Originally Posted by
RavikiranSurya
இனிய நண்பர் கலைவேந்தன்
வணக்கம் ! நலமறிய அவா !
மார்ச் வரை அலுவல் வேலைகள் மிக மிக அதிக அளவில் உள்ளதால் திரியில் தொடர்ந்து பங்கு கொள்ளமுடியாமல் போகிறது. இது மார்ச் 31 ( financial year end ) வரை இப்படிதான் இருக்கும். விற்பனை பிரிவில் நான் இருப்பதால் target போன்ற விஷயங்கள் சற்று கூடுதலாக செய்யவேண்டிய நிலை.
இன்றுதான் சிறிது நேரம் கிடைத்து உட்கார்ந்து திரியை பார்க்க முடிந்தது..! நீங்கள் எஸ்வி சார் அவர்களிடம் ஒரு கேள்வி எழுப்பியதை படிக்க நேர்ந்தது...
உங்கள் கேள்விக்கெல்லாம் எதற்கு சார் நான் பயப்படவேண்டும் ?
அதுவும் திரிக்கு வராத அளவிற்கு ...? :-d
ஒன்று தவறு செய்தால் பயப்படவேண்டும் ... மடியில் கனம் இல்லாதவனுக்கு வழியில் பயம் எதற்கு ?
என்ன கேட்க நினைத்தீர்களோ கேளுங்கள் !
எனக்கு தெரிந்தால் பதில் சொல்வேன். தெரியவில்லை என்றால் தெரியவில்லை சார் ..விசாரித்து வேண்டுமானால் சொல்கிறேன் என்று கூறபோகிறேன்..அவ்வளவுதானே ?
ஆகையால் நீங்கள் தைரியமாக கேட்க நினைத்ததை கேட்கலாம்.
திரி என்பதே கருத்து பரிமாற்றம், கேள்வி பதில் நிறைந்ததுதானே !
Rks