In my knowledge , from 1997 ...kathlukku mariyaathai ,love today , once more and naerukku naer all were released.
Printable View
In my knowledge , from 1997 ...kathlukku mariyaathai ,love today , once more and naerukku naer all were released.
Read this artilce.Really like.so just waned to share.
ஜோசப் விஜய் சந்திரசேகர்.. கதாநாயகனாக நாளைய தீர்ப்பில் அறிமுகமாகி இந்த டிசம்பர் 4ஆம் திகதியுடன் இருபது வருடங்கள் பூர்த்தி ஆகின்றன. பெரிய எதிர்பார்ப்பை எழுப்பாமல் அமைதியாக அறிமுகம் ஆன விஜய் இன்று தமிழ் சினிமாவை ரசிக்கும் இளைஞர்களின் இளையதளபதி. எப்படி இந்த சிம்மாசனம் இந்த இளைஞனுக்குக் கிடைத்தது? பலரும் கூறுவதைப் போல தங்கத்தட்டில் வைத்தா கொடுத்தார்கள்? இல்லையே.
கருணாநிதியின் மகன் ஸ்டாலினுக்கு பெரிய பதவி கஷ்டப்படாமல் கிடைத்தது. சிவாஜியின் மகன் பிரபுவுக்கு சினிமா வாய்ப்புகள் குவிந்தன. இதெல்லாம் அவர்களின் தந்தைகளின் கடின உழைப்பால் கிடைத்த பலன். அவர்களின் உழைப்பு அவர்களது பிள்ளைகளிற்கு நிறைய விஷயங்கள் கஷ்டப்படாமல் கிடைப்பதற்கு வழி வகுத்தன. அதற்காகத்தானே அவர்கள் கஷ்டப்பட்டார்கள். அதை ஒரு குறையாக ஏன் கூறுகிறார்கள் எனத் தெரியவில்லை. அப்படியென்றால் அவர்கள் கஷ்டப் படாமல் ஒரு சாதாரண பத்தோட பதினொன்று என்ற வாழ்கையை வாழ்ந்துட்டு போகலாமே.
பெற்றோர் தங்களை வருத்தி வெற்றியைச் சம்பாதித்தால் அவர்களது பிள்ளைகள் நாளைக்கு ஒன்றும் செய்யாமல் இருக்கவேண்டுமா என்ன? அவர்கள் என்ன பாவம் செய்த பிறப்புகளா?
அனேகமான வாழ்க்கையில் ஜெயித்தவர்களின் பிள்ளைகள் தங்களின் பெற்றோர்களை விட தங்கள் வாழ்க்கையில் ஜெயிப்பது குறைவு. இதற்கு ஒரு காரணம் அவர்களுக்கு எல்லாம் கஷ்டப்படாமல் கிடைத்து விடுகின்றது. மற்றது எப்போதாவதுதான் ஒரு டெண்டுல்கரோ இல்லை விஸ்வநாதன் ஆனந்த்தோ உருவாகிறார்கள். இன்னொன்று அவர்களின் பெற்றோர்கள் தாங்கள் பட்ட கஷ்டங்கள் தமது பிள்ளைகள் படக் கூடாது என்பதற்காக அவர்களை சுகவாசியாக வளர்த்து விடுவதால் பிள்ளைகளுக்கும் அந்த உத்வேகம் வருவதில்லை.
தந்தை கஷ்டப்பட்டு போட்ட பாதையில் செல்லும் பிள்ளைகள் குறைவு. அப்படி செல்லும் பிள்ளைகளில் பலர் தனது தந்தையின் பெயரைகாப்பாத்தி தங்களுக்கும் பெயரை சம்பாதிப்பது குறைவு. அப்படியே தந்தையை மிஞ்சும் பிள்ளையாக வந்த பின்னும் தந்தையின் சொல்படி நடக்கும் பிள்ளைகள் அரிது. அப்படி ஒரு அரிதான பிள்ளை தான் இளைய தளபதி விஜய். விஜய்க்கு நன்றாகத் தெரியும் தனது தந்தையின் கடின உழைப்பு. அதற்கான பலனை தந்தை அறுவடை செய்யும் அளவுக்கு எத்தனை பிள்ளைகள் உழைக்கிறார்கள்? விஜய் உழைக்கிறார். தந்தையின் வெற்றிக்காக உழைக்கிறார். விஜய்யின் அப்பா சந்திரசேகர் என்று சொல்லும் அளவுக்கு வென்று இருக்கிறார். வென்றது மட்டும் இல்லாமல் தந்தையை இன்னும் உயரத்துக்கு உயர்த்துவதற்கு முயற்சிக்கிறார். எத்தனை பெற்றோர்களுக்கு கிடைக்கும் இந்த பாக்கியம்?
எஸ்.ஏ.சந்திரசேகர் எவ்வளவு கஷ்டப்பட்டு சினிமாவில் வெற்றியை சம்பாத்தித்தார்என்பது பலருக்கும் தெரியும். ஆனால் அந்த வெற்றிகளை எல்லாம் தனது பிள்ளைக்காக செலவிட்டது எத்தனை பேருக்குத் தெரியும்? அனைவருக்கும் விஜய்யின் விஸ்வரூப வெற்றி மட்டுமே கண்ணுக்குத் தெரிகிறது. ஆனால் அதன் பின்னால் இருக்கும் தந்தையின் உழைப்பு மறந்து விட்டது. விஜய் நாளைய தீர்ப்பில் நடிக்க ஆரம்பித்தது முதல் தனது முதல் உண்மையான வெற்றியை பூவே உனக்காக படத்தில் பெறுவதற்கு அவருக்கு ஒன்பது படங்கள் தேவைப்பட்டது. இதில் அனேகமான படங்கள் எஸ்.ஏ.சி தனது சொந்த காசில் எடுத்தது நஷ்டப்பட்டார். தான் கஷ்டப்பட்டு வாங்கி சேர்த்த நிலங்களை வித்து விஜய்யை ஜெயிக்க வைத்தார்.
இவ்வளவு கஷ்டப்பட்டு அடைந்த வெற்றியை பலர் கேலிசெய்வது வருத்தத்துக்கு உரியது. இந்த கேலிக்கு பின்னால் தனது தந்தை இவ்வாறு செய்யவில்லையே என்ற கவலையே மறைந்துள்ளது என்பதே உண்மை. தானாக வந்தாலும் தந்தையால் வந்தாலும் வெற்றி வெற்றியே.
கதாநாயகனாக அறிமுகமாகி இருபது வருடங்களை பூர்த்தி செய்யும் இளையதளபதிக்கு மயூரின் வாழ்த்துக்கள்..
Balaji (Comedian): Vijay sir is the main reason for me to attain my current position, he is the only person who helped me out when I was struggling in the Cine field.
Actress Mithra Kurien who debuted in Kollywood with Vijay starrer Kavalan is not too happy with the image that the film has given her. Initially, when the director Siddique approached her for the film she was excited about starring in a Vijay film. On coming to know that Asin was the main female lead in the movie she gave the offer another thought. However, the director convinced her to take up the role saying in the end, she would get married to Vijay. Mithra decided to take up the offer but she is upset that she has been ever since identified as the girl who acted as Asin's friend. Mithra says that she is determined to bag a role opposite the Ilayathalapathy and will definitely dance for a duet with him in the near future.
http://www.cinemalead.com/news-id-vi...7-12-12712.htm
Times Of India : If the movie has been directed by Shankar, or if the hero is Vijay, those films do well.
#MASS
http://m.ak.fbcdn.net/photos-c.ak/hp...95965163_n.jpg