https://www.facebook.com/10002811663...FecXTGA4PwvQAy....... Thanks...
Printable View
https://www.facebook.com/10002811663...FecXTGA4PwvQAy....... Thanks...
https://www.facebook.com/groups/ROSA...sfnsn=scwsppmo......... Thanks...
எழுத்தாளர் மாலனின் வலைப்பூ
தொப்பியும் இல்லாமல், கண்ணாடியும் அணியாமல் என் முன்னே உட்கார்ந்திருந்தார் எம்.ஜி.ஆர். ஒரு நாள் முழுக்க அவரோடு இருந்து அவரது அசைவுகளை எழுதுவதற்காக நான் அவர் அறையில் அமர்ந்திருந்தேன்.காலையில் எழுந்து பல்துலக்கியதுமே ராமாவரம தோட்டத்திற்குப் போய் அவரோடு அவருடைய காரிலேயே கோட்டைக்கும் போய்விட்டு மதியச் சாப்பாட்டிற்கு திநகர் ஆற்காடு (முதலியார்) வீதிக்குத் திரும்பியிருந்தோம். எம்ஜிஆர் சாப்பிடத் தனது அறைக்குப் போனார். எங்களுக்குக் கீழே சாப்பாடு ஏற்பாடாகியிருந்தது.
அவரது ஆற்காடு முதலி வீட்டில் (இப்போது நினைவகம் இருக்கிறது) அவர் இருந்த காலத்தில், தினம் மதியம் 100 பேராவது சாப்பிடுவார்கள்.அது சாப்பாடு இல்லை. விருந்து. ராமவரத்திலும் காலையில் ஒரு 50 60 பேராவது சாப்பிடுவார்கள்.பகல் 12 மணியிலிருந்து மதியம் இரண்டு இரண்டரை மணி வரைக்கும் யாரைப்பார்த்தாலும், அலுவலக உதவியாளர்கள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், சந்திக்க வருகிற பார்வையாளர்கள், லி·ப்ட் இயக்குநர். கார் டிரைவர், என யாரைப் பார்த்தாலும் 'சாப்பீட்டீங்களா?' என்பதுதான் அவரது முதல் கேள்வியாக இருக்கும்.
சாப்பிட்டுவிட்டு மேல அவரது அறைக்கு வந்த என்னைப் பார்த்து "சாப்டீங்களா?" என்றார். "ஆச்சு" " என்ன சாப்டீங்க? சைவமா அசைவமா?" என்று கேட்டு "ஓ! நீங்க அசைவம் சாப்பிட மாட்டீங்கல்ல?" என்று அவரே பதிலும் சொல்லிக் கொண்டார். என்ன மெனு என்று சொல்லச் சொன்னார். ஏதாவது ஒன்றிரண்டை விட்டு விட்டேனோ என்னவோ, வெடுக் என்று கையைப் பறித்து உள்ளங்கையை முகர்ந்து பார்த்தார். "ஸ்வீட் சாப்டீங்களா? என்ன ஸ்வீட்?" என்றார். எங்களுக்கு அன்று ஸ்வீட் பரிமாறப்படவில்லை. நாங்களும் அதைப் பொருட்படுத்தவில்லை. சாப்பிடுவதற்கா போயிருக்கிறோம்? கோட்டையிலிருந்து திரும்பும் போதே இரண்டு மணி இருக்கும். அதற்குள் பல பந்திகள் முடிந்திருந்தன. ஸ்வீட் தீர்ந்து போயிருக்கலாம். எங்கள் மெளனத்தைப் பார்த்துவிட்டு காலின் கீழ் இருந்த அழைப்பு மணியை அழுத்தினார். அவர் அதற்கான விசையை அங்கேதான் வைத்திருந்தார். உதவியாளர் வந்தார்." "இவங்களுக்கு சாப்பாட்ல ஸ்வீட் போட்டீங்களா?" என்றார். உதவியாளர் எங்கள் முகத்தைப் பார்த்தார். 'போட்டுக் கொடுத்திட்டீங்களா? பாவிகளா?" என்பது போல இருந்தது அவர் பார்வை. மெளனமாக இருந்தார். ஒரு நிமிடத்தில் எம்.ஜி.ஆரின் முகம் சிவந்து விட்டது,
"இப்படித்தான் தினமும் இங்கே நடக்குதா?" என்று இறைந்தார். "எத்தனை நாளா இப்படி நடக்குது/" என்றார் மறுபடியும். உதவியாளர் ஸ்வீட் தீர்ந்து போன நிலையை விளக்க முயன்றார்." அதெல்லாம் எனக்குத் தெரியாது. இப்ப இவங்களுக்கு ஸ்வீட் வரணும் என்றார். சிறிது நேரத்தில் ஒரு பெரிய தூக்குவாளி நிறைய ஒரு லிட்டர் பாசந்தி வந்தது. அதை அப்போதே நாங்கள் சாப்பிட்டாக வேண்டும் என வற்புறுத்தினார்.
ஏன் சாப்பாடு சாப்பாடு என வற்புறுத்திக் கொண்டே இருக்கிறார் என்று எனக்குள் ஒரு கேள்வி. அவருடைய சத்துணவுத் திட்டத்தைப் பற்றிப் பேச இதுதான் சந்தர்ப்பம் என்று எனக்குத் தோன்றியது. அந்த திட்டம் பற்றிய விமர்சனங்களை வீச ஆரம்பித்தேன்." மக்களுடைய வரிப்பணத்தை எடுத்து இப்படிச் சோறு போட செலவழிக்க வேண்டுமா? தொழிற்சாலைகள் நிறுவி, மக்களுக்கு வேலை கொடுத்தால் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குச் சோறு போட மாட்
டார்களா?" என்று என் கேள்வியை ஆரம்பித்தேன்.
அதற்கு பதிலாக அவர் தனது இளமைக்கால சம்பவம் ஒன்றை விவரிக்க ஆரம்பித்தார்." அப்போது நான் பாய்ஸ் கம்பெனியில் நடிச்சிக்கிட்டு இருக்கேன். பாய்ஸ் கம்பனினா என்னனு தெரியுமா உங்களுக்கு? (பாய்ஸ் கம்பெனி என்பது ஒரு குழுவாகத் தொழில் முறை நடிகர்களை வைத்து நாடகம் போடும் நிறுவனங்கள். அதில் சிறுவர்கள் நிறைய இருப்பார்கள். வறுமையின் காரணமாகவும், கலை ஆர்வம் காரணமாகவும் வந்து சேரும் சிறுவர்கள். எல்லோரும் ஒன்றாகத் தங்கி, ஒன்றாக உண்டு, ஊர் ஊராகப் போய் நாடகம் போடுவார்கள். சிறுவர்களுக்குப் பயிற்சி அளிக்க வாத்தியார்களும் இருப்பார்கள்) குரல் உடையற வயசு. அந்த வயசில இருக்கிறவனுக்குப் பாடம் கொடுக்க மாட்டாங்க. பாட முடியாதில்ல?. வேஷம் இல்லாதவனுக்கு கம்பெனியில மரியாதை கிடையாது. ஆசிரியர்கள் வேண்டாத மாணவர்களைப் பழி தீர்த்துக் கொள்ள்வதும் அப்போதுதான். வாழ்க்கை பெரிய நரகமாக ஆகிவிடும். ஒரு நாளைக்கு சாப்பிட உட்கார்திருக்கோம். நல்ல பசி. இலை போட்டாச்சு. காயும் ஊறுகாயும் வைச்சுட்டுப் போயிருக்காங்க. சோறு வந்துகிட்டே இருக்கு. என்னை பிடிக்காத வாத்தியார் ஒருத்தர் நான் சாப்பிட உட்கார்ந்திருக்கிறதைப் பார்த்தாரு. வேகமாக கிட்ட வந்தாரு. ' ஏண்டா உங்களுக்கெல்லாம் முதப் பந்தி கேட்ட்குதா?'னு கையைப் பிடிச்சு எழுப்பிவிட்டார். கையிலசோறு எடுத்து வாயில போடப்போற நேரத்தில எழுப்பிவிட்டா எப்படி இருக்கும்? ஆனா அந்த நேரத்தில எனக்கு பசியைவிட அவமானம்தான் அதிகமாக இருந்தது. 'அவரை எதிர்த்து யாரும் சண்டை போட முடியாது, கேள்வி கேட்க முடியாது, தன் கிட்ட அதிகாரம் இருக்குனு தானே எழுப்பிவிடறாரு?எனக்கு என்னிக்காவது அதிகாரம் வந்தா நாலு பேருக்குச் சோறு போடுவேன், எவன் சோத்தையும் பறிக்க மாட்டேன்'னு அன்னிக்கு நினைச்சேன். இன்னிக்கு எல்லோரும் என்னை வாத்தியார் வாத்தியார்னு கூப்பிடும் போது எனக்கு அவங்களுக்கு சோறு போடற கடமை இருக்குகிற நினைப்பு வருது. அடுத்த வேளைச் சோற்றுக்கு உத்திரவாதம் இருக்கிறவங்க ஏழைகள் சோற்றைப் பற்றி என்ன வேணா கேள்வி கேட்கலாம். எனக்கு அதைப் பற்றி கவலை இல்லீங்க."
இதைச் சொல்லும் போது அவர் குரல் கனமேறிக் கரகரத்தது.
புத்தகங்களில் உள்ள பொருளாதாரத் தத்துவங்களால் விளக்க முடியாததாக இருந்ததுஅவரது சத்துணவுத் திட்டம். ஆனால் இன்று பின்னோகிப் பார்க்கும் போது ஆரம்பக் கல்வி நிலையங்களில் உள்ள மாணவர்கள் படிப்பைப்
பாதியில் நிறுத்திவிட்டு விலகும் விகிதம் (dropout rate) இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் குறைவு. The National University of Educational Planning and Administration (NUEPA) என்ற நிறுவனம் பள்ளிகளைப் பற்றித் தயாரித்த ரிப்போர்ட் கார்டின் படி தமிழ்நாட்டில் Retention rate 100%. Common Man's logic என்ற ஒன்று இருக்கத்தான் செய்கிறது. அது தத்துவங்களுக்கு அப்பாற்பட்டது .....!.......... Thanks...
இவர் கண்ட இயக்கம் வெற்றி பெற்றத்துக்கு கண்டும் காணாதது போல இருந்த அத்துணை எம்ஜியார் போலிகளுக்கும் நன்றி நன்றி...கேட்டா. அம்மா பிடிக்காது என்பார்...ஏதோ இவர்கள் ஆதி காலத்தில் கிணறு வெட்டியது போல் ரசீது எங்கே படம் எங்கே என்றால் இதோ இருக்கு எங்களிடம் எம்ஜியார் படம் என்பார். நான் பார்த்தால் பைத்தியக்காரன். உங்க பாட்டானுக்கும் வைத்தியம் பார்ப்பேன்
எம்ஜியார் அவர்களை 1972 முதல் 1987 வரை உங்களுக்கு பிடித்து இருக்கும் அல்லவா எங்கே ஆதாரம் காட்டு.
சரி அதை விடு எல்லோரும் அரசியல் சார்ந்து இருக்க முடியாது.. ஒரு இடத்தில் ஆவது அவர் நிழல் பட்ட அடையாளம் கூடவா இல்லை... அப்போ
அதைத்தான் கேட்டு குமுறும் எம்ஜியார் பக்தர்கள்... வேண்டாம் விடு...இப்ப ஏன் அவர் கண்ட இயக்கத்தை விமர்சிக்கிறாய்...உங்களுக்கு அந்த உரிமை இருக்கா...
எல்லாம் பிடித்தா நடந்து கொண்டு இருக்கு...அவருக்காக வண்டி ஓடிக்கொண்டு இருக்கு.. இன்னும் ஓடும்...ஏதோ சின்ன பிள்ளை தனமா இருக்கே...உங்கள் நிலை...
ஆதரிக்கும் மனம் இல்லை.. எதிர்த்து நிற்க கூட்டம் கூட்ட நேரம் காலம் இருக்கு.
நடக்கட்டும் பலிக்காது உங்கள் எண்ணம்.
நன்றி
வாழ்க எம்ஜியார் புகழ். திரையிலும்...அரசியல் துறையிலும்....நன்றி........... Thanks...
சன் டி.வி.யில் இன்றைய பட்டிமன்ற நிகழ்ச்சி , திரைப்படம் வெற்றி அடைவது பாடல்களினாலா* அல்லது கதையினாலா .----------------------------------------------------------------------------------------------------------------------------
நிகழ்ச்சியில் கவிஞர் பா.விஜய்* பேசியதாவது :
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நடித்த பாடல்களை பல கவிஞர்கள் எழுதியுள்ளனர்.குறிப்பாக , பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், கருத்தாழமிக்க பாடல்களை எழுதி* தானும் புகழ் பெற்று, எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் புகழும், பெருமையும் சேர்த்தார் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. எம்.ஜி.ஆர். அவர்கள் முதல்வரான பின்பு அளித்த பேட்டியில் ( உண்மை சம்பவம் ) நான் அமரபோகும் முதல்வர் நாற்காலிக்கு நான்கு கால்கள் என்றால் நிச்சயமாக ஒரு கால் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் அவர்களையே சாரும் என நன்றி பாராட்டினார். அந்த வகையில் ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு பாடல்கள் பெரிதும் உதவின .
நடுவரான திரு. சாலமன் பாப்பையா , பேரறிஞர் அண்ணாவின் வேலைக்காரி திரைப்படத்தை 10 முறைக்கு மேல் பார்த்ததாகவும், தனக்கு மிகவும் பிடித்த பாடல் படகோட்டி படத்தின் , தரைமேல் பிறக்க வைத்தான் என்பதுதான் என்றும், எத்தனை முறை கேட்டாலும் சலிப்பு ஏற்படுவதில்லை என்று குறிப்பிட்டார் .
https://youtu.be/UwiB7X2VOiQ... Thanks......
இன்று 27-10-1962 -27-10-2019 57 ஆண்டுகள் நிறைவடைந்து... 58 ம் வருடம் தொடக்கம்... கலையுலக வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் "விக்கிரமாதித்தன்" காவியம் வெளியான திருநாள்... முதல் வெளியீடு... பின்பு மறு வெளியீடுகளிலும் பட்டையை கிளப்பிய வசூல் திலகம்...
சார் நீங்கள் தினகரன் வெள்ளி மலரில் வந்த
பந்துலு ஏன் அணி மாறினார் என்ற செய்தியை எடுத்துப் போட உடனே கனடாவில் உள்ள சிங்கம் உடனடி குதூகலம் கொண்டு நன்றி நன்றி உண்மையை சொன்னதற்கு என்று கண்கள் பனிக்க சொல்லி விட்டு அடைப்புக் குறிக்குள் உண்மை என்றும் உறங்காது அது என்றேனும் ஒரு நாள் வெளியில் வரும் என்றும் உணர்ச்சி வசப்
பட்டிருக்கிறது பெரிய
உண்மையின் வடிவம்
சத்தியத்தின் மைந்தன்
ஒன்றை மறந்து விட்டார்
இந்த செய்தி ஒரு பொது ஜனப் பத்திரிக்கையில் வெளியான ஒரு செய்தி
அதை திரு. லோகநாதன் சார் எடுத்துப் போட்டார்கள்
அவ்வளவுதான் அவராக
எழுதவில்லை
அந்த பத்திரிக்கையில்
எழுதும் போது நடந்த எல்லாவற்றையும் எழுதுவார்களா? பந்துலு
கர்ணன் படத்தினால் மீளவே முடியாத கடன்
தொல்லைக்கு ஆளானது உண்மை அது மட்டுமல்ல இந்த பிரச்சினை நீறு பூத்த
நெருப்பாக மாறி அதனால் இருவருக்குள்ளும் முட்டல் மோதல் ஆகி
சம்பளப் பிரச்சினையை
காரணம் காட்டி கோர்ட்
நடவடிக்கை எடுக்கப்
போவதாக கணேசன்
கூறியதும் உண்மை இந்த சமாச்சாரங்கள்
எல்லாம் அன்றைய பத்திரிக்கைகளில் வந்ததும் உண்மை கதை வசன கர்த்தா திரு.சண்முகம் அவர்கள்
இதே கர்ணன் படத்துக்கு பந்துலு அவர்களின் உதவியாளராக இருந்தாரா இல்லையா
என்பது இந்த உண்மை
விளம்பிக்கு தெரியுமா?
அதான் தினசரி மெனக்கெட்டு உட்கார்ந்து ஏதாவது ஒரு பொய்யை அவிழ்த்து விடும் இந்த
சத்திய மைந்தனுக்கு
எப்படி தெரியாமல் போனது? சரி எல்லாம்
போகட்டும் இந்த பந்துலு விவகாரத்தை கொஞ்ச நாட்களுக்கு முன்பு இதற்கு முந்தைய
திரிகளில் நம் அன்பர்கள் எழுதிய போது இந்த பாரி, ஓரி, அதியமான் , சிபி சக்கரவர்த்தி வரிசையில் வந்த நடிகரின் ரசிக குஞ்சுகள் விட்டேனா பார் என்று எப்படியெல்லாம் துள்ளிக் குதித்தார்கள்
என்ன என்ன இல்லாத பொய் கதைகளை எல்லாம் அவிழ்த்து விட்டார்கள் என்பது மறந்து போச்சா என்ன?
என்னவோ பந்துலு தலைவரை வைத்து படம் எடுத்தால் மட்டுமே
தலைவர் கஞ்சி குடிக்க முடியும் என்பது போல
தலைவர் வீட்டில் வைத்து பந்துலுவை சிவாசியிடம் இருந்து பிரிக்க சதித் திட்டம் தீட்டப் பட்டது என்றும்
திருமதி. எம். வி. ராஜம்மா என்ற குணச் சித்திர நடிகை மூலம் முயற்சிகள் செய்து கடைசியில் பந்துலுவை
சிவாசியிடம் இருந்து பிரித்து விட்டார் என்று
எழுதியதெல்லாம் கிணற்றுக்குள்ளே போய் விட்டதோ?
உடனே குதித்துக் கொண்டு எம். வி. ராஜம்மா யார் என்று
கேட்டு விடப் போகிறார்
பழைய கதைகள் தெரியாவிட்டால் சென்னை வரும்போது
கன்னிமராவோ அல்லது வேறு பழைய நூலகங்களில் சென்று
1964, 1965 ஆம் வருட பழைய செய்தித் தாள்களைப் படிக்கச்
சொல்லுங்கள்
பின் குறிப்பு: லயோலா கல்லூரியில் பழைய நூலகம் இருக்கும் என்று நினைக்கிறேன்
எதுக்கும் தேடிப் பார்க்கச் சொல்லுங்கள்! ........... Thanks.........
சுகாராம் சார், வணக்கம் ... தொடர்ந்து தவறான விபரங்களை பதிவிடுவதிலே குறியாக இருக்கும் இவர்களை என்ன செய்ய?
கௌரவம் படம் குவைத்
நாட்டில் முதன் முதலில்
திரையிடப் பட்ட தமிழ் படமாம் இவர்கள் போய்
பார்த்திருக்கிறார்கள்
1980 க்கு பிறகுதான் இந்தியர்கள் அங்கு போக ஆரம்பித்தார்கள்
அதுவும் முதலில் போனது மலையாளிகள்
இப்படி இருக்க 1975 ம் வருடம் படம் திரையிடப் பட்டதாக பதிவு ஒரு வேளை 1960 இல் எகிப்தில் நடந்த ஆசிய ஆப்பிரிக்க பட விழா மாதிரி குவைத்திலும் நடந்தது போல
பரவாயில்லை படம் திரையிடப்பட்ட போது
நெரிசலை சமாளிக்க முடியாமல் 6 பேர் பலி
மற்றும் ஒட்டகப் படையை கொண்டு வந்து கூட்டத்தை சமாளித்தார்கள் என்று
எழுதாமல் போனது உத்தமம்.
கஷ்டம்!.......... Thanks...
நேற்று தலைவர் காவியங்கள் மதுரை, கோவை, தூத்துக்குடி இடங்களில் வசூல் சூப்பர் என தகவல்கள்... மன்னன் மார்ந்தாண்டன் 100000.00 (ஒரு லட்சம்) ரூபாயை தாண்டியதாக தகவல்...
https://youtu.be/N0P1Tbm3A7g.......... Thanks.........
மதுரை சென்ட்ரல் DTS., சினிமாவில் வெளியான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின்
"நாடோடி மன்னன்" காவியங்களின் திலகம்... முதல் மூன்று நாட்களில் ரூ.1,00,000/- மேல் வசூல் ஈட்டி அசுர சாதனை...... இதுவரை வெளியான அனைத்து பழைய படங்களின் வசூலை முறியடித்து சாதனை, சரித்திரம் ,சகாப்தம், படைத்துள்ளது............. Thanks mr.Loganathan...
தகவல் உதவி மதுரை நண்பர் திரு.எஸ். குமார் ...
தூத்துக்குடி சத்யா அரங்கில் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரின் நினைத்ததை மு டிப்பவன் ஞாயிறு (27/10/2019) மாலை காட்சி அரங்கு நிறைந்தது ..........என்று நெல்லை நண்பர் திரு.ராஜா .......தெரிவித்தார் ....... Thanks...
இந்தவருடம் தீபாவளி மதுரை சென்ட்ரல்சினிமா டி.டி.எஸ் புரட்சித்தலைவர் நடித்த நாடோடிமன்னன் சென்னை சரவணா பொன்மனச்செம்மல் எம்ஜிஆர் அவர்களின் நினைத்ததைமுடிப்பவன் கோவை சண்முகா. கலைக்கடவுள் எம்ஜிஆர் அவர்களின் ஆயிரத்தில்ஒருவன் கோவை.டிலைட் மக்கள்திலகம் எம்ஜிஆர் அவர்களின் ரிக்சாக்காரன் தூத்துக்குடி சத்யா மணிதமகான் எம்ஜிஆர் அவர்களின் நினைத்ததைமுடிப்பவன் திரையிட்ட திரையரங்க உரிமையாளர்கள் திரைப்பட விநியோகஸ்தர்கள் கண்டுமகிழும் அனைத்து ரசிகப் பெருமக்களுக்கும் மதுரை மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்றம் சார்பில் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள் மதுரை.எஸ் குமார்......... Thanks...
https://m.facebook.com/groups/305988...wqHQO7MTIQjHAs........... Thanks.........
எங்க வீட்டு பிள்ளை வெள்ளி விழா
அன்றைய தமிழக முதல்வரிடம் மக்கள் திலகம் பரிசு பெறும் காட்சி
மக்கள் திலகத்தின் அரசியல் நாகரீகம் பற்றிய ஒரு தகவல் .
மக்கள் திலகம் அமெரிக்காவிலிருந்து தமிழகம் திரும்பியபின்னர் அவரை சந்திக்க முன்னாள் தமிழக முதல்வரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான திரு பக்தவச்சலம் அனுமதி கேட்டிருந்தார். இந்த செய்தியினை அறிந்தவுடன் மக்கள் திலகம் உடனடியாக தானே வந்து அவரை சந்திப்பதாக கூறி உடனே சென்று திரு பக்தவச்சலம் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் .
மக்கள் திலகம் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையிலும் அரசியல் நாகரீகத்தை கடை பிடித்த விதம்
வியக்க வைக்கிறது . ......... Thanks...
இன்றும் திங்கள்கிழமை ரசிகர்கள் கூட்டத்தில் நாடாண்ட மன்னவன் எம்.ஜி.ஆர்., அவர்களின் "நாடோடி மன்னன்", மகத்தானவெற்றி மகிழ்ச்சியில் மதுரை எஸ் குமார்........ Thanks...
நானும் எனது புதல்வரும் கோவை சண்முகா
திரையரங்கம் சென்று ஆயிரத்தில் ஒருவன்
காவியத்தை (மதியக்காட்சி)
கண்டு மகிழ்ந்தோம். அப்பொழுது எடுத்த
சில படங்கள் -
https://i.postimg.cc/G22MdYXy/IMG-4145.jpg
https://youtu.be/_ZzxWtdWvxg.......... Thanks...
https://youtu.be/jAoCsL6g96c......... Thanks...
https://youtu.be/bp_unnrnvzE......... Thanks...
நடிகர் விஜய் நடித்த "பிகில்"படத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களின் பாடலான "என்னதான் நடக்கும் நடக்கட்டுமே",விஜய் காரில் பயணம் செய்யும் போது இடைவிடாமல் ஒலிக்கின்றது.தொடர்ந்து ஒரு சண்டை காட்சியின் போது ,அதே பாடலை தன் வாயால் பாடுகிறார். இடையில் நமது தலைவரின் ஸ்டில் (தர்மம் தலை காக்கும்)சில நொடிகள்
காண்பிக்கப்படுகிறது........... Thanks...
https://youtu.be/pA-ji5PhOFs........... Thanks...
https://youtu.be/FrnfoqC6VrA......... Thanks...
சாண்டோ M M A சின்னப்பர் தேவர் வாழ்வில் நமது தெய்வம் பாகம் 32.
18, 2. 1966. அன்று தான் முகராசி படம் வெளிவந்து வெற்றி வாகை சூடியது.
13, நாட்களில் எடுக்கப்பட்டு 100 நாட்கள் மேல் ஒடிய வசூல் சாதனையை எட்டியது. .
படத்தின் பூஜையில் கலந்துக்கொண்ட சின்னப்பர் தேவர் அதன் பிறகு உடல் நிலை சரியில்லை என்பதால் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. ,தான் நடிக்க வேண்டிய காட்சிகளில் மட்டும் நடித்து விட்டு ஒய்வு எடுத்துக்கொணாடார். முமு படப்பிடிப்பும் வாத்தியாரே அருகே இருந்து .இயக்குனராக படபிடிப்பு நடத்தினார்.படத்தின் எடிட்டிங் வாத்தியார் தான் கவனித்தார். சிறிது ஓய்வு இல்லாமல் இரவும் பகலும் அயராது உழைத்து படம் முமுவதும் எடுத்து முடித்தார். .இன்னும் சொல்லனும் என்றால் படத்தில் அனைத்து தொழில் நுட்பமும் வாத்தியார்தான் கவனித்தார். இதில் என்ன வேடிக்கை என்றால் வாத்தியார்க்கும் உடல் நிலை சரியில்லை சூழ்நிலையிலும் முமு படத்தையும் எடுத்து முடித்தார். .உண்மையான உழைப்பு ஒரு நாளும் வீண் போகாது. .அதன் பலன் வெற்றியைத்தான் கொடுக்கும் என்பதற்கு இப்படம் ஒர் உதாரணம் ஆகும். ..
ஜெயலலிதா பொம்மை மாத இதழில் கொடுத்த பேட்டியில்..இது வரை நான் நடித்த படங்களிலேயே அதிக அளவில் கஷ்டப்பட்டு உழைத்தது. முகராசி படத்துக்குதான்.அந்த படத்திற்காக இரவும் பகலும் அயராது உழைத்தேன். என்னைவிட எம் ஜி ஆர் அவர்கள் அனைத்து வேலைகளையும் தன் வேலையை என எண்ணி உழைத்த உழைப்புக்கு ஈடு இணை எதுவும் இல்லை. தனது சொந்த படத்துக்காக கூட ஓய்வு இல்லாமல் உழைத்திருக்க மாட்டார். .அவர் நடிக்கும் ஒவ்வொரு திரைப்படமும் தனது சொந்த படமாக நினைத்துத்தான் உழைக்கிறார். என்பதை முகராசி படபிடிப்பில்தான் கண்டேன்.எத்தனையோ சூழ்நிலைகளுக்கு மத்தியில் இதை செய்கிறார் என்றால் மிகவும் ஆச்சரியமான விஷயம் ஆகும். . அவரை வாத்தியார் என்று அழைக்கப்பட்ட காரணம். முகராசி படபிடிப்பில்தான் கண்டேன். .அனைத்து தொழிலுக்கும் ஒரு வாத்தியாரா இருந்து கற்றுக்கொடுக்கிறார். படத்தில் எனக்கும் அவர்தான் வாத்தியாரா இருந்து கற்றுக் கொடுப்பார். .எல்லா மனிதர்களுக்கும் எல்லாம் பட்டமும் பொருந்தாது. ஆனால் எம் ஜி ஆர் ஒருவர்தான் அனைத்து பட்டங்களுக்கும் பொருத்தமாக வாழ்ந்தார். பொருந்தியது. இது வேறு யாரிடமும் காண முடியாத அதிசயம் ஆகும். என்று பேட்டியில் கூறியுள்ளார். ..
ஜெமினி கணேசன் வாத்தியாருடன் நடித்த ஒரே திரைப்படமாகும். .நடிகை ஜெயந்தி வாத்தியாருடன் நடித்த இரண்டாவது படம் ஜெயலலிதா வாத்தியாருடன் தேவர் பிலிம்ஸ் சார்பில் 6 படங்களில் நடித்தார் அதில் 100 நாட்கள் மேல் ஒடிய ஒரே திரைப்படம் இதுதான். இப்படத்தின் வசூலும் வெற்றியும் சின்னப்பர் தேவர் மகிழ்ச்சியில் பூரிப்படைந்தார். .வாத்தியாரை மனித வடிவில் முருக கடவுளாக கண்டார். அதற்காக வாத்தியாரை வேடத்தில் காண ஆசைப்பட்டார். தனது ஆசையை தனது அடுத்த படத்தில் நிறைவேற்ற வேண்டும் என்று உறுதியாக இருந்தார்............ Thanks.........
https://m.facebook.com/groups/166654...Z8PikHFV4NTulx........... Thanks..........
27 ஆயிரம் பதிவுகளை கடந்து புரட்சித் தலைவர் புகழ் பாடி சாதனை செய்திருக்கும் நண்பர் திரு.லோகநாதன் அவர்களுக்கு வாழ்த்துகள்.
தொடர்ந்து நீங்கள் புரட்சித் தலைவர் புகழைப் பரப்ப தொண்டாற்றவும் வாழ்த்துக்கள்.