http://www.youtube.com/watch?v=cpAEbgQnFb4
Printable View
Yukesh Babu Sir,
Thanks for the details.
In fact, I was having all the records from 1936 till 1978 including re-releases throughout the World sir. Unfortunately, all documents destroyed in fire!!!!!!! So many his films run, he has compromised because of previous contracts and other movie makers request that because of his movies other movies are not running!!!!!!!!! Thalaivar always performs Tamil Movies Grand Slam in all centres [successful/housefull run - 4 shows/3shows/noon show/special show in every theatre & TV] every calendar year till date!
''தேவி பாரடைஸ் ''-1971
சென்னை நகரில் மக்கள் திலகத்தின் படங்கள் பல சாதனைகள் புரிந்திருந்தாலும் குளிர் சாதன அரங்கில் ,அதிக இருக்கைகள் கொண்ட அரங்கில் ,முதல் முறையாக 29.5.1971 அன்று மக்கள் திலகத்தின் ''ரிக்ஷாக்காரன் '' திரைக்கு வந்து பல சாதனைகள் புரிந்து மக்கள் திலகத்தின் ரசிகர்களுக்கு பெருமைகள் சேர்த்த தேவிபாரடைஸ் அரங்கை மறக்க முடியுமா ?
அண்ணா சாலையில் முதல் முறையாக மிகப்பெரிய குளிர்சாதன அரங்கில் 100 காட்சிகள் தொடர்ந்து அரங்கு நிறைந்து 142 நாட்கள் வெற்றிகரமாக ஓடி அதிக வசூல் பெற்ற ரிக்ஷாக்காரன் - சரித்திரத்தில் இடம் பெற்றது . இந்த சாதனை மூலம் மக்கள் திலகத்தின் ரசிகர்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறியது
ரிக்ஷாக்காரன் -29.5.1971 இன்றுடன் 43 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது . ரிக்ஷாக்காரன் சிறப்பு பதிவுகள் தொடரும் .........
http://i57.tinypic.com/2jagdux.jpg
இனிய நண்பர்களுக்கு
மக்கள் திலகம் திரியில் மக்கள் திலகத்தின் நடிப்பு - அவருடைய படங்களை பற்றிய உங்களது கருத்துக்கள் ,விளம்பரங்கள் - வீடியோ பதிவுகளை மட்டும் பதிவிடுவது நல்லது . பிறர் மனம் புண் படும் அளவில் உள்ளவாசகங்கள் கொண்ட பதாகைகள் இங்கு பதிவிடுவதால் தேவை இல்லாத பதிலுக்கு பதில் என்ற விவாதங்கள் தொடர்வதற்கு காரணமாக இருக்க வேண்டாம் .
மக்கள் திலகத்தை பற்றி , அவருடைய திறமைகள் , சாதனைகள் ,ஆளுமைகள் குறித்து எழத பல விஷயங்கள் உள்ளபோது திசை மாற்றும் பதிவுகள் தவிர்க்க வேண்டுகிறேன் .
MAKKAL THILAGAM MGR DEVOTEE THIRU C.S .KUMAR'S BIRTH DAY PICS
http://i58.tinypic.com/k4h3le.jpg
THIRU MUNIYAPPA EX MLA - RAVI - MANI - JOTHI
http://i61.tinypic.com/2ymyjh3.jpg
http://i61.tinypic.com/1zyrnb.jpg
HAPPY BIRTHDAY TO NTR TODAY.
http://i62.tinypic.com/68tpau.jpg
கொங்கு மண்டலத்தில் வீராங்கனின் வெற்றி ஊர்வலம் தொடர்ந்தவண்ணமே உள்ளது. இந்த வெற்றி ஊர்வலத்தையும் வசூலையும் தடை செய்ய எவராலும் முடியவில்லை.
கொங்கு மண்டலத்தில் பொன்மனச்செம்மலின் திரைப்படங்கள் புரியும் சாதனைகளை உடனுக்குடன், மிகுந்த சிரத்தையுடன், கண்கவரும் வண்ணத்தில், பதிவிடும் எங்கள் இனிய நண்பர் திரு. ரவிச்சந்திரன் அவர்களுக்கு நன்றி.
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
http://i60.tinypic.com/2ewd4pg.jpg
உலகத்தமிழரின் ஒப்பற்ற தெய்வம் எம்ஜிஆர்
Elsewhere one who does not know what logic means and is talking about Logic. The most funniest fact, they are laughing at the details given in their own thread, mirror image! I am sure all of you will get all aches.
NTR Birthday today. What comes to our mind immediately is Kannan, what a memorable performance in Karnan [ I am not sure if he dubbed for this film or for any other Tamil film], especially the last scene with NT. I am sure that this scene will remain the hearts of the people for ever. It is not that easy for people to accept any individual in that respective role, e.g. VPKB, KOT and many [ NT] same with NTR [ Kannan] and the foremost MGR [ Ezhai Pangalan].
http://i1170.photobucket.com/albums/...psb922c637.jpg
KAVALKARAN RE-RELEASED IN BROADWAY THEATER FROM FRIDAY ONWARDS DAILY THREE SHOWS
http://i1170.photobucket.com/albums/...pse4d5ba35.jpg
கள்ளம் கபடம் ஏதுமில்லை, உனது பக்தனாய் வாழ்வதை காட்டிலும் என் பிறப்பின் சிறப்பு ஏதுமில்லை...
என்றும் இதய தெய்வத்தின் பக்தனாக!!
தங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி கலியபெருமாள் வினாயகம் சார். தங்கள் வாழ்வில் எல்லா வளமும் நலனும் பெற்று சீருடனும் சிறப்புடனும் வாழ வாழ்த்துகிறேன்.
அன்புடன்
ராகவேந்திரன்
RIKSHAKARAN - 29-5-1971
TITLE SCENE
http://youtu.be/Bn0wV8MlbLY
SUPER SCENE
http://youtu.be/ru4suXRUs2E
SUPERB FIGHT WITH MANOHAR
http://youtu.be/iPQXBBV5mhc
MAKKAL THILAGAM MGR TALENT
http://youtu.be/GUrjGcbFY5w
MAKKAL THILAGAM - EYE FEAST
http://youtu.be/LAjSMlBp6Ew
மக்கள் திலகம் எம்ஜியார் ரசிகர்களுக்கு பெருமை சேர்த்த படம்'' ரிக்ஷாக்காரன் ''
1971 ஆண்டு வந்த ரிக்ஷாக்காரன் , முந்தைய ஆண்டுகளில் வந்த
1970- மாட்டுக்காரவேலன்
1969- அடிமைப்பெண்
படங்களின் சாதனைகள் அத்தனயும் முறியடித்த படம் .
சென்னை நகரில் முதல் முதலாக ரூ 15 லட்சம் வசூல் பெற்று சாதனை .
தேவி பரடைஸ் அரங்கில் முதன் முதல் 100 காட்சிகள் மேல் அரங்கு நிறைந்து
142 நாட்கள் ஓடி சாதனை .
தென்னகமெங்கும் வசூல் புயல் கிளப்பிய படம் .
சத்யா மூவிஸ் தயாரிப்பான "ரிக்ஷாக்காரன்" படத்தில் நடித்த எம்.ஜி.ஆர், சிறந்த நடிகருக்கான தேசிய விருது ("பாரத்") பெற்றார். எம்.ஜி.ஆர். 1971_ம் ஆண்டில் குமரிக்கோட்டம், ரிக்ஷாக்காரன், நீரும் நெருப்பும், ஒரு தாய் மக்கள் ஆகிய 4 படங்களில் நடித்தார்.
"குமரிக்கோட்டம்", கோவை செழியனின் "கேசி பிலிம்ஸ்" தயாரிப்பு. இதில் எம்.ஜி.ஆருடன் ஜெயலலிதா நடித்தார். சொர்ணம் வசனம் எழுத, எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத் தார். டைரக்ஷன் ப.நீலகண்டன். சத்யா மூவிஸ் சார்பில் ஆர்.எம். வீரப்பன் தயாரித்த "ரிக்ஷாக்காரன்" வரலாறு படைத்த படமாகும்.
படித்த இளைஞன் ஒருவன், ரிக்ஷாக்காரனாகி சமுதாயத் தொண்டனாக உழைப்பதுதான் படத்தின் மையக்கரு. நவரசங்களும் கொண்ட கதையை எம்.ஜி.ஆருக்கு ஏற்ற வகையில் சத்யா மூவிஸ் கதை இலாகா உருவாக்க, திரைக்கதையை ஆர்.எம்.வீரப்பன் அமைத்தார். வசனத்தை ஆர்.கே.சண் முகம் எழுத, டைரக்ஷனை எம். கிருஷ்ணன் கவனித்தார்.
இப்படத்தில் எம்.ஜி.ஆரின் ஜோடியாக மஞ்சுளா நடித்தார். மற்றும், அசோகன், மனோகர், தேங்காய் சீனிவாசன், "சோ", ஐசரி வேலன், பத்மினி, ஜோதிலட்சுமி, ஜி.சகுந்தலா, ஜெய குமாரி, விஜயசந்திரிகா ஆகியோர் நடித்தனர்.
29_5_1971_ல் வெளிவந்த "ரிக்ஷாக்காரன்" பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. எம்.ஜி.ஆரின் நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்தது. சண்டைக்காட்சிகள், புதுமையாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தன.
எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைப்பில் வாலி இயற்றிய, "அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆணவச்சிரிப்பு", "பொன்னழகை சிந்தும் பெண்மை", "ஆணிப்பொன் தேர்கொண்டு", "கடலோரம் வாங்கிய காற்று", அவிநாசிமணி எழுதிய "கொல்லிமலை காட்டுக்குள்ளே" ஆகிய பாடல்கள் ஹிட்டாக அமைந்தன.
சென்னை தேவி பாரடைஸ் தியேட்டரில் 142 நாட்களும், கிருஷ்ணாவில் 142 நாட்களும், சரவணாவில் 104 நாட்களும் ஓடியது.
தமிழ்நாட்டில் மொத்தம் 12 தியேட்டர்களில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்தது. 1971_ம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆரை மத்திய அரசு தேர்வு செய்து, "பாரத்" விருதை வழங்கியது. தமிழ்நாட்டில் முதன் முதலாக பாரத் விருது பெற்றவர் எம்.ஜி.ஆர்.தான்.
சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்த ஆறு படங்களும் மக்கள் திலகத்தின் மகத்தான வெற்றி காவியங்கள் .
1. தெய்வத்தாய் - 1964.
2. நான் ஆணையிட்டால் - 1966
3. காவல்காரன் - 1967
4. கண்ணன் என் காதலன் - 1968
5. ரிக்ஷாக்காரன் - 1971
6. இதயக்கனி -1975
ஆறு வித்தியாசமான படங்களில் மக்கள் திலகம் அவர்கள்
சிறப்பாக நடித்து வெற்றி பெற்றார் .
தெய்வத்தாய்-காவல்காரன் -ரிக்ஷாக்காரன் - . இதயக்கனி
4 படங்கள் மிகப்பெரிய வெற்றி அடைந்தது .
நான் ஆணையிட்டால் - படம் .
மக்கள் திலகம் கொள்ளை கூட்டத்தை திருத்தும் வேடத்தில்
அபாரமாக நடித்து ரசிகர்களின் ஏகோபித்த பாராட்டை பெற்றார் . கருத்துள்ள சமூக சீர்திருத்த படம் .
கண்ணன் என் காதலன்-
இசைக்கு முக்கியத்துவம் தந்த படம் . எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் .
சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்த இந்த 6 படங்களும்
மக்கள் திலகத்திற்கு புகழ் சேர்த்த படங்கள் .குறிப்பாக மக்கள் திலகத்திற்கு ரிக்ஷாக்காரன் படம் ''பாரத் '' -பட்டம் பெற்று தந்தது .
காவல்காரன் - படம் 1967 சிறந்த படம் -
இதயக்கனி - 1975 - மிகப்பெரிய சாதனை படம் .
சத்யா மூவிஸ் திரு ராம வீரப்பன் மறக்க முடியாத மனிதர் .
http://i125.photobucket.com/albums/p...pse053c15e.jpg
In English daily.
வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்-
அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
FIGHT IN REALITY WITH STYLE IN STYLE - ONWARD PEDALING AND REVERSE PEDALING WITHOUT ANY GRAPHICS.
பாருங்கள் அன்பர்களே, மற்றும் முகநூல் நண்பர்களே உண்மையான உழைப்புடன் தன்னுடைய திறமையை
வெளிக்கொண்டு வரும் மக்கள் திலகம் எனும் வெற்றி-திருப்புகழ், பாட்டுடைத் தலைவன்- அற்புத நாயகன் எம்.ஜி.ஆர்.
The fight you are viewing in real terms (not in graphics) which shows his style in style fight (1) reply with humor words in response to the rowdies, (2) seriousness and alertness to the situation to safeguard his passenger, (3) single hand rolling the wooden stick and then with two hands pedaling the vehicle without touching the hand-bar (4) fight in onward direction energetically (5) fight in reverse cycling without handling the hand-bar. During the dialogue, an Important dialogue here to watch: இவனா இவனை பார்த்தாலே பெரிய குற்றவாளி மாதிரி இருக்கு, இவன் எங்கே குற்றவாளியை கண்டுப் பிடிக்கிறது.
COURTESY - SELVAKUMAR SIR
http://i62.tinypic.com/2qj93ep.jpg
எங்க வீட்டு பிள்ளை -1965 இமாலய வெற்றிக்கு பிறகு தொடர்ந்து மக்கள் திலகத்தின் அன்பேவா -1966, காவல்காரன் -1967. குடியிருந்தகோயில் -1968 , அடிமைப்பெண் - நம்நாடு -1969, மாட்டுக்காரவேலன் -1970 பிரமாண்ட வெற்றிக்கு பின்னர் தொடர்ந்து 7 வது ஆண்டில் - 1971ல் ரிக்ஷாக்காரன் திரைப்படம் வரலாற்று சாதனை படைத்தது .
ரிக்ஷாக்காரனின் சிறப்புக்கள் .
மக்கள் திலகத்தின் சிறந்த நடிப்பு .
மக்கள் திலகத்தின் புதுமையான சண்டை காட்சிகள் .
கருத்துள்ள உரையாடல்கள் .
இனிய பாடல்கள் .
பிரமாண்ட அரங்கங்கள் .
வண்ணமிகு ஒளிப்பதிவு .
மெல்லிசை மன்னரின் அட்டகாசமான இசை ராஜ்ஜியம் .
எம் . கிருஷ்ணனின் சிறந்த இயக்கம் .
ஆர் .எம் .வீரப்பனின் பிரமாண்ட தயாரிப்பு .
புதுமுகம் மஞ்சுளாவின் அறிமுகம் .
மொத்தத்தில் ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்த படம் .
இந்தியாவின் சிறந்த நடிகராக 1971ல் வெளியான ரிக்ஷாகாரனுக்கு
1972ல் மற்றுமொரு வைர கிரீடம் - பாரத் பட்டம் .
நாடே பாராட்டியது . திரை உலகம் ஒன்று சேர்ந்து நடிகர் திலகம் தலைமையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது .
ஆனால் ஒரு சில தீவிர எதிர்ப்பாளர்கள் [ அரசியல் - குறிப்பிட்ட நடிகரின் சில ரசிகர்கள் ] அன்றும் - இன்றும் மனம்
வெதும்பி வருவது அவர்களின் அறியாமையை காட்டுகிறது .
ரிக்ஷாக்காரன் - என்றென்றும் மறக்க முடியாதவன் .