பராசக்தியின் குணசேகரன்.
http://tattoosonmybrain.files.wordpr...parasakthi.jpg
பாசமலரின் ராஜசேகரன்.
http://i1087.photobucket.com/albums/...tgyhujikol.jpg
பராசக்தியின் குணசேகரன்.
http://tattoosonmybrain.files.wordpr...parasakthi.jpg
பாசமலரின் ராஜசேகரன்.
http://i1087.photobucket.com/albums/...tgyhujikol.jpg
V.raghavendran sir
nadigar thilagam movies in your alphapet.
V.etrikku oruvan
r.aman eththani ramanadi
a.nbu
g.owravam
h.arichandra
a.npalippu
v.amsavilakku
e.thiroli
n.eethi
d.harmam enge
raththa thilagam
annai illam
n.an vazhavaippen
டியர் வாசுதேவன் சார்,
சூப்பர்... பாசமலரின் வாசம் தங்களை எப்படி நம்மை இழுக்கிறது பாருங்கள்... அதுவும் குணசேகரனையும் ராஜசேகரனையும் போட்டு landmark எது என்பதை சுட்டிக் காட்டி விட்டீர்கள்.. நம்மிடையே பாச மலர்களின் நடுவே சில காகித மலர்களும் செயற்கையான நறுமணம் வீச முயல்கின்றன. அடையாளம் கண்டு கொண்டால் அவற்றை முற்றிலும் ஒதுக்கித் தள்ளி விட்டு, நடிகர் திலகத்தின் மேல் உண்மையான பாசத்தை நாம் புரிந்து கொள்ளலாம், உணர்ந்து கொள்ளலாம். இந்தக் கருத்தை அருமையாக விளக்கும் வகையில் தங்களுடைய பாச மலர் பதிவுகள் .... அதுவும் கண்களை ஒத்திக் கொள்ளும் தெள்ளத் தெளிவான நிழற்படங்கள் ... அருமை... தொடருங்கள் சார்...
அன்புடன்
டியர் விநோத் சார்,
தங்களுடைய அன்பு நெகிழ்வை ஊட்டுகிறது. அடியேனின் பெயரில் நடிகர் திலகத்தின் படங்களின் பெயர்களை பட்டியலிட்டு அசத்தி விட்டீர்கள். பதிலுக்கு நானும் சும்மா விட்டு விடுவேனா ... இதோ உங்கள் பெயரின் எழுத்துக்களில் எம்.ஜி.ஆர் .படங்களின் பெயர்கள்
s – sirithu vazha vendum
v – vikramadithan
i – indru pol endrum vazhga
n – nadodi mannan
o – oru thaai makkal
d – dharmam thalai kaakkum
k – kanchi thalaivan
u – urimai kural
m – mannadhi mannan
a – arasa kattalai
r - rickshakaran
Dear Vasudevan Sir,
Pasamalar Photos, Scenes & Ads are very nice and simply superb.
டியர் வாசு சார்,
பாசமலர் பதிவுகளுடன் வந்துள்ள தங்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த நன்றிகள்
மனம் முழுவதும் அளவிடமுடியாத சோகம் நிரம்பியிருந்தாலும் இவ்வளவு வெளிப்படையா சிரிக்கிறார் பாருங்கள் (at 3.32 , at 4.26 ). மற்றவர்களால் நினைத்துப் பார்க்கவே முடியாத ஒரு காரியம்.
கழியை பிடித்துக்கொண்டு கடவுளை விமர்சித்து முடிக்கையில் கழியோடு முகம் பாதிக்கும் இடங்கள். ஒவ்வொரு நொடிக்கும் பத்து முகபாவனைகள். நடிப்புக் கடவுள் என்பதில் துளி சந்தேகமேயில்லை.
http://www.youtube.com/watch?v=zNE0LicphLM
இப்பொது சமீப காலமாக ஒரு அருமையான திரைப்படத்தின் 25வது ஆண்டினைப் பற்றிய நினைவூட்டல் எதிர்பாராத கோணத்தில் பயணித்து தயாரிப்பாளருக்கும் கலைஞர்களுக்கும் இருந்திருக்கக் கூடிய அல்லது இருக்கக் கூடிய இடைவெளியினை வெளிப்படுத்துவதாக அமைந்து உள்ளது நல்ல சினிமாவை நேசிக்கும் ரசிகர்களுக்கு வருத்தமாயுள்ளது. இதை கூறக் காரணம், தயாரிப்பாளர்களிடம் முன் கூட்டியே விவாதித்து விட்டு முடிந்த வரை திட்டமிட்டு படமெடுக்க ஒத்துழைத்த நடிகர் திலகம் நினைவுக்கு வருவது தான். தமிழ் திரையுலகில் நாயகன் நிச்சயம் ஒரு சிறந்த படம். அதற்காக பல கஷ்டங்களை சந்தித்து அவற்றையெல்லாம் எதிர் கொண்டு படத்தை வெளிக் கொண்டு வந்த கமல் அவர்களும் மணிரத்தினம் அவர்களும், மற்றும் இன்றளவும் அந்தப் படம் பேசப் பட பெரும் துணையாக இருக்கும் இசையைத் தந்த இளையராஜா அவர்களும் என்றென்றும் பாராட்டத் தக்கவர்கள். அதில் சந்தேகமே இல்லை.
ஆனால் இந்தப் பேட்டியில் வெளிவந்துள்ள ஒரு வார்த்தை தான் நமக்கு புரியவில்லை.
School என்கிற வார்த்தை யாரைக் குறிக்கிறது. அல்லது எந்த வர்க்கத்தைக் குறிக்கிறது. அல்லது எந்த குழுவைக் குறிக்கிறது ... இந்த ஒரு வார்த்தை தான் நமக்கு சற்று புரியமாட்டேன் என்கிறது. காரணம் முக்தா ஸ்ரீநிவாசன் அவர்கள் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்தின் product. அதன் மூலம் discipline, planning போன்று ஒரு திட்டமிடுதலுக்கு தேவையான குணங்கள் அவரிடம் இருந்திருக்கும். அந்த ஸ்கூல் என்பதன் மூலம் அவருடைய மாடர்ன் தியேட்டர்ஸில் கற்றுக் கொண்ட தொழிலறிவு இங்கே குறை காணப் படுகிறதா.. அல்லது முக்தா ஸ்ரீநிவாசன் அவர்கள் நடிகர் திலகத்துடன் தயாரித்த படங்களிலும் அதே குணங்கள் மேலும் வலுவாக அமைந்து, அதுவும் இங்கே குறை காணப் படுகிறதா ... ஏனென்றால் தயாரிப்பாளர்களிடம் தான் கமிட் பண்ணி விட்டால் அதற்கப்புறம் அவருக்கு தன்னை முழுமையாக ஒப்படைக்கும் கலைஞர் நடிகர் திலகம். தயாரிப்பாளர் எங்கே படப் பிடிப்பு வைத்தாலும் மறுப்பு சொல்லமாட்டார். தன் ஆலோசனைகளைக் கூறுவாரே தவிர வற்புறுத்த மாட்டார். இப்படி தயாரிப்பாளர்-கலைஞர் இடையே நல்லுறவை வளர்த்த நல்ல சூழலை நடிகர் திலகத்தின் படங்களில் முக்தா ஸ்ரீநிவாசன் கண்டதும் குறை சொல்லப் படுகிறதா ..
இது தான் புரியவில்லை.
இந்த விவாதத்தில் நாம் நுழைய விரும்பவில்லை. ஆனால் இந்த ஸ்கூல் என்கிற வார்த்தை மட்டுமே சில கேள்விகளை நம்முள் எழுப்புகிறது . அவ்வளவு தான்.
அன்னை இல்லம், ஆண்டவன் கட்டளை, நீலவானம் ... இவையெல்லாம் நடிப்புக் கடவுளின் முத்திரை சித்திரங்கள் .. அதென்னவோ தேவிகாவுடன் இவர் நடித்த படங்களெல்லாமே மாஸ்டர் பீஸ் லெவலுக்கு இருப்பது தனிச் சிறப்பு. அதுவும் இந்தப் படத்தில் இந்தக் காட்சியைப் பற்றி முன்னொரு முறை மிகவும் மனம் விரும்பி எழுதியிருந்தேன். அந்தக் காட்சியை மீண்டும் இங்கே நினைவூட்டியதற்கு நன்றி வெங்கி ராம் சார்.
நன்றி வெங்கிராம். 'அன்னை இல்லம்' திரைப்படத்தின் அற்புதமான அந்தக் காட்சியை நடிகர் திலகம் திரி பாகம் 9 இல் தரவேற்றியது அடியேன்தான் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அந்தக் காட்சியைப் பற்றிய முழு விளக்கமும் அளித்துள்ளேன். இணைப்பிற்கு
http://www.mayyam.com/talk/showthrea...Part-9/page107
Vasu sir back with bang, thank you.
Just look at Rajasekaran still, even this still won't be matched by any other actors for century, only NT has to come back to give similar stills. Thank you Vasu sir.
Cheers,
Sathish
நம் நடிகர் திலகம் நிச்சயமாக உலகம் அறியாத அப்பாவி. உலகத் தரத்திற்கு படங்களைத் தரவல்ல ஒரு ரசிகரை முன்னமேயே அவர் சந்திக்காமல் விட்டு விட்டார். இருந்திருந்தால் மீதி 256 படங்களுக்கும் சேர்த்து மொத்தம் 306 ஆஸ்கார் அவார்டுகளை வாங்கித் தந்து இவரல்லவோ ரசிகர் என்று எல்லோரும் போற்றும் படி செய்திருப்பார். தவறு நடிகர் திலகத்தின் மீது தான். இன்னும் சற்று காலம் கழித்து பூமியில் பிறந்து இந்த அதி மேதாவி ரசிகரின் இயக்கத்தில் அனைத்துப் படங்களையும் செய்திருப்பார். பீம்சிங், கே.எஸ்.ஜி., பந்துலு, மாதவன், திருலோக்சந்தர் உள்பட அனைத்து இயக்குநர்களும் இந்த ரசிகரிடம் பிச்சை வாங்க வேண்டும்.
பேசாமல் இந்தத் திரியின் பெயரை அந்த ரசிகர் பெயரில் மாற்றி விட்டால் புண்ணியமாய்ப் போகும்.
அன்பு நண்பர் வாசு சார் தரவேற்றிய பாசமலர் விளம்பரத்தின் நிழற்படம் வண்ணத்தில் இங்கு ...
http://i1146.photobucket.com/albums/...2THANTHIFW.jpg
ஆஹா ... உலக இயக்குநர்களின் பெயர்களையெல்லாம் பட்டியலிட்டு விட்டார் .... நாமெல்லாம் என்ன புண்ணியம் செய்தோமோ ... ஒன்றுமே தெரியாத முட்டாள்களாயிருந்த நம்மை உலக சினிமாக்களையும் உலக இயக்குநர்களையும் அறிமுகப் படுத்தி இது தான் சினிமா,, இனிமேல் சிவாஜி படத்தைப் பற்றிப் பேசினால் தெரியும் சேதி என்று சொல்லாமல் சொல்லி விட்டார்... யாராவது மேல் லோகத்திலேருந்து நடிகர் திலகத்தை அழைத்து வந்து இவரிடமிருந்து பாராட்டுப் பத்திரம் வாங்கி கொடுத்தனுப்புங்களேன் .... அப்போதாவது நடிகர் திலகத்தின் ஜன்மம் சாபல்யமடையும் ... அது மட்டுமல்ல இனிமேல் சிவாஜி படத்தைப் பற்றி யாராவது எழுதினால் இவர்களுடைய படங்களிலிருந்து காட்சிகளைப் பற்றிக் குறிப்பிட்டு இதில் ஒரு சதவீதம் கூட சிவாஜி செய்யவில்லை என்பதை மறக்காமல் நிரூபியுங்கள். அப்போது தான் இவருடைய மனம் திருப்தியடையும். யார் யாருக்கு சிவாஜி மேல் என்னென்ன கோபம் வருமோ அதையெல்லாம் எழுதினால் அப்போது தான் இந்த புண்ணியவான் பிறவிப் பயன் எய்துவார்...
ஒரு வேளை இந்தப் பெருமூச்சின் வேகம் தாங்காமல் தான் இந்த திரி இரண்டாக பிரிந்ததோ ? தெரியவில்லை.
Welcome Mr Vasu Sir, Hope to see our Pammalar postings also very soon.
நடிகர் திலகத்தின் நாயகிகள்.(ஒரு விஷுவல் தொடர்)
(தொடர்-9)
நடிகர் திலகத்தின் நாயகிகள் (9) 'அஞ்சலிதேவி '
அஞ்சலிதேவியின் அழகிய தோற்றம்.
http://www.cineradham.com/Stills/Act...ills%20(3).jpg
'முதல் தேதி' தமிழ்த் திரைக்காவியத்தில் நடிகர் திலகத்துடன் அஞ்சலிதேவி
http://i1087.photobucket.com/albums/...g?t=1351481716
'நான் சொல்லும் ரகசியம்' தமிழ்த் திரைக்காவியத்தில் நடிகர் திலகத்துடன் அஞ்சலிதேவி
http://i1087.photobucket.com/albums/...g?t=1351481900
அழகான நாயகி அஞ்சலி தேவி. காக்கிநாடாவில் பெத்தாபுரம் என்ற ஊரில் 1928 அக்டோபர் 25-ஆம் நாள் பிறந்தவர். எட்டு வயதிலேயே நாடகங்களில் ஆண் வேடமிட்டு நடித்துப் புகழ் பெற்றவர். (நடிகர் திலகம் தன் சிறு வயதில் நாடகங்களில் பெண் வேடங்கள் இட்டு நடித்ததைப் போல்) தன்னுடய நாடகக் குழுவில் பணி புரிந்த ஆதிநாராயணராவ் அவர்களை மணம் புரிந்து கொண்டார். பின் இயக்குனர் புல்லையா அவர்களால் தெலுங்கில்( ‘Golla Bhama’) அறிமுகம் செய்யப்பட்டு ரசிகர்களின் 'மோகினி'யாகத் திகழ்ந்தார். ஆம்... முதலில் சினிமாவில் 'மோகினி' வேடம் அஞ்சலிக்கு. பின்னர் தெலுங்கில் அஞ்சலி அவர்களின் ஆட்சிதான். தொட்டதெல்லாம் துலங்கிற்று. ரசிகர்கள் அஞ்சலியின் மீது 'பிரேமை' பிடித்து கிடந்தார்கள். கணவர் ஆதிநாராயணராவ் புகழ் பெற்ற இசையமைப்பாளர். அஞ்சலி நிறைய தெலுங்குப் படங்கள் தயாரித்து மாபெரும் வெற்றி கண்ட நடிகை. இதில் பெருமைக்குரிய விஷயம் என்னவென்றால் அஞ்சலி தயாரித்த முதல் தெலுங்குப்படமான 'பரதேசி' யில் நடிகர் திலகம் நடித்ததுதான். 'பூங்கோதை' என்ற பெயரில் தமிழிலும் எடுக்கப்பட்டது. ('அந்தமான் காதலி' காவியத்தின் மூலக்கதை 'பரதேசி' தான்)
பின் ஏராளமான தமிழ்ப் படங்கள் அஞ்சலியின் புகழை உச்சிக்கு கொண்டு சென்றன. குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் முதல் தேதி, கணவனே கண்கண்ட தெய்வம், அனார்கலி, மணாளனே மங்கையின் பாக்கியம், அடுத்த வீட்டுப் பெண் (காமெடி), சர்வாதிகாரி, மர்மயோகி (வில்லி) போன்ற படங்கள். "அன்றலர்ந்த தாமரை அழகா... அல்லது எங்கள் அஞ்சலிதேவி அழகா!" என்று இப்போதும் அஞ்சலியை நினைத்து தன் வசம் இழந்து பெருமூச்சு விடும் பெருசுகள் ஏராளமானோர் உண்டு. அந்த அளவிற்கு ரசிகர்களின் இதயங்களில் குடி கொண்டவர் அஞ்சலிதேவி. தெலுங்கில் நாகேஸ்வரராவுடன் இவர் இணைந்த அனார்கலி, சுவர்ண சுந்தரி போன்ற படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் மூவிகள். அஞ்சலி பிச்சர்ஸ் தயாரிப்பான 'பக்த துக்காராம்' என்ற அருமையான காவியத்தில் நடிகர் திலகம் வீர சிவாஜியாகத் தோன்றி முழக்கம் செய்ததை யாரால் மறக்க இயலும்? தமிழிலும், தெலுங்கிலும் நிறைய மியூசிக்கல் ஹிட்ஸ் படங்களை தந்தவர் அஞ்சலி தேவி. அது மட்டுமல்லாம தென்னக திரைப்பட உலகில் முதன் முதலில் ஸ்லோ மோஷன் காட்சியை அறிமுகப்படுத்தியவரும் இவர்தானாம். சோகம், காமெடி, வீரம், வில்லி, அம்மா என்று அத்தனை ரோல்களிலும் புகுந்து விளையாடக் கூடிய திறமை படைத்தவர். நடிப்புத் திறமையையும் மீறி அளவுக்கத்திகமான அழகால் அனைவரையும் வசீகரித்தவர்.
நடிகர் திலகத்துடன் குறிப்பிட்ட சில படங்கள் தான் நடித்துள்ளார். 'முதல் தேதி'யில் நடிகர் திலகத்தின் ஏழை மனைவியாகவும், 'நான் சொல்லும் ரகசியம்' காவியத்தில் நடிகர் திலகத்தின் ஏழைக் காதலியாகவும் நடித்துள்ளார். நடிகர் திலகத்தால் அன்புடன் 'பாஸ்' என்று அழைக்கப் பட்டவர். நடிகர் திலகம் பராசக்தியில் நடித்துக் கொண்டிருந்த ஆரம்ப நாட்களிலேயே நடிகர் திலகத்தின் திறமைக் கண்டுபிடித்து தன் சொந்த படத்தில் (பரதேசி (தெலுங்கு) மற்றும் பூங்கோதை) இரண்டாம் ஹீரோவாக நடிக்க சந்தர்ப்பம் அளித்த நன்றிக்குரியவர். (தன்னை முதன் முதலில் அஞ்சலிதேவி சொந்தப் படத்திற்கு 'புக்' செய்ததால் பிற்காலங்களில் செய்நன்றி மறக்காமல் நடிகர் திலகம் அஞ்சலி அவர்களின் சொந்தத் தயாரிப்பான 'பக்த துக்காராம்' தெலுங்குப் படத்திற்கு இலவசமாக நடித்துக் கொடுத்து தன் நன்றிக்கடனை தன்னுடைய 'பாஸ்' அவர்களுக்கு திரும்ப செலுத்தினார்) நடிகர் திலகத்திற்கு மட்டுமல்ல... நமக்கும்தான். எனவே நம் அனைவர் சார்பாகவும்
அன்பான அஞ்சலி அம்மா!
தங்களுக்கு எங்களது கோடானு கோடி நன்றிகள்!
முதன் முதலாக இணையத்தில் நடிகர் திலகமும்,அஞ்சலி தேவி அவர்களும் இணைந்து கலக்கும் 'நான் சொல்லும் ரகசியம்' காவியத்தின் அற்புத டூயட் பாடல்... P.B.ஸ்ரீனிவாஸ் தலைவருக்காகப் பாடிய ஒரு சில பாடல்களில் முதன்மையான பாடல்.(வீடியோ)
"கண்டேனே உன்னைக் கண்ணாலே"...
http://www.youtube.com/watch?feature...&v=yiOrWn5ksxc
அஞ்சலி பிக்சர்ஸ் 'பரதேசி' தெலுங்குத் திரைப்படத்தின் ஸ்டில்.
http://www.eemaata.com/images/nov201...3-paradESi.JPG
போனஸ் இணைப்பு: நடிகர் திலகம் பற்றி அஞ்சலிதேவி அவர்கள் ஜெயா மூவிஸ் தொலைக்காட்சியின் திரும்பிப் பார்க்கிறேன்' நிகழ்ச்சியில் அளித்த பேட்டியை சமயத்திற்கு உதவுமே என்று பதிவு செய்து வைத்திருந்தேன். இப்போது உதவுகிறது. பரதேசி மற்றும் பூங்கோதை படங்களில் நடிகர் திலகத்திற்கு சான்ஸ் கொடுத்தது பற்றியும், நடிகர் திலகத்தின் அசாத்திய திறமை பற்றியும் அஞ்சலிதேவி அவர்கள் கூறுவதை இப்போது காணுங்கள்.
http://www.youtube.com/watch?v=6hjpngnsQvk&feature=player_detailpage
(ஜோடிகள் தொடரும்)
அன்புடன்,
வாசுதேவன்.
All the 306 films of NT are equal for me. There is no discrimination between this & that.
He is an actor par excellance.
டியர் ராகவேந்திரன் சார், சதீஷ் சார், சந்திரசேகரன் சார், ராதாகிருஷ்ணன் சார்,
'பாசமலர்' பதிவுகளுக்கான தங்கள் பாராட்டுதல்களுக்கு அன்பு நன்றிகள்.
டியர் வாசுதேவன் சார்,
வருக! வருக!
நடிகர் திலகம் பற்றிய நிறையப் பதிவுகளைத்
தருக! தருக!.
டியர் ராகவேந்திரன் சார்,
'பாசமலர்' வண்ண விளம்பரம் பலே ஜோர். அது போல 'எல்லாம் உனக்காக' திரைக்காவியத்தின் அற்புத காட்சி, மற்றும் 'படிக்காத பண்ணையார்' நடிகர் திலகத்தின் இயல்பு நடிப்புக் காட்சி என அசத்தல் பதிவுகளை அளித்து மகிழ்ச்சியூட்டி வருகிறீர்கள். நன்றி!
VAASU SIR.......EPPO POTEENGO !! :-)
:smokesmile:
re-releasing soon !
*****************
NAAN VAAZHAVAIPAEN
*****************
Another 100 days Film of Nadigar Thilagam.
... "Naan Vaazha Vaippen" is one of the most important film in Rajinikanth's career. This film was a come back vehicle for Rajinikanth after a gap. A remake of Amitabh starrer "Majbur", produced by K.R.Vijaya. Excellent Music Composition by Ilayaraja, Naan Vaazhavaipaen has soothing songs viz., a) Endhan Ponvannamae b) Thirutheril Varum Silayo c) Aagayam Melae d) Ennodu Paadungal
************************************************** *******
COMING SOON @ YOUR FAVORITE THEATERS.
CLICK TO SEE THE 3 MINUTE TRAILER.
************************************************** *******
re-releasing with Pride : Nadigar Thilagam 360 degree
************************************************** *******
http://www.youtube.com/watch?v=BCl0pss-9zY
A MILLION THANKS TO NEYVELI VASUDEVAN SIR...FOR THIS TRAILER ....SUPER SIR !!
Vasudevan Sir,
Welcome back, We really missed you.
Anand
Eppodhumae...Thaan Oru Maydhaavi endru Ninaithu Paesum Gunam Oru sila Nadigargalukku Undu...Avargal Maedhaavigal Alla Mael Thaavigal enbadhu Paavam Avargalukke Theriyaadha Onru.....
Onbadhu Vedangalai Seidhuvittargal endra Vayitrerichalil...Oru Vedam Adhigamaaga Seidhu Ennaanadhu...Pettikul Pugundhu Kondadhu Dhaan Micham...!
Went to Palghat to attend my cousin's daughter marriage. it was so emotional especially when the "Thaali" was tied by the Groom. All said, Now you have become Father-in-law and your daughter from now on be their daughter. On hearing this, I could feel something happening inside my heart..."oru chapathi maavu pesayaraa maadhiri " inside my heart and eyes automatically had tears stagnated...Though, my daughter is just doing her 6th Standard...the reality is something that we are unable to digest so easily.....Incidentally, when i was looking for our NT's song, the one that came first was this......... Andha Feeling eppudi Naan Kalyana Sathrathula En Cousin Facela paathaeno....the same feel....am seeing in our Thalaivar's face in this song......
http://www.youtube.com/watch?v=MNx6Oz7KDxc
அதனை வித்யாகர்வம் என்று குறிப்பிடுவார்கள்...நண்பரே. நாயகனை சிறந்த இருபத்தைந்து படங்களுள் ஒன்றாக டைம் பத்திரிக்கை தேர்வு செய்து இருந்தது இன்னும் நினைவில் இருக்கிறது. கமல் திரைத்துறையின் பல்வேறு நுணுக்கங்கள் அறிந்தவர் (நடிப்பு, இசை, இயக்கம், வசனம், பாடல், நடனம்...) என்று இந்திய அளவில் அங்கீகாரம் உண்டு. எதற்கு கமல் போன்ற கலைஞனை நடிகர் திலகத் திரியில் இடித்துரைக்க வேண்டும்.
ஒன்றை ஒன்று மிஞ்சுவதே பரிணாம வளர்ச்சி. ஒன்பது பத்தாவதும் அத்தகையதே. பத்தையும் வருங்காலத்தில் மிஞ்சுவார்கள். இதெல்லாம் தவிர்க்க முடியாது. இதெல்லாம் தவிர்க்க முடியாது. மேலும், 2008ல் தசாவதாரம் பெரும் வசூல் சாதனை செய்தது அறிந்ததே.
எண்பதுகளில் வந்த நடிகர் திலகம் அவர்களின் பெரும்பான்மையான படங்களைப் பற்றி நீங்கள் அதிகம் விவாதிப்பதில்லையே..ஏன்? டிரைவர் கதாபாத்திரம் என்றாலும் கோட் சூட் போட்டு வருவது எல்லாம் இருந்தது. இப்படியும் எதிர் விவாதம் தொடங்க விழையவில்லை நண்பரே.
Nanbarukku Onrai Ninaivu padutha Virumbugiraen....Ennikkai Padi Paarthaal....Onbadhirkku Piraghudhaan Paththu....Onbadhu paththaagalaam...Aanaal..Pathum Onbadhaagividaadhu..! Onrirkku Pakkathil Boojiyam irundhaal dhaan Paththu..Andha Onrai Eduthuvittal...Adhu verum Boojiyam dhaan...Aanaal..Onbadhu Thaniththu Ninraalum Onbadhudhaan...
Enbadhugalil Nadigar Thilagathin Padangalai Yaar Adhigam Vivaadhippadhillai endru sonnargal...? National Permit ulla Lorrigalai oatum Drivergal palar ungal Kannil Padavillai polum..!
VidhyaGarvam Enbadharkkum VidhandaGarvam Enbadharkkum Periya Vithiyaasam onrum illai thozharae...Nool izhai dhaan..! Evvalavu Padithirindhaalum..Katradhu Kai Alavu..Kalladhadhu Ulagalavu enbadhudhaan Aandroar Vaaku....Yaaraiyum idithuraikkum Noakkam Illai yamakku...Adhey samayathil...Pesuvadhu ellam sari endru Vaai moodi Sevi saaithu sella iyalaadhu..!
2008il Vasool Saadhanai endraal...Salem, Dindigul, Coimbatore, T&T (Tiruchi matrum Thanjavur) Viniyogasthargal Padam Kaiyai Kadithadhu endru edharkku case poataargal? Pinbu sumugamaaga Theerthukondaargal....? Visaariyungal Nanbarae..! Thaiyaaripaalar Laabam adaivadhu periya vishayamae alla...Producergalidam irundhu Vaangum viniyogasthargal Laabam Adaya Vaendaama Sollungal?
Irendu Varudathirkku Orumurai...Alladhu ...Onrarai Varudathirkku Orumurayo irendu murayo Thirayil Vandhaal Summa irukkum Matra Nerathil Palveru Nunukkaththai katrukollvadhu periya ulaga adhisayam alla...Aanaal...Oru Varudathil...Sumaar 7 alladhu 8 padangal Nadikkumboadhu Adhai seidhirundhaal Medhaavi endru Anaivarul Oththukolvaargal enbadhu Ullangai Nellikani..!
Yaarayum Kurai kooravillai...Aanaal...Thiru Muktha Srinivasanai patri sollum alavukku Thiru.Kamalahasan Valaravillai. Oru Velai Valarndhu Vittadhaaga Ninaithu Appadi Koori-irundhaal...adhu Nichayamaaga Oru Thavaraana Udhaaranamaagum Nanbarae..!
# நீங்கள் குறிப்பிட்ட தயாரிப்பாளரின் படங்களைப் பட்டியலிடுங்கள். அதில் எல்லா விதத்திலும் நேர்த்தியான படம் எது என்பதை பொதுப் பார்வை கொண்டவர்கள் சொல்வார்கள். அது யாரால் அப்படைப்பு அவ்விதம் வந்தது என்பதை சொல்வார்கள்.
# நன்றாக நோக்கினால், சம்பந்தமே இல்லாமல் நவராத்திரியையும் தசாவதாரத்தையும் ஒப்பீடு செய்து உள்ளீர்கள்.
# கமல் நடிப்பு மட்டும் இல்லாமல் versatility மிக்க கலைஞன்.
# நானும் நடிகர் திலகம் படங்களை ரசிப்பவன். ஏன் இன்னொரு கலைஞன் மீது இந்த காழ்ப்புணர்ச்சி.
# டிரைவர்கள் எல்லாம் கோட் சூட் போடுவார்கள் என்றீர்கள்.(சப்பைக் கட்டு கட்டாதீர்கள்.) மற்ற டிரைவர்கள் எல்லாம் அப்படத்தில் அப்படி அணியவில்லை. இப்படி ஒவ்வொரு கலைஞனுக்கும் எதிர் விசயங்களை எழுத முடியும். ஆனால் அது முறை ஆகாது. நடிகர் திலகத்தை தவிர பிற நடிகர்களை ரசிக்க இயலவில்லை எனில் குறிப்பாக எதிர்மறை கருத்துகளை எழுதாமல் இருக்கலாம் நண்பரே.
இல்லையெனில் லாவணி பாடலாம் என்றால் பாடலாம்.
Ella Vidhathilum Ella Padangalum Nerthiyaaga Orukkalum Irukkamudiyaadhu enbadhu ulagarindha ondru ! Naanum appadi kooravillayae...Sambandham illamal Naana Pesugiraen endru Satru Nidhaanamaaga Yosiyungal.
Sambandham Illamal Padam Eduththadhu yaar endru ulagariyum...Paththu Vedathirkku undaana oru "Geththu" Kadhai Kalathil Illai enbadhu Anaivarum Arindha unmai. Kaaranam minimum oru characterukku irendu reel endru vaithaaldhaan kadhaapaathirathirkku oru justification kidaikkum enbadhu dhaan karththu..adhuvum en karuththu..!
Thirumbavum koorugiraen....Irendu Varudathirkku Onroe/irendoe thiraipadathil nadithaal...ellarukkum versatality varum..kaaranam summa irukkum nerathil avargal muyarchi eduthu therindhukolvaargal..Aanal...Varudathirkku 7 alladhu 8 padangal varudaa Varudam Commit aagumboadhu...Matra departmentil thalai ittal...adhu producerai Torture pannuvadhu pol aagum...Ellam Ennakkudhaan theriyum endra ninaippu ullavargal thannudaya Versatalityai explicitaaga kaatikollvaargal...Adhil Thavaru ellalavum Kidayaadhu....Most importantly,,,Versatality need not be always exhibitionised ! It can be implied too ! :-)
Nichayamaaga Thaazhpunarchi Illai...Kamal Migachirandha Nadigar Enbadhil Maatrukaruthillai ! Aanal..Mukta Srinivasan pondra oru veterani 25 yearsukku Piragu Kurai Kooruvadhu Nalla Panbukonda Vishayam alla enbadhu Thinnam !
Neengal Solvadhai eppadi yetrukolla mudiyum? Ungal Pakkathu Vettil irupavar "Thundu" mattumae uduthuvaar endru vaithu kolvoam..Neengal Adharkaaga "Thundu" mattumae udukkavendum endra edhirpaarppu endhavagayilum Gnayam illai...Sappai Kattu Kattavendiya Avasiyam yenakkillai..Siridhu Redhills Pakkam alladhu Port trust pakkam Sendru Paarungal..Coat poatta driver atleast oru 4 paeraavadhu paarkalaam ! Moreover, Driver coat poadakoodadhu endru endha IPC sectionil ulladhu Nanbarae? Enga Driver Coat
Poadum Alavukku Semithu Vaitahiruppar...Avar Semikkavillai endru ungalaal sollamudiyuma alladhu ennal dhaan sollamudiyuma..?
Matra Nadigargala rasikka mudiyavillai endru naan kooravillayae..Muktha Srinivasan avargalai Kurai Koora 25 years Thiru Kamal avargal kaathirukka vendiya Avasiyam Illai Adhu Murayum Illai endru dhaan Koorinaen..Muktha vai kurai koorubavar Dasavadharathai Sariyaaga eduthirukka vendum..aanal..adhai seiyavillayae enbadharkkudhaan Dasavadharathai patri Pesinaen..!
Maelum Ungalukku Dasavatharam uruvaana kadhai enna endru therindhukollungal nanbarae...K.S.Ravikumar oru naer kaanalil, Kamal thanudaya aasayaaga kooriyadhu Navarathiriyai vida oru characteravadhu adhigamaaga seiyavendum endru kooriyadhaaga koorinaar..Adhan Pinbu Serkapatta Kadhapaathiram dhaan Andha Singh KadhaPaathiram..You may check your records if need be Nanbarae !
Laavani Paadavendum endru ninaithadhum illai, virumbuvadhum illai..aanaal..laavani paadinaal dhaan Aaavani varum endra kattayam aerpadumae aanaal...Adharkkum thayanguvadhillai !
டியர் பாரிஸ்டர் சார்,
Nadigar Thilagam 360 degree ஆல் போல் தழைத்து அருகு போல் வேரூன்ற எல்லாம் வல்ல நடிகர் திலகம் அருள் புரிவார்... ஆசிகள் அளிப்பார். தங்களுக்கும், அன்பு நண்பர் ஆனந்த் அவர்களுக்கும் என் இதயபூர்வமான வாழ்த்துக்கள்.
http://padamhosting.com/out.php/i716...nap-554375.png
"காலம்தனை நான் மாறவைப்பேன்...
கண்ணே உன்னை நான் வாழவைப்பேன்"...
என்று நடிகர் திலகம் தங்கள் அருகில் இருக்கையில் வேறு என்ன கவலை?
வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு தயாராகுங்கள். நாங்களும் ரெடி.
http://padamhosting.com/out.php/i716...nap-555411.pnghttp://padamhosting.com/out.php/i716...nap-556604.png
http://padamhosting.com/out.php/i716...nap-555566.pnghttp://padamhosting.com/out.php/i716...nap-555802.png
ஒருவர் சொல்ல ஒருவர் கேட்க - திரி இரண்டானதா -
ஆகாயம் மேலே பாதாளம் கீழே -
ஆனந்த உலகம் நடுவினிலே --
நடிகர் திலகத்தின் புகழை அதல பாதாளத்தில் தள்ளுவதற்கென்றே அவதரித்திருக்கும் ஒருவருக்கு இங்கே நம்மிலேயே ஒருவர் ஆதரவு தருவது எதிர்பார்த்தது தான் என்றாலும் மனதின் வலி என்னவோ ஆழமாய்த்தான் உள்ளது. நடிகர் திலகம் இதையெல்லாம் சந்தித்து தான் வந்தித்திருக்கிறார், நாம் மட்டும் என்ன விதி விலக்கா..
டியர் சுப்பு,
தங்களுடைய பணி சிறக்கவும், தாங்கள் தொடர்ந்து வெற்றிப் பாதையில் பயணம் செய்யவும் உளமார்ந்த நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்
(பாரிஸ்டர் ரஜினிகாந்த்) நண்பரே.. அமைதியாக நடிகர் திலகத்தின் திரியைப் படித்து வரும் பொதுவானவன் நான்.
உங்கள் கருத்து எனக்கு உடன்பாடு இல்லாததால் தான், எழுதினேன். எனினும், விவாதத்தை தொடர விரும்பவில்லை. காரணம், நடிகர் திலகம் என்ற தமிழர்களின் icon ஆகத் திகழ்ந்த கலைஞரை நானும் ரசிப்பதால்.. பதிலுக்குப் பதிலாக, வேறு விசயங்களை எதிர் மறையாக உங்களைப் போல் எழுத விரும்பவில்லை.
(தவிர, உங்களின் ஆங்கிலத் தமிழைப் படிப்பது மிக கடினமாக உள்ளது. பொறுமையும் தேவைப்படுகிறது.)
கருத்துகளுக்கு நன்றி நண்பரே...
திரு.ராகவேந்திரா அவர்களே.. நீங்கள் குறிப்பிட்டது போல் நான் நடிகர் திலகத்தை தூற்றி எழுதவேவில்லை. கமலைப் பற்றி எதிர் மறையாக ஒரு சார்புடன் பாரிஸ்டர் எழுதவே, நானும் பதில் எழுதினேன். மற்றபடி, வேறு ஏதுமில்லை. இத்திரியின் contents இன்னும் பிடிக்கும் ஆதலால், தொடர்ந்து வாசிக்கவே செய்வேன்.
அன்பு முரளி சார்,
'பாலாடை' ஆய்வு மூலம் என்னை பரவசப்பட செய்து விட்டீர்கள். அதற்காக என் நன்றியுடன் கூடிய பாராட்டுக்கள். யாருக்கும் அதிகம் தெரியாத ஏன் நடிகர் திலகத்தின் ரசிகர்கள் கூட சற்று ஒதுக்கி வைத்த காவியம் அது. என்னுள்ளே பல அதிர்வுகளை எப்போதும் ஏற்படுத்தி கொண்டிருக்கும் படம். நீங்கள் குறிப்பிட்டது போல அந்த கனவுக் காட்சியை நம்மவர் விவரிக்கும் காட்சி. ஒரு கோடி ஆண்டுகள் என்ன... உலகம் உள்ளவரை எந்த நடிகரும் நெருங்க இயலாத, எவரும் நினைத்துக் கூட பார்க்க முடியாத நடிப்பில் பிரளயம் ஏற்படுத்திய காட்சி. உலக உச்ச நடிகர்கள் முதல் சொச்ச நடிகர்கள் வரை அனைவரும் கைகட்டி வாய் பொத்தி குருகுல பாடம் படிக்க வேண்டிய உன்னதமான காட்சி. பொதுவாக கனவு கண்டவர்கள் அதை விவரிக்கத் தெரியாமல் திண்டாடுவார்கள். இது கண்கூடு. ஆனால் கனவே காணாமல் உண்மையாகவே கனவு கண்டது போல் தன் நிலை முழுவதும் மறந்து, தான் கண்ட கனவில் வரும் அந்த குழந்தையை, அந்தக் குழந்தையின் செய்கைகளை, அந்த செய்கைகளினால் தனக்கேற்படும் உணர்வுகளை அந்தக் காட்சியில் அவர் விவரிக்கும் விதம்... அந்தக் குழந்தை கைதட்டுவது போலவே தன் கைகளைத் தட்டி (கொட்டி) காண்பிப்பார் பாருங்கள்! "பளிச்சுன்னு ஒரு முத்தம் கொடுத்தான்... அந்த எச்சிலெல்லாம் பட்டு என் ரத்தம் மறைஞ்சு போச்சு"... என்று தன் கைவிரல்களால் வாயோரம் துடைத்துக் கொள்ளும் அந்த பாவனை... "எனக்குத்தான் குழந்தையே இல்லையேப்பான்னு சொன்னேன்...உடனே அவன் என் கழுத்த விட்டுட்டு அய்யய்யோ... உங்களுக்கு குழந்தையே இல்லையா?... உங்களுக்கு குழந்தையே இல்லையா?" என்று குழந்தை கூறுவது போல கைகளைத் தட்டும் போது அங்கு நடிகர் திலகத்தைக் காண முடியாது. அச்சு அசலாக அந்த குழந்தையைத்தான் காண முடியும்...
என்ன ஒரு ஆண்டவனின் படைப்பு!...
ஆண்டவனே ஆச்சரியப்பட்ட படைப்பு!...
முரளி சாரின் அற்புத 'பாலாடை' கட்டுரை ஆய்வுக்காக அடியேனின் அன்பு பரிசாக
முதன் முதலாக இணையத்தில் அந்த ஆகர்ஷிக்கும், கலையுலக ஆண்டவர் ஆட்சி செய்யும் கனவை விவரிக்கும் கலக்கல் சீன்.
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=mg_uN7jsLZU
அன்புடன்,
வாசுதேவன்.
'பாலாடை'யின் பட்டை கிளப்பும் டூயட்
'எங்கே எங்கே எங்கே என் கண்ணுக்கு விருந்தெங்கே'...
http://www.youtube.com/watch?feature=player_detailpage&v=Ayh9zeu78xg
தங்கள் அன்புள்ளத்திற்கு மிக்க நன்றி (anm)ஆனந்த் சார்.
டியர் செல்வா சார்,
தங்களுடைய பதிவில் எனக்கு எந்த கருத்து இடர்பாடுகளும் இல்லை. இது எனக்கும் மற்றொரு நண்பருக்கும் இடையே நிலவும் கருத்துப் பரிமாற்றம், அல்லது கருத்து வேறுபாடுகள். எனவே தாங்கள் தொடர்ந்து தங்கள் கருத்துக்களைத் தொடர்ந்து பதிவிடுங்கள். தங்களுடைய வருகைக்கும் எனது பாராட்டுக்களைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.
அன்புடன்