http://i61.tinypic.com/zmlgdx.jpg
Printable View
சமீபத்தில், மதுரை மீனாட்சி பாரடைசில் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். திரையுலகின்
"ஒளி விளக்கு " தினசரி 4 காட்சிகள் திரையிடப்பட்டு வெற்றி நடை போட்டது.
அதன் புகைப்படங்கள் திரியில் பதிவிட அனுப்பி உதவிய திரு. எஸ். குமார்.
அவர்களுக்கு நன்றி.
http://i61.tinypic.com/ftq1zq.jpg
ஆர். லோகநாதன்.
http://i58.tinypic.com/2w4fn8o.jpg
27.02.2015 முதல்
கோவை சண்முகா திரை அரங்கில்
நேற்று இன்று நாளை
வெற்றி நடைபோடுகிறது.
இன்று மாலைக்காட்சிக்கு
ஏராளமானவர்கள் வந்திருந்ததாகவும்
பிரிண்ட் நன்றாக இருந்ததாகவும்
திரை அரங்கில் இருந்து தகவல் தெரிவித்தவர்
திரு ஹரிதாஸ் - கோவை.
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
விரைவில் கோவை டிலைட்
திரை அரங்கில்
மக்கள் திலகத்தின் வண்ணக்காவியம்
பட்டிக்காட்டுப்பொன்னையா
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
நண்பர்கள் அனுப்பிய வாட்ஸ் அப் புகைப்படங்கள்
http://i59.tinypic.com/8x6eqd.jpg
திரு.சைலேஷ் பாசு சார், அன்னை தெரசாவும் தலைவரும் எந்த பத்திரிகையால் எந்த ஆண்டு சிறந்த குடிமகன் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்ற விவரம் நினைவில் இல்லை.
திரு.ஜெய்சங்கர் சார் அவர்களும் நேரம் கிடைக்கும்போது பங்கேற்க வேண்டும் என்று தாழ்மையுடன் கோருகிறேன்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்[/color][/quote]
கல்கி வார இதழ் நடத்திய தேர்தலில் இந்தியாவின் தலைசிறந்த மனிதாபிமானி என்று முதலிடத்தை மக்கள் திலகமும் இரண்டாம் இடத்தை அன்னை தெரசா அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இது பற்றிய அட்டைப்படம் மற்றும் கட்டுரையை நமது திரியில் ஏற்கனவே நான் பதிவு செய்திருக்கிறேன்.
கல்கி வார இதழ் நடத்திய தேர்தலில் இந்தியாவின் தலைசிறந்த மனிதாபிமானி என்று முதலிடத்தை மக்கள் திலகமும் இரண்டாம் இடத்தை அன்னை தெரசா அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இது பற்றிய அட்டைப்படம் மற்றும் கட்டுரையை நமது திரியில் ஏற்கனவே நான் பதிவு செய்திருக்கிறேன்.[/quote]
தகவலுக்கு மிக்க நன்றி திரு.ஜெய்சங்கர் சார்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
கல்கி வார இதழ் நடத்திய தேர்தலில் இந்தியாவின் தலைசிறந்த மனிதாபிமானி என்று முதலிடத்தை மக்கள் திலகமும் இரண்டாம் இடத்தை அன்னை தெரசா அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். இது பற்றிய அட்டைப்படம் மற்றும் கட்டுரையை நமது திரியில் ஏற்கனவே நான் பதிவு செய்திருக்கிறேன்.[/QUOTE]
Jaisankar Sir,
Could you post the same details [அட்டைப்படம் மற்றும் கட்டுரையை] again in this thread, please.
இனிய நண்பர் கலைவேந்தன்
வணக்கம் ! நலமறிய அவா !
மார்ச் வரை அலுவல் வேலைகள் மிக மிக அதிக அளவில் உள்ளதால் திரியில் தொடர்ந்து பங்கு கொள்ளமுடியாமல் போகிறது. இது மார்ச் 31 ( financial year end ) வரை இப்படிதான் இருக்கும். விற்பனை பிரிவில் நான் இருப்பதால் target போன்ற விஷயங்கள் சற்று கூடுதலாக செய்யவேண்டிய நிலை.
இன்றுதான் சிறிது நேரம் கிடைத்து உட்கார்ந்து திரியை பார்க்க முடிந்தது..! நீங்கள் எஸ்வி சார் அவர்களிடம் ஒரு கேள்வி எழுப்பியதை படிக்க நேர்ந்தது...
உங்கள் கேள்விக்கெல்லாம் எதற்கு சார் நான் பயப்படவேண்டும் ?
அதுவும் திரிக்கு வராத அளவிற்கு ...? :-d
ஒன்று தவறு செய்தால் பயப்படவேண்டும் ... மடியில் கனம் இல்லாதவனுக்கு வழியில் பயம் எதற்கு ?
என்ன கேட்க நினைத்தீர்களோ கேளுங்கள் !
எனக்கு தெரிந்தால் பதில் சொல்வேன். தெரியவில்லை என்றால் தெரியவில்லை சார் ..விசாரித்து வேண்டுமானால் சொல்கிறேன் என்று கூறபோகிறேன்..அவ்வளவுதானே ?
ஆகையால் நீங்கள் தைரியமாக கேட்க நினைத்ததை கேட்கலாம்.
திரி என்பதே கருத்து பரிமாற்றம், கேள்வி பதில் நிறைந்ததுதானே !
Rks
TODAY 7.00PM WATCH SUNLIFE TV
http://i61.tinypic.com/2aki5ah.jpg
நமது மக்கள் திலகத்தின் மாபெரும் வெற்றிக்காவியம் "பெரிய இடத்து பெண்" சமீபத்தில் மதுரை சென்ட்ரல் அரங்கில் வெற்றிகரமாக ஓடி, ரூபாய் 88,000 வசூலை அள்ளிக் குவித்தது. இந்த சாதனையை தாங்க முடியாத எரிச்சலில், மற்றொரு திரியில், தவறாக திரித்து கூறப் பட்டுள்ளது வருந்த தக்கது.
ஒரு கருப்பு-வெள்ளை வெற்றிக்காவியத்தை (பெரிய இடத்து பெண்) பற்றி குறைவாக மதிப்பிடுவதும், தோல்வி கண்ட வண்ணப்படத்தை (தர்மத்தை தேடும் படம்) பற்றி ஆஹா .... ஒஹோ .... என்று இட்டுகட்டி உண்மைக்கு புறம்பாக எழுதுவதும், ஒரு சிலருக்கு கைவந்த கலைதான்.
திரையரங்க மேலாளர் திரு. பாலமுருகன் அவர்கள் தெரிவித்த புள்ளி விவரங்கள்தான் நமது மக்கள் திலகம் திரியினில் பதிவிடப்பட்டுள்ளது.
சொல்லப்போனால், உண்மையில், "தர்மத்தை தேடும்" அந்த திரைப்படம், நமது நடிகப்பேரரசரின் "பெரிய இடத்து பெண்" வசூலை விட, ரூபாய் 5,000 குறைவாகத்தான் வசூல் செய்தது. அதுவும், அந்த ஞாயிற்றுக் கிழமை, ரசிகர் மன்றம் என்று சொல்லித்திரிந்த, விரல் விட்டு எண்ணக்கூடிய சிலர், 200 டிக்கெட்டுக்களை மொத்தமாக வாங்கி வைத்துக்கொண்டு, இலவசமாக விநியோகித்ததாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து நமக்கு தகவல்கள் கிடைத்தன. இது போன்ற, விவரங்களை நாம் பொதுவாக குறிப்பிட விரும்புவதில்லை. நம்மை, சவாலுக்கு இழுத்தால், இந்த அநாகரீக செயல்களை அம்பலத்துக்கு கொண்டு வர நேரிடுகிறது.
வயெற்றெரிச்சல் படும் கூட்டம் நாங்கள் அல்ல ! ஏன் என்றால், எங்கள் மன்னவனின் திரைகாவியங்கள் வருடம் முழுவதும், 365 நாட்களும், தமிழகத்திரையரங்குகளை முற்றுகையிட்ட வண்ணம் உள்ளன. வசூலில் கலக்கி கொண்டிருப்பதால்தான், திரையரங்க உரிமையாளர்களும், விநியோகஸ்தர்களும், எங்கள் மக்கள் திலகத்தின் திரைக்காவியங்களை திரையிட முன்னுரிமை அளிக்கின்றனர். உங்களுக்குத்தான், ஆடிக்கொருதரம், அமாவாசைக்கொரு தரம். அதற்கே இந்த ஆட்டம்.
எங்கள் எழில் வேந்தன் எம். ஜி. ஆர். திரைக்காவியங்களை கண்டு களித்து, அவர் வலியுறுத்தும், நல்லறிவுரைகளை பின்பற்றி, பாவ விமோச்சனம் பெற்று, அடுத்தவர் மனம் புண்படாமல் பதிவுகளை இடுவது எப்படி என்று கற்றுக்கொள்ளவும் !
பொதுவாக, குடும்பத்தில் உறுப்பினர் அல்லாத ஒருவரை அறிமுகப்படுத்தும் பொழுது, சகோதரர் என்றுதான் கூறுவது வழக்கம். அந்த மாண்பினையொட்டித்தான், நம் புரட்சித்தலைவர் அவர்கள், தனது பக்தர்களையும், ரசிகர்களையும், ரத்தத்தின் ரத்தமான உடன்பிறப்புக்கள் என்று விளித்து மகிழ்வார். ஆனால் மறை திரு. சிவாஜிகணேசன் அவர்கள், தனது ரசிகமணிகளை "பிள்ளைகள்" என்றழைப்பார். அந்த பிள்ளைகள், நமக்கு "கிள்ளைகள்" என்று பட்டத்தை வழங்கி அற்ப சந்தோஷம் அடைகின்றனர்.
இனியாவது, நம்மை வம்புக்கு இழுக்காமல், தங்கள் பதிவுகளை, அந்த பிள்ளைகளில் ஒருவர், தொடர்வார் என்று நம்புவோமாக !
சகோதரர் திரு. கலைவேந்தன் அவர்கள் அறிவது !
நமது புரட்சித்தலைவர் அவர்கள், தொப்பியும், கண்ணாடியும் அணிய காரனாமயிருந்த நிகழ்வுகளை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி !
அந்த "பாய்" சென்னை ஜாம்பஜார் பகுதியை அடுத்த திருவல்லிக்கேணியில், "முப்தி அமீருல்லா சாஹிப்" தெருவில் உள்ள தனது தொப்பி கடையில் வித விதமான தொப்பிகளை தயாரித்து பார்வைக்கு வைத்திருப்பார். எனது இளம் வயதில், 1970களில், அந்த கடை அருகே சென்று, நம் ஒப்பற்ற இதய தெய்வம் மக்கள் திலகத்துக்கென்று தயார் செய்து வைத்திருக்கும், தொப்பிகளை ஏக்கத்துடன் பார்ப்பேன். அந்த தொப்பிக்கு கிடைத்த பாக்கியத்தையும், அதிர்ஷ்டத்தையும், எண்ணி எண்ணி வியப்பேன்.
அந்த "பாய்" தற்போது இல்லை என்று கருதுகிறேன். அவர், ஒரு முறை என்னிடம், இது "நேற்று இன்று நாளை " படத்துக்காக, பொன்மனசெம்மலுக்கு தயார் செய்து வைத்திருக்கும் தொப்பி என்று அப்போதே, படப்பிடிப்பு நடக்கும் முன்பாகவே, கூறியது, இன்றும் என் மனதில் நீக்கமற நிறைந்துள்ளது.