-
திரை உலகிலேயே மிகவும் சுறுசுறுப்பான துள்ளலான துடிப்புமிக்க கதாநாயகர் நம்முடைய புரட்சித்தலைவர் மட்டுமே. அன்றும்-இன்றும் இனிவரும் காலங்களில் வரப்போகிற இளைஞர்கள் புரட்சித்தலைவரின் திரைப்படங்களை சில நிமிடங்கள் அமர்ந்து பார்த்து விட்டாலே போதும் புரட்சித்தலைவரின் துள்ளலான நடிப்பை கண்டு அவர்களும் ரசிகர்களாகி விடுவார்கள் அப்படி ஒரு இயற்கையான நடிப்பு எந்த நடிகர்களுக்கும் அவ்வளவு எளிதில் வந்துவிடாது. புரட்சித்தலைவர் நடித்த ஒவ்வொரு திரைப்படங்களும் மிக அற்புதமான பொக்கிஷங்களாகும் சினிமாவில் தொழில்நுட்பங்கள் எவ்வளவு வளர்ந்தாலும் அதில் முக்கிய பங்கு புரட்சித்தலைவரின் திரைப்படங்களுக்கு என்றுமே உண்டு இப்போதைய இளைஞர்களும் இனி வரப்போகின்ற இளைஞர்களும் புரட்சித்தலைவரின் திரைப்படங்களை கண்டு ரசித்தால் நேர்மையாக வாழவும் ஒழுக்கமாக வாழவும் முடியும் என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை ... இன்றும் என்றும் இளைஞர்களின் எழுச்சி நாயகர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் ! புரட்சித்தலைவரின் புகழ் என்றும் என்றென்றும் நிலைத்திருக்கும்.
கொடை வள்ளல் எம்.ஜி.ஆர் புகழ் வாழ்க.........
-
உதய சூரியனாக வந்த எம் ஜி ஆர்
இருண்ட மேலாதிக்க சக்தியை மாற்றி வெளிச்சம் தந்த உதயசூரியன் எம்ஜி ஆர்
தி மு க வை அரியணை காண வைத்த உதயசூரியன் எம் ஜி ஆர்
அண்ணாவை முதல்வர் ஆக்கிய உதயசூரியன் எம் ஜி ஆர்
கருணாநிதியை முதல்வர் ஆக்கிய உதயசூரியன் எம் ஜி ஆர்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன் என உரைத்து கருணாநிதியை முதல்வர் பதவியில் இருந்து மாற்றிய உதயசூரியன் எம் ஜி ஆர்
தமிழகம் பொற்க்காலம் காண தானே ஆண்டு ஒரு பொற்க்கால ஆட்சி தந்த உதயசூரியன் எம் ஜிஆர்
உதய சூரியன் எம்ஜி ஆர் இன்றி ஒரு தலைவரும் ஜெயிக்க முடியாது
உதயசூரியன் இன்றி ஒரு அணுவும் அசையாது
உதயசூரியன் எம் ஜி ஆர் இன்றி தமிழகத்தில் ஒரு அணுவும் அசையாது
வாழ்க எம் ஜி ஆர் புகழ்...gsn...
-
" மக்களிடம் எம்.ஜி.ஆரின் செல்வாக்கு "
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மூலம் திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஜூன் 30 ம் நாள்,"தமிழ்ப் பெருங்குடி மக்களுக்கு எழுச்சியும்,மகிழ்ச்சியும் தந்த நாளாகப் பொன் எழுத்துக்களில் பொறிக்கப்படும் என்பதில்
அய்யமில்லை.
அன்று சென்னையில் மாமாங்கமெனப்
புரண்டோடிய மக்களின் பெருங்கூட்டத்தையும், அவர்களது முகத்தில் சுடர்விட்ட நம்பிக்கை ஒளியையும் உள்ளத்தில்
பொங்கிப் பெருகிய பேரார்வத்தையும் கண்ட
போது ஏழை மக்களிடம் எம்.ஜி.ஆர் பெற்றுள்ள செல்வாக்கு எத்தகையது என்பது
இதுவரை புரியாதவர்களுக்கும் புரிந்திருக்கும்.
(முதல்வர் எம்.ஜி.ஆர் பதவி ஏற்ற 10 நாளில்
ஆனந்த விகடன் எழுதிய தலையங்கம்)
இதுபோன்ற புகழ்மிக்க தலைவர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மட்டுமே.அவருக்கு இணை எவருமில்லை.
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨.........vrh...
-
தகவலுக்கு நன்றி: சென்னை பாபு. தொகுப்பு: சாமுவேல். ஜனவரி மாதம் பொன்மனச்செம்மல் காவியங்கள் தொலைக்காட்சிகளில் 118 தடவை ஒளிபரப்பாகி உள்ளன. முரசு, வசந்த், சித்திரம் தொலைக்காட்சிகளில் அதேநாளில் மறு ஒளிபரப்பு உண்டு. அந்த வகையில் கூடுதல் ஒளிபரப்பு 12 தடவை. எனவே 130 தடவை ஒளிபரப்பாகி உள்ளன. [118+12=130]
ஜனவரி மாதம் ஒளிபரப்பான 66 காவியங்கள் விபரம்: 1. நினைத்ததை முடிப்பவன் 2.சந்திரோதயம் 3.நீதிக்குத் தலைவணங்கு 4. உரிமைக்குரல் 5. இதயக்கனி 6. எங்க வீட்டுப் பிள்ளை 7. நல்ல நேரம் 8. கண்ணன் என் காதலன் 9. உழைக்கும் கரங்கள் 10. என் அண்ணன் 11. புதிய பூமி 12. நாளை நமதே 13. அன்பே வா 14. குடியிருந்த கோயில் 15. நவரத்தினம் 16. என் கடமை 17. எங்கள் தங்கம் 18. தாய் சொல்லைத் தட்டாதே 19. நீரும் நெருப்பும் 20. பல்லாண்டு வாழ்க 21. தேடி வந்த மாப்பிள்ளை 22. தெய்வத்தாய் 23. காவல்காரன் 24. கணவன் 25. ரிக்சாக்காரன் 26. நான் ஏன் பிறந்தேன் 27. பெற்றால்தான் பிள்ளையா 28. தொழிலாளி 29. தாயின் மடியில் 30. கொடுத்து வைத்தவள் 31. ஆனந்த ஜோதி 32. கலங்கரை விளக்கம் 33. பெரிய இடத்துப் பெண் 34. ரகசிய போலீஸ் 115. 35. காலத்தை வென்றவன் 36. பணம் படைத்தவன் 37. உலகம் சுற்றும் வாலிபன் 38. அடிமைப் பெண் 39. நாடோடி மன்னன் 40. தாயைக் காத்த தனயன் 41. மாட்டுக்கார வேலன் 42. நாடோடி 43. பறக்கும் பாவை 44. மதுரை வீரன் 45. ராமன் தேடிய சீதை 46. தேர்த் திருவிழா 47. கன்னித்தாய் 48. வேட்டைக்காரன் 49. சக்கரவர்த்தி திருமகள் 50. திருடாதே 51. தனிப்பிறவி 52. விவசாயி 53. அரசக்கட்டளை 54. நீதிக்குப் பின் பாசம் 55. தர்மம் தலைகாக்கும் 56. குடும்பத்தலைவன் 57. முகராசி 58. அபிமன்யு 59. ஒருதாய் மக்கள் 60. இதய வீணை 61. ஆயிரத்தில் ஒருவன் 62. சிரித்து வாழ வேண்டும் 63. பட்டிக்காட்டு பொன்னையா 64. குமரிக் கோட்டம் 65. படகோட்டி 66. பணத்தோட்டம்
ஜனவரி மாதம் 17 தொலைக்காட்சிகள் ஒளிபரப்பிய காவியங்கள் எண்ணிக்கை விபரம்: சன்லைப்-26, முரசு-7, ராஜ் 18+1( பறக்கும் பாவை கூடுதலாக ஒருநாள்), புதுயுகம்-7, மெகா24-7, பாலிமர்-10, வேந்தர்-3, மீனாட்சி-5+4( நல்லநேரம்,விவசாயி கூடுதலாக பிறிதொரு நாளிலும் வேட்டைக்காரன் கூடுதலாக இரண்டு நாட்கள்) பெப்பர்ஸ்-7, சித்திரம்-1, வெளிச்சம்-1+1( நல்லநேரம்), ஜெ மூவி-5, D திரை-2, ஜெயா-3, வசந்த்-5, மூன்-1, மெகா-2+2( படகோட்டி, குடியிருந்த கோயில் கூடுதலாக தலா 1 நாள்)
மீனாட்சி, D திரை ஆகியவை சென்னை உள்ளிட்ட சில ஏரியாவில் ஒளிபரப்பாகுபவை.
நல்லநேரம் 11 தடவையும் தாய்சொல்லைத் தட்டாதே 8 தடவையும் வேட்டைக்காரன் 5 தடவையும் அதிகபட்சமாக ஒளிபரப்பாகி உள்ளன..........Babu SML...
-
எம் ஜி ஆர் எடுத்தவுடன்கதாநாயகனாக உயரவில்லை ...
எம் ஜி. ஆர் !
எத்தனையோ
அவமரியாதைகளையும்,
அவமானங்களையும்
தாண்டியே அவரது
வெற்றிப் பயணம்...
ஆரம்பமானது....
அன்றும், இன்றும்
கொண்டாடப்படும்
அவரின் ஆரம்ப கால
திரை வாழ்வினைப் பற்றிப்
பார்ப்போமா!......
➖➖ #லலிதா
எம்.ஜி.ஆர், தன் கையில் காசு புழக்கத்தில் இல்லாத காலத்திலிருந்தே, கண் உறக்கமின்றி கடமையை கண்ணாகக் கொண்டு தன்னை உரமாக்கி உயர்ந்தவர்.
அடைப்பக்காரனாய், அடியாளாய், வெஞ்சாமரம் வீசும் சேவகனாய், கூட்டத்தில் காணாமல் போன குழந்தையாய் மெல்ல சினிமாவில் தலைகாட்டி வந்த நேரம்
நாராயணன் கம்பெனி என்ற நிறுவனம் தான் எடுக்கவிருந்த 'சாயா ' என்ற படத்தில், அவரை ராணா வீர்சிங் என்ற கதாநாயகன் கதாபாத்திரத்திற்கு ஒப்பந்தம் செய்தது. திரையுலகில் விரக்தியில் இருந்த எம்.ஜி.ஆருக்கு இது பெரும் மகிழ்ச்சியை அளித்தது.
கதாநாயகி அந்நாளில் பிரபல நடிகையான டி.வி.குமுதினி. படத்தின் ஒரு காட்சியில் கதாநாயகன் எதிரிகளுடன் போரிட்டு காயங்களுடன் தப்பி வந்து நந்தவனத்தில் தோழிகளுடன் விளையாடிக்கொண்டிருக்கும் கதாநாயகியின் மடியில் மயங்கிவிழுவார்.
கதாநாயகி அவரின் முகத்தில் தண்ணீர் தெளித்து தெளியச்செய்வார். இக்காட்சி எடுக்கவிருந்த அன்றைய தினம் எம்.ஜி.ஆர் ஏதோ மனக்குழப்பத்தில் இருந்ததால் சரியாக நடிக்கமுடியவில்லை. பல டேக்குகள் வீணாகின.
அப்போது படப்பிடிப்பை பார்த்துக்கொண்டிருந்த கதாநாயகி குமுதினியின் கணவர் கோபமடைந்து,
'ஒரு புதுமுக நடிகரை நீங்கள் கதாநாயகனாக போட்டதோடு எத்தனை முறைதான் என் மனைவியின் மடியில் அவர் விழுவதுபோல் காட்சி எடுப்பீர்கள். என் மனைவியை அவமானப்படுத்துகிறீர்களா” என்று சத்தம் போட,
எம்.ஜி.ஆர் பெருத்த அவமானமும் வேதனையும் அடைந்தார்.
இதை தன்மானப் பிரச்சினையாக எடுத்துக் கொண்ட தயாரிப்பாளர்,
எம்.ஜிஆரைத் தட்டிக் கொடுத்து, “கவலைப்படாதே! இவர்களே உன் வீடு தேடி வரும் காலம் வரும்” என்று கூறி எடுத்த பிலிம் சுருளையும் அதே இடத்தில் தீயிட்டுக் கொளுத்தினார்.
இதே குமுதினி, எம்.ஜி.ஆரின் வாசல் தேடி வந்து, ஏலம் போக இருந்த தன் வீட்டைப் பெற்ற கதையை அந்நாட்களில் யாவரும் அறிவர்.
அதேபோல், அமெரிக்க இயக்குனர் #எல்லீஸ் #டங்கன், தான் இயக்கிய சில படங்களில் துணை நடிகராக வந்து போன எம்.ஜி.ஆரை, ஜூபிடர் பிக்சர்ஸ் சோமு ”மந்திரி குமாரி” படத்தில் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்தது டங்கனுக்கு கௌரவ குறைச்சலாகப் பட்டது.
எனவே, படப்பிடிப்பை வேண்டா வெறுப்பாகவே தொடங்கி, எம்.ஜி.ஆரை எந்த அளவுக்கு #புண்படுத்த முடியுமோ அந்த அளவுக்குப் புண்படுத்தி நடிக்கச் செய்தார்.
அன்று, சேர்வராயன்மலை, சுடு பாறையில் சூட்டிங், எ.ஏஸ், நடராஜனுடன் எம்.ஜி.ஆர் கத்திச் சண்டை போடும் காட்சி. எம்.ஜி.ஆர் உடல் பளிச்சென்று தெரியும் அளவுக்கு மெல்லிய #டாக்கா #மஸ்லீன் துணியில் சட்டை அணிந்திருந்தார்.
அந்த அனல் கொதிக்கும் சுடு பாறையில் டியூப்லைட் வெளிச்சத்தில் எம்.ஜி.ஆரை மல்லாக்கப் படுக்கச் சொல்லி, கேடயத்தைக் கொண்டு எஸ்.ஏ.நடராஜனின் தாக்குதலை தடுக்கும் படி சொல்கிறார் டங்கன்.
எம்.ஜி.ஆர் உடல் புண்ணாவதைக் கூட பொருட்படுத்தாமல், டங்கன் சொன்னபடி செய்கிறார். காட்சி சரியாக வரவில்லை என்று சொல்லியும், மானிட்டர் என்று சொல்லியும் அந்தச் சுடுபாறையில் பொன்மனச் செம்மலை புரட்டி எடுக்கிறார்.
வேண்டுமென்றே எம்.ஜி.ஆரை வதைக்கிற செயலை யூனிட்டே வேதனையுடன் பார்க்கிறது, முடிந்த வரை அந்தச் சுடுபாறையில் எம்.ஜி.ஆரை வாட்டியெடுத்த பிறகு, டங்கன் படப்பிடிப்பை முடிக்கிறார்.
டங்கன் காட்சி முடிந்தவுடன் எம்.ஜி.ஆர் எழுந்திருக்க முயற்சி செய்கிறார். காரணம் உடலோடு ஒட்டிக் கொண்ட அந்த மஸ்லீன் துணி இளகி சுடு பாறையில் ஒட்டிக் கொள்கிறது.
உடனே, பதறியடித்துக் கொண்டு ஜூபிடர் சோமு அவர்கள் “தேங்காய் எண்ணெய் தடவி பாறையிலிருந்து பிரித்து எடுக்கிறார்.
எம்.ஜி.ஆரை தட்டிக் கொடுத்து, இன்று காயப்படுத்தியவர்களெல்லாம், உனக்கு கைகட்டி நிற்கிற காலம் வெகு விரைவில் வரும்... வரும் என்று ஆறுதல் சொல்கிறார்.
1951-இல் ஜூபிடர் சோமு சொன்ன வார்த்தகள் 1981-இல் பலித்து விடுகிறது.
அன்று எம்.ஜி.ஆர் தமிழக முதல்வராக கோட்டை அலுவலகத்தில் அமர்ந்திருக்கிறார். உள்ளே உதவியாளர் வருகிறார்.
உங்களைக் காண டைரக்டர் எல்லீஸ் டங்கன் வந்திருக்கிறார் என்ற செய்தியை சொல்கிறார்.
எம்.ஜி.ஆரோ... வந்திருப்பவர் முன்னொரு நாளில் தன்னை வதைத்தவர் என்பதையே மறந்துவிட்டு வானளாவிய புகழுடன் வாழ்வாங்கு வாழ்ந்த மேதை, நம் வாசல் தேடி வந்துவிட்டாரே, உள்ளே வரச் சொல்லுங்கள் என உத்திரவிட, “கலங்கிய கண்களுடன், கசங்கிய கோட்டுடன் வந்த டங்கனை அறையை விட்டு வெளியே வந்து, டங்கனை கட்டித் தழுவி உள்ளே அழைத்துச் செல்கிறார்.
“என்ன வேண்டும்? என்னால் உங்களுக்கு ஏதாவது ஆக வேண்டுமா” என்ற எம்.ஜி.ஆரின் வார்த்தைகள் பழுக்க காய்ச்சிய கம்பி போல் நுழைகிறது.
“தங்களுக்கு நான் செய்த கொடுமைகளை எல்லாம் மறந்து, எனக்கு நீங்கள் இவ்வளவு உபச்சாரம் செய்வது எனக்கு வெட்கமாக இருக்கிறது இருந்தும், வேறு வழியில்லாமல் தான், தங்கள் உதவியை நாடி வந்திருக்கிறேன்’ என்று கண்ணீர் மல்க கூறுகிறார்.
“இப்பொழுது நான் உங்களுக்கு எப்ப செய்ய வேண்டும்? அதை மட்டும் சொல்லுங்கள் “ என்று எம்.ஜி.ஆர் கேட்கிறார்.
“லண்டனில் வசதியாய் வாழ்ந்த நான், இப்பொழுது வறுமை நிலைக்கு வந்துவிட்டேன், எஞ்சியிருப்பது ஊட்டியிலிருக்கும் ஒரு எஸ்டேட் தான், அதை விற்கலாம் என்றால், அதில் சில சட்டச் சிக்கல் இருக்கிறது’ என்றார்.
“அரை மணி நேரம் பொறுத்திருங்கள் ஆவன செய்கிறேன்” என்று எம்.ஜி.ஆர் அவரை அருகில் இருந்த அறையில் அமர வைக்கிறார். அரை மணி நேரம் கழித்து டங்கன் அழைத்து வரப்படுகிறார்.
“இந்த சூட்கேஸில் உங்களுக்கு தேவையான பணம் இருக்கிரது. அதோடு உங்கள் எஸ்டேட்டையும் விற்பதற்கு ஏற்பாடு செய்கிறேன்’ என்று சொல்லி வாசல் வரை வந்து வழி அனுப்புகிறார்.
நாம் செய்த தீமைகளுக்கு எம்.ஜி.ஆர், நம்மோடு பேசுவாரா? மதிப்பாரா? என்றெல்லாம் பயந்து வந்த டங்கனுக்கு எம்.ஜி.ஆர் வாரிக்கொடுத்து, இன்னா செய்தவருக்கு இனியவை செய்து, தம்மை வெட்கப்பட வைத்துவிட்டாரே என்று எம்.ஜி.ஆர் அறையை திரும்பிப் பார்த்துக் கொண்டே சென்றார்” டங்கன்.
தகவல்➖ இணையம்.........ksr...
-
'கருணாநிதியின் மகன் நான்' என்ற டயலாக் எடுபடாமல் போகவே இப்ப புரட்சித்தலைவரை 'பெரியப்பா' என்கிறார் திரு.ஸ்டாலின்..
ஆக தனது தந்தையின் பெயரை சொன்னால் 'ஓட்டு விழாது' என்பதை மிகவும் தாமதமாக உணர்ந்திருக்கிறார்..
இன்றைக்கு, 'சீனி சக்கர சித்தப்பா, எம்ஜிஆர் எனக்கு பெரியப்பா' என்ற ஒரு உருட்டு...
நேற்று 'அண்ணாவுக்கு டீ வாங்கி கொடுத்தேன், பக்கோடா வாங்கி கொடுத்தேன்' என்ற ஒரு உருட்டு...
அஇஅதிமுகவினர் உங்களை போல், கிரிமினல் தனமாக, ஒரு போதும் எதிர்கட்சி தலைவர்களை வாடகைக்கு எடுத்து பிரச்சாரம் செய்யமாட்டார்கள்...spv...
தலைமுறை கடந்து, தலைவர்களையே நேரிலே சந்திக்காத தொண்டர்களே முதல்வராகும் இயக்கம் #அஇஅதிமுக என்ற மாபெரும் மக்கள் இயக்கம்...
எதிர்கட்சி தலைவர் திரு.ஸ்டாலினை பார்த்து ஒரே ஒரு கேள்வி...
'நீங்கதான் பெரியாருக்கு பேனா வாங்கி கொடுத்தவராச்சே..
அண்ணாவுக்கு டீ வாங்கி கொடுத்தவராச்சே....
கருணாநிதிக்கு காப்பி போட்டு கொடுத்தவராச்சே....
எல்லா தலைவர்களிடமும் நெருக்கமா பழகி பால பாடம் கற்ற உங்களால அதிமுகவில் ஒரு எளிய தொண்டன் சரளமாக மேடையில் பேசுவதை போல் பேச முடிவதில்லையே ஏன்?
அதிமுகவில் ஒரு அடிமட்டத் தொண்டன் முதல்வராகும் போது, உங்களால் முடிவதில்லை ஏன்?
உங்களுக்கு பெரியப்பாவாகவும், உங்கள் அப்பாவிற்கு பெரிய ஆப்பாகவும் விளங்கியவர் எங்கள் #புரட்சித்தலைவர் என்பதை மறந்துவிடாதீர்கள்..........sbb
-
#இனி #உங்கள #பார்க்கமாட்டோம்
அப்போது 1968 ஆம் ஆண்டு. எம்ஜிஆர் தனது டிஎம்சி 2347 அம்பாசிடர் காரில், ஆற்காடு சாலை அலுவலகத்திலிருந்து கிளம்பி வருகிறார்...
கார் போக் ரோட்டிலுள்ள கார்ப்பரேஷன் பள்ளி வழியாகச் சென்றுகொண்டிருந்த போது, பள்ளிக்கு வெளியே உள்ள பள்ளத்தில் இருக்கும் குழாயில் தட்டைக் கழுவிக்கொண்டிருந்த மாணவர்கள், எம்ஜிஆரின் காரை அடையாளம் தெரிந்துகொண்டு, ஓடிவந்து ஒன்றாகக் கைகோர்த்தவண்ணம் காரை மறிக்கின்றனர்.
ஏம்பா காரை நிறுத்தினீங்க? என்ன பிரச்சனை??? இது எம்ஜிஆர்...
"ஒண்ணுமில்ல சார். உங்க பக்கத்துல நிக்கணும்னு எங்க எல்லோருக்கும் ஆசை அதான்...மன்னிச்சுடுங்க..." இது மாணவர்கள்.
இது நித்தமும் தொடர...
ஒரு நாள் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன், மாணவர்களைக் கூப்பிட்டு, "உங்க எல்லார் மேலயும் கம்ப்ளெயிண்ட் வந்திருக்கு...எம்ஜிஆர் காரில் வரும் போது வழிமறிக்கிறீர்களாமே ...? என்று கூறி, அவர்களின் பதிலைக் கூட எதிர்பாராமல், பிரம்பால் "நன்கு" கவனிக்கிறார்.
மறுநாள் அதேபோல் கார் வருகிறது. மாணவர்களைக் காணவில்லை. பொன்மனம் பதைக்கிறது. "என்ன ஆச்சு இவங்களுக்கு" ன்னு கண்கள் தேட ஆரம்பிக்குது....
ஆஆஹ்...! கண்டுபிடிச்சாச்சு... காரில் இறங்கி விறுவிறுவென நடந்து, பள்ளிக்கருகே உள்ள பள்ளத்தில் அமைக்கப்பட்டுள்ள குழாயில் சாப்பாடு தட்டுகளை அலம்பி அதில் தண்ணீரைப் பிடித்து குடித்துக்கொண்டிருந்த. மாணவர்களைப் பார்க்கிறார்... எம்ஜிஆருக்கு கண்ணீர் வந்துடுச்சு...
அருகே சென்று...
"ஏன் என்னை பார்க்க வரல...?" --- குழந்தை போலக் கேட்கிறார் எம்ஜிஆர்
நீங்க தான் எங்களைப் பற்றி எங்க தலைமை ஆசிரியரிடம் கம்ப்ளெயிண்ட் பண்ணிட்டீங்களே? உங்கள நாங்க எவ்வளவு நல்லவர்னு நெனச்சோம் ? எங்களுக்கு பிரம்படி விழுந்தது தான் மிச்சம்...நாங்க வரமாட்டோம் இனிமே --- மாணவர்கள்.
"ஐயோ! நா ஒண்ணுமே சொல்லலையே? யார் புகார் கொடுத்தாங்கன்னு கூட எனத்தெரியாதே ...?! என அப்பாவியாய் பதற... அருகிலிருந்த கார்டிரைவர்..."அண்ணே ! நா தான் இந்த வார்டு கவன்சிலர் சடகோபனிடம் சொல்லி பள்ளியில் புகார் கொடுக்கச்சொன்னேன்.. என்ன மன்னிச்சிடுங்கண்ணே ...! என்று கூற எம்ஜிஆர் அவரைக் கடிந்துகொள்கிறார்...மாணவர்களிடம் நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கேட்கிறார்...
பின்னர் மாணவர்களிடம்..."பசங்களா! இனிமே வகுப்பு நடக்கும் சமயத்தில் என்னைப் பார்க்க வந்து உங்க படிப்பைக் கெடுத்துக்கொள்ளக்கூடாது. படிப்பு ரொம்ப முக்கியம். மற்ற நேரங்களில் நா வரும் போது என்னைப் பார்க்கலாம்...சரியா??? எனக்கேட்க மாணவர்களும் மகிழ்ச்சியாக ஒப்புக்கொண்டனர்.
அடுத்த நாள் பள்ளிக்கு அந்த ஏரியா கவுன்சிலர் சடகோபன் வருகிறார்...வண்டியில் ஒரு பெரிய குழாய் வைத்த எவர்சில்வர் ட்ரம், 10 டம்ளர், சாப்பாட்டு தட்டுக்கள்...ஆகியவை இறக்கபடுகின்றன...
"இனிமேல் தட்டுல தண்ணீர் குடிக்கக்கூடாது...இவைகளைத்தான் உபயோகப்படுத்தணும்னு எம்ஜிஆர் கண்டிப்பாக சொல்லிட்டார்" ன்னு சொல்ல அனைவருக்கும் ஆனந்த அதிர்ச்சி....
இதே போக் ரோட்டில் எத்தனை நடிக நடிகைகள், தொழிலதிபர்கள், எத்தனை நாட்களாகப் பள்ளத்தில் இறங்கி, இந்த மாணவர்கள் தட்டில் தண்ணீர் குடிப்பதைப் பார்த்திருக்கிறார்கள்...! ஆனால்..இவர்களில் யாருக்குமே மனம் இளகவில்லையே ! ஆனால், இந்த மாமனிதரின் மனம் மட்டும் இளகி, 24 மணி நேரத்திற்குள் அந்த இளம் பிஞ்சுகளின் மனங்களைக் குளிர்வித்துவிட்டாரே !
...பள்ளியில் இதான் பேச்சு...
வேண்டினால் கொடுப்பவர் இறைவன்...
வேண்டாமலே கொடுப்பவர் நம் பொன்மனச்செம்மல்......bsm...
-
புரட்சித்தலைவர்
மன்னாதி மன்னன்
#மக்கள்_திலகம்
பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர்.
#அவர்களின்_ஆசியோடு_நண்பர்கள் #அனைவருக்கும்_இனிய #_காலை_வணக்கம்..
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் தன்னுடைய திரைப்படங்களில் சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் நல்ல கருத்துக்களையும் சிந்தனைகளையும் எடுத்துச் சொல்லும் பாடல்களை பாடியதோடு, தன்னுடைய வாழ்நாள் முழுவதும் அதையே கடைபிடித்து வாழ்ந்து வந்தார். இதனால் தான் இன்றைக்கும் அவர் நம்மிடையே வாழ்ந்து வருகிறார் அவர் அன்றைக்குப் பாடிய பாடல்கள் இன்றைக்கு வாழும் மக்களுக்கு ஒத்துப்போகிறது..
கவிஞர் கண்ணதாசன் புரட்சி தலைவர் எம்ஜிஆர் அவர்களுக்கு எழுதிய பாடல்களை ஒரு தொடராக பதிவிட்டு
இருந்தேன் அதில் பல பாடல்களை பற்றி
ஒரு ரசிகனாகப் பகிர்ந்து கொண்டேன்
அதே போல் புரட்சி தலைவர் தம் பாடல்களில் சிறுவர்களும், பெரியவர்களும் தவறான வழியில் செல்லாமல், அவர்களை நல்வழியில் கொண்டு செல்ல அவர் படங்களில் எத்தனையோ நன்னெறி பாடல்கள் உள்ளன இன்று அதை பற்றிய ஒரு சிறு கட்டுரை நண்பர்கள் பார்வைக்கு
பதிவிடுகிறேன்....
(சற்று நீண்ட பதிவு மன்னிக்கவும்)
எத்தனையோ திரைப்படங்கள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் அந்த திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் அந்த படங்களில் நடித்து முடித்த உடனே, தங்கள் வேலை முடிந்தது என்று கிளம்பி விடுவதுண்டு. நிஜ வாழ்க்கையில் அதற்கு நேர்மாறாக நடந்து வருவதுண்டு. சிகரெட், மது, மாது இம்மூன்றையும் தொடவே கூடாது என்று திரைப்படத்தில் நமக்கெல்லாம் புத்தராக வந்து அறிவுரை சொல்லிவிட்டு, பல நடிகர்கள் நிஜ வாழ்க்கையில் சதா சர்வகாலமும் மேற்சொன்ன அந்த மூன்று கெட்ட பழக்கங்களோடே குடும்பமும் நடத்தி வருவதுண்டு.
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரோ திரைப்படங்களில் என்ன கருத்துக்களை சொன்னாரோ, அதையே தன்னுடைய வாழ்க்கையின் இறுதி வரை கடைபிடித்து வந்தார். அதனால் மக்கள் திலகம் மறைந்து 33 ஆண்டுகள் ஆன பின்பும் மக்கள் இன்னும் அவரை மறக்காமல் தங்கள் நெஞ்சில் வைத்து பூஜித்து வருகின்றனர்.
சின்னஞ்சிறிய வயதிலேயே அவர்களை நல்வழிப்படுத்துவதற்காகவே, எம்.ஜி.ஆர் தான் முதன் முறையாக நடித்த சமூக சீர்திருத்த படமான, திருடாதே படத்தில் இடம் பெற்ற
திருடாதே பாப்பா திருடாதே, வறுமை நிலைக்கு பயந்துவிடாதே,
திறமை இருக்கு மறந்துவிடாதே
என்று அறிவுரை சொல்லி இருக்கிறார்.
நாம் சிறுவர்களாக இருக்கும்போது நம்மை பயமுறத்துவதற்காகவே பேய் பிசாசு பற்றி பயமுறுத்தி வைப்பார்கள் பெரியவர்கள். ஆனால் பேய் பிசாசு எதுவும் கிடையாது என்று சொல்வதற்காகவே அரசிளங்குமரி திரைப்படத்தில் சின்னப்பயலே சின்னப்பயலே சேதி கேளடா என்று தொடங்கும் பாடலில்
வேப்பமர உச்சியில் நின்னு பேயொன்னு ஆடுதுன்னு
விளையாடப்போகும்போது சொல்லி வைப்பாங்க
உன் வீரத்தை கொழுந்திலேயே கிள்ளி வைப்பாங்க
வேலையற்ற வீணர்களின் மூளையற்ற வார்த்தைகளை
வேடிக்கையாகக் கூட நம்பிவிடாதே
வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பிவிடாதே
என்று சிறுவயதிலேயே அவர்களுக்கு நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அளிக்கும் வகையில் பாடியுள்ளார்.
அது மாதிரியே வருங்கால இந்தியா மாணவர்களை நம்பியே உள்ளது என்பதை சொல்லும் வகையில் நம் நாடு படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.
நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே
நம் நாடு என்னும் தோட்டத்திலே நாளை மலரும் முல்லைகளே
என்று பாடியுள்ளார்
மேலும், பெற்றால் தான் பிள்ளையா படத்தில் இடம் பெற்றுள்ள பாடல் சிறுவர்களுக்கு அறிவுரை சொல்லும் பாடலாக அமைந்திருக்கும்.
நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி
இந்த நாடே இருக்குது தம்பி
சின்னஞ்சிறு கைகளை நம்பி
ஒரு சரித்திரம் இருக்குது தம்பி
அன்னையிடம் நீ அன்பை வாங்கலாம்
தந்தையிடம் நீ அறிவை வாங்கலாம்
இரண்டும் இருந்தால் பேரை வாங்கலாம்
பேரை வாங்கினால் ஊரை வாங்கலாம்
கடமை இருந்தால் வீரனாகலாம்
கருணை இருந்தால் வள்ளலாகலாம்
பொறுமை இருந்தால் மனிதனாகலாம்
மூன்றும் இருந்தால் தலைவனாகலாம்.... இந்த மூன்றும் இருந்தால் தலைவனாகலாம்,
என்று நாட்டுக்கு தலைவனாவதற்கு என்னென்ன தகுதிகள் நமக்கு வேண்டும் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.
அதே போல், ஒரு மனிதன் தன்னுடைய கடமை, பொறுப்பை உணர்ந்து நடக்காமல், தான் தோன்றித்தனமாக திரிபவர்களுக்காகவே பணம் படைத்தவன் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.
கண் போன போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உள்ளங்கள் வாழ்தென்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.
இந்த பாடலில் இடம்பெற்ற வரிகளைப் போலவே, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், மறைந்து 33 ஆண்டுகள் கடந்துவிட்டாலும் இந்த பூமி உள்ள வரை இன்னும் நம்மிடையே அவர் வாழ்ந்துகொண்டு இருப்பார் என்றால்,
அது மிகையாகாது... வெறும் பாடலை பாடியதோடு நிற்காமல், தன்னுடைய நிஜ வாழ்க்கையிலும் அதையோ கடைபிடித்து வந்தார் என்பது யாரும் சொல்லித் தெரியவேண்டியதில்லை...
புரட்சி தலைவர் புகழ் ஓங்குக...
அன்புடன்
படப்பை
ஆர்.டி.பாபு...
-
நண்பர்களே! அதிசயம்,அற்புதமான நிகழ்வுகள் நடக்கிறது பாருங்கள்!!
எம்.ஜி.ஆர் கொடுத்த இரட்டை இலை கட்சியை எதிர்த்து, எதிர்க்கட்சியாக களம் காண்கிறார் ஸ்டாலின். அவர் தனது எதிர்க்கட்சி ஸ்தாபகர் எம்.ஜி.ஆர் படம் காட்டி அவர் தனக்கு நெருக்கம் என்று படம் காண்பித்து வோட்டு கேட்கிறார்.உலகத்தில் இந்தமாதிரி எதிர்க்கட்சி தலைவர் எனக்கு நெருக்கம் என்று வோட்டு வேட்டையாடும் விந்தையை யாரேனும் கேட்டதுண்டா? யாரேனும் கண்டதுண்டா ? இந்த விந்தையிலும் எம்.ஜி.ஆரின் புகழ் தான் மேலோங்கி இருக்கிறது.
அன்று தந்தை கலைஞர் 1984ல் செய்த அதே தகிடு தத்தம் வேலையை இன்று மகன் செய்கிறார்.அன்று 1984ல் கருணாநிதி என்ன சொன்னார்.?!நீங்கள் எனக்கு வோட்டு போடுங்கள்.எம்.ஜி.ஆர்., எனக்கு தோழர்.அவர் அமெரிக்காவில் இருந்து சுகம் பெற்று வந்தவுடன் அவரிடம் ஆட்சியை ஒப்படைக்கிறேன் என்று.
அப்பாவும் பிள்ளையும் எம்.ஜி.ஆர் வோட்டு வங்கி அவர்களுக்கு வேண்டுமாம்.
ஆக நமது நண்பர்களே
தலைவர் எம்.ஜி.ஆரின் புகழ் ஓங்கி ஒலித்துக்கொண்டிருக்கிறது !!!...nssm.........
-
உழைத்து பிழைக்கும் ஒருவன் காட்டில் மரம்வெட்டும் போது தன் இரும்புக்கோடாலியை பக்கத்தில் இருக்கும் ஆற்றில் தவறவிட்ட கதை அனைவரும் அறிவோம். ஒரு தேவதை வந்து தங்கக் கோடாலியை
எடுத்து வந்து இதோ கிடைத்து விட்டது என்று கூற இது உன்னுடையதா? என்று கேட்க, இல்லை என்று அவன் கூற அடுத்து வெள்ளி கோடாலி, மூன்றாவதாக இரும்பு கோடாலியை கொடுக்க, ஆம் இதுதான் என்னுடையது என்று அவன் பெற்றுக் கொள்ள அவனுடைய நேர்மையை பாராட்டி மூன்று கோடாலியையும் அவனுக்கு தேவதை பரிசாக அளித்து விட்டு சென்றது.
இதை கேள்விபட்ட பக்கத்து வீட்டில் உள்ள உலோபி தானும் துருப்பிடித்த இரும்பு கோடாலியை தூக்கிக் கொண்டு சீட்டியடித்துக் கொண்டு காட்டுக்கு கிளம்பி விட்டான். ஒரு மரத்தை கூட வெட்டவில்லை. அந்த துருப்பிடித்த இரும்புக் கோடாலியை எடுத்து நேரடியாகவே ஆற்றில் போட்டு விட்டு
தேவதைக்காக காத்திருந்தான். தேவதையும் வந்தது. தேவதையிடம் கோடாலி விழுந்த கதையை சொன்னான். உடனே தேவதை தங்கக் கோடாலியை காண்பித்து இது உன்னுடையதா, பார் என்றது. ஆமாம் இது என்னுடையதுதான் என்று சொல்லி விட்டு தேவதையை திரும்பி பார்க்காமலே தங்கக் கோடாலியை தூக்கிக் கொண்டு ஓடினான்.
ஆனால் கோடாலி உடனே அவனிடமிருந்து மறைந்து விட்டது. ஆனால் முதலாமவன் கொண்டு சென்ற தங்கக் கோடாலியால் நிலைத்த செல்வம் இன்று வரை உயிர்ப்போடு இருப்பதை நாமும் பார்க்கலாம். இதிலிருக்கிற உண்மை தத்துவத்தை உணரும் அளவுக்கு கைஸ்களுக்கு அறிவு பத்துமோ பத்தாதோ தெரியவில்லை. அதற்குபின் நிறைய உலோபிகளும் பேராசைகாரர்களும் முயற்சி செய்து பார்த்தும் இன்று வரை தங்கக் கோடாலி யாருக்கும் கிடைக்கவில்லை என்பதே உண்மை நிலை.
1952 லிருந்து நடிக்க ஆரம்பித்த அய்யனின் கைஸ்களுக்கு டிக்கெட் கிழிக்க பழகாததால் ஆரம்ப கால அய்யனின் படங்கள் 100 நாட்கள் ஓடவில்லை. "நாடோடி மன்னனி"ன் புழுதியை கிளப்பிய வெற்றிக்குப் பின்தான் அய்யனுக்கும் கைஸ்களுக்கும் டிக்கெட் கிழிக்கும் ஆர்வம் உண்டாயிற்று எனலாம். அய்யன் நடித்த முதல் 50 படங்களில் ஒரு 5 அல்லது 6 படங்கள்தான் ஓரளவு வெற்றி பெற்றது.
"தூக்கு தூக்கி", "மக்களை பெற்ற மகராசி" போன்ற 5,6 படங்களை தவிர "உத்தம புத்திரன்" உட்பட பல படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. 1959 ல் வெளியான "கட்டபொம்மனை" டிக்கெட் கிழித்து ஓட்டியதிலிருந்து கைஸ்கள் டிக்கெட் கிழிக்க பழகி விட்டனர். அது இன்றுவரை தொடர்கிறது. டிக்கெட் கிழித்த கரங்கள் இன்றுவரை ஓயவில்லை. 1954 ல் வெளியான "மலைக்கள்ளன்" மீண்டும் ஒரு பிளாக்பஸ்டர் வெற்றியை பதிவு செய்தது. புரட்சிகரமான நடிப்போடு ஜனரஞ்சகமான நடிப்பையும் வெளிப்படுத்தி ஜனாதிபதியின் வெள்ளி பதக்கத்தையும் வெற்றி கொண்ட பெருமை புரட்சி நடிகரையே சாரும்.
1955 ல் வெளியான "குலேபகாவலி" அடுத்த பிளாக்பஸ்டர்.
அந்த படத்தின் மீதுள்ள ஆர்வம் இன்றுவரை சாதாரண மக்களுக்கு தொடர்கிறது. 1956 ல் வெளியான மூன்று படங்களுமே பிளாக்பஸ்டர் என்றாலும் "மதுரைவீரன்" இன்று வரை கைஸ்களின் கனவில் 31 தியேட்டர்களும் வந்து மிரட்டுவது தொடர்கதையாக மாறி விட்டது.
1957 ல் "சக்கரவர்த்தி திருமகள்" அந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் ஆனது.
1958 என்றாலே கைஸ்களுக்கு குளிர் ஜீரம் வந்து விடும் "நாடோடி மன்னனை" நினைத்து. "நாடோடி மன்னனி"ன் அபரிமிதமான வெற்றியை முறியடிக்க 7 ஆண்டுகள் ஆனது. அதுவும் மக்கள் திலகத்தின் "எங்க வீட்டுப் பிள்ளை" வந்துதான் முறியடித்தது. இப்படியிருக்க ஆட்டம் போடும் கைஸ்களின் ஆணவம் இன்னமும் குறைந்தபாடில்லை..........ksr.........
-
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களை பொருத்தவரை தன்னை வைத்து படம் எடுப்பபவர்களுக்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் அதைத் தன்னுடைய சொந்தப் பிரச்சனையாக எடுத்துக் கொண்டு அதை சரி செய்து படத்தையும் நல்லமுறையில் எடுத்துக் கொடுத்து வியாபாரத்திற்கும் பொறுப்பேற்று படத்தை வெளியிடுகின்ற வரையிலும் முக்கிய பங்கு வகிப்பார். சினி தரவரிசை பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த தமிழ் சினிமா பாடல்கள் 2019-ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகமான பிரபல நடிகைகள் 2019 இல் ரசிகர்களால் அதிகம் கிண்டல் செய்யப்பட்ட தமிழ் திரைப்படங்கள் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் திரைப்படங்கள் ரஜினியின் சிறந்த அறிமுக பாடல்கள் 2021 கோடைகாலத்தில் வெளியாகும் தமிழ் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியான தல - தளபதி படங்கள் : பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் பிக் பாஸ் தமிழ் வெற்றியாளர்களின் முழு விவரங்கள் 2020ஆம் ஆண்டின் சிறந்த தமிழ் திரைப்பாடல்கள் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த தமிழ் சினிமா பாடல்கள் 2019-ஆம் ஆண்டு தமிழ் திரையுலகில் அறிமுகமான பிரபல நடிகைகள் 2019 இல் ரசிகர்களால் அதிகம் கிண்டல் செய்யப்பட்ட தமிழ் திரைப்படங்கள் 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் திரைப்படங்கள் ரஜினியின் சிறந்த அறிமுக பாடல்கள் 2021 கோடைகாலத்தில் வெளியாகும் தமிழ் முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் வெளியான தல - தளபதி படங்கள் : பாக்ஸ் ஆபீஸ் ரிப்போர்ட் பிக் பாஸ் தமிழ் வெற்றியாளர்களின் முழு விவரங்கள் 2020ஆம் ஆண்டின் சிறந்த தமிழ் திரைப்பாடல்கள் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடிய சிறந்த தமிழ் சினிமா பாடல்கள் PrevNext அப்படித் தான் நடிகை கண்ணாம்பா எம்.ஜி.ஆரை வைத்து தயாரித்த 'தாலிபாக்கியம்' படத்திற்கு அவுட்டோரில் ஒரு பிரச்சனை வந்தது. அதையும் தனது சொந்தப் பிரச்சனையாக எடுத்து தீர்த்துக் கொடுத்தார். நடிகை கண்ணாம்பா எம்.கே-. தியாகராஜ பாகவதருக்கும் (அசோக்குமார்) பி.யூ. சின்னப்பாவிற்கும் (கண்ணகி) ஜோடியாக நடித்தவர். எம்.ஜி.ஆர். அவர்களுக்கும் (தாய்க்கு பின் தாரம், தாய் சொல்லைத் தட்டாதே) சிவாஜி அவர்களுக்கும் (உத்தமபுரத்திரன், மனோகரா) அம்மாவாக நடித்தவர். இவர் எம்.ஜி.ஆரை கதாநாயகனாக நடிக்க வைத்து, 'தாலிபாக்கியம்' என்று சொந்தமாக ஒரு படத்தை தயாரித்தார். இதில் சரோஜா தேவி, எம்.என்.ராஜம், எஸ்.வி.சுப்பையா, எம்.என். நம்பியார் ஆகியோர் நடித்தார்கள். இந்தப் படத்திற்கான வசனத்தை ஆரூர்தாஸ் எழுதியிருந்தார். இசையை கே.வி. மகாதேவன் அமைத்தார். இந்தப் படத்திற்கு டைரக்டராக முதலில் எம்.ஏ.திருமுகத்தை போட்டார்கள். ஆனால் கண்ணாம்பாவின் கணவர் கே.பி. நாகபூஷணம் தங்களது சொந்தப்படம் என்பதால் தானே இந்தப் படத்தை இயக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்துவிட்டார். அதனால 'தாலிபாக்கியம்' படத்தை கே.பி.நாகபூஷணம் தான் இயக்கினார். இந்தப் படத்தை கண்ணாம்பா எம்.கே. தியாகராஜ பாகவதருடன் ஜோடியாக நடித்த அசோக்குமார் படத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கினார்கள். ஒரு வயதானவர் (எஸ்.வி.சுப்பையா) தனக்கு இரண்டாந் தாரமாக ஒரு பெண்ணைப் (எம்.என்.ராஜம்) பார்த்து திருமணம் செய்துக் கொள்ள ஏற்பாடுகள் செய்கிறார். அதற்காக தனது பக்கத்து வீட்டிலிருக்கும் இளைஞன் (எம்.ஜி.ஆர்.) ஒருவரை உடன் அழைத்துச் செல்கிறார். அங்கே மணப்பெண் உடன் வந்த இளைஞன் தான் மாப்பிள்ளை என்று நினைத்து திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கிறார். திருமண நாளும் வந்தது. தாலிகட்டும் போது தான் தெரிய வருகிறது மாப்பிள்ளை இளைஞனில்லை கிழவர் தான் என்று. அவளால் மறுக்க முடியவில்லை ஊருக்காக கிழவனையும், உள்ளத்தில் இளைஞனையும் கணவனாக ஏற்றுக் கொள்கிறாள். அதற்காக அவர்களது குடும்பத்தில் சூழ்ச்சிகளை செய்கிறாள். அதனால் பலவிதமான பிரச்சனைகள் உருவாகிறது. இளைஞனுக்கும் மற்றொரு பெண்ணுக்கும் இருந்து வந்த காதலிலும் பிரச்சனைகள் தலை தூக்குகிறது. இப்படி போகிறது இந்த படத்தின் திரைக்கதை. 'தாலிபாக்கியம்' படத்திற்கான அவுட்டோர் படப்பிடிப்பு கர்நாடகாவில் உள்ள முக்கிய பகுதிகளில் நடந்துக் கொண்டிருந்தது. அவுட்டோரில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள், நடிகர், நடிகையர்கள் கலந்து கொண்டனர். எம்.ஜி.ஆர், சரோஜா தேவி சம்பந்தபட்ட காதல் காட்சிகள், எம்.ஜி.ஆர்., எம்.என்.ராஜம் சம்பந்தட்ட மோதல் காட்சிகள், எம்.ஜி.ஆர், எம்.என். நம்பியார் சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சிகள் வேகமாக படமாக்கப்பபட்டன. ஒரு நாள் இதே போன்று படப்பிடிப்பு நடந்து முடிந்து அனைவருக்கும் சம்பளமும், பேட்டாவும் கொடுப்பதற்கு ஏற்பாடுகள் செய்தார்கள். அப்பொழுது தான் தெரிய வந்தது தயாரிப்பாளர் தரப்பில் மொத்த படப்பிடிப்பிற்காக கொண்டு வந்த பணம் திருடு போயிருப்பது. தயாரிப்பாளர் கண்ணாம்பா, அவரது கணவர் கே.பி.நாகபூஷணம் அவுட்டோரில் வந்து மாட்டிக் கொண்டோம் என்று அதிர்ச்சியடைந்தார்கள். படப்பிடிப்பபு குழுவினரால் பணம் திருட்டு போன விஷயம் பரபரப்பாக பேசப்பட்டது. யார் யாரையோ விசாரித்துப் பார்த்தார்கள். திருட்டுப் போன பணம் திரும்பி வரவேயில்லை. இப்பொழுது என்ன செய்வது, தொடர்ந்து படப்பிடிப்பை நடத்துவதா? கேன்சல் செய்துவிட்டு ஊருக்கு கிளம்புவதா? அப்படி ஊருக்கு போவதாக இருந்தாலும் அவர்களுக்கு தர வேண்டிய பணத்தை செட்டில் செய்யாமல் எப்படி போவது?- இடிந்து போய் உட்கார்ந்துவிட்டார்கள் இருவரும். இந்தச் செய்தி பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆரின் காதுகளுக்குச் சென்றது. தொழிலாளர்களும், நடிகர் நடிகையர்களும் பிரச்சனைகளை அவரிடம் கொண்டு சென்றார்கள். கண்ணாம்பாவும், அவரது கணவர் கே.பி. நாகபூஷணமும் அதிர்ச்சியில் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்துவிட்டார்கள். எம்.ஜி.ஆர் சூழ்நிலையைப் புரிந்துக் கொண்டு அனைவரையும் வரவழைத்து அமைப்படுத்தினார். தயாரிப்பாளர்களுக்கு தைரியம் சொன்னார். படப்பிடிப்பு நிற்க வேண்டாம் அவுட்டோர் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடக்கட்டும். எல்லாப் பிரச்சனைகளையும் நான் பார்த்துக் கொள்கிறேன் பணத்திற்கும் ஏற்பாடு செய்கிறேன் என்றார். எம்.ஜி.ஆர் உடனடியாக பணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தார். தமிழ்நாட்டிலுள்ளள சத்தியா ஸ்டுடியோவிற்கு டிரங்க்கால் போட்டு எம்.ஜி.ஆர். பிக்சர்ஸ் குஞ்சப்பனிடம் பேசினார். படப்பிடிப்பிற்கான தொகை ரூபாய் ஐந்து லட்சத்தை உடனடியாக கொண்டு வரச் சொன்னார். கேட்ட பணம் முழுவதும் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கே வந்து சேர்ந்தது. அனைவருக்கும் சம்பளமும், பேட்டாவும் கொடுக்கப்பட்டது. திட்டமிட்டப்படி அவுட்டோர் படப்பிடிப்பு முழுவதும் நடந்து முடிந்தது. 'தாலிபாக்கியம்' படத்தின் தயாரிப்பாளர் கண்ணாம்பா எம்.ஜி.ஆர். அவர்களுக்கு தனிப்பபட்ட முறையில் சந்தித்து நன்றி சொன்னார். படம் எடுக்க கால்ஷீட்டும் கொடுத்து படப்பிடிப்பில் பிரச்சனை வந்ததால் பணமும் கொடுத்து எனக்கு எந்தப் பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொண்டீர்கள் என்றென்றும் நன்றியோடு இருப்போம் என்றார். கண்ணாம்பா தனது இறுதி காலத்தில் தியாகராய நகரிலுள்ள தனது வீட்டை விற்க முயற்சி செய்தார். அந்த வீட்டை எம்.ஜி.ஆர். விலை கொடுத்து வாங்கிக் கொண்டார். உங்களது இறுதிகாலம் வரை நீங்கள் இந்த வீட்டில் தான் இருக்க வேண்டும் வேறு வீட்டிற்கு போகக் கூடாது என்று வேண்டுகோள் வைத்தார். கண்ணாம்பாவும் தனது கடைசிகாலம் வரை அந்த வீட்டில் தான் இருந்தார். அவர் இறந்த பிறகு தான் எம்.ஜி.ஆர். அந்த வீட்டை பயன்படுத்திக்கொள்ள ஏற்பாடுகள் செய்தார்.
Read more at: [https://tamil.filmibeat.com/news/nen...html)...Baabaa
-
ஓட்டுப் போட மாட்டோம்???!!!
-------------------------------------
எம்.ஜி.ஆர்., சந்தித்த அந்தத் தேர்தல்--
இரப்போர்க்கும்,,எதிரியாகி மறப்போர்க்கும்--
கொடுத்தபடி இருந்த எம்.ஜி.ஆரைக்
கெடுத்த படிப் பேசி,,தான் ஜெயிக்க வேண்டுகோள்
விடுத்தபடி வீதி வீதியாய் அலைந்த கருணா நிதி
அடுத்தபடி முதல்வர் தாமே என் அகம்கிழ்ந்தாலும்
படுத்த படிப் பறங்கி மலையார் வெற்றி மாலையை
தொடுத்த படி எம்.ஜி.ஆர் இந்தியா திரும்பிய--
1984 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தல்
எம்.ஜி.ஆர் மேலுள்ளப் பற்றினால் தேர்தல் விதியே ஓரிடத்தில் மாறிய சம்பவத்தைத் தான் இன்று பார்க்கப் போகிறோம்!
திருச்செந்தூர் பாராளுமன்றத்துக்கும்,,சேரன் மா தேவி சட்டமன்றத்துக்கும் அன்றைக்கு வாக்குப் பதிவு
திருச்செந்தூர் எம்.பிக்கு தனுஷ்கோடி ஆதித்தனும்-
சேரன் மா தேவி எம்.எல்.ஏவுக்கு பி.எச்-பாண்டியனும் போட்டியிடுகிறார்கள்.!
கல்லிடக் குறிச்சியில் திலகர் வித்தியாலயா உள்ளிட்ட பத்து பூத்துகளில் காலையிலிருந்தே மக்கள் ஓட்டுப் போட குவிந்தவர்கள் வாக்களிக்க மறுக்கிறார்கள்??
அத்தனைக் கட்சி ஏஜெண்டுகளும் சமாதானம் சொல்லியும் மக்கள் ஏற்பதாயில்லை?
அப்படி என்ன அவர்களுக்குப் பிரச்சனை??
முதலில் பாராளுமன்றத்துக்கான ஓட்டைப் போட்டு விட்டு பிறகு சட்டமன்றத்துக்குப் போட வேண்டும்!
மரபே அது தான்!
இங்கே தான் மக்கள் வேறுபடுகிறார்கள்?
எங்க எம்.ஜி.ஆருக்கு இரட்டை இலையில முதலில் போட்டுட்டு,,அப்புறமா எம்.பி.க்கான ஓட்டப் போடறோம்??
தேர்தல் விதி அப்படி இல்லேங்க--அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் கெஞ்சாதக் குறையாய் சொல்ல--
எங்களுக்கும் விதி பத்தித் தெரியுமுங்க. ஆனால் எங்க மவராசனுக்கு முதலிடம் கொடுக்க நாங்க விரும்பறோம்!
நீங்க மறுத்தா--
எம்.பி.க்கான காகிதத்தை அப்படியே பொட்டிலே போட்டுட்டு அப்புறம் இரட்டை இலைக்கு ஓட்டுப் போடறோம்?? மக்கள் கொஞ்சங்கூட
தாட்சண்யம் காட்டாது தீட்சண்யமாகக் கூற--
பதினோரு மணி வரைக்கும் இப்படியே நேரம் போக--
வேறு வழியின்றி,,அனைத்துக் கட்சி ஏஜண்டுகளும் தங்களுக்குள் கலந்து பேசி அந்தக் குறிப்பிட்ட பூத்துகளில் மட்டும்,,மக்கள் விருப்பத்துக்கு ஏற்ப வாக்களிக்க வகை செய்ய வேண்டியக் கட்டாயம்???
தருகின்ற வெற்றியில் மட்டுமல்லாது ஓட்டைப் பெறுகின்ற வரிசையிலும் --
முதலாவது இடம் எங்கள் எம்.ஜி.ஆருக்கே!--இப்படி-
தமிழகத்தில்,,--இல்லை இந்தியாவில்-,,-இல்லையில்லை உலகத்திலேயே எந்த ஒரு தலைவனுக்காகவாவது நடந்திருக்குமா???இல்லை இனி நடக்குமா???!!!.........vtr.........
-
மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலும்
என் பேச்சிருக்கும்..
உள்ளம் என்றொரு ஊர் இருக்கும்
அந்த ஊருக்குள் எனக்கொரு பேர் இருக்கும்...
*****************************************
மாபெரும் சபைகளில் நீ நடந்தால்
உனக்கு மாலைகள் விழ வேண்டும்
ஒரு மாசு குறையாத மன்னன் நீ என்று
உலகம் உன்னை போற்றி வணங்க வேண்டும்..
******************************************
வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி
மக்களின் மனதில் நிற்பவர் யார்..?
மாபெரும் வீரம் மானம் காத்தோர்
சரித்திரம் தனிலே நிற்கின்றார்....
இப்படி எந்த வரிகளை எழுதினாலும், அந்த வரிகளுள் குணத்தாலும் மனத்தாலும் அடங்கிபோகும் ஒரே திலகம் மக்கள் திலகம் மட்டுமே. வறுமைக் கோட்டில் அல்லல்பட்டு, துன்பத்தின் பிடியில் இன்னல்பட்டு, கலையில் உச்சாணம் அடைய அயார உழைக்கபட்டு, மக்களின் துயர் போக்க அரியணை ஏறபட்டு, அரசியல் சாசனத்தில் சரித்திரம் படைக்கப்பட்டு,
ஈழமக்களின் விடுதலைக்கு பாடுபட்டு, மூன்றெழுத்து கொண்டு உலக மக்களால் ஈர்க்கபட்டு, புரட்சித் தலைவா என்று அழைக்கபட்டு, இறுதியில் யாருக்கும் சொல்லாமல் மூச்சைவிட்டு மக்களை தவிக்க விட்டுசென்றார் இந்த இதயதெய்வம். இன்று நம்மிடையே அவர் இல்லை என்றாலும், கசிந்துருகும் கண்களின் கண்ணீராய், பாடல்களின் பிம்பமாய், சொல்லிய சொல்லின் சித்தராய், அன்பின் புத்தராய், அவர் தெய்வமாக நினக்கும் மக்களின் உள்ளத்தில் என்றும் மங்காத ஒளிவிளக்காய் வாழ்ந்தும் கொண்டே இருக்கிறார்..இருப்பார்..!......Baabaa
-
#கேமராவையும் #தாண்டிய #கண்கள்
மக்கள்திலகம், பள்ளி ஒன்றின் விழாவில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்தார். மாணவர்களுக்கு மக்கள்திலகத்துடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள விருப்பம். ஆனால் தலைமை ஆசிரியரின் கண்டிப்புக்குப் பயந்து அமைதியாக இருந்தனர்... மாணவர்களின் எண்ணத்தைப் புரிந்துகொண்ட மக்கள்திலகம், தன்னுடன் புகைப்படமெடுக்க பேட்ச் பேட்சாக அனுமதி வாங்குகிறார்...
முதலில் சில மாணவர்களுடன் எம்ஜிஆரை வைத்து புகைப்படமெடுக்கிறார் போட்டோகிராபர்...
எம்ஜிஆர், போட்டோகிராபரிடம், 'இப்ப நீங்க எடுத்த போட்டோ சரியா வரல...இன்னொரு போட்டோ எடுங்க...' என்கிறார்...இன்னொரு போட்டோவும் எடுக்கப்பட்டது...
ஆனால்,
போட்டோகிராபருக்கு வியப்பு....'பார்க்காமலேயே சரியா வரலைன்னு சொல்றாரு...!!!'
போட்டோக்களைப் ப்ரிண்ட் போட்ட அந்த போட்டோகிராபருக்கு ஆச்சரியத்திலும் ஆச்சரியம்...முதலில் எடுக்கப்பட்ட போட்டோவில், 'எம்ஜிஆரின் முகமே விழாமல் கழுத்துதான் தெரிந்தது...!'
அந்த போட்டோகிராபர் வியப்பின் உச்சிக்கே போய்விட்டார்...
ஒரு புகைப்படம் எடுக்கப்படும்போதே, அது எடுக்கப்படும் கோணத்தை வைத்து, 'அந்தப்படம் சரியாக வராது...' என்று உறுதியாகச் சொல்லுவதென்பது சாதாரண விஷயமா என்ன?
அதற்கு எவ்வளவு அபார ஆற்றல்!!!
எந்தளவு நுணுக்கமான தொழில்நுட்ப அறிவு இருக்கணும்...!!!
வாத்தியார்னா சும்மாவா!!!.........bsm...
-
புரட்சித் தலைவரால் எனக்கு கிடைத்த
மதிப்பிற்குரிய அண்ணன் திரை உலகம்
துரைராஜ் மகன் பொன்ராஜ் :
1962 ஆம் ஆண்டு பேரறிஞர் அண்ணாவால்
தொடங்கி வைக்கப்பட்டது திரை உலகம் பத்திரிக்கை.அதன் ஆசிரியர் மதிப்பிற்குரிய
ஜி.கே துரைராஜ் அவர்கள் புரட்சித் தலைவரின் அதி தீவிர அபிமானி.புரட்சித் தலைவர் மறையும்வரை திரை உலகம் பத்திரிக்கையை வெற்றிகரமாக நடத்தியவர்.
அதன் பிறகு எத்தனை பேரோ வற்புறுத்தியும்
புரட்சித் தலைவரை எழுதிய கைகள் வேறு எவரையும் எழுதாது என்று தீர்க்கமாக சொல்லிவிட்டார்.அப்பேற்பட்ட நல்லவரின் புதல்வர் என் மதிப்பிற்குரிய அண்ணன் துரை.பொன்ராஜ் அவர்களின் நட்பு சில நாட்களுக்கு முன் கிடைத்தது.அவருடைய அன்பு என்னை நெகிழச் செய்து விட்டது.மிகவும் இயல்பாக எளிமையான அன்பே உருவான வார்த்தைகளால் என்னிடம் உரையாடி அவர் அன்பால் என்னை கட்டிப்போட்டு விட்டார்.அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய அய்யா திரை உலகம் துரைராஜ் அவர்களின் எழுத்து புரட்சித் தலைவரின் புகழுக்கு ஒரு மைல்கல்லாக அமைந்தது.அவருடைய குடும்பத்தின் புதல்வர் எனக்கு அன்பான அண்ணணாக அமைத்துக் கொடுத்த புரட்சித் தலைவருக்கு
என் வணக்கங்கள்!!
புரட்சித் தலைவர் புகழின் ஏணியில் இருந்தபோதும் தனக்காக எந்த பெரிய எதிர்பார்ப்புகளையும் அவரிடம் கோரிக்கை வைக்காமல் புரட்சித் தலைவர் அன்பே போதும் என வாழ்ந்த அந்த தன்னலமற்ற
நல்லவரின் குடும்பத்திற்கு புரட்சித் தலைவரின் பக்தன் என்ற முறையில் ஒரு
சல்யூட்.....
-
தாங்கள் கருத்துகள் உண்மையானவை....... உண்மையிலேயே நடந்து முடிந்தவை .......அதுமட்டுமல்ல அந்த பத்திரிக்கையாளர் என்று கிடையாது துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் புரட்சித்தலைவரின் மிக நெருங்கிய நண்பர் ஆவார் .......புனிதமான நட்பு அவர்களுக்கிடையே உண்டு ........ஆனாலும் துக்ளக் பாத இதழில் புரட்சித் தலைவர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் 1983-ம் ஆண்டு முதல் நான் அப்பொழுது மேல்நிலைப்பள்ளி இரண்டாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன்....... ஒவ்வொரு மாதமும் துக்ளக் பத்திரிக்கை வாங்கி படிப்பேன் .....ஏனென்றால் என் தந்தையார் துக்ளக் பத்திரிக்கை என்றால் மிகவும் உயிர் .......மிகவும் ஆர்வமாக ஒரு எழுத்து விடாமல் படிப்பார்....... எனது தகப்பனாருக்கு துக்ளக் ஆசிரியர் சோ அவர்களை மிகவும் பிடிக்கும் .........எல்லாம் ஒரு ஜாதி பாசம் தான்......... 1986ஆம் ஆண்டு துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் புரட்சி கீதை என்ற பெயரில் தனது துக்ளக் பத்திரிகையில் ஒவ்வொரு மாதமும் ஒரு கட்டுரை எழுதுவார் நமது பொன்மனச்செம்மல் அவர்களை செய்யாத கேலி கிடையாது ........பண்ணாத கிண்டல் கிடையாது......... புரட்சித் தலைவர் அவர்களின் ஆட்சியை பற்றி கடுமையாக விமர்சித்தார் ........பகவான் கிருஷ்ணர் கீதையில் அர்ஜுனனுக்கு உபதேசிப்பது போல ஒரு தொண்டனுக்கு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் உபதேசிப்பது போல அந்த புரட்சி கீதை அமைந்திருக்கும் ............ஒருவகையில் பார்த்தால் துக்ளக் ஆசிரியர் அவர்களின் நகைச்சுவை மனப்பான்மை பாராட்டுக்குரியது........... என்றாலும் புரட்சித்தலைவர் அவர்களைத்தானா அப்படியெல்லாம் விமர்சிக்கவேண்டும்........ கூடவேகூடாது........ புரட்சித்தலைவர். அல்லாமல் வேறு ஒருவர் முதலமைச்சராக இருந்திருந்தால் நடந்திருப்பதே வேறு .........புரட்சித் தலைவர் அவர்கள் பெருந்தன்மையுடன் சகிப்புத்தன்மையுடன் அகழ்வாரை தாங்கும் நிலம் போல தம்மை இகழ்வாரை பொறுத்துக் கொண்டார் .........அது அவரின் பெருந்தன்மைக்கு அடையாளமாகவும் திகழ்ந்தது ...........அது மட்டுமல்ல ஒரு காலத்தில் தன்னை படுகொலை செய்ய முயற்சித்த அந்த தீய சக்தியை அவர் பதவிக்கு வந்தபிறகு பழிவாங்கவே கிடையாது.......... அந்த தீய சக்தி 17 9 1979ஆம் ஆண்டு இறைவனடி சேர்ந்தது......... மிகச் சிறந்த நடிப்பு திறமை கொண்ட அந்த தீய சக்தி ஏன் அந்தக் கொடிய செயலை செய்தது ஏன் அவ்வாறு நடந்து கொண்டது என்பது தெரியவில்லை ......பொன்மனச் செம்மலின் பெருந்தன்மை உயர்ந்த மனப்பான்மைக்கு அவரின் சொந்த வாழ்வில் எத்தனையோ உதாரணங்களைக் கூற முடியும்....... பொன்மனச்செம்மல் அவர்களின் உயர்ந்த வரலாற்று சம்பவங்களை தொடர்ந்து முகநூலில் பதிவு செய்யும் நெல்லை மணி அவர்கள் உண்மையில் நெல்லை மாணிக்கம் விலைமதிப்பு மிகுந்த ரத்தினம்...... புரட்சித்தலைவரின் ஆசீர்வாதத்தால் பரம்பொருளின் அருள் கடாட்சத்தால் அந்த சகோதரர் தனது சேவையை தொடர்ந்து நடத்துவார் .......நிறைய செய்திகளை இனிய சம்பவங்களை முகநூலில் பதிவு செய்யுமாறு பொன்மனச் செம்மலின் சார்பாக வேண்டிக்கொள்கிறேன்........ வாழ்க வளமுடன்...Sri.Kann
-
எம்ஜிஆர் எனக்கு பெரியப்பா.. ஸ்டாலின்
அன்பழகன் யாரு..??
நாவலர் நெடுஞ்செழியன் யாரு..??
சத்தியவாணி முத்து யாரு..??
EVKS சம்பத்..??
சாதிக்பாட்சா யாரு..??
மதியழகன் யாரு..??
இவங்க எல்லோருமே உன் அப்பா கூட இருந்தவங்க தானே.. இவங்களை எல்லாம் உறவுமுறை வச்சி இப்போ பேச வேண்டியது தானே..
அது என்ன எம்ஜிஆர் மட்டும் இப்போ பெரியப்பா வா தெரியறாரு..
உன் அப்பா கட்சியை விட்டு நீக்கனப்போ தெரியலே.. அவர் படங்களை ஓடவிடாம தடுத்த போது தெரியலே..
அவரை மலையாளத்தான், அட்டைகத்தி வீரன்.. இன்னும் சொல்ல கூடாத வார்த்தைகளில் அசிங்கமா ,கேவலமா முரசொலியில் எழுதிய போதும் அவர் பெரியப்பா ன்னு தெரியலே..
இன்னும் மூணு மாசத்துல தேர்தல் வரப்போகுது இப்போ அவர் பெரியப்பா ன்னு ஞாபகம் வந்திடுச்சி.. நீ பேசற பேச்சை எல்லாம் பத்து வயசு பையன் கேட்டா கூட அட சே.. நீ எல்லாம் ஒரு ஆளுய்யா.. கேவலம் பதவிக்காக கண்டபடி பேசி திரியறே.. இந்துக்களுக்கு நாங்க எதிரானவனங்க இல்லை ன்னு சொல்றே.. வேல் கையிலே பிடிச்சிட்டு விபூதியை வாயிலே போட்டுக்கறே.. பதவி மோகம் உன்னை எப்படி எல்லாம் ஆட்டி வைக்குது பார்த்தாயா..?? ன்னு காறி துப்புவான்..
அதுசரி.. அப்பாவுக்கு பிறகு தானே பெரியப்பா.. உன் அப்பவே அரசியலில் ஜகஜாலக்கில்லாடி ஆச்சே.. 6 தடவை முதல்வராக வேற இருந்து இருக்காரு.. அவர் போட்டோ காண்பித்து இவர் என் அப்பா நான் அவர் பிள்ளை , என் அப்பா கருணாநிதி, வல்லவரு, நல்லவரு.. அவரை மாதிரியே நானும் ஆட்சி செய்வேன் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க ன்னு கேட்க வேண்டியதுதானே..
அதை விட்டு விட்டு.. இன்னொரு கட்சியோட நிறுவனர்.. அதுமட்டுமல்லாம திமுக அழிக்கவும், ஒழிக்கவுமே அதிமுக என்கிற மாபெரும் இயக்கத்தை உருவாக்கியவர்.. அவர் போட்டோ காண்பித்து கொஞ்சம் கூட வெட்கமே இல்லாம.. எப்படி இப்படி எல்லாம் பேச முடியுது.. தலைவரே உங்களாலே ன்னு நான் கேட்கலே உங்க ஊபிஸ் கேட்பாங்க... Albert Paul
-
புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டங்கள் ஒரு சிலவற்றை மட்டும் பார்ப்போம்
இவற்றில் மூன்று இடங்களில் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பட்டங்களை அவர் ஏற்க மறுத்து விட்டார் சில காரணங்களால்
நம் இந்திய அரசால் வழங்கப்படும் பத்மஸ்ரீ விருதை யும் ஏற்க மறுத்து விட்டார் ஏன் என்றால் அதில் ஹிந்தி மொழியில் எழுதப்பட்டுள்ளது
எனது தாய் மொழியான தமிழ் மொழியின் எழுதினால் மட்டுமே அந்த விருதை நான் பெற்றுக் கொள்வேன் என்று புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் அதை வாங்க மறுத்து விட்டார்
நம் தாய் மொழியான தமிழ் மொழியின் மீது நம் புரட்சி வாத்தியார் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள் எவ்வளவு மதிப்பும் மரியாதையும் பற்றுதலும் வைத்துள்ளார் என்பதை நாம் அனைவரும் புரிந்து கொள்ளலாம்
பட்டம் கிடைக்காதா என்று ஏங்கி தவிக்கும் பலரும் இருகும் நிலையில்
தனக்கு கொடுக்கப்பட்ட பட்டங்களை தனது கொள்கையின் காரணமாக ஏற்க மறுத்து மறுத்துள்ளார் நம் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் டாக்டர் எம்ஜிஆர் அவர்கள்
வள்ளல் பெருமான் புரட்சித் தலைவா வணங்குகிறேன் இறைவா ... Sudalai Mani
-
இரங்கல் செய்தி*
-----------------------------
புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின்* மெய் காப்பாளரும் , தனி உதவியாளரும்*ஆகிய திரு. கே.பி. ராமகிருஷ்ணன் அவர்கள் இன்று பிற்பகல்*3 .15 மணியளவில்* காலமானார் என்கிற*செய்தி அறிந்து அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன் .**
அன்னாரது ஆன்மா சாந்தி அடைய* எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும் .*மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர்.* நல்லாசியும் அவருக்கு*துணை புரியட்டும் .*மறைந்த திரு.ராமகிருஷ்ணன் அவர்களின்*குடும்பத்தினர், நண்பர்கள், உறவினர்களுக்கு* ஆயிரத்தில் ஒருவன் இறைவன் எம்.ஜி.ஆர். பக்தர்கள் குழு, சென்னை*சார்பில்*ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களை யும்*தெரிவித்து*கொள்கிறோம் .
-
மக்கள் தலைவர் எம் ஜி ஆர் திரை காவியங்கள்
மறு வெளியீடு தொடர்ச்சி.........
_________
29/1/21 முதல் புளியங்குடி கண்ணாவில் எங்க வீட்டு பிள்ளை- தினசரி 4 காட்சிகள்
31/1/21 முதல் தூத்துக்குடி சத்யா வில்
பல்லாண்டு வாழ்க
தினசரி 3 காட்சிகள்
30/1/21 முதல் பழனி
சந்தான கிருஷ்ணா வில் அடிமைப்பெண்
தினசரி 4 காட்சிகள்
: தகவல் உதவி திரு. வி.ராஜா,நெல்லை.
செவ்வாய் முதல் (2/2/21) திருச்சி முருகன் அரங்கில் மக்கள் தலைவர் எம்.ஜி.ஆரின் தர்மம் தலை காக்கும் தினசரி 3 காட்சிகள் நடைபெறுகிறது
தகவல் உதவி திரு. கிருஷ்ணன், திருச்சி.
-
எம்.ஜி.ஆர் தன் படங்களிலும் நிஜ வாழ்விலும் சில பழக்க வழக்கங்களைக் கடைப்பிடித்து வந்தார். அவர் சிகரெட், மது, காபி, டீ குடிக்கமாட்டார் என்பதெல்லாம் தவிர வேறு பல குறிப்பிடத்தக்க பழக்க வழக்கங்களும் அவரிடம் இருந்தன.
உடை
எம்.ஜி.ஆர் சினிமாவிலும் நிஜ வாழ்விலும் வேட்டி கட்டும்போது வலது புறம் கரைவைத்துக் கட்டுவார். இதை அவரது அமைச்சரவை படங்களில் காணலாம். பாதம் மறையும்படி கட்டாமல் சற்று உயரே தூக்கிக் கட்டுவார். தரை பெருக்க கட்டினால் தரித்திரம் என்று அவர் அம்மா சொன்னதால் தாய் சொல்லைத் தட்டாமல் அப்படிக் கட்டினார்.
ராமாவரம் தோட்டத்தில் எம்.ஜி.ஆ ரின் உடைகளைத் துவைக்க ஒரு தனிச் சலவைக்காரர் இருந்தார். ஒரு நாளுக்கு நான்கு முறைகூட வேட்டி சட்டை மாற்றுவார். ஒரு முறை கட்டி கழற்றியதை அவர் அந்த நாளில் மறுமுறை கட்டுவதில்லை. தினமும் துவைத்த ஆடைகளையே உடுத்தினார்.
காங்கிரஸ் ஆதரவாளராக இருந்தபோது கதர் கட்டினார். கதர் உடுத்திதான் தன் முதல் மனைவி பார்கவியைத் திருமணம் செய்தார். தி.மு.க-வுக்கு மாறிய பின்பு கதர் உடுத்துவதை நிறுத்திவிட்டார். பட்டு உடுத்தத் தொடங்கினார்.
வேட்டியை மடித்துக் கட்டும் பழக்கம் எம்.ஜி.ஆருக்குக் கிடையாது. வெள்ள சேதத்தைப் பார்வையிடும்போது வேட்டியை மடித்துக் கட்டியிருப்பார். என் அண்ணன் படத்தில் காலின் காயம் தெரிய வேண்டிய காட்சியில் மட்டும் வேட்டியை மடித்துக் கட்டியிருப்பார். சண்டை காட்சிகளில் வேட்டியை தார் பாய்ச்சிக் கட்டுவார். வீட்டில் ஓய்வாக இருக்கும் வேளையில் சில்க் கைலி கட்டுவார்.
எம்.ஜி.ஆருக்குப் படங்களில் ஆடை அலங்கார நிபுணராக இருந்த எம்.ஜி.நாயுடு பின்னாளில் நாயுடு ஹால் என்ற கடையைத் தொடங்கியதாகக் கூறுவர். அவருக்குப் பல படங்களில் ஆடை அலங்கார நிபுணராக இருந்த எம்.ஏ.முத்து, தான் தைத்து தந்த சட்டையைதான் எம்.ஜி.ஆர் கடைசி வரை போட்டிருந்தார் என்று கூறும்போது எம்.ஜி.ஆர் இறந்த பிறகும் அவருக்கு அணிவித்திருந்த சட்டை எம்.ஏ.முத்து தைத்ததுதான் என்று சொல்லி மனம் நெகிழ்கிறார்.
நகை
எம்.ஜி.ஆர் வெளியே வரும்போது நகை அணியும் கையில் ஒரு வாட்ச் மட்டுமே கட்டியிருப்பார். வீட்டில் இருக்கும்போது தன் சங்கிலி மோதிரங்களை எடுத்து அணிந்துகொள்வாராம். ஆனால், படத்திலும் நிஜத்திலும் அவர் நடு விரலில் மோதிரம் அணிய மாட்டார். மற்ற நடிகர் நடிகையர் அவர் ஜோடி நடிகைகள்கூட நடு விரலில் மோதிரம் அணிவர். ஆனால், அவர் சனிவிரல் எனப்படும் அந்த நடு விரலில் நகை அணியக் கூடாது என்ற பெரியவர்கள் வாக்கை மீறுவது கிடையாது. அவர் சங்கிலியில் அவர் தாயார் படம் உள்ள பென்டண்ட் தொங்கும்.
ஏன் இவ்வளவு கனமான பெரிய வாட்ச் கட்டியிருக்கிறீர்கள் என்று ஒருவர் எம்.ஜி.ஆரிடம் கேட்டபோது, கூட்டம் அதிகமாக இருக்கும்போது கூட்டத்தை விலக்க இது ஒரு மென்மையான ஆயுதமாகப் பயன்படும் என்றார் எம்.ஜி.ஆர். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் அல்லவா?
வணக்கம்
எம்.ஜி.ஆர் இரண்டு கையையும் முகத்துக்கு நேரே கூப்பி வணக்கம் சொல்வார். பெரியவர்கள் வந்தால் எழுந்து நின்று வணங்குவார். நடிகை பானுமதிதான் அவரைச் சந்திக்க போனபோது எம்.ஜி.ஆர் எழுந்து நின்று வணங்கியதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டார். பானுமதி ஓர் அஷ்டாவதானி என்பதாலும் திரையுலகில் நடிப்பு, இசை, நடனம் பாட்டு இயக்கம் எனப் பல துறைகளிலும் திறமை பெற்றவர் என்பதால் எம்.ஜி.ஆர் அவரை எழுந்து நின்று வணங்கியிருக்கலாம்.
கறுப்புக் கண்ணாடி போட்ட காரில் பயணித்தாலும் வெளியே யாராவது இது எம்.ஜி.ஆர் கார் என்பதை அடையாளம் கண்டு வணங்கினால் இவர் உள்ளே இருந்து வணங்குவார். பொதுக்கூட்டத்தில் மேடையின் இரு புறமும் நடந்து வந்து கையை தலைக்கு மேலே உயர்த்தி சிரித்த முகத்தோடு வணங்குவார். உடனே கூட்டம் ஆரவாரிக்கும்.
கல்யாணத்துக்கு வெள்ளி டம்ளர்
பொதுவாக எம்.ஜி.ஆர் தான் செல்லும் திருமணங்களுக்கு ஆறு வெள்ளி டம்ளர் பரிசாக வழங்குவார். கணவன் மனைவி மாமியார் மாமனார் மகன் மகள் என்ற அழகான குடும்பத்துக்கு அவர் அளிக்கும் பரிசு ஆறு வெள்ளி டம்ளர்கள் ஆகும்.
கலை நிகழ்ச்சிக்குத் தங்கச் சங்கிலி
எம்.ஜி.ஆர் மேடை நிகழ்ச்சிகளுக்குத் தலைமை தாங்கினால் பெரும்பாலும் தங்கச்சங்கிலி பரிசளிப்பது வழக்கம். கங்கை அமரனின் மகன் மிருதங்க அரங்கேற்றத்துக்குப் பத்து பவுன் சங்கிலி பரிசளித்தார். ஒரு முறை பத்மா சுப்பிரமணியம் தன் மாணவியின் ஒரு நாட்டிய நிகழ்ச்சிக்கு எம்.ஜி.ஆரை தலைமை தாங்கும்படி அழைத்திருந்தார். அப்போது மேடையில் வைத்து அந்தப் பெண்ணுக்குக் கொடுக்கவிருந்த பேழையை எம்.ஜி.ஆர் திறந்து பார்க்க முயன்றார். பத்மா எம்.ஜி.ஆரை நெருங்கி அவரது காதில் அதற்குள் ஒன்றுமில்லை என்றார். உடனே எம்.ஜி.ஆர் சரி நிகழ்ச்சி தொடரட்டும் என்று சொல்லிவிட்டு தன் ஆட்களை அழைத்து ஐந்து பவுன் சங்கிலி வாங்கிவரச் சொல்லி நடனமாடிய பெண்ணுக்கு பரிசளித்தார்.
உட்காரும் ஸ்டைல்
எம்.ஜி.ஆர் எப்போதும் நேராக உட்கார்வார். ஆனால், கால் மேல் கால் போட்டு உட்காரமாட்டார். அதனால் அவர் முன்பு மற்றவர்களும் அப்படி உட்கார்வதில்லை. சிலர் தமது பழக்கம் காரணமாக அப்படி உட்கார்ந்தால் எம்.ஜி.ஆர் அதற்கு கோபிக்க மாட்டார்.
மதுரையில் உலக தமிழ்ச் சங்க அறிவிப்பு கூட்டத்தின் போது தமிழண்ணல் போன்ற தமிழறிஞர்கள் மேடையில் எம்.ஜி.ஆரோடு இருந்தனர். அப்போது மேடையில் இருந்த திருமதி ராதா தியாகராஜன் சாய்ந்தபடி கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருந்தார்.
எம்.ஜி.ஆர் முன்பு நாஞ்சில் மனோகரன் கால் மேல் கால் போட்டு உட்கார்வது குறித்து கட்சியினர் எம்.ஜி.ஆரிடம் குறைபட்டுக்கொண்ட போது ‘’அவர் பழக்கம் அப்படி இருந்துவிட்டுப் போகட்டும்’’ என்றார்.
ஒரு முறை ரசிகர்கள் பணம் கொடுத்து எம்.ஜி.ஆருடன் போட்டோ எடுத்த போது ஒருவர் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்து எம்.ஜி.ஆரின் தோள் மீது கை போட்டபடி போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். மெய்க்காப்பாளர் ராமகிருஷ்ணன் அவரது காலை கீழே எடுத்துவிட்டபோது எம்.ஜி.ஆர் ‘’வேண்டாம் அவர் காசு கொடுத்திருக்கிறார் அவர் இஷ்டப்படி உட்காரட்டும்’’ என்று கூறிவிட்டார்..........Baabaa
-
திருமணமான நடிகைகளின் திருமண வாழ்க்கை மற்ற பெண்களை போல சிறப்பாக இருக்க வேண்டும் அவர்களுக்கு குடும்பங்களில் கணவர் பிள்ளைகள் போன்றவரால் எந்த நெருக்கடியும் ஏற்பட தான் காரணமாக இருந்துவிடக் கூடாது என்பதில் எம் ஜி ஆர் கவனமாக இருந்தார். நாடோடி மன்னன் படத்தில் கத்திகுத்து பட்டு தண்ணீரில் விழுந்துகிடக்கும் பானுமதியை எம் ஜி ஆர் தூக்கிக்கொண்டு வரும் காட்சியில் நடிக்க பானுமதி மறுத்துவிட்டார். என் மகன் பரணி விவரம் தெரிந்தவன் அவன் என்னை ஒரு ஆண் தூக்கிக்கொண்டு போவதை விரும்பமாட்டான் என்று கூறிவிட்டார். ஏற்கெனவே அவர்களுக்குள் சற்று உரசல் இருந்து வந்ததால்ல் எம் ஜி ஆர் முழு பணத்துக்கான காசோலையைக் கொடுத்து இனி தன் படத்தில் நடிக்க வேண்டாம் என்று தகவல் அனுப்பினார். பானுமதியோ ஜானகி எம் ஜி ஆருக்கு ஒரு கடிதம் எழுதி அந்த செக்கை திருப்பி அனுப்பிவிட்டார்.
திருமணமான நடிகைகளுக்கு இருக்கும் நெருக்கடியை புரிந்துகொண்ட எம் ஜி ஆர் அதன்பிறகு திருமணமான நடிகைகளோடு நடிப்பதை பெரிதும் தவிர்த்துவிட்டார். அதே படத்தில் சரோஜாதேவியை அறிமுகப்படுத்தினார். அவர் திருமணம் செய்துகொண்ட பின்பு ஜெயலலிதா அதன் பிறகு லதா என தன் கதாநாயகிகளை அவர் தெரிவு செய்தார்.
தம்பி மனைவியோடு டூயட்டா?
அண்ணன் பொண்டாட்டி அரை பொண்டாட்டி, தம்பி பொண்டாட்டி தன் பொண்டாட்டி என்று சாமான்ய மக்களே சொல்லி வந்த காலத்தில் திரையுலகில் இருந்த எம் ஜி ஆர் தன் தம்பி மனைவியாக கருதிய விஜயகுமாரியுடன் ஜோடி சேர மறுத்தார். திமுகவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான எஸ் எஸ் ஆர் எனப்படும் எஸ் எஸ் ராஜேந்திரன் எம் ஜி ஆரை அண்ணன் என்று தான் அழைப்பார். அவருடன் விஜயகுமாரி தாலி கட்டிய மனைவியாக வாழாவிட்டாலும் அக்காலத்தில் இணைந்து வாழ்ந்து வந்தார். இருவரும் பல படங்களிலும் நாடகங்களிலும் ஜோடியாக நடித்து புகழ் பெற்றிருந்தனர். அப்போது ஒரு படத்தில் எம் ஜி ஆருக்கு விஜயகுமாரியை ஜோடியாக போடலாமா என்று கேட்டபோது அவர் தம்பி மனைவியுடன் ஜோடியா? என்று மறுத்துவிட்டார். நிஜ வாழ்விலும் அவர் சகோதரன் மனைவியை தாயாகவே மதித்தார். எனவே விஜயகுமாரி கணவன், காஞ்சித் தலைவன் போன்ற படங்களில் எம் ஜி ஆரின் தங்கையாக நடிக்கும் வாய்ப்பை மட்டுமே பெற்றார்
நாடகத்தில் நடிக்க நடிகையரை வெளி ஊர்களுக்கு அழைத்துச் செல்லும்போது எம் ஜி ஆர் மிகவும் கவனமாக இருப்பார். அவர்கள் வெளியில் வரக் கூடாது ரசிகர்களால் தொந்தரவு எதுவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் கவனமாக் இருப்பார். எம் ஜி ஆர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த பிறகு தான் தன் பெயரில் நாடக மன்றம் ஒன்றை தொடங்கினார். அதில் அவருக்கு ஜோடியாக ஜி சகுந்தலா நடிப்பார். அப்போது நடிகையர் கோவிலுக்கு போகவோ ஷாப்பிங் போகவோ எம் ஜி ஆர் அனுமதிக்க மாட்டார்.. அவர்களை காரில் ஏற்றி அனுப்பிய பிறகே எம் ஜி ஆர் தன் காரை எடுக்க சொல்வார்.
சினிமாவிலும் வெளிப்புற படப்பிடிப்புக்கு போகும் போது யாராவது தன் குழுவில் உள்ள பெண்களை கேலி செய்தால் அடித்து உதைத்து அந்த இட்த்தை விட்டு அவர்களை அப்புறப்படுத்திவிடுவார். நடிகை என்றால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் செய்யலாம் என்பதை அவர் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை.
எம்.ஜி.ஆர் லட்சுமி மஞ்சுளாவுடன் காஷ்மீர் நகர் வீதியில் இதயவீணைக்காகப் படப்பிடிப்பு நடத்தியபோது பொதுமக்கள் படப்பிடிப்புக்குப் பகுதிக்குள் வராமல் இருக்க கயிறு கட்டியிருந்தனர். அதையும் மீறி சில இளைஞர்கள் உள்ளே புகுந்து பெண்களிடம் சில்மிஷம் செய்தனர். எம்.ஜி.ஆர் உடனே நடிகைகளை அருகில் இருந்த கடைக்குள் தள்ளி விட்டு ஷட்டரை இழுத்துவிட்டார். அவர்கள் உள்ளே இருந்த ஒரு கண்ணாடி வழியாக வெளியே பார்த்தனர். அங்கே எம்.ஜி.ஆர் அந்தக் காலிப் பசங்களோடு மூர்க்கமாக சண்டை போட்டுக்கொண்டிருந்தார். சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் அந்த இடத்தை விட்டு ஓடிவிட்டனர். ‘எம்.ஜி.ஆர் படத்தில் வருவதைப் போலவே இந்த நிஜ சண்டை இருந்தது’ என்கிறார் லட்சுமி.
ஒரு சமயம் மைசூரில் எம்.ஜி.ஆரும் லதாவும் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டன. அப்போது படப்பிடிப்பு இடைவேளை விடப்பட்டது. எம்.ஜி.ஆர் சற்று தூரத்தில் அமர்ந்திருந்தார். அதை கவனிக்காத சில வாலிபர்கள் லதாவையும் மற்ற நடிகைகளையும் பார்த்து ஆபாசமாக பேசி சிரித்தனர். இதை கவனித்த எம்.ஜி.ஆர் விரைந்து வந்து அவர்களை அடித்து உதைத்தார். அநியாயம் நடக்கும்போது ஸ்டன்ட் நடிகர்களை அழைத்து அடிக்கச் சொல்வோம் என்று எம்.ஜி.ஆர் காத்திருக்க மாட்டார். எதிரிகள்மீது விழும் முதல் அடி அவர் அடியாகத்தான் இருக்கும். அவர்கள் தம் வாழ்நாளில் திரும்பவும் அந்தத் தப்பை செய்ய நினைக்காத அளவுக்குப் பாடம் புகட்டுவதில் அவர் ஒரு நிஜ வாத்தியார்.
வெளியூர் வெளிமாநிலம் என்றில்லை வெளி நாடாக இருந்தாலும் எம்.ஜி.ஆர் நடிகையரிடம் சில்மிஷம் செய்பவர்களை அடித்து உதைக்க தயங்கியதே இல்லை. ஜப்பானில் எஃஸ்போ 70-ல் உலகம் சுற்றும் வாலிபன் படப்பிடிப்பு நடந்த போது அங்கு ஒருவர் சந்திரகலாவை கேலி செய்தார். ‘அவரை தன் கறுப்புக் கண்ணாடி வழியாக தூரத்திலிருந்து கவனித்துவந்த எம்.ஜி.ஆர் அருகில் வந்து பட்டென்று அடித்தார். அடி வாங்கியவர் அங்கிருந்து ஓடிப் போய்விட்டார். இது வெளிநாடாயிற்றே, சட்டம் ஒழுங்குப் பிரச்னை வருமோ என்றெல்லாம் யோசித்துப் பார்க்காமல் அநியாயத்தைக் கண்டவுடன் வழக்கம் போல எம்.ஜி.ஆர் பொங்கிவிட்டார். அவர் நல்ல குணத்துக்கு எந்தப் பிரச்னையும் வரவில்லை மாறாக அடி வாங்கியவர் தன் தவறை உணர்ந்து திரும்பி வந்து மன்னிப்புக் கேட்டார். இதனால்தான் எம்.ஜி.ஆருடன் நடிக்கும்போது நாங்கள் பயமின்றி பாதுகாப்பாக உணர்வோம்’ என்கிறார் ஜி.சகுந்தலா.
நடிகைகளுக்குத் துன்பம் கொடுப்பவர் யாராக இருந்தாலும் எம்.ஜி.ஆர் அவர்களைக் கண்டிக்க தயங்கியதே இல்லை. ஓர் அமைச்சரால் தனக்குத் தொல்லை என்று முறையிட்ட ஓர் இளம் நடிகைக்கு ஆதரவாக அந்த அமைச்சரை அழைத்துக் கண்டித்தார்.
நடிகைகள் கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த எம்.ஜி.ஆர், நடிகர்கள் பெண்களிடம் தவறு செய்த போது அதைக் கண்டிக்கத் தயங்கவில்லை. ‘கல்லூரிப் பெண்களுக்கு போதை மருந்து கலந்த குளிர்பானத்தைக் கொடுத்து பாலியல் வன்முறையில் ஈடுபட்ட நடிகர் சுமன்’ மீது உரிய நடவடிக்கை எடுத்து அவருக்கு ஏழாண்டு சிறைத்தண்டனை கிடைக்கச் செய்தார். சுமனும் நடிகர்தானே என்று எம்.ஜி.ஆர் அவருக்கு இரக்கம் காட்டவில்லை வாழ்க்கை வீணாகப் போன இளம் பெண்களுக்காக எம்.ஜி.ஆர் கவலைப்பட்டார்.. நடிகன் என்றால் இளம் பெண்களை மயக்கி அவர்கள் வாழ்வைச் சீரழிக்கலாம் என்பதை எம்.ஜி.ஆர் ஏற்கவில்லை. நடிகருக்குக் கட்டுப்பாடு மிகவும் அவசியம் என்பதை அவர் உணர்ந்திருந்தார்.
எம்.ஜி.ஆர் தான் சார்ந்திருந்த திரையுலகில் நடிகையரின் கண்ணியத்தைக் காப்பதை தன் கடமையாகக் கருதினார். அவர்களுக்கு எந்தப் பிரச்னையாக இருந்தாலும் அவற்றை தன்னால் முடிந்தவரை தீர்த்துவைத்தார். இவ்வாறு எம்.ஜி.ஆர் படத்திலும் நிஜ வாழ்விலும் பெண்களிடம் கண்ணியத்தோடு நடந்து கொண்டதால் பெண்களை அவர் தாய்க்குலம் என்று அழைத்தபோது மக்கள் அதை நம்பி ஏற்றுக்கொண்டனர். எம்.ஜி.ஆர் ஆட்சியில் அரசுப் பணியாளர் முதல் பேருந்து ஓட்டுநர், நடத்துநர் வரை பெண்களைத் தாய்க்குலம் என்றே அழைத்தனர், மதித்தனர். காவல் நிலையத்திலும் பெண்கள் அளிக்கும் புகார்கள் உடனுக்குடன் கவனிக்கப்பட்டன. நடிகையருக்கும் சரி சாதாரணப் பெண்களுக்கும் சரி எங்கெங்கு அக்கிரமங்கள் நடக்கிறதோ அங்கே நான் வந்து இரட்சிப்பேன் என்று கூறிய கண்ண பரமாத்மாவாக எம்.ஜி.ஆரைக் கருதியதில் வியப்பொன்றும் இல்லை...Baabaa
-
எல்லோருக்கும் உதவுவதால் எம் ஜி ஆர் கடவுள் தான்
டாக்டர் உதயமூர்த்தி எழுதிய அமேரிக்காவில் எம் ஜி ஆர் என்ற நூலில் இருந்து
அமேரிக்கா பல்கலை கழகங்களின் அழைப்பை ஏற்று சுற்று பயணத்தை முடித்து விட்டு வாஷிங்டன் விமானநிலையத்தில் தன் அமேரிக்கா நண்பர்களுடன் நூழைகிறார் எம் ஜி ஆர் சிறிது நடந்த எம் ஜி ஆர் கண்கள் ஓரமாக நின்று சிறுகுழந்தையோடு ஒரு ஆங்கிலபெண்மணி அழுதுகொண்டிருப்பதை. கவனிக்கிறது உடனே அவர் அருகே சென்று ஆங்கிலத்தில் ஏன் அழுகிறாய் என எம் ஜி ஆர் கேட்கிறார் அமேரிக்காவை பொறுத்தவரை அதிகம் எவரும் அடுத்தவர் பிரச்சனைகளை கண்டு கொள்வதில்லை
எம் ஜி ஆர் கேட்ட உடன் அந்த பெண் தான் தன் கணவரை காண வந்ததாகவும் அவர் இங்கு ராணுவத்தில் பணி செய்வதாகவும் தான் நீண்ட தூரம் பயணம் செய்து வந்ததாகவும் இங்கு வைத்து தன் பை திருடபட்டதாகவும் தன் முக்கிய ஆவணம் பணம் எல்லாம் அதில் உள்ளது அதனால் என்ன செய்வது என்று புரியாமல் அழுவதாகவும் கூற உடனே எம் ஜி ஆர் தன் கூடவந்த செல்வாக்கு மிக்க ஒரு நண்பரை அழைத்து நீங்கள் இந்த பெண்ணிற்க்கு வேண்டிய உதவிகளை செய்யுங்கள் சிலவிற்க்கு பணமும் கொடுங்கள் நான் ஊர் சென்று அனுப்புகிறேன் என கூறிவிட்டு அந்த பெண்ணிடம் கவலை படாதீர்கள் இவர் உங்களுக்கு வேண்டிய எல்லா உதவியும் செய்வார் என கூறி விடை பெற்று விமானம் நோக்கி செல்கிறார் எம் ஜி ஆர்
இதை கவனித்து கொண்டிருந்த என் மனம் என்னை அறியாமல் பொன்னின் நிறம் பிள்ளை மனம்வள்ளல் குணம் யாரோ என்ற பாடலை நினைத்தது
உண்மை நண்பர்களே கடவுள் ஒருவரே யார் என்று பாராமல் உதவுபவர் அதனால் யார் என்று பாராமல் எல்லோர்க்கும் உதவும் பொன்மனசெம்மல் எம் ஜி ஆர் ஒரு கடவுளே
வாழ்க எம் ஜி ஆர் புகழ்...Arm
-
12-8-2020--சிறப்பு பதிவு
எம். ஜி ஆரை வர்ணித்த கவியரசர்
கவியரசரை பாராட்டிய எம். ஜி ஆர்
---
எம். ஜி. ஆர் அவர்கள் தன்னைப் போற்றுவோருக்கு மட்டுமன்றி தூற்றுவோர்க்கும் உதவிகள் செய்வார். அது எம். ஜி அருக்கே உள்ள தனி சிறப்பு. தன்னை தாக்கி பேசுபவர்கள் திறமையாளர்களாக இருந்து விட்டால் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு அவர்களின் திறமைக்கு உரிய கௌரவமும் அங்கீகாரமும் அளிப்பார்.
எம். ஜி ஆர் நடித்த சூப்பர் ஹிட் படம் ''ஆயிரத்தில் ஒருவன்"" படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்கு ஒரு பாடல் தேவைப்பட்டது. அடிமை முறையை ஒழித்து சுதந்திர சமுதாயம் காண புறப்பட்ட ஒரு புரட்சி வீரன் பாடுவது போன்ற பாடல் அந்தக் காட்சிக்கு பலர் எழுதியும் எம். ஜி. ஆருக்கு திருப்தி ஏற்படவில்லை.
--
அப்போது கவிஞர் அரசியல் கருத்து வேறுபாடு காரணமாக எம். ஜி. ஆரை கடுமையாக மேடைகளில் விமர்சித்து வந்தார். ஆனாலும் கவிஞர் என் படங்களில் பாடல் எழுதக் கூடாது என்று எம். ஜி ஆர் கூறியதில்லை. எம். ஜி. ஆர் படங்களுக்கு நான் பாடல் எழுத மாட்டேன் என்று கவிஞரும் சொன்னதில்லை. மேடைப் பேச்சு ஏற்படுத்திய தர்ம சங்கடத்தால் எம். ஜி. ஆர் படங்களின் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் கவிஞரை அணுக தயங்கினார். அதனால் எம். ஜி. ஆர் படங்களில் அவர் பாடல்கள் இடம் பெறவில்லை.
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் மேலே குறிப்பிட்ட காட்சிக்கான பாடலுக்காக பால் கவிஞர்கள் எழுதியும் திருப்தி ஏற்படாத நிலையில், கவிஞரை விட்டே பாடல் எழுத சொன்னாள் என்ன என்ற யோசனை பிறந்தது. படக்குழுவினர் கவிஞரிடம் விஷயத்தை சொல்ல அவரும் எழுதிக் கொடுத்தார். எம். ஜி. ஆருக்கு அந்தப் பாடல் மிகவும் பிடித்துப் போனதுடன் கவிஞரின் திறமையை பாராட்டி பாடலை ஓகே செய்தார்.
அந்தப் பாடல் தான் காலத்தால் அழியாத
'அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்"
அந்தப் பாடலை எழுதியவர் கவியரசு கண்ணதாசன். அவர் கடுமையாக தாக்கி பேசுவாரே தவிர மனதில் ஒன்றும் கிடையாது என்பதும் எம். ஜி. ஆருக்கு தெரியும்.
அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்.
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
காற்று நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடலும் நீரும் அடிமை என்று சுடுவதில்லையே
காலம் நம்மை விட்டு விட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லையே
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
(அதோ..)
தோன்றம்போது தாயில்லாமல் தோன்றவில்லையே
சொல்லில்லாமல் மொழியில்லாமல் பேசவில்லையே
வாழும்போது பசியில்லாமல் வாழ்வதில்லையே
போகும்போது வேறுபாதை போவதில்லையே
ஒரே வானிலே ஒரே மன்னிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
(அதோ..)
கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோவில் போல நாடு காண வேண்டும் விடுதலை
அச்சமின்றி ஆடிப்பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமி எங்கும் வேண்டும் விடுதலை
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்
(அதோ..)
https://www.youtube.com/watch?v=Lqmtl7TqUR0
-
1977 ஆக 14 ல் வெளிவந்த தலைவரின் கடைசி பிளாக்பஸ்டர் படம்தான் மீனவ நண்பன். ஸ்ரீதரின் "உரிமைக்குரலி"ன் இமாலய வெற்றிக்கு பின்னர் வந்த படம்தான் "மீனவ நண்பன்". படத்தின் பாடல்கள் அனைத்தும் இனிமையிலும் இனிமை. "தங்கத்தில் முகமெடுத்து", மற்றும் "பொங்கும் கடலோசை" பாடல்கள் எவர்கிரீன் வரிசையில் சேர்ந்து கொண்டது. எம்ஜிஆர் ஒரு படத்துக்கு வாங்கிய சம்பளத்தில் அதிகபட்சமாக இந்தப்படத்திற்குதான் வாங்கினார் என்று நம்பகமான செய்திகள் கூறுகிறது.
அய்யனின் கைஸ்கள் தலைவரின் வெற்றியை மிகவும் வயத்தெரிச்சலோடு ரசிப்பவர்கள் போலும்.. அதனால்தான் "மீனவ நண்பன்" "உரிமைக்குரல்" அளவு நிறைய அரங்குகளில் 100 நாட்கள் ஓடவில்லையா? என கேள்வி எழுப்பியுள்ளனர். "உரிமைக்குரலை"
காட்டிலும் அதிகம் ஓடாவிட்டாலும் முதல் ரவுண்டிலேயே 1 கோடியை தாண்டி வசூல் செய்த படம்.
சென்னையில் "உரிமைக்குரலை" காட்டிலும் மிக அதிக வசூலை பெற்ற படம். சென்னையில் ஓடி முடிய 319 நாளில் ரூ 1776719.00 வசூலாக பெற்று அதுவரை வெளிவந்த அய்யனின் அனைத்து படங்களை காட்டிலும் அதிக வசூல் பெற்ற படமாக திகழ்கிறது ஆனால் "தீபம்" 342 நாட்கள் ஓட்டி 1668722.85 வசூலாக காட்டினார்கள். தில்லு முல்லு செய்து பொய்வசூல் காட்டிய "தங்கப்பதக்கம்", "அண்ணன் ஒரு கோயில்" படங்களின் வசூலை தவிர்த்து பார்த்தால் கைஸ்களுக்கு இது புரியும்.
"தீபத்தி"ன் வசூலை முறியடித்து வெற்றி கொண்ட "மீனவ நண்பனி"ல் வரும் பாடலில் தலைவர் பாடுவார் 'நேருக்கு நேராய் வரட்டும் நெஞ்சில் துணிவிருந்தால்' என்று.
ஆனால் அவர் இருக்கும் வரை யாருக்கும் அந்த துணிவு வரவில்லை. சென்னையில் "உரிமைக்குரல்" 368 நாளில் பெற்ற வசூல் ரூ1195691.32. ஸ்ரீதர் தயாரிப்பில் அய்யன் நடித்த அனைத்து படங்களின் கந்தல் வசூலை காலில் போட்டு மிதித்த படம்தான் "மீனவ நண்பன்".
சென்னை, மதுரை, சேலம் 100 நாட்களும், இலங்கையில் இரண்டு திரையரங்குகளை சேர்த்தால் மொத்தம் 5 திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடி பெரிய வெற்றியை பெற்ற படம். திருச்சி பேலஸில் தொடர்ந்து 101 காட்சிகள் அரங்கு நிறைந்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. அடுத்து ஸ்ரீதர் இயக்கத்தில் வரவிருந்த "அண்ணா நீ என் தெய்வம்" படப்பிடிப்பு
முடிவதற்குள் முதல்வர் நாற்காலியில் தலைவர் அமர்ந்ததால் "மீனவ நண்பனே" ஸ்ரீதர் இயக்கத்தில் கடைசி படமாக அமைந்தது எனலாம்.
இதில் சில கைஸ்கள் "உரிமைக்குரல்" அய்யன் நடிக்க வேண்டிய படமாம். இதேபோல் "உத்தமபுத்திரனை" தலைவர் நடித்திருக்க வேண்டிய படத்தில் புகுந்து சொதப்பி படத்தை தோல்வி படமாக்கியதை கண்டும் கைஸ்களுக்கு ஏன் இந்த விபரீத ஆசை. "உத்தம புத்திரனி"ல் தலைவர் நடித்திருந்தால் அதன் தயாரிப்பில் புதுமை காட்டி ஆங்கிலப் படங்களுக்கு இணையாக தயாரித்து
வெற்றி பெற்றிருப்பார். வேண்டாமப்பா! புரட்சி நடிகரின் இயல்பான நடிப்பிற்கு முன்னால் என்ன கைதட்டி டான்ஸ் ஆடினாலும் எடுபடாது என்பது திண்ணம்..........ksr...
-
நாடோடி மன்னன் தொடங்கி நாடாளும் நிலை வரை எம்ஜிஆருடன் பயணித்த கே.பி.ராமகிருஷ்ணன்*
எம்ஜிஆரின் மெய்க்காப்பாளரும், எம்ஜிஆருக்கு மாற்றாக சினிமாவில் டூப் போட்டு நடித்தவரும், நாடோடி மன்னனில் எம்ஜிஆருடன் இணைந்து நாடாண்ட காலம் வரை பயணித்து எம்ஜிஆரின் இறுதிவரை துணை நின்றவருமான கே.பி.ராமகிருஷ்ணன் இன்று உடல்நலக் குறைவால் காலமானார்
மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் மெய்க்காப்பாளராகவும், உதவியாளராகவும் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேலாக உடன் பணியாற்றியவர் கே.பி.ராமகிருஷ்ணன். 58-ல் 'நாடோடி மன்னன்' படத்தில் எம்ஜிஆருக்காக டூப் போடத் தொடங்கியவர் 1978-ம் ஆண்டு 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' படம் வரை இணைந்தே பணியாற்றினார்.
1930-ம் ஆண்டு எம்ஜிஆர் பிறந்த பாலக்காடு அருகில் ஒரு கிராமத்தில் பிறந்தவர் கே.பி.ராமகிருஷ்ணன். 9 வயதில் சென்னைக்கு வந்துவிட்டார். சௌக்கார்பேட்டையில் ஒரு பால் கடையில் வேலை செய்து வந்தார். 1946-களில் சௌக்கார்பேட்டையில் வாடகை வீட்டில் தனது தாயார், சகோதரருடன் குடியிருந்தார் எம்ஜிஆர்.
அந்த நேரத்தில் மாலை நேரங்களில் தனது சகோதரருடன் பால்கடைக்கு பாதாம் பால் சாப்பிட எம்ஜிஆர் வருவாராம். அப்போது ராமகிருஷ்ணன் பழக்கமாகியுள்ளார். அதன் பின்னர் எம்ஜிஆர் தொடங்கிய எம்ஜிஆர் நாடக மன்றத்தில் சேர்ந்துள்ளார். 1949-ல் 'மங்கையர்க்கரசி' என்கிற படத்தில் நடித்துத் திரையுலகில் நுழைந்துள்ளார். 'பூலோக ரம்பை' படத்தில் நம்பியாருக்கு டூப் போட்டு நடித்துள்ளார். எம்ஜிஆருக்கு டூப்பாக 1958-ம் ஆண்டு நாடோடி மன்னனில் நடித்தார். அன்று முதல் அவரது கடைசிப் படமான 'மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்' வரை அவருடன் இணைந்து பயணித்துள்ளார்.
எம்ஜிஆருக்கு டூப்பாக மட்டுமல்ல, அவரது படத்தில் சிறு வேடங்களிலும் நடித்துள்ளார். பின்னர் எம்ஜிஆருக்கு மெய்க்காப்பாளராகவும் மாறினார். 1962 சட்டப்பேரவைத் தேர்தல் தொடங்கி அனைத்துத் தேர்தல்களிலும் எம்ஜிஆருடன் மெய்க்காப்பாளராகச் சென்றவர். எம்ஜிஆருக்கு மட்டுமல்ல நம்பியாருக்கும் ஆஸ்தான டூப் நடிகர் கேபிஆர். பூலோக ரம்பையிலிருந்து அவருக்காக கடைசி வரை டூப் போட்டு நடித்துள்ளார்.
ராமகிருஷ்ணனுக்கு 2 மகன், 2 மகள்கள். 1976-ம் ஆண்டு மூத்த மகள் திருமணத்தை எம்ஜிஆர் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். எம்ஜிஆர் படங்களில் பிரபலம் அவரது சண்டைக்காட்சிகள். எம்ஜிஆர் வீராவேசமாக மோதும் காட்சிகளில் பறந்து விழுவது, பாய்வது, பல்டி அடிப்பது, உயரத்திலிருந்து குதிப்பது எனப் பல சாகசக் காட்சிகள் ரசிகர்களால் பெரும் வரவேற்பைப் பெறும். அதில் நடித்தது எம்ஜிஆர் என்றே கடைசிவரை அனைவரும் நம்பியதுண்டு.
காரணம் ஒரு இடத்தில்கூட அது எம்ஜிஆர் இல்லை எனும் அளவுக்கு அவருக்கு டூப்பாக நடித்தவர் அசத்தியிருப்பார். அப்படிப் பல முறை காயம் பட்டதுண்டு, எலும்பு முறிவு ஏற்பட்டதுண்டு. ஆனாலும், திரையில் அந்தக் காட்சியில் எம்ஜிஆருக்கு இருக்கும் வரவேற்பைக் காண்பதாலும், எம்ஜிஆர் தன்னை ஒரு சகோதரனாகக் கருதிப் பார்த்துக்கொண்டதும் அவருக்கு அனைத்து வேதனைகளையும் பறந்தோடச் செய்துவிடும்.
எம்ஜிஆர் இரு வேடங்களில் நடிக்கும் காட்சிகளில் மற்றொரு எம்ஜிஆராக ராமகிருஷ்ணன் தத்ரூபமாக நடித்திருப்பார். நடிப்பது மட்டுமல்ல இரண்டு எம்ஜிஆர் மோதும் சண்டைக்காட்சிகளில் குறிப்பாக 'நீரும் நெருப்பும்', 'நினைத்ததை முடிப்பவன்' போன்ற படங்களில் இரண்டு எம்ஜிஆர் கத்திச்சண்டை போட்டு மோதும் காட்சியில் ராமகிருஷ்ணனின் அபார ஆற்றல் அனைவராலும் பாராட்டப்பட்டது. இன்னொரு எம்ஜிஆராக, எம்ஜிஆருடன் நடித்த ராமகிருஷ்ணன் எம்ஜிஆரிடம் அவரது பால்ய காலத்திலேயே நட்பால் இணைந்தவர்.
எம்ஜிஆரிடம் உள்ள அன்பால் அவருடனே பயணித்தவர். எம்ஜிஆரும் அவர் மீதுள்ள அன்பால் அவரைத் தனது மெய்க்காப்பாளராகவே வைத்துக்கொண்டார். அதிலும் சோதனை மிகுந்த 1972-ம் ஆண்டுகளில் அதிமுகவைத் தொடங்கிய காலகட்டத்தில் எம்ஜிஆரின் உயிருக்கே அச்சுறுத்தலாக இருந்த நேரத்தில், பிரச்சாரங்களில், பொதுக்கூட்ட மேடைகளில் எம்ஜிஆரின் நிழல் போலவே இருந்து பாதுகாத்தவர் ராமகிருஷ்ணன்.
எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்தபின் பல முறை உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று கேட்டபோதும், உங்கள் அன்பு மட்டும் போதும் தலைவா என ஒதுங்கியே வாழ்ந்தவர். எம்ஜிஆரின் பாதுகாவலராக ராமகிருஷ்ணன் இருந்தபோதும் கட்சியில் அவர் பெரிதாக பதவியை எதிர்பார்க்கவில்லை. எம்ஜிஆர் இடையில் ஜெயலலிதாவிற்குப் பாதுகாப்பாக இருக்கும்படி அனுப்பி வைத்தார்.
எம்ஜிஆர் மறைவுக்குப் பின் அவரது புகழைப் பரப்புவது மட்டுமே குறிக்கோளாகச் செயல்பட்டவர் ராமகிருஷ்ணன். மலேசியா, சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளில் எம்ஜிஆரைத் தெய்வமாக மதிக்கும் ரசிகர்கள் ராமகிருஷ்ணனை அழைத்து விழா எடுத்தனர். ராமகிருஷ்ணனை எம்ஜிஆரின் நிழலாகவே பார்த்தனர். அவரும் போகும் இடமெல்லாம் எம்ஜிஆர் பற்றி மட்டுமே பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார்.
இயல்பிலேயே சுயமரியாதை உள்ள ராமகிருஷ்ணன் தான் தெய்வமாகப் பூஜிக்கும் எம்ஜிஆரைத் தவிர யாரிடமும் சென்று நிற்கமாட்டேன் என்று உறுதியுடன் இருந்ததால் தனது பிள்ளைகளுக்காகக் கூட முதல்வர் ஜெயலலிதாவிடமோ அல்லது எம்ஜிஆரால் வாழ்வுபெற்ற யாரிடமும் போய் உதவி கேட்டு நின்றதில்லை. மறுபுறம் ராமகிருஷ்ணன் போன்றோருக்கு எம்ஜிஆரால் அமைந்த ஆட்சியில் உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்கிற ஆதங்கத்தைக்கூட வெளியிட அவர் விரும்பவில்லை.
எம்ஜிஆரின் இறுதி நாள் குறித்து கே.பி.ராமகிருஷ்ணனிடம் ஒருமுறை பேசியபோது, அவரைக் கடைசியாகப் பார்த்துப் பேசியது நானாகத்தான் இருப்பேன் என்றார். எம்ஜிஆர் மறைவுக்கு முதல் நாள் இரவு அவரது படுக்கை அறையில் அவரையே பார்த்துக்கொண்டு நின்றிருந்த ராமகிருஷ்ணனிடம் எம்ஜிஆர் சிரித்துக்கொண்டே, 'என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய், நேரமாகுது. வீட்டுக்குக் கிளம்பு. காலையில் பார்க்கலாம்' என்று சிரித்த முகத்துடன் அனுப்பி வைத்ததைக் கூறி, 'அது கடைசி சிரிப்பு என நினைக்கவில்லை' என்று கூறி கலங்கினார்.
'எம்ஜிஆருடன் அவர் வாழ்நாள் முழுதும் பயணித்தேன். வேறு யாருக்கும் கிடைக்காத பேறு அது. இதற்குமேல் எனக்கு என்ன வேண்டும்'' என்பதே கே.பி.ஆரின் பதிலாக இருந்தது. அவர்பால் நலம் கொண்டவர்கள் அரசிடம் உதவி கேட்கலாம் என்று கேட்டாலும், மறுத்தே வந்ததை அவரது மகன் கோவிந்தராஜன் நினைவுகூர்ந்தார்.
நாடோடி மன்னனில் எம்ஜிஆருடன் திரையுலகப் பயணத்தைத் தொடர்ந்த கேபி.ராமகிருஷ்ணன் நாடாளும் நிலையை எம்ஜிஆர் அடைந்த பின்னரும் மெய்க்காவலராக உடன் நின்றார். எம்ஜிஆரின் மறைவு வரை தொடர்ந்தது அவரது நட்பு. எம்ஜிஆரின் நினைவுகளைச் சுமந்து வாழ்ந்த பெட்டகம் ராமகிருஷ்ணன் மறைவு. எம்ஜிஆர் ரசிகர்களுக்கும், எம்ஜிஆரின் ஆளுமையைத் பதிவு செய்யும் ஆர்வலர்களுக்கும் இழப்பு என்றே கூறலாம்..........drn
-
இனிய காலை வ*ணக்கம் ந*ண்ப*ர்க*ளே!
மக்கள் தில*க*ம் தென் இந்திய ந*டிக*ர் ச*ங்க*த்தினை ஆர*ம்பித்த* மூலகர்த்தாவில் ஒருவ*ர்.
பிர*ப*லந*டிகை மற்றும் த*யாரிப்பாள*ர் அஞ்ச*லிதேவியை முத*ல் தென்னிந்திய* ந*டிக*ர் ச*ங்க*த்தின் த*லைவ*ராக்கினார்...
மேலும் அப்போது சினிமா ச*ம்ப*ந்த*ப்ப*ட்ட செய்திக*ளை "ந*டிக*ன் குர*ல்" என்ற மாத* இத*ழை தொட*ங்கி அதில் வெளியிட்டு வ*ந்தார்.
அத*ன் ப*திப்பாசிரிய*ராக எம்.ஜி.ஆர் செய*ல்ப*ட்டாலும் த*ன்னை முன்னிலைப்ப*டுத்திக் கொண்ட*தேயில்லை! ஒரு இத*ழில் சிவாஜியை அட்டைப்ப*ட*த்தில் போட்டு க*வுர*வ*ப்ப*டுத்தினார். முன்ன*னி ந*டிக*ர் மட்டுமல்ல! சாதார*ண நிலையில் இருந்த குணசித்திர ந*டிக*ர்க*ளையும் ஒன்றுபோலவே மதித்தார்.
அத*ற்கு உதார*ணம்தான் ந*டிக*ன் குர*ல் இத*ழின் இந்த* அட்டைப்ப*ட*ம்..
அட்டையில் "அய்யா! தெரியாத*ய்யா ராமாராவ்" இவ*ர் த*லைவ*ரின் ஒளிவிளக்கு, ர*க*சிய போலீஸ்115, ஆயிர*த்தில் ஒருவ*ன் , ந*ல்ல*வ*ன் வாழ்வான்,ரிக்ஷாக்கார*ன் மற்றும் சிவாஜியின் மோட்டார் சுந்த*ர*ம்பிள்ளை, க*லாட்டா க*ல்யாணம், க*வுர*வ*ம் மற்றும் பலமுன்னனி ப*ட*ங்க*ளில் ந*டித்த*வ*ர்.
இந்த* இத*ழ் வெளிவ*ந்த*போது அவ்வ*ள*வு பிர*ப*லமும் இல்லை. ஆனால், திற*மைசாலிக*ளை ஊக்குவிக்க*வும், புதிய வாய்ப்புக*ளை அவ*ர்க*ள் பெற*வும் அட்டைப்ப*ட*த்தில் வெளியிட்டு அந்த* சாமான்ய ந*டிக*ர்க*ளின் பேட்டி செய்திக*ளை வெளியிட்டு வ*ந்தார்.
அத*ற்கு இன்னொரு கார*ண*மும் உண்டு. த*லைவ*ர் 1937ல் ச*திலீலாவ*தியில் தொட*ங்கி ந*டித்து வ*ந்தாலும் அவ*ர*து ப*ட*மும், பெய*ரும் போஸ்ட*ர்க*ளில் இட*ம்பெற* சிலகால*ம் பிடித்த*து. க*தாநாய*க*னாக* உய*ர* 10 வ*ருட*ம் ஆன*து. அந்த* வலியும், வேத*னையும் சிறிய ந*டிக*ர்க*ள் பெற்றுவிட*க்கூடாது என்ப*தாலேயே ராமாராவ் போன்ற* சிறிய ந*டிக*ர்க*ளுக்கும் முக்கிய*த்துவ*ம் அளித்து பெருமைப்ப*டுத்தினார்...
-
Mohamed Thameem பாயி.. ஆமா..நீ அய்யனின் விவரம் தெரிஞ்ச பிள்ளை. துல்லியமா சொல்லுவ. இங்கயும் பதிவ படிச்சுட்டு கரெக்டா கேக்குற. ஆனா, உங்க சின்ன பிள்ளைங்க அடிச்சு விடுறதை விடு. அறியாப் பிள்ளைங்க ஆர்வத்தில் பொய் சொல்லுதுங்க. வீரபாண்டிய கட்டபொம்மன் 28 தியேட்டரில் 100 நாள் ஓடிச்சுன்னு அடிச்சுவுடுறாங்க. முந்தா நாள் கூட பதிவு போட்டேன். சரி விட்ருவோம். விவரம் அறிஞ்ச பிள்ளைன்னு சொல்லப்படற முரளி சீனிவாசன் இஷ்டத்துக்கு அடிச்சுவுடுறாரே. ஏற்கனவே ராஜா படம் ரிக்சாக்காரனை வசூலில் மிஞ்சியதுன்னு சொல்லி நடிகப்பேரரசர் கிட்ட ஆதாரத்துடன் வாங்கிக் கட்டிக்கிட்டார். இது போதாதுன்னு தன்னை எல்லாரும் எல்லாம் தெரிஞ்ச ஏகாம்பரம்னு நினைக்கனும்னு இஸ்டத்துக்கு கப்ஸா அள்ளி வீசுராரே. பாபு படம் பத்தின பதிவில் 1971 ல் பாபு படம் வெளியானதற்கு முந்தின நாள் அதாவது 1971 அக்டோபர் 17 ல் மு.க.முத்து நடிச்ச பிள்ளையோ பிள்ளை படத்தை எம்ஜிஆர் கிளாப் அடிச்சு தொடங்கி வெச்சார்னு அள்ளி விட்டுருக்கார். அதுக்கு ஸ்கிரீன் சாட் ஆதாரம் இங்கு போட்டிருக்கேன். உண்மையில் பிள்ளையோ பிள்ளை படத்தை எம்ஜிஆர் கிளாப் அடிச்சு தொடங்கினது 1971 அக்டோபர் 21. இதயவீணை கெட்டப்பில் கிளாப் அடிப்பார். அந்த கிளாப் போர்டில் தேதி தெளிவா இருக்கும். அந்தப் படத்தை அடுத்த பதிவில் போடறேன். துல்லியமாக விவரம் சொல்ற நீ இந்த தப்ப எல்லாம் முரளி சீனிவாசன் கிட்ட சொல்ல வேணாமா. அவர காட்டிக் கொடுக்கக் கூடாதுன்னு நினைச்சா வெளிப்படையா பதிவு போடாம அவருகிட்ட எப்பவாச்சும் போனில் பேசும்போது சொல்லுய்யா. இதோ 1971 அக்டோபர் 17 ல் எம்ஜிஆர் கிளாப் அடிச்சு பிள்ளையோ பிள்ளை படத்தை தொடங்கி வெச்சதா முரளி சீனிவாசன் சொன்ன தப்பான தகவல் ஆதாரம். நாளைக்கி வெள்ளிக்கிழமையா.. முரளி சீனிவாசன் என்ன கதை அளக்கப்போறாரோ......... Rajarajan
-
Mohamed ThameemMohamed Thameem பிள்ளையோ பிள்ளை படத்தை எம்ஜிஆர் கிளாப் அடிச்சு தொடங்கும் காட்சி. அதில் தேதி பார். முரளி சீனிவாசன் சொன்னா மாதிரி 1971 அக்டோபர் 17 இல்லை. அக்டோபர் 21 ந்னு போட்டிருக்கு பார். சரித்திரம் எப்பவும் பலருக்கும் பாடம் எடுக்கும்னு வேற தன் பதிவுல முரளி சீனிவாசன் சொல்றாரு. அவருக்கு முதல்ல நீ பாடம் எடுய்யா. அடுத்த பதிவில் இன்னமும் தெளிவா தேதி தெரியறா மாதிரி போட்டா போடறேன்.........RRN
-
பட்டு சேலை காத்தாட--pattu selai kathada
“பட்டு சேலை காத்தாட”
‘தாய்க்குப் பின் தாரம்’ படத்தை எம்ஜிஆரை கேட்காமல் தெலுங்கில் வெளியிட்டதில் தேவருக்கும் எம்.ஜி.ஆருக்கும் சிறிய மனக்கசப்பு இருந்தது.
இந்த சூழலில் ‘தாய் சொல்லை தட்டாதே’ படத்தை ஆரம்பித்தார் தேவர். கதையை கேட்ட எம்.ஜி.ஆர், இந்த மாதிரி கதையெல்லாம் என்னை வெச்சி எடுக்கமாட்டீங்களா என்று கேட்க, மனக்கசப்பு நீங்கி தேவர் சம்மதித்தார்.
கதை வசனம் எழுதிய ஆரூர் தாஸுக்கு, தன்னை அவ்வளவாக
எம்.ஜி.ஆருக்கு பிடிக்கவில்லை என்ற எண்ணம் இருந்தது. ஆனால் காட்சியின் தொடக்கத்தில் நாயகன் பேசும் வசனத்தை கேட்ட எம்.ஜி.ஆர், ஆரூர் தாஸை கட்டி அணைத்து ‘எனக்காகவே எழுதப்பட்டது போல் உள்ளது’ என்றாராம்.
அந்த வசனம் இதுதான்.
எம்.ஜி.ஆர்: ‘எங்கப்பா இறந்ததுலேருந்து, எங்க அம்மா எந்த ஒரு மங்கல காரியத்துலேயும் பங்கெடுத்துக்கிட்டது கிடையாது. பொதுவா, கணவரை இழந்த பெண்களைப் பாக்குறதே அபசகுனம்னு சொல்லுவாங்க.
ஆனா நான் விடிஞ்சதும் எங்கம்மா முகத்துலதான் விழிக்கிறேன். அதனாலதான் எனக்கு வெற்றி மேல வெற்றி கிடைக்குது. எனக்கு தாய் தான் தெய்வம்! அந்தத்தாய் சொல்லைத் தட்டமாட்டேன்’.
“கையில் எடுத்தால் துவண்டு விடும் …
கண்கள் இரண்டும் சிவந்து
விடும்
சின்ன இடையே சித்திரமே சிரிக்கும் காதல் நித்திலமே …”
பின்னல் ஜடை முன்புறமாக, ஒன்றை பூ அதில் மலர்ந்திருக்க நளினமாக ஜாடை காட்டி நடந்து வரும் சரோம்மா இந்த வர்ணனைக்கு படு பொருத்தம்.
“நிமிர்ந்து நடக்கும் நடையழகு நெருங்கிப் பழகும் கலையழகு
அமைதி நிறையும் முகத்தழகு யாவும் உங்கள் தனியழகு”
என்று நாயகனை வர்ணித்தபடி எம்.ஜி.ஆரின் உதட்டை தொட்டு சிரித்து குலுங்குவார் சரோம்மா.
இனிமை தேன் மழை பொழிந்த சுசீலாம்மா, சௌந்தர்ராஜன்…
பட்டு சேலை காத்தாட இசை தென்றல் வீசிய திரை இசைத்திலகம் மகாதேவன்…இதுபோன்ற இனிமைகள் இனி கிடைக்குமா?…
“காசு பணங்கள் கேட்கவில்லை ஜாதி மதங்கள் பார்க்கவில்லை
தாவி வந்தது என் மனமே இனி தாழ்வும் வாழ்வும் உன் வசமே”
உண்மையான காதலை வெளிப்படுத்தும் வரிகளை இப்படி எழுத கவிஞரால் மட்டுமே இயலும்.
—————————–
படம்: தாய் சொல்லை தட்டாதே
இசை: கே.வி.மகாதேவன்
குரல்: டி.எம்.எஸ், பி.சுசீலா
வரிகள்: கண்ணதாசன்...
-
அன்புத் தம்பி
;;;;;;;;;;;;;/;;;;;;;;;;;;;;;
எம்.ஜி.சக்கரபாணி
"என் தம்பி ராமச்சந்திரன் பிப்ரவரி நாலாம் தேதி அமெரிக்காவிலிருந்து திரும்பற செய்தி வந்தவுடனே எனக்குள் ஒரே சந்தோஷம். வயசு குறைஞ்சிட்டமாதிரி ஒரு நினைப்பு. தம்பி வரப்போற நாளை எதிர்பார்த்துகிட்டே இருக்கிறேன்.
இந்தச் செய்தி வந்ததிலிருந்து படுக்கையில் படுத்தபடியே பழைய நினைவுகளை கொஞ்ச கொஞ்சமா அசை போட்டுகிட்டேயிருக்கேன். ராமச்சந்திரன் குழந்தையா இருந்தப்பவே நாங்க கும்பகோணத்தில் இருந்தோம். குடும்பத்தில் நிறைய வறுமை. அங்க திக்குவாயன்கடைன்னு உண்டு. காலணாவுக்கும் அரையணாவுக்கும் கடைக்குப் போய் சாமான் வாங்கி வருவேன். எங்க போனாலும் தம்பியை தோளில் தூக்கிக்கிட்டே போவேன்.
சின்ன வயசில இருந்தே எதுக்கும் கலங்க மாட்டான். என்ன வந்தாலும் ஒரு கை பாத்துக்குவோம் என்ற எண்ணம் உண்டு. என்ன கஷ்டம் வந்தாலும் 'எல்லாம் நல்லதுக்குத்தான் 'னு எடுத்துக்கிற மனப்பக்குவம் உண்டு. அந்த திட மனசு அவனுக்கு பல வெற்றிகளைத் தேடிக் கொடுத்திருக்கு.
ராமச்சந்திரனுடைய மனதைரியத்துக்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். அவனுடைய முதல் மனைவி தங்கமணிக்கு உடல்நிலை ரொம்ப சீரியஸ்னு ஊர்லஇருந்து செய்தி வந்தது. ராமச்சந்திரன் கிளம்பிப் போனபிறகு அவள் செத்துப்போய்ட்டான்னு தந்தி வந்தது. தம்பிக்கு சின்ன வயசு. மனசு கலங்கிடப் போறான்னு நான் ஆறுதல் சொல்ல ஊருக்குப் புறப்பட்டேன். அங்க போன பிறகு நான் வருத்தப்படக்கூடாதேன்னு அவன் தான் எனக்கு தைரியம் கூறிக்கொண்டிருந்தான்.
முதன் முதலா ராமச்சந்திரன் கதாநாயகனாக நடிக்க வாய்ப்பு வந்த படம் "சாயா". நாராயணன் கம்பெனி தான் தயாரிப்பாளர்கள். அப்ப அகில இந்திய புகழ் பெற்ற நந்தாலால் யஷ்வந்த்லால்தான் டைரக்டர். அப்பல்லாம் ஒன்றரை லட்சம் ரூபாயிருந்தால் ஒரு படத்தையே முடிச்சுடலாம். 52,000 ரூபாய் வரை செலவழிச்சு படம் எடுத்த பிறகு ஏதோ காரணத்தினால் படம் நின்னு போச்சு. இந்தப் படம் வெளிவந்தா நல்ல எதிர்காலம் இருக்கும்ன்னு தம்பி நினைச்சுகிட்டிருந்தப்போ அந்த ஆசையில் மண் விழுந்தது. இது என்ன சோதனைன்னு நான் ரொம்ப மனம் கலங்கிப் போய் வேதனைப்பட்டேன். தம்பி என்னைக் கூப்பிட்டு ஆறுதல் சொன்னான். என்னை 'ஏட்டா';ன்னு தான் கூப்பிடுவான். கவலைப்படாதீங்க ஏட்டா ஏதோ நல்லது நடக்கப் போறதுக்கான அறிகுறி இதுன்னு சொன்னான். அதுக்கப்புறமும் விடாமுயற்சி செய்ததினால ராஜகுமாரி படத்தில் மறுபடியும் ஹீரோ சான்ஸ் கிடைத்தது. எடுத்த காரியத்தை தைரியமா செய்யனும் அதுல என்ன இடைஞ்சல் வந்தாலும் கவலைப்படக்கூடாதுன்னு நினைப்பான். முடியாதுன்னு சொன்னால அவனுக்குக் கோபம் வந்துடும். 1956ல் நாடோடிமன்னன் படம் எடுக்க ஆரேம்பிச்சோம். நிறைய பணம் செலவழிச்சோம். படம் எடுத்து முடிக்கிறதுக்குள்ள ஏராளமான இடைஞ்சல்கள். ஸீன் நல்லா வரணும்னா அதுக்காக தம்பி என்ன வேணும்னாலும் செய்வான்.
ஷூட்டிங் நடந்தபோது திடீர்னு மூணு லாரி கயிறு வேணும்னான். கையில பணமில்லை. தம்பிகிட்ட இதச் சொல்ல முடியாது. எப்படியோ சமாளிச்சு பணத்துக்கு ஏற்பாடு பண்ணி கொண்டு போனோம். படத்தில் ஒரு கயிறு பாலம் வரும். அந்த ஸீன் ரொம்ப நல்லாவும் வந்தது. இவ்வளவு கஷ்டப்பட்டு எடுத்து முடிச்சப்ப இந்தப் படம் சக்ஸஸ் ஆனா எம்.ஜி.ஆர் மன்னன் இல்லையானா நாடோடி என்று பத்திரிக்கையிலேயெல்லாம் எழுதினாங்க. படம் பிரமாதமா ஓடிச்சு. எல்லா படங்களுக்கும் நூறாவது நாள் , இருநூறாவது நாள்ன்னு தான் விழா எடுப்பாங்க. நாங்க நாடோடிமன்னன் பட வெற்றி விழான்னு தான் அறிவிப்பு செஞ்சி விழா நடத்தினோம்.
சீர்காழியில் நாடகத்தில் நடிச்சுகிட்டிருந்த போது ஒரு சண்டைக் காட்சியில் குண்டுமணி தம்பி கால் மேல விழுந்து எலும்பு முறிஞ்சு போச்சு . இனி இவன் கால் சரியா போயி பீல்டில் எங்க நிக்கப் போறர்ன்னு பேசினாங்க. கால் சரியாகி திரும்பி பீல்டுக்கு வந்த போது ஏகப்பட்ட படங்கள் குவிஞ்சது.
அதுக்கப்புறம் தான் எம். ஆர். ராதா சுட்ட சம்பவம். இனி எம்.ஜி.ஆர் எழுந்து வரவே முடியாது அப்படி வந்தாலும் பேசவே முடியாதுன்னு சொன்னாங்க. அந்த சம்பவத்திற்குப் பிறகு தமிழக மக்கள் மனசில நிலையான இடம் தம்பிக்குக் கிடைச்சது. குண்டு காயத்தோட ஓட்டுக் கேக்கிற மாதிரி போஸ்டர் போட்டாங்க. தமிழ்நாடு பூராவும் அவனுக்காக பிரார்த்தனை செய்தாங்க . அதுக்கப்புறம் புகழ் இன்னும் அதிகம் ஆயிருச்சு.
1972-ல் தி.மு.கவிலிருந்து தம்பியை நீக்கினாங்க. சத்யா ஸ்டுடியோவில் பலர் ‘நீங்க மன்னிப்பு கேட்டுடுங்க’ன்னு சொன்னாங்க. தம்பி மனம் கலங்கிடக்கூடாதேன்னு தைரியம் சொல்லப் போனேன். என்னை பார்த்தவுடனேயே நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க ஏட்டா நான் இப்பத்தான் பால் பாயாசம் குடிச்சேன். ஒரு கை பார்த்திடுவோம்ன்னு சொன்னான். என்னப்பா செய்யப் போறேன்னு கேட்டேன். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்ன்னு புதுசா ஒரு கட்சி ஆரம்பிக்கப் போறேன்னு சொன்னான். அந்த தைரியத்தைப் பார்த்து நானே அசந்து போனேன்.
1972-ல் வந்த கஷ்டம் என்ன செஞ்சுது? தம்பிய முதலமைச்சராவே ஆக்கிடுச்சு. 1984-அக்டோபர் 13 அன்னிக்குத்தான் தம்பியை பார்க்க அப்போலோ ஆஸ்பத்திரியில் என்னை அனுமதிச்சாங்க
நான் உள்ளே போனவுடனேயே ஏட்டா உடம்பு எப்படியிருக்கு? நல்லா ரெஸ்ட் எடுக்குறீங்களா ன்னு கேக்க ஆரம்பிச்சிட்டான். அவன் உடல் நிலையைப் பற்றி விசாரிக்க நான் போனா என்னை விசாரிக்க ஆரம்பிச்சுட்டான். என்னைப் பத்தி ஒண்ணும் கவலைப்படாதீங்க. நான் இன்னும் ஒரு வாரத்திலே வந்துடுவேன்னு சொன்னான். எந்த சமயத்திலேயும் அவன் தைரியத்தை விட்டதே கிடையாது. நான் அங்கேயிருந்து கிளம்பும் போது டாக்டர்.பி.ஆர்.எஸ்ஸைக்கூப்பிட்டு அண்ணனை நல்லா கவனிச்சுக்கோங்கன்னு சொன்னான். இப்படி சோதனைகள் வந்தா அதைத் தாங்கிக்கிட்டு அதை சாதனையாக்கிக் காட்டற சாமர்த்தியம் தம்பிக்கு நிறைய உண்டு. தம்பியுடைய வெற்றியைப் படிப்படியா கவனிச்சு ,ரசிச்சு பிரமிச்சவன் நான்.
பல பேர் தம்பியை வரவேற்கத் தயாராயிருக்காங்க. பொன்மனச்செம்மலே வருக புரட்சித்தலைவரே வருக, இதய தெய்வமே வருக ன்னு எல்லோரும் வரவேற்பாங்க. ஆனா எல்லா வரவேற்பையும் விட நான் என் தம்பியை ‘ராமச்சந்திரா நீ புதுப்பொலிவோடு வா’ ன்னு சொல்றதுலே இருக்குற அர்த்தமே வேற .
1984 பிப்ரவரி 2ஆம் தேதி ஜுனியர் விகடனுக்கு எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணி அளித்த பேட்டி.........
-
சிறந்த நடிகர் அயல் நாட்டில் ஓட்டெடுப்பில்
வென்ற எம்.ஜி.ஆர் :
சிங்கப்பூர் பரிசுகள் (ஓட்டெடுப்பு மூலம்):
⭐1965 எங்க வீட்டு பிள்ளை,
⭐1958 நாடோடி மன்னன்,
⭐ 1961 திருடாதே,
⭐ 1963 பெரிய இடத்துப் பெண் (தமிழ் மலர்),
⭐1967 காவல்காரன்,
⭐1968 குடியிருந்தகோயில்,(பெற்ற வாக்கு:
34,938.
⭐ 1969 அடிமைப்பெண்,நம்நாடு,
⭐ 1970 மாட்டுக்கார வேலன்,
⭐1971 ரிக்சாக்காரன்,
⭐1972 நான் ஏன் பிறந்தேன்,
⭐ 1973உலகம் சுற்றும் வாலிபன் (சிறந்த
படம்,சிறந்த டைரக்டர்),
⭐1975 பல்லாண்டு வாழ்க,
இலங்கையில் வாக்கெடுப்பில் வென்ற படங்கள் :
1965 எங்க வீட்டு பிள்ளை,
1968 குடியிருந்த கோயில்,
1969 அடிமைப் பெண்,
1970 மாட்டுக்கார வேலன்,
1972 நான் ஏன் பிறந்தேன்,
1975 நாளை நமதே.
✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨✨.........vrh...
-
ஒரு அய்யனின் கைஸ் மதுரையில் அய்யன் பட வெளியீடு அன்று டிக்கெட் எடுக்க பட்ட கஷ்டத்தை விளக்கி சொல்வதை பார்க்கும் போது நமக்கு பெரிய காமெடியாக தெரிகிறது. அவர் பேசாமல் தூத்துக்குடி வந்திருக்கலாம். எந்த கலர் டிக்கெட் வேண்டுமானாலும் முட்டாமல் மோதாமல் கவுண்டரிலேயே மிக தாராளமாக பெற்றிருக்கலாம். இங்கெல்லாம் அய்யனின் படம் முதல் காட்சி hf என்பதெல்லாம் குதிரை கொம்புதான்.
முதல் நாளில் 2வது காட்சிக்கு கால் வாசி தியேட்டர் நிரம்பினால் அதுவே பெரிய ஆச்சர்யமான விஷயம். அவர்கள் சிலாகித்து பேசுவதை பார்த்தால் சிப்பு சிப்பா வருது. அவர்களை பொறுத்தவரை ஒரு படத்தை ஒரு தியேட்டரில் 100 நாட்கள் ஓட்டி விட்டால் போதும் அதை வெற்றி படமென சொல்லி கூத்தாடுவார்கள்.
அங்கே தயாரிப்பாளர் தலையில் துண்டை போட்டுக் கொள்வதை பற்றி கவலைப் பட மாட்டார்கள்.
1970 வரை சொந்த படத்தை தவிர வேறு எந்த படத்துக்கும் தலைவர் அதிகம் செலவு வைத்ததில்லை.
ஆனால் அய்யனின் படங்களுக்கு மல்டி ஸ்டார்ஸ் மிகவும் அவசியம்.
அதுமட்டுமல்ல அவர் படத்தை பாருங்கள் தயாரிப்பு செலவு மிக அதிகமாக இருக்கும். வீ.பா.கட்ட பொம்மன், புதியபறவை, கப்பலோட்டிய தமிழன், கர்ணன், திருவிளையாடல், சரஸ்வதி சபதம், கந்தன் கருணை, திருவருட்செல்வர்,
திருமால் பெருமை, பாரத விலாஸ், ராஜ ராஜ சோழன், ராஜரிஷி, சிவந்தமண், தர்மம் எங்கே என்று பெரும் பொருள் தயாரிப்புக்கே சென்று விடுவதால் படத்துக்கு எங்ஙனம் லாபம் வரும்?
அப்படியே வெளி வந்தாலும் ஒரு சில ஊர்களில் மட்டும் 100 நாட்கள் ஓட்டி படம் வெற்றி என்று குதிப்பார்கள். B சென்டரில் 50 நாட்கள் ஒடுவது என்பது அநேகமாக இருக்காது என்றே சொல்லலாம். ஆனால் தலைவர் படத்துக்கு b சென்டர் மற்றும் c சென்டரில்தான் ஆட்டம் அற்புதமாக இருக்கும். அதிலும் ஸ்ரீதரின் "உரிமைக்குரல்", 50 நாட்கள் ஓடாத b c சென்டரை தேடிப் பிடிப்பதே கஷ்டம். புதுமையான டைரக்டர் என்று பெயரெடுத்த ஸ்ரீதர் புதுமையான வெற்றியை பார்த்தது "உரிமைக்குரலி"ல்தான்.
அதே போல் a p நாகராஜன் "நவரத்தின"த்தை இயக்கி தயாரிக்கிறார் என்றவுடன்
அவரை சுற்றிய விநியோகஸ்தர்களை அவர் வாழ்நாளில் கண்டதில்லை என புளகாங்கிதமடைந்தார். தயாரிப்பில் இருக்கும் போதே "நவரத்தினம்" அத்தனை ஏரியாவும் விற்று தீர்ந்ததுடன் கணிசமான லாபத்தையும் பார்த்து விட்டார். எத்தனையோ பிரமாண்ட பக்தி படங்களை எடுத்து கையை சுட்டுக் கொண்டவருக்கு இந்த நிகழ்ச்சி அவருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி கொடுத்தது. ஆண்டவன் படமெடுத்து ஆண்டியானவரை மீண்டும் அரசனாக்கி பார்த்தவர் மக்கள் திலகம் என்ற மகோன்னத மனிதர்.
அய்யன் படமெடுத்து ஆண்டியான தயாரிப்பாளரெல்லாம் தலைவர் படத்தயாரிப்பாளரை பார்த்து பொறாமை கொள்வர். அந்த தலைவரே அவருக்கு படமெடுக்க சத்தர்ப்பம் கொடுத்தவுடன் வற்றாத நதியாக மீண்டும் ஜீவ மாற்றம் ஆகி விடுகிறார்கள்..........ksr.........
-
என் வாழ்க்கையின்
முதல் வெளிச்சத்தை
1969 இல்...
'ராஜா' தியேட்டர் இருட்டில்
கண்டு பிடித்தேன்!
'ஒளி விளக்கு'...
நான் பார்த்த முதல்
எம்.ஜி.ஆர் படம்!!- - -
ஒரு நடுத்தரக் குடும்பத்தின் தடுமாற்றம்
என்று இருந்த என்னை...
நம்பிக்கை என்னும் தடம் மாற்றி...
வாழ்க்கையின் முதல் பிடிப்பைத் தந்தவர்...நீங்கள் தான்!
நாத்திகராக உங்களை நீங்கள்
அடையாளங் காட்டினாலும்...
உண்மையான ஆன்மீகம் எது என்பதை
எனக்குக் கற்றுத் தந்தது...
உங்கள் வாழ்க்கை தான்!- - -
ஒரு தெய்வத்தால் மட்டுமே
தரக் கூடிய ஆறுதலை...
உங்கள்...'என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே'
எனக்குத் தந்திருக்கிறது.
ஒரு குருவினால் மட்டுமே
வரக் கூடிய ஞானத்தை
உங்கள்...'ஆண்டவன் ஒருவன் இருக்கின்றான்' பாடல்
எனக்கு அருளியிருக்கின்றது.
ஒரு தாயிடமிருந்து வரக் கூடிய
கனிவையும் அரவணைப்பையும்
'செல்லக் கிளியே மெல்லப் பேசு'
எனக்கு அள்ளித் தந்தது.
ஒரு தந்தையிடமிருந்து பெறக் கூடிய தைரியத்தை
'வெள்ளி நிலா முற்றத்திலே' பாடல்
எனக்குச் சொல்லித் தந்தது.- - -
'உன்னை அறிந்தால்..' பாடலைக் கேட்டதால் தான்
எனக்குள் உயர்ந்து நின்ற சோதி மரத்தை
யான் உணர ஆரம்பித்தேன்.
'நாளை நமதே' பாடலைக் கேட்டதால் தான்
எனது பாலைகளையும்
சோலைகளாக மாற்றும்
அற்புதம்' அறிந்து கொண்டேன்.
'உலகம் பிறந்தது எனக்காக'
என்று ஒலிக்க ஒலிக்க...
உரிமை கொண்டாடி ரசிக்கும்
உற்சாக குணம் என்னுள்
துள்ளி வளர்வதை
உணர்ந்து சிலிர்த்தேன்.
உங்கள் பாடல் காட்சிகளில்
இரு கையுயர்த்தி நீங்கள்
'இமய' தைரியம்
தந்திராவிட்டால்...
நேற்றைய என் கனவுகள்
காவியுடை பூண்டிருக்கும்.
'எங்கே போய் விடும் காலம்?!' என்று
நீங்கள் கரம் உயர்த்திப் பாடிய போது...
பொறுமை காத்து...ஆனால்
தலை உயர்த்திக் காத்திருந்தன
எனது திறமைகள்.- - -
உங்கள்...
கம்பு வீசும் சாகசங்களில்
பித்தனானேன்.
கத்திச் சண்டைகளில்
முத்தியடைந்தேன்!
நல்ல நேரம்' படத்தில்
சுருண்ட முடி நெற்றியில் சுந்தரம் கூட்ட
மஞ்சள் உடையுடன் மலையருவி போல் துள்ளிக் குதித்து
மாடிப் படியிறங்கிய
உங்கள் அழகில்
நான் வானம் ஏறினேன்! -
கிட்டத்தட்ட் 12 ஆண்டுகளுக்குப் பிறகு
'ஒளி விளக்கு'
மீண்டும் 'ராஜா'வில் ஏற்றி வைக்கப்பட்ட போது
எனக்கும் என் நண்பனுக்கும் [நெல்லியடி முரளி] இடையே..
ஒரு நூதனமான போட்டி!
'தைரியமாகச் சொல் நீ மனிதன் தானா?'
பாடல் காட்சியில் வரும்
நான்கு எம்.ஜி.ஆரில்
எந்த எம்.ஜி.ஆர் அதிக அழகு?
இந்தக் கேள்விக்கு விடை காண்பதற்காகவே
ஒளி விளக்கை
மீண்டும் மீண்டும் பார்த்தோம்.
சந்தோஷமாகத் தோற்றோம்!- - -
உங்கள் கணக்கில்
வரவு வைத்திருக்க வேண்டிய
வசந்தங்களை எல்லாம்
வறுமை...
விரட்டியடித்திருக்கிறது.
உங்கள் இளமைக் காலத்தின்
எண்பது சத வீதத்தை...
விதி...
வீணாக்கி இருக்கிறது.
உங்கள் கனவுகளுக்குக் கூட
மறுக்கப்பட்டது களம்.
கடவுள் மீதான நம்பிக்கையை நீங்கள்
கவிழ்த்துப் போடும் அளவுக்கு
உங்களைப் பந்தாடியிருக்கிறது
கடந்த காலம்.
பெரிய பெரிய திறமைகளை வைத்துக் கொண்டே
சின்னச் சின்ன வாய்ப்புகளுக்கும் கூட
நீங்கள்..
'பகீரதப் பிரயத்தனம்'
செய்ய வேண்டியிருந்தது.- - -
உங்கள் துவக்கப் பாதைகளில் எல்லாம்
தூவப்பட்டன அவமான முட்கள்.
உங்கள் கலைப் பயணத்தின்
பாதித் தூரம் வரைக்கும்
'சூழ்ச்சி'யெனும் தடைக் கற்கள்.
பாவம்....
உங்கள் 'மன வலிமை'யை
அவை உணரத் தவறின.
தடைக் கற்கள்-
உங்கள் கால்களுக்கும்
அவமானங்கள்-
உங்கள் மனதுக்கும்
உலுக்க முடியாத உறுதியைத் தந்தன!
ஏளனங்கள் எல்லாம்
உங்களை
ஒரு வேழமாய் மாற்றின!
எதிர்ப்புகள் எல்லாம்
உங்கள்
ஏணியாய் உயர்ந்தன!
ராமச்சந்திரன்
முகவரி தேடி வந்து
வட்டியும் முதலுமாக
அதிசயங்கள் நிகழ்த்த ஆரம்பிக்கிறாள்
அதிர்ஷ்ட தேவதை!
'ஒரு போதும் தோற்காது உண்மை உழைப்பு' என்று...
உங்கள் வெற்றி வாழ்க்கை
விளக்கு ஏந்தி வந்து
விளக்கம் சொல்கிறது.- - -
'யாம் பெற்ற துன்பம்
இரு மடங்காக
யாம் காண்பவர் எல்லாம் பெறுக...'
என்று அலையும்
சேடிஸ்ட்டுகள் செறிந்த உலகில்...
'யாம் பெற்ற துன்பம்
இனி யாருக்கும் வேண்டாம்' என்று
சத்துணவு தந்தீர்கள்.
இல்லாதவரை எல்லாம் தேடிப் பிடித்து
அவர்கள் தேவைள் படித்தறிந்து
அதனிலும் மேலாக
அள்ளித் தந்தீர்கள்.
போனால் போகட்டும் என்று கொடுத்தால் கூட
அளந்து கொடுக்கின்ற சிறிய உலகில்
கணக்குப் பார்க்காமல் வாரிக் கொடுத்தது
கண்டிக் கர்ணனின் 'பெரிய' மனம்.- - -
உங்களைப் பழித்தவர்களாக இருந்தாலும்
அவர்கள் ஒடிந்து நின்ற காலங்களில்
ஓடிப் போய்
உதவியிருக்கிறீர்கள்.
ஆரம்ப காலங்களில் உங்கள்
கைக்கு எட்டிய வாய்ப்புகளை...
வாய்க்கு எட்டாமல்
தட்டி விட்டவர்கள்...
பின்பு..வாழ்ந்து கெட்டு
உங்கள் வீட்டுக் கதவை வந்து தட்டிய போது...
உங்கள் மனக் கதவையும்
அகலமாகவே அவர்களுக்காக
திறந்து வைத்தீர்கள்.- - -
இறப்பு என்பது...
இயற்கையின் நிஜம்.
ஆனால்...என்னைப் பொறுத்தவரையில்...
இந்த இருவர் மரணமும்
உண்மைக் கலப்பற்ற பொய்கள்!
ஒருவர்...என் தந்தை!
மற்றவர்...நீங்கள்!
- யாழ் சுதாகர்.............Png
-
''எம்.ஜி.ஆர். குறித்த நூல்கள்'' மறைந்த தமிழக முதல்வர் டாக்டர் எம்.ஜி.ஆர் மறைந்து விட்டாலும், இன்னும் மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்று வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார். அவரைப் பற்றி வெளியாகியுள்ள பல நூல்கள் இன்னும் அவரை ஞாபகப்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. அவரைப் பற்றி வெளியான நூல்கள் பற்றிய விபரங்களின் தொகுப்பு கீழே... தமிழ் நூல்கள்
1. முதலமைச்சர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் - டி.வி.சிவப்பிரகாசம்,வெளியீடு - கல்வி உலகம், இளந்தேரி (1977))
2. புரட்சித்தலைவரின் பொன்மொழிகள் (ஆசிரியர் – சாலி.இக்பால், வெளியீடு – நூர் பதிப்பகம், சென்னை (1980))
3. மக்கள் திலகம் இருவரலாற்றுப்படை (ஆசிரியர் – புலவர்.கே.பெரு.திருவரங்கன்,வெளியீடு - இராமலட்சுமி பதிப்பகம் , சென்னை (1980))
4. அண்ணனுக்குப் பின் மன்னன்,(ஆசிரியர் – அடியார்,வெளியீடு - மல்லி பதிப்பகம், சென்னை (1978))
5. மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – வித்துவான் வே.லட்சுமணன்,வெளியீடு – வானதி பதிப்பகம், சென்னை (1985))
6. புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன்,வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1983))
7. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு - அறிஞர் அண்ணா பதிப்பகம், சென்னை (1979))
8. வரலாற்று நாயகன் (ஆசிரியர் – திருமூலன்,வெளியீடு – கவிதா பப்ளிகேசன்ஸ் , சென்னை (1978))
9. காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன்,வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ் , சென்னை (1985))
10.எம்.ஜி.ஆர். என் இதயக்கனி (ஆசிரியர் – அறிஞர் அண்ணா, தொகுப்பு- ஆர்.சீனிவாசன்,வெளியீடு – சத்தியத்தாய் பதிப்பகம் , சென்னை (1984))
11. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். பிள்ளைத்தமிழ் (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம்,வெளியீடு – நீரோட்டம் வெளியீடு , சென்னை (1981))12. அண்ணா தி.மு.க. வரலாறு (ஆசிரியர் – ஆர்.ரெங்காராவ்,வெளியீடு – செவ்வாய் வெளியீடு , சென்னை (1986))
13. நெஞ்சில் ஆடும் தீபம் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் டி.கே.மதியானந்தம்,வெளியீடு – கவிதாபானு, சென்னை (1983))
14. சத்துணவும் சத்துணர்வும் (ஆசிரியர் – கிருஷ்ணகாந்தன்,வெளியீடு – வள்ளி புத்தக நிலையம், சென்னை (1984))
15. அறிஞர் அண்ணா நமக்கு அறிவூட்டுகிற கடவுள் ( எம்.ஜி.ஆர். சொற்பொழிவுகள்) (ஆசிரியர் – தொகுப்பு-கழஞ்சூர் சொ.செல்வராஜ்,வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், சென்னை (1985))
16. தங்கத்தமிழர் எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மாணிக்கம்-சீனிவாசன், வெளியீடு – வெல்கம் பப்ளிகேஷன்ஸ் , சென்னை (1986))
17. எம் தலைவன் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன்,வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1987))
18.அமெரிக்காவில் அண்ணா, எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – டாக்டர்.எம்.எஸ்.உதயமூர்த்தி,வெளியீடு – வித்வான் பதிப்பகம், சென்னை (1975))
19. பொன்மனமே நீடு வாழ்க (கவிதை) (ஆசிரியர் – ராஜவர்மன், வெளியீடு – ஏ.எஸ்.ஆர்.பப்ளிகேசன்ஸ், சென்னை (1984))
20. மக்கள் தலைவருக்கு மன்றத்தலைவர் டாக்டர் பட்டம்- சேலத்தில் எடுத்த விழா மலர் (ஆசிரியர் – தஞ்சை வி.எஸ்.இராசு, வெளியீடு – புரட்சிக்குயில் பப்ளிகேசன்ஸ், சென்னை (1983))
21. சரித்திரத்தை மாற்றிய சத்புருஷர் (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1986))
22. நினைவுகளின் ஊர்வலம் (ஆசிரியர் – கவிஞர் புலமைப்பித்தன், வெளியீடு – திருமகள் நிலையம், சென்னை (1986))
23. எமனை வென்ற எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தஞ்சை தமிழழகன், வெளியீடு - மக்கள் பதிப்பகம், சென்னை (1985))
24. டாக்டர் எம்.ஜி.ஆர் ஒரு பொருளாதார வல்லுநர் (ஆசிரியர் – அ.வசந்தகுமார், வெளியீடு – கண்ணம்மாள் பதிப்பகம், சென்னை (1985))
25. பொன்மனச் செமமலும், புன்னகை மலர்களும் (ஆசிரியர் – எஸ்.குலசேகரன், வெளியீடு - அமிழ்தம் பதிப்பகம், சென்னை (1985))
26. தெற்கு என்பது திசை அல்ல (கவிதை) (ஆசிரியர் – வலம்புரிஜான், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984))27. சரித்திர நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – பாலாஜி, வெளியீடு – கீதா பிரசுரம், சென்னை (1987))
28. டாக்டர். எம்.ஜி.ஆர் வீரக்காவியம் (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))
29. அப்பலோ டு அமெரிக்கா (ஆசிரியர் – பா.ஜீவகன், வெளியீடு – மேத்தா பிரசுரம், சிவகாசி (1985))
30. சத்துணவு பாடல்கள் (ஆசிரியர் – புலவர்.பி.வெங்கடேசன், வெளியீடு - அறிவரசி பதிப்பகம், தருமபுரி (1984))
31. இந்தி ஆதிக்கப் போரில் புரட்சித்தலைவர் (ஆசிரியர் – கவிஞர் மணிமொழி-நாஞ்சில் நீ.மணிமாறன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987))
32. நான் ஏன் பிறந்தேன்? (ஆசிரியர் – வேலன், வெளியீடு – வேல் பாண்டியன் பிரசுரம், சென்னை (1988))
33. புரட்சித்தலைவர் அரசின் சமதர்மச் சட்டங்கள், (ஆசிரியர் – கா.சுப்பு, வெளியீடு - அண்ணா தொழிற்சங்கப் பேரவை, சென்னை (1984))
34. நான் கண்ட எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985))
35. எம்.ஜி.ஆர் ஒரு குமணன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – தில்லை நாயகி பதிப்பகம், சேலம் (1988))
36. முப்பிறவி எடுத்த முதல்வர் (ஆசிரியர் – திருப்பூர் வெ.சம்பத்குமார், வெளியீடு - சாயிகீதா பதிப்பகம், சென்னை (1985))
37. சொல்லும் செயலும் (ஆசிரியர் – ஆ.அசோக்குமார், வெளியீடு – நியூ ஸ்டார் பப்ளிகேசன்ஸ், சென்னை (1985))
38. செந்தமிழ் வேளீர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – புலவர்.செ.இராசு, வெளியீடு – கொங்கு ஆய்வு மையம், ஈரோடு (1985))
39. எம்.ஜி.ஆர் சரணம் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு - நெய்தல் பதிப்பகம், சென்னை (1988))
40. எம்.ஜி.ஆர். ஒரு சகாப்தம் (ஆசிரியர் – நியூஸ் ஆனந்தன், வெளியீடு – தனலட்சுமி பதிப்பகம், சென்னை (1981))
41. 1980-85 சட்டமன்ற நாடாளுமன்ற வேட்பாளர்கள் (ஆசிரியர் – எம்.சுப்பிரமணியம், வெளியீடு – சித்ரா பப்ளிகேசன்ஸ், சென்னை (1986))
42. சாதனைப்பூவின் சரித்திர வசந்தம் (ஆசிரியர் – டாக்டர் ஜெகத்ரட்சகன், வெளியீடு – அப்போலா வெளியீடு, சென்னை (1988))
43. முப்பிறவி கண்ட முதல்வர் (ஆசிரியர் – டி.எம்.சௌந்திரராஜன், வெளியீடு - ரேவதி பதிப்பகம், சென்னை (1985))
44. செம்மலின் பொன்மனம் (ஆசிரியர் – கவிஞர்.ச.பஞ்சநாதன், வெளியீடு – என்.எஸ்.பப்ளிகேசன்ஸ், மதுரை (1988))
45. புரட்சியார் ஒரு காவியம், (ஆசிரியர் – கவிஞர்.தெ.பெ.கோ.சாமி, வெளியீடு - சித்ரா பதிப்பகம், வேலூர் (1987))
46. எம்.ஜி.ஆர்.உயில்களும் உயில் சாசன சட்டங்களும் (ஆசிரியர் – வை.சண்முகசுந்தரம், வெளியீடு – கலைக்கருவூலம், சென்னை (1988))
47. புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்.உலா (ஆசிரியர் – கவிஞர் முத்துலிங்கம், வெளியீடு – பூம்புகார் பிரசுரம், சென்னை (1983))
48. மக்கள் திலகம் பற்றிய மாணவராற்றுப்படை (ஆசிரியர் – மாருதிதாசன், வெளியீடு - அருள்ஜோதிப் பதிப்பகம், நாமக்கல் (1981))
49. உலா வரும் உருவங்கள் (கவிதை) (ஆசிரியர் – கவிஞர் இளந்தேவன், வெளியீடு – கவிதாபானு, சென்னை (1984))
50. அ.இ.அ.தி.மு.க வின் தோற்றமும் வளர்ச்சியும் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1985))51. சந்திரனைப் போற்றும் நட்சத்திரங்கள் (ஆசிரியர் – நாகை தருமன், வெளியீடு – புதியபூமி பதிப்பகம், சென்னை (1987))
52. புரட்சித்தலைவர் அவர்களுக்கு அறிஞர்கள் புகழ் மாலை (ஆசிரியர் – கழஞ்சூர் சொ.செல்வராஜி, வெளியீடு – குத்தூசி குருசாமி பதிப்பகம், வேலூர் (1985))
53. வெற்றித்தலைவர் வீர வரலாறு (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))
54. எம்.ஜி.ஆர். ஒரு காவியம் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லை பதிப்பகம், சேலம் (1987))
55. ஜீவ நதிகள் (ஆசிரியர் – கலைமாமணி மா.லட்சுமணன், வெளியீடு - அன்னை ஜே.ஆர். பதிப்பகம், சென்னை (1988))
56. புரட்சித்தலைவர் புகழ் அந்தாதி, (ஆசிரியர் – மலேசியக் கவிஞர் ஐ.உலகநாதன், வெளியீடு - தாமரைப் பதிப்பகம், சென்னை (1985))
57. தந்தை பெரியார் முதல் புரட்சித்தலைவர் வரை (ஆசிரியர் – ஏ.கே.வில்வம், வெளியீடு - ரோமா பதிப்பகம், சென்னை (1985))
58. வள்ளலும் உள்ளமும் (ஆசிரியர் – டாக்டர்.எஸ்.தங்கமணி, வெளியீடு - ஆரோம் பதிப்பகம், குமரி (1987))
59. நடிகர் திலகமும் புரட்சித்தலைவரும் (ஆசிரியர் – ரசிகன் அருணன், வெளியீடு - அருணா பப்ளிசிட்டி, சென்னை (1987))
60. திருக்குறள் பாதையில் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1984))
61. எம்.ஜி.ஆர் பெயரில் மன்றம் தேவையா? (ஆசிரியர் – திருவை ஆ.அண்ணாமலை, வெளியீடு – நெல்சன் பதிப்பகம், சென்னை (1961))
62. தர்மம் வென்றது (ஆசிரியர் – ஜெ.பாலன், வெளியீடு – நெய்தல் வெளியீடு, சென்னை (1987))
63. எம்.ஜி.ஆர் கதை பாகம்-1 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு – ஜியோ பப்ளிகேசன்ஸ், சென்னை (1989))
64. மறு பிறவி கண்ட மக்கள் திலகம் (ஆசிரியர் – எம்.ஜி.ஆர் தாசன், வெளியீடு – கன்னிப் பதிப்பகம், சென்னை (1985))
65. சத்தியா மைந்தன் சாதனை (ஆசிரியர் – ஜெயா பொன்முடி, வெளியீடு - ஸ்ரீ லட்சுமி பதிப்பகம், சென்னை (1988))66. தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு – மறைதிரு எம்.ஏ.கோலாஸ், சேலம் (1978))
67. சத்துணவு நாயகன் (ஆசிரியர் – கவிஞர் வாழை வளவன், வெளியீடு - தில்லைநாயகி பதிப்பகம், சேலம் (1987))
68. இதயவானில் உதய நிலவு (ஆசிரியர் – தண்டு குன்னத்தூர் தமிழன், வெளியீடு - இளவளகி பதிப்பகம், வேலூர் (1985))
69. பரிபூரண அவதாரம் (நாடகம்) (ஆசிரியர் – டாக்டர் கோ.சமரசம், வெளியீடு – கோணப்பர் பதிப்பகம், சென்னை (1985))
70. எம்.ஜி.ஆர் கதை பாகம்-2 (ஆசிரியர் – எஸ்.விஜயன், வெளியீடு - அருள்மொழி பதிப்பகம், சென்னை (1991))
71. எம்.ஜி.ஆர் பொருளாதார அடிப்படை சரிதானா? (ஆசிரியர் – கி.வீரமணி, வெளியீடு – திராவிடர் கழக வெளியீடு, சென்னை (1982))
72. நிலவை நேசிக்கும் நெஞ்சங்கள் (ஆசிரியர் – இனியவன், வெளியீடு – அவ்வை மன்றம், சென்னை (1986))
73. புரட்சித்தலைவர் பிள்ளைத் தமிழ் (ஆசிரியர் – கவிஞர் அக்கினிப்புத்திரன், வெளியீடு - குறளகம், பழனி (1988))
74. புரட்சித்லைவர் எம்.ஜி.ஆர். வீர வரலாறு (ஆசிரியர் – ஜோதிமணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சிவகாசி (1993))
75. எம்.ஜி.ஆர் நிழலும் நிஜமும் (ஆசிரியர் – மோகன்தாஸ், வெளியீடு – பந்தர் பப்ளிகேசன்ஸ், பெங்களுர் (1993))
76. காலத்தை வென்றவர் (ஆசிரியர் – மணியன், வெளியீடு - இதயம் பதிப்பகம், நாகப்பட்டினம் (1991))
77. சரித்திர நாயகர் எம்.ஜி.ஆர். சாதனைகள் (ஆசிரியர் – லேனா தமிழ்வாணன், வெளியீடு – மணிமேகலை பிரசுரம், சென்னை (1991))
78. சரித்திரம் படைத்த எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – ஏ.கே.சேஷய்யா, வெளியீடு – மயிலவன் பதிப்பகம், சென்னை (1993))
79. மக்கள் தலைவர் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – கு.சண்முகசந்தரம், வெளியீடு – குமரன் பதிப்பகம், சென்னை (1992))
80. எம்.ஜி.ஆர். ஓர் ஆய்வு (ஆசிரியர் – மு.தம்பித்துரை எம்.ஏ, வெளியீடு – ஞானச்சுடர் பதிப்பகம், சென்னை)
81. தலைவனே எங்களுக்குத் தத்துவம் (ஆசிரியர் – மெய்க்கீர்த்தி, வெளியீடு - அன்னை சத்யா புத்தகப்பண்ணை, சென்னை (1978))
82. எம்.ஜி.ஆர் ஆட்சியும் சிவாஜி ரசிகர்களும் (ஆசிரியர் – எஸ்.வீரபத்திரன், வெளியீடு – புரட்சியார் ரசிகன், சென்னை (1985))
83. அண்ணா கொள்கைக்கு நாமம் (ஆசிரியர் – விடுதலை தலையங்கங்கள், வெளியீடு – திராவிடக்கழக வெளியீடு, சென்னை) 84. வெற்றி நமதே (ஆசிரியர் – ஜோதி மணவாளன், வெளியீடு – ஜோதி பப்ளிகேசன்ஸ், சென்னை (1991))
85. அரசும் தமிழும் (ஆசிரியர் – ஒப்பிலா மதிவாணன், வெளியீடு - தமிழ்ச்சுரங்கம், மதுரை (1986))
86. தன்னிறைவுத் திட்டத்தில் தமிழகம் (ஆசிரியர் – குமரிச் செல்வன், வெளியீடு - நாகர்கோவில் (1982))
87. காலத்தை வென்ற காவிய நாயகன் எம்.ஜி.ஆர் (ஆசிரியர் – தேனி ராஜதாசன், வெளியீடு - மணிமேகலைப் பிரசுரம், சென்னை (2010))...mj
-
எந்த கட்சி என்ன மதம் ஆத்தீகனா நாத்தீகனா என கடவுள் பார்பதில்லை நல்லவனுக்கு உதவுவார் எம் ஜி ஆரும் அது போல் தான்
கம்மியூனிஸ்ட் தலைவரும் சுதந்திர தியாகியும் ஆன ஜீவா சிலை அமைக்க கம்மியூனிஸ்ட் கட்சி தா பாண்டியன் தலைமையில் முடிவு எடுத்து பணம் மிகுத்த பிரமுகர்களிடம் நிதி சேர்க்கிறார்கள் பாதி தொகை கூட சேரவில்லை அப்போ தான் எம்ஜிஆர் மட்டுமே உதவ முடியும் என்று எம்ஜிஆரிடம் நிதி கேட்க முடிவாகிறது அப்போது கட்சியில் முக்கிய பொறுப்பில் உள்ள பாலசுப்பினமணியன் எம் ஜி ஆரை கடும் விமர்சனம் செய்பவர் அவர் எம் ஜி ஆரை காண தயங்கியவாறு செல்கிறார் தோட்டம் வந்த கம்மியூனிஸ்ட் தலைவர்களை உண்ண வைத்து கேட்கிறார் என்ன வேண்டும் என எம் ஜி ஆர் ஜீவா சிலை அமைக்க நிதி தந்து உதவ வேண்டுகிறார்கள் கம்மியூனிஸ்ட் தலைவர்கள் உடனே எம் ஜி ஆர் நல்ல விஷயம் சிலை அமைக்கும் அத்தனை சிலவையும் நானே தருகிறேன் என கூறும் எம்ஜிஆரை பார்த்து திகைத்து நிற்க்கிறார்கள் சிறு நிதி எதிர்பார்த்து வந்தவர்கள்
ஆன்மீக சுவாமி கிருபானந்த வாரியார் திருபணியாக ஒரு கல்லியாண மண்டபம் கட்ட நிதி திரட்டுகிறார் பல பணக்கார ஆன்மீகவாதிகளிடம் நிதி வசூல் செய்தும் பணி முடிக்க முடியாமல் கடைசியில் எம் ஜி ஆரை சந்தித்து நிதி கேட்க வந்த சுவாமிகளை உண்ணவைத்து என்ன எதிர்பார்க்கிறீர்கள் என எம் ஜி ஆர் கேட்க உங்கள் மனம் போல் தாருங்கள் என சுவாமி கூற எம் ஜி ஆர் ஒரு செக்கில் தொகை எழுதாமல் கையொப்பம் இட்டு கொடுக்கிறார் சுவாமி உங்களுக்கு எவ்வளவு தேவையோ அதை எழுதி கொள்ளுங்கள் என எம் ஜி ஆர் கூற திகைப்போடு பெற்று கொண்டு கல்லியாண மண்ட்டபம் திறப்பு விழாவில் பல பிரமுகர்கள் மத்தியில் பொன்மனசெம்மல் எம் ஜி ஆர் என்ற பட்டம் சூட்டி மகிழ்ந்தார் சுவாமி
நல்லோர் லட்சியம் வெல்ல
எம் ஜி ஆர் துணை நிற்ப்பார்
வாழ்க எம் ஜிஆர் புகழ்..........Arm
-
தமிழ்நாட்டில் நல்லாட்சிக்கு 2 உதாரணங்கள். காமராஜர் ஆட்சி, எம்ஜிஆர் ஆட்சி, அவ்வளவுதான்! காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று சொல்லிக் கொண்டிருந்த காங்கிரஸ் கட்சி, தற்போது ஸ்டாலின் அடுத்த முதல்வர் என்று சொல்கிற திமுக கூட, ‘கருணாநிதி ஆட்சி அமைப்போம்’ என்று சொல்வதில்லை. ‘நல்லாட்சி அமைய எங்களுக்கு ஓட்டுப் போடுங்கள்’ என்றுதான் சொல்கிறார்கள்.
நான் எம்ஜிஆர் மடியில் அமர்ந்து வளர்ந்தவன் என்றுதேர்தல் பிரச்சாரத்தில் கமல் சொல்கிறார். சிவாஜி மடியில்அமர்ந்து வளர்ந்தவன் என்று கூட கமல் சொல்லியிருக்கிறார். எம்ஜிஆர் கட்சி தொடங்க இருந்த நேரம், ‘உலகம்சுற்றும் வாலிபன்’ படம் ரிலீசாகக் கூடாது என்று அன்றைய ஆளும் கட்சியான திமுக எல்லா முயற்சிகளையும் செய்தது.மதுரையில், உலகம் சுற்றும் வாலிபன் படம் திரையிடப்பட்டால், நான் புடவை கட்டிக் கொள்கிறேன் என்று வீரவசனம் பேசினார் மதுரை முத்து. அதன் பிறகு அவர் அதிமுக.வில்சேர்ந்தார்! படம் வெளியே வரவிடாமல் முடக்கி பொருளாதார ரீதியாக எம்ஜிஆருக்கு கடும் நெருக்கடியைத் தர வேண்டும் என்பதுதான் அன்று சிலருடைய திட்டம். படப்பெட்டியை திரையரங்குகளுக்கு எடுத்துச் செல்ல விடாமல் தடுப்பது, சுவரொட்டிகள் ஒட்டவிடாமல் இடைஞ்சல் செய்வது அல்லது ஒட்டிய சுவரொட்டிகளை கிழிப்பது என்று எல்லா வகையிலும் எம்ஜிஆரை பயமுறுத்தி பார்த்தனர். ஆனால் இந்த சவால்களை எல்லாம் சமாளித்து படத்தை திரையிட்டார் எம்ஜிஆர். எதிர்ப்பே அவருக்கு இலவச விளம்பரம் ஆனது. அந்தப் படம் அவருக்கு வெற்றி படம். வசூலிலும் சாதனை செய்தது.
எம்ஜிஆர் தொடங்கிய சத்துணவு திட்டம் மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னுதாரணம். அவரைத் தொடர்ந்து மற்ற மாநில முதல்வர்கள் அந்த திட்டத்தை செயல்படுத்தினார்கள். சத்துணவுக்கு என்று தனித்துறை, தனிஅமைச்சர் எல்லாம் எம்ஜிஆர் தொடங்கியது. நியாய விலைக் கடைகளில் எம்ஜிஆர் ஆட்சியில் அரிசி விலை 2 ரூபாய்தான். ரவை, மைதா, சர்க்கரை, பாமாயில், பள்ளி சிறுவர்களுக்கான சீருடை ஆகியவை கூட நியாய விலை கடையில் கிடைத்தன. அவை எல்லாமே தரமானவை. ரேஷன் அரிசி விலையை உயர்த்தவில்லை என்று மத்திய அரசு தமிழக அரசுக்கு தர வேண்டிய மத்திய தொகுப்பு அரிசியை தரமாட்டோம் என்று சொன்னது. எம்ஜிஆர் அதை கண்டித்து அண்ணா சமாதியில் உண்ணாவிரதம் இருந்தார். மத்திய அமைச்சர் அலறி அடித்துக் கொண்டு ஓடி வந்து அப்படியெல்லாம் நடக்காது என்று உத்தரவாதம் தந்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.
எம்ஜிஆர் மூன்று முறை முதல்வரானார். அவரால் நல்லாட்சி தர முடியும் என்று தமிழக மக்கள் நம்பினார்கள். அவர் ஆட்சியில் அதிகாரம் பரவலாக்கப்பட்டது. அவர் மக்கள் தொட்டுவிடும் தூரத்தில்தான் இருந்தார். எம்ஜிஆரை யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம். ரஜினி பிறந்த நாளன்று அவர் வீட்டு வாசலில் காத்திருந்தவர்களை சந்திக்கவில்லை. ஒரு பெண்மணி கதறி அழக்கூட செய்தார். குறைந்தபட்சம் அவரதுகுடும்ப உறுப்பினர்களாவது அவர்களை சந்தித்து இருக்கலாம். அது கூட செய்ய முடியவில்லை.
தவறுகளை சுட்டிக்காட்டும் போது அதைத் திருத்திக் கொள்ள எம்ஜிஆர் என்றுமே தயங்கியது கிடையாது. ஒரு முறை நிருபர் ஒருவர், என்டிஆரிடம், எம்ஜிஆருடன் உங்களை எப்படி ஒப்பிடுவீர்கள் என்று கேட்ட போது ‘‘அவரோடு என்னை ஒப்பிட சொன்னால், என்ன பதில் சொல்ல முடியும். எம்ஜிஆர் கடவுள்; அவரை என்னோடு எப்படி ஒப்பிட முடியும்’’ என்று ‘ஆந்திராவின் கடவுள்’ என்டிஆர் சொன்னார்.
எம்ஜிஆர் ஏதோ திடீரென புதுக்கட்சி தொடங்கி ஆட்சி அமைத்ததாக நினைக்கிறார்களோ என்னவோ. அண்ணாவிடம் அரசியல் கற்றவர். என் இதயக்கனி என்று எம்ஜிஆரை அண்ணா கொண்டாடினார். ‘நீ முகத்தை காட்டினாலே 30 லட்சம் ஓட்டு’ என்று எம்ஜிஆரை பற்றி அண்ணா சொன்னது உண்மைதான். இப்போது இருப்பவர்கள் எம்ஜிஆர் வரலாறு பற்றி சரியாக படிக்கவில்லையோ என்னவோ?
மதுரையை இரண்டாம் தலைநகரமாக மாற்றுவேன்; எம்ஜிஆர் கனவை நிறைவேற்றுவேன் என்று சொல்லியிருக்கிறார் கமல்ஹாசன். ஆனால், எம்ஜிஆர் திருச்சியைதான் இரண்டாம் தலைநகரமாக்க விரும்பினார். அப்போதைய அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம், திருச்சி - தஞ்சாவூர் செல்லும் வழியில் காட்டூர் என்ற கிராமத்தை ஒட்டியுள்ள இடத்தை தேர்ந்தெடுத்தார். ஆனால், அது அதிக செலவை ஏற்படுத்தும் என்பதாலும் எதிர்க்கட்சிகள் அதை கடுமையாக எதிர்த்ததாலும் அந்த திட்டத்தை எம்ஜிஆர் கைவிட்டார்.
எம்ஜிஆர் ஏழை மக்களின் நண்பன். இல்லாதவர்களுக்கு கொடுக்கும் வள்ளல். இந்த இரண்டும் இன்று இருப்பவர்களுக்கு பொருந்துமா என்று தெரியவில்லை. ‘பெண்கள் தங்கள் கணவர்களின் பேச்சை கூட கேட்க மாட்டார்கள்; என் பேச்சை கேட்பார்கள்’ என்று பெருமிதமாக சொன்னார் எம்ஜிஆர். மற்றவர்கள் அப்படி சொல்ல முடியுமா?
நடிகர்கள் நாடாளலாமா என்று கேட்ட போது, எம்ஜிஆர் பதில் சொல்லவில்லை, செயல்மூலம் காட்டினார். அதனால்தான் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு கூட அந்த கட்சி ஆட்சி அமைத்தது. ஜெயலலிதா கூட தேர்தல் பிரச்சாரத்தின் போது எம்ஜிஆர் பெயரை உச்சரித்தால்தான் ஓட்டு விழும் என்ற கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார். அவர் பெயரை சொல்லிதான் ஆட்சி அமைத்தார். எம்ஜிஆர் அறிமுகப்படுத்திய இரட்டை இலை சின்னம், தமிழ்நாட்டில் இன்று வரை தவிர்க்க முடியாத சக்தியாக இருக்கிறது. எம்ஜிஆர் என்பது மகத்தான மாயாஜால சக்தி. அதனால்தான் அந்த சக்திக்கு இத்தனை போட்டி. முதல்வர் பதவி அவருக்குப் பெருமை சேர்க்கவில்லை. முதல்வர் பதவிக்கு அவர் பெருமை சேர்த்தார் என்றே சொல்லலாம்.
ரஜினி, கமல்தான் என்றில்லை... சினிமாவிலிருந்து வரும் எல்லோருமே எம்ஜிஆர் ஆகிவிடுவார்களா என்பதற்கு வாக்காளப் பெருமக்கள் தக்க பதில் வைத்திருப்பார்கள்..........Aiyapp.das
-
புராண கர்ணனை வென்றார் கலியுக கர்ணன் எம் ஜி ஆர் ...
சிலர் கேட்டனர் எப்படி?!
புராண கர்ணன் அன்னதானம் செய்யவில்லை ஆனால் ஒருதடவை ஒருவருக்கு அன்னதானம் நடக்கும் இடத்தை காட்டியதால் அடைந்தார் சொர்க்கம் இது புராணகதை
நம் கலியுக கர்ணன் ராமாவரம் தோட்டம் 24 மணி நேரம் அணையா அடுப்போடு அன்னதானம் செய்தார் எம் ஜி ஆர்
அதுவும் தன்னை காணவரும் தோட்டம் வரும் எவரும் பசி ஆற உண்டே காண்பார் எம் ஜி ஆர்
தான் உண்ணும் போது 20 நண்பர்களுடனே உண்பது வழக்கம் மற்றவர் விரும்பி உண்பதை உடனே வழங்க வைப்பார் எம் ஜி ஆர்
காமராஜை பல முறை விருந்துக்கு அழைக்க வர மறுக்கும் காமராஜ்யிடம் ஏன் மறுக்கிறீர்கள் என எம்ஜிஆர் கேட்க காமராஜ் ராமசந்திரா விருந்துக்கு வரகூடாது என்று அல்ல நான் ஒரு வித உணவோடு வாழ்கிறேன் உன் வீட்டின் சாப்பிட்டின் ருசி மகத்துவம் பலர் கூறி கேட்டுள்ளேன் ஒரு முறை வந்து உண்டால் என் நாக்கு தினம் அதை கேட்கும் அதனால் தான் மறுக்கிறேன் என கூறினார்
உணவு ஊட்டுவதில் தாய்க்கு நிகர் எம்ஜி ஆர் ஒரு மேல் மட்ட அதிகாரி எழுதிய நூலில் இப்படி எழுதியுள்ளார் ஒரு முறை நான் கோட்டையில் பணியில் உள்ள போது எம்ஜி ஆர் தோட்டத்தில் இருந்து சி எம் அழைப்பு வர உடனே சென்ற என்னை வரவேற்ற சி எம் வாங்க சாப்பிடுவோம் என அழைக்க ஏதோ அவசரமா அழைத்தீர்களே என தயக்கமாக கேட்க ஒன்றும் இல்லை முன்பு ஒரு முறை ஒரு கூட்டம் இங்கு நடந்ததே அதில் பங்கு கொண்ட நீங்கள் அன்று இங்கு உணவு உண்டீர்கள் அன்று ஒரு உணவு பரிமாறபட்டது அதை நீங்கள் விரும்பி உண்டீர்கள் அது அபூர்வமாக இங்கு தயாரிக்க படும் இன்று அந்த உணவு என்ற உடன் உங்கள் முகம் நினைவில் வந்தது அது தான் உண்ண அழைத்தேன் என கூற நான் ஒருகணம் மலைத்து நின்றேன் எதிரே நிற்பது என் அன்னையா எம் ஜி ஆரா என என் தாய்போல் எனக்கு காட்சி அளித்தார் அன்று உண்மை அன்போடு
மக்வான என்ற மத்திய மந்திரி இருந்தார் தமிழகம் வரும் போது எல்லாம் எம்ஜிஆரையும் எம் ஜி ஆர் ஆட்சியையும் விமர்சித்து கொண்டே இருந்தார் ஒரு நாள் எம் ஜி ஆர் வீட்டில் விருந்து உண்ணும் சந்தர்ப்பம் வாய்க்க அதன் பின் எப்போதும் எம் ஜி ஆர் புராணமே மனிதநேயம் அன்பு க்கு எம் ஜி ஆரே எடுத்து காட்டு என்று
சிறுவயதில் உண்ண உணவு இன்றி தவித்த எம் ஜி ஆர்
பிற்க்காலத்தில் அன்னதானத்தில் மன்னன் ஆனார்
வாழ்க எம். ஜி. ஆர்., புகழ்.........arm
-
முகநூல் நண்பருக்கு இனிய வணக்கம் ...
Two commemorative coins in the denomination of Rs 100 and Rs 5 were released Thursday on 17th January, 2019 to mark the 102nd birth anniversary of late Tamil Nadu Chief Minister and ruling AIADMK founder M G Ramachandran.
Chief Minister K Palaniswami and Deputy Chief Minister O Panneerselvam released the coins at a function held in the Tamil Nadu Dr. MGR Medical University complex, Chennai
The coins bear the portrait of Ramachandran at the centre along with the inscription 'DR M G Ramachandran Birth Centenary' on the lower periphery.
The year '1917-2017' will be flanked below the portrait of Dr M G Ramachandran,
On the obverse side, the coins will bear the Lion Capital of Ashoka Pillar in the centre with the inscription 'Satyamev Jayte'.
The Rs 100 and Rs 5 coins will weigh 35 grams and 6 grams, respectively.
The Rs 100 coin will be made of silver (50 per cent), copper (40 per cent), nickel (5 per cent) and zinc (5 per cent).
The Rs 5 coin will be made of copper (75 per cent), zinc (20 per cent) and nickel (5 per cent)..........Vel NS
-
அந்த சிங்கத்துக்கு உணவு வகைகள் பரிமாறி அதன் உடன் நன்கு பழகி ஒரு உற்ற நண்பன் போல இருந்தவர் ஒரு பெங்காலி நபர்...ஆள் அழகா உயரத்தில் கம்மியாக இருப்பார்.
அவரையும் முழுதாய் தங்கள் உடன் வைத்து கொண்டு வரலாற்று தலைவர் படம் அடிமைபெண்ணில் 30 அடி பள்ளத்தில் தன் தாயை காக்க தலைவன் சிங்கத்துடன் போராடி வீழ்த்தும் காட்சி...
4 நாட்களில் இறுதி சண்டை காட்சி எடுக்க பட்டு விடும் என்ற நிலையில் அந்த காட்சி எடுக்க 3 மாதம் ஆகி விட்டது சத்தியமான உண்மை....
ஆரம்ப காட்சிகள் எடுக்க பட்ட பின் 4 நாட்கள் அந்த சிங்கம் எந்த உணவையும் எடுத்து கொள்ள மறுக்க....விஷயம் அறிந்த தலைவர் பட்டினி கிடக்கும் அதை வதைத்து எடுக்க படும் காட்சிகள் தவறு...
என்று சொல்லி பட பிடிப்பு தள்ளி போய் ஒருவாரம் சிங்கத்துக்கு சிறப்பு உணவுகள் நம் பொன்மனம் செலவில் வழங்க பட வீறு கொண்டு எழுந்தது அந்த சிங்கம்...
உற்சாகம் ஆக களம் இறங்கிய அதனுடன் மோதும் காட்சிகளில் தலைவர் உடை அமைப்பில் அந்த பெங்காலி நபரும் இருக்க காட்சிகள் மாறி மாறி எடுக்க பட்டன.
ஒரு காட்சியில் சிங்கத்தின் வாலை பிடித்து இழுக்கும் போது கடும் கோபம் கொண்டு சிங்கம் ஆத்திரத்தில் பாய்ந்து வர உணவு கொடுத்து பராமரித்து வந்த அந்த வடநாட்டு நபரே திகைத்து போக..
தயார் நிலையில் இது போல ஒரு சூழ்நிலை வந்தால் அந்த சிங்கத்தை மயக்கம் வரும் நிலையில் சுட சண்டை காட்சிகள் துணை இயக்குனர் ..
என்.சங்கர் கையிலும் பள்ளதுக்கு மேலே அசோகன் நிற்கும் அந்தவாயில் பகுதியில் இன்னும் ஒரு நபர் அவர் பெயர் நினைவுக்கு வரவில்லை... அவர் கையிலும் துப்பாக்கி இருக்க...
பாய்ந்து வந்த சிங்கத்தின் வாயில சங்கர் அவர்கள் துப்பாக்கியை திருப்பி கொண்டு செல்ல சிங்கம் கோபம் அடங்கி மூச்சு வாங்க.
மொத்த அரங்கமும் திகிலில் திகைக்க ஏதும் அறியா மாவீரன் போல பயம் இன்றி நின்றார் நம் மன்னவர்.
பவளவல்லி பதவி வெறி கொண்டு ஆத்திரத்தில் ஆள் மாறி பள்ளத்தில் விழ அவரை இழுத்து கொண்டு போகும் காட்சி எடுக்க பட்ட பின் சிங்கம் உடல் நிலை மீண்டும் வயிற்று போக்கால் அவதி கொள்ள...
மருத்துவர் வந்து மருந்துகள் அளித்து நன்கு உடல் நலம் பெற்ற பின் மீதி காட்சிகள் பார்ப்பவர் வியக்கும் வண்ணம் எடுத்து முடிந்து படம் வெளிவந்த போது அனைத்து நெஞ்சங்களும் அந்த இறுதி சண்டை காட்சிகள் பற்றியே பேச .
வட இந்திய பத்திரிகை கள்... இது போல ஒரு காட்டு ராஜாவுடன் மோதும் உண்மை காட்சிகள் இந்திய திரைப்பட வரலாற்றில் இல்லை என்று விமர்சனம் எழுத.
அதை படித்து அப்படி என்ன அந்த காட்சியில் இருக்கு என்று படம் பார்க்க வந்த இந்தி திரைப்பட வல்லுனர் ராஜ்கபூர் அவரே தன்னை மறந்து பொது இடம் என்று பார்க்காமல் எழுந்து நின்று விசில் அடித்து பாராட்டிய நிகழ்வுகள் நம் தானை தலைவருக்கு மட்டுமே சொந்தம் என்று பெருமை கொள்ளுவோம்...
படத்தின் இறுதி காட்சிகள் சிறப்பிக்க காரணம் ஆன துணை ஸ்டண்ட் நிபுணர் சங்கர் அவர்கள் தலைவர் முதல்வர் பொற் கரங்கள் கொண்டு விருது பெரும் படம் பதிவில்...
அந்த சிங்கத்தை பேணிய பெங்காலி நபருக்கு உரிய மரியாதை செய்து பெரும் தொகையை கொடுத்து வழி அனுப்பி வைத்த செயல் மறக்க மறுக்க முடியாத நிகழ்வுகள்.
வாழ்க தலைவர் புகழ்.
நன்றி...தொடரும்.
உங்களில் ஒருவன் நெல்லை மணி.
என் .சங்கர் அவர்கள் தலைவரின் இதயக்கனி படத்துக்கு இவரே ஸ்டண்ட் காட்சிகள் அமைப்பாளர்..
விவசாயி படத்தில் வரும் சேற்று சண்டை காட்சி நிபுணரும் இவரே ஆவார் என்பது துணை செய்திகள்...
காவல்காரன் படத்தில் தலைவரை பின்னால் இருந்து இவர் கத்தியால் குத்த வர தான் அமர்ந்து இருக்கும் நாற்காலியை எடுத்து அதை தடுக்கும் காட்சி அமர்க்களம் போங்க.............nmi