-
குறிப்பு:
அ. "வீரபாண்டிய கட்டபொம்மன்", நமது தேசிய திலகத்தின் 55வது திரைக்காவியம் மற்றும் முழுமுதல் வண்ணச்சித்திரம். முழுவதும் 'கேவா' கலரில் தயாரிக்கப்பட்டு பின் 'டெக்னி' கலராக மாற்றப்பட்டு திரையிடப்பட்ட திரைக்காவியம். 'டெக்னி' கலர் பிரதிகள் லண்டன் மாநகரில் உருவாக்கப்பட்டன. தமிழ்த் திரைப்பட வரலாற்றில் 'டெக்னி' கலரில் வெளிவந்த முதல் திரைக்காவியம்.
ஆ. முதல் வெளியீட்டில் வெளியான அனைத்து ஊர்களின் அரங்குகளிலும் 50 நாட்களைக் கடந்த இக்காவியம், அதில்,25 அரங்குகளில் 97 நாட்களும் அதற்கு மேலும் மிகமிக வெற்றிகரமாக ஓடி விண்ணை முட்டும் சாதனையைப் புரிந்தது. இதில் ஒரு அரங்கில் வெள்ளிவிழா கொண்டாடியது.
இ. வெள்ளிவிழா கொண்டாடிய அரங்கு : 1
1. மதுரை - நியூசினிமா (1358 இருக்கைகள்) - 181 நாட்கள்
ஈ. 97 நாட்கள் முதல் 24 வாரங்கள் வரை ஓடி விழாக் கொண்டாடிய அரங்குகள் : 24
1. சென்னை - சித்ரா (929 இருக்கைகள்) - 125 நாட்கள்
2. சென்னை - கிரௌன் (1017 இருக்கைகள்) - 111 நாட்கள்
3. சென்னை - சயானி (842 இருக்கைகள்) - 111 நாட்கள்
4. சேலம் - ஓரியண்டல் (1210 இருக்கைகள்) - 160 நாட்கள்
5. திருச்சி - ஜுபிடர் - 153 நாட்கள்
6. நாகர்கோவில் - பயோனீர்பிக்சர்பேலஸ் (1088 இருக்கைகள்) - 118 நாட்கள்
7. திண்டுக்கல் - சக்தி (1208 இருக்கைகள்) - 111 நாட்கள்
8. வேலூர் - ராஜா - 104 நாட்கள்
9. திருவனந்தபுரம் - பத்மனாபா - 104 நாட்கள்
10. கொழும்பு(இலங்கை) - கெயிட்டி - 140 நாட்கள்
11. கோவை - ராஜா (1423 இருக்கைகள்) - 97 நாட்கள்
12. பொள்ளாச்சி - நல்லப்பா (1130 இருக்கைகள்) - 97 நாட்கள்
13. ஈரோடு - ராஜாராம் (1104 இருக்கைகள்) - 97 நாட்கள்
14. நெல்லை - ராயல் (1053 இருக்கைகள்) - 97 நாட்கள்
15. தூத்துக்குடி - சார்லஸ் (1383 இருக்கைகள்) - 97 நாட்கள்
16. தஞ்சை - யாகப்பா (1280 இருக்கைகள்) - 97 நாட்கள்
17. குடந்தை - டைமண்ட் - 97 நாட்கள்
18. விருதுநகர் - ராதா (731 இருக்கைகள்) - 97 நாட்கள்
19. தர்மாபுரி - சென்ட்ரல் - 97 நாட்கள்
20. கடலூர் - நியூசினிமா - 97 நாட்கள்
21. பாண்டிச்சேரி - கமர்ஷியல் - 97 நாட்கள்
22. ஆரணி - லக்ஷ்மி (1197 இருக்கைகள்) - 97 நாட்கள்
23. காஞ்சிபுரம் - கண்ணன் (1210 இருக்கைகள்) - 97 நாட்கள்
24. பல்லாவரம் - ஜனதா (1034 இருக்கைகள்) - 97 நாட்கள்
உ. நமது நடிகர் திலகத்தின் 56வது திரைக்காவியமாக "மரகதம்", 21.8.1959 வெள்ளியன்று, "வீரபாண்டிய கட்டபொம்மன்" வெளியான 98வது நாளில் வெளியானதால், 97 நாட்கள் ஓடியிருந்த நிலையில் இக்காவியம், "மரகத"த்திற்கு வழிவிடவேண்டியதாகிவிட்டது. இதனால் இந்த வண்ணக்காவியம் 14 அரங்குகளில் ஷிஃப்டிங் முறையில் 100 நாட்களைக் கடந்தது.
ஊ. மெகாமகா வெற்றிக்காவியமான "வீரபாண்டிய கட்டபொம்மன்", தமிழ்த் திரை வரலாற்றில், 1959-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படங்களிலேயே அதிக வசூல் ஈட்டிய திரைக்காவியம்.
எ. 1959-ம் ஆண்டில் தமிழ்த் திரையுலக பாக்ஸ்-ஆபீஸில் வசூலில் மாபெரும் சாதனை புரிந்த திரைக்காவியங்கள்:
1. வீரபாண்டிய கட்டபொம்மன்
2. பாகப்பிரிவினை
3. கல்யாண பரிசு
ஏ. ஏழிசை வேந்தர், சாதனைச் சிகரம் எம்.கே. தியாகராஜ பாகவதருக்குப் பின் ஒரே வருடத்தில் இரு வெள்ளிவிழாக் காவியங்களை அளித்த பெருமை நமது நடிகர் திலகத்திற்கு கிடைத்தது. நமது நடிகர் திலகத்தின் 1959-ம் ஆண்டு வெளியீடுகளான "வீரபாண்டிய கட்டபொம்மன்" மற்றும் "பாகப்பிரிவினை", இரண்டுமே வெள்ளிவிழாக் கொண்டாடிய காவியங்கள். இதே சாதனையைப் பின்னர் 1961, 1972, 1978, 1983, 1985 என இன்னொரு ஐந்து முறை செய்து காட்டியிருக்கிறார் நமது சாதனைச் சக்கரவர்த்தி. [பாகவதருக்கு 1937-ல், "சிந்தாமணி"யும், "அம்பிகாபதி"யும் பொன்விழா(50 வாரங்கள்) கொண்டாடின.]
ஐ. தமிழ்த் திரையுலகில், முதல்முறையாக, ஒரே ஆண்டில், ஒரு கதாநாயக நடிகரின் இரு காவியங்கள், ஒவ்வொன்றும், முழுவதும் ஓடி முடிய, முக்கால் கோடி ரூபாய்க்கு மேல் (75 லட்ச ரூபாய்க்கு மேல்) வசூலை வாரிக் குவித்தது 1959-ல்தான். அந்த இரு காவியங்கள் : "வீரபாண்டிய கட்டபொம்மன்", "பாகப்பிரிவினை"; அந்தக் கதாநாயகன் : நமது நடிகர் திலகம்.
சாதனைகள் எனும் சாம்ராஜ்யத்திற்கு நிரந்தர சக்கரவர்த்தி சிங்கத்தமிழன் சிவாஜி ஒருவரே !
-
இந்திய திரை உலகின்
முதல் மூடி சூட்டப்பட்ட
"உலக நாயகர்" நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் -
முடிசூட்டப்பட்ட ஆண்டு : 1959.
முடிசூட்டப்பட்ட நகரம் : எகிப்த் நாட்டின் தலைநகரம் கெய்ரோ
மூடிசூட்டப்பட்ட இடம் : ஆசிய ஆப்ரிக்க திரை விழா !
http://i501.photobucket.com/albums/e...pslmnrdqoe.jpg
-
இந்திய திரை உலகின்
முதல் மூடி சூட்டப்பட்ட
"உலக நாயகர்" நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் -
முடிசூட்டப்பட்ட ஆண்டு : 1959.
முடிசூட்டப்பட்ட நகரம் : எகிப்த் நாட்டின் தலைநகரம் கெய்ரோ
மூடிசூட்டப்பட்ட இடம் : ஆசிய ஆப்ரிக்க திரை விழா !
http://i501.photobucket.com/albums/e...psvvfblspt.jpg
-
இந்திய திரை உலகின்
முதல் மூடி சூட்டப்பட்ட
"உலக நாயகர்" நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் -
முடிசூட்டப்பட்ட ஆண்டு : 1959.
முடிசூட்டப்பட்ட நகரம் : எகிப்த் நாட்டின் தலைநகரம் கெய்ரோ
மூடிசூட்டப்பட்ட இடம் : ஆசிய ஆப்ரிக்க திரை விழா !
http://i501.photobucket.com/albums/e...psnxpm4w1k.jpg
-
-
-
-
-
-