-
சமீபத்தில் சிதம்பரத்திற்கு அருகில் உள்ள பிச்சாவரம் பகுதிக்கு எனது குடும்பத்தாரோடு சென்றிருந்தேன். மக்கள் திலகத்தின் மாபெரும் வெற்றிக்காவியமான இதயக்கனியில் இடம்பெற்ற கடைசி சண்டைக்காட்சி படமாக்கப்பட்ட அற்புதமான இடம். நீண்ட நாட்களாக அந்த இடத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் அன்றுதான் நிறைவேறியது. மக்கள் திலகம் நடித்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற பிறகே இவ்விடம் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தளமானது. மக்கள் திலகத்தின் ஆட்சி காலத்தில் தமிழ் நாடு சுற்றுலாத்துறை மூலம் சுற்றுலா பயணிகளுக்கான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு 'அறிஞர் அண்ணா சுற்றுலா வளாகம்' என்று பெயரிடப்பட்டு மக்கள் அனைவரும் விரும்பி வருகை தரும் சிறந்த சுற்றுலா தலமாக விளங்கி வருகின்றது. இதயக்கனி படப்பிடிப்பின்போது மக்கள் திலகம் தங்கி படப்பிடிப்பில் கலந்துகொண்ட இடம் சிறிது தூரத்தில் உள்ளது அவ்விடம் தற்போது எம் ஜி ஆர் திட்டு என்று அழைக்கப்படுகிறது.
படகில் படப்பிடிப்பு நடைபெற்ற இடங்களில் பயணித்தபோது மக்கள் திலகம் எதையும் புதுமையாக செய்யவேண்டும் என்ற வேட்கையுள்ள மாமனிதர் என்பது புரிந்தது. மாங்குரோவ் காட்டின் உட்பகுதியில் படகு செல்லும் அளவிற்கு பாதை அமைத்து மிக கவனமாக படமாக்கி உள்ளனர்.
மக்கள் திலகத்தின் ரசிகர்கள் அனைவரும் காண வேண்டிய இடங்களில் பிச்சாவரமும் ஒன்று.
சில புகைப்படங்கள் நமது திரி நண்பர்களின் பார்வைக்கு.
அன்புடன்,
எஸ். ரவிச்சந்திரன்
-----------------------------------------------------------------------
நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம்
மக்கள் திலகத்தின் வழி நடப்போம்
-----------------------------------------------------------------------
http://s3.postimg.org/xmp4uc9kz/WP_2..._33_50_Pro.jpg
-
-
-
-
Quote:
Originally Posted by
Sathya VP
எம்.ஜி.ஆரைப் பற்றிய எத்தனையோ கட்டுக்கதைகளில் இதுவும் ஒன்று. எம்.ஜி.ஆருக்குக் குதிரையேற்றம் தெரியாது. அப்படியே ஏறினாலும் நின்று கொண்டிருக்கும் குதிரை மீது ஏறி அமர்ந்து கொண்டு இங்கும் அங்கும் பார்ப்பது போல் பாவனை செய்வார். எல்லாப் படங்களிலும் பேக் புரொஜக்சன் முறையில் தான் எம்.ஜி.ஆரின் குதிரையேற்றக் காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கும் என்றெல்லாம் ஒரு கட்டுக்கதை பரப்பப் பட்டிருந்தது. இதனைப் பற்றிய பல பத்திரிக்கைகளில் செய்திகள் வந்தபோதும் ஆதாரங்களுடன் மறுப்பினை அனுப்பி வைத்திருந்தேன். எம்.ஜி.ஆரின் புகழ் பாடும் பிரபல பத்திரிக்கை உட்பட எந்த பத்திரிக்கையிலும் அது பிரசுரமாகவில்லை. மேலும் அக் கட்டுரையின் மறுபிரசுரங்களிலும் கூட அந்தக் கருத்து மீண்டும் இடம் பெற்றிருந்தது. இது பற்றி நான் ஏற்கனவே நமது திரியில் ஒரு கட்டுரையை பதிவேற்றி எம்.ஜி.ஆரின் நிழல் போல் இருந்த திரு. ராமகிருஷ்ணன் போன்றோர் இது பற்றி விவரமாக எழுத வேண்டும் என கேட்டுக் கொண்டிருந்தேன். அருமைச் சகோதரர் பேராசிரியர் செல்வகுமார் அவர்கள் அந்த ஆவலை ஓரளவு நிறைவேற்றியுள்ளார். இன்னும் விரிவாக இது போன்ற மறுப்பு கட்டுரைகள் வெளியாக வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நண்பர்கள் அனைவரும் தங்களது அனுபவங்களை இது தொடர்பாக தெரிவிக்கவும். சதிலீலாவதி படத்தின் ஆரம்பத்தில் மக்கள் திலகத்திற்கு சைக்கிள் ஓட்டத் தெரியாது தான். ஆனால் அதே கால கட்டத்தில் தனது அன்னையின் அச்சத்தின் காரணமாக போடப் பட்டிருந்த தடை உத்தரவையும் மீறி கலைவாணர் என்.எஸ்.கே. அவர்களது உதவியுடன் சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொண்ட விவரத்தை மக்கள் திலகம் தனது வாழ்க்கை வரலாறான நான் ஏன் பிறந்தேன் காவியத்தில் விரிவாக பதிவு செய்திருக்கிறார்., மேலும் தனது குதிரையேற்றப் பயிற்சி தொடர்பாகவும் மிக மிக விரிவாக பதிவு செய்திருக்கிறார். காப்புரிமை தொடர்பாக அந்தக் கட்டுரையை நான் இங்கே பதிவேற்ற இயலவில்லை. பேராசிரியர் செல்வகுமார் அவர்களுக்கு நன்றிகள் கோடி.
-
Quote:
Originally Posted by
makkal thilagam mgr
மக்கள் திலகத்தின் தீவிர அபிமானியான திரு ஏழுமலை அவர்கள் மக்கள் திலகத்துடன் இருக்கும் நிழற்படங்களை
பதிவிட்ட இனிய நண்பர் திரு செல்வகுமார் அவர்களுக்கு நன்றி . சாதாரண தொண்டன் அழைப்பின் பேரில் மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் திரு ஏழுமலை வீட்டிற்கு சென்ற காட்சி நெஞ்சை விட்டு அகலாது .அருமையான ஆவணம் . நன்றி திரு ஏழுமலை சார் .
-
Quote:
Originally Posted by
ravichandrran
VERY NICE PICS. THANKS RAVICHANDRAN SIR
SEE THE VIDEO- PICHAVARAM ISLAND -FROM 2.17.30 ONWARDS.
http://youtu.be/sKrE9fCCzdI
-
1963 jan-feb ல் திருவிழா கண்ட மவுண்ட் ரோடில் மக்கள் திலகத்தின் படங்கள் பற்றிய ஒரு சுவாரசிய தகவல்கள் .
மக்கள் திலகம் எம்ஜிஆர் திரை உலகில் முடி சூடா மன்னனாக , வசூல் சக்ரவர்த்தியாக வலம் வந்த நேரமது .
பொங்கலுக்கு முன் வந்த பணத்தோட்டம் - பிளாசாவிலும் . பிப்ரவரியில் வந்த கொடுத்து வைத்தவள் -காசினோ விலும்
தர்மம் தலை காக்கும் -சித்ராவிலும் ஒரே நேரத்தில் மூன்று எம்ஜிஆர் படங்கள் எம்ஜிஆர் ரசிகர்களுக்கும் விருந்தாக
அமைந்தது .
பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் சரவணா பிலிம்ஸ் . தேவர் பிலிம்ஸ் , ஈ .வி .ஆர் பிச்சர்ஸ் தயாரிப்பில் பிரபல
இயக்குனர்கள் கே. சங்கர் , எம் .ஏ .திருமுகம் , ப . நீலகண்டன் இயக்கத்தில் மக்கள் திலகத்தின் மூன்று படங்களும்
வித்தியாசமான முறையில் அருமையாக இருந்தது .
பணத்தோட்டம் - சமூக விரோதிகளால் பாதிக்கப்பட்டு சிறை தண்டனை அனுபவித்து விட்டு குற்றவாளிகளை கண்டு பிடிக்கும் வேடத்தில் எம்ஜிஆரின் நடிப்பு அபாரம் . மேற்கத்திய நடனத்தில் பின்னி எடுத்திருந்தார் .எல்லா பாடல்களும்
சூப்பர் ஹிட் .
கொடுத்து வைத்தவள் - மக்கள் திலகம் எம்ஜிஆர் கட்டிட பொறியாளராக நடித்த படம் .ரயிலில் நடந்த சண்டை காட்சியில் ஏற்படும் விபத்தில் மன நிலை பாதிக்கப்பட்டு நடிக்கும் காட்சிகள் தத்ரூபமாக இருந்தது .எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .
தர்மம் தலை காக்கும் - மக்கள் திலகம் மருத்துவராக நடித்த படம் .சஸ் பென்ஸ் நிறைந்த படம் . எல்லா பாடல்களும்
இனிமை .
மூன்று எம்ஜிஆர் படங்கள் ஒரே நேரத்தில் ரசிகர்களையும் , தமிழ் திரை உலகினரையும் மகிழ்ச்சியில் மூழ்கடித்த
பொன்னான காலம் -1963.
-
-