பம்மல் சார்.. ஒரே வார்த்தையில் சொல்வதென்றால்.. அற்புதம்
Rakesh..... gone thru your blog & enjoyed. .. ""with actors mistaking getup change for good acting"" ... apt observation..
Printable View
பம்மல் சார்.. ஒரே வார்த்தையில் சொல்வதென்றால்.. அற்புதம்
Rakesh..... gone thru your blog & enjoyed. .. ""with actors mistaking getup change for good acting"" ... apt observation..
இன்றைய தேதியில் பம்மலாரைப் பார்த்து நடிகர் திலகம் பாடக் கூடிய பாடல்
பொன்னை விரும்பும் பூமியிலே
என்னை விரும்பும் ஓருயிரே
புதையல் தேடி
அலையும் உலகில்
இதயம் தேடும் என்னுயிரே
ஆலயமணி நடிகர் திலகத்தின் 83வது படம் என்பது குறிப்பிடத் தக்கது
தான் 82 வயது முடிந்து 83ல் நுழையும் போது பம்மலார் என்ற ரசிகர் தன்னைப் பற்றி 83 குறிப்புகள் அளிப்பார் என்று நடிகர் திலகம் யூகித்து வைத்திருந்தாரோ
வெல்டன் பம்மலார்
Thanks for reading, Mahesh. Prabhu thread inactive, and I am guilty your honour :?
சிவாஜி - THE BOSS - விகடன் பொக்கிஷம்
சிவாஜி 'பராசக்தி'யில் நடித்துக்கொண்டிருந்த போதே 'மனோகரா' படத் தயாரிப்பு வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அதற்கு நான் திரைக்கதை வசனம் எழுதிக்கொண்டிருந்தேன்.
அந்தச் சமயத்தில், 'மனோகரா'வில் கே.ஆர்.ராமசாமியை மனோகரனாக நடிக்க வைப்பதாக இருந்தது. ஆனால், சில காரணங்களால் அவரால் அந்தப் படத்தில் நடிக்க இயலவில்லை. 'பராசக்தி'யில் சிவாஜியின் நடிப்பும், வசன உச்சரிப்புகளும் சிறப்பாக இருந்ததைக் கண்கூடாகக் கண்டதனால், சிவாஜியையே மனோகரனாக நடிக்க வைக்கலாம் என்று தயாரிப்பாளரான ஜூபிடர் சோமுவிடம் சொன்னேன். அதற்கான ஒப்பந்தம் ஒன்றும் போடப்பட்டது. அதற்கிடையே, சிலர் ஜூபிடர் சோமுவிடம் சென்று அவரது மனத்தைக் குழப்பினார்கள். அந்தச் சமயம், 'பராசக்தி' 1952 தீபா வளியன்று வெளிவந்தது. சென்னை அசோக் தியேட்டரில் 'பராசக்தி' வெளியான அன்றே - முதல் நாள் - அதுவும் மாட்னி காட்சிக்கு நானும் ஜூபிடர் சோமுவும் கிருஷ்ணன் பஞ்சுவுமாகப் போய்ப் பார்த்தோம்.
படம் முடிந்தது. சிவாஜியின் உணர்ச்சிமிக்க நடிப்பைப் பார்த்துவிட்டு, 'யார் என்ன சொன்னாலும் சிவாஜி கணேசன் தான் மனோகரனாக நடிக்கிறார்' என்று மெய்சிலிர்க்கச் சொன்னார் ஜூபிடர் சோமு."
- கலைஞர் மு.கருணாநிதி (21.8.88)
"சிவாஜிகணேசன் ஒரு 'தெய்வ மலர்'. திரு 'கல்கி' அவர்கள் 'சிவகாமியின் சபத'த்தில் சிவகாமி பற்றி கூறும்போது, 'அவளும், அவளுடைய கலையும் தெய்வத்திற்கே அர்ப்பணமானவை. மனி தர்களால் தொடமுடியாது' என்கிறார். நானும் அதையே சொல்கி றேன். திரு. கணேசன் அவர்களின் கலை, தெய்வத்திற்கு அர்ப்பண மானது! நாம் தூரத்தே நின்று ரசிக்கலாம்; ஆனால் அது நமக்கும் அப்பாற்பட்டது. திருஞான சம்பந்தருக்கு பாலூட்டிய தாய், இந்த நடிப்புக் கடலுக்கும் ஒரு துளி ஊட்டியிருப்பாளோ? அதனால்தான் இவர் பேசும்போது தமிழ் அவ்வளவு இனிக்கிறதோ! நான் இவரது நடிப்புத் திறனைக் கண்டு வியக்காத நாளே இல்லை. கோலார் பொன் சுரங்கம் வற்றி விட்டது என்று சொல்கிறார்களே, கிம்பர்லி வைரச் சுரங்கங்கள் வெறுமையாகிவிட்டன என்று சொல்கிறார்களே... இந்த நடிப்புச் சுரங்கம் மட்டும் வற்றுவதில்லையே!
இந்த உயர்ந்த நடிகரின் வெற்றி இவரது உழைப்பில்தான் இருக்கிறது. 'தெய்வ மகன்' படத்தில் மூன்று சிவாஜிகளும் தோன்றும் ஒரு காட்சியை நான் முதன்முறையாகப் பார்த்தபோது, எனக்கே மூன்று தனிப்பட்டவர்கள் நடிப்பதாக ஒரு பிரமை ஏற்பட்டது! அன்று அவர் நடிப்பின் பூரணத் துவத்தைக் கண்டேன். ஆனால் அந்த உயர்ந்தவரிடம்தான் எத்தனைப் பணிவு, எத்தனைப் பண்பு!"
- டைரக்டர் ஏ.சி.திருலோக்சந்தர் (21.9.69)
"சிவாஜி கணேசனை நான் மிகவும் மதித்து, போற்றிப் பாதுகாக்கும் காரணம், அவரை எதற்கும் எப்பொழுதும் அணுகி, எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். அவருக்கு அவ்வளவு விஷயங்கள் தெரியும்! எனக்கு எந்தச் சந்தேகம் வந்தாலும் நான் அவரிடம் சென்றுதான் நிவர்த்தி செய்து கொள்வேன். தீர ஆலோசித்து, பொறுமையாக விஷயத்தை விளக்குவதில் அவருக்கு ஈடு அவரேதான்.
படப்பிடிப்பு என்று வந்து விட்டால், சிவாஜி காரியத்தில் மிகவும் கண்ணாக இருப்பார். தம்மால் மற்றவர்களுக்கு ஒரு சிறு துன்பம் வருவதையும் சகியார். என் வாழ்வில் இவர் என்றுமே மறக்க முடியாதவர்; மறக்கவும் இயலாதவர்."
- நடிகை உஷாநந்தினி (22.7.73)
"சாதாரணமாக யாருடனாவது பேச ஆரம்பிக்கும்போது, முதலில் அவர்கள் குடும்பத்தைப் பற்றி அக்கறையாக விசாரிப்பார் சிவாஜி.
மற்றவர்களின் 'மேனரிஸ'ங்களை உன்னிப்பாகக் கவனித்து வைத்துக்கொள்வார். ஒருவர் சிகரெட் பிடித்தால் கூட எப்படிப் பிடிக்கிறார் என்று பார்த்துக் கொள்வார். ஒரு முறை எந்தெந்தக் குணாதிசயங்கள் உள்ளவர்கள் எப்படி சிகரெட் பிடிப்பார்கள் என்று சுமார் 15 வகையாக சிகரெட் பிடித்துக் காட்டினார்!
ஷூட்டிங்கில் தன் பாகம் எடுத்து முடிக்கும்வரையில் செட்டை விட்டு வெளியே ஒரு அடிகூடப் போகமாட்டார்.
"சிவாஜி சார்! நீங்கள் மற்ற நடிகர்களோடு நடித்தால் ஷாட்டில் அவர்களை ஏன் 'ஓவர் ஷேடோ' செய்கிறீர்கள்? அவர்கள் அத்தனைக் கஷ்டப்பட்டு நடித்த பிறகு உங்கள் செய்கையால் அது ஒன்றுமில்லாமல் போய் விடுகிறதே!" என்று ஒரு முறை அவரிடம் துடுக்காகக் கேட்டுவிட்டேன்.
சிவாஜி என்னை ஒரு முறை ஏறிட்டுப் பார்த்தார். "யூ ஆர் கரெக்ட்! ஆனால், அதென்னவோப்பா...காமிரா முன்னால் நிற்பதை நான் ஒரு பாக்ஸிங் ரிங்கில் நிற்பது போலவே கருதுகிறேன். என்னோடு யார் நின்றாலும் அவர்களை நான் 'வின்' பண்ணத்தான் முயலுவேன். எனக்கு அது ஒரு 'சாலஞ்ச்' மாதிரி" என்றார்.
இது போன்ற தர்மசங்கடக் கேள்விகளை இவரிடம் எவ்வளவு வேண்டுமானாலும் கேட்கலாம். இவருக்குக் கோபமே வராது.
செட்டில் இவரைச் சந்திக்கச் சென்றால், உடனே கூப்பிட்டு விறுவிறு என்று விஷயத்தைப் பேசிப் பத்திரிகையாளர்களை அனுப்பி விடுவார். பத்திரிகை அவசரம் தெரிந்தவர்!"
- நிருபர் பாலா (16.11.80)
"இனி நடிகர்களைப் பாராட்டி ஏதாவது பட்டம் கொடுக்க வேண்டுமானால் 'வி.சி.கணேசன்' என்ற பட்டத்தைக் கொடுங்கள். அதுதான் மிக உயர்ந்தது!"
- சத்யராஜ் (12.10.86)
"'நான் நடித்துக் கொண்டே சாக வேண்டும்' என்று அண்ணன் ஏதோ ஒரு பத்திரிகையில் பேட்டி அளித்ததைப் படித்தேன். இதைப் பார்த்துவிட்டு எல்லாருமே 'நான் நடித்துக்கொண்டே சாக வேண்டும்' என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். அண்ணன் மட்டும் தான் அப்படிச் சொல்லலாம். அவருக்குத்தான் அந்தத் தகுதி உண்டு. மத்தவங்க நடிக்கறதைப் பார்த்துட்டுத்தான் ஆயிரக்கணக் கான பேர் தினம் தியேட்டர்ல சாவறானே, போதாதா?"
- நாகேஷ் (12.10.86)
"'தேவர்மகன்' ஷூட்டிங்... அப்ப நான் சினிமாவுக்கு வந்த புதுசுங்கறதால, சூப்பரா நடிக்க ணுங்கற நினைப்புல ஓவர் ஆக்ஷன் பண்ணிடுவேன். அந்தப் படத்தில், கமல்ஹாசனோட அப்பா சிவாஜி சார் இறந்து போகிற ஸீன்! சிவாஜி இறந்து கிடப்பார். பக்கத்தில் குழந்தைகள்... கால்மாட்டில் நானும் சங்கிலி முருகனும். கமல் சார் கொஞ்சம் தூரத்திலிருந்து ஓடி வருவார். எல்லோரும் சேர்ந்து அழணும். கமல் சார் என்னிடம், 'தத்ரூபமா அழணும்பா' என்றிருந்தார். 'ஷாட் ரெடி!' என்று குரல் கேட்டதுமே... 'ஐயோ! எங்களை விட்டுப் போயிட்டீங்களேய்யா... ஐயா!' என்று எட்டுப்பட்டிக்கும் கேட்கிற மாதிரி குய்யோ முறையோ என ஓலமிட்டு அழ ஆரம்பித்தேன். பத்து செகண்ட்கூட ஆகியிருக்காது. 'கட், கட்' என்றபடி பிணம் எழுந்துவிட்டது. சிவாஜி சார் தான்! என்னைப் பார்த்து, 'இங்க வாடா' என்றார் முறைத்தபடி. நான் பயந்துகொண்டே நெருங்கினேன். 'நீ ஒருத்தன் அழுதா போதுமா... மத்தவன் யாரும் அழ வேண்டாமா? என் மகனா வர்ற கதாநாயகனே மெதுவா அழறான். நீ ஏண்டா இந்தக் கத்துக் கத்தற? நீ கத்தற கத்தில் உன் உசுரும் போயிடப்போகுது! துண்டை வாயில் வெச்சுக்கிட்டு கமுக்காம விசும்பி அழு, போதும். ஓவர் ஆக்ஷன் பண்ணா உதைபடுவே படுவா!' என்றார். சிவாஜி சாரைக் கோபப்பட வைத்த எனது அந்த ஓவர் ஆக்ஷனை நினைத்தால், இப்போதும் சிரிப்பு வரும் எனக்கு!"
- வடிவேலு (9.3.97)
"மெட்டுக்குப் பாட்டா, பாட்டுக்கு மெட்டா என்று கேட்டால், பாட்டுக்கு மெட்டு என்பது தான் சிறந்தது. அந்தக் காலத்தில் கண்ணதாசனும் மெல்லிசை மன்னரும் அப்படித்தான் செய் தார்கள். 'புதிய பறவை'யில் ஒரு புதுமை. படத்தில் வரும் ஒரு சோகப் பாட்டுக்கு சிச்சுவேஷ னைச் சொல்லிவிட்டுப் போய்விட் டார் டைரக்டர். கண்ணதாசனால் எவ்வளவோ முயன்றும் பாடல் எழுத முடியவில்லை. 'நீங்கள் முதலில் மெட்டமையுங்கள். அதற்குப் பாட்டெழுதுகிறேன்' என்று எம்.எஸ்.வி-யைக் கேட் டார். அவராலும் மெட்டமைக்க முடியவில்லை. இறுதியில் நடிகர் திலகத்தை அழைத்து, 'இந்த சிச்சு வேஷனுக்கு ஒரு பாடல் வந்தால், நீங்கள் எப்படி நடிப்பீர்கள்?' என்று கேட்க, அவர் பாடல் வரிகளே இல்லாமல் அற்புதமாக நடித்துக் காட்டினார். அதைப் பார்த்துத்தான் கண்ணதாசன் பாட்டெழுதினார். அந்தப் பாடல் தான் 'எங்கே நிம்மதி'!".
கவிஞர் வைரமுத்து (4.2.90)
Grouch :thumbsup:
நேற்று இரவு 12 மணி. வசந்த மாளிகையின் பிறந்த நாள் பற்றி பதிந்து விட்டு தூங்கலாம் என்று நினைக்கும் போது சுவாமியின் அழைப்பு. சாதாரணமாக நாங்கள் இருவரும் இரவில் [பெரும்பாலும்] உரையாடுவது வழக்கம் என்றாலும் இந்த நேரத்தில் கூப்பிட மாட்டார். நேற்று ஒரு ஐந்து நிமிடம் பேசலாமா என்று கேட்டு விட்டு இப்படி ஒரு பதிவு வர இருப்பதை சொன்னார். முதலில் ஒரு சில பாயிண்ட்-களை மட்டும் சொல்கிறேன் என்று சொன்னவர் கிட்டத்தட்ட 45 நிமிடம் எடுத்துக் கொண்டு அனைத்து பாய்ன்ட்களையும் சொல்லி முடித்து உரையாடலை முடித்தார். முதலில் தூக்க கலக்கத்தில் கேட்க ஆரம்பித்த நான் போக போக அவர் சொன்னவற்றில் மூழ்கி விட்டேன். அவரிடம் நான் சொன்னது ஒன்றுதான். நமது ஹப்பில் நமது திரிதான் Thread of the Hub என்று அழைக்கப்படுகிறது. அதற்கான காரணமே இது போன்ற தகவலார்ந்த பதிவுகள்தான். Hats Off to you Swami!
இந்த 83-ஐயும் 83-வது படமான ஆலய மணியையும் அழகாக இணைத்த ராகவேந்தர் சாருக்கும் வாழ்த்துகள்.
என் பங்குக்கு ஒன்றை சேர்த்துக் கொள்கிறேன். 83 -ஐ மாற்றிப் போட்டால் 38. நடிகர் திலகத்தின் 83 பற்றி 38 வயது சுவாமி எழுதுவதும் முன்னரே தீர்மானிக்கப்பட்ட ஒன்றோ?
நாளை முதல் ஒரு வாரத்திற்கு சென்னை நட்ராஜ் அரங்கில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நடிகரின் படம் திரையிடப்படுகிறது. அவ்வகையில் ஞாயிறுக்கிழமை நடிகர் திலகத்தின் நாளாக அறிவிக்கப்பட்டு அன்று ஆண்டவன் கட்டளை திரையிடப்படுகிறது. ஞாயிறு மாலை களை கட்டி விடும்! அன்று இரண்டு படங்கள் மினி மோட்சத்தில் பதிய பறவை, நட்ராஜில் ஆண்டவன் கட்டளை.
அன்புடன்
ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி
ஆயிரம் இருக்குது சுபதினம்
ஆனால் நடிகர் திலகத்தின் ரசிகர்களை பொறுத்தவரை
அக்டோபர் 1 என்றும் சுபதினம்.
தமிழ்நாட்டு கலை உலகின் திலகத்திற்கு பிறந்த நாள்.
கலைத்தாயின் தவப்புதல்வனே
கலையுலம் உள்ளவரை
உன் பெயர் வாழும்!
உன் புகழ் வாழும்!
அன்புடன்
PS: NOV, Rakesh,
I have been keeping you on tenterhooks for a long time regarding the NT movie that would be released in theatres in Malaysia!
இன்று நடிகர் திலகத்தின் பிறந்த நாளை முன்னிட்டு அந்த இனிய செய்தி இதோ!
2011-ல் உலகளாவிய அளவில் தியேட்டர்களில் திரையிடப்பட உள்ள அந்த படம் கர்ணன்.
டியர் ஷிவ்ராம் சார்,
பாராட்டுக்கு நன்றி! நடிகர் திலகத்தின் பிறந்தநாள் பற்றிய மலரும் நினைவுகள் அருமை.
டியர் நௌ சார்,
83 கரவொலிகளுக்கும் என் இனிய நன்றிகள்!
சகோதரி சாரதா,
தங்களின் இதயபூர்வமான, ஆத்மார்த்தமான, தீர்க்கமான பாராட்டுக்களுக்கு எனது 83 லட்சம் கோடி பணிவான நன்றிகள்!
டியர் ஜேயார் சார்,
தங்களின் உணர்வுபூர்வமான பாராட்டுக்களுக்கு எனது உளப்பூர்வமான நன்றிகள்!
டியர் சந்திரசேகரன் சார்,
பாராட்டுக்கு நன்றி! தங்களது முயற்சிகள் வெற்றிக் கனிகளைத் தட்டிப் பறிக்கட்டும்!
டியர் மகேஷ் சார்,
அற்புதமான பாராட்டுக்கு அன்பான நன்றிகள்!
டியர் ராகவேந்திரன் சார்,
சிவாஜி 83 பதிவுகளை சிவாஜியின் 83வது படப்பாடல் மூலம் பாராட்டியமைக்கு பல கோடி நன்றிகள்!
83வது படத்தின் இன்னொரு பாடல் நடிகர் திலகத்திடமிருந்து உங்களுக்காக:
"கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா
கலையெல்லாம் கண்கள் சொல்லும் கலையாகுமா
சொல்லெல்லாம் தூயத் தமிழ் சொல்லாகுமா
டாட்காம் எல்லாம் நடிகர்திலகம்.காம் போலாகுமா"
டியர் முரளி சார்,
தங்களின் மனம் திறந்த பாராட்டுக்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!
அன்புடன்,
பம்மலார்.
Dear Rakesh,
Excellent write-up. The present generation should read this piece.
Dear RC,
Thanks a lot for Vikatan 'Sivaji' Pokkisham.
Warm Wishes,
Pammalar.
டியர் பம்மலார்,
தங்களின் பாராட்டுக்கள் என்னை நெகிழ வைக்கவும் அதே சமயம் இன்னும் சிறப்பாக செய்ய வேண்டும் என்கிற கடமையுணர்வைத் தூண்டவும் செய்தன. மிக்க நன்றி. இதோ நமக்காக நடிகர் திலகத்தின் வரிகள்
ஆலமரத்தின் விழுதினைப் போலே
அணைத்து நிற்கும் உறவு தந்தாயே
வாழைக் கன்று அன்னையின் மடியில்
வாழ்வது போலே வாழ வைத்தாயே
இந்த மனமும் இந்த குணமும்
என்றும் வேண்டும் என்னுயிரே
நம் உயிரின் உயிரான நடிகர் திலகத்தின் பிறந்த நாளில் நம் அனைவரின் வாழ்த்துக்களும் சேரட்டும்.
அன்புடன்
ராகவேந்திரன்