http://i46.tinypic.com/hv85li.jpg
Printable View
உழைக்கும் கைகளே உருவாக்கும் கைகளே
உலகை புது முறையில் உண்டாக்கும் கைகளே
உண்டாக்கும் கைகாளே (உழைக்கும்)
ஆற்று நீரை தேக்கி வைத்து அணைகள் கட்டும் கைகளே
ஆண்கள் பெண்கள் மானம் காக்க ஆடை தந்த கைகளே
சேற்றில் ஓடி நாற்று நட்டு களை எடுக்கும் கைகளே
செக்க வானம் போல என்றும்
சிவந்து நிற்கும் கைகள் எங்கள் கைகளே (உழைக்கும்)
பலன் மிகுந்த எந்திரங்கள் படைத்தது விட்ட கைகளே
பாதை போட்டு உலகை ஒன்றாய் இணைத்து வைத்த கைகளே
பாரில் உள்ள பெருமை யாவும் படைத்ததெங்கள் கைகளே
பச்சை ரத்தம் வேர்வையாக
படிந்து நிற்கும் கைகள் எங்கள் கைகளே (உழைக்கும்)
உலகம் எங்கும் தொழில் வளர்க்கும் மக்கள் ஒன்றாய் கூடுவோம்
ஒன்று எங்கள் ஜாதி என்று ஓங்கி நின்று பாடுவோம்
சமயம் வந்தால் கருவி ஏந்தி போர் முனைக்கு ஓடுவோம்
தர்ம நீதி மக்கள் ஆட்சி
வாழ்கவென்றே ஆடுவோம்...
நாம் வாழ்கவென்றே ஆடுவோம்.... (உழைக்கும்)
CONGRATULATIONS
http://i48.tinypic.com/i42re8.jpg
MR. RAMAMOORTHI
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து
பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா(2)
நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து
ஓடு ராஜா
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு
தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு
அடிமையின் உடம்பில் ரதம் எதற்கு
தினம் அச்சப்பட்ட கோழைக்கு இல்லம் எதற்கு
கொடுமையை கண்டு கண்டு பயம் எதற்கு(2)
நீ கொண்டு வந்ததென்னடா மீசை முறுக்கு..ஹேய்.................
அண்ணாந்து பார்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி
அண்ணாந்து பார்கின்ற மாளிகை கட்டி
அதன் அருகினில் ஓலை குடிசை கட்டி
பொன்னான உலகென்று பெயருமிட்டால்(2)
இந்த பூமி சிரிக்கும் அந்த சாமி சிரிக்கும்..ஹேய்..........
உண்டு உண்டு என்று நம்பி காலை எடு
இங்கு உன்னை விட்டால் பூமியேது கவலை விடு
உண்டு உண்டு என்று நம்பி காலை எடு
இங்கு உன்னை விட்டால் பூமியேது கவலை விடு
ரெண்டில் ஒன்றை பார்பதற்கு தோளை நிமிர்த்து(2)
அதில் நீதி வரவில்லை எனில் வாளை நிமிர்த்து
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா(2)
நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து ஓடு ராஜா
நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு
ஓடு ராஜா
நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா
http://i1273.photobucket.com/albums/...ps0da47f64.jpg
வேலூர் S.S .ராஜேந்திரன் தீவிர மக்கள் திலகம் MGR ரசிகர் அனுப்பிய தகவல் .
1984 மக்கள் திலகம் வேலூர் நகருக்கு வருகை தந்த போது நான் கோயிலுக்கு சென்று பின்னர் நேராக மக்கள் திலகத்தை சந்தித்த போது அவருக்கு குங்குமம் மற்றும் பிரசாதம் தந்தேன் .
மக்கள் திலகம் மகிழ்ச்சியுடன் நான் தந்த குங்குமத்தை பெற்று தந்து நெற்றியில் இட்டு கொண்ட எனது தெய்வத்தின் மாண்பினை என்னவென்று சொல்வது ?
நான் சாதாரண ரசிகன் . எனது அன்பான வேண்டுகோளுக்கு இணங்கி குங்குமத்தை நெற்றியில் இட்டு என்னை ஆனந்த வெள்ளத்தில் மிதக்கவிட்ட மனித தெய்வம் மக்கள் திலகம் பற்றி புகழ வார்த்தை இல்லை .
வினோத் சார் பாசத் தலைவனுக்கு நினைவு அஞ்சலி தொடரும் .......
உடனடியாக வாழ்த்து தெரிவித்த வினோத் சார் . மாசனம் சார் ,
இருவருக்கும் எனது மனமார்த நன்றிகள்
சதமடித்த ராமமூர்த்தி சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
http://i49.tinypic.com/21ce8fs.jpg
வேட்டைக்காரன் படப்பிடப்பின் போது சாண்டோ எம்.எம்.ஏ. சின்னப்பாதேவர் அவர்களுடன்
http://i48.tinypic.com/1h5v7r.jpg
அடிமைப்பெண் படப்பிடிப்பில்
http://i50.tinypic.com/2vxln9w.jpg
வெளிவராத படம் ஒன்றில்
article from dinamalar
துரை அனுமார்கோயில்படித்துறை காஞ்சிமடம், முதியோர் பராமரிப்பு இல்லத்தில், தனது 84 வது வயதிலும், நாடகத்தின் மீது தீராத பற்றும், காதலுமாய், எதிர்பார்ப்புகளுடன்
தனிமையாய் காத்திருக்கிறார், நாடக கலைஞர் கே.வி.ராமச்சந்திரன்.அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., கருணாநிதியோடு இணைந்து நடித்த நாடகங்கள், ராஜாஜி, காமராஜரின் அரசியல் மேடை நாடகங்கள் மூலம் கலைகளை வளர்த்து பாராட்டுகளை பெற்றவர் "கலை கே.வி.ஆர்.,' என அழைக்கப்பட்ட கே.வி.ராமச்சந்திரன்.நாடக உலகில் கொடி
கட்டிப் பறந்த கே.ஆர்.ராமசாமி, என்.எஸ். கிருஷ்ணன், ஒய்.ஜி.பார்த்தசாரதி, சிவாஜி கணேசன் என அக்காலத்தில் புகழின் உச்சியில் இருந்த, 16 நாடக குழுக்களில் இடம் பெற்றிருந்த கே.வி.ஆர்., நினைவுகளை நம்முடன் அசைபோடுகிறார்.
அவர் கூறியது:1950ல் நாடக கம்பெனிகளுக்கு தடை விதிக்கப்பட்ட போது, ஜி.சுப்பிரமணியம், கலைவாணர், எம்.ஜி.ஆர்., என சேர்ந்து நாடக குழுக்கள் அமைத்து நாடகங்களை அரங்கேற்றினோம். குழுக்களில் உள்ள அத்தனை தொழில் நுட்பங்கள் (மேக்கப், மேடை, அலங்காரம், சவுண்ட்) தெரிந்து, இவற்றுடன் நடிக்கவும் செய்தேன். இதுவரை ஆறாயிரம் மேடைகளில் நடித்துள்ளேன்.எம்.ஜி.ஆர்., உடன்நரசிம்மபாரதி, இன்பஜோதி, சந்தோஷம், விஸ்வம் நாடகங்களில் பங்கேற்றேன். நாடகங்களில் எம்.ஜி.ஆர்., அடிக்கடி சொல்லும் ஒரு டயலாக்... ""வார்த்தை நல்லா வரணும்... அபத்தம் கூடாது'' என்பார்.
தொழிலாளர்களிடம் அவர்காட்டிய அன்பு தான், அவரை முதல்வர் வரை உயர்த்தியது. சினிமா வாய்ப்பு அதிகம் வந்த போது எம்.ஜி.ஆர்., தனது நாடக குழுவை கலைத்தார். அப்போதுஎங்களைப் (டெக்னீஷியன்கள்) பார்த்து "நீங்கள் என்ன செய்ய போகிறீர்கள்' எனக் கேட்டார். நாங்கள் உங்களை படங்களில்பார்க்கிறோம், என்றதும், அவரது கண்கள் கலங்கியது. குழுவில் இருந்த 12 பேருக்கு ஆளுக்கு ரூ.11 ஆயிரம் கொடுத்து உதவினார்.
இது அந்த காலத்தில் எங்கும் நடக்காத ஒரு அதிசயம்.சிவாஜியின் நாடககுழுவில் இருந்த என் தங்கை தாம்பரம் லலிதா உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இருந்த போது, முதல்வர் பதவியில் இருந்த எம்.ஜி.ஆர்., டாக்டரிடம் போன் செய்து, என் முன்னே, நன்றாக கவனிக்க சொன்னார். அதிகாரத்தில் இருந்த போதும் தன்னுடன் துவக்க காலத்தில் இருந்த சாமானியருக்காக உதவும் அவரது குணம் (கண் கலங்குகிறது) எந்நாளும் மறக்கமுடியாதது.
தமிழக முதல்வரின் தாய் சந்தியா பங்கேற்ற, நாடகங்கள் மற்றும்அண்ணாத்துரையின் சந்திரமோகன், சந்திரோதயம், நீதிதேவன் மயக்கம் நாடகங்களிலும் பணிபுரிந்துள்ளேன். அண்ணாதுரை எல்லா நாடங்களிலும் நடிக்கமாட்டார். காமராஜரின் அரசியல் மேடை நாடகங்களில் நடித்து அவரிடமும் பாராட்டு பெற்றேன். காமராஜர் "கலையை கொண்டு கட்சியில் சேர்க்க கூடாது' என கூறியது இன்றும் நினைவிருக்கிறது.இவ்வாறு கூறினார்.
இப்படி, 66 ஆண்டு நாடக கலைப் பயணத்தில், வரலாற்று புத்தகம் எழுதும் அளவிற்கு பல்வேறு ருசிகர தகவல்களுடன் தனிமையில் இருக்கும் கே.வி.ஆர்.,ன் வாழ்க்கை பயணம் இனிக்கவில்லை. குழந்தை பிறந்ததும் இறந்த மனைவி; 36 ஆண்டுகளாக படுக்கையில் கிடக்கும் மகள், இப்படி சோகம் நிறைந்தாகவே உள்ளது. நாடக கலைஞர்களுக்கு வழங்கும் ஆயிரம் ரூபாய் ஓய்வூதியத்தில் காலத்தை கடத்தும், இவரது இப்போதைய ஒரே ஒரு ஆசை "கலைமாமணி' விருது மட்டும் தான்.