Originally Posted by
Govindraj Kpr
1972 ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ம் நாள் புரட்சித் தலைவரை தி மு க விலிருந்து தற்காலிகமாக நீக்கினார்கள் -
14 ம் தேதியன்று நிரந்தரமாகவே {டிஸ்மிஸ் } நீக்கினார்கள் ; புரட்சித் தலைவர் 16 ம் தேதியன்று தனிக்கட்சி தொடங்க முடிவெடுத்தார் ;
17 ம் தேதியன்று அது பற்றி அறிவித்தார் ; 18 ம் தேதியன்று அதிகாரப் பூர்வமாக அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப் பட்டது;
நவம்பர் மாதம் 3 ம் தேதிக்குள் அதாவது எண்ணி பதினைந்தே நாட்களுக்குள் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தமிழகம் முழுவதிலுமிருந்து
6000 கிளைகள் தொடங்கப் பட்டன.--10 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் சேர்க்கப் பட்டனர்--
15 நாள்களில் 10 லட்சம் உறுப்பினர்களை சேர்த்த சாதனையை உலகில் எந்த ஒரு அரசியல் அதற்கு முன்னர் சாதித்ததேயில்லை ;-
1949 ல் தொடங்கப் பட்ட தி மு க விற்கு 23 ஆண்டுகளுக்குப் பின்னர் --அதாவது 1972 ல் தான் -18000 கிளைகளும் , 15 லட்சம் உறுப்பினர்களும்
இருப்பதாக தி மு க தலைவர் கருணாநிதி அவர்களே அந்த சமயத்தில் ஒப்புக் கொண்டார் -
அதனோடு ஒப்பிட்டுப் பார்த்தால் 15 நாள்களில் 10 லட்சம் உறுப்பினர்களையும் 6000 கிளைகளையும் உருவாக்கியது எவ்வளவு பெரிய
சாதனை என்பதை புரிந்து கொள்ளலாம்-
சரித்திர நாயகர் புரட்சித் தலைவரின் சாதனை இது என்றே கூற வேண்டும் -
அதுபோல் ரசிகர் மன்ற தோழர்களின் உறுதியான உழைப்புடன் ஆட்சி பிடித்த சாதனைக்கு சொந்தக்காரரும் புரட்சித் தலைவர் ஒருவரே.