Originally Posted by
mr_karthik
அன்புள்ள பம்மலார் அவர்களே,
'தங்கப்பதக்கம்' ஆவணப்பொக்கிஷங்களை, அதன் நாடக வடிவிலிருந்தே துவங்கி, நாடகம் பற்றி அறிந்திராத பலருக்கு அறியவைத்து களைகட்ட வைத்து விட்டீர்கள். ஆரம்பமே படுசூப்பராகத் தொடங்கியுள்ளது.
இடையில் சற்றும் எதிர்பாராத வண்ணம் 'குலமகள் ராதை' விளம்பரப்பதிவுகளையும், 'ஆண்டவன் கட்டளை' ஆவணங்களையும் தந்து அசத்தி விட்டீர்கள். ஆண்டவன் கட்டளை படப்பிடிப்பின்போது நடந்த ஆபத்தான சம்பவங்கள் இதுவரை அறிந்திராதது. இதுக்குத்தான் பம்மலார் வேணும்கிறது.
நேற்றிரவு கூட முரசு சேனலில் 'அலையே வா' பாடலைப் பார்த்துக்கொண்டிருந்தபோது, ஆர்ப்பரிக்கும் இந்தக்கடல் அலைகளுக்கு மத்தியில் எப்படி தேவிகா பயமின்றி நடித்தார் என்று எண்ணினேன். காலையில் உங்கள் பதிவைப்பார்த்தபோது, நிஜமாகவே அப்படி ஒரு சம்பவம் நடந்தது தெரிகிறது.
ஒரு நண்பருக்கு அளித்த பதிலில், வரும் ஜூலையோடு தங்களின் ஆவணச்செப்பேடுகளின் வரிசை முடிந்த பின், நீங்களும் படங்களைப்பற்றிய ஆய்வுகளைத் துவங்கப் போவதாகச் சொல்லியிருப்பது மனதை சற்று வாட வைத்தது.
படங்களைப்பற்றியும், அவற்றில் நடிகர்திலகத்தின் நுட்பமான நடிப்பைப்பற்றியும் எழுத எத்தனையோ பேர் வருவார்கள். ஆனால் நடிகர்திலகத்தின் கடந்த கால சாதனைகளின் ஆவணப்பொன்னேடுகளை பம்மலார் போல அள்ளித்தந்தோர் / தருவோர் யாருமுண்டோ?.
எனவே, ஜூலையுடன் ஒரு வட்டம் முடிந்து போனாலும், இடையில் விடுபட்ட சிற்ந்த படங்களை இடையிடையே தந்துகொண்டிருப்பீர்கள் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு. சமயம் வாய்க்கும்போது அவ்ற்றைத் தருவதாகவும் வாக்களித்துள்ளீர்கள். தீபம், தியாகம், திரிசூலம் உள்பட பல சாதனைப்படங்கள் விடுபட்ட மலர்களில் இடம்பெற்றுள்ளன.
நடிகர்திலகம் மிகச்சிறந்த திறமையாளர் என்பது உலகமே ஒப்புக்கொண்ட விஷயம். அதே சமயம் அவர் மிகச்சிறந்த சாதனையாளர் என்பதை நிரூபிக்க வந்த ஆவண வள்ளல் நீங்கள் மட்டுமே.
தங்களின் பணி தொய்வின்றித்தொடர வாழ்த்துகிறோம்.