Originally Posted by
Govindraj Kpr
புரட்சித் தலைவரின் சிறப்புக்கள் அள்ள அள்ள குறையாத அட்சயப் பாத்திரம் போன்றவை- எண்ண எண்ண நமக்கு எழுச்சியுட்டுபவை,அவைகளை ஒரு எல்லைக்குள் கொண்டு வர இயலாது. பொதுவாக கடலின் ஆழத்தை கூட அளந்து விடலாம் ஆனால் ஒரு மங்கையின் மனதின் ஆழத்தை அளக்க முடியாது என்பார்கள்- அனால் உண்மை என்னவெனில் ஒரு மங்கையின் மனதின் ஆழத்தை கூட அளந்து விடலாம்- புரட்சித் தலைவரின் சிறப்புக்களின் ஆழத்தை அளக்கவே முடியாது -வானத்திற்கு எப்படி எல்லை இல்லையோ அப்படியே புரட்சித் தலைவரின் சிறப்புக்களுக்கும் எல்லையே இல்லை என்பதை புரட்சித் தலைவரின் மக்கள் நல இயக்க 44 ம் ஆண்டு துவக்க நாளில் கூறி நாம் அனைவரும் பெருமை கொள்வோம் -
ஆர்.கோவிந்தராஜ்