சிட்னியில் அட்டகாசமாக 'வசந்த மாளிகை' வைபவத்தைக் கொண்டாடிய அருமை 'கோல்ட் ஸ்டார்' சதீஷ் அவர்களுக்கும், வியட்நாமில் கண்டுகளித்த கோபால் அவர்களுக்கும், மற்றவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Printable View
சிட்னியில் அட்டகாசமாக 'வசந்த மாளிகை' வைபவத்தைக் கொண்டாடிய அருமை 'கோல்ட் ஸ்டார்' சதீஷ் அவர்களுக்கும், வியட்நாமில் கண்டுகளித்த கோபால் அவர்களுக்கும், மற்றவர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
வசந்தமாளிகை . . . . . . .
திரு.முரளி அவர்கள் குறிப்பிட்டதைப்போல ஆல்பட் திரையரங்கில் நுழையும்போதே, வர்ணிக்கமுடியாத அளவிற்கு ஆரவாரத்தைக் கண்டு நமக்கும் உற்சாகம் பிறக்கிறது.
திரைப்படத்திற்கேற்றவாறே, நமது குடிமக்கள் டபுள் உற்சாகத்தில் இருந்தனர். ஆல்பட் திரையரங்கத்தின் அடுத்தார்போலவே தமிழக அரசின் உற்சாகபானக் கடைவேறு. கேட்கவும் வேண்டுமா? ஆடிக் களைப்புற்றவர்கள் அவ்வப்போது உற்சாகத்தை ஏற்றிக்கொண்டார்கள். ஆனாலும், உச்சக்கட்ட உற்சாகத்திலும் எல்லை மீறவில்லை நமது ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. (நிக்கமுடியாத அளவுக்குக் குடிக்கலை, நிதானத்தோடுதான் குடிக்கிறேன் .............. தலைவரின் வசனத்தைப் பின்பற்றும் தொண்டர்கள்!!!)
திரையரங்கினுள்ளும் அவ்வாறே! (ஏற்கனவே முரளி சார், ராகவேந்திரன் சார், வாசுதேவன் சார் குறிப்பிட்டுள்ளபடி) அளப்பறைகள் நம் ரசிகர்களின் துடிப்பினை உணர்த்தின.
என்னுடன் இரண்டு பத்திரிகை நண்பர்கள் வந்திருந்தனர். இருவரும் திரைப்படத்தை இறுதிவரை கண்டு களித்தனர். அவர்கள் இந்த அளப்பறையைக் கண்டு உண்மையிலேயே ஆச்சர்யமடைந்தனர். நடிகர்திலகம் மறைந்து 10 வருடங்களுக்கு மேலானபிறகு, 40 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ஒரு திரைப்படத்திற்கு இவ்வளவு வரவேற்பு, ஆரவாரமா என்று வியந்து சென்றனர்.
திரைப்படம் முடிந்து, வீட்டிற்குச் சென்றபின்னரும், வசந்தமாளிகையும், ரசிகர்களின் அளப்பறையும் செவிகளில் வெகுநேரத்திற்கு ரீங்காரமிட்டுக்கொண்டே இருந்தது.
Bala sir,
Really we miss you. Better luck next time.
Neyveli Vasudevan sir,
Sekhar's nerration is little coincide with the movie (i mean urchaga paanam mention). Even without 'that' our fans would do the alapparais to the peak, no doubt.
Very happy to see you in photo published by Raghavendar sir. In the same photo Chittoor Vasudevan also there. Thatswhy I mentioned as Vasudevan(s) in plural. But after that I relaised that his initial is 'S'. Thatswhy this seperate mention now for you in special. This is the first time I see all your faces. (I already saw only Raghavendar sir and Chandrasekhar sir in many photos in other occations)
Your enthus to come to Chennai to watch this movie with our our frinds is admirable (even you already saw in Cuddalore). Same time we also watched VM in Saudi as I mentioned earlier.
As you have watched it three centres, how is your openion and how is the pulse of public about the movie?. Shall it surpass Karnan in no.of days running?.
Our people should give some gap, without re-releasing Pasamalar soon.
sad to feel, Thiruvilaiyaadal has missed all these celeberations.
மிக்க நன்றி அன்பு ஆதிராம் சார். தங்களுக்கு பதிவு டைப் செய்து கொண்டு இருக்கும் போதே கரண்ட் கோவிந்தா. இப்போதுதான் வந்தது.
தாங்கள் சவுதியில் நம் அன்புத் தலைவரின் வசந்த மாளிகையை தங்கள் நண்பர்களுடன் உற்சாகமாகக் கண்டு களித்தது பற்றிய தங்கள் பதிவு படித்ததும் ஒரு வினாடி என் கண்கள் பனித்து விட்டன. நாங்களெல்லாம் சேர்ந்து ஜாலியாக படம் பார்த்துக் கொண்டிருக்கும் போது நீங்களும், கோபால் சாரும், சதீஷ் சாரும் கூட இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்! நிச்சயமாக அப்படி ஒரு வாய்ப்பு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை. சதீஷ் சார் கூட இரு தினங்களுக்கு முன் போன் செய்திருந்தார். அவர் எண்ண ஓட்டமெல்லாம் இங்கேயே இருந்தது. கோபால் சாரும் அப்படியே! நாங்கள் இங்கு மாளிகையை கண்டு களித்தது பெரிதல்ல.அயல் நாட்டில் இருந்து கொண்டு நீங்கள் வசந்த மாளிகையை நண்பர்களுடனும் உறவினர்களுடனும் விருந்தோம்பலுடன் கண்டு களித்ததுதான் பெரிது. நடிகர் திலகத்தின்பால் தங்களுக்குள்ள அபரிமிதமான அன்பை வெளிப்படுத்திய அற்புதமான தங்கள் வசந்த மாளிகை சவுதி (Jeddah city) ரிலீசுக்கு என் உளம் கனிந்த நன்றிகளும் மகிழ்ச்சிகளும். நீங்கள் சென்னை வரும்போது மறக்காமல் தெரியப் படுத்துங்கள். தலைவர் படங்களுடன் ஜமாய்த்து விடலாம். தங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் எங்கள் வாழ்த்துக்களையும், வணக்கங்களையும் சொல்லுங்கள்.
ஆதிராம் சார்.
நேற்று நீங்கள் வீட்டில் வசந்த மாளிகை போட்டுப் பார்த்ததை பதிவிட்டு இன்று எனக்கு வேலை வைத்து விட்டீர்கள். யெஸ். இன்று மாலை எங்கள் வீட்டில் அனைவரும் ஹோம் தியேட்டரில் நம் மன்னவரின் மாளிகையை குடும்பத்துடன் காண இருக்கிறோம். அதற்காக தங்களுக்கு ஒரு ஸ்பெஷல் நன்றி!
வாசு சார் ஜமாயுங்க...
http://www.tamilcinema.com/CINENEWS/...ha_maligai.jpg
மேலும் படியுங்கள் இந்த இணையப் பக்கத்தில் ...Quote:
இப்போது நடித்து வரும் 'அப்ரசண்டு' ஹீரோக்கள் பலர், 'வசந்த மாளிகை' ஓடும் திரையரங்குகளை நுறு முறை சுற்றி வந்து காலில் விழுந்தாலும் நடிப்பு வருமா என்பது சந்தேகமே!
a blog with comments on VM
http://worldcinemafan.blogspot.in/20...og-post_8.html
கோவை ரசிகர்கள் கொண்டாட்டம்
http://youtu.be/-YPW_On84Pk