எனக்கு தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்த நண்பர் திரு.சிவானந்தன் அவர்களுக்கு*நெஞ்சம் நெகிழ்ந்த நன்றி .
எனது 27,000 பதிவுகளுக்கு பாராட்டுக்கள் /வாழ்த்துக்கள் தெரிவித்த அன்பு நண்பர் திரு.சுந்தர பாண்டியன் அவர்களுக்கு என் பசுமையான நன்றி .
Printable View
எனக்கு தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்த நண்பர் திரு.சிவானந்தன் அவர்களுக்கு*நெஞ்சம் நெகிழ்ந்த நன்றி .
எனது 27,000 பதிவுகளுக்கு பாராட்டுக்கள் /வாழ்த்துக்கள் தெரிவித்த அன்பு நண்பர் திரு.சுந்தர பாண்டியன் அவர்களுக்கு என் பசுமையான நன்றி .
https://youtu.be/X9Q1BwoUHh4............ Thanks.........
ஜனவரி 1972
போருக்கு புரட்சித் தலைவர் உதவி
இந்திய பாக்கிஸ்தான் போர் நீதிக்கும், பங்காள தேசத்து வளர்ச்சிக்கும் தனது ஒரு படத்தின் வருமானம் முழுவதையும் கொடுப்பதென்று சென்னையில் ஒரு கூட்டத்தில் புரட்சித் தலைவர் கூறினார். புரட்சித் தலைவி அவர்கள் போர் நிதிக்கு ரூ5000/= வழங்குவதாக அறிவித்தார். இந்த விழாவில் மத்திய திட்ட அமைச்சர் திரு. சி.சுப்ரமணியம் தலைமை தாங்கி பேசினார்......... Thanks...
நியூயார்க்கில் புரட்சித் தலைவர்
நியூயார்க் தமிழ் சங்கம் நாவொம்பேர் மாதம் 16ஆம் தேதி மாலை சிறப்பானதொரு வரவேற்பு நல்கியது. கொலம்பியா பல்கலைக்கழக வட்டத்தில் "ஏரல் மண்டபத்தில்/Earl Auditorium" நடந்த நிகழ்ச்சிக்கு பல பகுதிகளில் இருந்து தென்நித்யா மக்கள் 500-600பேர் வந்து கலந்து கொண்டனர்.
தமிழ்ச் சங்கத் தலைவர் டாக்டர் முருகேசன் வரவேற்புரையை தமிழ்ச் சங்கத்தின் நோக்கத்தை குறிப்பிட்டார்.......
புரட்சித் தலைவர் வரவேற்புக்கு நன்றி தெரிவித்துப் பேசுகையில் தமிஸ்ஹாக வரலாற்றை உண்மையான வரலாற்றை வெளியிடும் பொது பல வித பிரச்சனைகள் குறுக்கிடும் என்றும் ......கழகம் ஆட்சிக்கு வரும்போது தமிழ்நாட்டின் உண்மையான வரலாற்றை வெளியிட அவனை செய்யும் என்றும், சமதர்மம், சகோதரத்துவம் தமது கட்சியின் அடிப்படை என்றார். தொடர்ந்து கேள்வி பதில் ...சில பதில்கள்:
மாநில சுயாட்சி கழகம் கேட்காது.....
ஜெயப்ரகாஷ் நாராயணன் நடத்திய கிளர்ச்சி பற்றி பதில் கூறுகையில் ஊழல் குற்றச் சாட்டுக்கு தான் ஆட்சேபிக்க வில்லை என்றும்.......இணையான அரசாங்கம் தான் எதிர்ப்பதாகவும் ... ஊழல் குற்றச் சாட்டுக்கு தான் ஆட்சேபிக்க வில்லை என்றும் தலைமைப்பீடத்தில் உள்ளவர்கள் தூய்மையாக இருந்தால்தான் கீழே உள்ளவர்கள் அரசாங்க இயந்திரமும் லஞ்சம் ஊழலின்றி திகழும் என்றார்
இறுதியில் சங்கத்தில் செயலாளர் திரு. சேகர் ஹென்றி அவர்கள் நன்றி தெரிவித்து பேசினார். பின்னர் சங்க உறுப்பினர்களுக்கு "உலகம் சுற்றும் வாலிபன்" திரையிடப்பட்டது........ Thanks SB., Sir...
மகாராஷ்டிரா மாநிலத்தில் சாத்தாரா மாவட்டத்தில் இருக்கும் ராஜகோபுரம்.
இந்த ராஜகோபுரம் கட்டப்பட்டது யாரால்? நமது ராஜா ராஜன் புரட்சித் தலைவரால்.
உய்ந்த புகைப்படத்தை எடுத்தவர், புகைப்படத்தில் இருக்கிறார் அனைவருடன் பகிர்ந்துகொள்ள சம்மதம் தெரிவித்தார். ...... Thanks SB.,
உலகம் சுற்றும் வாலிபன்
சுபாங் சர்வதேச விமான நிலையம் ஏர் சிலோன் விமானத்தில் புரட்சித் தலைவர் குழுவினர்கள் அக்டோபர் ல் சென்று அடைந்தனர். நட்சத்திர கூட்டத்தை காண மக்கள் திரளாக வந்திருந்தனர். மக்கள் புரட்சித் தலைவரை சூழ்ந்து கொண்டனர். ரசிகர்களின் அன்புத் தொல்லைகளால் படப்பிடிப்பு சுமார் ஒரு மணி நீரால் தாமதம். சுமார் இரண்டு மணி நேரத்துக்கு பின் பயணமான புரட்சித் தலைவர் அவர்கள் தான் திரும்பவும் பினாங்கு செல்ல இயலாது என்று தெரிவித்தார்.
நடிகைகளிடம் நீங்கள் முத்தமிடம் காட்சிகளை பற்றி உங்கள் கருது என்ன என்று கேட்டதற்கு. அனைவருக்கும் ஏகோபித்த குரலில் இந்திய படங்களில் அதற்கு இடமில்லை, நாங்களும் தயாரில்லை என்றார்கள்.
ஜப்பான், ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர், மலேஷியா இலங்கை முதலிய நாடுகள் இந்த பயணத்தில் அடங்கியது. ........ Thanks SB.,
வாலி எம்.ஜி ஆரைப் பற்றி
எழுதிய கவிதை.
--------------------------
நீ
இந்தியாவில் பிறந்து
இலங்கைக்கு சென்ற-
இராமச்சந்திரனல்ல;
இலங்கையில் பிறந்து
இந்தியா வந்த
இராமச்சந்திரன்.!
அந்த இராமச்சந்திரன்
சூரிய குலத்தில் வந்தவன்.
நீயும்-
உதய சூரியனின்
வழித்தோன்றல்தான்.
அவனும்
ஜானகி மணாளன்.
நீயும்
ஜானகி மணாளன்.
அவனும்
பதவி ஆசை பிடித்தவர்களால்
வெளியேற்றப்பட்டான்.
நீயும் அப்படியே.
அவனும்
நாடோடியாகத் திரிந்து
மன்னனானான்.
நீயும்-
நாடோடி மன்னன்தான்.
அவனிடத்தில்
இருந்தது போலவே
உன்னிடத்தில்லும்
"வில் பவர்" இருந்தது.
அந்த இராமச்சந்திரன்
தெய்வமாக இருந்து
மனிதனாக மாறியவன்.
நீ-
மனிதனாக இருந்து
தெய்வமாக மாறியவன்.
இதனால்தான் உன்னை
இதய தெய்வம் என்கிறோம்.
ஆனால் ஒன்று
அவன்
வாலியை
அம்பு கொண்டு வீழ்த்தியவன்.
நீயொ
வாலியை
அன்பு கொண்டு வாழ்த்தியவன்.
நீயே
எனக்கு
நிஜமான கருணா(நிதி) .!
வாலி..........இன்று மறைந்த திரு. வாலி அவர்கள் பிறந்தநாள்....... Thanks...
'சங்கதமிழன்' விஜயா, வாஹினி தயாரிப்பில் புதிய விஜய் சேதுபதி படத்தில் காவல்துறை அதிகாரி ஆக வருபவர் name badge இல் M. G. ராமச்சந்திரன் என்ற பெயர் காணப்படுகிறது...
சார் வணக்கம்...
சமீபத்தில் அகஸ்தியா அரங்கில் சிவாஜி நடித்து வெளியான " ராஜா" திரைப்படம் வெளியானது
அந்த படம் வெளியாவதை ஒட்டி ஒரு ரசிகர் கொடுத்த விளம்பரம் " தரம் கெட்ட
படங்களை திரையிட்டு தரம் குறைந்து போன அகஸ்தியா திரை அரங்கை புனிதப் படுத்த வரப் போகிறார்
ராஜா , அது மட்டுமா அகில உலக ஸ்டைல் சக்கரவர்த்தி(?) , உலகப் பேரழகன்(), அட்டைக்கத்தி சீடர்களுக்கு ஆப்பு வைத்த மன்மதன், வசூல் சக்கரவர்த்தி இப்படியெல்லாம் ஒரு
நண்பர் விளம்பரப் படுதியிருந்தார் ரொம்ப
நல்ல காரியம் ஆனால் இதுல பாருங்க ஒரு சின்ன சந்தேகம் இப்படி
உங்களுக்குள்ளே விளம்பரப் படுத்தி மாறி மாறி கிச்சு கிச்சு மூட்டி
சந்தோஷப் பட்டுக் கொள்கிறீர்கள் ரொம்ப
மகிழ்ச்சி , நான் ஒரு சின்ன கேள்வி கேட்கிறேன் இப்படி விளம்பரம் செய்யும் நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்
நேர அகஸ்தியா திரை அரங்குக்குப் போய் உரிமையாளர்/ மேலாளரைப் பார்த்து சார் இப்படி நீங்கள் தொடர்ந்து தரம் கெட்ட படங்களா போட்டுப் போட்டு தரம் கெட்டுப் போய் விட்டீர்கள் அதனால் நாங்கள் ஒரு 10 பேர் வாரியல், தூப்பான், பினாயில், டெட்டால் இவைகளுடன்
வந்து கூடவே தீட்டு கழிக்கவும் ஒரு ஆளை கூட்டிக் கொண்டு வரப் போகிறோம் என்று சொல்லி இருந்தால் பாராட்டலாம்,( இப்படி ஒரு விளம்பரம் வந்தது அரங்கு ஓனருக்கு தெரிந்திருந்தால் நிலைமை என்ன ஆயிருக்குமோ தெரியவில்லை?) சரி அடுத்தது இந்த படத்தை
திரையிட்டு எத்தனை லட்சம் வசூல் வந்தது?
கழிந்த நான்காம் தேதி
இதே அகஸ்தியா அரங்கில் திரையிடப் பட்ட தரம் குறைந்த படமான நாடோடி மன்னன் படத்திற்கு முதல் மூன்று நாளில் ஒரு லட்சம் வசூல், இறுதியாக ஒரு வாரம் ஓடி முடிய 1,85,000 வசூல் அதனால் கண்டிப்பாக மிகவும் தரமான படமான ராஜா
படத்திற்கு கண்டிப்பாக
இதை விட அதிக வசூல்
கிடைத்திருக்க வேண்டும் ( நல்ல வேளை இப்போது சாந்தி அரங்கம் இல்லை அப்படி இருந்து
இந்த படம் அங்கு வந்திருந்தால் கண்டிப்பாக ஒரு வாரத்தில் 5 லட்சம் முதல் 10 லட்சம் வரை வசூல் ஆகி இருக்கும்)
சரி அடுத்தது " அட்டைக் கத்தி" சீடர்களுக்கு ஆப்பு வைத்த மன்மதன்
வசனத்துக்கு வருவோம்
சரி அட்டைக் கத்தி பயன் படுத்தியது யார்?
அந்த காலத்தில் எம்.ஜி.ஆர் பயன் படுத்திய கத்திகளில் பெரும் பாலானவை தி.நகர் நினைவு இல்லத்தில் வைக்கப் பட்டுள்ளன இது எல்லோருக்கும் தெரியும் , வாள் சண்டை
போடும்போது எத்தனையோ முறை நம்பியாருக்கும் காயம்
பட்டிருக்கிறது எம். ஜி.ஆருக்கும் காயம் பட்டிருக்கிறது , ஒரு படத்தின் சண்டைக் காட்சியின் போது தலைவரின் கண் புருவத்தில் காயம் பட்டது அனைவரும்
தெரிந்த ஒரு கதைதான்
எனக்கு ஒரு சந்தேகம்
என்னன்னா அட்டையில்
செய்த கத்தி இப்படி காயத்தை உண்டாக்குமா? விபரம் தெரிந்தவர்கள் தயவு செய்து பதில் சொல்லுங்களேன் please, அடுத்து மன்மதன்( ஊருக்குள்ள
சொல்லிக்கிட்டாக) ஏம்ப்பா எழுதும் போதே
உங்களுக்கே சிரிப்பு
வரலையா? 1968 க்குப் பிறகு கொஞ்சம் வயிறையும் குறைத்து விக்கையும், மீசையை பென்சில் போல வைத்த
வுடன் மன்மதன் ? சரி இருந்து விட்டுப் போகட்டும் அடுத்து அகில உலக ஸ்டைல் சக்கரவர்த்தி? அடடா கையில ஒரு பாட் மிண்டன் ராக்கெட்டை வைத்துக் கொண்டு நின்றவுடன் ஸ்டைலா?
அதுவும் உலகத்தையெல்லாம் வம்புக்கு இழுத்திருக்கிறார்
ஒளி விளக்கு படத்தில்
துவக்கக் காட்சியில்
freeze style காட்சி எல்லாம் வைத்திருப்பார்கள்,மற்றபடி ஆயிரத்தில் ஒருவன் படத்தில் நம்பியாருடன் சண்டையிடும் முன் வாளை உருவி எடுப்பதிலே ஒரு ஸ்டைல் காண்பித்திருப்பார் இதையெல்லாம் என்ன என்று சொல்வீர்கள் அன்பரே, இடையில் அட்டைக் கத்தி சமாச்சாரத்தில் ஒன்றிரண்டு விட்டுப் போய் விட்டது உங்களின் அபிமான அகில உலக ஸ்டைல் சக்கரவர்த்தி கூட வணங்கா முடி, தங்க மலை ரகசியம், மருத நாட்டு வீரன், உத்தம புத்திரன் போன்ற படங்களில் அட்டைக் கத்தி வைத்துக் கொண்டுதானே மெரினா பீச்சில் ஓடும்
குதிரை மாதிரி முன்னங் கால்களை தூக்கித் தூக்கி சண்டை
போட்டிருப்பார் ( ஸ்டண்ட் சோமு கெட் டார் போங்கள்) அதுமட்டுமல்ல சமீபத்தில் கூட ஒரு எழுத்தாளர் சிவாஜி சண்டை என்ற பெயரில்
புல் வெட்டுவார் என்று சொல்லி அது ஒரு வாரப் பத்திரிகை யில் வெளிவந்தது, பைபிளில் ஒரு வாசகம்
வரும் " உங்களில் குற்றம் இல்லாதவன் எவனோ அவன் முதல் கல்லை எறியட்டும்" அதுபோல் அடுத்தவர்களை விமர்சிக்கும் முன் தன்னையும் கொஞ்சம்
நினைத்துப் பார்க்க வேண்டும் அதுதான் புத்தி சாலித் தனம்
நீங்கள் அட்டைக் கத்தி என்று கூறும் நபர்தான்
சாதாரண சினிமா நடிகராக இருக்கும் போது அமெரிக்கா, ரஷ்யா, மொரீஷியஸ் போன்ற நாடுகளின் அரசு விருந்தினராக
கௌரவப் படுத்தப் பட்டார் என்பதை நினைவில் கொள்க
உடனே குதித்துக் கொண்டு எங்க ஆளும்
ஒரு நாள் மேயர் பதவி
எல்லாம் வகித்திருக்கி றார் என்று சொல்லி விடாதீர்கள் அந்த ஒரு நாள் மேயர் பதவி வெறும் சினிமாவுக்காக
கொடுக்கப் பட்ட ஒரு நிகழ்வு ஆனால் இங்கே
நன்றாக கவனியுங்கள்
வெறும் சினிமா நடிகனாக பார்க்காமல் ஒரு நாட்டின் பிரதமரை
போன்று அதிகாரப் பூர்வமாக கொடுத்த அழைப்புகள் இன்னொரு முக்கிய விஷயம் மொரீஷியஸ் நாட்டின் சுதந்திர தின விழா வின் போது அதன் அதிபர் ராம்கூலம் அவர்களின்
அருகிலேயே அமர வைக்கப்பட்டு கௌரவப் படுத்தப் பட்டவர்தான் உங்களால்
விமர்சிக்கப் படும் இந்த
அட்டைக் கத்தி வீரர்
அதனால் இந்த மாதிரி
மல்லாக்கப் படுத்துக் கொண்டு எச்சில் துப்புற
சமாச்சாரத்தை நிறுத்திக் கொள்ளுங்கள்
முதலில் உங்களின் நடிகரின் பெயரால் பத்திரிக்கை ஏதாவது வந்தால் அதை ஆதரித்து வெளியிடும்
நபரை வாழ வையுங்கள் , சமீபத்தில்
ஆளில்லாமல் ஆல்பர்ட்
அரங்கில் ஒரு வாரம் பிறகு மூன்று நான்கு பேரை வைத்து ஒரு 55 நாள் பிறகு கடைசியாக
அக்டோபர் மாதத்தில்
ஒரு ஷோ வெளியிட்டு
நூறாவது நாள் விழா
எடுத்தீர்களே அந்த படத்தின் பெயரால் ஒருவர் ஒரு பத்திரிக்கை வெளியிட்டு பாவம் கடைசியில் ஒன்றிரண்டு மாதத்துடன் போட்ட முதலைக் கூட எடுக்க
முடியாமல் Back to pavilion ஆன கதை எல்லோரும் அறிந்ததுதான் , இறுதியில் மக்கள் திலகம் மலர் மாலை1 என்ற பெயரில் ஆல்பம்
வெளியிட்டு சிரமத்தில்
இருந்து மீண்ட கதை நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை அந்த
ஆல்பம் எப்படி நீ வெளியிடலாம் என்று சொல்லி நீங்களெல்லாம் பாய்ந்தது ஒரு பக்கம் இருக்க சீக்கிரமே மக்கள் திலகம் மலர் மாலை2 புத்தகமும் விரைவில் வெளியாகப்
போகிறது, எப்போதாவது தலைவரின் ரசிகர்கள்
உங்கள் நடிகரை அவமானப் படுத்துவது
மாதிரி ஏதாவது சினிமா
விளம்பரங்கள் போடுகிறார்களா? அப்படியிருக்க நீங்கள் மட்டும் ஏன் இப்படி குமுறி சாகிறீர்கள்? அந்த காலம் தொட்டே இந்த குமுறல்கள் உங்களுக்கு புதிதல்ல
இப்படி குமுறுகிறவர்கள் உங்கள் நடிகரை ஒரு
வார்டு மெம்பராக வாவது ஆக்கியிருக்கலாம்
அதையும் செய்யவில்லை
கடற்கரையில் இருந்த சிலையை அகற்ற வேண்டும் என்று சொல்லி கேஸ் போட்டது
காங்கிரஸ் காரர் கடைசியில் பழி தலைவர் மீது, கே. எஸ் அழகிரி சாபம் வேறு கொடுக்கிறார் அந்த சாபத்தை காங்கிரஸ் தியாகி சீனிவாசன் குடும்பத்துக்கு கொடுக்கட்டும் அதை விட்டு தென்னை மரத்தில் தேள் கொட்டினால் பனை மரத்தில் நெறி கட்டிய
கதையாக பாய வேண்டிய இடத்தை விட்டு விட்டு எங்கேயோ
பாய்வது
தயவு செய்து இந்த மாதிரி பதிவுகள் போடுவதை நிறுத்திக்
கொள்ளுங்கள் அதுதான் உங்களுக்கும்
நல்லது
வணக்கம்!.......... Thanks mr. J W.,
சுகாராம் அய்யா,
உங்கள் பதிவு பற்றி (பதிவு எண் 1850)
சரி விடுங்கள். பிரச்சினை முடிஞ்சி போச்சு. மாற்று திரி நண்பர்கள் ஏதாவது சொன்னால் பதில் சொல்லலாம். சும்மா சண்டை வலிச்சாலும் போர் அடிக்கிறது.
மாற்று முகாம் ரசிகர்கள் வாட்ஸ் அப்பில் ஏதாவது சொன்னால் அதை அப்படியே போட வேண்டுமா?
(உதாரணம்... அட்டை கத்தி சீடர்களுக்கு ஆப்பு வைத்த மன்மதன்) இதை எல்லாம் தவிர்க்கலாமே, நம்ம திரியிலேயே இதைப் படிக்கும்போது மனசு கஷ்டமாக உள்ளது சார்.
நன்றி.
https://youtu.be/woXh5r_sTlA........... Thanks.........
தோழர் சு. பா., அவர்களுக்கு ... நாம் ஒன்றும் சண்டைக்கு or சர்ச்சைக்கு அலையவில்லை... நமது மஹான் நம்மை அப்படி ஒரு நிலைக்கு நம்மை ஆளாக்கவில்லை என்பதை நீர் அறியாதவரில்லை... அந்த முகாமில் திருச்சியை சேர்ந்த ...சிறிதும் புத்தியில்லாத, இங்கிதமறியாத வீணர்கள் பதிவிட்ட சேதி தான் நண்பர் பதிவிட்டது. மற்றபடி அந்த மகானுபாவர்கள் சேதியும் நம்மில் சிலர் அறியாமலிருக்கலாம்... நாமும் சற்று அதிகமாக தாக்குதல் தொடுப்பது ஏன்?! என தெரிய வேண்டுமல்லவா?! ஆகையால் அவர்கள் எழுதிய சொற்றொடர் அப்படியே பதிவிடப்பட்டுள்ளது... என்ன சரியா? நண்பரே...
விரைவில்... மதுரை - சென்ட்ரல் dts., திரையரங்கில்... எப்பொழுதும் திரையுலகை ஆளும் அசராத வசூல் சக்கரவர்த்தி மக்கள் நடிகர் வழங்கும் காவியம்..." ராமன் தேடிய சீதை" கலர் புல்... குளு குளு படைப்பு... தகவல் உதவி : திரு. குமார், மதுரை...
கோவை சண்முகாவில்* மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர். "ஆயிரத்தில் ஒருவன் " டிஜிட்டல் திரைப்படம்* வெற்றிகரமாக 2 வது வாரமாக தொடர உள்ளது என்று*நெல்லை நண்பர் திரு.ராஜா தகவல் அளித்துள்ளார் .
ஆயிரத்தில் ஒருவன் படத்தின் விநியோகஸ்தர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்ட அவரது மற்றொரு படம்* அதே சண்முகா அரங்கில்**4 நாட்கள்தான் ஓடியது .* *ஆயிரத்தில் ஒருவன் இடைவிடாமல் தமிழகத்தில் உள்ள அரங்குகளில் வலம் வந்த வண்ணம் உள்ளது . அன்றும் , இன்றும், என்றும் தலைவர்தான் வசூல் சக்கரவர்த்தி என்றும் குறிப்பிட்டார் .
மக்கள் குரல் -30/10/19
பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு பெருமை சேர்த்தவர்கள் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். புரட்சி தலைவி ஜெயலலிதா .- முதல்வர் எடப்பாடி பழனிசாமி பெருமிதம் .
-------------------------------------------------------------------------------------------------------------------------------
இன்று (30/10/19) முதல்வர் எடப்பாடி பழனிசாமி ராமநாதபுரம் மாவட்டம், பசும்பொன் கிராமத்தில்* உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார் .
அப்போது பின்வருமாறு பேசினார் :இன்று பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 112 வது* பிறந்த நாள் விழா, 57 வது*குருபூஜை விழா* அரசு சார்பில்**நடைபெறுகிறது .
ராமநாதாபுரத்தில்* 1937ம் ஆண்டு மாநில தேர்தலில் வெற்றி பெற்றவர் தேவர் திருமகனார் . பின்னர் 1946ம் ஆண்டு சென்னை மாகாண தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் .* 1952,1957,1962 சட்டமன்ற தேர்தல்களிலும் மக்களால் சட்ட மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பெருமைக்கு உரியவர் .**
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது தேவர் திருமகனுக்கு பெருமை சேர்க்கும் வகையில் , அவருடைய பொதுசேவையை பாராட்டி, ஒவ்வொரு ஆண்டும் இனி தமிழக அரசு சார்பில் விழா எடுக்கப்படும் என்று அறிவித்தார் .1979ம் ஆண்டு முதல் தொடர்ந்து இந்த அரசு விழா நடைபெற்று வருகிறது .*
புரட்சி தலைவி ஜெயலலிதா* 1994ம் ஆண்டு சென்னை நந்தனத்தில் மறைந்த பசும்பொன் முத்துராமலிங்கத்தேவருக்கு முழு வெண்கல சிலை நிறுவி , திறந்து வைத்தார்* 2010ம் ஆண்டு பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவருடைய நினைவிடத்தில் ,அவரின் திருஉருவச்சிலைக்கு தங்க கவசம் அளிக்கப்படும் என்று அறிவித்து 2014ம் ஆண்டு நேரடியாக சென்று 13 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை வழங்கினார் .
இவ்வாறு இரு தலைவர்களும்* அண்ணா தி.மு.க. ஆட்சியில் தேவர் திருமகனாருக்கு பெருமைகள் சேர்த்துள்ளனர் என்று பேசினார் .
மதுரையில் இன்று விடாத மழையிலும் ...... நாடாண்ட மன்னவன் எம்.ஜி.ஆர்., அவர்களின் "நாடோடி மன்னன்", ரசிகர்கள் கூட்டம் குறையவில்லை ... கோவை.நண்பர் திரு.அய்யாச்சாமி மாலக்காட்சி மன்னவர் தரிசனம் மகிழ்ச்சியில் ... மதுரை.எஸ் எம்ஜிஆர் குமார்... Thanks.........
துக்ளக் வார இதழ் -23/10/19
எம்.ஜி.ஆரை சுட்டவர் மகனுக்கு அ. தி.மு.க.வில் சீட்டா -நடிகர் ராதா ரவி .
---------------------------------------------------------------------------------------
எங்க வீட்டு பிள்ளையின் முதல் பாதியில் எம்.ஜி.ஆரை நம்பியார் சவுக்கால்* அடித்தால்தான் ஒத்துக்கொள்வார்கள் .* வேறு நடிகரை போட்டிருந்தால்* ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள் . அப்போதும் கூட, நம்பியார் , எம்.ஜி.ஆரை சவுக்கால் அடிக்கும்போது* இருடி .... இடைவேளை வரட்டும் , உனக்கு இருக்கு ஆப்பு, வேட்டு .*என்று ரசிகனே தரையில் உட்கார்ந்தபடி,* ஸ்க்ரீன் பிளே* எழுதுவான் .**
ராமன் எத்தனை ராமனடி படத்தில் தன தங்கையை பெண் கேட்டு வந்த வசதியில்லாத சிவாஜியை, நம்பியார் பிரம்பால் அடித்து விரட்டுவார் .* பின்னர் சிவாஜி* பணக்காரனாகி, மீண்டும் பெண் கேட்டு வருவார் .* ஆனால் அப்போது அந்த பெண் இருக்க* மாட்டாள்* உடனே கோபத்தில் சிவாஜி, கையில் ஒரு பிரம்பை* எடுத்து ஆக்ரோஷமாக* அதை வளைத்து , முறித்து விட்டு வந்து விடுவார் .* அப்போது தியேட்டரில் கிளம்பும் டயலாக் என்ன தெரியுமா . இந்நேரம் புரட்சி தலைவராக இருந்தால் நம்பியாரை உண்டு இல்லைன்னு பண்ணி இருப்பார் .இவருக்கு அவ்வளவு தைரியம் போதாதப்பா .* அந்த காலத்தில் ரசிகர்கள் தங்கள் மனங்களை அப்படி செட் செய்து வைத்திருந்தார்கள்**
ஆனந்த் -கேள்வி : உங்கள் அப்பா எம்.ஜி.ஆரை சுட்டவர் .* பின்னாட்களில் நீங்கள் எம்.ஜி.ஆரை சந்தித்தபோது , அது குறித்து உங்களுக்கு குற்ற உணர்ச்சி ஏதேனும் இருந்ததா ? எம்.ஜி.ஆர். உங்களை எப்படி எடுத்துக் கொண்டார் .
ராதாரவி பதில் : குற்ற உணர்ச்சி என்று கூற முடியாவிட்டாலும் , என் அப்பா கோபத்தில் எடுத்த முடிவு, அவர் வாழ்க்கையிலும் சரி, எங்கள் வாழ்க்கையிலும் சரி , ஒரு தடங்கலை ஏற்படுத்தியது உண்மைதான் .* எம்.ஜி.ஆரை நான் சிறுவயதில் பலமுறை சந்தித்திருக்கிறேன் .**
நல்லவன் வாழ்வான் படத்தில் என் அப்பா வேண்டாம் என்று* சொல்லியும், கிளைமாக்சில் ஒரு வித்தியாசமான சண்டைக்காட்சி வைக்கலாம் என்று என் அப்பாவைக் கட்டாயப்படுத்தி , தண்ணீருக்கு அடியில் ஒரு சண்டைக் காட்சியை எம்.ஜி.ஆர். அமைத்தார் .* ஒரு கண்ணாடி தொட்டியில் தண்ணீரை நிரப்பி,*அதற்குள் நீச்சல் அடித்துக் கொண்டே இருவரும் சண்டை போடும்* காட்சிகள்.**ஒரு வாரம் முழுக்க படமாக்கப்பட்டன*
முடிவில் என் தந்தை உடலெங்கும்* வீக்கம் கண்டு படுத்த படுக்கையாகிவிட்டார் .என் அப்பா வேண்டாம் என்று சொல்லியும்* ,எம்.ஜி.ஆர். அவரை வற்புறுத்தி நடிக்க வைத்ததால் , எம்.ஜி.ஆருக்கு குற்ற உணர்ச்சி வந்துவிட்டது .* ஒரு வார காலம் அதாவது என் அப்பா நோயில் இருந்து மீண்டு வரும்வரை , தினசரி காலை 9 மணிக்கு எம்.ஜிஆர். எங்கள் வீட்டுக்கு வந்துவிடுவார் .* என் அப்பாவின் படுக்கை அருகிலேயே அமர்ந்து அவருடன் பேசி கொண்டிருப்பார் .* மதியம் அவருக்கு தோட்டத்திலிருந்து உணவு வரும். இங்கேயே சாப்பிடுவார் .* மாலை 5 மணிக்கு மேல்தான் கிளம்பி தனது வீட்டுக்கு போவார் .* இப்படி என் அப்பா குணமாகும்வரை ஒரு வாரத்திற்கு எம்.ஜி.ஆர். எங்கள் வீட்டிற்கு வந்து சென்றார் .அப்போதெல்லாம் அவரை பார்த்து இருக்கிறேன் .
அந்த துப்பாக்கி சூடு சம்பவம் நடந்த பிறகு , நான் முதல்முதலாக சந்தித்தது ஒரு விமானத்தில்தான் .* நடிகர் சத்யராஜ் திருமணத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து கோவை செல்லும் விமானத்தில் ஏறி அமர்ந்திருந்தேன்*கடைசி நேரத்தில், எம்.ஜி.ஆர். , ஜானகி* அம்மாள் , பண்ருட்டி ராமச்சந்திரன்*ஆகிய மூவரும் அதே விமானத்தில் ஏறி முதல் வரிசையில் அமைத்தார்கள் .* அவர்களும் சத்யராஜ் திருமணத்தில் கொள்ள வந்திருந்தார்கள் .அப்போதெல்லாம் கோவை செல்லும் விமானம், பெங்களூரு வழியாகத்தான் செல்லும்.* எனவே, பெங்களூரு விமான நிலையத்தில் அந்த விமானம் சுமார் 30* நிமிடம் நின்றது .* இறங்க வேண்டிய பயணிகள் இறங்கியதும், நான் விறுவிறு என்று முதல்வரிசைக்கு சென்று எம்.ஜி.ஆரிடம் பேச ஆரம்பித்தேன் .* அப்போதுதான் அந்த விமானத்தில் எம்.ஜி.ஆருக்கு பாதுகாப்பாக ஆங்காங்கே எத்தனை பாதுகாவலர்கள் இருந்தார்கள் என்பது தெரிய வந்தது .* அத்தனை பேரும் தடாலடியாக எழுந்து வந்து என்னை பிடித்துக் கொண்டார்கள் .
ஆனால், நான் அதற்குள், நான் யார் என்று தெரிகிறதா ? நான்தான் எம்.ஆர். ராதாவின் மகன் ராதாரவி* என்று கூறிவிட்டேன் .* உடனே என் கைகளை பிடித்து கொண்டார் .* உடனே, நான் நடிகர் சங்க தலைவராக உள்ளேன். உங்களை சந்திக்க யாரிடம் அப்பாயிண்ட்மெண்ட் வாங்குவது தெரியவில்லை .* உங்களை சந்திக்க அனுமதிப்பீர்களா ? என்று கேட்டு விட்டேன் .* அவர் என் கையை பிடித்துக் கொண்டதும் , பாதுகாவலர்கள்* விலகி கொண்டார்கள் .* அப்போது எம்.ஜி.ஆர். சரளமாக பேச முடியாத நிலையில் இருந்தார் .* எனவே, அவர் பண்ருட்டி ராமச்சந்திரனை திரும்பி பார்த்தார் .* அவர் உடனே, நீங்கள் சென்னைக்கு வாருங்கள் . நான் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி தருகிறேன் என்று சொன்னார் .**பின்னர் விமானம் புறப்பட்டதும், கோவையில் இறங்கியதும், எம்.ஜி.ஆர். முதல் ஆளாக இறங்கி சென்று விட்டார் .* நான் பிற்பாடு பிற பயணிகளுடன் கீழே இறங்கி வந்தேன் .**
அப்போது ஒரு சப் இன்ஸ்பெக்டர் , ஒரு காவலர் , என்னை தடுத்து நிறுத்தி,*கொஞ்ச நேரம் இங்கேயே நில்லுங்கள் என்று சொன்னார்கள் .* 15 நிமிடங்களுக்கு பிறகு* போலீசார் என்னை வெளியே அழைத்து சென்று பத்திரமாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர் .* அப்போதுதான் புரிந்தது .* அங்கு எம்.ஜி..ஆரை* வரவேற்க*ஏராளமான கட்சி தொண்டர்கள் , காத்திருந்தார்கள் என்பதும், அவர்கள் எம்.ஆர். ராதாவின் மகன் என்று தெரிந்தால் என்னை தாக்க கூடும் என்றும் யூகித்த புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். என்னை பாதுகாப்பாக அனுப்பி வைக்க ஏற்பாடு செய்திருந்தார் என்பது அறிந்தது ம்* , உண்மையில் புல்லரித்துப்**போனேன் .*
அதன் பின், சத்துணவு திட்டத்திற்காக நடிகர்கள் நிதி திரட்டிக் கொடுத்தபோது*நடிகர்களை பாராட்டி எம்.ஜி.ஆர். ஒரு விழா எடுத்து கலைஞர்களுக்கு தங்க மோதிரம் , சங்கிலி* போன்றவற்றை பரிசளித்தார் .* நான் நடிகர் சங்க தலைவர் என்பதால் , நம்பியார் போன்ற ஓரிரு மூத்த நடிகர்களுக்கு பரிசு அளித்த பின்னர்*என்னை அழைத்து கௌரவப்படுத்தினார் .**
கோகுல கிருஷ்ணன் கேள்வி : எம்.ஆர். ராதாவின் மகனாக இருந்தும், பிற்பாடு எம்.ஜி.ஆர். துவங்கிய காட்சியிலேயே நீங்கள் சேர முயற்சித்தபோது , உங்களை சேர்ப்பதற்கு அங்கு தயக்கம் ஏதும் இல்லையா ?
ராதாரவி பதில் :* முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையில்தான் அ.தி.மு.க. வில் சேர்ந்தேன் .* நான் கட்சியில் சேர்வதால் , உங்களுக்கோ, உங்கள் கட்சிக்கோ ஏதாவது களங்கம் வருமா என்று, அன்றைய முதல்வரிடம் கேட்டபோது , அதெல்லாம் ஒன்றும் வராது .என்று சிரித்தபடி சொன்னவர் ,எனக்கு சைதாப்பேட்டை தொகுதியை ஒதுக்கினார் .* *அப்போது தி.மு.க. தரப்பில் எம்.ஜி.ஆரை சுட்டவருக்கு அ. தி.மு.க. வில். சீட்டா என்று போஸ்டர் ஓட்டப்போவதாக எனக்கு தகவல் கிடைத்தது .* அப்படி ஓட்டினால், எம்.ஜி.ஆரை யார் சுட்டது என்று உண்மையிலேயே , நாள் வெளியே சொல்ல வேண்டியிருக்கும் என்று* ஒரு திரியை கொளுத்தி போட்டேன் .* எங்கே கருணாநிதி பெயரை சொல்லிவிடுவானோ என்று பயந்துவிட்டார்கள். அதன்பிறது போஸ்டர் ஒட்டப்படவே இல்லை .**
https://youtu.be/adKhQq9m9UA.......... Thanks...
https://youtu.be/X9Q1BwoUHh4.......... Thanks.........
https://youtu.be/kPkJyr-O8eg .. .......... Thanks.........
உலகம் சுற்றும் வாலிபன் படம் ரெடியாயிட்டிருந்த நேரம். பல பரபரப்புகளுக்கு நடுவுல எம்ஜியார் படத்தை ஆரம்பிச்சிருந்தார்.
பாட்டு எழுத கவிஞர் வாலியை கூப்பிட்டிருக்காங்க. வாலி வழக்கம் போல வார்த்தைகளால ஜாலம் காட்ட, எம்ஜியாருக்கு ரொம்ப சந்தோஷம்.
அமர்க்களமான ட்யூனோட வாலியோட வரிகளும் சேர, ரெக்கார்டிங் முடிஞ்சுது.
பல பிரச்னைங்க இருந்தாலும், எப்படியோ கஷ்டப்பட்டு வெளிநாட்டுக்கு போய் ஷூட்டிங்க முடிச்சுட்டு வந்தார் தலைவர்.
எடிட்டிங் முடிஞ்சு, இறுதி கட்ட வேலைங்க எல்லாம் முடிச்சு படம் கிட்டத்தட்ட ரெடி.
படத்துல இருக்க அத்தனை பாட்டும் சூப்பர் ஹிட்டாகும்னு எம்ஜியார் கூட இருந்தவங்க கிட்ட சொல்லிட்டிருந்தார்.
எம்ஜியாருக்கு வாலி ரொம்ப செல்லம். “என்ன ஆண்டவரே”ன்னு தான் கூப்பிடுவார். சரி, வாலியைக் கொஞ்சம் வெறுப்பேத்தலாம்னு, எம்ஜியார் வாலிய கூப்பிட்டு, “இந்த படத்துல பாட்டு எல்லாம் நல்லா வந்திருக்கு. ஆனா உங்க பேரை நான் டைட்டில்ல போட போறதில்லை” அப்டீன்னாராம்.
வாலி சிரிச்சுகிட்டே கம்முனு இருந்திருக்கார்.
“அட, நிஜமாதான் சொல்றேன். உங்க பேர் வராது.”
“என் பேரை போடாம உங்களால படத்தை ரிலீஸ் பண்ண முடியாது.”
“அப்டியா? நான் ரிலீஸ் பண்ணிட்டா?”
“எப்டிங்க ரிலீஸ் பண்ணுவீங்க? படத்தோட பேரு ‘உலகம் சுற்றும் வாலிபன்’. இதுல ‘வாலி’ங்கறத எடுத்துட்டா ‘உலகம் சுற்றும் பன்’ ஆயிடும். மக்கள் திலகம் நடிக்கும் ‘உலகம் சுற்றும் பன்’ அப்டீனா போஸ்டர் ஒட்டுவீங்க?”
எம்ஜியார் பலமாக சிரிச்சுகிட்டே வாலியை முதுகில் தட்டி, கட்டி பிடிச்சுகிட்டாராம்!......... Thanks ..
https://youtu.be/fGVx-41mVDU............ Thanks.........
31-10-1975 - 31-10-2019... இன்று கலைஉலகின் ஆதாரம், வசூல் சக்கரவர்த்தி மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., "பல்லாண்டு வாழ்க" லட்சிய காவியம் வெளியாகி 44 வருடங்கள் நிறைவடைந்து, 45ம் ஆண்டு தொடக்கம்... இனி இது போல ஒரு படிப்பினை காவியம் தான் எடுக்க முடியுமா? வேறு யாராலும் இயலுமா?!!!!
முன்னாள் பாரத பிரதமர் இந்தியாவின் இரும்புப் பெண்மணி
அன்னை இந்திரா அவர்களின்
நினைவுநாள் இன்று(31.10. 2019)
அன்னையை போற்றி வணங்குவோம்!அப்போலோ பரபரப்பானது !
காரணம் , பிரதமர் வந்து கொண்டிருந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் முதல் அமைச்சரைப் பார்ப்பதற்காக !
இது நடந்தது இந்திராகாந்தி - எம்.ஜி.ஆர்.காலத்தில்.
.
அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர் , திடீரென அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார் - அக்டோபர் 1984 இல்.
உடனே விரைந்து வந்தார் அன்றைய பிரதமர் இந்திரா காந்தி .
அது வரை யாருக்கும் எம்.ஜி.ஆரைப் பார்க்க அனுமதியில்லை.
ஆனால் இந்திரா காந்தி , அப்போலோ மருத்துவமனைக்கு சென்று கண்ணாடிக் கதவு வழியாக , எம்.ஜி.ஆரைப் பார்க்க அனுமதிக்கப் பட்டார்.
அதிர்ந்து போனார் இந்திரா.
அவர் வாயிலிருந்து வந்த வார்த்தைகள் :
" IS THAT MGR ? OH MY GOD ,
I CANT BELIEVE IT."
அருகில் இருந்த ஜானகி அம்மையாரின் கைகளைப் பிடித்துக் கொண்டு இந்திரா காந்தி சொன்னாராம் : “கவலைப்படாதீர்கள். இவரை காப்பாற்றுவது இந்த நாட்டின் கடமை ; என்னுடைய கடமை .”
சொன்னதோடு நிறுத்திக் கொள்ளாமல் செயலில் இறங்கினார் இந்திராகாந்தி.
அடுத்த நாளே பிரதமரின் சிறப்பு விமானத்தில் அமெரிக்காவிலிருந்து மருத்துவர்கள் , அப்போலோவுக்கு வரவழைக்கப்பட்டார்கள்.
அது மட்டுமா? இந்திரா காந்தியின் ஏற்பாட்டின் பேரில் , ஏர் இந்தியா போயிங் விமானம் ஒன்று , சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 24 மணி நேரமும் தயாராக , எம்.ஜி.ஆருக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது . அவசரமாக மருத்துவர்களை அழைத்து வருவதற்கும் , தேவைப்பட்டால் எம்.ஜி.ஆரை வெளி நாட்டு சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதற்கும் தயாராக இருக்கச் சொல்லி இருந்தார் இந்திராகாந்தி .
.
எம்.ஜி.ஆரின் நிலைமை இன்னும் கவலைக்கிடமாகவே ,
5.11. 1984 அன்று ஏற்கனவே இந்திராகாந்தி ஏற்பாடு செய்திருந்த தனி விமானம் மூலம் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் எம்.ஜி.ஆர்.
சிகிச்சை சிறப்பாக நடந்து கொண்டிருந்தது.
ஆனால்...
இதை எல்லாம் ஏற்பாடு செய்து கொடுத்திருந்த இந்திராகாந்தி -
அப்போது உயிரோடு இல்லை.
ஆம் . அக்டோபர் 31 காலை வேளையில்தான் , கண் இமைக்கும் நேரத்தில் அந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்து விட்டது.
இந்திரா காந்தி தன் பாதுகாவலர்கள் இருவரால் பரிதாபமாக சுட்டுக் கொல்லப்பட்டார்.
உலகமே அந்தச் செய்தியை உடனே அறிந்து கொண்டு விட்டாலும் , எம்.ஜி.ஆரிடம் மட்டும் அதை சொல்லாமல் மறைக்க வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் தவித்தார்கள் மருத்துவர்கள்.
ஏனென்றால் இந்திரா காந்தி இறந்த அந்த வேளையில்தான் , எம்.ஜி.ஆர். உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டு , உயிருக்குப் போராடிக் கொண்டு தீவிர சிகிச்சையில் இருந்தார்.
அந்த நேரத்தில் இந்த செய்தியை சொல்லி , அதைத் தாங்க முடியாமல் எம்.ஜி.ஆர். உயிருக்கு ஆபத்து ஏதாவது ஏற்பட்டு விட்டால் ?
சில நாட்களுக்குப் பின் அமெரிக்காவில் மாற்று சிறுநீரகம் பொருத்தப்பட்டு, எம்.ஜி.ஆர். உடல் நிலையில் ஓரளவு முன்னேற்றம் ஏற்பட்டது.
உடல்நலம் தேறி எழுந்து வந்தார் எம்.ஜி.ஆர்.
அதன் பிறகுதான் மெல்ல மெல்ல இந்திரா காந்தியின் மரணச்செய்தியை தயக்கத்துடன் எம்.ஜி.ஆரிடம் சொன்னார்கள் அதிகாரிகள்.
அதைக் கேட்டவுடன் அதிர்ந்து போனார் எம்.ஜி.ஆர்.
உடனடியாக இந்திரா காந்தியின் இறுதி ஊர்வலக் காட்சிகளின் "வீடியோ"க்களை கொண்டு வரச் சொல்லி உத்தரவிட்டார் .
வீடியோ ஓட ஓட , எம்.ஜி.ஆரின் விழிகளில் கண்ணீர் பெரு வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.
எதற்கும் கலங்காத எம்.ஜி.ஆர். , இந்திராவின் இறுதி ஊர்வலக் காட்சிகள் அடங்கிய அந்த வீடியோவைப் பார்த்து விட்டு , தேம்பி தேம்பி சிறு பிள்ளை போல் அழுதிருக்கிறார்.
காரணம் , தன் உயிரைக் காப்பாற்ற ஓடோடி வந்த இந்திராகாந்திக்கு நன்றி சொல்ல எம்.ஜி.ஆர். உள்ளம் துடிக்கிறது.
ஆனால் இந்திரா இப்போது உயிரோடு இல்லை.
பக்கத்தில் இருப்பவர் யாரிடமாவது இதை சொல்லி வாய் விட்டு அழலாம் என்றால் கூட , பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட எம்.ஜி.ஆருக்கு வாய் திறந்து ஒரு வார்த்தை கூட பேச இயலவில்லை.
.
இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் , மௌனமாக தனக்குள் அழுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும் எம்.ஜி.ஆரால் ?
“வாழும் போது வருவோர்கெல்லாம்
வார்த்தையாலே நன்றி சொல்வோம்
வார்த்தை இன்றி போகும் போது
மௌனத்தாலே நன்றி சொல்வோம்
நாலு பேருக்கு நன்றி.”
இன்று (அக்டோபர் 31)இந்திரா காந்தி நினைவு தினம் .............. Thanks.........
லண்டனில் புரட்சித் தலைவர் - 2nd VISIT...
லண்டன் சென்ற தமிழக முதல்வர் புரட்சித் தலைவர் அவர்களுக்கு லண்டன் தமிழ்ச் சங்கத்தினர் அமோக வரவேற்பு அளித்தனர்.
1978ஆம் வருடம் நவம்பர் மாதம் 4ஆம் தேதி சனிக்கிழமை நடந்தது. லண்டன் பாரதிய வித்யா பவனில் நடந்த இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் பெரும் திரளான மக்கள் காலத்து கொண்டனர்......
புரட்சித் தலைவர் யாரின் நெஞ்சையும் ஈர்க்கும் கவர்ச்சிமிக்கச் சொற்பொழிவு ஆற்றினார். தமது சிறுவயது முதல் பேரறிஞர் அண்ணாவை தெய்வமான கருதுவதாகவும் அவருடைய கொள்கைகளை பின்போரி வருவதாகவும் கூறினார்.
தமிழகத்தில் நாடாகும் தொழிலாளர் கலவரம், சாதிக் சண்டைகள் .....ஏற்படும் தீங்குகளையும் இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் நஷன்களையும் தவிக்க தாம் ஏற்ற மருந்து கண்டுபிடித்து அமைதிநிலவப் பாடுபட்டு வருவதையும் எடுத்துரைத்தார்.
தேசிய கீதத்தின் பின்னர் வரவேற்பு கூட்டம் முடிவடைந்தது........... Thanks SB.,
பிர*ப*ல முன்னாள் திரைப்ப*ட* ந*டிகை கீதாஞ்ச*லி (72 வ*ய*து) இன்று மார*டைப்பால் காலமானார்.
இவ*ர் ஆந்திராவை பூர்வீக*மாக கொண்ட*வ*ர். சிற*ந்த* குணச்சித்திர* ந*டிகை. தெலுங்கில் சுமார் 40 ப*ட*ங்க*ளும், த*மிழில் 15 ப*ட*ங்க*ளும், மலையாளம் மற்றும் ஹிந்தியில் சில ப*ட*ங்க*ளும் ந*டித்துள்ளார்.
மக்கள் திலகத்துட*ன் தாயின் மடியில், என் அண்ண*ன், ப*ணம் ப*டைத்த*வ*ன், அன்னமிட்ட* கை உள்ளிட்ட ப*ட*ங்க*ளில் ந*டித்துள்ளார். இவை த*விர நெஞ்சிருக்கும் வ*ரை, நீலவான*ம், சார*தா, அதே க*ண்க*ள் ஆகிய ப*ட*ங்க*ளில் குறிப்பிட*த்த*க்க வேட*ம் புரிந்துள்ளார்.
மேலும் மக்கள் திலகம் த*யாரிக்கவிருந்த* "இணைந்த* கைக*ள்" ப*ட*த்தில் இரு க*தாநாய*கிய*ரில் ஒருவ*ராக ந*டிக்க* ஒப்ப*ந்த*மாகி பின் சில காட்சிக*ளுட*ன் நின்று போனது.
கீதாஞ்ச*லியின் மறைவிற்கு ஆழ்ந்த* இர*ங்க*லை தெரிவித்துக் கொள்கிறோம்............ Thanks.........
கடந்த வாரம் மதுரை சென்ட்ரல் சினிமாவில் வெளியான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் "நாடோடி மன்னன் " தினசரி 4 காட்சிகளில் ஒரு வார வசூலாக*ரூ.1,93,000/- ஈட்டி அபார, அரிய, அசுர ,அட்டகாசமான சாதனை படைத்துள்ளது.*இனி வரும் காலத்தில், வெளியாகும் பழைய படம் இந்த வசூலை முறியடிக்க முடியுமா என்பது கேள்விக்குறி. ஆனால் தலைவரின் படத்தை தலைவர் படங்களே முறியடித்து சாதனை படைக்கும் என்பது திண்ணம் .
தகவல் உதவி : மதுரை நண்பர் திரு.எஸ் குமார் .
https://youtu.be/nn3QClVdThE........ Thanks.........
http://www.kalamnewstv.live/?p=2658
*KALAM NEWS TV*
*உண்மை செய்தியை உலகிற்கு உரக்கச் சொல்லும் கலாம் நியூஸ் டிவி தமிழ் தொலைக்காட்சி* ........... Thanks............
https://youtu.be/qUhlVwrT-Vc
தலைவர் தலைவர் தான்✌........ Thanks...
https://www.facebook.com/groups/MGR1...5knPElclhV6E7k... Thanks......
இப்பொழுது 5.45 மணியளவில் ரிஷி மூவிஸ் திரு சாய் நாகராஜன் அவர்கள் அலைபேசியில் தெரிவித்த இனிய, இன்ப தகவல்கள்... மதுரை - சென்ட்ரல் சினிமாஸ் dts., திரையரங்கில் 'தீபாவளி' திருநாளில் திரையிடப்பட்டு... தினசரி 4 காட்சிகள், 7 நாட்களில் வசூல் சக்கரவர்த்தி புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர்., அவர்களின் பிரமாண்ட லட்சிய படைப்பு "நாடோடி மன்னன்" , ரூபாய் 195000.00 எவரும் நெருங்க இயலாத, நினைத்து கூட பார்க்க முடியாத வசூல் பிரளயம் படைத்திருக்கிறார்... அது8 அடாத, விடாத மழையிலும்... காவியத்தை பார்த்து ரசித்த நல்ல உள்ளங்கள் 5001 நபர்களுக்கு மேல்......... கலர் பகுதி பிரிண்ட் சுமாராக இருந்தும்... பல காட்சிகள் எடிட்டிங் செய்து குறைக்கப்பட்டலுமே இவ்வளவு பெரிய
மகத்தான வசூலை சர்வ... சாதாரணமாக... அள்ளி குவித்துள்ளது...இதுதான் சரித்திரம்... சாதனை... சகாப்தம் ஆகியவைகளின் உச்சமோ...உச்சம்...
https://youtu.be/deqTvMWqWe4........ Thanks...
செய்தி திருத்தம்
*-------------------------
கடந்த வாரம் மதுரை சென்ட்ரல் சினிமாவில் வெளியான மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் பிரம்மாண்ட தயாரிப்பான "நாடோடி மன்னன் " ஒரு வார வசூலாக*ரூ.1,93,000/- என்று தகவல் அளித்திருந்தேன் . அது தவறு .
1958ல்* முதல் வெளியீட்டில் மதுரை தங்கம் தியேட்டரில் ( ஆசியாவின் மிக பெரிய அரங்கம் ) வெற்றிகரமாக 140 நாட்கள் ஓடியது . அதன்பின் நூற்றுக்கணக்கான முறை* மதுரையில் கடந்த 61 ஆண்டுகளாக பல அரங்குகளில் வெளியாகி வெற்றி வாகை சூடி வசூலை குவித்துள்ளது .* ஆனால் வாட்ஸ் அப்பில் நண்பர்கள் தவறாக 61 ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் வெளியாகி வெற்றி பெற்று வசூலை குவித்துள்ளது என்பது போல் செய்தி பதிவு செய்துள்ளது மன வருத்தத்தை அளிக்கிறது .எனவே நண்பர்கள் செய்திகளை பதிவிடும்போது சரியான, முறையான தகவலை பதிவிடும்படி கேட்டு கொள்கிறேன் .
தீபாவளி வெளியீடாக , புதிய படங்களுக்கு போட்டியாகவும், கொட்டும் மழையை பொருட்படுத்தாமலும் , பக்தர்கள், ரசிகர்கள் ஆயிரக்கணக்கில் படையெடுத்து*நாடோடி மன்னன் வெற்றி காவியத்தை முற்றிலும் புதிய பரிமாணத்தில் கண்டு ரசித்து , பேராதரவு* அளித்து , விநியோகஸ்தர் அறிவித்த தகவலின்படி*ரூ.1,95,000/- வசூல் ஈட்ட* சுமார் 5.100 நபர்கள் காரணமாக திகழ்ந்துள்ளனர் .என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.* *இந்த வசூலை இனி* எந்த பழைய படமும் அவ்வளவு எளிதாக முறியடிக்க வாய்ப்பே இல்லை .* ஆனால் மற்றொரு தலைவரின் படம் வெளியானால் இந்த வசூலை முறியடிக்கும் என்பது எனது நம்பிக்கை . இந்த சாதனை, சரித்திரம், சகாப்தம் படைக்க பேருதவியாக இருந்த ரசிகப்பெருமக்களுக்கு ஏகோபித்த நன்றி .
* சென்னை**அகஸ்தியாவில் கடந்த மாதம் வெளியான புரட்சி தலைவரின் நாடோடி மன்னன் ரூ.66/-, ரூ.80/-* கட்டணத்தில் ஒரு வார வசூலாக ரூ.1,85,000/-* பெற்று சாதனை படைத்தது .* தற்போது மதுரையில்* சென்ட்ரல் அரங்கில் ரூ.30/-, ரூ.50/- கட்டணத்தில் ரூ.1,95,000/- வசூல் செய்து சரித்திரம் படைத்துள்ளது . எனவே அன்றும் இன்றும், என்றும் மக்கள் தலைவர் தான் வசூல் சக்கரவர்த்தி*
இவ்வாறு* : மதுரை நண்பர் திரு. எஸ். குமார் .செய்தியளித்தார் .
தினகரன்* *-வெள்ளி மலர்*
-------------------------------------------
நான் இல்லாமே நடக்காது - கவிஞர் வாலி .
---------------------------------------------------------------------
எம்.ஜி.ஆர். பொதுவாக அடிக்கடி கவிஞர் வாலியை வெறுப்பேற்றுவார் .அதை புத்திசாலித்தனமாக எதிர் கொள்ளும் முறையை எம்.ஜி.ஆர். ரசிப்பார் .
அப்போது தன்* கனவு படைப்பான "உலகம் சுற்றும் வாலிபன்" படத்தை பெரும் பொருட்ச்செலவில் எடுத்துக் கொண்டிருந்தார் எம்.ஜி.ஆர். வாலியை சந்தித்தபோது "இந்த படத்தோட டைட்டில் கார்டில் உங்க பேரு இருக்காது கவிஞரே , ஏன்னா,இந்த படத்திற்கு உங்களிடம் பாட்டு கேட்க போவதில்லை . என்று விளையாட்டாக சொன்னார் .
வாலி , பதிலுக்கு, அண்ணே, என் பேரு இல்லாமே உங்க படத்தை , நீங்க ரிலீஸ் பண்ணவே* முடியாது , இது சவால் என்றார் .**
அப்படியா ? பார்த்துவிடலாமா என்று உசுப்பு ஏற்றிவிட்டார்* எம்.ஜி.ஆர்.*
அண்ணே, உலகம் சுற்றும் வாலிபன் டைட்டிலிலேயே என் பெயர் இருக்கு .* அதை எடுத்துட்டா,* உலகம் சுற்றும் பன்* என்றுதான் நீங்க படத்தை ரிலீஸ் செய்யணும் .
வாலி இல்லாமே எப்படி வாலிபன் வெளியாகும் என்றார் .
எம்.ஜி.ஆருக்கு சிரிப்பு* பொத்துக்* கொண்டு வந்தது .
உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்காக, பின்னர் 4 பாடல்கள் எழுத எம்.ஜி.ஆர்.*வாய்ப்பளித்தார் .* அதில் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகின .
தினகரன்* *- வெள்ளிமலர் -01/11/19
------------------------------------------------------
தாலி பாக்கியம்*
------------------------------
எம்.ஜி.ஆர். உடல்நல குறைவால் அமெரிக்காவில் இருந்தபோது தமிழகம் எங்கும்* ஒளி விளக்கு படத்தில் கவிஞர் வாலி எழுதிய "இறைவா உன் மாளிகையில் "பாடல்தான் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தது .
எம்.ஜி.ஆர். உடல்நலம் தேறி, சென்னை திரும்பியதும் , உடல்நலம் விசாரிக்க நேரில் போனார் வாலி.* அப்போது எம்.ஜி.ஆரின் மனைவி, வி.என்.. ஜானகி ,வாலியிடம் ,* ஒளி விளக்கு படத்தின்* உங்க பாடலான '"இறைவா உன் மாளிகையில் " பாடலைத்தான் நாடே பாடி, உங்க அண்ணனுக்கு பிரார்த்தனை செய்தாங்க .* அதன் பலனாலேதான் அவர் நல்லா ஆயிட்டாரு .* என்று உருக்கமாக சொன்னார் .
அப்போது வாலி, அம்மா அது வாலி பாக்கியம் இல்லை,. உங்க தாலி பாக்கியம் தான் என்று கூறி நெகிழவைத்தார் .
Is Vijay trying to emulate MG Ramachandran with his films? https://indianexpress.com/article/en...bigil-6096161/.......... Thanks.........
https://youtu.be/ZdAF3Zo9v5c........... Thanks.........
Meet Santhana Krishnan, a die-hard MGR fan - The Hindu - https://www.thehindu.com/society/mee...le28472749.ece....... Thanks...