http://i62.tinypic.com/104kx85.jpg
Printable View
என்றும் இணையில்லா மக்கள்திலகம் திரியின் evergreen star திரு வினோத் சார் அவர்கள் கண்ட 11001 பதிவுகளை கடந்து இன்னும் எண்ணிலடங்கா பதிவுகளை பதிய வாழ்த்தும் அன்பு நெஞ்சங்கள்...
திருவாளர்கள் ஜெய்ஷங்கர், கலைவேந்தன்,உகேஷ்பாபு - ஆகியோரின் "பெற்றால்தான் பிள்ளையா " விமர்சனங்கள் வெகு அருமை...மீண்டும் அக்காவியத்தை கண்ட திருப்தி... நல்வாழ்த்துக்கள் தோழர்களே...
பல்லாண்டு வாழ்க..
http://i61.tinypic.com/15qt9oh.jpg
வள்ளலார் கசாப்பு கடை (?!)
தலைவர் நடித்த நாடோடி திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த படம். சாதிக் கொடுமையை லேசாக தொட்டுக் காட்டியிருக்கும் படம். படத்தில் இடம் பெற்ற ‘கடவுள் செய்த பாவம்....’ பாடல் தினமும் ஒருமுறையாவது மனதில் ரீங்காரமிடும். தலைவரின் நடிப்பும் அற்புதமாக இருக்கும். காதலியை இழந்து விட்ட வேதனையில் தலைவர் இருக்கும்போது இந்தப் பாடல். காட்சியோ சோகக் காட்சி. பாட்டோ சோகம் கலக்காத சற்று கோபமான பாடல்.
அந்தக் காட்சியில் சோகமாக இருக்கும் தலைவரே பாடினால் பொருந்தாமல் போகலாம் என்பதால் புத்திசாலித்தனமாக காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அதாவது, சோகமாக இருக்கும் தலைவர் முன் அவரது மனசாட்சியாக உற்சாகமாக தலைவர் பாடுவதுபோல காட்சி அமைப்பு அட்டகாசம். பாடலுக்கேற்ப தலைவரின் துடிப்பான நடிப்பும் டான்சும்தான். பாடலின் சில வரிகளை சொல்கிறேன்.
கடவுள் செய்த பாவம்
இங்கு காணும் துன்பம் யாவும்
என்ன மனமோ என்ன குணமோ, இந்த
மனிதன் கொண்ட கோலம்
பொருளேதும் இன்றி கருவாக வைத்து
உருவாக்கி விட்டு விட்டான்
அறிவென்ற ஒன்றை மரியாதை இன்றி
இடம் மாற்றி வைத்து விட்டான்
எவ்வளவு அருமையான வார்த்தைகள். அடுத்த பாராவில் ‘முகத்துக்கு நேரே சிரிப்பவர் கண்கள் முதுகுக்கு பின்னால் சீறும், முகஸ்துதி பேசும் வளையும் குழையும் காரியம் ஆனதும் மாறும்’ என்ற வரிகளுக்கு தலைவரின் ஆக்க்ஷன் சூப்பர். அதிலும் ‘காரியம் ஆனதும் மாறும்’ என்ற வரியின்போது காலால் எட்டி உதைப்பது போன்ற அபிநயம் அழகு.
பாடலின் கடைசியில் ‘நடப்பது யாவும் விதிப்படி என்றால் வேதனை எப்படி தீரும்? உடைப்பதை உடைத்து வளர்ப்பதை வளர்த்தால் உலகம் உருப்படியாகும்’ என்ற வரிகளில் தலைவரை மட்டுமின்றி நம்மையும் உற்சாகம் தொற்றிக் கொள்ளும். அதுவரை சோகமாக இருக்கும் தலைவர், உற்சாகமாகி இந்த வரிகளை பாடுவார். இங்கே, கவனிக்க வேண்டிய ஒன்று, அற்புதமான எடிட்டிங். இந்த வரிகளை மனசாட்சியாக வருபவர், பாடத் தயாராகும்போது, சோகமாக இருக்கும் தலைவர் சரியான நேரத்தில் பாடத் தொடங்குவார். அதைப் பார்த்து மனசாட்சியாக வரும் தலைவர் பாட இருந்ததை நிறுத்தி விட்டு, கையை சொடுக்கி, சபாஷ் என்பது போல தலையாட்டுவார். இந்த காட்சி நூலிழை தவறாமல் ‘சிங்கர்னைஸ்’ ஆகியிருக்கும்.
இந்தப் பாடல் இன்றும் வழக்கம் போல என் மனதில் ரீங்காரமிட்டது. அதற்கான பின்னணிதான் வேறு.
திருப்பதியில் இலங்கை அதிபர் ராஜபக்சே சாமி தரிசனம் செய்ததையொட்டி இந்தப் பாடல் மனதில் தோன்றியது. இலங்கையில் 2009ம் ஆண்டு நடந்த இறுதிப் போரில் ஒன்றரை லட்சம் அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட காரணமாக இருந்த ராஜபக்சே ஏழுமலையான தரிசனம் செய்கிறார். அதற்கு நாடோடி படத்தில் வரும் ‘கடவுள் செய்த பாவம்’ பாடல் எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது பாருங்கள்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தை தீவிரவாத இயக்கம் என்று கூறி, அதன் நடவடிக்கைகளை ஏற்காதவர்கள் கூட, அப்பாவித் தமிழர்கள் ஒன்றரை லட்சம் பேர் கொல்லப்பட்டதை ஏற்கமாட்டார்களே. இலங்கையின் மனித உரிமை மீறலுக்கு ஐ.நா.சபையே கண்டனம் தெரிவித்ததே.
தமிழர்களை கொல்ல காரணமாக இருந்த ராஜபக்சே, அந்த பாவத்தை கழுவத்தான் திருமலைக்கு சாமி தரிசனம் செய்ய வந்திருக்கிறாரோ என்று பார்த்தால் அதுவும் இல்லை. அதிலும் சுயநலம்தான். அடுத்த மாதம் 8ம் தேதி இலங்கையில் அதிபர் தேர்தல் நடக்கிறது. இதில் மீண்டும் போட்டியிடும் அவர் வெற்றி பெறுவதற்காக பிரார்த்தனையாம்.
இஸ்ரேலுக்கு எதிராக தங்கள் உரிமைகளுக்காக பாலஸ்தீன விடுதலை இயக்கம் போராடினால் இந்தியா ஆதரவு தரும்.
பாகிஸ்தானில் மக்களின் உரிமைகள் நசுக்கப்பட்டால் இந்தியா உடனே போர் தொடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக வங்கதேசத்தை உருவாக்கி கொடுக்கும்.
இவ்வளவு ஏன்? சுதந்திரப் போராட்ட காலத்திலேயே துருக்கியில் காலிப் பதவியிழந்தால், கிலாபத் இயக்கமே இங்கு தொடங்கப்படும்.
ஆனால், இலங்கையில் உரிமைகளுக்காக போராடும் தமிழர்களுக்கு மட்டும் ஆதரவு தர மாட்டோம். ‘சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் சிந்தை இரங்காரடி’ என்று சும்மாவா பாடினார் பாரதி? ராஜபக்சே கடவுளை தரிசிப்பதால் அவருக்கு புண்ணியம் கிடைக்கலாமோ என்னவோ? நிச்சயம் இது, தலைவர் பாடியது போல ‘கடவுள் செய்த பாவம்’ தான்.
ராஜபக்சே போன்றவர்கள் இறைவனை தரிசிப்பதற்கும், வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்று, கருணையே வடிவாய் கொல்லாமையை, ஜீவகாருண்யத்தை உபதேசித்த வள்ளலாரின் பெயராலேயே கசாப்பு கடை நடத்துவதற்கும் என்ன வித்தியாசம்?
இந்தப் பாடலின் கடைசியில் தலைவர் பாடும் வரிகளைப் போல,
‘நடப்பது யாவும் விதிப்படி என்றால்
வேதனை எப்படி தீரும்?
உடைப்பதை உடைத்து, வளர்ப்பதை
வளர்த்தால் உலகம் உருப்படியாகும்..’
உலகம் உருப்படியாகும் என்ற நம்பிக்கையை இன்னமும் நாம் இழக்கவில்லை. ஆனால், எப்போது என்றுதான் தெரியவில்லை. பாரத் மாதா கி ஜே!
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
kalaiventhan sir suitable article for current position
1962ம் ஆண்டு தேர்தல் பிரச்சதிற்காக எம்ஜிஆர் சுற்றுபயனமாக தேனிக்கு புறப்பட்டார்.அதிகாலை 1 மணி இருக்கும்.எம்ஜிஆர் வேனில் வந்துகொண்டுஇருந்தர்,முன்னால் சென்ற காரில்பாதுகாவலர்கள் சென்றுகொண்டு இருந்தனர்.அப்போது ஒரு இடத்தில் 30 பெயர்களுக்கும் மேல் திரண்டு இருந்த கூட்டம் வழிமறைத்து பாதுகாவலர்கள் என்னவென்றுகேட்டனர் .அதற்கு அவர்கள் எம்ஜிஆர் எங்களுடன் வர வேண்டும் ,அவரை காண அங்கு உள்ள மக்கள் ஆவலாக இருகிறார்கள் 'என்றார்கள் .அதற்கு பாதுகாவலர்கள் ,'ஏற்கனவே நாங்கள் தாமதமாக சென்று கொண்டு இருக்கிறோம் .தேனியில் எம்ஜிஆருக்
காக மக்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள் ,திரும்பி வரும்பொழுது அவர் நிச்சயம் உங்கள் இடத்துக்கு வருவார்' என்றார்கள் .பாதுகாவலர்கள் சொன்னதை அவர்கள் ஏற்கவில்லை.அவர்கள் திடிரென மிரட்டும் தொனியில் பேசினார்கள் .'இப்போது நீங்கள் எங்கள் இடத்துக்கு வராவிட்டால் இங்கிருந்து யாரும் உயிருடன் போக முடியாது,இந்த வேனை இங்கேயே கொளுத்தி விடுவோம் 'என்கிறார்கள்.அவர்களின் சத்ததை கேட்ட எம் ஜி ஆர் கோபத்துடன் வேனை விட்டு இறங்கி ,அவர்களை நோக்கி ,'வண்டியை கொளுத்த போரோம் என்று சொன்னவன் யாரு? தைரியம் இருந்த வண்டிய கொளுத்துடா பார்க்கலாம் 'என்று சத்தம் போட்டதும் ,வந்தவர்கள் மிரண்டு ஆளுக்கு ஒரு பக்கம் ஓடிவிட்டனர் .சினிமாவில் மட்டுமல்ல ,நிஜ வாழ்கையிலும் யாரைக் கண்டும் அஞ்சாதவர் எம் ஜி ஆர் என்பதற்கு இந்த நிகழ்ச்சி ஒரு சான்று..
Congrats Vinod Sir for reaching another Milestone [ 11,0000]:
http://www.youtube.com/watch?v=wSGRzFAYy1g