http://i58.tinypic.com/hvqg02.jpg
Printable View
https://www.youtube.com/watch?v=qqEFpc7V4kY
World Telecommunications Day 17/5
Attachment 4145 என்தலைவன்
என்னை மிகவும் கவர்ந்த இடம். நம் எல்லாருமே ரசித்திருப்போம். ஜஸ்டினை அடித்து வீழ்த்தி விட்டு அப்படியே அவர் சென்றிருக்கலாம். ஜஸ்டினை வீழ்த்தியவுடன் அங்கு நடனமாடும் பெண்களும் தலைவரை சூழ்ந்துகொண்டு ‘கங்கிராட்ஸ்’ என்று வாழ்த்தி மகிழ்ச்சியடைவார்கள்.
அதை பெரிதாக எடுத்துக் கொள்ளாத தலைவர், அவர்களைப் பார்த்து ‘please, get some water’ என்று கூறி தண்ணீர் வந்ததும் அதை ஜஸ்டின் முகத்தில் அடித்து அவரை தெளியவைத்து எழ உதவுவார். என்னதான் ஒருவன் தவறு செய்தாலும் அவனை அடித்து வீழ்த்த வேண்டிய நிலை வந்தாலும், அவனை வீழ்த்திய பிறகு அப்படியே சென்று விடாமல் அவன் மீது அக்கறையை வெளிப்படுத்தும் தலைவரின் மனிதாபிமானத்தை வெளிப்படுத்தும் காட்சி இது.
திரைப்படத்துறையில் புகழ்க்கொடி நாட்டியதில் மட்டுமல்ல, அரசியல் உலகில் வெற்றிக் கொடியை பறக்கவிட்டதில் மட்டுமல்ல, மூன்று முறை தமிழகத்தின் ஆட்சி பீடத்தில் அமர்ந்து மாணவர்களுக்கு சத்துணவு வழங்கி பொற்கால ஆட்சியை தந்ததால் மட்டுமல்ல...
எதிரிகளிடமும் கருணை காட்டும் மனிதாபிமானத்திலும் தலைவர் என்றுமே மாண்புமிகு முதல்வர்.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
THANKS KALAIVENTHAN SIR
SUPER FIGHTING SCENE.
https://youtu.be/IpiF0pdhzP8
மக்கள் திலகத்தின் அரச கட்டளை எனக்கு மிகவும் பிடித்த படம் .காஞ்சிபுரம் லக்ஷ்மி திரை அரங்கில் வெளிவந்து 5 வாரங்கள் ஓடியது . முதல் நாள் அரசகட்டளை படப் பெட்டியுடன் எம்ஜிஆர் மன்றங்கள்ஊர்வலம் நடத்தினார்கள் .
மக்கள் திலகத்தின் நடிப்பு , அரசியல் வசனங்கள் , சண்டை காட்சிகள் , பாடல் காட்சிகள் ரசிகர்களை மிகவும் கவர்ந்தது .மக்கள் திலகம் எம்ஜிஆர் வாளுடன் தோன்றும் அட்டகாசமான ஸ்டில் - யாராலும் எண்ணி பார்க்கமுடியாத ஸ்டில் .
முதல் வெளியீட்டில் மதுரை யில் மட்டும் 9 வாரங்கள் ஓடியது . மறு வெளியீட்டில் இந்த படம் பல முறை தமிழகமெங்கும் திரை இடப்பட்டது .அண்ணன் ஆர் .எம் .வீரப்பன் கூறியது போல் எம்ஜிஆர்அவர்களுக்கு தோல்வி படங்களே கிடையாது . தயாரிப்பாளர்களுக்கும் , விநியோகஸ்தர்களுக்கும்லாபம் குறைவாக இருக்கும் .பின்னர் மறு வெளியீடுகளில் வெற்றியின் இலக்கை தொட்டு விடும் .
அதுதான் எம்ஜிஆர் .