https://scontent.fyto1-1.fna.fbcdn.n...0f&oe=5B1D9EFD
Printable View
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
76 வது வெற்றிச்சித்திரம்
நிச்சயதாம்பூலம் வெளியான நாள் இன்று
நிச்சயதாம்பூலம் 9 பெப்ரவரி 1962
http://oi66.tinypic.com/30vlp4k.jpg
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
84 வது வெற்றிச்சித்திரம்
சித்தூர் ராணி பத்மினி வெளியான நாள் இன்று
சித்தூர் ராணி பத்மினி 9 பெப்ரவரி 1963
http://oi68.tinypic.com/2dtrv2h.jpg
அந்த கால சினிமாவுக்கென ஒரூ டிராக் உள்ளது
நாயகன் நாயகிக்கு டிஎம்எஸ் சுசீலாவும் துணை நடிகர் நடிகைக்கு சீர்காழி அல்லது பிபிஎஸ் எல்ஆர் ஈஸ்வரியும் ஹாஷ்ய நடிகர் நடிகைக்கு ஏஎல் ராகவன் ஜமுனாராணி என்ற வகையில்தால் பாடல்கள் அமைப்பார்கள்
உயர்ந்த மனிதனில் சிவக்குமார் பாரதிக்கு என் கேள்விக்கென்ன பதில் பாடலை டிஎம்எஸ் பாட அனுமதிப்பீர்களா என மெல்லிசை மன்னர் நடிகர் திலகத்திடம் கேட்க, நடிகர் திலகம் சற்றும் யோசிக்காமல், தாராளமாக செய்யுங்கள் எனக்கு படத்தின் வெற்றிதான் முக்கியம் தவிர அந்த பையன் (...சிவக்குமார்) வளர்ந்து வரும் நடிகர் அவன் முன்னேற இது பிள்ளையார் சுழியாக இருக்கட்டும் எனவும் வாழ்த்தினார். இந்தப்பாடல் வெள்ளிக்கிண்ணம்தான் பாடலுக்கு இனையாக ஹிட் ஆனது!
மேலும் தலைவர் படத்தில் SSRக்கு (துணை நடிகர்)பழணியில் "உள்ளத்துக்குள்ளே ஒளிந்திருப்பது"
பச்சை விளக்கில் "வாராதிருப்பாளோ"
போன்ற பாடல்களை நடிகர் திலகம் மனமுவந்து அனுமதித்ததின் பயனாக அந்த பாடல்கள்எல்லாம் மமிகப்பெரிய வெற்றி அடைந்தது!
மற்ற கதா நாயகர்களெல்லாம் நடிகர் திலகத்தைப் போல அனுமதித்ததில்லை!
அதுதான்நம் நடிகர் திலகம்!
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...61&oe=5AE27B35
courtesy net raththinam kalimuthu
பதி பக்தி வைரவிழா - [1958- 2018]
நடிகர் திலகம் - பீம் பாய் வெற்றி கூட்டணியின் முதல் வெற்றி பாய்ச்சல். புத்தா பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான முதல் படம். நடிகர் திலகத்துடன் நடிகையர் திலகமும் ஜெமினியும், சந்திரபாபுவும், எம் என் ராஜமும் இணைந்த வெற்றி காவியம்.மெல்லிசை மன்னர்களின் இசை ஓவியம். 1958-ல் வெளியாகி இப்போது 60 வருடங்களை நிறைவு செய்யும் பதி பக்தி திரைப்படத்தின் வைரவிழா கொண்டாட்டமும் திரையிடலும். நமது NT Fans அமைப்பின் சார்பாக இந்த மாத திரை விருந்தாக. நாள்: 11.02.2018, ஞாயிற...ு மாலை 6 மணிக்கு பதி பக்தி வைரவிழா - [1958- 2018].இடம்: ரஷியன் கலாச்சார மய்யம், 74, கஸ்தூரி ரங்கா சாலை, (சோழா ஹோட்டல் அருகில்), சென்னை -600018. அனைவரும் வருக!
On behalf of NT Fans [Nadigar Thilagam Film Appreciation Association] we would be screening Padhi Bakthi on the occasion of the movie celebrating Diamond Jubilee [Completion of 60 years- 1958-2018]. A rare chance to watch it on big screen with like minded audience. Come and enjoy the musical hit of MSV-TKR an able folly to the story of family sentimental values helmed by Bhim Singh and enacted brilliantly by NT. Date: 11.02.2018, Sunday 6 pm. Russian Cultural Centre, 74, Kasthuri Ranga Road [near Hotel Chozha], Chennai - 600018. All are welcome!
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...76&oe=5B183EF3
courtesy net nadigrthilagam fans
பாவமன்னிப்பு கொண்டாட்டம் ஜனவரி 28.01.2018 ஞாயிறு மாலைக் காட்சி ஜனவரி 26 மதுரை சென்ட்ரல் திரையரங்கில் வெளியான பாவமன்னிப்பு திரைப்படத்தின், ரசிகர்கள் சிறப்புக் காட்சி 28.01.18 ஞாயிறு மாலை நடைபெற்றது. இதுவரை மாலைக்காட்சிக்கு வந்த மற்றப் படங்களின் வசூலை முறியடித்து சாதனை படைத்தது.
ரசிகர்கள் மாலை 4 மணி முதலே தியேட்டர் வாசலில், வான வேடிக்கைகள், வெடி போன்றவற்றை போட்டுக் கொண்டே இருந்தனர். 7 மணி வரை வானவேடிக்கைகள் தொடர்ந்தது. படம் போட்டுவிட்ட காரணத்தினால் நிறுத்தப்பட்டது வான வேடிக்கை.
அவ்வழியே சென்ற வெளிநாட்டவர்கள் வியந்து போய் பார்த்தனர். சிலர் பேண்டு வாத்திய இசைக்கு ஏற்றபடி நடனம் ஆட ஆரம்பித்தனர். நடனமாடிவிட்டு தாங்களும் படம் பார்க்க வந்து விட்டனர்.
படத்திற்கு வந்த ரசிகர்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. படத்தின் வெற்றிக்கு உழைத்த அனைத்து அன்பு இதயங்களுக்கும் நமது சிவாஜிகணேசன்.இன் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
அதே போல் திருச்சியில் வெளியான நடிகர்திலகத்தின் சரஸ்வதி சபதம் திரைப்படத்திற்கு திருச்சி ரசிகர்கள் மாபெரும் வரவேற்பைக் கொடுத்து ஞாயிறு மாலைக் காட்சி அரங்கு நிறைந்ததால், நின்று கொண்டே படம் பார்த்துள்ளனர்.
எத்தனை யுகமானாலும் நடிகர்திலத்தின் படங்களுக்கு உள்ள மதிப்பு குறையாது என்பதை உணர்த்தி விட்டனர் மக்கள்தலைவரின் அன்பு இதயங்கள்.
http://www.sivajiganesan.in/Images/310118_2.jpg
http://www.sivajiganesan.in/Images/310118_10.jpg
courtesy sivajganesan.in
Murali Srinivas
சித்தூர் ராணி பத்மினி - Part I
தயாரிப்பு: உமா பிக்சர்ஸ்
இயக்கம்: Ch.நாராயண மூர்த்தி
வெளியான நாள்: 09.02.1963
இன்றைக்கு சரியாக 55 ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான திரை காவியம். ரஜபுத்திர வீரத்தையும், பத்மினி என்று அறியப்பட்ட பத்மாவதியின் கதையை அன்றே திரைபடமாக்கிய புதுமை. அந்த காவியத்தைப் பற்றிய ஒரு பார்வை இரண்டு பகுதிகளாக. (பெரும்பாலானோர் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்பதனால் முதல் பகுதி திரைக்கதைக்கு ஒதுக்கப்படுகிறது).
சரித்திர பின்னணியில் அமைந்த கதை. தமிழக வரலாற்று பின்னணியைக் கொள்ளாமல் ராஜஸ்தானின் ரஜபுத்திர சாம்ராஜ்ஜியத்தில் நிகழும் கதையை தமிழில் எடுத்திருக்கிறார்கள். வட இந்தியாவில் வழக்கில் இருக்கும் (இப்போதும் அவர்கள் நம்பும்) வரலாற்று நிகழ்வுகளை (அதாவது மாற்றான் கையில் சிக்கிக் கொள்வோம் என வரும்போது அதை விட உயிரை விடுவது மேல் என ரஜபுத்திர வம்ச பெண்மணிகள் தீக்குளித்தார்கள்) சற்றே மாற்றி எழுதப்பட்ட முடிவு.
ரஜபுத்திர நாடான உதயபூர் (உதய்பூர்) தலைநகரில் இளவரசி பத்மினியின் பிறந்த நாள் கொண்டாட்டங்களோடு கதை தொடங்குகிறது. அன்றைய டெல்லி பாதுஷா அலாவுதின் கில்ஜியின் தூதுவனான மாலிக்காபூர் விருந்தினராக வந்திருக்கிறான். இளவரசியின் பிறந்த நாளை முன்னிட்டு நடத்தும் போட்டியில் மாலிக்காபூரை வெல்கிறான் சித்தூர் சிப்பாய் என்ற மாறு வேடத்தில் வரும் சித்தூர் மன்னன் பீம்சிங். இளவரசியின் கையிலிருந்து பரிசு பெறும் அவன், அவள் அழகில் கவரப்படுகிறான். தொடர்ந்து இரண்டு மூன்று முறை அவளை சந்திக்கும் பீம்சிங் தன் விருப்பத்தை வெளிப்படுத்துகிறான்.அவளுக்கும் அது சம்மதமே.
மன்னன் என்பதை காட்டிக் கொள்ளாமல் சிப்பாய் போன்றே நடிக்கிறான். ஒரு சமயம் அவன் பாட பத்மினி நடனம் ஆடுகிறாள். ஒரு போட்டி அங்கே அரேங்கேறுகிறது. யாருக்கு வெற்றி என்று தெரியும் முன்னரே மன்னரே போட்டியை நிறுத்தி விடுகிறார். பீம்சிங்கிடம் என்ன பரிசு வேண்டும் என்று கேட்க அவன் அவரது மகளையே பரிசாக கேட்க, அவன் அரசன் என்று தெரியாமலே அவனை கைது செய்து தண்டிக்க முற்படுகிறார்கள். அவர்களிடமிருந்து பீம்சிங் தப்பித்து செல்கிறான்.
இதனிடையே டெல்லி சென்றடையும் மாலிக்காபூர், அலாவுதினிடம் பத்மினியின் அழகை வர்ணிக்க, டெல்லி பாதுஷாவிற்கு அவளை அடைய வேண்டும் என்ற ஆசை வருகிறது. பத்மினியை மணந்து கொள்ள மன்னரிடம் மாலிக்காபூரையே தூது அனுப்புகிறான். செய்தி கேட்டவுடன் மன்னன் பெண் தர மறுத்து விடுகிறான். அந்நேரம் பீம்சிங் சித்தூர் நாட்டின் தூதனாக (மறுபடியும் மாறு வேடம்) வந்து தங்கள் மன்னனுக்கு பத்மினியை பெண் கேட்க, மாலிக்காபூர் முன்னிலையிலே மன்னன் சம்மதித்து விடுகிறான் . மிகுந்த கோவத்துடன் மன்னனை எச்சரிக்கும் மாலிக்காபூரை திருப்பி அனுப்பி விடுகிறார்கள்.
மன்னன் பீம்சிங்கும் தன் காதலன் சிப்பாயும் ஒன்றே என்றறியாத பத்மினி திருமணத்திற்கு மறுக்கிறாள். அவளை சந்திக்கும் சிப்பாய் கல்யாணத்தன்று தான் வந்து அவளை அழைத்து செல்வதாக கூறி சம்மதிக்க வைக்கிறான். கல்யாணத்திற்கு முதல் நாள் பரிவாரங்களோடு வரும் பீம்சிங் இரவு நேரத்தில் அந்தபுரத்தில் பத்மினியை சந்திக்கும் போது மன்னர் வந்து விடுகிறார். அவனை சிறைக்கு கொண்டு செல்ல முயற்சிக்கும் போது, சித்தூர் நகர பிரதானிகள் வந்து உண்மையை விளக்க அனைவரும் மகிழ்ந்து திருமணத்தை நடத்தி வைக்கின்றனர்.
பத்மினி தனக்கு கிடைக்கவில்லை என்றதும் மிகுந்த கோவம் அடையும் அலாவுதின் சித்தூர் நாட்டின் மீது படை எடுக்கிறான். கோட்டையை முற்றுகையிட்டும் அவர்களால் சித்தூரை பிடிக்க முடியவில்லை. படை பலம், ஆயுத பலம் பலன் தராது என்பதை உணரும் அலாவுதீன் மாலிக்காபூரை சமாதான பேச்சுக்கு அனுப்புகிறான். அதை ஏற்றுக் கொள்ளும் பீம்சிங் அலாவுதினை விருந்தினராக வரவேற்கிறான்.
பத்மினியின் நடனத்தை காண வேண்டும் என்று ஆவலை வெளிப்படுத்தும் அலாவுதினிடம் ரஜபுத்திர வம்சத்து பெண்கள் திருமணத்திற்கு பிறகு அந்நிய ஆடவர்கள் முன்னிலையில் ஆட மாட்டார்கள் என பீம்சிங் மறுத்து விடுகிறான். மீண்டும் மீண்டும் அலாவுதீன் வற்புறுத்தவே, வேறொரு அறையில் பத்மினியை நடனமாட செய்து அதை கண்ணாடி மூலம் அலாவுதின் காண ஏற்பாடு செய்கிறான். தன்னை அவமானப்படுத்தி விட்டதாக குமுறும் அலாவுதீன் அதை வெளி காட்டிக் கொள்ளாமல் திரும்பி செல்கிறான்.
தனக்கு நேர்ந்த அவமானத்திற்கு பழி வாங்க நினைக்கும் அலாவுதீன் தன் பிறந்த நாளுக்கு மனைவியுடன் வருமாறு பீம்சிங்கிற்கு ஓலை அனுப்புகிறான். போக வேண்டம் என்று பீம்சிங்கின் தாய் தடுக்க, தன்னை கோழை என்று நினைத்து விடுவான் என்று பீம்சிங் வாதிடுகிறான். அப்படியென்றால் பீம்சிங்கை மட்டும் போய் விட்டு வரும்படி தாய் சொல்ல, அவன் செல்கிறான்.
அங்கே நடக்கும் ஒரு நடன நிகழ்ச்சியிலே அவனை கொல்ல நடக்கும் சாதுர்யமான முயற்சியிலிருந்து தப்பிக்கும் பீம்சிங்கை அவன் இரவு உறங்கும் போது கட்டிலோடு சேர்ந்து கட்டி போட்டு சிறை பிடிக்கிறார்கள். அவன் மனைவியை வரச்சொல்லி ஓலை அனுப்புகிறார்கள். அவள் தங்கள் அரச சபையில் ஆடினால் அவளது கணவனை விடுதலை செய்வதாக சொல்கிறார்கள். நூறு சேடி பெண்களுடன் வருவதாக அவள் தகவல் கொடுத்து விட்டு வருகிறாள். பீம்சிங்கிற்கு இது அவமானமாக இருக்கிறது. சபைக்கு வரும் பத்மினி தன்னுடன் அழைத்து வந்தது எல்லாம் ஆண்கள். அரசவையில் அவர்கள் தீடீர் தாக்குதல் நடத்த, பீம்சிங்கும் பத்மினியும் தப்பித்து செல்கிறார்கள்.
பின் தொடர்ந்து வரும் அலாவுதீன் இம்முறை தாக்குதலை தீவிரப்படுத்துகிறான். தன்னை சிறைப் பிடித்ததனால் மனம் தளர்ந்த பீம்சிங் ஆரம்பத்தில் போருக்கு செல்லாமல் இருக்க, அவனது படைகள் பெரும் பின்னடைவை சந்திக்கின்றன. இறுதியில் களத்திற்கு செல்லும் பீம்சிங், எதிரி ஒருவன் எறியும் ஈட்டி கொண்டு மரணமடைகிறான். போரில் தன் கணவனுக்கு உதவியாக பங்கு பெறும் பத்மினியும் அதைக் கண்டு மரணத்தை தழுவ, படம் நிறைவு பெறுகிறது.
(தொடரும்)
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...74&oe=5B0EC2B7
courtesy net nadigarthilagam fans
murali srinivas
சித்தூர் ராணி பத்மினி - Part II
இந்தப் படத்தை இப்போதுதான் நான் முதன் முறையாக பார்க்கிறேன். [இதை எழுதியது 2009ல்] ஏனென்றால் அவ்வளவாக மறு வெளியீடு காணாத திரைப்படம். படத்தைப் பற்றி செய்திகளும் குறைவாகவே கேள்விப்பட்டிருந்தேன்.
எந்த வித முன் எதிர்பார்ப்புகளும் இல்லாமல் படம் பார்த்தேன்.டைட்டில் போடும் போது இரண்டு ஆச்சர்யங்கள். கதை வசனம் ஸ்ரீதர்- இளங்கோவன் என்பது ஒன்று. பின்னணி பாடியவர்கள் பட்டியலில் டி.எம்.எஸ். பெயர் இல்லை என்பது இரண்டாவது.
தூய தமிழில் அடுக்கு மொழி வசனம் எழுதி தனக்கென்று ஒரு இடம் பிடித்தவர் இளங்கோவன் என்றால் இயல்பான வசனம் மூலம் மக்களை கவர்ந்தவர் ஸ்ரீதர். இந்த இருவரும் இணைந்து எழுதியிருக்கிறார்கள் என்பது ஒரு புதுமையாக இருந்தது. ஜி.ராமநாதன் இசையில் படத்தில் நடிகர் திலகம் பாடும் அனைத்துப் பாடல்களுக்கும் பின்னணி பாடியிருக்கிறார் சீர்காழி. இது வரை இதைப் பற்றி கேள்விப்படாததால் இதுவும் எதிர்பார்க்காத ஒன்றாக அமைந்தது.
இனி படத்திற்கு வருவோம். மாற்றான் ஒருவன் தன் மீது ஆசைக் கொண்டு கணவனை சிறை செய்து தன் மானத்தை விலை பேசிய போது, தந்திரமாக செயல்பட்டு தன் கணவனை காப்பாற்றிய ரஜபுத்திர ராணியின் கதை சரித்திரத்தில் இருக்கிறது. ராணி உட்பட பெண்கள் அனைவரும் மாற்றான் கையில் சிக்காமல் தீக்குளித்தார்கள் என்று சொல்லப்படுகிறது. அது நடந்ததா இல்லை கற்பனையா என்பது பற்றி அண்மை காலத்தில் பெரிய விவாதமானது நமக்கு தெரியும். அந்த கதையை படமாக எடுக்க வேண்டும் என்ற ஆசையில் எடுக்கப்பட்ட படம். கதாநாயகியின் பாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையமைப்பு. இதற்கு ஒரு நடிகர் திலகம் தேவையில்லை. எப்பவும் போல் யாருக்கோ உதவி செய்ய நடிகர் திலகம் ஒப்புக் கொண்டிருக்க வேண்டும். கதையும் பாத்திரமும் எப்படி இருந்தாலும் தன் முழு பங்களிப்பையும் தருபவர் நடிகர் திலகம். இதிலும் அப்படியே.
சித்தூர் சிப்பாய் வேடத்தில் வந்து மாலிக்காபூரை வெற்றிக் கொண்டு இளவரசியிடம் இளமைக் குறும்போடு பேசும் அந்த முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை அவரது presence படத்திற்கு உதவியிருக்கிறது. தான் யார் என்பதை வெளிக்காட்டாமல் வைஜயந்தியிடம் அவர் சரசமாடும் காட்சிகள் எல்லாம் சுவை. மாறு வேடங்களில் அவர் வைஜயந்தியை ஏமாற்றும் காட்சிகளும் அப்படியே. வைஜயந்தி நடனமாட சிவாஜி பாடும் அந்த பாடல் காட்சி ["பார்த்துக் கொண்டு இருந்தாலே போதும்"] பிரமாதம். இதற்கு முன் எந்தப் படத்திலும் இவ்வளவு ஸ்வர பிரஸ்தாரங்கள் / ஜதிகள் ஒரு பாடலில் பயன் படுத்தப்பட்டு நான் கேட்டதில்லை. அதற்கு அவர் வாயசைப்பு அற்புதம். மாலிக்காப்பூரை வாதத்தில் அடக்குவது, சிறையில் அவனை எடுத்தெறிந்து பேசி விட்டு சிரிப்பது, தன்னை சூழ்ச்சியின் மூலமாக கட்டிப் போட்ட அலாவுதினிடம் அவர் காட்டும் பாவம், அவர்களை துச்சமென மதித்து அவர் பேசுவது எல்லாம் அக்மார்க் சிவாஜி முத்திரை. என்னதான் மனைவி சாதுரியமாக செயல்பட்டு தன்னை மீட்டாலும், தன் வீரத்தின் மூலமாக விடுதலை பெறாமல் இப்படி தப்பித்து வரும் படியாகி விட்டதே என்று மனம் தளர்ந்து அவர் ஒரே இடத்தில சலனமற்று உட்கார்ந்திருக்கும் காட்சி குறிப்பிட தகுந்த ஒன்று. அதே போல் நடனம் ஆடிக் கொண்டே தன் உடை வாள் கத்தியை எடுத்து குத்த வரும் நடன மங்கையை அவர் அலட்சியமாக சமாளிக்கும் இடம். இப்படி நடிகர் திலகம் என்ற யானைக்கு சோளப் பொறியாக சில காட்சிகள் அமைத்திருக்கிறார்கள்.
நடனத்தில் தேர்ந்த ராணி என்றதும் பத்மினி அல்லது வைஜயந்தி தான் நினைவுக்கு வருவார்கள். இந்த படம் தயாரிக்க தொடங்கிய போது பத்மினி திருமணம் செய்துக் கொண்டு திரையுலகத்திலிருந்து விலகிய நேரம் என்பதால் வைஜயந்தி நாயகியாகி இருக்கிறார். அவரும் அந்த நேரம் இந்தி படவுலகில் பிசியாகி விட படம் தாமதமாகி இருக்கிறது.
அழகான வைஜயந்தி. நடனக் காட்சிகளில் தன் திறமையை வெளிப்படுத்தும் வைஜயந்தி மற்ற காட்சிகளிலும் சோடை போகவில்லை. ஆனால் அந்த பாடல் vs நடனம் போட்டி காட்சியில் பாடல் சிறப்புற்ற அளவுக்கு நடனம் அமையவில்லை. வஞ்சிக்கோட்டை வாலிபன் போட்டி நடனத்தை பார்த்த நமக்கு இது அந்த ரேஞ்சுக்கு வரவில்லை என்றே தோன்றுகிறது. காதல் காட்சிகளில் அவரிடம் நல்ல இளமை துள்ளல்.
மாலிக்காபூராக நம்பியார், அலாவுதினாக பாலையா. நம்பியார் எப்போதும் போல. பாலையா என்பதால் அலாவுதீன் பாத்திரம் அப்படி சித்தரிக்கப்பட்டிருக்கிறதா இல்லை சரித்திரத்திலேயே இப்படித்தானா என்று தெரியவில்லை. படம் முழுக்க மது மாது மயக்கத்திலே கேளிக்கை போகத்தில் திளைக்கும் அரசனாகவே அந்த பாத்திரம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒரு சில இடங்களில் பாலையா பளிச்சிடுகிறார்.
மற்றவர்கள் யாருக்கும் பெரிதாக வேலை இல்லை. சித்தூர் நாட்டின் தளபதியாக கவர்ச்சி வில்லன் கண்ணனை அடையாளம் தெரிகிறது. ஒரே ஒரு பாடல் காட்சிக்கு ஹெலன் மற்றும் ராகினி வந்து போகிறார்கள்.
காதலனை சிப்பாய் என்றே குறும்போடு அழைக்கும் பாங்கு எல்லாம் ஸ்ரீதர் டச்.அரண்மனை ஆவேச வசனங்கள் எல்லாம் இளங்கோவனின் கைவண்ணம் என்று தோன்றுகிறது.
இசையமைப்பு ஜி.ராமநாதன் என்று சொல்லும் போதே கர்நாடக சங்கீத ராகங்களில் அமைக்கப்பட்ட மெட்டுகள் என்பது மட்டுமல்ல இனிமையான சுவையைக் கொண்டவையாய் இருக்கும் என்பது இதிலும் வெளிப்பட்டிருக்கிறது.
1.தேவி விஜய பவானி
வைஜயந்தியின் அறிமுக பாடல்
2. ஓஹோ நிலா ராணி
சிப்பாய் வேடத்தில்வரும் நடிகர் திலகம் நிலவை நாயகியோடு ஒப்பிட்டு பாடும் பாடல்.
3. பார்த்து கொண்டு இருந்தால் போதும்
போட்டி பாடல். சீர்காழி பிய்த்து உதறி விட்டார். Hats off to him.
4.ஹம் தேகே மேல பாருங்கோ
அலாவுதினின் தர்பாரில் ராகினி ஆட இடம் பெறும் பாடல்.
5.சிட்டு சிரித்தது போல
சிவாஜி -வைஜயந்தி டூயட் பாடல்
6. வானத்தில் மீன் ஒன்று
வைஜயந்தி வேறொரு அறையில் கண்ணாடி முன் நின்று ஆடும் போது வரும் பாடல்.
7. ஆடல் பாடல் காணும் போது
அலாவுதினின் அரண்மனைக்கு பீம்சிங் வரும் போது ஹெலன் ஆடும் நடனப் பாடல்.
எல்லாமே கேட்க இனிமையானவை.
நடிகர் திலகத்தின் அன்னையின் ஆணை போன்ற படங்களை இயக்கிய நாராயண மூர்த்தி இதை டைரக்ட் செய்திருக்கிறார். ஆனால் கதையும் திரைக்கதையும் பெரிய அளவில் அவருக்கு கை கொடுக்கவில்லை.
Curate's egg என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். முழுமையாக இல்லாமல் அங்கங்கே நன்றாக இருப்பது. இந்த படத்திற்கு அது பொருந்தும். தயாரிப்பில் ஏற்பட்ட தாமதம், சரித்திர கதைகள் கிட்டத்தட்ட வழக்கொழிந்து போன ஒரு காலக்கட்டத்தில் வெளியானது, நடிகர் திலகத்திற்கு ஏற்ற பாத்திரப் படைப்பு அமையாமல் போனது, இப்படிப்பட்ட காரணங்கள் இருக்கும் போது படம் வெற்றி வாய்ப்பை இழந்ததில் வியப்பொன்றுமில்லை தவிரவும் எப்போதும் நடப்பது போல் இந்த படம் வெளியான மூன்று வாரத்தில் 01.03.1963 அன்று அறிவாளி ரிலீஸ். அதற்கு அடுத்த நாலு வாரத்தில் 29.03.1963 அன்று இருவர் உள்ளம், அதற்கு இரண்டு வாரம் கழித்து 12.04.1963 அன்று நான் வணங்கும் தெய்வம் வெளியாகின்றன. போதாக்குறைக்கு சித்தூர் ராணி பத்மினி வெளியாகும்போது 78 நாட்களை கடந்து ஆலயமணி வேறு சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் நேரம். இத்தனையும் தாண்டி படம் பேசப்பட்டதே சாதனைதான்.
அன்புடன்
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...fd&oe=5B0D4893
courtesy net nadigarthilagam fans
vaannila vijayakumaran
மிக்க நன்றி விஜய் சேதுபதி அவர்களே...
கேள்வி:
நடிகர்திலகம் சிவாஜி கணேசன், அவரது படங்கள், அவருடைய நடிப்பு...?...
-எஸ்.ஜெரினா, ஆலந்தூர்.
விஜய் சேதுபதி பதில்:
"நடிகர்திலகம் சிவாஜி சார் மாபெரும் கலைக் களஞ்சியம்! நடிப்பை அவர் அளவுக்கு கொண்டாட முடியுமா தெரியலை.
அவர் அதை மகிழ்ந்து கொண்டாடுவார்.
உடம்பில் உயிர் போல நடிப்பு அவரிடம் இருந்தது. ஸ்க்ரீன்ல வந்துட்டா, 'இதுல என்னைவிட பெட்டரா யாரும் பண்ணிட முடியாது'னு புரூப் பண்ணிட்டு போவார், உடன் நடிப்பது யாராக இருந்தாலும்.
எனக்கு அவருடைய பாசமலர், பாவமன்னிப்பு, பாலும் பழமும், ஆண்டவன் கட்டளை,தெய்வமகன் என்று பல படங்கள் ரொம்பப் பிடிக்கும். ஒவ்வொரு படத்திலும் அவர் வாழ்ந்திருப்பார்.
ஒவ்வொரு படத்திலும் தன்னை தன் நடிப்பை புதுசு புதுசா அறிமுகப்படுத்துவார். அவருடைய சாயல் இல்லாமல் எந்த நடிகரும் நடித்துவிட முடியாது.
அவருடைய 'ராஜபார்ட் ரங்கதுரை' பிரமாதமான படம். அப்படியொரு செமயான ஸ்கிரிப்ட் அது.
படத்துல அவர் நடிகராயிருப்பார். அவர் (வாழ்க்கையிலே) சந்தோஷமாயிருக்கும்போது நாடகத்திலும் சந்தோஷமான காட்சிகள் வரும். அவர் சோகமாயிருக்கும்போது சோகமான காட்சிகள் நாடகத்தில் வரும். இப்படி ஒரு ஸ்கிரிப்ட்ஒரு மூட்ல ரிப்பீட் ஆகும். அன்னைக்கு அந்த ஸ்கிரிப்டை ஹேண்டல் பண்ணுண விதம் அவ்ளோ பிரமாதம்.
நடிகனின் வாழ்க்கையும் சினிமாவும் ஒண்ணுதான் என்பதுபோல சந்தோஷமும் சோகமும் ரிப்பீட்டா வருது. ஒரு நாடகக் கலைஞனின் வாழ்க்கை கண்முன் நடப்பது மாதிரி உணர வைக்கும்.
ஒரு கட்டத்துல ரங்கதுரை எல்லாத்தையும் இழந்து நாடகத்தை இழுத்து மூடிவிடுவார்கள். மக்கள் எல்லாம் சேர்ந்து ஆளுக்கு ஒரு ரூபாய் கொடுத்து நாடகம் தொடங்கச் சொல்கிறார்கள். நாடகம் தொடங்கும்.
"டூபீ - நாட் டூபீ- வாழ்வதா - வீழ்வதா?"
அந்த கட்டத்துல அவர் இருப்பார். வாழ்வின் ஒவ்வொரு சிச்சுவேஷனையும் அந்த நாடகம் பிரதிபலிக்கும். முடிவும் அப்படியிருக்கும். செமயா பண்ணியிருப்பார்.
'தில்லானா மோகனாம்பாள்' அதுவும் அப்படியொரு செமயான படம்தான். அந்த ஸ்கிரிப்ட் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
படத்துல நிறைய வில்லன்கள் வருவார்கள். ஆனால் டைரக்டர் வில்லனாக காட்டியது சிவாஜிசாரின் ஈகோவை. அந்த ஈகோ ஒரு சீன்ல உடையும்.
அந்த ஆஸ்பிடல் நர்ஸ் அவர்மீது கொண்டிருக்கும் மதிப்பைச் சொல்லி அவரது ஈகோவை இடித்துத் தள்ளுவார். அப்போது அப்படி ஒரு நடிப்பை வெளிப்படுத்துவார்.
புதிய பறவை, வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன்னு சொல்லிட்டே போகலாம். அவர் ஒரு டிக்ஷனரி. நீங்க என்ன பண்ணாலும் ரெஃப்ரன்ஸ் இருக்கும்."
நன்றி: குமுதம் 29:06:2016 இதழிலிருந்து
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...44&oe=5B118D64
courtesy nadigarthilagam sivsji visirigal
athavan ravi
http://oi66.tinypic.com/a37nn.jpg
இன்று பிப்ரவரி 10
" தமிழக முன்னேற்ற முன்னணி " உதயமான நாள்
இன்று தமிழகத்தை உலகமே காரி உமிழ்கிறது,
இப்படியான தரம் தாழ்ந்த ஒரு அரசியலை எங்கும் காண முடியவி...ல்லை,
இந்த இழி நிலைக்குக் காரணமான தற்போதைய அரசியல்
அன்று மட்டும் எங்கள் நடிகர்திலகத்திற்கு இந்த பாழ் பட்ட மக்கள் அரசியல் ஆதரவு அளித்து இருந்தால் இந்த சசிகலாவும் ஓ பி எஸ் இன்று அரசியல் ஆட்டத்திலேயே இருந்து இருக்க மாட்டார்கள்,
தமிழகம் தலை நிமிர்ந்து இருக்கும்,
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...68&oe=5AE0A529
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...46&oe=5ADED302
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...fb&oe=5B1C6AE0
courtesy net
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
181 வது வெற்றிச்சித்திரம்
உனக்காக நான் வெளியான நாள் இன்று
உனக்காக நான் 12 பெப்ரவரி 1976
https://upload.wikimedia.org/wikiped...kkaga_naan.jpg
https://i.ytimg.com/vi/9mnPLNTzP-Y/maxresdefault.jpg
Lakshmankumar
அரிய புகைப்படம்.
கல்யாணப் பரிசு படத்துவக்க விழாவின் போது நடிகர் திலகம் மூத்த மகன் தளபதி ராம்குமார் காமிராவை முடுக்கி வைத்த போது புகைப்படம். அருகில் சாந்தி, நடிகர் திலகம், சரோஜாதேவி, விஜயகுமாரி, எஸ்.டி.சுப்புலட்சுமி, எம்.சரோஜா, தங்கவேலு மற்றும் படக்குழுவினர்.
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...5e&oe=5B15E492
courtesy nadigarthilagam fans
vee yaar
ஜெய்கணஷ் - சிவாஜி ரசிகர்களால் மறக்க முடியாத பெயர். தீவிர சிவாஜி ரசிகராக இறுதி வரை வாழ்ந்தவர். வெளிப்ப்டையாகவும் அதை நிரூபித்தவர். 1970களின் கடைசியில் கிட்டத்தட்ட ஒவ்வொரு சிவாஜி ரசிகர் மன்ற விழாவும் ஜெய்கணேஷ் பங்கேற்பில் நடந்தது என்றால் மிகையில்லை. தவைரின் புகழை தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் சென்று பரப்பியவர். வெறுமனே வழக்கமான சம்பிரதாயமான "அவர் சிறந்த நடிகர், அவரைப் போல சிறந்த நடிகர் யாருமில்லை" என்ற புகழுரைகளைத் தாண்டி, நடிகர் திலகத்தின் தேசபக்தி, காங்கிரஸ் இயக்கத்திற்கு அவ...ர் ஆற்றிய பங்களிப்பும் தொண்டும், அவருடைய நன்கொடைகள் போன்று அவருடைய சிறப்பினை எடுத்துக்கூறுவார். நாங்கள் எங்கள் தேசிய இளைஞர் சிவாஜி கணேசன் நற்பணி மன்றம் சார்பாக ஒரு விழாவிற்கு அவரை அழைக்கச் சென்றபோது அனைவருடனும் மிகவும் சகஜமாகவும் உரிமையாடும் பேசிப் பழகி, சொன்ன நாளில் சொன்ன நேரத்தில், தலைவரைப் போலவே நேரம் தவறாமையைக் கடைப்பிடித்து வந்து விழாவை நடத்திக் கொடுத்தார்.
அவருடைய நினைவு நாளான இன்று அவரை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்துவோம்.
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...37&oe=5ADE298E
vikram prabu guna
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவில் ஐய்யா பேனர் வைத்துள்ளார்
https://scontent.fykz1-1.fna.fbcdn.n...53&oe=5B13B804
courtesy net
Selvaraj fernadez
அன்று பல நடிகர்களும் நம் திரை உலகில் மின்னிக்கொண்டிருந்தார்கள் .தமிழ் திரை உலகில் ஜெயசங்கர் , ரவிச்சந்திரன், ஏவிஎம் ராஜன்,ஜெமினிகணேசன்,முத்துராமன்,எம்ஜிஆர் இவர்களுடன் நம் அய்யன். ஜெயசங்கர் அவர்கள் குடும்பக்கதைகளிலும், CID யாகவும் நடித்தார்கள். ரவிச்சந்திரன் துப்பறியும் கதைகளில் நடித்தார்கள். ஜெமினி கணேசன் காதல் தோல்வி கதைகளில் அதிகமாக நடித்தார்கள்.ஏவிஎம் ராஜன் கடவுள் பக்தி படங்களில் நடித்தார்கள். முத்துராமன் சொல்லும்படியாக இல்லை என்றாலும் குடும்பப் பாங்கான கதைகளில் நடித்தார்...கள். எம்ஜிஆர் அவர்கள் அக்ஷன் கதைகளிலும் ,மன்னராகவும் நடித்தார்கள்.ஆனால் இவர்களின் படங்களில் மக்கள் வாழ்க்கைக்கு தகுந்த கதைகள் என்று குறிப்பிட்டு எதையும் எடுத்துக்காட்டாக சொல்ல இயலாது. படம் பார்த்தபிறகு படம் நன்றாக இருந்தது,பரவாயில்லை.என்றுதான் சொல்லப்பட்டன.மேலும் இந்த நடிகர்களுக்கு இந்த கதைகளை விட்டு வேறு கதைகளில் மின்ன முடியவில்லை என்பது மறுக்க முடியாத சத்தியம். இவர்களின் பல படங்கள் வெற்றி பெற்றதுண்டு. மேலும் இந்த நடிகர் இந்த வேடத்துக்குதான் பொருத்தமானவர் என்று முத்திரையும் குத்தப்பட்டதுண்டு. காரணம் மேற்படி சொல்லப்பட்ட நடிகர்களுக்கு அதைத்தான் செய்ய முடிந்தது. வேற்று கதா பாத்திரங்களில் இவர்களால் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் அய்யன் சிவாஜி அவர்கள் மேற்கூறிய அனைத்து நடிகர்களும் செய்த கதாபாத்திரங்களை நம் அய்யன் மிக அழகாக, நேர்த்தியாக,பார்ப்பவர்களின் மனதில் பதியும்படியாக, பரவசமாக ,படம் பார்த்த பிறகும் நாட்களாக,வாரங்களாக,மாதங்களாக மக்கள் பேசும்படி நடித்தார் என்று சொல்வதை விட ,மக்கள் மகிழும் படி வாழ்ந்து காட்டினார் . அயனின் படங்களில் ஏற்றுக்கொண்ட எந்த கதாபாத்திரமும்,இந்த கதாபாத்திரம் இவருக்கு எடுபடவில்லைஎன்று எவராலும் சொல்ல முடியவில்லை.கரணம். அய்யன்ஏற்ற அனைத்து கதாபாத்திரங்களிலும் அய்யன்நடக்கவில்லை வாழ்ந்தே காட்டினார் .எனவேதான் அய்யன் நடிப்பை எவராலும் குறை சொல்ல முடியவில்லை.குறைகள் காணவும் இல்லை. இதில் விசேஷம் என்னவென்றால் மனித வாழ்க்கைக்கு எடுத்துக்காட்டாக கூற நடிகர்திலகத்தின் படங்களே முன்னுதாரணம். காதலனாக, ,குடும்ப தலைவனாக,மன்னர்களாக, தேசத்தலைவர்களாக,மருத்துவராக,முதியவனாக,ரோகியாக,வாலி பனாக,காவல்துறை அதிகாரியாக, அரசாங்க அதிகாரியாக,பார்வையற்றவனாக,கோமாளியாக,வாள் வீசும் வீரனாக,நாடகக்காரனாக,பாதிரியாராக,முற்றும் துறந்த முனிவனாக, சமய பெரியவராக,மாலுமியாக,ரகசியபோலீசாக ,பனைஏறியாக, அன்புள்ள அண்ணனாக,பாசமிகு தந்தையாக, ஆலைகளின் முதலாளியாக,வித்தை காட்டுபவானாக, சூரனாக, தெய்வங்களாக.மீனவனாக,நடை மன்னனாக , இன்னும் பல,பல அவதார புருஷனாக, மேலே கூறிய நடிகர்கள் செய்த ,அவர்கள் செய்து வெற்றி பெறாத அனைத்து கதாபாத்திரங்களையும் தத்ரூபமாக,மக்கள் பல மாதங்கள் அல்ல, இப்போதும் பேசி மகிழும் அளவிற்கு எல்லா கதா பாத்திரங்களிலும் நடிக்காமல் வாழ்ந்தார் என்பதே உலக உண்மை. மேலே கூறி நடிகர்கள் செல்வத்திற்காக நடிகர்களாக நடித்தார்கள். இதுதான் என் தொழில் என்று சிரம் ஏற்று ஐய்யனோ சினிமாவில் வாழ்ந்து காட்டினார்,உலகமெல்லாம் ஏற்றுக்கொண்டு , அழைத்து சிறப்பிக்கப்பட்டு, பல பதவிகள் அலங்கரிக்கப்பட்டு,சிறப்புக்கள் பல பெற்று , இந்தியனாக, அதிலும் ஒரு தமிழனாக இன்றும் சுடராக நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.வாழ்க அய்யனின் புகழ்.
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...1d&oe=5B1686AA
courtesy net
jahir hussain
நடிகர் திலகமும் டி.எம்.சௌந்திரராஜனும்... இரட்டைக் குழல் துப்பாக்கி போல நம் இதயங்களை பூந்தோட்டாக்களால் வருடிய பொன்னான கால கட்டங்கள் அது... சில நிகழ்வுகளை அசை போடுவது நமக்கு இனிமையாக இருக்கிறது.. 'அவன்தான் மனிதன்' படத்தில் இடம்பெறும் 'மனிதன் நினைப்பதுண்டு, வாழ்வு நிலைக்குமென்று' பாடல் காட்சி வெளிநாட்டில் படமாக்கப்பட்டது. படப்பிடிப்பின்போது, டி.எம்.எஸ். பாடிய அந்தப் பாடல் கேஸட் கொண்டு வரப்படவில்லை என்பது தெரியவர, "கவலையே வேண்டாம். பாடல் வரிகள் எனக்குத் தெரியும். டி.எம்.எஸ். எந்த உணர்ச்சியில் பாடியிருப்பார் என்பதும் எனக்குத் தெரியும். நான் வாயசைத்து நடிக்கிறேன். பிறகு சேர்த்துக்கொள்ளுங்கள்" என்று சொல்லிப் பாடலே ஒலிக்காமல் நடித்தார் சிவாஜி. படத்தில் இரண்டும் அத்தனை அற்புதமாகப் பொருந்தின.... கௌரவம் படத்தில் பாரிஸ்டர் சிவாஜி பாடுவதாக அமைந்த இரண்டு பாடல்களும் கண்ணன் சிவாஜி பாடுவதாக அமைந்த மெழுகுவர்த்தி எரிகிறது பாடலையும் டி.எம்.எஸ். பாடியிருப்பார்... இதில் இரண்டு கதாபாத்திரங்களுக்கும் அந்தந்த கதாபாத்திரங்களுக்கு ஏற்றவாறு குரல் மாடுலேஷனுக்கு தக்கவாறு பாடி அசத்தியிருப்பார்.. வசந்தமாளிகை' படத்தில் வரும் 'யாருக்காக' பாடலைப் பாடும்போது, அதற்கு ‘எக்கோ எஃபெக்ட்’ வைக்கச் சொன்னார் டி.எம்.எஸ். 'அதெல்லாம் வீண் வேலை' என்று தயாரிப்பாளர் மறுத்துவிட, 'எக்கோ எஃபெக்ட்' வைத்தால்தான் பாடுவேன் என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார் அதன்படியே வைக்கப்பட்டது. தியேட்டரில் எக்கோ எஃபெக்ட்டுடன் அந்தப் பாடல் பிரமாண்டமாக ஒலித்தபோது ரசிகர்களிடையே எழுந்த கைத்தட்டலைக் கண்டு, டி.எம்.எஸ். சொன்ன யோசனை எத்தனை புத்திசாலித்தனமானது என்று உணர்ந்து வியந்தார் தயாரிப்பாளர். நடிகர் திலகத்தை எவ்வளவு க்ளோஸ் ஆக புரிந்து வைத்து இருந்தார் என்பது புலனாகிறது அல்லவா?
" உயர்ந்த மனிதன்' படத்தின் 'வெள்ளிக்கிண்ணம்தான்...', 'என் கேள்விக்கென்ன பதில்...'ஆகிய இரண்டு பாடல்களையும் கேட்டுவிட்டு ஏவி.எம். கேட்ட முதல் கேள்வி, "என் கேள்விக்கென்ன பாடல், இளம் நடிகர் சிவகுமாருக்கானது என்று டி.எம்.எஸ்ஸிடம் சொன்னீர்களா?" என்பதுதான். அவர் நினைத்ததுபோல் டி.எம்.எஸ்ஸுக்கு இந்த விஷயம் சொல்லப்பட்டிருக்கவில்லை. சொல்லியிருந்தால், சிவகுமாருக்கேற்ப தன் குரலைக் குழைத்து மென்மையாக்கிக்கொண்டு பாடியிருப்பார் டி.எம்.எஸ். என்பதில் ஏவி.எம்முக்கு அத்தனை நம்பிக்கை. பின்னர், இந்தத் தகவல் டி.எம்.எஸ்ஸுக்குத் தெரிவிக்கப்பட்டு, சிவகுமாருக்கேற்ப மீண்டும் அதே பாடலை குழைவும் நெகிழ்வுமாகப் பாடித் தந்தார் டி.எம்.எஸ்.
" சிவந்த மண் படத்தில் "ஒரு நாளிலே" பாடலின் மென்மை கருதி பாலமுரளி கிருஷ்ணாவை பாட வைத்து பதிவு செய்து விட்டார் மெல்லிசை மன்னர்.. ஆனால் நம்மவர் அந்த பாடலின் தனித்தன்மையை சுட்டிக்காட்டி டி.எம்.எஸ். மீதுள்ள நம்பிக்கையினால் அவரையே பாட வைக்க பரிந்துரைத்தார்... பாலமுரளி கிருஷ்ணாவோ சீர்காழி கோவிந்த ராஜனோ டி.எம்.எஸ்.ஐவிட இசை ஞானத்தில் எவ்விதத்திலும் குறைந்தவர் அல்லர்... ஆனால் நம்மவருக்கு பாடும் மோது டி.எம்.எஸ் இன் குரல் ஒற்றுமை அவ்வளவு பாந்தமாக மேட்ச் ஆகிறது... "தெய்வமகன்" படத்தில் சிருங்காரம் ரஸம் மிக்க "காதல் மலர் கூட்டம்" பாடலையும் .. பக்தி ரஸம் மிக்க "கேட்டதும் கொடுப்பவனே" பாடலும் இரண்டு மாறுபட்ட கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடிகர் திலகத்தின் நடிப்பு எப்படி இருக்கும் என்ற புரிதலோடு பாடியதும் குறிப்பிடத் தக்கது... "தெய்வமே" பாடலும் "காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள்" பாடலும் இரு வேறு பாடகர்கள் இருவேறு நடிகர்களுக்காக பாடியது போல ஜீவனுடன் அமைந்துள்ளது.. சிறப்பு... "ப்ராப்தம்" படத்தில் "தாலாட்டுப்பாடி தாயாக வேண்டும்" பாடலையும் குறிப்பிட்டு சொல்லலாம்... டி.எம்.எஸ். உச்சஸ்தானியில் பாடும் போது இடையில் சாவித்ரி "கண்ணா" என்று குரல் கொடுப்பார்... மேலும் உருக்கமாக அமைந்தது அந்தப்பாடல்... அதேபோல "ஞான ஔி" படத்தில் "தேவனே என்னைப் பாருங்கள்" பாடல் இடையே ஓ..மைலார்ட்... பார்டன் மீ... என்ற வசனம் வரும் அதை நம்மவரை பேச சொன்னார் எம்.எஸ்.வி... பாடலை கேட்டு விட்டு வசனம் பேச மறுத்துவிட்டார்... பிறகு அந்த வசனத்தை மெல்லிசை மன்னரின் உதவியாளர் ஜோஸப் கிருஷ்ணா, மற்றும் சதன் போன்றவர்கள் பேசினார்கள் சரியாக வரவில்லை.. டி.எம்.எஸ். யே பேச சொன்னார் எம்.எஸ்.வி.. நேராக நடிகர் திலகத்திடம் னெ்றார் டி.எம்.எஸ். இந்த வசனத்தை எப்படி உச்சரிக்க வேண்டும் என்று நம்மவரிடம் கேட்டார்.. பந்து இப்போது நம்மவர் கைகளில்... நடிகர்திலகம் தமது பாணியில் தன் சிம்மக் குரலில் பேசிக் காட்டனார்... அப்படியே "கேப்ச்சர்" பண்ணிக் கொண்ட டி.எம்.எஸ். பாடல் ஒலிப்பதிவுக்கு தயாரானார்... மற்ற விபரங்களைத்தான் வெள்ளித் திரையில் பார்த்தோமே நாம்.. இப்படி நிறைய்ய நினைவுகளை அசைபோடலாம்.. ஒரு நடிகருக்கும் ஒரு பாடகருக்கும் உள்ள இதுபோன்ற நுணுக்கமான புரிதல் உலகில் எந்தவொறு ஜோடிக்கும் இருந்தது கிடையாது என்பது உண்மை...
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...89&oe=5B2318BE
courtesy net
sivaji palanikumar
வலக்கை கொடுப்பது, இடக் கைக்கு, தெரியக் கூடாது, என்று, வாழ்ந்தகர்ணன்
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...07&oe=5B22150C
courtesy net
Vaannila vijayakumaran
உத்தமபுத்திரன் வைரவிழா நாளையொட்டி
விழாகுழுவினர் சென்னையில் வெளியிட்ட 2018 ஆம் வருட நாள்காட்டி
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...bb&oe=5B184F81
courtesy net
sekar p
இன்று இரவு 10 மணிக்கு ஜெயா மூவியில்
* உத்தம புத்திரன்
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...ea&oe=5B0B3B2A
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...bf&oe=5B19E03D
sekar .p
இன்று இரவு 11:30 க்கு சன் டிவியில் சன் டிவியில்
** கந்தன் கருணை
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...c3&oe=5ADCF78E
Raththinam kalimuthu
ச.சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்!
பாவமன்னிப்பின் இந்த பாடலை ராஜா படத்தில் நிரூபித்துள்ளார் நடிகர் திலகம்.
ராஜாவின் க்ளைமாக்ஸில் நடிகர் திலகம் மற்றும் பட அதிபர் பாலாஜி (சகோதரர்கள்) முன்னிலையில் அவர்களின் தாயார் பன்டரிபாயை ரங்கா ராவ் உத்தரவின் பேரில் மனோகர் சவுக்கால் அடிப்பார். அப்போது பாலாஜி துடிதுடித்து அழுவார். ஆனால் நடிகர் திலகம் (அழுகையை மறைத்து) சிரித்துக்கொண்டிருப்பார் பின்னர் மெல்ல மெல்ல கண்ணீர் மல்க அழுகையாக மாற்றி கதறித் துடிப்பார்....
இதுதான் சிரித்துக்கொண்டே அழுவதா அல்லது அழுது கொண்டே சிரிப்பதா?
இந்த நடிப்பு நமது நடிகர் திலகத்தை விட இந்த உலகத்தில் யாருக்கு வரும்!
ச.சிலர் சிரிப்பார் சிலர் அழுவார்
நான் சிரித்துக்கொண்டே அழுகின்றேன்!
பாவமன்னிப்பின் இந்த பாடலை ராஜா படத்தில் நிரூபித்துள்ளார் நடிகர் திலகம்.
ராஜாவின் க்ளைமாக்ஸில் நடிகர் திலகம் மற்றும் பட அதிபர் பாலாஜி (சகோதரர்கள்) முன்னிலையில் அவர்களின் தாயார் பன்டரிபாயை ரங்கா ராவ் உத்தரவின் பேரில் மனோகர் சவுக்கால் அடிப்பார். அப்போது பாலாஜி துடிதுடித்து அழுவார். ஆனால் நடிகர் திலகம் (அழுகையை மறைத்து) சிரித்துக்கொண்டிருப்பார் பின்னர் மெல்ல மெல்ல கண்ணீர் மல்க அழுகையாக மாற்றி கதறித் துடிப்பார்....
இதுதான் சிரித்துக்கொண்டே அழுவதா அல்லது அழுது கொண்டே சிரிப்பதா?
இந்த நடிப்பு நமது நடிகர் திலகத்தை விட இந்த உலகத்தில் யாருக்கு வரும்!
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...3e&oe=5ADB8CD7
https://scontent.fyto1-1.fna.fbcdn.n...e9&oe=5AD98D83
courtesy net
கொடைவள்ளல் ,கலைக்குரிசில், சிவாஜி கணேசனின்
118 வது வெற்றிச்சித்திரம்
திருமால் பெருமை வெளியான நாள் இன்று
திருமால் பெருமை 16 பெப்ரவரி 1968
https://scontent.fyyz1-1.fna.fbcdn.n...8d&oe=5B04198A