Quote:
Originally Posted by kiru
Venkiram, I dont think IR will have problems collaborating with others. He did very well with Lazlo Kovacs, the conductor of the Budapest Symphony Orchestra.
தனிப்பட்ட சொந்த ஆல்பம் சம்பந்தமாக ஒருவரை தேர்ந்தெடுத்து அவருடன் பணியாற்றுவது வேறு.. ஹாலிவுட் படங்களுக்கு இசையமைக்கும் பணி என்பது வேறு என நினைக்கிறேன்.
இணையத்தில் படித்து தெரிந்து கொண்டதுவரை, ஹாலிவிட்டில் ஒரு படத்தின் இசையமைப்பாளர் எனத் தேர்வு செய்வது நம்ம நாட்டில் Govt Tender விடுவதுபோல, ஒரு ஒழுங்கு முறை. படத்தின் கதையும், கதைக்களனும் பரிசலிக்கப்பட்ட இசையமைப்பாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டு, அவர்களிடமிருந்து படத்தின் சாராம்ச இசை பெறப்படுகிறது. John williams-கூட விதிவிலக்கல்ல.. அந்த முறையில் ஆட்படுத்தப்பட்டே, அதில் இயக்குனர்களுக்கும், மற்ற சம்பந்தப்பட்ட கலைஞர்களுக்கும் திருப்தி அளிக்கப்பட்டால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்படுகிறார். மேலும், இசையமைப்பாளரின் எல்லா பின்னணி இசைக் குறிப்புக்களும் அப்படியே படத்தில் இடம்பெறப் போவதில்லை. இயக்குனர் மற்றும் இறுதித் தொகுப்பை உருவாக்கும் கலைஞர்கள் தேவையில்லாத பட்சத்தில் சில இசைத் தொகுப்புக்களை நீக்கிவிட்டு, தேவை என உணர்வதை தேர்வு செய்து படக்காட்சியோடு சேர்க்கிறார்கள். கோடம்பாக்கத்தில் ராஜா செய்துவரும் வேலைகளுக்கும், ஹாலிவுட்டில் நடத்தப்படும் வேலைகளுக்கும் சொந்தக் கருத்தை செயல்படுத்துதல் மற்றும் அதிகார பங்கீடு என்ற முறையில் பார்த்தால் கூட நிறைய வித்யாசங்கள் தென்படுகிறது.