nice
tk u vinod sir
Printable View
வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன்-மக்கள் திலகம்-தெய்வம் எம்.ஜி.ஆர்.
மக்கள் திலகத்தின் சில திரைப்படங்களில் டைட்டில் காட்சிகளில் பாடல் இடம் பெறுவது உண்டு. அவ்வாறு இடம் பெரும் பாடல் படத்திற்கு சிறப்பு சேர்ப்பதாக / உயிரூட்டம் தருவதாக இருக்கும். அது படத்தின் கதைக்கும் வலுவூட்டுவதாக அமையும். படத்தின் டைட்டில் காட்சியிலேயே ரசிகர்களை கவரும் வண்ணம் இடம் பெரும். ஆகவே, எவரும் மக்கள் திலகத்தின் படத்தின் டைட்டில் காட்சியை தவற விடுவதில்லை. இதற்காகவே, அந்த பாடல் சிறப்புற அமையும் வண்ணம் பார்த்து கொள்வார். இதுவெல்லாம், நுணுக்கமாக கவனித்து செய்ய வேண்டிய அம்சங்கள். இவ்வாறு ஒவ்வொரு விசயத்திலும் கவனம் செலுத்துவது என்பது அவரின் திறமைக்கு எடுத்துகாட்டு. அப்பாடல்களிலும் தமிழரின் வீரம், பண்பாடு, கலாச்சாரம் இவைகள் மிக்கும் வரிகளை தொனிக்க செய்வார். இதைப்போல, இன்னும் பல சிறப்புகளை படத்தின் வெவ்வேறு தருணங்களில் அமைத்து படத்துக்கும், கலைஞர்களுக்கும் மெருகூட்டி வசூல் சக்ரவர்த்தியாக திகழ்ந்தவர் நமது மக்கள் திலகம் வெற்றி திருப்புகழ் வேந்தன்-பாட்டுடைத் தலைவன்-அற்புத நாயகன்-மக்கள் திலகம்- தெய்வம் எம்.ஜி.ஆர். மக்கள் திலகத்தை பற்றி இன்னும் எவ்வளவோ விஷயங்கள், திறமைகள், அவரின் பொறுமை, மனோதிடம், உழைக்கும் நோக்கம், விருந்தோம்பல், அரவணைக்கும் தன்மை, தைரியம், வீரம், அரசியல் மாண்பு, மூத்தோரிடம் மரியாதை, நல்லோரை வணங்கும் நீதிமான், கருணை உள்ளம், தாய் உள்ளம், கடமை உணர்ச்சி நினைத்ததை முடிக்கும் நாயகன் இப்படி ஆராய்ச்சி செய்ய அனைவரும் முன்வந்து அருள வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.
1. நாடோடி மன்னன். https://www.youtube.com/watch?v=dOunXVicrek
2. மலைக்கள்ளன் https://www.youtube.com/watch?v=X8al4lX6uro
3. உலகம் சுற்றும் வாலிபன் https://www.youtube.com/watch?v=dLybpKmyMhA
4. கலைஅரசி https://www.youtube.com/watch?v=XO3TuWnYhVE
5. மாட்டுக்கார வேலன் https://www.youtube.com/watch?v=-c_lzPFuv6o
6. குலேபகாவலி https://www.youtube.com/watch?v=1QK9ArJ3DOg
7. சந்திரோதயம் https://www.youtube.com/watch?v=ROu-uUyg4gM
8. மன்னாதி மன்னன் https://www.youtube.com/watch?v=rU3yfehee14
திரு. முத்தையன் அம்மு,
தலைவரின் அரச கட்டளையில் அவரது பல்வேறு அழகு தோற்றம், முகபாவங்களை வெளிப்படுத்தும் ஸ்டில்களை பதிவிட்ட உங்களுக்கு நன்றி.
மேலே உள்ள படம் உங்கள் கற்பனைத் திறனுக்கும் கடின உழைப்புக்கும் சான்று. தொடர்ந்து அசத்துங்கள்.
சி.எஸ்.குமார் சார், உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் ஜஸ்டினுடன் தலைவர் மோதும் அற்புத சண்டைக் காட்சியை தரவேற்றியதற்கு நன்றி.
சைலேஷ் சார், உங்கள் வீடியோ பதிவுகளும் கிருஷ்ணன் பஞ்சு தலைவருக்கு மரியாதை கொடுக்க எழுந்து நின்றது பற்றிய பதிவும் அருமை.
கவிஞர் திலகம் தெனாலிராஜன் சார், தலைவர் படங்களின் டைட்டில் காட்சிகளில் இடம் பெறும் பாடல்களை பற்றிய உங்கள் வித்தியாசமான சிந்தனையும் காட்சிகளும் அற்புதம்.
திரு.எம்ஜிஆர் பாஸ்கரன், தொடர்ந்து திரியில் பங்களிக்க விரும்புகிறோம். நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்
1967
மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்களுக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் பல பெருமைகள் கிடைத்த ஆண்டு என்றால் அது மிகை அல்ல .
மக்கள் திலகம் எம்ஜிஆர் தான் சார்ந்திருந்த திமுக இயக்கத்தின் வெற்றிக்காக இரவு பகலாக உழைத்த கால கட்டத்தில் 12.1.1967 அன்று அவருடைய உயிருக்கு பெரிய ஆபத்து ஏறபட்டது மக்கள் திலகம் மரணத்தை வென்றார் .
சட்டசபை தேர்தலில் திமுக வரலாற்று மிக்க வெற்றி பெற்று ஆட்சி பீடம் ஏறியது .தமிழ் நாட்டிலே அதிக ஓட்டுக்கள் வித்தியாசத்தில் மக்கள் திலகம் வெற்றி பெற்றார் .
தாய்க்கு தலை மகன்
அரசகட்டளை
காவல்காரன்
விவசாயி
4 படங்கள் இந்த ஆண்டில் வெளியானது . காவல்காரன் படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தது .தாய்க்கு தலைமகன் 10 வாரங்களும் , அரசகட்டளை 9 வாரங்களும் , விவசாயி 10 வாரங்களும்
ஓடி வெற்றி பெற்றன . 1967ல் சிறந்த படமாக காவல்காரன் பரிசு பெற்றது . மக்கள் திலகம் எம்ஜிஆர் சிறு சேமிப்பு துணை தலைவராக பதவி ஏற்றார் . பல புதிய படங்களில் ஒப்பந்தம் ஆனார். ஏற்கனவே தயாரிப்பில் இருந்த பல படங்களின் படப் பிடிப்பும் தொடர்ந்து நடந்து வந்தது .
1966 டிசெம்பரில் வெளிவந்த பெற்றால்தான் பிள்ளையா படத்தின் 100 வது நாள் விழா நடந்தது .
1957
தேர்தல் பிரச்சாரத்தில் தாய்க்குப் பின் தாரம்!
1957 – ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம், தமிழக சட்டசபைத் தொகுதிகள் 123-லும், நாடாளுமன்றத் தேர்தலில் 13 தொகுதிகளிலும் முதன்முறையாகத் தனது வேட்பாளர்களை நிறுத்திப் போட்டியிட்டது.
இந்த வேட்பாளர்களோடு, கழக ஆதரவு பெற்ற வேட்பாளர்களாகச் சிலரும் போட்டியிட்டனர்.
இத்தேர்தலில் தி.மு.க தலைவர்கள் அனைவரும் போட்டியிட்டனர். கழகத்தின் முதுகெலும்பாய்த் திகழ்ந்த அறிஞர் அண்ணா, தமது காஞ்சியுரம் தொகுதி தேர்தல் பணியோடு, பிரச்சாரப் பணிகளிலும் பல தொகுதிகளில் முழுமூச்சோடு ஈடுபட்டார்.
இத்தருணத்தில் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர். தொடர்ந்து பத்தொன்பது நாள்கள் தமிழகமெங்கும் சூறாவளிச் சுற்றுப்பயணங்கள் மேற்கொண்டு, தொடர்ச்சியாகப் பிரச்சாரங்களில் ஈடுபட்டார்.
அத்தோடு நில்லாமல், தனது நாடகக்கூழுவைக் கொண்டு, தானே நடித்த ‘இன்பக் கனவு’. ‘சுமைதாங்கி’ நாடகங்களையும், மதுரை, திண்டுக்கல், நாகர்கோயில் போன்ற முக்கிய நகரங்களில் நடத்திப் பெரும் சாதனையைப் படைத்தார்.
இம்மட்டோ! கழகத்தின் முக்கியத் தலைவர்களாம் அறிஞர் அண்ணா போட்டியிட்ட காஞ்சிபுரம் தொகுதியில் 1957 மார்ச்சு மாதம் முதல்தேதி முழுவதும், கலைஞர் கருணாநிதியின் குளித்தலைத் தொகுதியில் மார்ச்சு மாதம் எட்டாம் தேதி முழுவதும், மதுரை முத்துவின் மதுரை மத்தியத் தொகுதியில் ஒன்பதாம் தேதி முழுவதும், என்.வி. நடராசன், ஏ.வி.பி. ஆசைத்தம்பி, பேராசிரியர் அன்பழகன், சத்தியவாணிமுத்உத உள்ளிட்டோர் போட்டியிட்ட சென்னை மாநகரத் தொகுதிகளில், அறிஞர் அண்ணாவோடு இணைந்து மார்ச்சு ஐந்து, ஆறு தேதிகளிலும் புரட்சிநடிகர் புயல்வேகப் பிரச்சாரம் செய்தார்.
இன்னும், நாஞ்சில் மனோகரன் பாராளுமன்றத்திற்கும், நாகூர் அனீபா சட்டமன்றத்திற்கும் போட்டியிட்ட நாகப்பட்டினம் தொகுதியில் பிப்ரவரி 19 – ஆம் தேதியும், இரா. செழியன் பாராளுமன்றத்திற்கும், எம். குழந்தைவேலு சட்டமன்றத்திற்கும் போட்டியிட்ட கரூர் தொகுதியில் பிப்ரவரி 20 – ஆம் தேதியும், கவியரசர் கண்ணதாசன் போட்டியிட்ட திருக்கோஷ்டியூர் தொகுதியில் பிப்ரவரி 25 – ஆம் தேதியும், இலட்சியநடிகர் எஸ்.எஸ்.ஆர் போட்டியிட்ட தேனித்தொகுதியில் பிப்ரவரி 26, 27 தேதிகளிலும் புரட்சிநடிகர் எம்.ஜி.ஆர் எழுச்சிமிகு தேர்தல் பிரச்சாரங்களைச் செய்தார்.
எந்தவொரு நடிகரும். தலைவரும் செய்திட இயலாத அளவிற்குத் தன்னுடைய படப்பிடிப்புப் பணிகளையெல்லாம் பார்க்காமல், பணச்செலவுகளைப் பற்றியும் கவலைப்படாமல் வியத்தகு தேர்தல் பிரச்சாரங்களைச் செய்து அனைவர்க்கும் வியப்பூட்டி நின்றவரே மன்னாதி மன்னன் எம்.ஜி.ஆர் எனலாம்.
இவரது 1957 – ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தோடு, மக்களை பிரமிக்க வைத்த பிரச்சாரச் சுவரொட்டிகளாய் மலர்ந்தனவே ‘தாய்க்குப் பின் தாரம்’ திரைப்படக் காட்சி, சுவரொட்டிகள் எனில் மிகையாகா.
தேர்தல் களத்தில் தி.மு.கழகத்தோடு மோதும் முதன்மையான கட்சி காங்கிரஸ் கட்சியாகும். அக்கட்சியின் தேர்தல் சின்னமோ ‘நுகத்தடி பூட்டிய காளைமாடுகள்’ சின்னமாகும்.
தாய்க்குப்பின் தாரம் திரைப்படத்திலோ மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், யாரும் அடக்க முடியாத ஜல்லிக்கட்டு காளைமாட்டோடு போராடி, அதனை வீழ்த்தி வெற்றி பெறுவதாக ஓர் அருமையான காட்சி இடம் பெற்றுள்ளது.
அதனையே தேர்தல் பிரச்சாரச் சுவரொட்டிகளாக தி.மு.கழகத்தவர் நாடெங்கும் சுவர்களில் ஒட்டியும், வரைந்தும் இருந்தார்கள். தட்டிகளிலும் ஏராளமாக ஒட்டி வைத்தார்கள்.
காங்கிரஸ் என்ற காளையை, உதயசூரியன் என்ற தடுப்புப் பலகையோடு இளைஞர் எம்.ஜி.ஆர், அடக்குவதுபோன்ற கருத்துப் படத்தை, 25.1.1957 ஆம் தேதியிட்ட ‘முரசொலி’ இதழும் வெளியிட்டது.
அன்றைய தி.மு.கழகத்தின் அதிகாரப்பூர்வமான வார ஏடாக வெளிவந்த நாவலரின் ‘நம்நாடு’ இதழ், இதுபற்றி எழுதியாதையும் நாம் இப்போது வாசித்துப் பார்ப்போமே!
“தாய்க்குப்பின் தாரம்” படத்தில், காளை மாட்டோடு புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர், சண்டையிடும் காட்சியைக் கையிட்டு வரைந்தும், சில இடங்களில் தட்டிகள், பானர்கள் வைக்கப்பட்டும் இருந்தன. தி.மு.கழகத்தின் தேர்தல் ஈடுபாட்டை, இந்தத் தேர்தல் உத்திகளை மக்கள் வரவேற்றனர்; இரசித்தனர். மக்கள் வாக்களிப்பார்களா? – என்பதைவிடக் கூட்டம் கூட்டமாக வரவேற்பு இருந்ததைப் பார்க்கவே மகிழ்ச்சியாக இருந்தது”
பார்த்தீர்களா? 1957 – ஆம் ஆண்டு தேர்தலிலேயே, ‘தாய்க்குப்பின் தாரம்’ படக்காட்சிகன் மூலமும், தனது பிரச்சாரத்தின் மூலமும், தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், மறுமலர்ச்சியையும் தோற்றுவித்த எம்.ஜி.ஆரின் அரிய பணிகளை….! இதனாலன்றோ பின்னாளில் புரட்சித்தலைவராக அவரால் பீடுநடை போட முடிந்தது.
முயற்சிகளால் முன்னேறிய எம்.ஜி.ஆரை முட்டுக்கட்டைகள் எவற்றாலும் தடுக்க முடிந்தனவா? தடுக்க முயன்றவர்கள்தானே தடம் புரண்டு வீழ்ந்தார்கள்.
இத்தகு வித்தகர் நடித்த பல படங்களுக்கு, நம் கவித்திருமகனார் வீர வசனங்களை எழுதியுள்ளார்.
1957 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘மகாதேவி’, 1958 – ஆம் ஆண்டு வெளிவந்த ‘நாடோடி மன்னன்’, 1960 – ஆம் ஆண்டில் வெளிவந்த ‘மன்னாதி மன்னன்’, ‘ராஜா தேசிங்கு’, 1961 – ஆண்டு வெளிவந்த ‘ராணி சம்யுக்தா’ ஆகிய வரலாறு படைத்த படங்களுக்கெல்லாம் கண்ணதாசனே நம் கருந்துகளைக் கவரும் வசனங்களை எழுதியுள்ளார்.
courtesy - kannadasan
Janaki ammal ninaivu thinam indru
http://i1170.photobucket.com/albums/...psy4s5twhy.jpg
எம். ஜி.ஆர்."தாய் வீடு" இந்த வீட்டில்தான் என்னென்ன சோதனை,வேதனை,மகிழ்ச்சி,புகழ்ச்சி,இவற்றையெல்லா ம் சந்தித்தாா்,ஒன்றா,இரன்டா ?.மகிழ்ச்சியும் துயரமும்.NO.160,லாயிட்ஸ் வீதி.
courtest fb
http://i1170.photobucket.com/albums/...psrelwjxkw.jpg
அன்பிருக்கும் நெஞ்சமொரு ஆலயமோ
அதில் ஆசையும் பாசமும் காவியமோ
அன்னை தெய்வத்தின் நற்சீதனமோ
என் கண்களில் நீ தரும் தரிசனமோ
-காவல்காரன்-
http://i59.tinypic.com/2im1cuu.jpg
புரட்சித் தலைவரின் ரத்தத்தின் ரத்தங்கள் எல்லாருக்கும் வணக்கம்.
நான் நமது திரியில் ஒன்றிண்டு பதிவு போட்டிருக்கிறேன். சென்னை சைதாப்பேட்டையில் வசித்து வரும் நான், இறைவன் எம்ஜிஆர் பக்தர்கள் குழுவின் தலைவராக இருந்து நண்பர்களின் ஒத்துழைப்புடன் என்னாலான பொதுநலப் பணிகளை நமது தெய்வத்தின் பெயரால் செய்கிறேன்.அது சம்பந்தப்பட்ட புகைப்படங்கள் சில நமது திரியில் ஏற்கனவே ஏற்றப்பட்டுள்ளன.
பல அலுவல்கள் காரணமாக நமது திரிக்கு வரவில்லை என்றாலும் தொடர்ந்து பார்த்து வருகிறேன். இனிமேல் நேரம் கிடைக்கும்போது திரிக்கு வந்து நம் தெய்வத்தின் புகழ் பாடுவேன் என்பதை மகிழ்ச்சியுடன் அறிவித்துக் கொள்கிறேன்.
நண்பர்கள் எல்லாருக்கும் ஒரு வேண்டுகோள். மண்ணுலகில் வாழ்வாங்கு வாழ்ந்து தெய்வமாக உயர்ந்து விட்ட நமது இதயதெய்வமாம் புரட்சித் தலைவரை வேறு யாரோடும் ஒப்பிட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தினகரன் -18/05/2015
http://i59.tinypic.com/whbc52.jpg
ராணி வார இதழ் -24/05/2015
http://i59.tinypic.com/2m6u1yu.jpg
https://www.youtube.com/watch?v=qQN0DTF-D0A
Please watch from 1:44 to 2:00
சைலேஷ் சார் தங்கள் வீடியோ பதிவுக்கு நன்றி.
லோகநாதன் சார், தினஇதழ் கட்டுரைகள் தலைவரின் புகழை பறைசாற்றுகிறது. நன்றி.
அன்புடன் : கலைவேந்தன்
சத்துணவு தந்த சரித்திர நாயகன் புகழ் எத்திக்கும் பரவட்டும்