Originally Posted by
esvee
இனிய நண்பர் திரு ரூப் சார்
ஆயிரத்தில் ஒருவனின் 6 நிமிட அட்டகாசமான வீடியோ - கண்களுக்கு விருந்து , நன்றி
ரகசிய போலீஸ் -115
வேலூர் அப்சரா அரங்கில் 11.1.1968 அன்று முதல்நாள் , முதல் காட்சி பார்த்த அனுபவம் மறக்க முடியாது .அப்போது நான் 8ஆம் வகுப்பு மாணவன் . மக்கள் திலகத்தின் தீவிர ரசிகனாக மாறிய
ஆரம்ப காலம் .
பறக்கும் பாவை 1966 படத்திற்கு பின் வந்த மக்கள் திலகத்தின் வண்ணப்படம் .
படத்தின் கண்ணை கவரும் விதமாக போர் ஷீட்ஸ் வேலூர் நகரமெங்கும் ஓடியிருந்தார்கள் .
மக்கள் திலகத்தின் நடிப்பு , சண்டை காட்சிகள் , பாடல் காட்சிகள் என்னை போன்றவர்களை
மேலும் தீவிர ரசிகர்களாக மாற்றிய படம் . பின்னர் வந்த குடியிருந்த கோயில் - ஒளிவிளக்கு
படங்கள் எங்களை எம்ஜிஆர் பக்தனாக மாற்றி விட்டது .
வேலூர் - அப்சரா அரங்கில் வந்த ரகசிய போலீஸ் 115 படம் எங்களை போன்ற பல இளம் மாணவர்களை தீவிர எம்ஜிஆர் ரசிகர்களாக மாற்றிய பெருமை இந்த அரங்கிற்கு உண்டு .
என்னால் மறக்க முடியாத நகரம் - வேலூர்
மறக்க முடியாத அரங்கம் - அப்சரா
மறக்க முடியாத படம் - ரகசிய போலீஸ் 115