உங்கள் மனைவியும்
மிகுந்த சுவையுள்ள
தித்திப்புக்களை தயாரிகின்றாளா ?
http://i871.photobucket.com/albums/a...ml/Thushar.jpg
uyirullavarai thushar !
Regards
Printable View
உங்கள் மனைவியும்
மிகுந்த சுவையுள்ள
தித்திப்புக்களை தயாரிகின்றாளா ?
http://i871.photobucket.com/albums/a...ml/Thushar.jpg
uyirullavarai thushar !
Regards
அன்புள்ள தமிழ்த் திரை இசைப் பிரியர் ( TFM LOVER ) அவர்களுக்கு
இந்தப் பேராசிரியரின் மாலை வணக்கங்கள் .
இந்த வலைத் தளத்தின் நண்பர்களுக்கெல்லாம் என்னைப் பற்றிக் கொஞ்சம் சொல்லிக் கொள்ள ஆசைப் படுகிறேன் .
நான் பிறந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள செக்காரக்குடி என்ற கிராமம் . நான் வளர்ந்தது , படித்தது எல்லாம் தூத்துக்குடி நகரத்தில் தான் !
தூத்துக்குடி நகரத்தில் உள்ள காமராஜ் கல்லூரியில் இயற்பியல் துறைப் பேராசிரியராக ( PHYSICS PROFESSOR ) முப்பத்து மூன்று ஆண்டுகள் , பணி புரிந்து விட்டு , ஓய்வு பெற்று, தூத்துக்குடி நகரத்திலேயே வசித்து வருகிறேன் .
என்னை எல்லோரும் SSK ( SEKKARAKUDI SUBBIAH PILLAI KANDASAMY ) என்று தான் அழைப்பார்கள் .
நான் ஒரு இன்னொரு தமிழ்த் திரை இசைப் பைத்தியம் !
தமிழ்த் திரைப் படங்களைப் பார்ப்பதும் , அதுவும் பழைய படங்களைப் பார்ப்பதும் அவைகளில் உள்ள பாடல்களை சேகரிப்பதும் தான் எனது பொழுது போக்கு !
உங்களைப் போன்றோர் வழங்கும் பழைய தமிழ்த் திரைப் படப் பாடல்களின் ஒளிப் பதிவுகளைப் பெற்றுக் கொள்ளவே இந்த வலைத் தளத்துக்கு வந்திருக்கிறேன்.
இங்கே நான் என்னிடம் உள்ளதை வழங்கிக் கொண்டும், உங்களிடம் இருந்து பெற்றுக் கொண்டும் ஆனந்தமாக எனது ஓய்வுக் காலத்தைக் கழித்துக் கொண்டு இருக்கிறேன் .
எங்கள் தூத்துக்குடி ஒரு பெரிய மாநகரம். தமிழ் நாட்டிலேயே சென்னைக்கு அடுத்தப் படியாக ஒரு பெரிய துறைமுக நகரம். பல தொழிற்சாலைகள் பல இங்கு இருக்கின்றன . .
இங்கு கிறித்தவர்களும் பலர் இருக்கின்றனர் .
என்னிடம் கல்வி பயின்ற ஒரு கிறித்தவ மாணவன் எனக்கு அனுப்பிய
எங்கள் ஊர் பனிமய மாதா கோயிலின் தங்கத் தேரோட்டம் ஒளிப் பதிவினை
http://www.youtube.com/watch?v=jcNKiAshdxw
ஒரு மாறுதலுக்காக ( திரைப் படப் பாடல்களை மட்டும் தானே நாம் கொடுத்துக் கொண்டு இருக்கிறோம் )
உங்களுக்கு இன்று சமர்ப்பிக்கிறேன் .
உங்களில் பலர் தங்கள் முகத்தினை மறைத்துக் கொண்டு இங்கு
'' மறைந்திருந்தே பார்க்கும் மர்மம் என்ன ? ''
என்று எனக்குக் கேட்கத் தோன்றுகிறது !
நான் கேட்பது தவறு என்றால் என்னைப் பொறுத்துக் கொள்ளுங்கள் !
அன்புடன்
PROF.S.S.KANDASAMY
'' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
vathiyarayya....
innaikuthan vandhu serndhen !
professor sir,
periya kovil therottam superb.
enakkum muyal theevukku poi neechal kathukka try senjadhu.. port-ukku pogum rail thandavalathil odiyadhu, coronation theatre-la murukku vaangi saapitu konde padam parthadhu, jambu mess-la vatha kuzhambu saptadhu, dhanalakshmi bakery macroons... hayyo hayyoo... marupadi rusiyai kilappi vittuteenga !!
Hi all,
"Manapandal" padappadalgalin video thara mudiyuma, esp. "unakku mattum unakku mattum" (P Suseela) and 'Paarthu paarthu nindradile paarvai izhanden" endra arumayana PBS-PS duet (VRin melodious musickirku oru siranda sandru indha paadal esp. the beginning humming).
Anbudan
Ramaswamy
wow !
inru malar solvadhum
vaazhai maram solvadhum
endhan manam solvadhum
(ramaswamyji solvadhum)
orey peryarallavo ?
adhudhan Manapandhal :P
(பேராசிரியர் கந்தசாமி, ராமசாமி, தமிழ்த் திரை இசைப் பிரியர், மது என அனைவரின் உள்ளங்களும்)
ஒரே ராகம்,
ஒரே தாளம்,
ஒரே (bha)பாவம்
பாடுதம்மா...
அன்புடன்
1960களின் கடைசியில் திரை இசைத் திலகம் அவர்கள் தெலுங்குத் திரை யுலகில் அதிகம் படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்த கால கட்டத்தில் அவ்வப்போது தமிழ்த் திரைப்டங்களிலும் தன் கோலோச்சிக் கொண்டிருந்தார். என்றாலும் இந்தக் கால கட்ட்த்தில் அவர் இசையமைத்த படங்களில் தெலுங்கின் பாதிப்பு இருக்கத் தான் செய்தது. அப்படிப் பட்ட ஒரு நேரத்தில் வந்த படம் தான் துணைவன். இப் படம் அவருக்கு ஒரு சவாலாக அமைந்து மிகவும் அருமையான தமிழிசை தந்தார். இப்படத்தில் அனைத்துப் பாடல்களுமே மிகப் பிரபலமாயின. ஆனால் அதற்குப் பின் அதிகம் ஒலிபரப்பப் படாத சில பாடல்களில் ஒன்று இப்போது நாம் காணும் இப்பாடல். டி.எம்.சௌந்தரராஜன், சுசீலா இணையில் மிகவும் இனிமையான பாடல். நான் யார் என்பதை நீ சொல்ல, நீ யார் என்பதை நான் சொல்ல, என்று பல்லவியிலேயே கவிஞர் தாம்பத்யத்தின் பெருமையையும் புரிதலின் அருமையையும் எடுத்துரைத்த பாடல். ஏவி.எம். ராஜன், சொகார் ஜானகி இணையில் இப்பாடலைப் பார்ப்போம்.
http://www.youtube.com/watch?v=QVUlvWpbnN0&feature=relmfu
அன்புடன்
அன்புள்ள மது ( மது தானே, மாது இல்லையே ! , இந்த ஆங்கிலம் நம்மை ரொம்பக் குழப்புகிறது ! ) அவர்களுக்கு
எனது மாலை வணக்கங்கள் !
நீங்கள் வசிப்பது நமது பெங்களூருவாகத் தான் இருக்க வேண்டும் என்று நான் அனுமானிக்கிறேன்.
அதனால் தான் பெங்களூருவை எங்களூரு என்று சொந்தம் கொண்டாடுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.
ஆமாம், கணியன் பூங்குன்றன் சொன்னது போல
நமக்கு
'' யாதும் ஊரே யாவரும் கேளிர் ''
தானே !
ஜாக்கிரதை, கன்னடத்துக்காரர்கள் அப்படி சொந்தம் கொண்டாட உங்களை அனுமதிக்க மாட்டார்கள் !
ஆனால் இந்தியாவில் உள்ள எந்த ஊரும் நம்ம ஊரு தான் !
அப்படித் தானே இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் சொல்லுகிறது !
ஆமாம், எங்களூரில் நீங்கள் இருந்தீர்களா, என்ன ?
அல்லது எங்களூரு தான் உங்களூருமா ?
முயல் தீவு கடலில் குளித்ததும் , ஓடும் ஊதும் ரயிலைப் பார்த்ததும் , காரனேசன் தியேட்டரில் முறுக்கு வங்கித் தின்று கொண்டே படம் பார்த்ததும்
( நானும் முறுக்கு தின்று கொண்டே வஞ்சிக் கோட்டை வாலிபனைப் பார்த்து ரசித்திருக்கிறேன் ) !
என்ன ஒரு மலரும் நினைவுகள் !
உங்கள் மலரும் நினைவுகளை நானும் ரசித்தேன்.
அன்புடன்
prof.s.s.kandasamy
'' யான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம் ''
professor ayya
நான் எங்களூரு என்பது நம் சிங்கார சென்னையைத்தான் :P
ஆனாலும் நான் பெங்களூரு, தூத்துக்குடி, திருச்சி, தஞ்சாவூர், மும்பை இன்னும் பல சிறிய பெரிய நகரங்கள், கிராமங்கள் எல்லாவற்றிலும் குப்பை கொட்டி இருக்கிறேன். ஹி ஹி.. அதாங்க வேலை பார்த்திருக்கிறேன்.
முத்து நகரத்தில் இரண்டு வருடங்கள் இருந்தேன். அவ்வளவுதான். ஆனாலும் எங்கே இருந்தாலும் அந்த ஊரை நான் மறப்பதே இல்லை.
அன்புடன்.
மது