-
தலைநகர் சென்னையில் மக்கள் திலகம் அவர்களுக்கு சொந்தமாக அல்லது குத்தகைக்கோ திரையரங்கம் இல்லாமல் இருந்தது எவ்வளவு நல்லதாக போயிற்று... இல்லையெனில் புரட்சி நடிகர் படங்களும் (காவியங்கள்) நன்றாக, வக்கணையாக ஓட்டப்பட்டுள்ளது எனத்தானே மாற்று முகாம் சேர்ந்தவர்கள், மற்ற கட்சியினர் ஆகியோர் மக்கள் திலகம் மாண்பினை, அவர்தம் பெருமையை குலைக்க பார்த்திருப்பார்கள் என்று எண்ண தோன்றுகிறது நல்ல வேளை, நம் ரசிகர்கள், தொண்டர்களுக்கு அப்படிப்பட்ட நிலைமை வரவில்லை தோழர்களே...
-
-
கடந்த ஞாயிறு (08/04/18) காலை 10 மணியளவில் ,சென்னை கோடம்பாக்கம் எம்.எம்.பிரிவியூ அரங்கில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களின் "பணத்தோட்டம் " திரைப்படம் ரசிகர்கள் /பக்தர்களுக்காக, உரிமைக்குரல் மாத இதழ் மற்றும் பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர். நற்பணி சங்கம் /லெட்சுமினி நிறுவனம் சார்பில் அரங்கம் நிறைந்த பிரத்யேக காட்சியாக திரையிடப்பட்டது .
பிற்பகல் 12 மணியளவில் இடைவேளையின்போது அனைவருக்கும் தேநீர் வழங்கப்பட்டது .
பின்னர் 12.15 மணியளவில் புரட்சி நடிகர் /மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். இரு வேடங்களில் அசத்திய "குடியிருந்த கோயில் " திரைப்பட பொன்விழா ஆண்டினை குறித்து சில முக்கிய நான்கு பாடல் காட்சிகள் (என்னை தெரியுமா , நான் யார் , ஆடலுடன் பாடலை , குங்கும பொட்டின் மங்கலம் ), சில சண்டை காட்சிகள் திரையிடப்பட்டது . சிங்கப்பூர் நாட்டில் இருந்து எம்.ஜி.ஆர். பக்தர் திரு.மதியழகன் ,
பிரபல வசன ஆசிரியர் திரு.ஆரூர்தாஸ் ,புதிய தலைமுறை ஆசிரியர் திரு.துரை கருணா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக சிறப்பித்தனர் . சென்னை மட்டுமின்றி ,திருச்சி, மதுரை, கோவை, பழனி போன்ற நகரங்களில் இருந்தும் திரளான ரசிகர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர
நிகழ்ச்சிகளை திரு.துரை கருணா தொகுத்து வழங்கியதும் , குடியிருந்த கோயில் திரைப்பட பொன்விழாவை முன்னிட்டு , உரிமைக்குரல் ஆசிரியர் திரு. பி.எஸ். ராஜு முன்னிலையில் சிறப்பு மலர் வெளியிடப்பட்டது . அதன்பின் புரட்சி தலைவர் எம்ஜி.ஆர். பக்தர்கள் 17 பேர்களுக்கு பணி ஒய்வு குறித்து பாராட்டும் வகையில், பொன்னாடைகள் அணிவிக்கப்பட்டு , நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியின் முடிவில் திரு.ஆரூர்தாஸ் , மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன் இருந்த தொடர்புகள், வசனம் எழுதிய படங்களின் பட்டியல் , ஆகியவற்றை மலரும் நினைவுகளாக சுமார் 15 நிமிடங்கள் பேசினார் . திரு.பி.எஸ். ராஜு நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைத்து பக்தர்களுக்கும் நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்து முடித்ததும் , சுமார் 200 நபர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது .
-
-
-
-
-
-
-