விண்ணோடும் முகிலோடும்
விளையாடும் வெண்ணிலவே
கண்ணோடு கொஞ்சும்
கலையழகே இசையமுதே
Printable View
விண்ணோடும் முகிலோடும்
விளையாடும் வெண்ணிலவே
கண்ணோடு கொஞ்சும்
கலையழகே இசையமுதே
அன்புள்ள கண்ணனோ அணைத்தாட வந்ததோ உன்னை வஞ்சி உன்னை
கை மீது கொண்டேன் நான் மீட்டும் வீணை
இசையமுதே விலையில்லா விருந்து
வண்டுகள் பூப்போல் வாயிதழ் கைப்போல்
ஆசையில் இப்போ மாதுளம் காய் போல்
தினம் ஒரு கனியே தருவாயா
வீட்டுக்குள் நான் வைத்த மாதுளையே
மலர்வாய் மலர்வாய் கொடியே
கனிவாய் கனிவாய் மரமே
சிலுக்கு மரமே சிலுக்கு மரமே
சில்லென்று பூக்கவா வா வா வா வா வா
சீனி பழமே சீனி
தின்ன உனக்கு சீனி மிட்டாய் வாங்கி தரணுமா சிலுக்குச் சட்டை சீனா பொம்மை
கற்பூர பொம்மை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று
கலந்தாட கைகோர்க்கும் நேரம் கண் ஓரம் ஆனந்த ஈரம்
முத்தே என் முத்தாரமே சபையேரும் பாடல் நீ பாடம்மா நீ பாடம்மா
ஒரு முத்தாரத்தில் முப்பது முத்து
சேர்த்து வைத்திருந்தேன்
அதன் முன்னும் பின்னும் தங்கக் கோடுகள்
போட்டு வைத்திருந்தேன்
என் கண்கள் அதன் காவல்
ராணிக்கு காவல் ராஜா ராஜாவுக்கு காவல் ராணி
இந்த இருவரின் ஆட்சியில் பிரஜைகளும் இல்லை
இவர்களுக்கு இடையில் பேதமும் இல்லை
நாலு பக்கம் ஏரி ஏரியிலே தீவு
தீவுக்கு ஒரு ராணி ராணிக்கு ஒரு ராஜா
ஏரிக் கரையின் மேலே போறவளே பெண்மயிலே
என்னருமைக் காதலியே
என்னருமை காதலிக்கு வெண்ணிலாவே
நீ இளையவளா மூத்தவளா