கனிந்த அல்லியோடு நிலவின் ஒளி நீ
காதல் யுவராஜன் அனார்கலி நீ
Printable View
கனிந்த அல்லியோடு நிலவின் ஒளி நீ
காதல் யுவராஜன் அனார்கலி நீ
ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது
இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது
காதில் கேட்டது ஒரு பாட்டு
காதல் பூத்தது அதை கேட்டு
பாட்டு ஒன்னு நான் பாடட்டுமா பால் நிலவ கேட்டு
நான் காலி நான் காலி…
மொத்தமா சேர்த்து இப்ப நான் காலி
பால்கனி காத்துல
வாசம் தான் கூடுதோ
வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது ... வைகை இல்லா மதுரை இது மீனாட்சியை தேடுது
வசந்த கால நதிகளிலே வைரமணி நீரலைகள்
நீரலைகள் மீதினிலே நெஞ்சிரண்டின் நினைவலைகள்
காலங்களில் அவள் வசந்தம்… கலைகளிலே அவள் ஓவியம்
வசந்த சேனா வசந்த சேனா
வசியம் செய்ய பிறந்தவள்தானா
நீயில்லாது நான் என்ன நானா சேனா
நான் என்பது நீ அல்லவோ. தேவ தேவி. இனி நான் என்பது நீ அல்லவோ. தேவ தேவி. தேவலோகம் வேறு ஏது.
தேவியின் திருமுகம் தரிசனம் தந்தது
தேவனின் அறிமுகம் உறவினைத் தந்தது
Wishing everyone a blessed Navarathri 🙌
தரிசனம் கிடைக்காதா தரிசனம் கிடைக்காதா என் மேல் கரிசனம் கிடையாதா கண்ணா
என் மேல் விழுந்த மழைத் துளியே
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்
மழை பொழிந்து கொண்டே இருக்கும்
உடல் நனைந்து கொண்டே இருக்கும்
மனம் நிறைந்து நிறைந்து
எண்ணம் வழிந்து வழிந்து
உயிர் மிதந்து கொண்டே இருக்கும்
உயிர் உருகுதே மனம் கரையுதே எனது வானே
ஒரு முறை தான் பார்த்தேன் உன்னை உன்னை
ஒரு தரம் ஒரே தரம் உதவி செய்தால் என்ன பாவம் இருவரும் அறிமுகம் ஆனதில் வேறென்ன லாபம்
இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
ஏங்குது மோகம்
மணி மாளிகை போல் ஒரு தேகம்
பாடுது ராகம்
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது
கதை போல தோணும் இது கதையும் இல்ல
இதை கலங்காம கேட்கும் ஒரு இதயம் இல்ல
இதயம் ஒரு
கோவில் அதில் உதயம்
ஒரு பாடல்
ஒரு பாடல் நான் கேட்டேன்
உன் பாசம் அதில் பார்த்தேன்
பார்த்தேன் சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
அன்று உனைத் தேன் என நான் நினைத்தேன்
உன்னை நினைத்து நான் என்னை மறப்பது அதுதான் அன்பே காதல் காதல்
அன்பே வா அழைக்கும் முன்பே வா
வெண் பஞ்சு மேகம் எங்கெங்கு போகும்
பஞ்சு மிட்டாய் சேலை கட்டி
பட்டுவண்ண ரவிக்கை போட்டுக்
கஞ்சி கொண்டு போறவளே
நெஞ்சுக்குள்ள நீ வாரிய
சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க ஜன்னல் வெச்ச ஜாக்கெட் போடவா தென்றல் அடிக்க மூக்குத்தியின் மின்னல்
மூக்குத்தி முத்தழகு
மூணாம்பிறை பொட்டழகு
பொள்ளாச்சி மண்ணில் விளைஞ்ச
நெல்லுமணி பல்லழகு
முத்துப்போல் பல்லழகி, முன்கோப சொல்லழகி, கத்திபோல் கண்ணழகி, கனிவான பெண்ணழகி
கண்ணழகா காலழகா
பொன்னழகா பெண் அழகா
எங்கேயோ தேடி செல்லும் விரல் அழகா
தேடினேன் வந்தது நாடினேன் தந்தது
வாசலில் நின்றது வாழவா என்றது
வாழ்ந்து பார்க்க வேண்டும்
அறிவில் மனிதனாக வேண்டும்
மனிதன் என்பவன் தெய்வம் ஆகலாம் வாரி வாரி வழங்கும் போது வள்ளல் ஆகலாம் வாழை போலே தன்னை தந்து தியாகி
வாழை மரம் கட்டி
வாழ நினைத்ததென்ன ஹோ
ஆளுக்கொரு பக்கம் காலம் பிரித்ததென்ன
பக்கத்து வீட்டு பருவ மச்சான்
பார்வையிலே படம் பிடிச்சான்
பார்வையிலே படம் பிடிச்சு
பாவை நெஞ்சில் இடம் பிடிச்சான்
மச்சான் மீசை வீச்சருவா மச்சினி எல்லாம் ஏங்கிடுவா
மச்சான் கண்ணு மந்திரமா சுத்தி போனேன் பம்பரமா
மச்சினிச்சி வர்ற நேரம் மண் மணக்குது மனசுக்குள்ள பஞ்சவர்ண கிளி பறக்குது
மணக்கும் மல்லிகை மஞ்சத்தில் விரிச்சு
கணக்கு பண்ணுங்க கன்னிப் பொண் இருக்கு மாமா
மாமா உன் பொண்ண கொடு ஆமா சொல்லி புடு
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
அவன் யாருக்காகக் கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்
யாருக்காக இது யாருக்காக இந்த மாளிகை வசந்த மாளிகை காதல் ஓவியம் கலைந்த மாளிகை யாருக்காக