தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சமீபகாலமாக
அவ்வப்போது குதூகலம் தரும் நற்செய்திகள் வந்து
கொண்டேதான் இருக்கின்றன. "சிவாஜி', "தசாவதா
ரம்' படங்களின் உலகளாவிய வெற்றி, "பருத்திவீரன்,
"வெயில்' படங்கள் உலகப்பட விழாக்களில் பாராட்டு
கள் பெற்று திரும்பியது என்று தொடரும் வெற்றி பரி
சுகளில் மிக சமீபத்தில் வந்து சேர்ந்தன ஏ.ஆர். முருக
தாசின் பிரம்மாண்ட பாலிவுட் "கஜினி' வெற்றியும்,
ஏ.ஆர்.ரஹ்மானின் சிகரம் தொட்ட ஹாலிவுட் ஆஸ்
கர் வெற்றியும்.
லேட்டஸ்ட் ஹாட் மேட்டர் என்னவென்றால்...
தமிழ்த் திரைப்படப் பாடல்கள் இப்போதெல்லாம்
பள்ளி, கல்லூரி மற்றும் கோயில் திருவிழாக்களைத்
தாண்டி, 5 ஸ்டார் ஹோட்டல்களில் நடைபெ
றும் பார்ட்டிகளிலும், டிஸ்கொதேக்களிலும்
ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன. வழக்க
மாக நவநாகரீக மேல்தட்டு மக்கள் சந்தித்து
ரிலாக்ஸ் செய்து கொள்ளும் இந்த இடங்க
ளில் மேற்கத்திய இசைதான் முழங்கும்.
அதற்கு வயது பாகுபாடின்றி, பாலின வேறு
பாடின்றி டான்ஸ் ஆடித் தீர்ப்பர் "பார்ட்டி
அனிமல்கள்'.
எதிலும் வித்தியாசம் வேண்டுமே! எத்தனை நாள்
தான் வெளிநாட்டவர்கள் போடும் "வெஸ்டர்ன்
பீட்'களுக்கே ஆடிக்கொண்டிருக்க முடியும்? "கொஞ்
சம் நம்மூர் லோக்கல் குத்தும் குத்தினால் எப்படியிருக்
கும்'- என்று உட்கார்ந்து "டிஸ்க் ஜாக்கிகள்' யோசித்த
தின் விளைவோ... அல்லது ஏ.ஆர்.ரஹ்மானின் வரு
கைக்குப் பின் வந்த பல இளம் மியூசிக் டைரக்டர்கள்
"குத்த' வெச்சு உட்கார்ந்து சிந்த சிந்த போட்ட இளமை
யான குத்துக்களின் விளைவோ என்னவோ... "அட்
ரட்றா நாக்க முக்க...', என்று பிளிறுகின்றன ஈவ்னிங்
பார்ட்டிகள். இதில் முக்கியமாக, "வேர் ஈஸ் தி
பார்ட்டி...', "நாக்க முக்க...', "அப்படிப்போடு...',
"டாக்ஸி டாக்ஸி...' போன்ற குத்துப் பாடல்களுக்குத்
தான் அலறல் ஆட்டம் போட்டுகிறார்களாம் பார்ட்
டிக்கு வருபவர்கள்.
இதுபற்றி, "தமிழ் சூப்பர் ஹிட் படங்களிலிருந்து
டப்பாங்குத்து பாடல்களை போடச் சொல்லிக் கேட்
பதுதான் தற்போது பார்ட்டியில் கலந்து கொள்பவர்க
ளின் புது ஃபேஷன் ஆகியிருக்கிறது' என்கிறார்கள்
பார்ட்டிவாசிகளுக்கு பிடித்த பாடல்களை ஒலிபரப்
பும் "டி.ஜே'க்கள் என்று சுருக்கமாக குறிப்பிடப்படும்
"டிஸ்க் ஜாக்கிகள்'.
""தமிழ் சாங்ஸýக்கு ரசிகர்கள் அதிகரித்துவிட்டார்
கள். இளைஞர்களோ வயசானவங்களோ, சென்னை
வாசிங்களோ அல்லது வேற நகரத்தைச் சேர்ந்தவங்
களோ யாராயிருந்தாலும் இப்போ டப்பாங்குத்து
பாடல்களைத்தான் பார்ட்டியில் விரும்பிக் கேட்கி
றார்கள். அதுவும் தமிழ்ப் பாடல்களைதான் நிறைய
பேர் போடச் சொல்லி செம டான்ஸ் மூவ்மெண்ட்ஸ்
கொடுக்கிறாங்க. தமிழ் சாங்ஸýக்கு இப்படி ஏற்பட்டி
ருக்கிற திடீர் வரவேற்பால எங்க ஹோட்டல்ல ஒவ்
வொரு மாசமும் "தமிழ் மியூசிக் நைட்'னு ஒண்ணை
டெடிகேட் பண்ண ஆரம்பிச்சிருக்கோம். அதுக்கு
டாப் லெவல்ல வரவேற்பு கிடைச்சிருக்கு'' என்கிறார்
சென்னையின் பெரிய நட்சத்திர ஹோட்டல் ஒன்றின்
டி.ஜே.
அவரே தொடர்ந்து, ""தென்னிந்தியர்கள்தான் இப்
படி தமிழ்ப் பாட்டுகளை விரும்பி கேட்கிறதா நீங்க
நினைக்கலாம். ஆனா உண்மை என்னன்னா வட
இந்திய மக்கள்தான் தென்னிந்தியர்களை
விட இப்போ தமிழ்ப் பாட்டை விரும்பிக்
கேட்கிறாங்க. அவங்களுக்கு, தமிழ்
மொழியும், பாட்டோட வரிகளும் புரிய
லைன்னாலும் "நாக்கமுக்க...', "அப்படிப்
போடு'னு வார்த்தைகளும், அதற்கான
மியூசிக்கும் "கேட்சிங்'கா இருக்கிறதால
ரொம்ப ரசிச்சு ஆடறாங்க!'' என்கிறார்.
சென்னையிலுள்ள ரெசிடென்ஸி
ஹோட்டலில் பணிபுரியும் டி.ஜே. பாலா, ""எங்க
ஹோட்டலின் பார்ட்டி நைட்களை நாங்க தமிழ் மியூ
சிக்கால்தான் நிரப்புறோம். சில பேர் புத்தம்புது
பாடல்களோடு, "காசுமேல காசு வந்து...', "உயிரின்
உயிரே...' போன்ற கொஞ்சம், நடுத்தர பாட்டுகளை
யும் ஞாபகம் வச்சி டெடிகேட் பண்ண சொல்றாங்க.
இப்படி தமிழ் மியூசிக் பார்ட்டி, பப் போன்ற பல
மொழிக்காரர்கள் கூடும் இடத்தில் ஒலிக்க ஆரம்பித்தி
ருப்பது தமிழ் மியூசிக் டைரக்டர்களுக்கு கிடைத்திருக்
கிற பெருமை. என்னைப் பொருத்தவரைக்கும் நான்
இதுக்காக ஏ.ஆர்.ரஹ்மானுக்குத்தான் தேங்க்ஸ்
சொல்வேன். ஒரு மியூசிக் டைரக்டர்கிட்டே இருந்து
வருகிற நல்ல இசை உலகத்தரமாகவும்
இருக்கும்போது, அதுக்கு மொழி ஒரு
தடையே இல்லைன்னு நிரூபிச்சவர்
அவர்'' என்கிறார்.
டப்பாங் குத்துப் பாடல்களுக்கு
ஹோட்டல் மற்றும் பப் பார்ட்டிக
ளில் மட்டும் மவுசு வந்திருக்க
வில்லை. சமூக சேவை அமைப்
பைச் சேர்ந்தவர்கள்
கூடும், கெட்-டுகெதர்களி
லும்
மவுசு வந்தி
ருக்கிறது.வெறும்
ஆட்டம் பாட்டங்களுக்
காக என்றில்லாமல், சில
நல்ல விஷயங்களில் முடி
வெடுப்பதற்காகவும் சமூக
சேவகர்கள் கூடும் இது
போன்ற இடங்களில் டப்
பாங் குத்துப் பாடல்களுக்கு
வரவேற்பு கிடைப்பது
கொஞ்சம் ஆச்சரியமானது
தான் என்கிறார்கள் தமிழ்த்
திரையுலகினர்.
""என் மகளின் பிறந்த
நாளுக்கு வட இந்தியாவிலி
ருந்து என்னுடைய உறவி
னர்கள் நிறைய பேர் இங்கே
வந்திருந்தார்கள். அவர்கள்
அனைவருமே "ஓ போடு...',
"அப்படிப் போடு...' பாடல்
களை விரும்பி கேட்டது
எனக்கு ஆச்சரியமாக இருந்
தது. தமிழ் மியூசிக் அடைந்தி
ருக்கும் "ரீச்'சை சொல்ல,
இது ஒன்றே போதும்'' என்கி
றார் ரச்னாகுமார் என்கிற
சமூக சேவகி.
ஒரு செல்ஃபோன் கம்பெ
னியின் விளம்பரப் படத்தில்
அபிஷேக் பச்சன் "அப்படிப்
போடு...' பாட்டுக்கு
போட்ட ஆட்டம்தான் இந்த
தமிழ் மியூசிக் வரவேற்பிற்
கான அச்சாரம் என்கிறார்
கள் விமர்சகர்கள். வினோத்
கோபால் என்ற நிகழ்ச்சி ஏற்
பட்டாளரும் இதை ஆமோ
திக்கிறார். அவர், ""சமீபத்தில்
நான் மும்பை போயிருந்த
போது, டிஸ்கொதேக்குப்
போயிருந்தேன். அங்கே ஒரு
பாட்டுக்கு நிறைய பேர் ஆடி
கிட்டிருந்தாங்க. எனக்கு
முதல்ல ரொம்ப ஆச்சரியமா
இருந்தது. ஏன்னா அவ்வ
ளவு பேரும் அத்தனை ரசிச்சி
ஆடினது ஒரு தமிழ்ப் பாட்
டுக்கு!'' என்றார் அவர். சமீ
பத்தில் சென்னையில் பல
மாடல்கள் கலந்து கொண்ட
"ரேம்ப் வாக்' நிகழ்ச்சி ஒன்
றுக்கு ஏற்பாடு செய்து இருந்
தாராம். அதில் நடந்த ஒரு
விஷயம் இதுவரை நாம் யாரும் கேள்விப்பட்டிரா
தது. அதில் மாடல்கள்தான் "வாக்' போட்ட
னர் என்றாலும், அவர்கள் "வாக்'கிற்கு
"பேக்'கில் ஒலித்தது தமிழ் சினிமா குத்
துப் பாடல்கள் என்பது சர்ப்ரைஸ்
ஹைலைட்.
""நானும் அந்த ரேம்ப் வாக் ஷோவின் கோரி
யோகிராஃபர் சஞ்சய்யும் ஏதாவது வித்தியாசமாக
முயற்சி செய்து நிகழ்ச்சியை இன்னும் சுவாரஸ்ய
மாக்க எண்ணினோம். பின் மும்பையிலேயே டிஸ்
கோதேவில் தமிழ்ப் பாடல் ஒலிக்கும்போது, சென்
னையில் நடக்கும் ஒரு நிகழ்ச்சியில் தமிழ் மியூசிக்கை
ஏன் ட்ரை பண்ணக்கூடாது என்று யோசித்தோம்.
அதையே செயல்படுத்தவும் செய்தோம். டப்பாங் குத்
துப் பாடல்கள் ஒலிக்க, மாடல்கள் அதற்கேற்ப அசத்
தல் நடை நடந்தனர். இதனால் எங்களுக்கு எதிர்பார்த்
ததுக்கும் மேலான ஆதரவு கிடைத்தது. ஷோவும்
பெரிய ஹிட் ஆனது!'' என்கிறார் வினோத் கோபால்.
குத்துப் பாடல்களுக்கு குறைவான வாழ்நாள்தான்
என்பதால் மாற்று முயற்சியாக இன்னொன்றையும்
மேற்கொள்கிறார்கள் டிஸ்க் ஜாக்கிகள். தமிழில் சமீ
பத்தில் ஹிட் ஆன ரீ-மிக்ஸ் பாடல்களை பார்ட்டி
ஹாலில் ஒலிபரப்புபவர்கள், தாங்களே ரீ-மிக்ஸ்
செய்த பாடல்களையும் ஒலிபரப்பி "பார்ட்டி அனி
மல்'கனை உற்சாகப்படுத்துகிறார்கள்.
70-களில் திரும்பிய பக்கமெல்லாம் ஹிந்திப் பாடல்
கள்தான் தமிழகத்தில் ஒலித்துக் கொண்டிருந்தன.
பாமரர்கள்கூட ஹிந்தி பாடல்களுக்கு ஆட்பட்டி
ருந்த அந்த காலத்தில், இளையராஜா என்ற இளைஞர்
மீண்டும் தமிழிசைக்கு தன்னிசை மூலம் புத்து
யிர் கொடுத்தார். ஏ.ஆர்.ரஹ்மான்
என்ற இளைஞர் ஹிந்தியிலேயே
போய் இசையமைத்து
அந்த ரசிகர்க
ளைக் கவர்ந்
தார். தற்
போது ரஹ்மா
னைப் பின்பற்றி
நவீன இசையை வழங்கிவ
ரும் யுவன், ஹாரிஸ், விஜய்
ஆண்டனி போன்ற இளசு
கள் தமிழில் இசைய
மைத்தே பிற மொழி
யி ன û ர யு ம்
கவர்ந்திருப்
பது குறிப்
பிடத்தக்க
ந ல் ல
வ ள ர் ச் சி
தான்!
http://www.cinemaexpress.com/pdf/
