-
வசந்த மாளிகை பற்றிய பல செய்திகள்.
கோவை மாவட்டத்தில் ஆர். எஸ். புரத்தில் கோடீஸ்வரரின் மகன் ஒருவர் பெரும் மாளிகை கட்டி வந்தார்.காதலிக்காக அவர் கட்டி வந்ததுதான். ஆனால் அது ஒரு தலைக் காதல்.விவேக் என்ற ஜமீன்தாரின் மனைவி மேல் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே அவர் மேல் காதல் வயப்பட்டிருந்தார்.விவேக் கொலை செய்யப்பட்டார்.பத்திரிக்கைகள் வசந்தமாளிகையை சம்பந்தப்படுத்தி செய்திகள் வெளியிட்டு இருந்தன.விவேக் ஜமீன் வம்சத்தை சேர்ந்தவர்தான். பொள்ளாச்சி, ஜமீன் ஊத்துக்குளியைச் சேர்ந்தவர். எங்களூர்காரர்.என் தங்கச்சி படிச்சவ படத்தில் வரும் வில்லன் மாளிகை விவேக் குடும்பத்தை சேர்ந்ததுதான்.
வசந்த மாளிகை திரைப்படம் ஓடும் நேரம் 2.42 மணிகள்.ஆனால் நாங்கள் இதை தியேட்டரில் பார்த்தது மூன்றே முக்கால் மணி நேரத்திற்கும் மேல்.ஆச்சர்யமாக உள்ளதா?
இப்படம் 1979. களில் பொள்ளாச்சி அவுட்சைட் டூரீங் தியேட்டரில் திரையிடப்பட்டது. எத்தனை முறை தேய்ந்த பிரிண்டோ? தலைவர் ஏன்? ஏன்? ஏன்? என்று பாடுவார்.பிலிம் கட்டாகும்.மறுபடியும் ஒட்ட வைத்து ஓட்டினால் ஐந்து அல்லது பத்து நிமிடம் ஓடும்.பிலிம் கட்டாகும்.இதேதான் கடைசி வரை.
படம் விட்டு வெளியே வந்தால் தியேட்டரின் கொள்ளளவுக்கு மேல் மூன்று மடங்கு கூட்டம்.
ஆனாலும், அன்று இரவுக் காட்சி ரத்து.வசந்தமாளிகை ஒரே ஒரு ஷோ ஓட்டப்பட்டதென்றால் அது அந்த தியேட்டராக மட்டும் தானிருக்கும்.
1992 ல் கோவை கே ஜி அரங்கில் வசந்த மாளிகை புது பிரிண்ட்டுடன் திரையிடப்பட்டது.பட ரிலீஸ் அப்போது பிரபலமாக இருந்த அக்கினியாயி அம்மன் பிக்சர்ஸ்.25 நாட்கள் ஓட்டப்பட்டு பெரும் வசூல் சாதனை செய்யப்பட்டது.92 க்கு மேல் எந்த பழைய படமும் நவீன அரங்குகளில் 15 நாட்கள் கூட ஓட்டப்பட்டதில்லை.அதை முறியடித்தது கர்ணன். கோவை தர்ஷனா 50 நாட்கள்.
புரூக் பீல்டில் 63 நாட்கள். ஆனால் இது புது வெர்ஷனில் டிஜிட்டலில் செய்யப்பட்டது.
ராமா நாயுடு ஆந்திராவில் இருந்து கொண்டு விநியோகஸ்தரிடம் வசூல் பற்றி விசாரிப்பார்.நான் அருகில் இரண்டு முறை இருந்து பார்த்துள்ளேன்.
கே.ஜி.யில் 25 நாட்கள் ஓடிய பழைய படமென்றால் அது வசந்த மாளிகைதான்.
கேஜியில் எடுத்து பொள்ளாச்சி atscயில் படம் திரையிடப்பட்ட போது வந்திருந்த இளைஞர் கூட்டம் வியக்க வைத்தது. அந்தப்படத்திற்கு நான் கேட்ட அதிகமான சவுண்ட் வேறு புதிய படங்களுக்கு கூட நான் பார்த்ததில்லை.இரண்டு வாரங்களை பூர்த்திசெய்து சிறு நகரமான பொள்ளாச்சியில் அப்படம் சாதனை படைத்தது.இதுவும் வேறு பழைய படங்கள் அதற்குப் பின் செய்யாத சாதனை தான்.மறுபடியும் ஆச்சர்யமாக இரண்டு மாத இடை வெளியில் துரைஸில் திரையிடப்பட்டு ஒரு வாரத்தை தாண்டியது.குறுகிய கால இடைவெளியில் பழைய படம் ஒன்று இரண்டு அரங்கில் ரிலீஸ் செய்யப்பட்டு சாதனையும் வசந்தமாளிகைக்கு உண்டு.நான் இங்கு குறிப்பிட காரணம் அப்போது அத் திரையரங்குகளில் புதிய படங்கள் மட்டும் தான் திரையிடப்பட்டுக் கொண்டிருந்தன.கர்ணனும் முதலில் atsc. யில் ஒரு வாரமும் பின் ஒரு மாத இடை வெளியில் துரைஸில் ஒரு வாரமும் ஓடியது.
ஒரு பழைய படம் இரண்டு முறை புதுப்பிக்கப்பட்டு மறு வெளியீடு செய்யப்படுவதிலும் வசந்த மாளிகை சிறப்பு பெறுகிறது.
குடிப்பழக்கம் தவறுதான்.கதாநாயகன் சதா குடித்துக் கொண்டிருப்பது போல் காட்டியும் படத்தை உச்சத்தில் வைத்துக் கொண்டாடப்பட்டதும் வசந்தமாளிகைக்குத் தான்.
மிகப் பெரிய காதல் காவியம் வசந்தமாளிகை சொல்லப்பட்டாலும், கதாநாயனும் நாயகியும் படம் முழுவதும் இணைந்து நடித்தாலும் காதலை நேரிடையாகச் சொல்லலாத காட்சிகளை கொண்ட படம்.
காதலுக்கான பிராண்ட்டட் சினிமா என்று எல்லோராலும் சொல்லும் படம்.
அரிதிலும் அரிதாக இரண்டு பழைய படங்களின் ஷீட்டிங் காட்சிகளை தான் இணையத்தில் காண முடிகிறது.ஒன்று தில்லானா மோகனாம்பாள்.இன்னொன்று வசந்தமாளிகை.
திரைப்படங்களில் அதிகமாக போஸ்டர்கள் காட்டப்பட்ட படமும் வசந்தமாளிகை.சமீபத்தில் வெளியான மேற்கு தொடர்ச்சி மலை படத்திலும் கூட இப்படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பதை காணலாம்.ஆங்கிலப்படம் ஒன்றிலும் இப் படத்தின் போஸ்டர் காண்பிக்கப்பட்டிருக்கும்.
தமிழ்நாட்டில் வெள்ளிவிழா ஓடிய படம் ஒன்று இலங்கையிலும் வெள்ளிவிழா ஓடிய படங்கள் வரிசையில் இதுவும் ஒன்று.
நன்றி செந்தில்வேல் செல்வராஜ்
-
கலையுலகமானாலும்...
அரசியலுலகமானாலும்...
அல்லது, சமூக சேவை போன்ற பொது வாழ்க்கையானாலும்...
... ஒருவரின் சேவைகளை பாராட்டி விருது வழங்கும் போதுதான் அவர்களுடைய பெருமை பொது மக்களிடையே சென்று இவ்வுலகில் நிரந்தரமாக நிலை நாட்டப்படுகிறது...
ஆனால், அதற்கு மாறாக தான் பெற்ற விருதுகளுக்கு தன்னால் ஒரு நிரந்தர அங்கீகாரத்தினை ஏற்படுத்திக் கொடுத்த ஒரே தலைவர் நமது உத்தம தலைவர் மட்டுமே...
அதற்கு மிகச்சிறந்த உதாரணம் சொல்ல வேண்டுமென்றால்...
அமெரிக்க அரசால் வழங்கப்படும் ஆஸ்கர் விருதுக்கு இணையாக பிரெஞ்சு அரசாங்கத்தால் வழங்கப்படும் செவாலியே விருதினை நமது நடிகர் திலகம் அவர்கள் வாங்கும் வரை அந்த விருதினை பற்றி நமது தமிழக மக்கள் யாரும் சரியாக அறிந்திருக்க வாய்ப்பில்லை...
ஆனால், நமது உத்தம தலைவர் சிவாஜி கணேசன் அவர்கள் பெற்ற பிறகு தான்...
செவாலியே விருதின் மகத்துவத்தையும், அந்த விருதின் பெருமைகளையும் தமிழக மக்கள் நன்கு அறிந்து கொண்டார்கள் என்பதே ஊரரிந்த உண்மை...
ஒருவர் வாங்கிய விருதுகளால் அவருக்கு பெருமை ஏற்படுவது இயல்பான நிகழ்வுதான்...
ஆனால், ஒருவர் வாங்கிய விருதால் அந்த விருதுக்கே பெருமை ஏற்படுவது நமது உத்தம தலைவரால் மட்டுமே சாத்தியமானது...
ஏனெனில், தான் பெற்ற விருதுகளால் அவர் அடைந்த பெருமைகளை விட...
அந்த விருதுகள் நமது நடிகர் திலகத்திடம் வந்து தனக்கு புகழ் மகுடம் சூட்டிக் கொண்டன என்பதே மாபெரும் வரலாற்று உண்மை...
வாழ்க உத்தம தலைவரின் புகழ்...
வாழிய வாழியவே...
http://oi67.tinypic.com/ru5evn.jpghttp://oi67.tinypic.com/2ch2rko.jpg
நன்றி M V Ram kumar
-
-
-
-
https://scontent.fmaa3-1.fna.fbcdn.n...84&oe=5D50A4CA
அதற்குள் ஓராண்டு முடிந்து விட்டதா.. காலம் போகும் வேகம் யாராலும் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் என்ன. ஒவ்வொரு சிவாஜி ரசிகனின் இறுதி மூச்சு இருக்கும் வரை எங்கள் டார்லிங் டைரக்டர் கோலோச்சிக்கொண்டு தான் இருப்பார். உங்களை நாங்கள் என்றுமே மறக்க மாட்டோம்.
-
இனிய இரவு வணக்கம் நண்பர்களே!
தமிழ்த் திரையுலகின் கலை அடையாளம் நடிகர்திலகத்தின் 90வது பிறந்தநாளை முன்னிட்டு, திரு. பி.கணேசன் அவர்களின் முன்னிலையில் 'குரூப்ஸ் ஆஃப் கர்ணன்' நடத்திவரும் 52 வார தொடர் அன்னதானத்தின் இருபத்தேழாம் வார நிகழ்ச்சி இன்று மதியம் அன்னை இல்லம் பிள்ளையார் கோயிலில் இனிதே நடந்தேறியது.
இவ்வார நிகழ்ச்சியின் உபயதாரர் சென்னை, பெருங்குடியைச் சேர்ந்த திரு. ஆர். கணபதிராமன் அவர்கள்.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக பங்குகொண்டவர்கள் திரைப்படப் புகழ் திருமதி. நாஞ்சில் நளினி அவர்களும், அவரது புதல்வி ரேவதியும் ஆவார்கள்.
திருமதி நாஞ்சில் நளினி அவர்கள் சந்திப்பு, எங்க ஊர் ராஜா போன்ற நடிகர்திலகத்தின் பல படங்களில் துணைக் கதாப்பாத்திரங்களில் நடித்தவர். அவரது புதல்வி ரேவதியும் மன்னவன் வந்தானடி, படிக்காத பண்ணையார், தேவர் மகன் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
உபயதாரர் திரு.கணபதிராம் அவர்களுக்கு குடந்தையைச் சேர்ந்த திருமதி. சாய்மீனா அவர்களும், சிறப்பு விருந்தினர் இருவருக்கும் திரு. ஜனார்த்தனன் அவர்களும் குழுவின் சார்பாக நடிகர்திலகத்தின் நூல்களும் நினைவுச் சான்றிதழையும் வழங்கிச் சிறப்பித்தனர்.
பின்னர், மூவரும் பொதுமக்களுக்கு அன்னதானத்தை வழங்கி, நிகழ்ச்சியைச் சிப்பித்ததின் நிழற்படங்கள் உங்களின் பார்வைக்கு பதிவிடப்பட்டுள்ளன.
இந்நிகழ்ச்சிக்கு பொதுமக்களுடன் நடிகர்திலத்தின் அன்பு இதயங்கள் பலரும் கலந்து கொண்டனர்...
பின்னிணைப்பு :
வருகின்ற சித்திரை முதல்தேதி முதல் கோடைக்காலம் வரை 108 நாட்களுக்கு தினசரி மதியம் நீர்மோர், குளிர்பானம் போன்றவை குரூப்ஸ் ஆஃப் கர்ணன் சார்பாக பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கு ஒரு நாளைக்கான செலவு ஆயிரம் ரூபாய் ஆகும். விருப்பமுள்ள அன்பு நெஞ்சங்கள் குழுவினரைத் தொடர்பு கொள்ளலாம்.
முதல் நீர்மோர் தானத்திற்காக ஆயிரம் ரூபாயை குடந்தையைச் சேர்ந்த மருத்துவர். திரு. சதீஷ் அவர்கள் வழங்கியுள்ளார் என்ற தகவலை உங்களுக்குத் தெரிவித்துக் கொண்டு
அடுத்தவார நிகழ்ச்சியின் நினைவுகளோடு மீண்டும் சந்திக்கிறேன்...
http://oi66.tinypic.com/v4xwfs.jpghttp://oi66.tinypic.com/16i8ifb.jpg
நன்றி வான்நிலா விஜயகுமாரன்
-
-
-
-
-
-
-
-
நடிகர் திலகத்தின் ஏப்ரல் மாத வெளியீடுகள்
1) பச்சை விளக்கு 3/04/1964
2) இல்லற ஜோதி 9/04/1954
3) கிரகப்பிரவேஷம் 10/04/1976
4) படையப்பா 10/04/1999
5) ஹரிச்சந்திரா 11/04/1968
6) வியட்நாம் வீடு 11/04/1970
7) அவன்தான் மனிதன் 11/04/1975
8) விடுதலை 11/04/1986
9) வணங்காமுடி 12/04/1957
10) நான் வணங்கும் தெய்வம் 12/04/1963
11) கலாட்ட கல்யாணம் 12/04/1968
12) வாணி ராணி 12/04/1974
13) நட்சத்திரம் (கௌரவ வேடம்) 12/04/1980
14) அமரகாவியம் 12/04/1981
15) இமைகள் 12/04/1983
16) அந்த நாள் 13/04/1954
17) தெய்வப் பிறவி 13/04/1960
18) நீதியின் நிழல் 13/04/1985
19) உலகம் பலவிதம் 14/04/1955
20) தாயைப்போல பிள்ளை நூலைப்போல சேலை (கௌரவ வேடம்) 14/04/1956
21) வாழ்க்கை 14/04/1984
22) சம்பூரண ராமாயணம் 14/04/1958
23) பேசும் தெய்வம் 14/04/ 1967
24) பிராப்தம் 14/04/1971
25) சுமதி என் சுந்தரி 14/04/1971
26) சங்கிலி 14/04/1982
27) வீரபாண்டியன் 14/04/1987
28) பசும்பொன் 14/04/1995
29) கவரிமான் 16/04/1979
30) புனர் ஜென்மம் 21/04/1961
31) சாந்தி 22/04/1965
32) அமரகாவியம் 24/04/1981
33) தர்மராஜா 26/04/1980
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
#பச்சைவிளக்கு 03 ஏப்ரல் 1964
#ஐம்பத்தைந்துஆண்டுகள்நிறைவு
#வேல்பிக்சர்ஸ் இராம. அரங்கண்ணல், AR. கசன்கான்,டி.எஸ்.ஆதிநாராயணன் தயாரிப்பு
#திரைக்கதை_இயக்கம்_ஏ_பீம்சிங்
#நடிகர்திலகம்_பீம்சிங் காம்பினேஷனில் உருவான ' ப ' வரிசைப் படங்களில் இது ஒன்பதாவது நூறுநாள் படம் ...
# பகர வரிசையில் பெயர்சூட்டி, 1958 பதிபக்தி முதல் 1964 பச்சைவிளக்கு வரை ஆறாண்டுகளில், மூன்று வெள்ளிவிழா + ஆறு நூறு நாளென 9 வெற்றிப்படங்களைத் தந்தது இதுவரை தமிழ்த் திரையுலகில் முதலும் முடிவுமான சாதனை.
#மாஅண்ணய்யா என்னும் பெயரில் தெலுங்கிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டது.
#நடிகர்திலகத்துடன், SSR., MR.ராதா, AVM.ராஜன், சௌகார் ஜானகி, விஜயகுமாரி, நாகேஷ் புஷ்பலதா, நாகய்யா, SV. ரங்காராவ் நடித்திருந்தனர்.
#கதை ஜி.கே.சூரியம்
#வசனம் இராம. அரங்கண்ணல், கோ. இறைமுடிமணி
#ஒளிப்பதிவு ஜி விட்டல்ராவ்
#இசை_மெல்லிசைமன்னர்கள்
#ஸ்டூடியோ AVM
தொகுப்பு : "வான்நிலா"
http://oi65.tinypic.com/2co6bts.jpghttp://oi63.tinypic.com/2nvgpkg.jpghttp://oi64.tinypic.com/1zoghvk.jpg
நன்றி வான்நிலா" விஜயகுமாரன்
-
-
-
-
-
-
-
-
சென்னை தி. நகர் பனகல் பார்க் காய்கறி , பழ மார்க்கெட்டுக்கு நடிகர் திலகம் 1972 ஏப்ரல் மாதம் அடிக்கல் நாட்டியபோது எடுத்த புகைப்படம் .
பட உதவி பி. பி. மணி அவர்கள்
http://oi68.tinypic.com/1znvrlz.jpg
நன்றி Sukumar Shan
-