்ணனின் குரல் வளம் மிகவும் சிறப்புடையது தான் ! அதில் சந்தேகமே இல்லை ! அவரை நகைச்சுவை நடிகர்களுக்கு மட்டும் பின்னணி பாட வைத்து தமிழ்த் திரையுலக இசையமைப்பாளர்கள் அவரது திறமையை நன்றாகப் பயன் படுத்தாமல் விட்டு விட்டார்களோ என்ற ஆதங்கம் எனக்கு உண்டு !
அவர் பாடிய போர்ட்டர் கந்தன் பாடலை நான் பல முறை கேட்டிருக்கிறேன் .
இன்று தான் பார்த்தேன்.
நன்றாக இருந்தது .
உங்களுக்கு எனது நன்றிகள் !
அப்புறம் ஒரு விஷயம் !
T.M.சௌந்தரராஜனும், P.சுசீலாவும் சேர்ந்து பாடிய முதல் பாடல் செல்லப் பிள்ளை படத்தில் உள்ள
'' கோவில் காளை நீ பாப்பா ''
என்று எழுதியிருந்தீர்கள் .
நான் அறிந்த வரை அவர்கள் இருவரும் சேர்ந்து பாடிய முதல் தமிழ் பாட்டு
பெண்ணின் பெருமை
படத்தில் இடம் பெற்ற
'' அழுவதா இல்லை சிரிப்பதா ''
என்ற பாடல் என நினைக்கிறேன் .
http://www.youtube.com/watch?v=_JbAAtuLGJE
கொஞ்சம் தெளிவு பண்ணுங்கள் .
அன்புடன்
PROF.S.S.KANDASAMY
'' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''